​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 11 June 2024

சித்தன் அருள் - 1626 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!



சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் 

பாகம் 1

தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து குருநாதரிடம் கேட்ட பெண்மணிக்கு குருநாதர் கூறிய அனைவருக்கும் பொதுவான வாக்கு 

அறிந்தும் எதை என்றும் அறிய இப்படித்தான் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கெல்லாம் தீர்வுகள் யான் எடுத்துரைத்து விட்டேன்!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட இவையெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் கூட பிள்ளைகள் என்றெல்லாம் நிச்சயம் மனிதர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இறைவன் படைப்பில் அனைத்தும் பின் அறிந்தும் கூட இதனால் நல் ஒழுக்கத்தையும் பின் இறைவன் பாதையையும் பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டால் நிச்சயம் நீடூழி வாழ்வார்கள் சொல்லிவிட்டேன் 

அனைவருக்குமே இது பொருந்தும் அறிந்தும் கூட சிறு வயதில் இருந்தே இறைவன் இருக்கின்றான் என்றெல்லாம் சொல்ல வேண்டும் இன்னும் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல் இவ்வாறெல்லாம் பின் அழைத்துச் சென்று கொண்டிருந்தாலே நலன்கள்!!!

பின் மாறிவிடும் என்பேன் அப்பனே பின் அறிந்தும் கூட அம்மையே ஏன் எதற்கு என்று தெரியாமல் கூட அலைந்து திரிந்து பிள்ளைகளை பெற்று விடுகின்றார்கள்... ஆனாலும் அறிந்தும் கூட பின் நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள் 

ஆனால் இறைவனை விட்டு விட்டார்கள் அறிந்தும் கூட 

இறைவன் தான் பாதுகாப்பான் என்ற எண்ணமே வரவில்லை அப்படி எப்பொழுது அந்த எண்ணம் வருகின்றதோ அப்பொழுதே இறைவன் பின் பக்கத்தில் இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!

நல்முறையாக எண்ணத்திலே பின் அனைத்து குழந்தைகளுக்கும் கூட பின் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய பின் சமயம் பார்த்து நிச்சயம் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்!!!

இறைவன் இருக்கின்றான் இறைவனை நம்புங்கள் என்றெல்லாம் நிச்சயம் இறைவனுக்கு பயப்படுங்கள் என்றெல்லாம் நிச்சயம் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் 

 வருங்காலத்தில்  உங்கள் பிள்ளைகள் அனைத்திலும் ஓங்கி நிற்பார்கள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. நன்றி இறைவா, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அம் அகத்திசாய நம 🌷🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete