​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 June 2024

சித்தன் அருள் - 1621 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!








சூரத் சத்சங்கம் பாகம் 10

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குஜராத் சூரத் நகரில் காலபைரவர் சன்னதியில் நடந்த குருநாதருடைய சத் சங்கத்தில் பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினரும் வந்திருந்தார்கள் அவர்கள் குழந்தை பாக்கியம் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது!!!

குருநாதர் சில வழிமுறைகளை தமது வாக்கில் கூறினார்!!!

அந்த வாக்கில் குருநாதர் கூறியதை நம் குருநாதரிடம் இதை பொதுமக்களுக்கும் பொதுவாக வாக்காக வெளியிடலாமா என்று கேட்டுவிட்டு அவரின் அனுமதியோடு பதிவு செய்கின்றோம்!!!!

ஜீவநாடியின் மூலம் குருநாதரிடம் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூறும் பொழுது அந்த பிரச்சினைகள் பொதுவாகவே அனைவரிடத்திலும் இருக்கின்றது ஒருவருக்கு குருநாதர் உரைத்த  சில சூட்சமங்கள் பரிகாரங்கள் மற்றவர்கள் பயன்படுத்த முடியாது !!!!

ஏனெனில் அவரவர் பாவம் புண்ணியம் கர்ம வினைக்கு ஏற்பவே அனைத்தும் நடக்கின்றது தடைகள் தாமதங்கள் விதியிலே இல்லாமல் போவது இவை அனைத்தும் அவரவர் கர்ம வினையின்படி பாவ புண்ணிய கணக்கின்படி நடக்கின்றது.

ஆனால் இதை குருநாதருடைய உபதேசத்தின் மூலம் அவர் காட்டும் வழிமுறைகளின் மூலமும் அவர் செய்யச் சொல்லும் புண்ணிய செயல்கள் மூலமும் திருத்தலங்களுக்கு செல்வதன் மூலமும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டியதை முறையாக செய்வதன் மூலமும் தான தர்மங்கள் செய்வதன் மூலமும் அந்த விதியையும் மாற்ற முடியும்!!!

இதை இவ்விடத்தில் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்!!!

குருநாதர் தனிநபருக்கு கூறும் வாக்குகளில் உள்ள பொதுவான விஷயங்களை அனைவரும் பின்பற்றி அனுகிரகம் பெற்றுக் கொள்ளலாம்!!!!

குழந்தை பாக்கியமின்மை குறித்து அந்த தம்பதியினருக்கு குருநாதர் கூறிய வாக்கில் பொதுவான விஷயம் என்னவென்றால்

அப்பனே முன்னோர்களுக்கு செய்ய வேண்டியதை சரியாகவே செய்து வர நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி!!!!

(அமாவாசை பௌர்ணமி தினங்களில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய முறையான தர்ப்பணம் செய்து அன்னதானம் செய்து வர வேண்டும். குருநாதர் கூறியபடி காசி ராமேஸ்வரம் கயா போன்ற இடங்களில் சென்று முன்னோர்களுக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்து வர வேண்டும். இல்லத்தில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அவர்களை நினைத்து வழிபாடு செய்து அன்னத்தை படைத்து அதை இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்து வர வேண்டும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் நீர் முதலான உணவு முதலான தான தர்மங்கள் செய்து வர வேண்டும் குறிப்பாக அனுதினமும் கோமாதாவிற்கு உணவு வழங்கி வர வேண்டும்)

எதை என்றும் அறிய அறிய பின் அதிகாலையில் எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அரச மரத்தையும் பின் ஆலமரத்தையும் பின் சுற்றிவர வேண்டும்!!! போதுமானது!!!

இதற்கும் பல சம்பந்தங்கள் உண்டு இதை பரிகாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது!!!

பின் நல்விதமாகவே பின் உள்ளே எதை என்றும் அறிய அறிய சில சில (உடலுக்குள்) வாயுக்கள் எதை என்றும் அறியாமலே தங்கிவிடும்!!

ஆனால் இங்கு அதிகாலையிலே....(ஆலமரம் அரசமரம் இருக்கும் இடங்களில்) அதாவது பின் சுற்றினால் அதிலுள்ள பின் பன் மடங்கு எதை என்று அறிய அறிய சில மூலிகைகள் எவை என்றும் அறியாமலும் தெரியாமலும் கூட காற்றினுள் பின் அங்கு இழுத்து நிச்சயம் அதாவது உடம்பில் படுகின்ற பொழுது அதை பின் சுவாசிக்கும் பொழுது பின் எதை என்றும் அறிய அறிய தானாகவே பின் அனைத்தும் கரைந்து பின் குழந்தை பாக்கியம் ஏற்படும்!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் சொல்கின்றேன் அமாவாசை பின் பௌர்ணமி தினங்களில் நிச்சயமாய் 108 முறையும் கூட!!!

பின் நலமாகவே பின் அனுதினமும் அதிகாலையிலே நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் பின் நவமுறையும்  கூட ( 9 முறை சுற்றி வருதல்) நிச்சயம் வலம் வருவது கூட அதி சிறப்பை தரும்!!!

இயற்கையான மூலிகைகளையும் உணவு வழிமுறைகளையும் பின்பற்றி வர வேண்டும் அப்பனே!!!! அதுமட்டுமில்லாமல் நிச்சயம் அதாவது பின் முன்னோர்களுக்கு செய்வதையும் கூட செய்து வர செய்து வர அப்பனே மாற்றங்கள் ஏற்படுவது உறுதி நிச்சயம் பாக்கியங்கள் உண்டு!! உண்டு!!!

(வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!! நமது முன்னோர்கள் குருநாதரும் இதை குறிப்பிட்டிருக்கின்றார் முன்பெல்லாம் சரியாக செய்து வந்தார்கள் அப்பனே என்று அதை இங்கு தெளிவுபடுத்துகின்றோம்!

நமது ஊர்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆலமரம் அரசமரம் என இருக்கும் அதன் அடியிலே பிள்ளையாரும் இருப்பார்!!! அனைவரும் காலையில் சென்று பிள்ளையாரையும் வணங்கி மரங்களையும் சுற்றி வந்து கொண்டிருந்தோம்!!!

அதன் சூட்சமங்கள் இப்பொழுது புரிகின்றது!!!

நம் குருநாதர் வாக்கில் ஆலமரமும் அரச மரமும் வெளிப்படுத்தும் வாயு நம் உடலில் பட வேண்டும் அதை நாம் சுவாசிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் பல வாயுக்கழிவுகள் வெளியேறி...உடல் தூய்மை பெறும்!!! என்பதை குறித்து அற்புதமாக நமக்கு கருணையோடு கூறியுள்ளார்!!!

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கையின்மை இயற்கையை அழித்தல் செயற்கையை விரும்புதல் என மனிதகுலம் திசை மாறி சென்றதால் பல பிரச்சினைகள் நமக்கு ஏற்பட்டு கொண்டே வருகிறது இதில் முக்கியமாக குழந்தை பாக்கியமின்மை...

ஆனால் நம் குருநாதர் மனித குலம் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு மேலே வர கருணையோடு பல வழிமுறைகளை கூறியுள்ளார். இதை அனைவரும் கடைப்பிடித்து வந்தால் நல் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete