​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 July 2024

சித்தன் அருள் - 1652 - அன்புடன் அகத்தியர் - காசியில் காகபுசுண்டர் வாக்கு!


18/5/2024 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மீர் காட் கங்கை கரையில்.காக்கும் சிவன் காசி.

நமச்சிவாயனை பணிந்து பின் பரப்புகின்றேன் புஜண்டனவன்!!!.

அப்பா எண்ணற்ற கோடிகள் மனிதனை அதாவது பிறவிகள் பார்த்திட்டேன் பார்த்திட்டேன்.

ஆனாலும் இக்கலியுகத்தில் மனிதனைப் போல் !!.........  அதாவது தீய எண்ணங்கள் தான் மனிதனிடத்தில் மிஞ்சி மிஞ்சி காணப்படுகின்றது.


 அறிந்தும் ஏன் ? எதற்கு? அறிந்தும் உண்மைதனை கூட !!! உண்மைதனை  பின் புரிந்தாலும் அதற்கேற்ப மனிதன் நடந்து கொள்ளவில்லையே!!! அறிந்தும் அறிந்தும்  முட்டாள் மனிதனே!!! அறிந்துப் பைத்தியக்கார மனிதனே!!!!

 ஏன் எதற்கு வந்தோம்??? எப்பிறப்பு???? அறிந்தும் கூட எப்படி வாழ வேண்டும்??? பின் எப்படி இறைவனிடத்தில் சேர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமல் அலைந்து திரிந்து பின் அறிந்தும் இறைவன் ஏதாவது செய்துவிடுவானா? என்று எண்ணி நிச்சயம் இறைவனிடத்தில் நாடி!! நாடி!!


பைத்தியக்காரர்கள் ஆனாலும் அறிந்தும் உண்மை நிலையை புரிந்து புரிந்து சென்றால்தான் இறைவனையும் கூட பின் நாட முடியும் என்று நிச்சயம் தெரியாமல் போய் விட்டதே மனிதனுக்கு !!!!!!


அதனால் தான் சித்தர்கள்!!!

 ஒன்று !!.... மனிதன் திருந்தினால் திருந்தட்டும் அப்படி இல்லையென்றால் நிச்சயம் அடித்து திருத்துவோம். இதுதான் சித்தர்களுடைய ரகசியம் அறிந்தும் உண்மைதனை கூட.

பல பல பிறவிகள்  மனிதன்
எடுத்திருந்தாலும் நிச்சயம் பின் கடை பிறப்பில் நிற்பவர்களே எங்களை சார்ந்து வர முடியும்.


 ஆனாலும் புத்தி கெட்ட மனிதன்  பின் அலைந்தும் திரிந்தும் அகத்தியன் செய்வான். இன்னும் சித்தர்கள் செய்வார்கள்.


இன்னும் அறிந்தும் இறைவன்  செய்வார்கள் என்றெல்லாம் எண்ணி!! எண்ணி!! திருத்தலத்திற்கு சென்றால் நிச்சயம் எண்ணி எண்ணி நீங்கள் வருந்த வேண்டிய சூழ்நிலை!!!!

 ஏன்? எதற்காக?? நீதி நியாயம், தர்மம் என்றெல்லாம் சித்தர்கள் அறிந்தும் உண்மைதனை எடுத்துரைத்து!! எடுத்துரைத்து!!

 இதைதன் நிச்சயம் பயன் படுத்தினாலே வெற்றி.

அப்படி இல்லாமல் சோம்பேறியாக
இருந்து நிச்சயம்  பின் அதாவது இறைவனிடத்திற்குச்  சென்றுவிட்டால் நிச்சயம் அறிந்தும் இறைவன் கொடுத்து விடுவானா??? என்று!!!


 நிச்சயம் இறைவன் பின் மனதிலே நினைத்து தலைகுனிந்து சோம்பேறியே!!!! பின் நீ உந்தனுக்கு எதை கொடுத்தாலும் இப்படித்தான் சோம்பேறித்தனமாக ஆக்கி அழித்து விடுவாய் என்றெல்லாம் நிச்சயம் நீ!! செல் !!! என்று அனுப்பிவிடுவான்.
 இறைவன்!!!

 இதற்காகத்தான் நிச்சயம் அறிந்து அறிந்தும் உண்மை நிலை தெரியாமல் எப் பரிகாரம் செய்தாலும்!!!!! பின் அறிந்தும் எத் திருத்தலத்திற்கு சென்றாலும் நிச்சயம் பின் அண்டாது. புண்ணியங்கள்!!!!


 புண்ணியங்கள் மிக மிக அவசியம்.


புண்ணியங்கள் செய்ய செய்ய நிச்சயம் இறைவன் உன் இல்லத்திற்கு  வருவான்!!!

 ஆனாலும் பாவங்கள் செய்ய செய்ய இறைவன் தூரே !! தூரே!!!செல்வான்.


 ஆனால் இப்பொழுது மனிதர்களிடத்தில் இருந்து இறைவன் தூரே!!...தூரே!!! செல்கின்றான்!!!!

 அறியாத முட்டாளே. புரிந்தும் பின் புரியாமல் வாழ்கின்ற முட்டாளே!!! அறிந்தும் ஏன் எதற்கு என்று!!!


 ஆனாலும் தீர்மானித்து விட்டோம் இப் பிறப்பில் செய்த பாவங்கள் இப்பிறவியிலே அனுபவிக்க அதாவது யான் இங்கிருந்தே கூறுகின்றேன்.


 ஈசன் கொடுக்காமலும் யான் குடிப்பேன் தண்டனை!! இப்பிறப்பிலேயே நிச்சயம்!!! அறிந்தும் !!!


ஏன் ?எதற்கு பக்தர்களே பின் சோதனைகளாக சோதனைகளாக ஏற்கின்ற பொழுது நிச்சயம் பின் சித்தர்களை நாடினால் பின் நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்பதை எல்லாம் வந்து பின் இறைவனுக்கு பூஜைகள் செய்து சித்தர்களுக்கும் பூஜைகள் செய்து 
  முக்தி மோட்சம் கிடைக்கும் என்று ஏங்குகின்றார்கள்.



 ஆனாலும் இவை எல்லாம் பொய்யே.


பொய்யே!!!  அறிந்தும் ஏன் பொய்யானவற்றை பயன்படுத்தி பொய்யானவற்றில் புகுந்து பொய்யானவற்றை எடுத்துரைத்து நிச்சயம் அறிந்தும் கூட மீண்டும் பின் அறிந்தும் மெய்யானவற்றிற்கு வந்தால் ஆனால் பொய்யானவற்றைத்தான் யோசித்துக் கொண்டு இருப்பான். 
மெய்யானவற்றை மறந்து விடுவான். அறிந்தும்!!!

 ஏன் எதற்கு அறிந்தும் கூட ஏனென்றால் பொய்யிலே வந்தவன் அல்லவா மனிதன்.
அதனால்தான்!!!!

 பின் இறைவனிடத்தில் சென்றாலும் பொய்யானவனாகவே நிற்கின்றான். 


ஆனால் இறைவன்  ஏனோ ?நிச்சயம் அறிந்தும் கூட அமைதி காத்துக் கொண்டிருக்கிறான். இது தான் நிச்சயம் பின் உண்மை!!!.


உண்மைதனை நீ உணர்ந்தால் நிச்சயம் அறிந்தும் கூட பொய் பின் தூரே!!! விலகிச் செல்லும் பொய்தனை நீ உணர்ந்தால் உண்மைதனை கூட 

 அப்பா!!!!.....அப்பப்பா மனிதனின் எண்ணிலடங்காத!!!!...........


 இன்னும் பார்த்தால் அகத்தியனுடைய பக்தர்கள் யார் பெரியவன்???? அவை  மட்டுமில்லாமல் இவன் செய்கின்றானா??!!......... யானும் செய்வேன் என்று போட்டி பொறாமைகளோடு செய்தால் எப்படியப்பா?? புண்ணியங்கள் கிடைக்கும்.???

கடைசியில் பார்த்தால் பின் யான் புண்ணியம் செய்தேனே!!!!!! என்று!!!

 பொய்களப்பா!!! பொய்கள் நிறைந்த உலகத்தில் அப்பனே மெய்களாக சித்தர்கள் யாங்கள் இருக்கிறோம். அப்பனே

 சொல்லி விட்டோம் அப்பனே!!!


 இதனால் மெய்யானவற்றை என்னவென்றால் நிச்சயம் பின் அடி கொடுத்து பலமாக திருத்துவதே மெய்!!!! அறிந்தும் !!


பொய்யானவற்றை பின்பற்றினால் நிச்சயம் பொய்யானவனாகவே போவாய்!!!
. அதாவது. 
கீழ்த்தரமாகவே போவாய்!!


மெய்யானவை கடைப்பிடித்து நிச்சயம் பின் அறிந்தும்  கூட பின் மேலாக வந்து நிச்சயம் இறைவனைக் காணலாம். இதனால் பொய்யை விட நிச்சயம் உண்மை சிறந்தது!!!

. ஆனால் உண்மை பேசவில்லையே மனிதன்!!!
ஏங்குகின்றான் பின் 
உண்மைப் பொருளை அதாவது நீ உண்மைதனை பேசினால் மட்டுமே உண்மைப் பொருளைக் காண முடியும். ஆனால் பொய்தனை பேசினால்  பின் நிச்சயம் உண்மைதனை காண முடியாது.


உண்மை தான் இறைவன் அறிந்தும் கூட !!!


ஆனாலும் பின் எங்கே எங்கே என்று பொய்கள் பேசி பேசி மனிதன் பின் உண்மைதனை  தேடுகின்றானே !!!! நியாயமா?? நீதியா???  பின் அநியாயம் நிறைந்த இவ் உலகத்தில் நிச்சயம் நிலைநாட்டுவோம் தர்மத்தை!!!! அறிந்தும்!!!


 நீங்கள் என்ன மனிதர்கள் பின் அதாவது செய்யாவிடிலும் கூட நிச்சயம்.
அறிந்தும் கூட எங்களுக்கு தெரியும். 


ஏனென்றால் உங்களுக்கும் கூட கீழே இறங்கி இப்பொழுதுகூட வாக்குகள் பரப்புகின்றோமென்றால் நிச்சயம் அய்யோ பாவம் மனிதன் அறிந்தும் கூட!!!

பின் நல்லோர்கள் இருக்கிறார்கள். பின் ஏழைகளாக சுற்றி திரிந்து வருமானம் இல்லாமல் அவர்களுக்காவது யாங்கள் இறங்கி வந்து இப்படி செய்யப்பா.!!! அப்படி செய்யப்பா!!!!
அப்படி போனால் நிச்சயம் பின் தர்மம் ஓங்கி நிலைத்து நிற்குமப்பா!!!! அப்பா அறிந்தும் கூட!!!



 நிச்சயம் பின் கீழ் இருந்து தான் அறிந்தும் அடிமட்டத்தில் இருந்துதான் மேல்நோக்கி வருவார்களே தவிர!!! அதாவது உயர்ந்தோர் எத்தனை பேர் நிச்சயம் பின் அறிந்தும்  ஏழைக் குடிலில் பிறந்தத்தான் உயர்ந்துள்ளாரே!!! தவிர!!! நிச்சயம் உயர்ந்தோர் உயர்ந்தோர் எப்போதும் அல்ல!!!!

 பின் தாழ்ந்தோர் பின் தாழ்ந்தோர் எப்பொழுதும் தாழ்ந்தோர் அல்ல!!!!!


அள்ள அள்ள அறிந்தும் கூட அள்ள அள்ள கொட்டிக் கொடுப்பானப்பா அறிந்தும் இறைவன்!!!


 ஆனாலும் பின் உட் புகுந்து புகுந்து நிச்சயமாய் பின் செல்ல செல்ல பொய்யானவற்றிற்கு செல்லச் செல்ல இறைவன் எங்கப்பா??? அறிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை கூட !!!!

அப்பா பின் எத் திருத்தலத்திற்கு சென்றாலும் எவ் நதியில் நீராடினாலும் அப்பப்பா!!!!! பின் கோபம், காமம் பொறாமை இன்னும் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை
 விளக்கினால் அப்பா நிச்சயம் பின் தாய் தந்தையரை மதிக்காவிடில் நிச்சயம் அப்பப்பா!!! தான் போன போக்கில் செல்லுதல், போதைக்கு அடிமையாதல் நிச்சயம் அப்பப்பா நிச்சயம் இறைவன் நெருங்குவானா?????? அப்பப்பா இறைவன் படைத்தானப்பா!!!
 அறிந்தும் கூட பின் நல் முறையாக பின் நல்முறையாகவே மனிதன் வாழ்வதற்கு!!!!


 ஆனால் நடுவில் அப்பா!!!!
அப்பப்பா நிச்சயம் நீ செய்த பின் கர்மாக்கள் அப்படியே சேமிப்பாக அப்பனே இதை எல்லாம்  அகத்தியனுக்கு தான் தெரியும்!!!!!


. அப்பனே யாம்தனும் உணர்வோம்!!!!

 ஆனாலும் அப்பனே புது புது ரகசியங்களோடு அகத்தியன் சொன்னால். அப்பனே புரியுமப்பா வரும் சந்தததிகளுக்கு அப்பனே சுலபமாக  இருக்குமப்பா இதை அப்பனே அகத்தியன் சொல்வதை கேட்டு அப்பனே புதுப்புது விதமான அப்பனே கருவிகள், தயாரிப்பார்களப்பா அப்பொழுது  அகத்தியன் யார் என்று?? சித்தர்கள் யார் என்று ??? அப்பனே!!!


அப்பப்பா அறிந்தும் எதை என்று அறிய அறிய செல்லமாகவே உரைக்கின்றேனப்பா.!!!


 ஆனாலும் அதை கூட பின் கண்டுகொள்ளாத மனிதர்கள் பல கோடி பார்த்துவிட்டேன். அறிந்தும் உலகம் அழிந்து அழிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றது.


உலகம் இருக்கும் போதெல்லாம் அதாவது உலகத்துக்கு முன்னே தோன்றியவன்  !!! பின் காகம் வடிவிலும் வந்தேன்!!!
அறிந்தும் கூட 



  மனிதன் இப்படியெல்லாம் இருக்கின்றான். பின் புறா வடிவிலும் வந்தேன். எப்படியெல்லாம் இருக்கின்றான் பின் சிங்கம், புலி இன்னும் யானை இன்னும் அறிந்தும் கூட பல  பல பின் சிறிய உயிர்கள் கூட அனைத்திலும் யான் வந்தேன்!!!


 ஆனாலும் மனிதனை பார்த்தால் அறிந்தும் எதை என்றும் புரியாமலும் தவிக்கின்றான் பின் மனிதன் மனிதன் என்று எண்ணி எண்ணி !!!

ஏன் இந்த நிலைமை என்று யாராவது யோசித்தீர்களா??? என்றால் நிச்சயம் இல்லை.!!!


மனித முட்டாளே ஏன்
எதற்கு கஷ்டங்கள் வருகின்றது என்று யோசிக்காமல் இறைவனிடத்தில் சென்றாலும் அறிந்தும் கூட. அதனால் நீ உன்னிடத்தில் கர்மா வைத்துக்கொண்டு உன் பின்னாடியே தொடர்ந்து பின்னாடியே தொடர்கின்றது கர்மா 

. ஆனால் இதை எப்படி கழிப்பது??? என்பது தெரியவில்லையே மனிதா!!!!

 இதனால் தான் சிக்கிக் கொண்டு இன்னும் கலியுகத்தில் நிச்சயம் அழிவுகள் பலம் அழிவுகள் பலம் என்றெல்லாம் சித்தர்கள் 
சித்தர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பின் எப்படி  தப்பித்துக் கொள்வது என்றெல்லாம் மனிதனுக்கு தெரிந்தும் ஆனால் அமைதி காக்கிறான் !!!! 

அதுதான் புண்ணியம் புண்ணியம் செய்தால் நிச்சயம் நீடூழி வாழலாம் என்று தெரியாமல் போய்விட்டது. மனிதனுக்கு!!!


 மனிதனுக்கு மூலாதாரம் பணம் இருந்தால் அனைத்தும் செயல்பட்டுவிடலாம் என்று அப்பா அப்பப்பா மனிதன் மிகவும் புத்திசாலி அப்பா பணம் இருந்தால் அதனால் தான் இறைவன் ஒன்று
நோயை வென்று பின் அதாவது நோயை வென்றவன் உண்டா??? இவ் உலகத்தில்????
 இளமையை வென்றவன் உண்டா??? இவ் உலகத்தில்????? அறிந்தும் எதையென்றும் அறிய அறிய காமத்தை வென்றவன் உண்டா????? இவ்உலகத்தில் ??

அறிந்தும் கூட பின் பொறாமையை வென்றவன் உண்டா???? இவ்வுலகத்தில் ??? பின் பொய்யை வென்றவன் உண்டா இவ்வுலகத்தில்????

இவையெல்லாம் வென்றிட்டால் இறைவன் உன் பக்கத்தில் அனைத்தும் பின் இவையெல்லாம் உனை எவையென்று  சார !!! அனைத்தும் சாரும்!!!! யாங்களே கொடுப்போம்


. தரித்திர மனிதன் அறிந்தும் அலைந்து கொண்டிருக்கிறான்.
ஏதாவது கிட்டுமா?? கிட்டுமா ?? என்று!!

 பின் கிட்டும்!!!

. ஆனால் புண்ணியத்திற்கு தகுந்தவாறே!!!!

 ஆனால் கிட்டும் தாகத்துக்கு தகுந்தாற்போல் தான் இப்பொழுது கிட்டிக்கொண்டே வருகின்றது. அறிந்தும் அறிந்தும்  இதனால்தான் ஈசனும் அறிந்தும் அறிந்தும் 


 ஆனாலும். அறிந்தும் உண்மைதனை கூட எப் பொருள் 
எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்தால் மதிப்பு!!!


 மதிப்பு இல்லையே. அறிந்தும் எதை என்று அறிய அறிய  வேண்டிடுவான். இவ்வுலகத்தை பின் மனிதனே.


ஆனால் மனிதனின் நிச்சயம் புத்திகள்  நிச்சயம் அறிந்தும் இறைவன் நிச்சயம் அருகில் இருந்தால். இதனால் இறைவன் தேர்ந்தெடுப்பது சுலபம் இல்லை. மனிதனை அவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் நீ அதற்காக பாடுபட வேண்டும்.
என்னென்ன கஷ்டங்கள் பட வேண்டும்,!!!

 

ஆனால் கஷ்டங்கள் பட்டுவிட்டால் நிச்சயம் அறிந்தும் கூட. ஏதாவது சுலபமாக வழி கிடைக்குமா???  என்று அப்பப்பா எவ்வாறு யோசிக்கின்றான் !!பார்!! மனிதன்!!!

 அறிந்தும் அறிந்தும் அவை இவை என்றெல்லாம் பின் பொய் சொல்லி ஏமாற்றி பின் இவன் மட்டும் கெட்டு போவதில்லை இவனின் பின் சார்ந்த தன் மனைவியும் தன் பிள்ளைகளும்.
இன்னும் இன்னும் அறிந்தும் கூட சொந்த பந்தங்கள் என்றெல்லாம் கெட்டு பின் தவித்து அனைவருடைய பின் கர்மத்தையும் ஏற்று நிச்சயம் அறிந்தும் கூட இவந்தனுக்கு மீண்டும் மீண்டும் பிறவிகள் விடும். அதாவது  ஒரு பிறவியில் நிச்சயம் பின் அறிந்தும் கூட பாவத்தை கழிக்காமல் நிச்சயம் நீண்டு கொண்டே போகும் மனிதா இது தேவையா??????


 ஆனாலும் அறிந்தும் இன்னும் கேட்பார்கள்.
இன்னும் இப்பிறப்பிலேயே அனுபவிக்க வேண்டியது தானே என்று!!!

பின் இப்படி கேட்பவர்கள் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். இனிமேலும் இப்பிறப்பில் செய்யும் தவறுகள் நிச்சயம் இப் பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும். நிச்சயம் நீங்களே கண்டு கொள்ளலாம் !!!
அறிந்தும் அறிந்தும் இவை தன்  உணர்ந்தும் உணர்ந்தும் !!!


ஏன், எதற்கு இன்னும் இன்னும் எண்ணும் எண்ணமெல்லாம் நிறைவேற்றி விட்டால்
இறைவன் எங்கப்பா???

 எங்கு? ஏது ?அதாவது எண்ணும் எண்ணங்கள் பின்  நிறைவேறாவிடில் நிச்சயம் அதற்கு என்ன காரணம்? காரணம் அறிந்தும் கூட அதை சரியாகவே பயன்படுத்தினால் நிச்சயம் எண்ணிய எண்ணங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையுமப்பா அறிந்தும் இதைக் கூட இதை யான் சொல்லவில்லை.


அப்பனே கற்று உணர்ந்தவர்கள் அல்லவா? பின் அதை ஏன் எடுத்துக் கொண்டு வரவில்லை? முட்டாள் மனிதனே அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட!!!


 ஊசி ஒன்று குத்துகின்றது என்று தெரியும்.


ஆனால் அதற்கு பயப்படுகின்ற மனிதன் பாவம் செய்தால் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதற்கு பயப்படவில்லையே மனிதன்!!!!


 ஏன் வாய் தான் நிச்சயம் நீளமே தவிர மனிதனுக்கு வேறு ஒன்றுமில்லை!!!!!


 அறிந்தும் அதேபோல் கையை அதாவது கை நீளமாக இருந்தால்.
போதும் அனைத்தும் வெட்டி கொள்ளலாம். நீளம் என்று புண்ணியத்தைச் சொன்னேன். அளந்து அளந்து கொடுக்க!!!


 ஆனாலும் இன்னொருவன் சொல்வான் அளந்து கொடுக்க பின் என்னிடம் பொருள் இல்லையே என்று!!!

 அளந்து கொடுக்க இறைவனிடத்திலும் அறிந்தும் கூட உந்தனக்கு எவை என்று புண்ணியங்கள்!!!


எவை என்று கூட அருள் கொடுக்க முடியாதடா முட்டாள் மனிதனே அறிந்தும் இறைவன் படைக்கின்றான் நல்முறையாக அனைத்தும் கொடுக்கிறான். ஆனாலும் அதை நீயே வைத்துக் கொண்டால் உன் மனைவி அறிந்தும் எதை என்று  கூற பிள்ளைகள் இன்னும் நாம் வாழ வேண்டும் என்றெல்லாம் எதை என்று அறிய அறிய  மீண்டும் பிடுங்கிக் கொள்கிறபொழுது அழுவானப்பா !! அழுவான்!!.


இறப்பு அறிந்தும் எதை என்று கூட பிறப்பு நடுவில் இன்னும் அறிந்தும் கூட எதையெதை செய்கிறாயோ அதை பக்குவமாக சேமித்து வைத்துக் கொண்டே சேமித்து வைத்துக் கொண்டே அறிந்தும் அறிந்தும் இதன் பின் மூலாதாரம் சித்திரகுப்தனே!!!!

 அறிந்தும் அதனால் தான் அகத்தியனே சொன்னான். அறிந்தும் சித்ரகுப்தனை நாடச் சொல் என்று!!!!!

(சித்திரை மாதத்தில் சித்ர குப்தர் தரிசனம் சக்கரை இட்டு வெற்றிலை தீபம் ஏற்ற சொல்லி ஏற்கனவே வாக்குகளில் உரைத்ததை)
சித்தன் அருள் 1116 திரயம்பகேஷ்வரர் ஆலய வாக்கில்)


 மனமுவந்து அதாவது பின் பார்ப்பான் அனைவரையும் சித்திரை வைகாசி தன்னில்!!! கூட


 ஆனாலும் பாத்திட்டு பின் இவன் விதி இப்படியா? என்று பின் நிச்சயமாய் சித்திரகுப்தன் வருந்துகின்ற பொழுது நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது இவன் வந்தானே நம்மை பார்ப்பதற்கு என்று நிச்சயம் 
சிறிதளவாவது முறையிடுவான் மேல்நோக்கி!!!!


 அல்லவா அறிந்தும் அறிந்தும் 
இதனால் எதை என்று புரியாமல் ஆனாலும் உண்மைதனை உணர்ந்து உணர்ந்து செயல்படு மனிதா!!!!  நிச்சயம் வெற்றி வெற்றி!!!

காகபுஜண்டர் மகரிஷி உரைத்த காசி வாக்குகள் பாகம் 2 ல் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. வணக்கம் அகத்தியர் அடியவர்களே

    குருநாதருடைய வாக்குகளை தொடர்ந்து படித்துக் கொண்டும் வந்தும் உங்களுக்கு சந்தேகம் வருகின்றதா???

    இறைவன் ஒன்றுதான் என்ற தத்துவத்தை எத்தனை வாக்குகளில் கூறினார்கள் நம் குருநாதர்

    காமாட்சி மீனாட்சி காசி விசாலாட்சி என தேவியின் ரூபங்கள் ஒன்று என்று எத்தனை வாக்குகளில் சொல்லியிருக்கின்றார்


    அம்பாள் ஆலயத்திற்கு சென்று வஸ்திரம் சாந்தி வழிபாடு செய்து விட்டு இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் வெள்ளிக்கிழமைகளில் என்று சொன்னால் அனைத்து அம்பாள் ஆலயத்திற்கும் சென்று இது மாதிரி வழிபட வேண்டும் என்று தான் அர்த்தம்


    பிரத்யோகமாக அந்த ஆலயத்திற்கு செல் இந்த ஆலயத்திற்கு செல் இந்த அம்பாளை போய் தரிசித்து வா என்று குருநாதர் சொல்லவில்லை வாக்குகளை முழுவதும் உணர்ந்து படிக்க வேண்டும்


    ஆடி மாதம் என்றாலே அன்னை தேவி பரமேஸ்வரி அம்பிகையின் திருவிழா கால மாதம் இதை யாராலும் உங்களால் உணர முடியவில்லை யா???

    மாரியம்மன் காளியம்மன் அம்பிகை பரமேஸ்வரி என பெண் தெய்வங்கள் குடியிருக்கும் அனைத்து ஆலயமும் அம்பாள் ஆலயம் தான் புரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

    ReplyDelete
  2. அருமையான வாக்கு... காலம் கடந்து வருகிறது...ஒளி வடிவில் மாற்றி பதிவு செய்ய நேரம் எடுக்கும் என்று புரிகிறது... ஒலி வடிவில் உடனே வலைபதிவில் பதிவேற்றம் செய்ய அகத்தியர் அனுமதி இல்லை போலும்...நன்றி!

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete