11/1/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சாமுண்டா மா காளிகா தேவி கோயில். வல்சாட். குஜராத்.மாநிலம்.
ஆதி பகவானின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே!!!! நலன்களாக எம்முடைய ஆசிகள் அப்பனே!!! கடைநாளும் இருக்குமப்பா.
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் ஒவ்வொரு வாழ்க்கையும் அப்பனே அதாவது இக்கலியுகத்தில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அப்பனே தடம் மாறி!!! மாறி!!! போகுமப்பா.
அதனால்தான் அப்பனே முன்னே அப்பனே பல வழிகளிலும் கூட வாக்குகள் செப்பி செப்பி இப்படி இருந்தால்தான் பின் நிச்சயம் இவ்வுலகத்தில் பின் வெற்றியாளராகச் செயல் பட முடியும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் தோல்வியில் முடிந்து அறிந்தும் அறிந்தும் எதை செய்வது ?, எதை பின் செய்யக்கூடாது? என்பதை எல்லாம் பின் தெரியாமல் மனிதன் திண்டாடுவான்.!!
அங்கும் இங்கும் அலைவான். இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
கடைசியில் பார்த்தால் அலைந்தது பொய் என்று தீர்மானிப்பான். அனைத்தும் பொய் என்று!!! பின் பக்தியும் பொய் என்று பின் கூறுவான்.
அப்பா !!! இது கலியுகத்தின் கட்டாயம்.
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் மனிதன் நினைப்பது அனைத்தும் நடந்துவிட வேண்டுமாம்!!!!!?!?!?!?!?!! அப்பனே.
ஏன்? எதற்கு அப்பனே!!!
இதனால் அப்பனே சில கர்மாக்கள். அப்பனே அதாவது மனிதன் பிறக்கும்பொழுதே யான் பல வகைகளிலும் கூட உரைத்திட்டேன் அப்பனே!!!
கர்மாக்களை சுமந்து சுமந்து!!!
அதை எப்படி ? முதலில் அகற்ற வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே ஒரு மனிதனுக்கு அப்பனே அனைத்து உடம்பிலும் ஒரு சக்தி இருக்கின்றதப்பா!!!
அதை வெளிக் காட்ட வேண்டும். வெளிக்கொண்டுவர வேண்டும்.
அப்பனே எப்படி வெளி கொண்டு வருவது?
அப்பனே கர்மாக்கள். அதாவது பாவம், புண்ணியம். அப்பனே இவை சுமந்திட்டு வரும் பொழுதுதான் அப்பனே அவ் சக்தி அப்பனே கண்ணுக்குத் தெரியாமலே உடம்பிலே அடங்கி உள்ளதப்பா.
அதனால்தான் அப்பனே பின் பாவத்தை நிச்சயம் பின் அடியோடு அழித்துவிட்டால் அப்பனே நிச்சயம் அவ் சக்தி அப்பனே உடம்பில் இருக்குமப்பா.
அப்பனே அப்பொழுது ஒரு மனிதனுக்கு அனைத்தும் தெரியுமப்பா. புரிய வருமப்பா.
காமத்தையும் நீக்குவான். அப்பனே பொறாமையையும் நீக்குவான். அப்பனே எதை என்று அறிய அறிய நீதி நேர்மையை கடைப்பிடிப்பான் அப்பனே
ஆனால் அவ் பாவம் விடுவதில்லையப்பா.
அப்பனே அனைவருமே எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு தெரிவிக்கின்றேன் அப்பனே.
அனைவருமே எந்தனுக்கு அதைத்தா!!!! இதைத்தா !!!!
வாழ்வில் அதி விரைவிலேயே முன்னேற வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
யார் ஒருவன் அதிவிரைவிலேயே பின் முன்னேறுகின்றானோ அவந்தனுக்கு மரணம் ஏற்படும் அப்பனே.
அப்பொழுது இறைவன் செய்வது நலமா?
பின்பு தீங்கா?
நீங்களே யோசியுங்கள் அப்பனே.
பின் எதை என்று அறிய அறிய சிறிது தாமதமாக கொடுத்தால்தான் அப்பனே அப்பனே மரணமும் நீடிக்கும் என்பேன் அப்பனே. இளவயதிலேயே அனைத்தும் கொடுத்துவிட்டால் அப்பனே அவந்தனக்கு மரணம் ஏற்படும் அப்பா.
அப்பொழுது இறைவன் அப்பனே செய்வது சரியேதான் அப்பனே!!!
யான் சொல்வேன் அப்பனே.
ஆனால் மனிதனோ இன்னும் கிடைக்கவில்லையே , கிடைக்க வில்லையே என்றெல்லாம் ஏங்கிக்கொண்டு இருக்கின்றான் அப்பனே.
அப்பனே கலியுகத்தில் பின் நோய்கள் அப்பனே பின் மிகுந்து வருமப்பா. அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே
நிச்சயம் அதை அறிந்து அறிந்து ( யான் கூறிய மருந்துகளையும், அது தொடர்பான வாக்குகளையும் ஏற்று நீங்கள் ) எடுத்துக்கொண்டால் சுலபமப்பா
அனைத்திலும் வென்றுவிடலாம் அப்பனே.
(நோய்கள் குறித்து நமது அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பல மூலிகைகளை ஏற்கனவே எடுக்கச் சொல்லி உள்ளதை இங்கு நினைவில் கொள்க.)
அப்பனே இன்னும் இன்னும் மாய உலகில் என்னென்ன நடக்கப்போகின்றது என்பதை எல்லாம் அப்பனே கண்கூடாகவே நீங்கள் பார்ப்பீர்கள் அப்பனே. இதனால் அழிவுகள்தான், அழிவுகள்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே.
ஈசன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய அப்பனே இதனால் புரிந்து கொண்டு வாழுங்கள், புரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!
புரியாமல் வாழ்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா. அப்பனே நல்விதமாகவே, அப்பனே ஏன் எதற்கு அப்பனே நல்விதமாக தர்மத்தையும் நிச்சயம் கடைப்பிடித்தால் அப்பனே , அப்பனே பின் இறைவனே துணை வருவானப்பா. அனைத்தும் செய்வானப்பா
அப்படி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் அப்பனே இறைவனை எவ்வளவு வணங்கினாலும் அப்பனே நிச்சயம் இறைவனும் ஒன்றும் செய்ய மாட்டானப்பா. கண்களுக்கும் தெரிய மாட்டானப்பா.
அப்பனே இது சத்தியம்.
அப்பனே அதனால்தான் அப்பனே!!!
உண்மையைப் பேசுங்கள். பொறாமையை அகற்றுங்கள். நீதி, நேர்மையோடு வாழுங்கள். தர்மத்தை பேணி காக்குங்கள் என்றெல்லாம் உரைத்துக்கொண்டே வருகின்றார்கள் சித்தர்கள்.
யார் ஒருவன் ( தர்மம் ) இதைச் சரியாக கடைப்பிடிக்கின்றானோ!!!! அப்பனே!!!!! அவன்தனிடத்தில் இறைவனே வந்து நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் செய்வானப்பா.
( கருணைக்கடல் நம்மை வாழவைக்கும் தெய்வம் அகத்திய மாமுனிவர் , பொதிகை வேந்தன் , இராமாயண காவியத்தில் இப்போது யாருக்கும் தெரியாத ஒரு உண்மை நிகழ்வை அவ் மகத்தான சரித்திரத்தின் ஒரு முக்கிய நிகழ்வை எடுத்து உரைக்க ஆரம்பித்தார்கள்)
எதை என்றும் புரியப்புரிய அப்பனே இதே போலத்தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நல்விதமாக அப்பனே சீதா தேவி அறிந்தும் கூட அனுமானுக்கு இட்ட கட்டளை!!!!!
இனி அதாவது பின் ( திரேதாயுகத்தில் இட்ட கட்டளையைக் கலிகாலத்தில் இன்றுவரை) இதுவரையும் கூட நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றான் அப்பனே.
ஏன்? எதற்கு? அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!
இதனால் அவர்கள் ( பகவான் ஶ்ரீ இராமர், அன்னை சீதா தேவி , அனுமான் ) என்ன பாவம்? செய்தார்கள்? என்பவை எல்லாம் நீங்கள் யோசித்தீர்களா? இல்லை.
அறிந்தும் அறிந்தும் கூட அவர்கள் பாவமே செய்யவில்லை !!!!!!
ஏன் கஷ்டங்களை பின் பட்டார்கள் என்பவை எல்லாம் விளக்கத்தோடு அப்பனே பின் வரும் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் செப்புவார்களப்பா.
அப்பனே பலமுறையும் கூட அறிந்தும் கூட எதை என்றும் புரியப்புரிய அப்பனே சீதா தேவி அறிந்தும் கூட பின் அனுமானிடத்தில் பின் சத்தியத்தை வாங்கிக்கொண்டாள்.
ஏன்,? எதற்கு ?என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எதை என்று அறிய அறிய பின் சீதா தேவியோ !!!! நிச்சயம்
அதாவது ஓர் பின் ( ஸ்ரீ) லங்காவில் பின் கஷ்டத்தோடு இருக்கும் பொழுது!!!!
ஆனாலும் ஒரு மூதாட்டி பின் அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய யாருமே எந்தனுக்கு உதவிகள் செய்யவில்லையே!!!
எந்தனுக்கு இவ்வாறு என்பது நோய்கள் வந்து விட்டதே!!!!
இறைவா!!!! யான் என்ன பாவம் செய்தேன்? என்ன பாவம் செய்தேன்? என்றெல்லாம்..
ஆனாலும் பின் அதாவது ( மனிதனுக்கு ) கடை காலங்களில் வயது ஆக ஆக நோய்கள் வருமப்பா.
அதனால்தான் பல மூலிகைகளை யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். இளம் வயதில் எடுத்துக்கொண்டாலே நல் முறையாகும் என்றெல்லாம்!!!!!
இதனால் அவ் மூதாட்டியும் கூட, இதனால் நிச்சயம் பின் சீதா தேவியும் எப்படியோ பின் அவள்தனைக் கண்டுவிட்டு பின் “தாயே , ஏன் இவ்வளவு ( நோய்கள்) ஏன்? எதற்காக” என்றெல்லாம்!!!!
பின் அறிந்தும் கூட அவ் மூதாட்டி “
பின் மகளே!!!, ஏன் இப்பிறப்பு இறைவன் எந்தனுக்கு கொடுத்தான் என்றே தெரியவில்லை.
பின் வாழ்க்கை, அதாவது முதல் பகுதியில் இருந்தே அதாவது சிறு வயதிலிருந்தே இல்லாத எவையென்றும் அறிந்தும் கூட இவ்வாறு வாழ்ந்திட்டு வந்தேன். !!!
யாருமே அதாவது உற்றார், உறவினர் இன்னும் பின் நண்பர்கள் இன்னும் எவருமே இல்லை. இறைவனைத்தான் உயிர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனாலும் இப்படி நோய் அறிந்தும் கூட ஆனால் யாருமே எந்தனுக்குத் துணை புரியவில்லை.!!
அதனால் இக்காட்டிற்கும் கூட வந்து அறிந்தும் கூட இங்குத் தங்கி இருக்கின்றேன். பின் உணவு கூட கிடைக்கவில்லை
அதனால் இறைவனே!!!!! இறைவனே!!!!! என்று வேண்டி ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்.
இறைவனாவது !!! அதாவது பின் ஒரு முறை பந்த பாசத்திற்கு யான் அடிமை இல்லை அறிந்தும் கூட யாருமே துணையில்லை. எப்படியோ வாழ்ந்திட்டேன்!!!
ஆனால் இறைவனாவது கண்களுக்குக் காட்சி அளிப்பான் என்று பின் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்.
ஆனால் நோயின் தாக்கமோ அதிகமாயிற்று இதனால் யான் இறந்து போக தான் வேண்டுமா என்று!!! இறைவனுக்கு நலமா? என்றெல்லாம் ( அவ்மூதாட்டி கேட்டாள்).
ஆனாலும் சீதா தேவியோ தன் மடி மீது பின் அழகாகவே படுத்து உறங்கு என்று!!!
இதனால் அழகாகவே அம்மையே அறிந்தும் கூட இப்பொழுது வயதாகிவிட்டது எந்தனுக்கு.
ஆனால் இப்பொழுதுதான் எந்தனுக்கு நிம்மதி. அறிந்தும் கூட இப்பொழுதுதான் பின் அதாவது உன்மீது படுத்துக்கொண்டிருக்கின்றேனே !!!!
அதாவது மடியின் மீது பின் இவ் சுகம் போதும். அறிந்தும் கூட !!!
பின் யாருக்கு எவை என்று அறிய அறிய!!!
சீதா தேவி!!!
இதனால் நிச்சயம் தாயே!!! இவ் பிறப்பு அதாவது அறிந்தும் கூட இவ்வயது எட்டிவிட்டாய்.
அதாவது 80 வயது எட்டிவிட்டது அவ் மூதாட்டிக்கு. ஆனாலும் உந்தனுக்கு நிச்சயம் இன்னும் ஆயுசு பின் நீளும். நிச்சயம் யான் சொல்கின்றேன். பின் அதாவது அறிந்தும் அறிந்தும் அறிந்தும் கூட!!
அதாவது பத்தினி தேவி்!!!!
நிச்சயம் ஒரு சொல் உரைத்து விட்டால் அது பலிக்குமப்பா. அறிந்தும் கூட!!ஏன் எதற்கு என்றெல்லாம்.
ஆனாலும் அவ்மூதாட்டியும் இல்லை!!! தாயே!!!. ஆனால் இவ்நோயை வைத்துக்கொண்டு இனிமேலும் என்னால் வாழ முடியாது என்று.
ஆனாலும் அறிந்தும் கூட சீதா தேவி!!!
அனுமானே!!!! என்று அழைக்க!!!!
அறிந்தும் கூட அனுமானும் ஓடோடி வந்து விட்டான். சொல்லுங்கள் தாயே !!! என்று கூற !!!
சீதா தேவி!!! அனுமானே!!! நிச்சயம் அறிந்தும் கூட “இவள்தனக்கு எவ்வாறு இப்படி ஆகும் என்பதைக்கூட உந்தனுக்குப் பல மூலிகைகள் பற்றித் தெரியும் அல்லவா?!!!!
இதனால் நிச்சயம் அறிந்தும் கூட அவ் மூலிகைகள் கூட எடுத்து வா” என்று அறிந்தும் கூட!!!
ஆனாலும் இவ் நோய்க்கு நிச்சயம் தேவியே!!!
இங்கு ( ஸ்ரீ லங்காவில்) மருந்து இல்லை. யான் செல்ல வேண்டும். என்று!!!
(மூலிகை மருந்துகளை தேடி எடுத்து வர வெளியே)”
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய நோய்கள் அனைத்தும் தீர்ப்பவன் அப்பனே பின் அனுமானும் கூட அப்பனே!!!!!
அவந்தனும் ஒரு சித்தனும் கூட.!!!!!
அப்பனே இதைப் பற்றிக்கூட யான் நிச்சயம் வாக்குகள் செப்புவேன். அப்பனே அறிந்தும் கூட!!!!
அனுமான் யார்?!!!
எதைப்பற்றி?
எங்கு பிறந்துள்ளான்?
அப்பனே இன்னும் கூட தவம் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே அமைதியாக!!!!
யார் யாரெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?
என்பதை எல்லாம் இன்னும் செப்புவேன் அப்பனே!!!
சீதா தேவி நிச்சயம் பின் எவை என்று கூற உடனே பின் அனுமானே!!!! என்று அழைத்தவுடன் பின் எவ்வளவு தியானத்தில் இருந்தாலும் பின் ஓடோடி வந்துவிடுகின்றான் அப்பனே!!!!.
இதனால்தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே!!!
அனுமான்!!!
இதனால் ஆனால் சீதா தேவியே!!!
இதற்கு மருந்துகள் இல்லை.
இவ் வியாதி புதுமையானது
இதனால் எதை என்று அறிய அறிய யான் எங்கு செல்வது?? என்று!!!
இதனால் நிச்சயம் அதாவது பின் சீதா தேவியும் அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!
அனுமானே நீ செல்!!!.
ஆனாலும் எங்கு என்று அறிந்தும் கூட நீ சென்று கொண்டே இரு.!!!!
நிச்சயம் யான் அறிந்தும் கூட யான் உண்மையானவள்.
நிச்சயம் பின் அனுமானே அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட அதாவது சூரியன் வெளிச்சம் அதாவது எங்கு எதை என்று அறிய அறிய வைரம் போல் மின்னும். !!!!
அங்குதான் மூலிகை உண்டு என்று சீதா தேவியும்!!!
( அனுமனிடம் உரைத்தார்).
அப்படியே ஆகட்டும் தாயே!!!!
அப்பொழுது பின் யான் இங்கு ( இலங்கையில் ) உங்களுக்குத் துணை இருக்கவே பின் யான் வந்திட்டேன். !!!
ஆனாலும் நீயோ !!! அதாவது அறிந்தும் தாயே !!!! இவ்மூதாட்டிக்காக எங்கு அலைய வேண்டும் என்றெல்லாம்!!!!
இதனால் சீதா தேவியோ எதை என்று அறிய அறிய அனுமானே!!!! (இவ் வேலையை )
நிச்சயம் செய்யும்.
இவ்மூதாட்டி பின் அதாவது அறிந்தும் கூட ஒரு பின் சுகத்தைக்கூட அனுபவிக்க வில்லை!!!! உற்றார், உறவினர் எவரும் இல்லை. அதாவது இவ்நோயை குணப்படுத்தி நிச்சயம் அனுமானே பின் அறிந்தும் கூட மற்றொரு பிறப்பிலும் இவள் பிறப்பாள். அறிந்தும் கூட சில நேரங்களாவது சந்தோசப்பட வேண்டும் என்பதே கட்டாயம். எனது தீர்ப்பு என்றெல்லாம்.
சரி தேவியே!!! தாயே நிச்சயம் உன் சொல்லுக்கு நிச்சயம் யான் அடிபணிகின்றேன் என்று!!!
அப்பனே அறிந்தும் கூட யார் ஒருவனிடம் பாசம், அன்பு, !!!
தாழ்வு மனப்பான்மை இல்லாது இருத்தல், உயர் எண்ணங்கள் அதாவது யார் ஒருவன் உயர்ந்த எண்ணங்கள் வைத்துக்கொண்டிருக்கின்றானோ !!!
அவந்தனிடத்தில் இறைவன் அதாவது என்ன வேண்டுமானாலும் செய்வான் அப்பனே
இதனால் அனுமான் நிச்சயம் புறப்பட்டான் லங்காவில் இருந்து.
அறிந்தும் ஆனால் அங்கும் இங்கும் அலைந்தான்!!!, திரிந்தான்!! பின் அனுமானும் கூட எங்கும்.
அதாவது சீதா தேவி சொல்லிவிட்டாள். எங்கு வைரம் போல் ஜொலிக்கின்றதோ அங்குதான் மூலிகை இருக்கின்றதென்று. ஆனாலும் பின் அறிந்தும் கூட அங்கும் இங்கும் பின் அலைந்தும் , அலைந்தும் அதாவது பின் அப்பொழுது பின் அறிந்தும் கூட இதனால் நேரடியாகவே எங்கும் சுற்றி சுற்றி வந்து,
இங்கும் (சாமுண்டா தேவி காளி மலைக்கோயில்) வந்து இதனால் அறிந்தும் கூட ஓய்வெடுத்தான்!!!!
(குஜராத் மாநிலம் அரபிக் கடலோரம் வல்சாட் மாவட்ட தலைநகர் பனெரா அதுல் எனும் ஊரில் மும்பை டெல்லி தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே ஒரு மலைக்குன்று உள்ளது இந்த மலையின் மீதுதான் சாமுண்டி தேவி குஜராத்தில் சாமுண்டா தேவி ராமேஸ்வர் காளிகா தேவி கோயில் அமைந்துள்ளது. சத்ரபதி சிவாஜி அவர்கள் கோட்டையும் அவர் வணங்கிய சுயம்பு காளி தேவி கோயிலில் மேலே உள்ளது மேலிருந்து பார்க்கும் பொழுது மேற்குப் பகுதியில் அரபிக் கடல் சிறிது தொலைவிலேயே உள்ளது)
இந்த மலைக் குன்று மேல் வந்து அனுமான் ஓய்வு எடுத்தார்)
அனுமான். இன்னும் எத்தனை நாட்கள்தான் அலைய வேண்டியது???.
ஆனாலும் எவை என்று அறிய அறிய அலைந்து திரிந்து பின் நிச்சயம் பின் பக்குவங்கள் பட்டால்தான் அதனுடைய மதிப்புத் தெரியும் என்பவையெல்லாம்…
ஆனால் சீதா தேவி நினைத்திருந்தால், ஆனால் அனுமான் நினைத்திருந்தால் ஒரு நொடியில் நிச்சயமாய் அவ்மருந்தினை நிச்சயம் எதை என்று கூற அறிந்தும் கூட பின் தன் கையிலே வந்திருக்கும்!!!!
ஆனால் இதற்கும் கூட நிச்சயம் இதுதான் மெய்.
ஒரு மனிதன் பின் அதாவது எப்பொழுதுமே பின் முன்னேற்றப்பாதையில் பின் உயர்ந்து ஆளாகவேண்டும் என்றால் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட கஷ்டங்கள் பட்டே ஆகவேண்டும்.!!!!
கஷ்டங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை இவ்வுலகத்தில்!!!!
இதனால்தான் சொல்கின்றேன். இவை எல்லாம் ஏன் எதற்குச் சொல்கின்றேன் என்றால் சிறிது ஆராய்ந்து பார்த்தாலே இதில் ரகசியம் பல பல ஒளிந்துள்ளது.!!!
இதனால் நற்பண்புகள் , நற்பண்புகளோடு இங்கே நிச்சயம் அனுமான் அமர்ந்தான்.
ஆனாலும் பின் இவ்தேவி (சாமுண்டா காளிகா தேவி) வந்து அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அனுமானே!!! அலைந்தும் திரிந்தும் இங்கு வந்திருக்கின்றீர்கள்
அறிந்தும். யான் அனைத்தையும் அறிந்து கொண்டேன்
உந்தனுக்கு. இன்னும் மூலிகை கிடைக்க வில்லையா? என்று.
ஆனாலும் பின் இவ்தேவி (சாமுண்டா காளிகா தேவி) வந்து அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அனுமானே!!! அலைந்தும் திரிந்தும் இங்கு வந்திருக்கின்றீர்கள்!!!!!
அறிந்தும். யான் அனைத்தையும் அறிந்து கொண்டேன்!!!!
உந்தனுக்கு!!!! இன்னும் மூலிகை கிடைக்க வில்லையா? என்று.
ஆனால் பின் இவ்தேவி கூட
( அனுமானே நீங்கள் தேடிவந்த அவ் மூலிகை )
இங்கேதான் இருக்கின்றது. யான் சொல்லிவிட்டாலும் நிச்சயம் அறிந்தும் அறியாமலும் கூட!!!
ஆனால் அதனால் தேடு.
ஏனென்றால் தேடுவதற்கு மதிப்புக்கள் அதிகம்.!!!
பின் தேடித் தேடி நிச்சயம் ஓர் நாள் கிட்டிவிட்டால் அதன் சந்தோசம் அருமை!!!
அதனால் அனுமாரே நிச்சயம் அனைத்தும் நீங்கள் அறிந்ததே.!!! உன்னால் அதாவது அனைத்துமே செய்ய முடியும்!!!! இவ்வுலகத்தையும் அழிக்கவும் முடியும்!!! என்றெல்லாம்!!!
இதனால் நிச்சயம் அலைந்தும் திரிந்தும் கூட மீண்டும் மீண்டும் அதாவது பின் அதாவது இமயமலைக்கே சென்றுவிட்டான்.
ஆனாலும் பின் அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய ஆனாலும் இவ்தேவி கூட
( சாமுண்டா காளிகா தேவி அனுமானே நீங்கள் தேடிவந்த அவ் மூலிகை )
இதனால் நிச்சயம் அலைந்தும் திரிந்தும் கூட மீண்டும் மீண்டும் அதாவது பின் அதாவது அனுமான் இமய மலைக்கே சென்று விட்டான்!!!
ஆனாலும் அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய
ஆனாலும் சீதா தேவியே!!!!! நிச்சயம் அன்போடு!! பாசத்தோடு!!! அதாவது இவ்மூதாட்டி இன்னும் அன்போடு அதாவது எவ் சுகத்தையும் அனுபவிக்கவில்லையே!!!....
இதனால் பின் அனுமான் தேடட்டும் !!!, தேடட்டும் !!என்று மனதுள்ளே !!!
இதனால் அவ்மூதாட்டி தன் மடியின் மீதே படுத்துறங்க நிச்சயம் சீதா தேவிக்கும் சந்தோசங்கள்.
அதனால்தான் நிச்சயம் இறைவா!!! சீதா தேவியும் வேண்டிக்கொண்டாள். இறைவா!!!!! இன்னும் அனுமான் அலையட்டும். அலைந்து பின் அறிந்தும் கூட மெதுவாக வரட்டும் என்று.
ஆனால் சீதா தேவியே உடனே கிடைக்கட்டும் என்று பின் சொல்லி இருந்தால் மனதில் பின் நினைத்திருந்தால் உடனடியாக கிடைத்திருக்கும்.
ஆனாலும் அனுமானும் பின் இறைவனே அறிந்தும் கூட நிச்சயம் அனுமானுக்கு நிச்சயம் சிறிது கால தாமதமாகத்தான் நிச்சயம் பின் அவ்மூலிகை கிடைக்க வேண்டும்.
அவ்மூலிகை கிடைத்து விட்டால் உடனே அனுமான் வந்து விடுவான். அதாவது இவ் மூதாட்டியும் பின் அறிந்தும் கூட நன்றாக ஆகிவிடுவாள்.
இதனால் நிச்சயம் எம் மடிமீதே படுத்திருக்கவேண்டும்!!!! எவ்வளவு இனிமை என்று.
ஆனாலும் பின் சீதா தேவியே பின் அவ் அம்மையை நோக்கி பின் அம்மையே போதுமா? என் மடியில் பின் படுத்தது என்று.
( அவ்மூதாட்டியும்) பின் அழுது கொண்டே இவ்வாறு யார் கவனித்தார்கள் ???
எந்தனுக்கு…!!!!
அதனால் இன்னும் யான் நிச்சயம் உன் மடியின் மீதே தூங்கப்போகின்றேன்!!!
பின் இறந்தாலும் உன் மடியின் மீதுதான் இறப்பேன் என்றெல்லாம்.
பின் சீதா தேவியும் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது தாயே !!!!
அறிந்தும் எதை என்று உணர்ந்து உணர்ந்து என்றெல்லாம்.
இதனால் பின் அனுமானும் அங்கும் இங்கும் அலைந்து எங்குமே கிடைக்கவில்லை எதை என்று அறியும் அறியும் வண்ணம்
இதனால் மீண்டும் அங்கும் இங்கும் அதாவது பின் அனைத்தும் அலைந்து விட்டோமே !!!!! ஏன் எதற்கு என்றெல்லாம் பின் மீண்டும் அதாவது லங்காவிற்கே அறிந்தும் கூட வந்துவிட்டான் அனுமானே.
சீதா தேவியே!!!! அலைந்து திரிந்து பார்த்தேன். ஆனாலும் நிச்சயம் எங்கும் அவ் மூலிகை இல்லை என்று.
சரி. என்னதான் செய்வோம் என்று. அவ்வளவுதான் என்றெல்லாம்!!!
ஆனாலும் நிச்சயம் அனுமானே உன்னால் முடியும்!!!
மீண்டும் ஒரே முறை!!! ஒரே முறை செல்!!!
நிச்சயம் அறிந்தும். எவை என்றும் அறிய அறிய இன்னும் புகழ் ஓங்கும் உந்தனுக்கு என்றெல்லாம்.!!!
இதனால் நிச்சயம் இப்பொழுது கிடைத்துவிடும். ஓடி எதை என்று அறிய அறிய மீண்டும் எவை என்று அறிய அறிய பின் அங்கிருந்து புறப்பட்டான்!!!!
எவை என்று அறிய அறிய தற்பொழுது இங்கேயேதான் சிறிது தொலைவிலே பின் கடல் எதை என்று அறிய அறிய அங்கே எவை என்று கூற மின்னியது!!!!!
எதை என்று புரிகின்றதா? எவை என்று அறிய அறிய வைரத்தைப் போல் மின்னியது.!!!!
ஆனால் அங்கே எதை என்று அறிய அறிய பின் குதித்தான் பின் கடலில். அடியில் சென்றான் நலமாகவே பின் ஒரு மூலிகை நன்முறைகளாகவே கிடைத்தது. அதை எடுத்து வந்தான். அறிந்தும் அறிந்தும் கூட !!!!
அப்பனே தெரிவித்துக்கொள்கின்றேன் இப்பொழுது கூட அவ்மூலிகை எதை என்று அறிய அறிய இங்கேயேதான் இருக்கின்றதப்பா.
(சாமுண்டா (தமிழில் சாமுண்டீஸ்வரி) காளிகா கோயிலில் இருந்து நேர்கோடாக மேற்கே சிறிது தொலைவில் அரபிக் கடல் உள்ளது. அந்த கடலில் உள்ளே தான் வைரம் போல மின்னும் மூலிகை கிடைத்தது அது இன்றும் இருக்கின்றது)
அவ் மூலிகை கொடுத்து விட்டால் அப்பனே நிச்சயம் பின் எவை என்று கூற சிறிதளவே பின் சாப்பிட்டாலும் நோய்களே வராதப்பா.
ஆனால் கலியுகம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய!!!
இதுதான் அப்பனே, ஈசனுடைய கட்டளையும் கூட.
அப்பனே எவை என்றும் புரியப் புரிய அதனால் மனிதன் சரியான வழியிலே பின் நடந்து கொண்டால் எவ்நோயும் தாக்காது.
ஆனால் அப்பனே சரியான வழியில் பின் நடப்பதில்லை என்பேன் அப்பனே.
சரியான வழியில் நடந்தால் அப்பனே இறைவனே இப்பொழுது எப்படி மூலிகையைக் காண்பித்தான் என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இப்படித்தான்.
இதனால் உடனடியாக சீதா தேவியிடம் சென்றான். தாயே!!!!! தேவியே !!!! அறிந்தும் கூட மூலிகை கிடைத்து விட்டது.
ஆனால் பின் அங்கும் இங்கும் யான் மலைகளில் இருக்கின்றது என்று நினைத்தேன். ஆனாலும் கடைசியில் பார்த்தால் கடல் அடிக்குள்ளே இருக்கின்றது. இதனால் அறிந்தும் கூட ஏன், எதற்கு என்றெல்லாம்!!!!
இன்னும் கடலடியில் அதாவது இவ்வட்டாரங்களில் பாரத்தால் இன்னும் கடலடியில் இன்னும் வைரங்களெல்லாம் ஏன் எவை என்றும் அறிய அறிய ஒரு முறை அதாவது அறிந்தும் அறிந்தும் இன்னும் என்னவென்று அறிந்தும் கூட பல அரசர்கள் பின் அறிந்து அறிந்து பின் வாழ்ந்து வாழ்ந்து நிச்சயம் எங்கு எவை என்று அறிய அறிய பின் இவை எல்லாம் மனிதனுக்குக் கிடைத்து விட்டால் நிச்சயம் மனிதன் பின் கலியுகத்தில் பின் தவறான வழியில் சென்று பின் பணம் அறிந்தும் கூட எதைஎதையோ செய்துவிடுவான் என்றெல்லாம் நிச்சயம் அதாவது ஆபரணங்கள் எல்லாம் பின். அதாவது சொன்னேனே ,
கடலில் கொட்டிவிட்டார்கள் அறிந்தும் கூட.
இப்பொழுது கூட அவை எவை என்று கூற பின் வைரங்களாகவே ஜொலித்து ஜொலித்து வருகின்றது.
இதனால் நிச்சயம் அதாவது உடனே கொடுங்கள் அறிந்தும் கூட அவ் அம்மைக்கு என்று அனுமானும்.
அனுமானும் கூற!!!! அறிந்தும் கூட எவை என்றும் அறிந்து அறிந்து அவ்மூதாட்டியிடம் நிச்சயம் அறிந்தும் கூட பின் அனுமான் பின் இட்டான் அறிந்தும் கூட.
அதாவது (வரம்)இட ....கூட பின் வரும் பொழுதே நிச்சயம் ( 80 வயதான ) அவ் அம்மை ஓர் இளமைபோல் ஆகிவிட்டது. அதாவது ஓர் 30 வயது பெண்மணி போல் ஆகிவிட்டது. துள்ளிக் குதித்தது எவை என்று அறிந்து அறிந்து கூட!!!
இதனால் தாயே!!!! அறிந்தும் அறிந்தும் கூட இப்படியா!!!! எவை என்று அறிய அறிய இவன்தன் எதை என்றும் புரியப் புரிய ஆனாலும் அனைத்தும் புரிந்து கொண்டாள் அவ் மூதாட்டி.
எவை என்றும் அறிந்தும் கூட இப்படியா????!!!!! எந்தனுக்குச் சொந்த பந்தங்கள் இப்படி இருக்கின்றதே!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வளவு பெரிய ஆட்களா!!!!!
அனுமானும் எதை என்று கூற ராமனும் எவை என்றும் புரியப் புரிய இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய இன்னும் யான் வாழப்போகின்றேன் என்று சந்தோசம் அடைந்துவிட்டது.
இதனால் அறிந்தும் கூட அவ்மூதாட்டி நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இப்பொழுது கூட அறிந்து கூட பிறப்பில் அதாவது எதை என்று கூற இப்பிறப்பில் பிறந்துள்ளாளப்பா.
நிச்சயம் எவை என்றும் அறிந்தும் கூட பின் அயோத்தியில் ஒரு சிறப்பாக அதி விரைவிலே நடை பெறுகின்றது (அயோத்தியில் 2024ஆம் ஆண்டு நடை பெற்ற பகவான் ஶ்ரீ ராமர் ஆலய கும்பாபிஷேகம் ) அப்பனே அங்கு வருவாளப்பா அவள்தன்.
நிச்சயம் இப்பொழுது கூட அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது திருமணம் செய்யாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றாள் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே நல்விதமாகவே
இதனால் அவள்தனக்கு அனைத்து வசதிகளுமே உள்ளதென்பேன் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட.
ஆனாலும் அப்பனே அவ்பாக்கியம் யாருக்குமே கிட்டாதப்பா அவளைப் பார்ப்பதற்கு.
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சிலபேருக்கே என்பேன் அப்பனே.
சிலபேர் அவள்தனை பார்த்துவிட்டாலே போதுமானது அப்பனே புண்ணியங்கள் ஏற்பட்டு அப்பனே மாற்றங்கள் அப்பா. இதுதான் அப்பனே புண்ணியம் என்பேன் அப்பனே.
ஆனால் யான் செல்கின்றேன், அங்குச் செல்கின்றேன் இங்கு செல்கின்றேன், இவை செல்கின்றேன் என்று பார்த்து பின் பார்த்தாலும் பிரயோஜனம் இல்லையப்பா.
இதனால் புண்ணிய ஆத்மாக்கள் அப்பனே எப்பொழுது வழிவிடுமென்றால்?????????
அப்பனே!!!
தான, தர்மங்கள் அப்பனே!!!!
எவை என்று அறிய அறிய இன்னும் , இன்னும் தர்மத்தோடு வாழ்தல் என்றெல்லாம் அப்பனே இருந்தால் !!! நிச்சயம் அப்பெண்மணி நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பின் காட்சி அளிப்பாள் அப்பா.
இப்பொழுது கூட வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றாளப்பா. திருத்தலம், திருத்தலமாக !!!
அப்பனே நன்மைகள் செய்து கொண்டுதான் இருக்கின்றாளப்பா நன்மைகளாகவே.
ஆனால் இவள்தனைப் பார்த்துவிட்டாலே போதுமானதப்பா. அறிந்தும் அறிந்தும் கூட நன்மைகள் உண்டு என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் மாற்றங்கள் என்பேன் அப்பனே.
அப்பனே அதாவது அப்பனே நல்மனதோடு இறைவனுக்குப் பிடித்தாற்போல் வாழ்ந்தால் அப்பனே ஆன்மாவுக்கு மரணமே இல்லையப்பா. அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே எவை என்றும் புரியப்புரிய இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே உடம்பைப் பெற்றுவிட்டாலே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அப்பனே. எவை என்று அறிய அறிய அப்பனே
ஆனால் மனிதன் அதை ஏற்பதே இல்லை என்பேன் அப்பனே எவை என்று புரியப் புரிய. இதனால் மனிதன் உடம்பைப் பெற்றுவிட்டால் அப்பனே நோய்கள் நிச்சயம் வந்தே தீருமப்பா, வந்தே தீரும். எதை என்று அறிய அறிய
ஆனாலும் அவற்றுக்கெல்லாம் பின் எவை என்று கூற தீர்வு அப்பனே ஒன்றே ஒன்றுதான்.
அப்பனே எவை என்று அறிய அறிய நல்முறைகளாகவே அப்பனே ஒருமனிதன் எப்படி வாழ வேண்டுமோ பின் யான் சொல்லி விட்டேன் பல வாக்குகளில் கூட !!!
அப்பனே அப்படி வாழ்ந்திட்டு வந்தால் நோய்கள் நிச்சயம் மனிதனை நெருங்காதப்பா.
அப்பனே பல மூலிகைகளைக்கூட யான் செப்புவேன் அப்பனே. அப்பனே அவை மட்டும் இல்லாமல் மூலிகைகள் எடுத்துக்கொண்டாலும் அப்பனே சில நபர்களுக்குச் சரியாகாது. ஏனென்றால் அப்பனே அவன் செய்த எவை என்று கூற பாவமப்பா.
அவ்பாவத்தைத்தான் யாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம் அப்பனே நலன்களாகவே அதை எப்படி ?????? கழிப்பதென்று.
ஆனாலும் அப்பனே அவ் பாவத்தைக் கழிக்க மனிதன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பரிகாரங்கள் செய்வது. எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு செய்தால் மட்டும் போதுமா அப்பனே??????
அன்போடு வாழ்தல். அப்பனே கருணையோடு வாழ்தல். அப்பனே நல் முறைகளாகத் பின் தன்னை எதை என்று கூற தன்னையே அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு அர்பணித்தல். பின் பிறரையும் தன்னைப்போல் எண்ணுதல். அப்பனே பொறாமை குணம் வேண்டாமப்பா. போட்டிகள் வேண்டாமப்பா. அப்பனே பக்திக்குள் இவை எல்லாம் பின் நுழைந்து பின் பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றான் அப்பனே. அப்படி இருந்தால் அப்பனே நீ இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் உன்னை மதிக்கக் கூட மாட்டானப்பா.
ஆனால்!!!!
நீதான் அப்பனே யான் இறைவனுடைய பக்தன் அறிந்தும் அறிந்தும் கூட எந்தனுக்கு இறைவனிடத்தில் பக்தி அதிகம். எவை என்று அறிய அறிய பின் நடிப்பானப்பா, நடிப்பான் !!!!.
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பனே மனிதனுக்கு எடுத்துக்காட்டு அப்பனே நடிப்பதில் மிக மிக வல்லமை பெற்றவன் அப்பனே. அறிந்தும் கூட அப்பனே மனிதன் அப்பனே
அதனால் தான் பின் அவ் நடிப்பிற்கு யாங்கள் முட்டுக்கட்டை இட்டுக்கொண்டிருக்கின்றோம் அப்பனே.
மனிதனை இப்படியே விட்டு விட்டால் அப்பனே சிறிது காலத்தில் அப்பனே யான்தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் அப்பனே. இப்பொழுதே சொல்லிக்கொண்டுதான் வருகின்றார்கள் ஆனால் அவன் நிலைமை அப்பனே எப்படியப்பா??? யாங்கள் கணிப்பது அப்பனே? அறிந்தும் கூட.
அப்பனே இங்கு எவரும் அப்பனே அனைவருமே மனிதர்கள்தான் அப்பனே. அனைவருமே பின் சமம்தான் அப்பனே. யான் பின் எவை என்று அறிய அறிய என்னிடத்தில் பணம் உள்ளது என்னிடத்தில் இன்னும் எதை எதையோ உள்ளது. எவை என்று கூற என்னிடத்தில் யான்தான் பெரிய பக்தன் என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை என்பேன் அப்பனே. அனைவருமே சாதாரணமானவர்கள்தான் என்பேன் அப்பனே.
அனைத்தும் மனிதர்கள் நீங்கள் மனிதர்கள்தான் என்பேன் அப்பனே. மனிதன் எவை என்றும் புரியப் புரிய அப்பனே எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே அறிந்தும் கூட
இதனால் அப்பனே இறைவன் அப்பனே அதாவது இறைவனுக்கு ஏதும் தேவை இல்லை அப்பா.
அப்பனே , அன்புதான் மூலாதாரம் என்பேன் அப்பனே.
இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கே பின் இறைவன் போல் பின் வேஷங்களிட்டு மனிதனை , மனிதன் வணங்குவானப்பா!!!!!!!!.
அப்பா!!!!! புத்தி கெட்ட மனிதனப்பா!!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் என்ன பிரயோஜனம் அப்பனே?????
இப்படித்தான் வணங்கிக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. பின் அதாவது மனிதன் என் காலைக் கழுவு. என் கையைக் கழுவு. இன்னும் எந்தனுக்குத் தண்ணீர் ஊற்று. எந்தனுக்குப் பாலாபிஷேகம் செய். அப்பனே, புத்தி கெட்ட மனிதனப்பா !!!!!!!!, புத்தி கெட்ட மனிதன்!!!!!!!!!
இறைவனே கேட்கவில்லை அப்பனே.!!!!!
(எந்தனுக்கு அதைச் செய் இதை செய் என்று )
ஆனால்!!!!!மனிதன் கேட்கின்றானென்றால்!!?!?!?!?!?!?!
அப்பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்பேன் அப்பனே.
அதனால் மனிதனே இவ்வுலகத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
எவை என்று அறிய அறிய யார் மீதும் தவறில்லை என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய மனிதன் பின் காசுக்காக ஆசைப்படுகின்றான்.
அப்பனே இன்னும் எதை எதையோ ஆசைப்படுகின்றான். காசுகள் கொடுத்தால் அப்பனே மனம் மாறிவிடுகின்றதப்பா, மனம் மாறுகின்றது.
இதனால் அப்பனே நல்லோர் தீயோர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லையப்பா. எவை என்று அறிய அறிய எதை என்று புரியப் புரிய அப்பனே கலியுகத்தில் இப்படித்தான் மனிதன் செய்வானப்பா. இன்னும் இன்னும் மனிதனின் புத்திகள் அப்பனே தாழ்வுடனே செல்லும் என்பேன் அப்பனே.
தாழ்வுடன் செல்கின்ற பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய இதனால் யாங்கள் ஒன்றும் சொல்லவில்லை அப்பனே!!!!
பக்திக்குள் வந்து அப்பனே பொய் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே.
இன்னும், இன்னும் அப்பனே பின் திருத்தலமாக, திருத்தலமாக!!!!......................
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே.!!!
நிச்சயம் அப்பனே திருத்தலம் கட்டினார்கள் அதாவது அகத்தியன் என்று.
( அகத்திய மாமுனிவர் ஆலயம்).
அப்பனே, பின் அவன் கட்டிவிட்டானா???
யான் கட்டுவேன் என்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் இன்னொருவன்,
அவந்தனா கட்டிவிட்டான்?
யானும் கட்டிவிடுவேன் என்று அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் இன்னொருவன்!!!
எதை என்று அறிய அறிய அப்படியா?????
அவர்களிடத்தில்தான் அகத்தியன் இருக்கின்றார்களா????
நாமும் எவை என்று அறிய அறிய இறங்குவோம் பின் அகத்தியன் திருத்தலத்தை பின் கட்டுவதற்கு என்று மற்றொருவன் அப்பனே.
அப்பனே, எங்கப்பா??????? இங்கு பக்திகள் போய்விட்டது அப்பனே???? எதை என்று அறிய அறிய!!!
இதனால் அப்பனே!!!
எப்படியப்பா ?????
யான் அங்கே இருப்பேன்????
எப்படியப்பா?????
யான் நலன்கள் அவர்களுக்கெல்லாம் தருவேன்?????அப்பனே?!!!.
இது போன்றுதான் அப்பனே போட்டி, பொறாமைகளோடு அகத்தியனுக்குக் கட்டுகின்றேன், கட்டுகின்றேன் என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் சிறிது மேல் நோக்கிச் சென்றால் அதைச் செய்கின்றேன், இதைச்செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே….
அப்பனே இறைவன் படைத்தானப்பா,!!!!
இறைவனுக்கு யார்? மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அப்பனே நிச்சயம் புரிய வைக்கின்றேன் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது மனிதன் கலியுகத்தில் திருடனாகத்தான் வலம் வர வேண்டும் என்பது விதியப்பா.!!!
அதனால் அப்பனே மனிதனிடத்தில் என்னென்ன குணங்கள் ஒளிந்திருக்கின்றது என்பதைக்கூடப் பாருங்கள்.
பக்தியிலேயே இருந்து கொண்டு அப்பனே கோபப்படுவான் அப்பனே!!!!
எவை என்று அறிய அறிய உண்மையானவன் அதாவது இறைவனை உணர்ந்தவன் , கோபப்படமாட்டானப்பா, கோபப்படமாட்டான்!!!! அறிந்தும் கூட
எவை என்றும் புரியப் புரிய அப்பனே பொய்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ஒரு கூட்டமே!!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அவர்களுக்கு நோய்கள் கொடுத்து விட்டேன். அறிந்தும் கூட !!!
ஆனால் அப்பொழுது இந்த நிலைமையில் கூட திருந்தவில்லையே என்பேன் அப்பனே. அறிந்தும் கூட!!!!
அப்பனே!!!! அகத்தியனுக்கு மனசாட்சியோடு வாழ வேண்டும். அன்போடு வாழ வேண்டும் அப்பனே. இதுவே போதுமானது அப்பனே.
எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே இன்னும் என் பெயரைச் சொல்லி அவன் பெரியவன். இவன் பெரியவன். அகத்தியன் என்னிடத்தில் உள்ளான். என்னிடத்தில்தான் தங்குவான். என் இல்லத்தில்தான் தங்குவான். அகத்தியனுக்கு அனைத்தும் யான்தான் செய்கின்றேன். உணவைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றான் என்றெல்லாம். முட்டாள் மனிதன் அப்பனே. எதை என்று அறிய அறிய!!!!!
அப்பனே!!!!! """"”"""""""""" யான் அனைவருக்குமே சொந்தமானவன்!!!!!!!!!!!!!! அப்பனே.
அதாவது இன்னும் சிறிது மேல்நிலையில் பார்த்தால் பின் என் அப்பன் என்று சொல்கின்றான் அப்பனே!!!
(நான் , என், எனது, என்னுடையது, என்ற எண்ணத்தை சுட்டி காட்டுகின்றார்)
எவை என்று அறிய அறிய அறிவு கெட்ட மனிதன். எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய எதை என்று கூற யார் ஒருவன் அப்பனே ( இவ் அகத்தியனை ) தம் தனக்குச் சொந்தம் கொண்டாடுகின்றானோ எவை என்று அறிய அறிய!!!
"""'" நமது அப்பன் என்று சொல்ல வேண்டுமே தவிர!!!!!
என் அப்பன் என்று சொல்கின்றானே அப்பொழுதே அவன் கீழ் இறங்கி விட்டானப்பா
(நம் அனைவருக்கும் தந்தை அகத்தியர் என்று சொல்ல வேண்டும்)
எதை என்று கூற புத்தி கெட்ட மனிதனப்பா. எவை என்று அறிய அறிய இறைவனைச் சொந்தம் கொண்டாட முடியுமா அப்பனே ???? இவ்வுலகத்தில் அப்பனே??
சாதாரண நிலத்தை நீ சொந்தம் கொண்டாட முடியாதபொழுது இறைவனை என் இறைவன் என்று சொல்கின்றான் அப்பனே!!!!!
எவை என்று புரியப் புரிய அப்பனே பின் பின் இது அறிவாளிகளுக்கு மட்டுமே புரியும் என்பேன் அப்பனே.
நமது இறைவன் எதை என்று கூற அனைவருக்குமே சொந்தம் இறைவன். நமது சொந்தக்காரன் என்றே கூற வேண்டுமே தவிர!!!!!!!........ அப்பனே பக்தி என்பது அப்பனே சாதாரணமில்லை!!!!
அப்பனே அதில் இறங்கிவிட்டால் அப்பனே உண்மையாக இருக்க வேண்டும். அப்படி உண்மையாக இல்லை என்றால் அவ் பக்தியே உங்களை அழித்துவிடும் அப்பனே சொல்லிவிட்டேன்.
அதனால்தான் அப்பனே உண்மையாக இருங்கள்!!!, உண்மையாக இருங்கள்!!!! என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம் அப்பனே.
அதனால் அப்பனே வாக்குகள் கூட சில நபர்களுக்கு ஏன் வரவில்லை????? என்றால் அப்பனே புத்தி கெட்ட மனிதன் ஒன்றுமே தெரியவில்லை அப்பனே.
பின் ஒன்றும் தெரியாமல் வாக்குகள் உரைத்தாலும் ஏதோ ஒன்று எவை என்று அறிய அறிய அப்படியே சென்று விடுவான் நகைத்து!!! ஆ!!! என்று.
பின் பார்த்தால் சிரிப்பான். ஆனால் எவை என்றும் அறிய அறிய எதை என்றும் புரியப் புரிய மீண்டும் ஒன்றும் நடக்கவில்லையே இவ்வாறு பரிகாரங்கள் செய்து என்று.
அப்பனே எப்படிச் செய்யவேண்டும்? எப்படி ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்? இன்னும் எப்படி நிலையாக வாழ வேண்டும்? இறைவனை எப்படித் துதித்துப் பாடவேண்டும்???? என்பதைக்கூட அப்பனே தெரியவில்லையே, தெரியவில்லை அப்பனே.
அப்படி யான் கொடுத்தாலும் பிரயோஜனமில்லையப்பா. அவனால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா.
அதனால் பக்குவங்கள் வேண்டும் அப்பனே. பக்குவங்கள் எதை என்று அறிய அறிய அவ் பக்குவங்கள் அப்பனே துன்பம் பட்டால்தான் பக்குவங்கள் கிடைக்கும். பின் அவ் பக்குவத்தை அப்பனே இருப்பவனிடமே யாங்கள் கொடுப்போம் அப்பனே
பக்குவம் இல்லாதவனிடத்தில் கொடுத்து விட்டால் அவந்தனக்கு பேசக்கூடத் தெரியாதப்பா. எதை என்று அறிய அறிய அப்படி, இப்படி என்றெல்லாம் அப்பனே பேசிக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
எவை என்று கூற அதுதான் அப்பனே மனிதனை எதை என்று கூற !!!
அதனால்தான் அப்பனே நடிப்பதில் மிகச் சிறந்தவன் அப்பனே மனிதன் என்பேன் அப்பனே.
அதுவும் பொய் சொல்லி நடிப்பதில் அப்பனே மனிதன் அப்பனே மனிதனுக்கு ஈடாகாது.
எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு மனிதன் கூட எதை என்று அறிய அறிய பொய் சொல்லி எதை என்று கூற எப்பொழுது பொய் சொல்கின்றானோ எவை என்று அறிய அறிய அப்பனே அதில் ஒரு துகள் எதை என்று அறிய அறிய அப்பனே சேமித்து வைக்கின்றது, சேமித்து வைக்கின்றது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. நீ என்னென்ன??? செய்கின்றாய் என்பதைக் கூட அனைத்தும் சேமித்து வைக்கின்றது.
அதே போலத்தான் புண்ணியம் கூட சேமித்து வைக்கின்றது என்பேன் அப்பனே.
எதை என்று கூற நீ என்னென்ன செய்கின்றாய் என்பதைக்கூட ஒரு துகள் அப்பனே , அப்பொழுது எதை என்று கூற பாவக்கணக்கு அதிகமானால்!!!......
அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் அதனை எவை என்று கூற பின் அதாவது புண்ணியம் கணக்கும் அப்பனே எவை என்று கூற சிறிது தாழ்வு இருந்தால் அப்பனே முதலில் பாவக்கணக்கு அப்பனே தொடர்ந்து விடும் என்பேன் அப்பனே.
அப்பொழுது ஒன்றுமே எவை என்று கூற உன்னால் செய்ய முடியாதப்பா. எத்திருத்தலத்திற்கும் கூட சென்றாலும் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா.
அப்பனே இது இறைவனின் கட்டளை அப்பனே, இறைவனின் கட்டளை அப்பனே.
சொர்கம், நரகம் அப்பனே இவை எல்லாம் எங்குள்ளது? பூமியிலேயே உள்ளது என்பேன் அப்பனே. நீ வாழ்வதிலேயே உள்ளது என்பேன் அப்பனே.
எதை என்று அறிய அறிய இன்னும் விளக்கங்களோடு கூறுகின்றேன் அப்பனே..
எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே. தேவி, பின் இறைவன்கள் அப்பனே ஏன் காடுகளிலும், மலைகளின் மீது இருக்க வேண்டும்???? என்பதை அப்பனே உணர்ந்தது எதை என்று அறிய அறிய கிரகங்கள் எப்பொழுதுமே தாக்காதப்பா !!! எவை என்று அறிய அறிய காடுகளும், மேடுகளும் கூட அப்பனே அலைந்து திரிந்து அப்பனே சென்றால் அப்பனே மனிதனுக்கு அறிவுகள் அதிகமாகும் என்பேன் அப்பனே.!!!
சில சில விஷயங்கள் தீயவை தாக்காதப்பா. அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே. ஆனால் மனிதனோ என்னைத் தாக்கிவிட்டது , அவை தாக்கிவிட்டது, இவை தாக்கி விட்டது என்று அமைதியாக இருப்பான் அப்பனே.
ஆனால் புத்தியே இல்லை என்பேன் அப்பனே.
இதற்காகத்தான் அப்பனே பின் அலைந்து திரிந்தால் அப்பனே பல மூலிகைகள் அப்பனே ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே இதனால். புத்திகள் பெறுங்கள். நலமாக வாழுங்கள். எம்முடைய ஆசிகளப்பா !!!! ஆசிகள்.
கோயில் முகவரி மற்றும் விவரங்கள்
ஸ்ரீ சாமுண்டா மாதா காளிகா கோயில்.
பர்னேரா .
வல்சாடு தேசிய நெடுஞ்சாலை.396020
வல்சாடு. மாவட்டம்.
குஜராத் மாநிலம்
கோயில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக்க நன்றி ஐயா
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete