​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 5 June 2024

சித்தன் அருள் - 1620 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஒரு மனிதனானவன் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தனத்தை செலவு செய்வது இயல்பு. விதியை மாற்றுவதற்கு எளிய வழி தர்மம் ஒன்றுதான். ஒருவனுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே, பூர்வ புண்ணியம் இருந்தால்தான் வரும். அவன் செய்கிற தர்மமே, அவன் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளும். 

ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது.

அதனால் தான் "கை நீட்டுபவனிடம் இல்லை என்று சொல்லாதே!" "பையில் வைத்துக்கொண்டு நாளை வா!" என்றிடாதே, என அடிக்கடி கூறுகிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. உண்மை ஐயா...தர்மம் சிறந்த பண்பு...மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete