இறைவா!!!! நீயே அனைத்தும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4
( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தன் அருள் - 1639 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 3 )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆனாலும் அதை, இதை என்று ( YouTube, Facebook, WhatsApp, Instagram, Twitter, social media , இன்னும் பல வழிகளில் ) மனதைக் குழப்புவார்களப்பா. எதனையும் நம்பிவிடாதே. ( தியான, யோக ரகசியங்கள்) திறக்கவும் முடியாதப்பா.
அடியவர் 7: (அமைதி)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே யான் விலக்கி விடுவேன்( வழி விடுவேன்)
அடியவர் 7 :- ( வழி ) காட்டினால் போதும் ஐயா.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே திரும்பு
அடியவர் 7:- (திரும்பி நின்றார்)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ( வழி ) காட்டிவிட்டேன் அப்பனே.
( இங்கு குருநாதர் அகத்திய மாமுனிவர் அவ் அடியவருக்கு அளித்த வாக்கே வழி. அதனை உணர்த்துகின்றார் )
அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )
அடியவர் 7 :- சரிங்க ஐயா.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( அடியவருக்கு அதன் வாக்கு முடிந்த உடன் அவரை அமரச்சொன்னார் குருநாதர். அதன் பின் பொது வாக்கு ஆரம்பம்) அப்பனே ஒன்றுக்குப் பதிலளி?
அடியவர் :- பூஜ்ஜியத்திற்கு அடுத்து ஒன்று.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, இது சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கின்றது.
அடியவர் 1 :- அவனுள் அனைத்தும் அடக்கம்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஏற்கனவே மனப்பாடம் செய்து சொல்லிக்கொண்டிருக்கின்றாய்.
அடியவர் 2 :- ஏகன் அனேகன்
அடியவர் 3:- ஐயா ஒன்று என்பது பரிபூரத்துவம்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே வாயில் வந்ததைச் சொல்லிவிட்டாய்.
அடியவர் :- சர்வம் சிவமயம் என்பது போல் எல்லாமும் ஒன்றே. அனைத்தும் இறைவனே.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் சொன்னதுதான்.
அடியவர் 4 :- தாய்மை
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவையும் சொல்லி
அடியவர் 7 :- பூஜ்ஜியம் என்றால் ஒன்றும் இல்லை. ஒன்று என்றால் அனைத்தும் உள்ளது.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பூஜ்ஜியத்தில் இருந்தே வரவேண்டும் என்பேன் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் ஒன்று எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே சொந்தங்கள் என்று. பின் அனைவருமே காப்பாற்றுவார்கள் என்று. அனைத்தும் காப்பாற்றும் என்று. ஆனாலும் நிச்சயம் ஆன்மா தனிதானப்பா. இதனால்தான் ஒன்று என்று சொன்னேன் அப்பனே.
அடியவர் 6 :- அனைத்து ஆன்மாக்களும் ஒன்று
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , பின் இரண்டு யார்?.
அடியவர் 2 :- உடலும் , மனமும்
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அது குரங்கப்பா உந்தனுக்கு.
அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )
அடியவர் 3 :- மேடு, பள்ளம். இரவு, பகல். அது போல …
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இரண்டு என்பது சொந்தம் பின் இறைவனைக் குறிக்கும்.
அடியவர்கள் அனைவரும் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- மூன்று?
அடியவர் 4 :- பசு, பாசம் , பதி…,
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- எதை என்றும் அறிய அறியத் தவறு.
அடியவர் 5 :- பிள்ளைகள், வாரிசுகளைக் குறிக்கும்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- சொந்தங்களே இங்கு இல்லை. பின் ஏன்? ஆன்மாவைப் பற்றி எதை என்று அறிய அறியப் பேசுகின்றாய்? அதை பற்றி யான் இங்கு பேசவில்லை.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஆன்மாவுக்கு யாரும் சொந்த பந்தங்கள் இல்லை.
அடியவர்கள் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே மூன்று எதை என்று அறிய அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் அப்பனே. அவர்கள் அருளால்தான் நான்கைக் கடக்க வேண்டும்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா? நான்கு?
அடியவர் 6:- மாதா, பிதா, குரு, தெய்வம்
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே தவறு. சொல்லி விடுகின்றேன். அவ்வளவு அறிவு இருந்தால் நீங்கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். அதாவது உலகத்தில் பிறந்து விடுகின்றீர்கள். ஆனாலும் இவ் ஆன்மா நான்கு பக்கத்திற்குச் சுற்றும். பின் கஷ்டங்களை அனுபவிக்கும். பின் ஐந்தாகச் செல்லும்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- இந்த ஆன்மா பிறந்தவுடனேயே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு பக்கமும், என்னென்ன நடக்கின்றது? ஏது நடக்கின்றது? எவ்வளவு இன்பம், துன்பம்? இது எல்லாம் தெரிஞ்ச பின் அப்புறம் ஐந்தாவதுக்குப் போகும். சொல்லுங்க ஐயா?
அடியவர் :- பஞ்ச பூதங்கள்
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பொழுதுதான் மனிதன் உடம்பில்….இதன் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்குப் பின் ஐந்தாவது அறிவு. அப்பொழுதுதான் சிந்தித்துப் பேசுவது. ஆனால் பேசவில்லையே! ஆறு?
அடியவர் 2 :- பகுத்தறிவு.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் உணர்ந்து வந்தால் அப்பனே யாங்களே அறிவைக் கொடுப்போம். பின் ஆறாவது அறிவை.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா?
அடியவர் 2,3, 4 :- புரிகின்றது ஐயா
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, அவ்வளவு சுலபமா ஆறாவது அறிவைப் பெறுவதற்கே அப்பனே? ஆனால் ஆறு அறிவு பெற்றுள்ளீர்கள் நீங்கள்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( அனைவருக்கும் 6 அறிவு உண்டு) ஆனால் இதை எப்படி சொல்றதுன்னா…
அடியவர் :- ( ஆறாம் அறிவு ) முழுமை அடையவில்லை
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முழுமை அடையாமல் எதைக் கொடுத்தாலும் உங்களுக்குப் பயன் இல்லை என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவன் பொறுத்துப் பொறுத்துத்தான் கொடுப்பான்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( சிறு விளக்கம் )
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே பஞ்சை பின் கையில் வைத்தாற்போல்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- என்ன அர்த்தம் ஐயா? பஞ்சை கையில் வைத்தார்
அடியவர் 3 :- பறந்து போய்விடும்
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- பறந்து போய்விடும். அப்போ அந்த 6 அறிவைக் கொண்டு வராமல், எதைக் கொடுத்தாலும் உங்களால் வாழ முடியாது என்று சொல்கின்றார்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது துன்பம் ஒன்று கொடுத்தால்தான் அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள முடியும் என்பேன் அப்பனே. பின் இறைவன் அதாவது துன்பத்தை இறைவன் கொடுக்கின்றான் அப்பனே. ஆனால் இறைவனிட்தே சென்றால் இறைவன் நகைக்கின்றான் அப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- துன்பம் யார் கொடுப்பதென்றால் இறைவன்தான் கொடுக்கின்றார். அப்போ இறைவன் கிட்ட போய் காப்பாத்துங்க என்றால், இறைவன் என்ன செய்வார்?
அடியவர் :- நான்தான் செய்தேன் ( என்று நகைப்பார் இறைவன் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்பொழுது கூறுங்கள் அப்பனே? நீங்கள் அறிந்துள்ளீர்களா இதை? இதனால்தான் சொன்னேன். தன்னை அறிந்தால் அனைத்தும் நடக்கும் என்று.
அடியவர் :- உண்மையை ( யாரும் ) அறியவில்லை…
அடியவர் 3:- ஆறாவது அறிவு எல்லோருக்கும் இருக்கு. ஆனால் முழுமை அடையவில்லை.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முழுமையாக அறிந்துவிட்டால் பின் ஏழாவதுக்கு சென்றுவிடலாம் என்பேன் அப்பனே. ஏழாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவனைக் காணலாம். பின் எட்டாவதைக் கூட இறைவன் அருகில் இருக்கலாம். பின் அன்பைப் பின் கட்டி அணைத்துக்கொள்ளலாம்.
(7ஆம் அறிவு இறைவனைக் காணுதல். 8ஆம் அறிவு இறைவனோடு இருத்தல்.)
அடியவர் 7 :- ஐயா ஒரு சிறு கேள்வி. ஐயா தன்னை அறிதல் என்று சொல்லுகின்றார்கள். எல்லா ஆத்மாக்களுக்கும் தன்னை அறிதலில் என்ன பிரச்சினை? தன்னை அறிதல் ( எப்படி ) என்ன முறை? புண்ணியங்கள் செய்வதா? ( அவ் ஆத்மாக்களின், மனிதனின் ) பாவங்கள் தான் தன்னை அறிய தடையாக இருக்கின்றதா? இல்லை தியானம், தவம் செய்ய வேண்டுமா?
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதற்குப் பதில் உரைத்து விட்டேன் அப்பனே. பின் அனுதினமும் இவ் ஆன்மா இறைவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தன்னை அறிந்தால் இறைவனை நோக்கி செல்லாதப்பா. அப்பனே இங்கேயே இருந்துவிடும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே ஆறு அறிவுகளும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் இவ் ஆன்மா இங்கேயே இருக்கும் அப்பனே. எதை என்று அறிய அறிய இறைவன் இங்கு திரிந்து கொண்டிருக்கின்றான் மனித ரூபத்தில் அப்பனே. கட்டி அனைத்துக்கொள்ளும் அப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( உரையாடல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது நீ என்ன கேட்பாய் என்று தெரியுமா? பின் இறைவா போதும் வாழ்க்கை. உலக வாழ்க்கை போதும் உன்னிடத்தில் அழைத்துக்கொள் என்று. ஆனால் இறைவன், அப்பொழுதுதான் அனைத்தும் கொடுக்க ஆரம்பிப்பான்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( சல சலப்பு, சிலர் சிரிப்பு, சில உரையாடல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பின் ஒன்பதாவது கூறு?
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- 7,8 க்கு வந்துவிட்டார். ஒன்பதாவது ( அறிவு ) சொல்லுங்க ஐயா)
அடியவர் 6 :- இறைவனுடன் கலத்தல்…
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , ( 9ஆம் அறிவில்) நவ கோள்களும் ஒன்றும் செய்யாதப்பா காலத்தை வென்றவன் நீ.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- நீங்கள் நினைப்பது நடக்கும். காலத்தை வென்றிடலாம்.
அடியவர் :- நினைப்பது நடக்கும்..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- மீண்டும் அப்பனே வரும் பத்து.
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முதலில் இருந்து வாழ்க்கை தொடங்கிவிட்டது அப்பனே பூஜ்ஜியம். அப்பனே ஒன்றுக்கு வந்து விட்டீர்கள் அப்பனே. அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிடும் அப்பனே. இறைவனையும் பார்த்து விடுவீர்கள் அப்பனே. இதனால் பின் அனைத்துக்கும் காரணம் இறைவன். அப்பனே இறைவன் ஒன்றே. அப்பனே இவ் ஆன்மாவும் முடிவு பெற்றுவிடும் அப்பா. அப்படி முடிவு பெறாவிடில் அப்பனே மீண்டும், மீண்டும் அலைந்து திரிந்து துன்பங்களைப் பட்டுக்கொண்டிருக்கும் அப்பனே. பின் உடம்பைத் தேடித் தேடி. இது தேவையா? இவை தேவை எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே சித்தர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே .முதலில் கர்மத்தை எப்படி நீக்க வேண்டும் என்று கூட. அதை நீக்கிவிட்டாலே போதுமானதப்பா. அவரவர் வழியில் அவர் செல்வார்களப்பா. (ஒரு அடியவருக்கு தனிவாக்கு )
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே மந்திரங்கள் எதற்கு?
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா யாராவது சொல்லுங்கள்?
அடியவர் :- மனதை திடப்படுத்த..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது ஒரு மந்திரத்தைக் கொடுக்கின்றேன் அப்பனே. எப்படி திடமாகும் என்று கூறு?
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , நகாரம், உகாரம், அகாரம் எதை என்றும் புரியப்புரிய அப்பனே இதற்கும் கூட ஒவ்வொரு இடத்திலும் கூட உறுப்புகள் , அதற்குத் தகுந்தாற்போல் மந்திரங்கள் செப்பினால்தான் அப்பனே உடம்பும் ஏற்றுக்கொள்ளும் அப்பனே. அனைத்தும் நடக்கும். அது மீறி ஒரு மந்திரம் மாறிவிட்டாலும் மீண்டும் கஷ்டங்களாகப் போய்விடும் அப்பா. தெரியாமலேயே பின் மனிதன் அவ் மந்திரத்தைக்கூறு, இவ் மந்திரத்தைக்கூறு ( என்று கூறிக்கொண்டு உள்ளான்). பலனில்லையப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- உங்கள் உடல் உறுப்புகளுக்குத் தகுந்தவாறு மந்திரம் எடுத்து வரவேண்டும்.
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ்வாறு உடல் உறுப்புகள் அசைகின்ற போது ஒரு சக்தி வரும் அப்பா. அப்பனே அது இறைவனிடத்தில் சேர்க்கும் அப்பா. ஆனால் சரியான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரிக்காவிடில் பின் பைத்தியக்காரன்.
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தந்திரங்கள் எதற்கு?
அடியவர் :- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் தெரியாமல் இறைவனைப்பற்றிப் பேசுகின்றாய் அப்பனே. பேசினால் உன்னையே பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர் :- ( சில உரையாடல்கள்)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , ஓடிக்கொண்டே இருக்கின்றாய் அப்பனே. அப்பனே பின் கால்களில் முள் குத்துகின்றது என்பேன் அப்பனே. அப்பொழுது ஐயோ குத்துகின்றது. பின் வாருங்கள் வாருங்கள் என்று சத்தம் போடுவாயா? அப்பனே நீயே எடுத்து தூர வீசி விடுவாயா?
அடியவர் :- நானே எடுத்துப் போட்டுவிடுவேன்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுபோலத்தான் பக்தியும் இருக்க வேண்டும். அவனவன் அப்பனே கஷ்டங்கள் பட்டால்தான் திருந்துவான் என்பேன் அப்பனே. யார் சொன்னாலும் கேட்க முடியாதப்பா இக்கலியுகத்தில்.
( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா!!!!! அனைத்தும் நீயே
ReplyDeleteஅன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4
https://youtu.be/p2HpevR3nUs
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்
ReplyDeleteஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்
ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்
ராமானுஜர் திருமேனியை பற்றி அருள் வாக்கு வேண்டும் பொதிகை மலை சித்தரே
ReplyDeleteதெளிவு குருவின் வார்த்தை கேட்டல். இறைவா அப்பா அகத்தியா கூறு கூறு இன்னும் கூறு. நன்றி!
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete