​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 17 July 2024

சித்தன் அருள் - 1647 - அன்புடன் அகத்தியர் - ராஜகோபால சுவாமி கோயில் தஞ்சாவூர்








சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த ஆலய பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில் தஞ்சாவூர் நகரம். 

ஷடாச்சரனைப் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!! 

நல்முறையாக ஆசிகள்!!!!

. என்றும் நிலைத்திருக்கும் புகழ் ராஜ ராஜ சோழனின்!!!!!!. 

ஆனாலும் பின் அவனைப் பற்றியும் கூட எடுத்துரைக்கின்றேன்.

அப்பனே எதை என்றும் புரியாமல் கூட ஆட்சி நடத்தி வந்த அவனுக்குச் சில சோதனைகள் ஈசனே கொடுக்க!!!!!.......


, ஆனாலும் அதில் எல்லாம் தேர்ச்சி பெற்று நிச்சயம் உயர்வான இடத்திற்குச் சென்று அனுதினமும் பின் அதாவது ஈசனையே வணங்கிப் பல கஷ்டங்களும் கூட , பல துன்பங்கள் பல பல வழிகளிலும் கூட வந்தடைந்தன. 

வந்தடைந்ததும் ஆனாலும் விட வில்லை. பின் தர்மவானாக, ஆனாலும் இதில் கூட அறியாது என்று கூற இதனால் ஈசனே  சில சில கஷ்டங்களை, பின் இவ்வாறு சில சில கஷ்டங்களே பட்டு, பட்டு நிச்சயம் எழுந்தால் நிச்சயம் இவந்தன் வாழ்க்கையில் கூட பின் மாற்றங்கள் , இன்னும் மாற்றங்கள்,  இன்னும் மக்களுக்கு நன்மை செய்வான் என்று எண்ணி நிச்சயம் இன்னும் துன்பங்கள் கொடுக்கக் கொடுக்க , அப்பொழுதும் நேர்மையாகவே ஆட்சி. !!!



 

ஆட்சி தன்னில் ஆனாலும் குறைகள் இல்லை. 

குறைகள் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் எதனால் என்பவை பின் காணவேண்டும். 

ஆனாலும் ஒரு பின் அதாவது அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது ஒரு எளியோன் வாழ்ந்து வந்தான் குடிசைதன்னில். 

ஆனாலும் அவந்தனும் கூட ஈசனுடைய பக்தனே. 

ஆனாலும்  அனுதினமும் பின் நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!!! என்று அழைப்பது. 

பின் ஆனாலும் இப்படியே அழைத்து வந்தான். ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட , இதைக் கூட ஆனாலும் பின் இதை ஆட்சி செய்த பின் அரசன்  நன்றன்று உணர்ந்து உணர்ந்து பின் அனைவரும் நம்தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சிறிது கர்வம் வந்து விட்டது. 

ஆனாலும் அறிந்தும் கூட அறியாமல் கூட ஆனாலும் பல கஷ்டங்கள் கொடுத்து அனைத்தும் ஈசனுடையது என்று அவன் எண்ணவில்லை.  

ஆனாலும் என்னுடைய அதாவது என்னைவிடப் பக்தியில் மிகச் சிறந்தவர்கள் இங்கு யாரும் இருக்கக் கூடாது என்று எண்ணினான். 

ஆனாலும் இப்படி அறிந்தும் கூட!!!! ஆனாலும் ஒரு புலவன் எழுந்து நின்ற “ அரசனே!!! நில்லும். உன் பேச்சை எப்படி அறிந்தும் கூட என்னைப் போன்று பின் பக்திமான் இருக்கக் கூடாது என்று எண்ணுகின்றீர்களே, ஒருவன் இருக்கின்றான், குடிசை தன்னில் வாழ்கின்றான். அவன் நிச்சயமாய் அறிந்தும் கூட எப்பொழுதுமே யாரையும் கண்டு கொள்வதில்லை. நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!!! என்று மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருப்பான்.  



 யாருக்கும் எதை என்று அறிய அறிய உணவு இருக்குமோ???, உடை இருக்குமோ??? என்றெல்லாம் கவலைப்பட்டதில்லை  ஆனால் ஈசன் தான் உயிர் என்று நினைத்து!!!!! கொண்டு இருப்பான் !!!


 ஆனாலும் அப்படிப்பட்ட அதாவது இவ் தேசத்தில் அதாவது அறிந்தும் ஆனால் நீங்களே நிச்சயமாய் உணர்ந்தும் கூட இவ் கர்மம் எந்தனை விட யாரும் பக்தன் இல்லை என்று சொல்லிவிட்டீர்களே.!!!!

 இது தவறு!!!!
. மகா பெரிய தவறு “ என்று. 

( உடனே இராஜ ராஜ சோழனும் )


 “அப்படியா???? !!!!!” 

சோழனுக்கும் எதை என்றும் அறிந்தும் கூட பலத்த கோபம் வந்து விட்டது.!!!!

 ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரிந்தும் கூட எவை என்றும் அறியாமலும் கூட!!!!! எதை என்றும் ஆனாலும் ஒருவன் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் இவற்றில் இருந்து வந்தவையா??? என்பவையெல்லாம் தெரியாது. 

தெரியாது என்பதை விட ஆனாலும் நிச்சயமாய்  ஆனாலும் அவனை அழைத்து வாருங்கள் என்று!!!!

 ( இராஜராஜ சோழன் ஆணையிட்டார்). 

ஆனாலும் அவ் எளியோனை அழைத்து வந்து நிச்சயம் அறிந்தும் கூட பின் ஆனாலும்  “என்னை விடப் பக்தனா நீ?!!!!” என்று பின் அவ் எளியோனை பார்த்து !!!!


( கேட்டார் இராஜராஜ சோழன்).

ஆனாலும்

 அவ் எளியோன் செப்பினான்  அரசரே, இல்லை. உன்னை விட யான் தாழ்ந்தவனே!!!!

. ஏதோ இறைவன் கொடுப்பதை , அனுதினமும் ஏதோ அவன் நாமத்தை உச்சரித்து அறிந்தும் அறிந்தும் ஏதோ பின் தெரியாமலும் அழைத்து வந்து அதுதான். 


ஆனால் அனைவருமே பின் என்னைப் பக்திமான், பக்திமான் என்றெல்லாம் சொல்லி வருகின்றார்கள்.”

ஆனாலும் வந்தது கோபம் அரசனுக்கு. 

“புலவனே!!!!! ஏன்? எதற்குப் பொய் சொன்னாய்?

 ஏன் , எதற்காக இப்படிச் சொன்னாய்? ஏன் சொல் !!! சொல்!!! என்றெல்லாம். 

ஆனாலும் புலவன் !! “அரசரே இல்லை. நீங்கள் எத்தனை முறை ஒரு நாளைக்கு நமச்சிவாயனை!!! நினைப்பீர்கள்? நமச்சிவாயா!!! என்று அழைப்பீர்கள்?” 

ஆனாலும் பின் தயங்கினான் ( இராஜராஜ சோழன்).

தயங்கினான் அறிந்தும் அறிந்தும் கூட 


ஆனாலும் புலவன்

  “சொல்லுங்கள் அரசரே? எத்தனை முறை அழைப்பீர்கள்? எத்தனை முறை நினைப்பீர்கள்?” என்று. 

ஆனாலும் அரசனோ நிச்சயம் எந்தனுக்கே தெரியாது என்று கூறி விட்டான். ஆனாலும் பின்  அரசவை புலவன்


 ( அவ் எளியோனைப் பார்த்து கேள்விகளைக் கேட்டான் ). 

“எளியவனே, பின் எத்தனை முறை இவ் அரசன் பின் என்பதை என்பதை என்றெல்லாம் நிச்சயம் பின் தெரியாது என்று. ஆனாலும் நீ எத்தனை முறை நமச்சிவாயனை!!! அழைப்பாய்? எத்தனை முறை நீ அவனை நினைத்துக் கொண்டே இருப்பாய்?” 

ஆனாலும் அவ் எளியோன் நிச்சயமாய் “யான் எப்பொழுதுமே அவனைத்தான் நினைத்துக் கொண்டிருப்பேன். எப்பொழுதுமே அவனைத்தான் அழைத்துக் கொண்டிருப்பேன்.” என்று கூற!!!!


 பின் இன்னும் புலவன்
 

“அரசனே!!!!, பாருங்கள். பின் ஆனாலும் நீங்கள் பெரியவனா? இவந்தன் பெரியவனா?” என்று. 

“நிச்சயம் இல்லை”. 

 அறிந்தும் அறிந்தும் இதனால் நிச்சயம் பின் அதாவது தலை வணங்கினான் அரசன். 


பின் புலவனைப் பார்த்து அவனை அனுப்பி விடுங்கள் என்று கூறி!!!!!!


 ஆனாலும் கூறிட்டு ஆனாலும் பின் அதாவது அவ் அரசன் யோசித்தான். 

அவன் இடத்திற்கே சென்று அவன் என்னதான் செய்கின்றான்???? என்று பார்ப்போம் என்று. 

ஆனாலும் அறிந்தும் பின் தெரியாமலே ஆனாலும் ஓர் இரவு சென்று விட்டான் இவ் அரசன். 

ஆனாலும் பின்  அதாவது இரவினில் கூட நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!! என்று உறங்கிய பொழுதும் கூட!!!!  சொல்லிக்கொண்டே இருந்தான் அவ் எளியவன். 

ஆனாலும் அவன் இல்லத்தில் பார்த்தால் ஒன்றுமே இல்லை. 

ஒன்றுமே இல்லை எதை அனுபவித்து??? எதைப் புரியவைத்து??? என்பவை எல்லாம். 

ஆனாலும் இப் புலவனுக்கு அது தெரிந்து விட்டது. ஆனாலும் அரசன் அங்குச் சென்றிருக்கின்றான் என்று மறைமுகமாக!!!!

 ஆனாலும் புலவன் விசித்திரமானவன். 

எப்படியாவது எதை எவை என்றும் அறிந்தும் கூட. 

ஆனாலும் அறிந்தும் அறியாமலும் கூட சில பொய்கள். ஆனாலும் அவ் ஏழையோனுக்கு அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று மனதில் கூட. !!!!

இதனால் பின் அணிந்து  நின்று ஆனாலும் யோசனைகள் பல பல.


 ஆனாலும் இதனைப் பார்த்த அரசன்  பின் அங்குப் போய் பின் அவன் என்ன செய்கின்றான்???? என்றெல்லாம் பார்த்திட்டு.

பார்த்திட்டு எதனை என்றும் அறியாமலே, அறிந்தும் கூட இதனால் இப் புலவனும் கூட!!!!....... எப்படியோ பின் ஆனாலும் அரச சபையில் இருந்த பல தங்க நகைகள், இன்னும் ஆபரணங்கள் எதை எதையோ எடுத்துக்கொண்டு நிச்சயம் பின் அதாவது பின் மூட்டைச் சிறிதளவு கட்டிக் கொண்டு வெளியேறினான். 

ஆனாலும் இவந்தன் புலவன் என்று நியாயமானவன் என்று அனைவருமே அமைதி காத்திடுவார்கள். 

ஆனால் இப் புலவன் சொன்னால் ஆனால் அரசன் கேட்பான். 
அறிந்தும் கூட!!!!

 அப் புலவனும் இப்போது பிறப்பு எடுத்திருக்கின்றான். 

ஆனாலும் இப்படியே தான் இப்படியே சென்று கொண்டிருக்க , ஆனாலும் ஒரு நாளும் வந்து விட்டான் அரசன் தன் அரச இடத்திற்கே. 

ஆனாலும் மறைமுகமாகவே சென்று இப் புலவன் அவன் இல்லத்தில் பின் அதாவது அதே எதை என்று அறிந்தும் கூட அதைத் தூக்கி வீசிவிட்டு பின் வெளியே வந்து விட்டான். 

ஆனாலும் பின் அவ் எளியோன் ஒன்றும் தெரியாமல் திகைத்தான். 

திகைத்தது!!!! எதை என்று அறியும் வண்ணம் ஆனாலும் எப்படி என்று கூட. ஆனாலும் ஏதோ கிடைக்கின்றது என்று கூட அவ் மூட்டையை பார்க்க!!!!!

,  பார்த்தால் தங்க ஆபரணங்கள், வைரங்கள் இன்னும் இன்னும் பல பல. 

ஆனாலும் அவந்தனக்கு யோசனைகள். இவை எல்லாம் நம் ஆசைப்பட்ட தில்லையே?!!!!

ஒரு வேளை ஈசனே இங்கு நிச்சயமாய் வந்துச் சென்றிட்டானா? என்ன என்று. 

ஆனாலும் நிச்சயம் ஈசன்தான் கொடுத்திருப்பான் என்று எண்ணம்.


 இதனால் அறிந்தும் ஆனாலும் அவை எல்லாம் எடுத்து ஈசனை அதாவது லிங்கம் போலவே வடிவமைத்தான். 
எதை என்று அறிய அறிய


 அதுவும் 
“ஈசனே!!!!! இது உந்தனுக்கு சொந்தமானதே!!!!. உன்னை அழகு பார்ப்பதில் இப்பொழுது மிக்க சந்தோஷம். ஆனால் இவை எல்லாம் எந்தனுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதனால் நீயே வைத்துக் கொள்” என்று!!!!

 ( அவ் எளியோன்  தங்கத்தால் மற்றும் வைரத்தால் வடிவமைத்த லிங்கத்தைப் பார்த்துக் கூறிவிட்டார்)

இதனால் தங்கம், வைரம அனைத்தும் பின் ஈசனை அழகாக வடிவமைத்துவிட்டான். 

ஆனாலும் அரச சபையில் அன்று பல சச்சரவுகள், பல பல இன்னல்கள். பின் இவ்வாறு நகைகள் காணவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்க. 

ஏங்கிக் கொண்டிருக்க!!!!,  எதனையும் என்பார் பின் எதனையும் மாறாத  ஆனாலும் பின் புலவனும் வந்தான் யாம் தான் எடுத்துச் சென்றோமே  என்று வாய் திறந்து விட்டாலும்!!!!! அரசனோ எதை ? யாருக்கு?  எவை என்று தெரியாமல் எப்படி நீ எடுக்கலாம்???? பொருள்களை எல்லாம்? எப்படி கொடுக்கலாம்????? என்று என்று கூறி விடுவானோ !!!!!என்று பயந்து எண்ணி!!!!


ஆனாலும் அறிந்தும் கூட எடுக்க. 

ஆனாலும் பின் இவ்வாறு ஆனாலும் மன்னன் அதாவது 
சரி. எதை என்று கூட நிச்சயம் கண்டுபிடிப்போம் என்று கூட !!!!


யாருக்கு எவை என்றும் அறிய அறிய அதாவது தங்க நகைகள் இவ்வாறுதான் இருக்கும்  ஆனால் இவ் நாட்டில் உள்ள அனைவரையுமே பின் நீங்கள் உணர்ந்தவர்களே. 

யார் எளியோர்? யார் உயர்வு பெற்றோர்? ஆனாலும் அனைவரின் இல்லத்திற்கும் நீங்கள் சென்று (சோதனை செய்து ) வாருங்கள் என்று உத்தரவு இட்டு விட்டான். 
பின் தேடிட்டு வாருங்கள் என்று.



 ஆனாலும் பின் அதாவது எவை என்று அறிய அறிய அனைத்து சீடர்களும் (அரண்மனை காவலர்கள்) பின் இல்லம் இல்லமாகச் சென்று!!!! தேடி பார்க்க!!!!!


 ஆனாலும் எப்படியோ பொருட்கள் கிடைத்துவிடும் என்பது மன்னனின் நோக்கம் எண்ணம். 

ஆனாலும் அறிந்தும் கூட மீண்டும் அதாவது நேற்றைய பொழுதில் சென்றோமே!!!!!! அதாவது அந்த எளியோன் வீட்டிற்கு மறுநாள் பின் அதாவது இறைவனிடம் அவன் ( அவ் எளியோன்) என்னதான் செய்கின்றான்????? என்று பார்ப்போம் என்று கிளம்பினான். 

பின் அவ் எளியோன் வீட்டிற்குச் சென்றிருக்கும் பொழுது ஆனாலும் பின் திகைத்தான்


, திகைத்துப் போனான் மன்னன். 

நேற்றைய பொழுதில் ஒன்றும் இல்லையே!!!!!. 

இன்றைய பொழுதில் இவன்தன் இப்படிச் செய்துவிட்டானே!!!!! ஈசனுக்கு. 

எதை அறியும் வண்ணம் இப்படிப் பின் தங்க ஆபரணங்கள் வைரங்கள் என்றெல்லாம் ஈசனுக்காக அப்படியே வடிவமைத்து விட்டான் என்று எண்ணி!!!

ஆனால் பின் நம் அரச சபையில் இருந்ததே இவை!!!!!(அரசு கருவூலத்தில்)


 ஆனால் இவன் திருடன்தான். 

நம்மிடம் தெரியாமலே எப்படியோ வந்து இவந்தன் திருடி எவை என்று அறிய அறிய!!!

 இங்கு பின் ஈசனுக்குச் செலுத்திவிட்டான் என்று.

ஆனாலும் அறிந்தும் கூட  உடனே பின் புலவனிடத்தில் கூட அதாவது உடனே சென்று புலவனிடத்தில் உரைத்தான்.

“புலவரே!!!!, நம்முடைய தங்க ஆபரணங்கள் இன்னும் பின் வைரங்கள் ஒருவன் திருடி விட்டான்.  யானும் அதாவது அறிந்தும் கூட கண்ணால் பார்த்து விட்டேன்.

 அதனால் அவந்தனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்????” என்று. 

ஆனாலும் யோசித்தான் புலவன். அப்படியா?!!! என்று. 

அப்படித்தான் !!!! புலவனே !!! யானே என் கண்ணால் பார்த்தேன் என்று. 

ஆனாலும் புலவனுக்குக் கூட மனது சிறிது கலங்கியது.


 இவ்வாறு நம்தனே செய்து விட்டோமே என்று , ஆனால் மறைத்துக் கொண்டான்!!!! புலவனும். 

எதனையென்று ஆனாலும் அப்புலவனும் கூட பின் இவ் ஜென்மத்தில் கூட இருக்கின்றான் வருங்காலங்களில் கூட அவனைப் பற்றி யான் எடுத்துரைப்பேன்.

அறிந்தும் கூட , அறிந்தும் அறியாமலும் இருக்கின்ற பொழுது கூட இதனால் நிச்சயம் பின் அதாவது அனைவரையும் சீடர்களையும்  அழைத்தான். 

இதனால் ஓர் எளியோன் இல்லத்தில் அனைத்து பின் நகைகள் கூட அடங்கி உள்ளது. அவனைப் பிடித்து வாருங்கள் என்று.

ஆனாலும் பின் அப்படியே சீடர்களும் செய்தனர்


. மன்னனும் பின் ஆனாலும் மறுநாள் இன்னும் அரச சபை கூடியது. பின் அதாவது மன்னன்   கேட்டான் !!!

அவ் எளியோனைப் பார்த்து. 

“நீ ஈசன் பக்தன் என்று பெருமை கொண்டிருந்தாய். ஆனாலும் எப்பொழுதும் ஈசனை நினைத்துக்கொண்டிருந்தாய். இதனால் என்ன பிரயோஜனம்?

 ஆனாலும் இவ்வாறு திருடிவிட்டாயே” என்று. 

ஆனாலும் அவ் எளியோனுக்கு வந்தது  கோபம்!!!! “


 யானா ???திருடன்???? யோசித்து முறையிடுங்கள் மன்னனே!!!. 

யான் ஈசனே!!!!! என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

 ஆனால் முறை தவறிக் கூறி விடாதீர்கள்.  ஈசன் ஒருவனே எந்தனுக்குத் துணை. அப்படி இருக்கும் நான், உங்களிடத்தில் எதை என்று, என் ஈசனை விட சொத்து இங்கு உள்ளதா?????” என்று நிச்சயம் மன்னனைப் பார்த்துக் கூறினான். 

மன்னனுக்கு வந்தது கோபம். “பின் எளியோனே, ஏன் இந்த பின் கோபங்கள்???? என்னிடத்திலே கோபங்களா? 

அடித்து விட்டால் நீ தாங்க மாட்டாய்” என்று மன்னனும். 

ஆனாலும் பின் அவ் எளியோனும், “நிச்சயம் மன்னா,!!!! அறிந்தும் கூட நீ சொல்வது உண்மையே. 


ஆனால் என் ஈசனிடத்தில் யான் முறையிட்டால் என்ன ஆகும்? “ என்றெல்லாம். 

ஆனாலும் பின் மன்னனும் , “ யானும் ஈசன் அடிமைதான்

. உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று. 

ஆனாலும் தயங்கி நின்றான் அவ் எளியோன். 

“என்னால் ஒன்றுமே செய்ய முடியாதப்பா” 

“ஈசனே!!!!!” 

அதாவது ஈசனைப் பார்த்தான். 

“ஈசனே!!!! பின் சிறு வயதில் இருந்தே உன்னை எண்ணிக்கொண்டு இருக்கின்றேன். உன் நாமத்தையே ஜெபித்துக்கொண்டு இருக்கின்றேன். இப்படிப்பட்ட பின் எந்தனுக்கே இப்படியா? யான் என்ன தவறுகள் செய்கின்றேன்?” என்று. 

ஆனாலும் சரி. அறிந்தும் அறிந்தும் கூட “இதனால் நிச்சயம் உன்னால் முடிந்தால் ஈசன்!!!!! வரட்டும்” என்று மன்னன் எதை என்றும் அறிய அறிய. 

பின் மன்னனும் கூட, “ எளியோனே, பின் இவ்வளவு பக்தி என்றால்,  நீ திருடவில்லை என்றால், ஈசன்!!!!! வந்து சாட்சி சொல்லட்டும்!!!!”  என்று எளியோனை. 

ஆனால் எளியோன் “ ஈசனே!!!!! இப்படியா???? நாடகங்கள்? 

“ எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இவந்தன் பின்  “ ஈசனே!!!!! எந்தனுக்கும் தெரியும். உந்தனுக்கும் தெரியும். யான் திருடவில்லை. ஆனாலும் இப்படிப் பழி சுமத்துகின்றானே இவ் மன்னன்  என்னவென்று யான் கூற!!!!”

ஆனாலும் நிச்சயம் பின்  ஈசனைத் தியானித்து. 

ஆனாலும் மன்னனும் “நிச்சயம் ஈசன்!!!!! வரப்போவதில்லை. நீ நிச்சயம் திருடியது, திருடியதுதான்


. அதனால் உன்னை அதாவது உந்தனுக்கு மரண தண்டனை விதிக்கின்றேன்” என்று. 

ஆனாலும் அவ் எளியோன் அதையும் கூட சற்று எதிர் பார்க்காமலே நிச்சயமாய் ஏற்றுக் கொண்டான்


. ஏற்றுக் கொண்டு அறிந்தும் அறிவை அறியாமலும் கூட இதனால் நிச்சயமாய் அறிந்த வண்ணம் உள்ளது என்பவை எல்லாம். 

ஆனாலும் பின் அவனுக்கும் மரண தண்டனை இதனால் மன்னனும்!!!!

அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனால் கடைசி ஆசை என்ன வென்று கூறு என்று கூற!!!!


, அவ் எளியோன் உரைத்தான்  “எந்தனுக்கு கடைசி ஆசையே ஒன்றுமே  இல்லை. இவ்வுலகத்திற்கு எதற்காக வந்தோம் எதை அறிந்தும் அறிந்து விட்டேன். உண்மை நிலை இவ்வுலகத்தில் இல்லை. அவ்வளவுதான்.” என்று கூறி விட்டான். 

பின் மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. “உண்மை நிலை இல்லையா? யான் சரியான வழியில்தான் பின் நடந்து கொண்டிருக்கின்றேன். பின் அதாவது ஆட்சியும் செய்து கொண்டிருக்கின்றேன்.

 அப்படி இருக்க நீ எப்படிச் சொல்லலாம் இவ் வார்த்தை என்று கூறு?”.

ஆனாலும் மன்னனும் குபு குபு என்று ஓடோடி வந்து ஓர் அடி அடித்து விட்டான். இன்னும் அறிந்தும் கூட !!!!

 இன்னும் “அறிந்தும் கூட எப்படிச் சொல்லலாம்? ஆட்சி ஒழுங்காக இல்லை ? என்று கூட !!!!
சாதாரண ஏழ்மையில் இருக்கும் அனைவருக்கும் யான் என்னென்ன செய்கின்றேன் என்று”. 

ஆனாலும் எளியவன் கேட்டான்.  
“மன்னனே, அனைவருக்கும் செய்தாயே!! எந்தனுக்கு என்ன செய்தாய்? ஈசன்தான் !!!!! எந்தனுக்கு அனைத்தும் செய்தான். 

அதனால் பின் அடிக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை. ஈசன்தான்!!!!! என்னை அடிக்க ( இயலும் ) “ என்று. 

ஆனால் அந்நேரத்தில் மன்னனும் கோபத்துடன் “யான்தான் இங்கு ஈசன்” என்று கூறிவிட்டான்.

ஆனாலும் வந்தது கோபம். 

 ஆனாலும் ஓடோடி வந்து யார் என்று தெரியாமலேஒருவன் மன்னன் தலையில்  இன்னும் தலையில் பின் ஓங்கி அடித்தான் பின் அதாவது ஒரு கட்டையால். 

அதாவது ஒரு ஞானி ஆனால் பின் யார் என்று தெரியாது. ஆனாலும் திகைத்துப் போனான் அரசன். 

“என்னையே அடிக்கினற தகுதி இவ்வுலகத்திலே யாருக்கும் இல்லை. நீ யார்???? என்பதைக் கூட”.

ஆனாலும் (அவ் ஞானி) சொன்னான் பின் அதாவது “மன்னா!! உன் ஆணவத்தை அடக்கு!!!!. உன் கோபத்தை அடக்கு!!!!

. யார் மீது கோபத்தைக் காட்டுகின்றாய்? இவ் எளியோனுக்கு யாரும் இல்லை என்ற கோபத்தைக் காட்டுகின்றாயா என்று?”

ஆனாலும் வந்தது அங்கு கருவூரனே. ( சித்தர் கருவூரார் ) 

எதை என்று அறிந்து ஆனாலும் மன்னன் திகைத்துப் போனான். திகைத்துப் போனதில் பின் எவை என்று கூற. அதனால் இவ் பின் அதாவது அடியேனின் அதாவது ஏழையோனின் யான் சொந்தக்காரன். யாரும் இல்லை என்று நினைத்து விட்டீர்களா? யான் இருக்கின்றேன். என்னவென்று கூறுங்கள்? இவன் என்ன தவறு செய்தான் என்று?”

ஆனாலும் அரசனும் “நீ யார்? எதை என்று என்னை அடிப்பதற்கு? உன்னைச் சிறையில் அடைத்து விடுகின்றேன்” என்று. 

ஆனாலும் அவ் ஞானி என்னை சிறையில் “அடையுங்கள்.!!! ஆனால் இவ் எளியோனுக்கு நியாயத்தைக் கூறுங்கள்” என்று.

ஆனாலும் நிச்சயமாய் அறிந்தும்  கூட எவை என்றும் அறியாமல் கூட “இவன் திருடிவிட்டான் அனைத்துப் பொருட்களையும் கூட. இதனால்தான் அடித்தேன் என்று!!!” 

ஆனாலும் “திருடவில்லை” அறிந்தும் கூட  கருவூரன் சொன்னான் “திருடவில்லையே” என்று.

ஆனாலும் சரி. போவோம் அங்கு அறிந்தும் அறிந்தும் என்று கூட அழைத்து வந்தான். 

மன்னனும், பல பல புலவர்களும் கூட, பின் எளியோனும் ஆனாலும் கருவூரானும் அறிந்தும் அறியாமலும் கூட!!!!

இதனால் அதாவது அவனுடைய இல்லம் இங்குதான் இருந்தது. 
எளியோனின் இல்லம்!!!!!

(தற்போது தஞ்சாவூர் நகர மத்தியில் மெயின் தெருவில் இருக்கும் இந்த ஆலயம் முன்பு அந்த எளியோன் வீடு)


 இருந்த வண்ணம் ஆனாலும் பார்த்திட்டு ஆனாலும் அனைவரும் வந்து விட்டனர். 

ஆனாலும் அப்படியே அவன் இல்லத்தில் நின்றிருந்தது அவ் லிங்கம்!!!!!

அதே வைரங்கள், தங்க நகைகள் இன்னும் இன்னும் என்று. 

ஆனாலும் மன்னனும் எதை என்றும் அறிய அறிய “இப்படித் திருடி வந்துவிட்டானே,  இவை எல்லாம் என்ன? யாருடையது???

பின் எங்களுடையதே.!!!

 இப்பொழுது சொன்னாயே சொந்தக்காரன் என்று நிச்சயம் அறிந்தும் , அதனால் உங்கள் இருவருக்குமே பின் தூக்குத் தண்டனை இங்கேயேதான்” என்று கூறிட்டான் மன்னன். 

ஆனாலும் அதனால்தான் எப்பொழுதும் கூட பழமொழிகளும் கூட பல பல கண்டு உணர்ந்தனர். 

“”””கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.  ஆனால் தீர விசாரிப்பதுதான் நன்று””””. 

“””””அரசனாயினும் இதைச் செய்யத்தவறினால் தண்டனைகள் உண்டு!!!!
.பாவங்கள் நிச்சயம் உண்டு”””””. 

ஆனாலும் இதனை ஏற்க ஆனாலும் கருவூரானும், எளியோனும் தனியாக நின்றனர். 

“ஈசனே!!!!! ஏன் இந்த எளியோனுக்கு இவ்வாறு சோதனைகள்?” இதனால் அதாவது கருவூரானுக்கும் கோபம் வந்து விட்டது. 

“இவர்கள் இப்படி இருக்கின்றார்களே!!! இவன் ஒரு அரசனா????? 
இவந்தன் உண்மை எது???, பொய் எது??? என்று உணராமல்!!!!

பின் ஆனாலும் உன் மீதும் பக்தியும் கொண்டிருக்கின்றான். !!!அதனால் யான் சபித்துவிடுவேன்!!!

சபித்து விடுவேன் ஈசா!!!!! நீ வரவில்லை என்றால்!!!”  என்று கருவூரார் கூட!!!  உரைக்க!!!!


 இதனால் அனைத்து தெய்வங்களும் இவ் எளியோனுக்கு அதாவது இவன் ஒன்றுமே அறியாதவன். பின் யாருக்கும் துரோகம் செய்யாதவன்.  ஆசைகளே இல்லாதவன். இவந்தனக்கு  இரங்காமல் இறைவன்களே நீங்கள் யாருக்கு இரங்குவீர்கள்?????? என்று கோபத்துடன் திட்டித்தீர்த்தான் கருவூரான். 

இதனால் அனைத்து தெய்வங்களும் வந்து இங்கு நின்று விட்டது. எதை என்று பிரம்மாவும், இன்னும் எதை என்று சொல்ல எத்தனை எத்தனை இறை ரூபங்கள், எத்தனை எத்தனை அனைத்துமே நின்று நின்று காட்சி அளித்தன அவ் எளியோனுக்கு. 

ஆனால் இதன் மூலம் மன்னனுக்கும் நன்றாகப் புரிந்தது!!! உண்மை!!!

. இதனால் அறிந்தும் அறிந்தும் அப்பொழுது பின் அதாவது கருவூரான் கேட்டான். ஆனால் வந்தது என்று யாரும் அறியவில்லை கருவூரான் என்று. 

“மன்னா!! சொல். இப்பொழுது இவ் ஏழை பெரியவனா? நீ பெரியவனா?

 நீயும் ஈசனை நினைத்துக்கொண்டிருந்தாய். யானும் ஈசன்!!!!! பக்தன், பக்தன் என்று.

 ஆனால் கடைசியில் இவ் ஏழையோனுக்கே!!!!!....…


ஏனென்றால் உன்னிடத்தில் நிச்சயம் அவ் தகுதிகள் இல்லை. பின்  நீதியை எப்படி எதை என்று ஆராய்ந்து  கொடுக்க தகுதிகள் இல்லை. அதனால் இவ் ஏழையோனுக்கும் நிச்சயம் ஆசைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. 

அதனால் பார்த்தீர்களா??? அதனால் அறிந்தும் அறிந்தும் நீ என்றால் பின் இன்னும் இன்னும் எவை என்றும் அறிந்தும் அறியாமல் கூட இதனால் நிச்சயம் அதாவது ஈசன்!!!!! வந்து அவ் ஏழையோனிடத்தில் வந்து அவனை நிச்சயம் கட்டி அணைத்துக் கொண்டான் பாசத்தோடு. 

ஈசன்!!!!! கேட்டான் அவ் ஏழையோனைப் பார்த்து

 “அப்பா! உந்தனுக்கு என்ன தேவை என்று?”.

அவ் எளியோன் ஈசனை பார்த்து!!!!!!! நிச்சயம் நீங்கள் அதாவது இத்தனை தெய்வங்கள்  இங்கு வந்து விட்டீர்களே, நீங்கள் அப்படியே இங்கு இருங்கள் நீங்கள் போதுமானது

. இங்கு வந்து யாருக்கு எதை என்று அறிய அறிய அனுதினமும் அதாவது இங்கு வந்து கொண்டே இருந்தால்  அவர்களுக்கு வரங்கள் கொடுத்திடுங்கள் போதுமானது


. ஏழையோனையும் கூட உயர்த்திவிடுங்கள். சில தரித்திரத்தை நீக்குங்கள். அவ்வளவு போதும்” என்று. 

இதனால் அனைவருமே அப்படியே நின்று விட்டார்கள்.

(இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராஜகோபால சுவாமி ஆலயம் என்று பெயர் இருந்தாலும் ஆலயத்திற்கு உள்ளே அனைத்து தெய்வங்களின் மூர்த்தங்களும் உள்ளது தெய்வலோகத்திற்குள் சென்று வந்ததைப் போல் அனைத்து தெய்வங்களும் காட்சியளிக்கும் ஆலயம் இது ஆனால் உள்ளே இப்படி இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியவில்லை!!!)


 அதை அறிந்தும் அறிந்தும் கூட அப்படியே சிலையாகத்தான் இப்பொழுது கூட பின் இருக்கின்றது. தெரிந்துகொண்டீர்களா!!!!!!? 

எத்தனை??? எத்தனை??? இறை அவதாரங்கள் இவ்வுலகில்!!!! அனைத்து தெய்வங்களும் அனவருமே இங்கு வந்து விட்டனர் நலமாக. 

ஆனாலும் இச்சிறப்பு யாரும் அறிவதில்லை.  அறிவதில்லை அறிவும் மனிதனுக்குப் புத்தி எதை என்றும் அறிய இதனால்தான் பின் மன்னனாக இருந்தாலும் நிச்சயம் நீதி சரியாக  இல்லையென்றால் சில சில தரித்திரங்கள் ஏற்பட்டு நிச்சயம் பின் கஷ்டங்கள் அனுபவித்தே தீர வேண்டும். 

(இவ் மாபெரும் ஏழை சிவ பக்தனைத் தண்டித்த குற்றத்திற்காக மாமன்னன் இராஜராஜ சோழன் )

 ஆனாலும் நிச்சயம் அதற்குத் தகுந்தாற்போல் நிச்சயம் பின் மறு பிறவியும் எடுத்துப் பல வகையிலும் கூட பின் பூசைகள் செய்து இராஜராஜ சோழனும் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஈசனையும்!!!!! பார்த்து அதாவது ஒரு பிறவி எவை என்று கூற அதாவது அவ் ஏழையோனுக்கு இவ்வாறு தண்டனைகள்,  கஷ்டங்கள் தெரியாமல் அவனுக்கு கொடுத்து விட்டேன் மன்னனாக இருந்தும் கூட!!!!

(அந்த தவறுக்கு   பிராயச்சித்தமாக)


 பின் ஒரு பிறவி எல்லாம் தண்டனை அனுபவிப்பதற்காகவே பிறவி எடுத்தான்.

எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமலும் கூட அதனால் நிச்சயம் பின் அதாவது ஏற்கனவே யான் சொல்லி இருக்கின்றேன்!!!! அப்பனே!!!!

 விதியைக்கூட வெல்ல முடியாது. நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும். 

நிச்சயம் சித்தர்கள் யாங்கள் இருக்கின்றோம் மாற்ற!!!

. இதனால் நிச்சயம் யோசித்துக் கொள்ளுங்கள். யோசித்துத்தான் செய்ய வேண்டும்.


 யோசித்து!!!! யோசிப்பது ஒரு முறையல்ல… நூறு முறையல்ல… ஆயிரம் முறை…. பின் இது சரியா? பின் தீயவையா? என்று யார் ஒருவன்? யோசித்துச் செய்கின்றானோ? அவந்தனுக்கு உயர்ந்த லாபங்களும் , இறைவனும் அருகிலே இருப்பான். 

யோசிக்காமல் செய்தாலும் தவறு, தவறுதான்!!!!!!!!! சொல்லிவிட்டேன்!!!!!!!!!. தண்டனைகள் அனுபவித்தே ஆக வேண்டும்!!!!!!!!!. 

இதனை எப்பொழுதுமே என் மக்கள் பின் அதாவது மனதில் நிறுத்திக்கொள்ள நன்று!!!!!!!!!!!!!!!!!!. 


பின் அனைத்திற்கும் பின் மனிதர்களே காரணம். 

மனிதனை மனிதன் எதை என்றும் அறிய அறியத் தூண்டிவிட்டு , சில தவறுகள் செய்துவிட்டு , மீண்டும் பின் இறைவனிடத்தில் சென்றால் என்ன லாபம்????? 

லாபங்களே இல்லை!!!!!

இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன். இதனால் எவை என்று அறிய அறிய அத்தனை தெய்வங்களும் கூட இங்கேயேதான்!!!!!!

இன்னும் அவ் தங்க ஆபரணங்கள் எல்லாம் கீழே ஒளிந்துள்ளது இன்னும் அறிந்தும் கூட நாகங்கள் அதைக் காத்துக் கொண்டேதான் இருக்கின்றது. அதனால் சக்தி மிகுந்து காணப்படும்.

ஆனாலும் சில சக்தியுள்ள கோவில்கள் இங்கும் ( தஞ்சை அருகில் ) உள்ளது. சில சில தொலைவிலே. அவை எல்லாம் யாருக்கும் தெரியாது. 

ஆனால் ஏதோ அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் இங்கு வந்து சென்று கொண்டே இருந்தாலே சில நலன்கள் நிச்சயம் வாழ்வில் ஏற்பட்டு,  மாறுதல்கள் ஏற்படும் என்பது உறுதி!!!!!!!!!. 

பல வழிகளிலும் கூட நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இன்னும் சொல்கின்றேன். 

இன்னும் சொல்கின்றேன் வாக்குகளாக,  இவ்தலத்தைப் பற்றியும் கூட மறு வாக்கும் கூட!!!. 

ஆசிகள்!!!!!

ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. இறைவா நன்றி!

    ReplyDelete
  2. ஓ மகத்தீசாய நமக

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா...இந்த பதிவு எண் 1647 ...
    முந்தைய பதிவு எண் 1646 இந்த பதிவில் உள்ளது...திருத்தம் செய்ய வேண்டும் ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. ஐயா, கோவில் முகவரி தெரிவிக்க வேண்டும் தயவு கூர்ந்து..

    ReplyDelete
    Replies
    1. https://www.google.com/search?client=ms-android-oneplus-rvo3&sca_esv=74b0166375c0d67f&sxsrf=ADLYWILLKK554c0RjddFBN_1OorEMLG0hQ:1721927264722&q=Arulmigu+Sri+Rajagopalaswamy+Temple&ludocid=11449061675870966500&lsig=AB86z5VpnwR7PU5wgfI8kBChQVlC&kgs=92d3ed0c1920d86f&shndl=-1&shem=labmtrc,lsde,lsp,vslcea&source=sh/x/loc/act/m1/2

      Delete