கேள்வி: ஏமாற்றும் கூட்டத்திற்கு ஒருவன் தர்மம் செய்தால் பயனற்று போய்விடுமே! அப்படியாயின், ஒருவன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் தர்மம் செய்ய வேண்டுமா?
குருநாதர் பதில்: அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் தர்மம் செய்யச் சொல்லவில்லை. ஆனால், "ஏமாற்றுகிறானோ!!" என்று எண்ணி, தர்மம் செய்யாமல் இருந்துவிடாதே, என்றுதான் கூறுகிறோம். உதாரணமாக, ஒரு நூறு மனிதர்களுக்கு ஒருவன் உதவி செய்தால், அதில் பத்தில் ஒரு பங்குதான் உண்மையாக இருக்கும் என்று எமக்கும் தெரியும். ஆனாலும், இந்த பத்தை பிடிப்பதற்காகத்தான், அந்த நூறை செய்ய வேண்டி உள்ளது. எனவே, கொடுத்துக் கொண்டே போ! அதிலே, நல்லவை, தீயவை, நன்மை, தீமைகளை ஆராய வேண்டாம். எவன் இந்த தர்ம உபதேசத்தை கடைபிடிக்கிறானோ, அவன் பிறவி தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதுதான் மனிதனின் எண்ணம். ஆனால், யாங்களோ, அடுத்த பிறவிக்கு சேர்க்கச் சொல்கிறோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete