​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 9 June 2024

சித்தன் அருள் - 1625 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!






சூரத் சத்சங்கம் பாகம் 12

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிவராத்திரி கால கட்டத்தில்  காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்திருந்தார்!!!!

(சித்தன் அருள் 1294 பதிவில் வெளிவந்துள்ளது!!!)

அதில் போலியான சுவடிகள் குறித்து குருநாதர் சினத்துடன் வாக்குகள் தந்திருந்தார்!!!!

பொய்களப்பா!!!!!!! 

எதையெதையோ வைத்துக்கொண்டு அப்பனே வசிய தேவதைகளையும் வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய..........""""" குட்டி சாத்தான்களையும் வைத்துக் கொண்டு..........""" அகத்தியன் பேசுகின்றேன் எதை என்று அறிந்து அறிந்து பின் எவை என்று கூட """"""முருகன் பேசுகின்றான் என்பவை எல்லாம் பொய் பித்தலாட்டமப்பா!!!!!!!!
வேண்டாமப்பா!!!!!!! 

அப்பனே இல்லையப்பா!!! பொய்களப்பா!!! 

நிச்சயம் எதை என்று அறிய அறிய. """""" பேய்களப்பா பேய்கள்!!!!!!!!!! மனிதர்கள் அதை வைத்துக்கொண்டு உரைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ( போலியான சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை மட்டும் வைத்துக் கொள்ளாமல் பேய்களையும் வைத்து வாக்குகள் உரைக்கின்றனர்)

ஆனாலும் எப்படியாவது வந்து விட வேண்டும் எப்படியாவது பணங்கள் சம்பாதித்து விட வேண்டும்!!......ஏனப்பா???  எதையென்று அறிந்து அறிந்து.........

என்னிடத்திலே இருந்து உரைக்கின்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே !!!!

"""""ஈசனாக இருந்தாலும்...... இதை என்று கூற பிரம்மனாக இருந்தாலும் அப்பனே அவந்தன் எதை என்று அறிய விஷ்ணுவாக இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய........ 

""""" யான் கட்டளை இட்டால்... அது கட்டளை இட்டது தான்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய !!!!

அகத்தியனை யார்?? என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்??????

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!! """"

ஒவ்வொருவருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன் இங்கிருந்து!!!!!!!!!

அதாவது லோபா முத்ராவும் என் அருகில் தான் இருக்கின்றாள் அப்பனே!!!!! 

நிச்சயமாய் அப்பனே இன்னும் அகத்தியனை பொய்யாக்காதீர்கள்!!! பொய்யாக்காதீர்கள்!!!! அப்பனே!!!! 

என்று உரைத்திருந்தார்!!!

இதையடுத்து குருநாதரின் பால் பேரன்பும் பக்தியும் கொண்ட அகத்தியர் அடியவர் இப்படி எல்லாம் நாடியை அதாவது சுவடியை படித்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மிகவும் வருத்தப்பட்டு அடுத்த நாள் குருநாதரிடம் மற்றொரு கேள்வியை கேட்டார்

(சித்தன் அருள் 1296 ல் பதிவு வந்துள்ளது.)

அதில்

குருவே நீங்கள் கூறினீர்கள் பல இடங்களில் சுவடியை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு வாக்குகள் கூறுகின்றார்கள் என்று கூறி இருந்தீர்கள் கைரேகையை வைத்து பார்க்கப்படும் காண்டநாடி இதனையும் நோக்கி மக்கள் அறியாமல் செல்கின்றனர் பொதுமக்கள் அந்த காண்டநாடியை சென்று படிக்கலாமா வேண்டாமா அது நல்லதா?? கெட்டதா ??

அப்பனே எதை என்று அறிய அறிய இது அவரவர் வினையை பொறுத்தது என்பேன் அப்பனே!!!!

என்று  குருநாதர் பதில் உரைத்திருந்தார்!!!!

அடியவர்கள் அதாவது பக்தர்கள் அனைவரின் அறிவு கண்களை திறக்கும் பதிவு இது நாடிகள் குறித்து சுவடி குறித்து குருநாதர் எப்படியெல்லாம் மனிதர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதை பற்றி இந்த வாக்கில் தெளிவாக எடுத்துக்கூறி இருக்கின்றார்!!!

வட இந்தியாவை பொருத்தவரை தமிழ்நாட்டில் இருந்து அதாவது சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரம் இந்த பகுதிகளில் இருந்து சிலர் வட இந்தியாவில் ஒவ்வொரு நகரங்களிலும் அகத்தியர் ஜீவநாடி சிவ சக்தி ஜீவநாடி போகர் ஜீவநாடி காகபுஜண்டர் ஜீவநாடி சப்தரிஷிகள் நாடி மையம் என ஒவ்வொரு பெயர்களிலும் நாடி ஜோதிட நிலையம் என்று நகரங்களிலும் நடத்துகின்றார்கள்.

இப்படிப்பட்ட நாடி நிலையத்திற்கு சென்று குருநாதர் உடைய பெயரால் பக்தியும் பேரன்பும் கொண்டு குருநாதர் தான் வாக்குகள் உரைக்கின்றார் என்று நம்பிக் கொண்டு பல பரிகாரங்களையும் செய்து இதனால் பல பிரச்சனைகளுக்கும் உள்ளாகி கடைசியாக குருநாதரை ஜீவ நாடியின் மூலம் அதாவது உண்மையான ஜீவன் நாடியின் மூலம் கண்டு கொண்டு குருநாதரிடம் சூரத் சங்கத்தில் பல கேள்விகளை நேரடியாக அந்த அடியவர் கேட்கத் தொடங்கினார்.

அவருடைய கேள்விகள் அனைத்தும் நம் அனைவருக்கும் பொருந்தும் அனைவருக்கும் சுவடியை குறித்த புரிதல் ஏற்படும்.

ஏற்கனவே நம் குருநாதர் போலியான நாடிகள் எப்படி இயங்குகின்றது என்பதை பற்றி கூறியிருந்தார் மேலும் இந்த சத்சங்கத்தில் பல விளக்கங்களை குருநாதர் கூறியிருந்தார்!!!

அதன் தொகுப்பு பின்வருமாறு!!!!

அடியவர்:

குருவே குருநாதா அடியேன் வாழ்க்கையில் பல அனுபவங்களையும் அடிகளையும் அடியேன் பெற்றுவிட்டேன் இந்த காண்ட நாடி எனும் சுவடியை பார்த்து!! பார்த்து!!!

நேரடியாகவே இதில் துரோகங்கள் நடக்கின்றது!!

தங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கின்றேன் குருநாதா

ஏனென்றால் மக்கள் அனைவரும் போலியானதை நாடி நாடி அவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள்.

உண்மையான காண்ட நாடி இருக்கின்றதா???? குருவே!!!! காண்டநாடியை பொருத்தவரை அனைவரும் கூறுவது என்னவென்றால் காண்ட  நாடி ஓலைச்சுவடியில் ரிஷி முனிகள் எழுதியிருக்கின்றார்கள் சித்தர்கள் எழுதியிருக்கின்றார்கள் இன்று கூறுகின்றார்கள் அப்படி யாராவது எந்த ஒரு ரிஷிமுனியாவது  எழுதி வைத்திருக்கின்றார்களா???? ஏனென்றால் அதில் ஒருவருடைய முழு வாழ்க்கையைப் பற்றி ரிஷிமுனிகள் எழுதி வைத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள்!!!!

அப்பனே பின் நிச்சயம் சித்தர்கள் எழுதியிருப்பதை அப்பனே மனிதர்களுக்கு அப்பனே எப்பொழுதும் வராதப்பா!!!!

அப்பனே இது எதை என்றும் அறிய அறிய............ மனிதர்களால் !!!!! எழுதப்பட்டவையே புரிந்துகொள் !!!!!!

குருவே நீங்கள் கூறுகின்றீர்கள் ரிஷிமுனிகள் எழுதியது அல்ல என்று!!!

ஆனால் அவர்கள் ஒவ்வொரு ரிஷி முனி பேரிலும்  வைத்தீஸ்வரன் கோயிலை சுற்றிலும் காண்ட நாடிகள் வாசிக்கின்றார்கள்!!!! பெரிய பெரிய முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் எல்லாம் அங்கு சென்று படித்து விட்டு சரியாக வருகின்றது சரியாக இருக்கின்றது என்றெல்லாம் மதிப்புரை கொடுக்கின்றார்கள்!!! இவையெல்லாம் எப்படி இயங்குகின்றது????

உண்மையில் ரிஷிகள் ஏற்கனவே அவர்கள் வாழ்க்கை வரலாறை எழுதி வைத்து உள்ளார்களா????

அப்பனே இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே!!

சித்தர்கள் ரிஷி முனிகள் எழுதியவை அப்பனே எதை என்று அறிய அறிய மனிதர்கள் கைகளில் கிட்டாது என்பேன்!!! அப்பனே

அப்பனே எதை என்றும் புரிய புரிய வசிய தேவதைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டால் அப்பனே அனைத்தும் சொல்லுமப்பா!!!!...

ஆனால் வசிய தேவதைகளுக்கு சரியான தீனியை அதற்கு இடவேண்டும் அப்படி இடவில்லை என்றால் ஆளையே கொன்று விடும் அப்பனே!!!

பின்பு அதை கேட்பவர்களும் கூட கீழே விழுந்து விடுவார்கள்!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

(வசிய தேவதைகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நாடி ஜோதிடம் சொல்லும் ஜோதிடர்கள் வசிய தேவதைகளை பூஜைகள் செய்து அதற்கு சரியான தீனியை கொடுத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள் அப்படி சரிவர பூஜைகள் வசிய தேவதைகளின் விருப்பங்களையும் நிறைவேற்றாவிட்டால் வசிய தேவதைகள் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருப்பவர்களை கொன்று விடும்!

வசிய தேவதைகளின் நாடிகளை பார்க்கும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையில் கீழான நிலைக்கு செல்ல நேரிடும்)

ஆனால் குருவே சிவநாடி அகஸ்திய நாடி என்று உங்கள் பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் படித்துக் கொண்டு வருகின்றார்கள்!!!!!

அப்பனே எதை என்று புரிய புரிய யாங்கள் சிறிது நேரமே... அப்பனே பார்ப்போம்... இதற்கும் எதை என்று அறிய அறிய அப்பனே..... தண்டனைகள் உண்டு... புரிந்து கொள்!!!

ஆனால் குருவே பழைய பழைய ஓலைச்சுவடியில் தமிழில் எழுதி வைத்திருக்கின்றார்கள்  அதில் எழுத்துக்கள் இருக்கின்றது அந்த எழுத்துக்கள் எல்லாம் யார் எழுதியது???

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவர்களுடைய முன்னோர்கள் (காண்டநாடி வாசிப்பாளர்கள்) எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே ஈசனிடத்தில் பற்று வைப்பவர்களும் கூட எதை என்று அறிய அறிய ஆனாலும் இதைத்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இப்பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய அதாவது அப்பனே அப்பொழுதெல்லாம் ஈசனை நம்பியும் கூட அப்பனே எழுதி வைப்பார்கள் அப்பனே

யார் யாருக்கு இதை என்றும் அறிய அறிய எடுத்து கூறுவது எப்படி எல்லாம் எதை என்றும் அறிய சுமந்து செல்வது என்றெல்லாம்

ஆனால் இப்பொழுது அப்படியே எதை என்று அறிய அறிய அதை பல வகையிலும் இயக்குகின்றார்கள் என்பேன் அப்பனே

அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை என்று கூட தேவதைகள் மூலமே...

இறைவன் இருப்பதையே மறந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.

(ஓலைச்சுவடிகளில் ஏற்கனவே எழுத்துக்கள் இருக்கும்

பழைய ஓலைச்சுவடிகளில் எல்லாம் ஈசனை நினைத்து பாடல்கள் பதிகங்கள் சில வழிபாட்டு முறைகள் எப்படி நடைமுறை வாழ்க்கை முறைகள் சில அவசியமான குறிப்புகள் மருத்துவங்கள் என்பதையெல்லாம் குறித்து எழுதி வைத்திருக்கும் ஓலைச்சுவடிகள் அவை.

அதாவது அந்த காலத்தில் காகிதங்களோ நோட்டுப் புத்தகங்களோ கிடையாது அதனால் அனைத்து குறிப்புகளும் ஓலைச்சுவடியில் தான் எழுதி வைக்கபட்டிருக்கும்!!!

அதை பயன்படுத்திக் கொண்டு அதாவது அதை வைத்துக்கொண்டு வசிய தேவதைகளை வசியம் செய்து அதன் மூலம் அனைத்தையும் சொல்வது இதை செய்து கொண்டிருக்கின்றார்கள் இறைவன் இருப்பதை மறந்து விட்டு)

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவையெல்லாம் ஜாதகம் இல்லாமல் நிச்சயம் பார்க்க முடியாதப்பா!!!!! ஜாதகங்கள் உங்களிடமிருந்து வாங்கிக் கொள்வார்கள் என்பேன் அப்பனே!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் ஜாதகத்தில் அப்பனே இக்கிரகங்கள் இங்கிருந்தால் இப்படிச் செய்யும் என்பதை எல்லாம் அப்பனே பின் முன்னோர்கள் எழுதி எழுதி இப்படித்தான் பலன்கள் சொல்ல வேண்டும் என்று எழுதி எழுதி!!!

இதனால் அப்பனே அதை வாங்கிக்கொண்டு அப்படியே சொல்லிவிடுகிறார்கள் அவ்வளவுதான் அப்பனே !!!

தெரிந்து கொள்ள அப்பனே இதை நீ தெரிந்து கொண்டால் நீயும் சொல்லலாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் கற்றுக் கொடுக்கின்றேன்!!

!(ஜாதகத்தை பார்ப்பதற்கு குருநாதர் அந்த அடியவருக்கு கற்றுக் கொடுக்கின்றேன் என்று நகைப்போடு கூறினார்)

அப்பனே நீ அவந்தனுக்கு உதவிகள் செய்தாயே அவந்தன் உன்னை எதை என்று கூட வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே உந்தனையும்  வசியம் செய்து கொண்டு நீ அவந்தனக்கு காசுகள் கொடுத்தாய் அல்லவா அப்பனே அதையும் அவன் மாந்திரீக பூஜைகள் செய்வதற்கு பயன்படுத்தி அப்பனே அதன் மூலமும் உந்தனுக்கு கர்மா சேர்ந்து விட்டது என்பேன் அப்பனே ஆனால் கவலைகள் இல்லை அப்பனே யான் இருக்கின்றேன் அதை நீக்கிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

(அதாவது காண்ட நாடி படிப்பவரிடம் சென்று வசிய தேவதைகளின் வாக்குகள் பெற்று அதற்கு காண்ட நாடி படிப்பவருக்கு நிதி உதவிகள் செய்ய அந்தப் பணத்தை அவர் தவறான செயல்களில் சில மாந்திரீக பூஜைகள் செய்வதற்கு பயன்படுத்தியதால் அந்த வினையும் இவரை வந்தடைந்துவிட்டது)

குருவே நான் இருபது வருடங்களாக காண்டநாடியை பார்த்து அதன் மூலம்... பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் நான் ஆரம்பத்தில் காண்டநாடியை செல்லும் பொழுது திரு ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் ஜீவனாடியின் மூலமாக நீங்கள் வாக்குகள் தந்து கொண்டிருந்தீர்கள்.. அப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வழியின் மூலம் என்னை அழைத்து இந்த காண்டநாடி ஏமாற்றத்தின் மூலம் என்னை காப்பாற்றி இருக்கலாமே!!!

காண்டநாடி மூலம் எத்தனை ஏமாற்றங்களை நான் சந்தித்து விட்டேன் நீங்கள் அப்போது என்னை அழைத்திருக்கலாம் அல்லவா 

அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தையும் சரி பார்த்து தான் அப்பனே என்னாலும் வாக்குகள் சொல்ல முடியும் செப்பி விட்டேன்!!!!

குருவே காண்டநாடியின் மூலம் வசிய தேவதைகள் வந்து வாக்குகள் உரைக்கின்றார்கள் என்று கூறி இருந்தீர்கள்!!!

அந்த வசிய தேவதைகள் வாக்குகள் என்னை பல ஆலயங்களுக்கு பரிகாரங்களாக செல்ல சொல்லி அதை நான் கடைபிடித்தேன் அதன்படி பல ஆலயங்களுக்கும் சென்றேன். 

இப்படி ஆலயங்களுக்கு செல்ல சொல்வதன் மூலம் வசிய தேவதைகளுக்கு என்ன லாபம்????

அப்பனே அறிந்தும் கூட பின் வசிய தேவதைகள் சொல்வது நடந்தேறும் ஆனாலும் அப்பனே சில கர்மா... பின் அறிந்தும் கூட சொல்கின்றானே அவனைத் தாக்கும் அப்பனே!!!!

அறிந்தும் கூட ஆனாலும் இதை தன் புரிவதே இல்லை அப்பனே எவருக்கும் கூட. 

ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே இதனைப் பற்றியும் கூட ஆனாலும் அப்பனே நல் முறைகளாகவே விளக்கங்கள் இதற்கு தந்தாலும் அப்பனே நிச்சயம் முன்னேற்ற பாதையிலே அப்பனே பின் உள்வாங்கி அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அவ் வசிய தேவதைகள் கூட அப்பனே ஏங்கும் அப்பா!!!

நம்மால் திருத்தலங்களுக்குச் செல்ல முடியாதா!!! இப்படி எல்லாம் பின் இறைவனிடத்தில்!!!

பின் இது போன்று சொல்லி சொல்லி பின் அவைகள் பின் தப்பித்துக் கொள்ளும் என்பேன். அப்பனே!!

அறிந்தும் கூட பின் பாவங்களும் அவர்களுக்கு பின் ஏற்படாது என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே பின் தானாகவே முன்வந்து அப்பனே எதை என்று கூட நம் தனக்கும் மோட்சங்கள் கிட்டாதா?? என்று எண்ணி எண்ணி பின் பிறருடைய. ........ எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே பின் வாக்குகள் பின் செப்பி அங்கு சென்றால் !!..... (ஆலயங்களுக்கு)

ஆனாலும் இத் தேவதைகளுக்கும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் மோட்சம் என்பது இருக்கின்றதப்பா!!!

ஆனாலும் அப்பனே அத் திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் அத்திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம்!!!

(கட்டுப்பாட்டில் உள்ள வசிய தேவதைகள் அவைகள் மோட்சம் அடைவதற்கு திருத்தலத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்)

ஆனாலும் அப்பனே அவைகள் பின் ஆலயத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு கூட அப்பனே பின் இறைவனே அப்பனே அவைகளை நிறுத்தி வைத்திருப்பான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அவைகள் மனிதர்களைக் கொண்டு இப்படி ஆலயத்திற்கு செல்ல சொல்வதன் மூலம் அவைகளும் மோட்ச கதி அடைந்துவிடும் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே அவை சொல்வதற்கும் பாவம் அப்பனே

எதை என்றும் புரிய புரிய இதனால் தானப்பா சில விளக்கங்கள்.

யான் சொல்வதற்கு ஒன்றுமில்லை அப்பனே இன்னும் தெரிவிக்கின்றேன் அப்பனே 

பின் எப்படி எல்லாம் இயங்குகின்றது என்பதை எல்லாம்!!!!

குருவே வசிய தேவதைகள் சொன்ன ஆலயங்களுக்கெல்லாம் நான் மனதார சென்றேன் !!!பூஜைகள் செய்தேன். தான தர்மங்கள் செய்தேன் இதை இறைவன் ஏற்றுக் கொண்டாரா????

அப்பனே அறிந்தும் கூட அப்பனே வசியதேவதைகள் உன்னை வைத்துக்கொண்டு மோட்சம் அடைந்து விட்டது என்பேன் அப்பனே!!!! உன்னால் மோட்ச கதி அடைந்த வசிய தேவதைகளும் கூட உங்களுக்கு சிலவற்றை................... தவறான வழிகளில் வாரி வழங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன 

ஆனால் அப்பனே அதை எல்லாம் யான் அப்பனே தடுத்து உன்னை கர்மா வினைகள் அண்டாமல் காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அதனால்  அவ் பாவம் உன்னை சேர்ந்து விட்டது அவ்வளவுதான் அப்பனே 

அதை நீக்கவே ஆனாலும் நீயும் நம்பி ஏமாந்து விட்டாய் என்பதற்காகவே யான் வந்து வாக்குகள் செப்பி செப்பி... அப்பனே அக்கர்மாக்களையும் நீக்கி கொண்டிருக்கின்றேன் அப்பனே 

ஏனென்றால் எனை நம்பித்தான் அப்பனே நீ வந்து விட்டாய் அல்லவா!!!

குருவே!!! 

இவர்கள் வசிய தேவதைகளை எப்படி தனது கட்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகின்றது?????

அப்பனே எதை என்று அறிய அறிய அதை நீயும் கூட கட்டுப்படுத்தலாம் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே அதுவும் எவை என்று அறிய அறிய அதில் சில காலம் தானப்பா!!!!

அப்பனே அப்படி கட்டுப்படுத்தும் பொழுது அப்பனே நீ சொல்வதெல்லாம் நடக்குமப்பா!!!!

அப்பனே பிறருடைய வாழ்க்கை வரலாற்றையே நீயே அப்பனே எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட சொல்லி விடலாம்!!!

ஆனாலும் அப்பனே அவை அடித்தால் தாங்க முடியாதப்பா!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய உன்னையே வைத்துக்கொள்!!! அப்பனே நீ எப்படி இருந்தாய் அப்பனே ஆனால் இப்பொழுது எப்படி எல்லாம் போய்விட்டாய் அப்பனே

இவையெல்லாம் அப்பனே வசிய தேவதைகளின் மூலமாகத்தான் அப்பனே நீயும் இப்படி ஆகிவிட்டாய் என்பேன் அப்பனே

குருவே நான் கடந்த 20 வருடங்களாக இந்த சுவடிகளின் பின்னாலே சென்று கொண்டிருந்தேன் 20 ஆண்டுகாலம் நீங்கள் தான் காண்டநாடியில் வந்து வாக்குகள் தந்து என்னை வழிநடத்திக் கொண்டிருந்தீர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன்!!!

எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் தான் அகத்தியர் வந்து எனக்கு இதெல்லாம் கூறுகின்றார் என்று நான் உங்களை நம்பி நம்பி அங்கே சென்று கொண்டிருந்த பொழுது என்னை ஏன் நீங்கள் அதை தடுத்து நிறுத்தவில்லை???? அங்கு செல்லும் பொழுது என்னை ஏன் கட்டுப்படுத்தவில்லை????

அப்பனே எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம் கர்மா வினைகள் தான் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இப்பொழுது உன்னிடத்தில் வந்து உரைத்துக் கொண்டிருக்கின்றேன். 

சில கர்மா வினைகளை அழித்து உன்னிடத்தில் யானும் வந்து கொண்டிருக்கின்றேன்!!! 

எதை என்று அறிய அறிய உன்னிடத்தில் என்னுடைய சுவடியும் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றது இதையும் நீ புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

அப்பனே அதை மட்டுமில்லாமல் எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் எவை என்று புரியப் புரிய அவைகளுக்கு (வசிய தேவதைகளுக்கு) சொல்லிவிடுவார்களப்பா!!! 

அதாவது வசிய தேவதைகளுக்கு கூட அப்பனே இவர்கள் நிச்சயம் வந்து கொண்டிருந்தால் இப்படியே வந்து கொண்டே இருக்க வேண்டும் பின் எங்கும் செல்லக்கூடாது என்று கூட!!! எதை என்றும் அறிய அறிய!!!

(வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு வாக்குகள் கூறுபவர்கள் வரும் அடியவர்கள் நம்மிடம் மட்டும் அடிக்கடி வர வேண்டும் இவர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது நம்மிடம் மட்டுமே சுவடியை பார்க்க வர வேண்டும் என்று வசிய தேவதைகளுக்கு உத்தரவிட்டு அதன் மூலம் மனதையும் கட்டுப்படுத்தி வசியம் செய்து அவர்களிடமே சென்று கொண்டு இருக்கும் படி செய்து விடுவார்கள்)

குருவே நீங்கள் கூறுவது சரிதான் நான் அங்கே செல்லும்பொழுதெல்லாம் உங்கள் பெயரையே தானே உச்சரித்துக் கொண்டிருந்தேன் நீங்கள் அதை எல்லாம் பார்த்திருப்பீர்கள் அல்லவா பின்பு ஏன் நீங்கள் அதை தடுக்கவில்லை???

அப்பனே எதை என்றும் அறிய அதுவும் ஒரு காரணத்திற்காக தான் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய இப்பொழுது அப்பனே உன் மகனை பின் மகளை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பள்ளி எதை என்று அறிய அறிய கல்லூரிகளுக்கு இங்கெல்லாம் சென்று அப்பனே பின் ஓதிவிட்டு அப்பனே மிகப்பெரிய அப்பனே எவை என்றும் உணர உணர அப்பனே!!!பின் பணிகளுக்கும் இன்னும் இன்னும் ஏனைய பணிகளுக்கும் செல்கின்றார்கள்.

அதேபோலத்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பக்குவங்கள் வரட்டும் என்பதே கூட!!!

பக்குவங்கள் பிறந்து அப்பனே அதன் மூலம் சில கர்மாக்களையும் அழித்து அப்பனே இப்பொழுது யான் உன்னிடத்தில் வந்து செப்பிக் கொண்டிருக்கின்றேன்!!!

இது எவை என்றும் அறிய அறிய பின் என் மீது உள்ள நம்பிக்கையில் தான் அப்பனே யான் வந்தேன்!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

அப்பனே இன்னும் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே உண்மையான சித்தர்கள் யாங்கள் வந்து வாக்குகள் உரைக்கும் சுவடிகள் அப்பனே பல ஆலயத்திற்கும் செல்லும் என்பேன் அப்பனே எதை என்று  அறிய அறிய எல்லாம் இறைவனின் தீர்ப்பு என்பேன் அப்பனே

போலியான சுவடிகள் அப்பனே ஆலயங்களுக்கு செல்ல முடியாது என்பேன் அப்பனே அப்படி சென்றாலும் அவை செயலிழந்து விடும் என்பேன். அப்பனே புரிந்துகொள் அப்பனே!!!

சுவடி என்பது அப்பனே சுவடியை ஓதுவதற்கும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய ஈசனின் அப்பனே விஷ்ணுவின் அப்பனே பிரம்மாவின் அப்பனே அருள் இருந்தால் மட்டுமே இந்த ஜீவநாடி சுவடியை ஓத முடியும் என்பேன் அப்பனே!!!!

வணக்கம் அகத்தியர் பாடிய அவர்களே சித்தன் அருள் 1568 ல் அயோத்தி குப்தார் காட் ல் குருநாதர் தந்த பொதுவாக்கில் 

இன்னும் சொல்லப்போனால் அப்பனே பின் ஒருவன் இருக்கின்றான்!!!

சுவடியை வைத்துக்கொண்டு பின் பல வழிகளிலும் கோடிகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அப்பனே ஒருவன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

இன்னொருவன் இருக்கின்றான் அப்பனே அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான் பின் மறைமுகமாக அனைத்தும் பொய்களப்பா!!! வேஷங்களப்பா!!!

என்று வாக்குகள் தந்திருக்கின்றார் அகத்தியர் பக்தர்கள் பொதுமக்கள் கவனம்

குருவே தங்களுக்கு என்னுடைய நன்றியும் நமஸ்காரமும் இப்பொழுது என்னிடத்தில் நீங்கள் வந்து விட்டீர்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது!!! 

எனக்கு சில பல காரணங்களால் மன அழுத்தத்திற்காக இரவு படுக்கும் பொழுது ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைத்த Parit 20mg எனும் மாத்திரையை உட்கொண்டு வருகின்றேன்!!! எப்போதாவது இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளாவிட்டால் இரவில் சரியாக உறக்கம் வருவதில்லை 

இரவில் உறங்கும் பொழுது பல துர் சொப்பனங்கள் பயங்கரமான அபாயமான கனவுகள் வருகின்றது எனக்கு பயமாக இருக்கின்றது இதற்கு ஒரு தீர்வினை தாருங்கள் குருநாதா!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனைப் பற்றி யான் விவரிப்பதற்கு அப்பனே நிச்சயம் 108 முறை பாலாம்பிகையின் மந்திரமான ஓம் ஐம் க்லீம் சௌம் என்று மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே உறங்கு அப்பனே!!!!

பின் எப்படி துர் சொப்பனங்கள் வருகின்றது ?? என்று யான் பார்த்துக் கொள்கின்றேன்.!!!!

அது மட்டுமில்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே 108 மணிகள் உள்ள ருத்ராட்ச மாலை எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே நீ எப்பொழுதும் எதை என்றும் அறிய அறிய உன் கழுத்தில் அதாவது இட்டுக் கொண்டு உறங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய சில மூலிகைகளை கூட வரும் காலத்தில் அதாவது நன்னாரி நாயுருவி அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அனுதினமும் நன்னாரி வேர் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதைக்கூட நல் விதமாகவே அப்பனே நிச்சயம் தேனுடன் அப்பனே அனுதினமும் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உண்டு வர அப்பனே

அவை மட்டும் இல்லாமல் அப்பனே மிளகு சீரகம் அப்பனே எதை என்றும் அறிய அறிய சிறிது கிராம்பு அவை மட்டும் இல்லாமல் சிறிது மஞ்சள் அப்பனே இதையெல்லாம் பின் இரவில் படுக்கும் பொழுது கூட அப்பனே நிச்சயம் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

(ஏற்கனவே பாலில் அல்லது சுடு தண்ணீரில் இவையெல்லாம் பொடித்து அரைத்து கலந்து குடிக்கலாம் என்று கூறியிருந்தார் அதாவது மிளகு சீரகம், கிராம்பு மஞ்சள்)

(நன்னாரி வேர் பொடி நாயுருவி வேர் பொடி தேனில் கலந்து உண்ணலாம்)

அப்பனே எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எப்பொழுதும் கூட எருக்கஞ்செடி எதை என்று அறிய அறிய அதன் இலையை கூட அப்பனே இரவில் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உன் பக்கத்தில் இருக்க வேண்டும் அப்பனே.

(வெள்ளை எருக்கு இலை தலைமாட்டில் அதாவது தலையணைக்கடியில் வைத்து உறங்கலாம் உறங்கும் பொழுது அருகில் இருக்க வேண்டும்)

பின்பு பார்த்துக் கொள்வோம் அப்பனே இதனைப் பற்றி இன்னும் விவரமாக உரைக்கின்றேன் அப்பனே!!!!!!

குருவே இன்று எங்கு பார்த்தாலும் சித்த வைத்தியம் சித்த மூலிகைகள் கிடைக்கும் என்று திரும்பிய பக்கமெல்லாம் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்!!! சுத்தமான மூலிகைகள் யாரிடம் கிடைக்கும்??

அப்பனே எதை என்று அறிய அறிய யார் ஒருவர் அப்பனே காசுகளை எதிர்பார்க்கவில்லையோ அவர்கள் தான் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் அப்பனே எவ் மூலிகையை எடுத்தாலும் அப்பனே கர்மா பின் விடாதப்பா  மூலிகைகள் அப்பனே குரு மந்திரம்........... அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களால் முடியாததை நிச்சயம் மனிதர்களால் ஈடுகட்ட முடியாதப்பா!!!

அப்பனே இதனைப் பற்றி விவரமாக குறிப்பிடுகின்றேன் பொறுத்திருக!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. இறைவா நன்றி! அகத்தியா நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. மிகவும் நன்றி

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. தர்மம் எப்படி செய்ய வேண்டும் (How to do Dharmam) -->
    https://www.youtube.com/watch?v=3zU6x3aLS-0

    7 1/2(ஏழரை)சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி பாதிப்பு நீங்க பரிகாரம்(7.5 yrs Sani Desai) -அகத்தியர் வாக்கு
    https://www.youtube.com/watch?v=AwagbKVisHs&t=179s

    ReplyDelete