​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 30 June 2024

சித்தன் அருள் - 1640 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 2


இறைவா!!!! அனைத்தும் நீ

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன். 

அடியவர்:- துன்பப்பட்டால்தான் இறைவனை..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதே போலத்தான் அப்பனே உன் வாயை அமைதியாக வைத்திருந்தால் துன்பமே வந்திருக்காது அப்பனே. ( தனி வாக்கு) 

அடியவர்:- ( சில கேள்விகள் , தனி வாக்கு)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை யான் எழச்சொன்னேன். அவன் எதற்கு எழுந்தான் கூறு? 

அடியவர்:- ( சில உரையாடல்கள், தனி வாக்கு) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே தகுதி ஒன்று வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைவருமே அப்பனே. தகுதி வளர்த்துக்கொள்வதற்குத் துன்பம் தேவைப்படுகின்றதப்பா. 

அடியவர்:- கண்டிப்பாகத் துன்பம் கொடுக்கவேண்டும் ஐயா. துன்பம் கொடுத்தால்தான் திருந்தமுடியும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( சாவின் விளிம்பிற்குச் சென்ற ஒருவரை நம் குருநாதர் கருணைக் கடல் அகத்திய மாமுனிவர் பிழைக்க வைத்துள்ளார்கள். இது அந்த அடியவருக்கே புதிய தகவல் இங்கு.) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள்:- ( பல உரையாடல்கள் தனி வாக்கு ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இதனால் தான் அப்பனே இறைவன் பார்த்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. யார் யாருக்கு எப்பொழுது பின் கொடுக்க வேண்டும் என்று, அப்பனே அப்பொழுது கொடுப்பான் அப்பனே. அப்பொழுது வாங்கிக்கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியும் உண்டு அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இருவரும் உட்கார். ( நின்ற இருவரையும் குருநாதர் அமரச் சொன்னார்கள்) 

அப்பனே பின் தொடர்சியாகக்கூறு? ( முன்பு தொடங்கிய உரையாடலை மீண்டும் தொடங்க உத்தரவு இட்டார்கள்) 

அடியவர்:-  ( அங்கு உள்ள அடியவர்களைப் பார்த்து ) ஐயா ( நீங்கள் அனைவரும் ) உங்களை எப்படி நீங்கள் அறிகின்றீர்கள். உணர்கின்றீர்கள். ஒவ்வொருவராக்க் கூறுங்கள்? 

அடியவர் 1  :- அகத்தியர் அருள் இல்லாமல் நாங்கள் இல்லை

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுதான் அப்பனே முதலில் அப்பனே தன்னை உணர வேண்டும் அப்பனே. யாரும் தன்னை உணரவில்லை அப்பா இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் எப்படியப்பா வராமல் போகும்? சொல்லுங்கள் நீங்களே? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை நீ அறிந்தால் அப்பனே எப்படி இருப்பாய் அப்பா நீ கூறு? 

அடியவர்:- என்னுடைய அறிவு முழுமை ஆகிவிடும். இறைவனை உணரலாம். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவரை அப்பனே இறைவனை நீ உணரவே இல்லை அப்பனே நீ. அப்படித்தானே பொருள் இது? 

அடியவர்:- ஆத்மாவை இன்னும் முழுமையாகத் தூய்மைப் படுத்துகின்ற முயற்சியில்….

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்றால் என்ன?

அடியவர்:- அணு…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதைப்பற்றி யான் கேட்கவே இல்லை அப்பனே. 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆன்மா அப்பொழுது என்ன? 

அடியவர்:- உயிர்த்துகள்கள் எல்லாம் சேர்ந்தது..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்பதுதான்டா ஆன்மா. 

அடியவர்:- ( சில உரையாடல்கள் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவருமே செத்துச் செத்துத்தான் வந்து கொண்டியிருக்கின்றீர்கள் அப்பனே. இதற்கு யாராவது ஒருவன் சரியாகப் பதில் கூற வேண்டும்? 

அடியவர்:- செல்கள் அழிந்து பிறக்கின்றது. 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சரியான பதில் இது இல்லை. 

அடியவர் 2 :- தினசரி உறக்கம் தான் , நாம் இயங்குவது அறிவினை (தத்துவம்) மூலம் இயங்குகின்றோம். அவ் அறிவினை தினசரி ஆன்மாவைத் தூங்க வைத்து மறுநாள் தேவையான சக்தி கொடுத்து இயங்க வைக்கின்றது….

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் சரியான பதில் அப்பனே ஓரளவுக்குத்தான் என்பேன் அப்பனே. ஆனால் உங்களுக்குத் தெரியாதப்பா.  யானே கூறுகின்றேன் அப்பனே. இப்பொழுது ஆத்மா என்று சொல்லிவிட்டான் அப்பனே. நீங்கள் அனைவருமே பாவ புண்ணியம் செய்தவர்கள்தான் அப்பனே. அப்படி இருந்தால்தான் புண்ணியம் , பாவம் எதை என்றும் புரிந்து புரிந்து உலகத்தில் அப்பனே பிறக்க முடியும் அப்பனே. 

( அடியவர்களே , இப்போது உலகம் அறியாத உங்களின் தூக்கம் குறித்த ரகசியம் ஒன்றை உரைத்து அருளினார்கள் கருணைக் கடல். ) 

நீங்கள் அனைவரும் உறங்கிக்கொண்டுள்ளீர்கள் அல்லவா அப்பனே அப்பொழுது இவ்ஆன்மா அப்பனே இறைவனை நோக்கிச்சென்று யான் இவ்வளவு நல்லது செய்தேன்,  இவ்வளவு தீயது செய்தேன் என்றெல்லாம் அப்பனே அங்கு கைக்கட்டி பதில் கூறி வருமப்பா. இதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள்,  செய்யுங்கள் என்றெல்லாம் ( யாங்கள் தொடர்ந்து கூறுகின்றோம்). 

இவ் ஆன்மா அங்கு செல்லும் பொழுது யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று அப்பனே இறைவன் எழுதிக்கொள்வானப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. புரிகின்றதா? 

இவை எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா. இறைவனை வணங்கினால் அனைத்தும் கிடைத்து விடுமாம் அப்பனே. அனுதினமும் இவ்ஆன்மா இறைவனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பேன் அப்பனே. அப்பொழுது ஏன் திருத்தலங்களுக்குச் செல்கின்றீர்கள் என்று கூறுங்கள்? 

( இது குறித்து வாக்கு ஓன்றை குருநாதர் முன்பு உரைத்துள்ளார்கள். அந்த வாக்கு :-

சித்தன் அருள் - 1585 - அன்புடன் அகத்தியர் - மீர் கட், கங்கை கரை!

9/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை கரையில்.

அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே பின் செத்து செத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.... எவை என்று அறிய அறிய அப்பனே

எவை என்று புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் உறங்கும் பொழுது அப்பனே உன் ஆன்மா எதை என்று அறிய அறிய மேல் லோகத்திற்கு சென்று விடுமப்பா.....

அங்கே வரிசையாக நின்று அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மாவிடம் தீர்ப்புகள் எதை என்று கூட யான் என்ன செய்தேன்? எதை என்று புரிய  புரிய எந்தனுக்கு பின் முக்தியை கொடு!!! கொடு !!!என்றெல்லாம் அவ் ஆன்மா ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பனே !! அவை இவை என்றெல்லாம் அப்பனே

ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே செத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

ஆனால் பிரம்மாவிற்கும் அவ் ஆன்மாவிற்கும் சண்டை வரும் பொழுது பின் மூண்டும் எவை என்று அறிய அறிய காலையில் எழுந்திருக்கும் பொழுது அப்பனே பிரம்மா கொடுத்து விடுவானப்பா கட்டளைப்படி.... இவந்தனை முடித்து விடலாம் என்று!!!அப்பனே!!! முடித்து விடுவான் அப்பனே !!! பின் ஆன்மா மீண்டும் மேல் நோக்கி சென்று அப்பனே அலைந்து திரிந்து ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் சாதாரணமாக பிரம்மாவிடம் எடுத்துக் கூறி கூறி அப்பனே பாசக்கயிற்றை பின் எமதர்மன் எவை என்று கூட வீசிக்கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே சித்திரகுப்தனிடம் பின் கணக்கை அதிகமாக எதை என்று அறிய அறிய அப்பனே முடித்துவிடு!!! என்றெல்லாம் அப்பனே எவை என்று கூட)

( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் ) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( விளக்கம் அளித்தார்கள் ) 

அடியவர் 2:- அறிவை பன்படுத்தனும். இறைவனை நோக்கி செலுத்தவேண்டும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கலியுகத்தில் பக்தியைப் பொய்யாக்குவதே மனிதனுடைய வேலை என்பேன் அப்பனே. 

அடியவர் 2:- மாயையில் உள்ளார்கள்..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிவுகளே இல்லையப்பா. இதனால் கலியுகத்தில் போராட்டங்கள்தான் அப்பனே. அப்பனே ஏற்கனவே கணிக்கப்பட்டதப்பா. அப்பனே கலியுகத்தில் கெட்டது நடக்க வேண்டும் என்று அப்பனே. 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( சில விளக்கங்கள் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதை எவ்வாறு மாற்றுவது நீ கூறு அப்பனே?

அடியவர் 2:- எல்லோருடைய அறிவும் பண்படணும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு அறிவு என்பதே மங்கிவிட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இறைவன் துன்பம் கொடுத்துத்தான் நல்வழிப்படுத்துவான் என்பேன் அப்பனே. இது தவறா?

அடியவர் 2:- ( தவறே இல்லை) நிச்சயமாக நிச்சயம். 100க்கு 100 உண்மை. 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் செய்த தவறுகள் நீங்களே இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே. மீண்டும் அப்பனே (தவறு செய்துவிட்டு , இறைவனிடத்தில்..) எப்படியப்பா? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். மனிதன் தவறு செய்து விட்டு தினமும் தூங்கும்போது இறைவனிடத்தில் சென்று அனைத்தும் ( தவறு உள்பட) கூறி விட்டு, பின் மனிதன் ஆலயங்களுக்குச் சென்றால் எப்படி அப்பா நியாயம் ஆகும்? புண்ணியம் செய்து கொண்டே வந்தால் விதியை மாற்றலாம்.) 

அடியவர்கள்:- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே விதியை மாற்றுவதற்கும் தகுதியானவர்கள் யார்?

அடியவர்கள் அனைவரும்:- சித்தர்கள். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்பொழுதும் அறிவு மங்கிவிட்டது. நீங்கள்தான் அப்பனே. 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். ஆன்மா தினமும் இரவில் இறைவனிடம் சென்று புண்ணியக் கணக்கைச் சொல்லிவிட்டு வரும். அதற்குத் தகுந்தாற்போல் இறைவன் விதியை மாற்றுவார். மனிதர்கள்  அனுதினமும் செய்யும் நல்லவைகளே விதியை அழகாக மாற்றும். புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் தானாகவே விதியை இறைவன், குருநாதர் மாற்றி அமைப்பார்கள்.) 

அடியவர்கள்:- ( அமைதி )

அடியவர் 3:- நல்லது செய்தால் நல்லது நடக்கும். 

அடியவர் 2:- ஞானத்திற்கு விளக்கம் என்னவென்றால் அறிவின் துணை கொண்டு இறை நிலையை உணர்வதே ஞானம். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவை உணர்வதே இல்லை அப்பனே. அப்படி உணர்ந்துவிட்டால் மற்றவர் சொல்வதை நீ கேட்கமாட்டாயப்பா. 

அடியவர் 2:- பைத்தியக்காரனாகிவிடுவான்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- 
( தனி வாக்கு) 

அடியவர் 2:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இறைவனை எதன் மூலம் கானலாம்? 

அடியவர்:- அன்பால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைப் பல பல வழிகளிலும் கூட ஞானியர்களும் உரைத்துவிட்டனர். ஆனால் கேட்கின்றீர்களா நீங்கள்? அப்பனே.

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முதலில் தாய் தந்தையோடு பாசத்தில் (பாசத்தோடு) இருங்கள் என்று. ஆனால் இருப்பதே இல்லையப்பனே. இறைவன் மீது அப்பனே பின் நேரடியாக ( பாசத்தோடு ) இருந்துவிட்டால் என்ன பயன் அப்பா? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அம்மா, அப்பாவுடன் பாசத்தோடு இல்லாமல், இறைவன் மீது மட்டும் பாசம் வைத்து என்ன பயன் என்று குருநாதர் கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா?) 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இல்லத்தில் சண்டைகள், சச்சரவுகள் பின் இருந்து பின் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் ஆசிர்வதிப்பானப்பா. எப்படி ஆசிர்வதிப்பான் என்றால் அப்பனே பின் அப்படியே இரு. அங்கேயே சென்று விடு. வந்தாலும் வீண் என்று. 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இன்று போய் நாளை வா என்ற கதைதான். 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- (தாய், தந்தையரை மதிக்காமல்) அப்ப நீங்க கேட்டாலும் கொடுக்க மாட்டார். 

அடியவர் 4 :- முன்னோர்களுக்கு ( தர்ப்பணம் ..) மரியாதை கொடுக்க வேண்டும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைக் கொடுப்பதே இல்லை அப்பனே. ( பெற்றோர்களுக்கு உரிய மரியாதை) அதைக் கொடுத்திருந்தால் அப்பனே (உன்) பிள்ளைக்குக் கஷ்டங்களை வந்திருக்காது என்பேன் அப்பனே. 

அடியவர் 4:-  ( தனி உரையாடல்கள் ) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ஐயா உங்கள் பிள்ளை உங்களுக்கு மரியாதை கொடுத்திருந்தால் உங்கள் பிள்ளைக்குக் கஷ்டங்கள் வந்திருக்காது. 

(அடியவர்களே, இங்கு இந்த வாக்கை பொதுவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். பல இல்லங்களில் தாய், தந்தையரை மதியாததால் அவ்பிள்ளைகள் கஷ்டங்கள் படுகின்றனர். தாய் தந்தையை மதிக்கும் பிள்ளைகள் அனைத்தும் சாதிக்கின்றனர். அனுபவத்தில் உணர இயலும்) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- தந்தையானவனும் , தாயானவனும் அப்பனே எவர், யார்? 

அடியவர் 4:- இறைவன்

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அனைவருமே அதாவது தன் பிள்ளையை விட்டுக்கொடுக்காமல்தான் செப்புவார்கள் அப்பனே. 

அடியவர்:- ( சில தனி கேள்வி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-  ( விதியை அழகாக எடுத்துரைத்தார்கள் ) 

அடியவர்:-

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- நிச்சயம் தாய், தந்தையரைத் தெய்வமாக நினைத்துக்கொள்பவர்களுக்குக் கஷ்டம் என்பதே வராதப்பா. ( தாய் தந்தையை மதிக்காததனால் பலர் கஷ்டங்கள் படுகின்றனர்). 

அடியவர்:- ( சில தனி உரையாடல்கள், அதன் பதில்கள் ) 

( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments: