இறைவா!!!! அனைத்தும் நீ
அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 3
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-
( இங்கு ஒரு பாவம் குறித்து விளக்கினார்கள். யாருக்கும் தெரியாது என்று செய்த ஒரு பாவம். ஆனால் ஆன்மா சென்று இறைவனிடம் கூறிவிட்டது. இப்போது அவ் பாவம் தீர்ப்பது தொடர்பான வாக்கில் அனைவருக்குமான பொது வாக்கு ) அப்பனே இதற்குத் திருத்தலம் திருத்தலமாகச் சென்றாலும் அப்பனே ஔஷதங்கள் ( மருந்துகள் ) எடுத்துக்கொண்டாலும் இறைவன் இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே. அவ் ஆன்மா அனுதினமும் இறைவனிடத்தில் செல்லும் என்று கூற அப்பனே பின் பாவக்கணக்கை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
( இங்கு அடியவர்கள் ஒன்று கவனிக்க வேண்டும். ஆன்மா பொய் சொல்வதில்லை இறைவனிடம். ஆனால் ஆன்மா இறைவனிடம் தினமும் அறியாத இவ் உடல் கொண்ட உயிர் அவ் பாவத்தை நீக்க பரிகாரங்களாகத் திருத்தலம் , திருத்தலமாக இன்னும் பல வழிகளில் முயற்சி எடுக்கும். ஆனால் அவை எல்லாம் வீணே. தோல்விகள் உண்டாகும். பொருள் விரயங்கள் உண்டாகும். வெற்றி பெற ஆன்மாவுடன் இவ் உடல் இனைந்து செயலாற்ற வேண்டும். அதற்கு ஆன்மாவின் நோக்கம் தெரிய வேண்டும். அதற்குப் புண்ணியங்கள் மிக மிக அனுதினமும் செய்வது அவசியம். அவ் புண்ணியத்தை வைத்தே சித்தர்கள் விதியில் உள்ளதை தெரிவிப்பார்கள். அதன் மூலம் வெற்றி உண்டாகும். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( அருமையான விளக்கம் அளித்தார்கள்)
அடியவர்:- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( எதனால் பாவம் உண்டானதோ அதன் மூலமே பாவம் நீங்கும். அதாவது அவ் பாவம் ஒரு வினையாகச் செயல்பட்டு வேதனையை அளித்து பாவம் விலகும் என்று புரியும்படி உரைத்தார்கள்.)
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( அருமையான விளக்கம் அளித்தார்கள்)
அடியவர்:- ( அமைதி)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆனாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கத்தான் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு விதியையும் பார்த்தால் அப்பனே பின் எங்களுக்கே கஷ்டம்தான் அப்பா.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ்வாறு மற்றவனிடத்தில் கஷ்டங்கள் கூறும்போது அப்பனே இவன் சரியாக மாட்டிக்கொண்டான் நம்தன் இடத்தில். பணத்தைப் பிடுங்கிவிடலாம் என்று அப்பனே. இப்படித்தான் அப்பனே பக்திகள் இனிமேல் வரும் அப்பா.
( அடியவர்களே, உங்கள் கஷ்டங்களை குருநாதர், இறைவன் இடத்தில் மட்டும் கூறுங்கள். வெளி நபர்களிடம் உரைப்பது உங்களிடம் - பரிகாரம், ஜோதிடம், பூசை , யந்திரம், தந்திரம், மந்திரம் இன்னும் பல வழிகள் மூலம் பிறரால் - பணம் பறிக்க வழி வகுக்கும். )
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( உரையாடல்கள் , புரிதல் நிகழ்வுகள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதற்குத் தகுந்தாற்போல் அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே உங்களுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- உங்களுக்கு ஏன் கஷ்டங்கள்
வருகின்றது என்று கேட்கின்றார் ஐயா.
அடியவர்:- மனிதனின் ஆசை
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே அனைத்திற்கும் காரணம் நீங்கள்தான் என்பேன் அப்பனே. அதனால் முதலில் நீங்கள் உங்களை உணர்ந்தால் அப்பனே பின் சுலபமாகிவிடும் எங்களுக்கு.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- எல்லாமே நீங்கள்தான். நீங்க உங்களை அறிந்து கொண்டால் , எங்களுக்கு சுலபமாகிவிடும் என்று சித்தர்கள் சொல்கின்றார்கள்.
அடியவர்:- (அமைதி)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ் ஆன்மாக்கள் ஓடி ஓடி இறைவனைத் தேடும் அப்பா. அப்பனே பின் எங்கு சொர்கம் இருக்கின்றது? எங்கு நிம்மதி கிடைக்கும் என்று. அப்பொழுதுதான் அப்பனே சில புண்ணியங்கள் நீங்கள் செய்யும் போது ஆன்மாக்கள் எங்களை நோக்கி வரும் அப்பா. அப்பனே யாங்களே பின் கையைப் பிடித்து பின் பிறவி இருக்கின்றது. அடுத்த பிறவியில் பின் பார்த்துக்கொள்வோம். பின் பாவங்களைக் கரைத்து அனைத்தும் கொடுக்கின்றோம் என்று சொல்லி அனுப்பி விடுவோம் அப்பனே. அப்படிப்பட்டவர்கள்தான் அப்பனே எங்களிடத்தில் வரமுடியும். சொல்லிவிட்டேன் அப்பனே. இதுதான் ஆணித்தரமான உண்மை.
அடியவர்:- ( சுவடி ஓதும் மைந்தனுடன் சில உரையாடல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் மட்டும் ஒன்றும் இல்லாமல் , அவன் எல்லாம் பாவங்கள் செய்தவன். அவன் மட்டும் பின் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே என்று இறைவனிடத்தில் முறையிடுவதில்லையா அப்பனே? அப்பனே அது போல் பின் தவறு செய்தவனுக்கு அப்பனே தண்டனைகள் கொடுக்காமல் பின் போய்விட்டால் இறைவன் அப்பனே இறைவனை யாரும் மதிக்க மாட்டார்கள் அப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- தண்டனை கொடுத்துதான் திருத்துவார்.
அடியவர்:- ( அமைதி. சில உரையாடல்கள்.)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உங்களைப் பார்த்தே கேள்விகளை இப்போது கேட்கின்றேன். இறைவனை எப்படி அறிவதப்பா?
( ஒவ்வொரு அடியவர்களாகப் பதில் கூறத் தொடங்கினார்கள் )
அடியவர்:- முதலில் நான் என்ற ஆணவம் ஒழிந்தால்தான் இறைவனை உணர இயலும்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இது தவறான பதில்.
அடியவர் 1 :- சரணடைந்தால்…
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் தவறு.
அடியவர் 2 :- சரணாகதி
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே தவறு.
அடியவர் :- புண்ணியங்கள் அதிகமானால்…
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் தவறு
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா அனைவரும் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். அனைவரும் தவறு என்று சொல்கின்றார். இறைவனைச் சரணாகதி அடைவது எப்படி?
அடியவர் 3 :- தன்னை உணர வேண்டும்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் பழையது. ( தவறு )
அடியவர் 4 :- மனம் மட்டும் போதும்
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே, பொறுத்திரு.
அடியவர் 5 :- அனைத்தும் ஈசன் செயலே என்று கருதிவிட்டால்..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே இதுவும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்
அடியவர் 5 :- இறைவனிடத்தில் அன்போடு இருத்தல்..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இதுவும் இல்லை.
அடியவர் 6 :- யாருக்கும் பாவம், துன்பம் செய்யாமல் இருந்தால்..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கோபம் வந்தால் கூட ஒரு பாவம்தானப்பா.
அடியவர் 7 :- கெட்ட காலம் ( துன்ப காலம்) முடிந்தால் இறைவனைச் சரணடைந்த மாதிரிதான்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எழுந்து நில்.
அடியவர் 7 :- (அடியவர் எழுந்து நின்றார்)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ( தனிப்பட்ட வாக்கு. ) அப்பனே உன்னைப் பக்குவத்தில் வைத்துள்ளேன். இதற்கு ( நீ என்னிடத்தில் வந்தமைக்கு காரணம்) கஷ்டங்கள் தானப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( தனிப்பட்ட விளக்கம் )
அடியவர் 7 :- ( சரிங்கய்யா )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆடிய அட்டம், பாடிய பாட்டம் அப்பனே பார்த்துக்கொண்டே தான் இருந்தேன். ஆனாலும் அப்பனே இப்பொழுது கைக்கட்டி பதில் கூறிக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதற்கெல்லாம் காரணம் துன்பத்தானப்பா. அப்பனே அப்பொழுது துன்பம் கொடுப்பது நல்லதா? பின் நீ சொல்?
அடியவர் 7:- துன்பம் வந்தால்தான் அந்த பக்குவங்கள் வரும்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, அண்ணாமலை செல் அப்பனே. அப்படிச் செல்லவில்லை என்றாலும் அப்பனே தலையில் குட்டி ( கஷ்டத்தைக் கொடுத்து ) அவனே அழைத்துச் செல்வான்.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( சில விளக்கங்கள் )
அடியவர் 7:- ( சில புரிதல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( தனி வாக்கு)
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( தனி வாக்கு விளக்கம் )
அடியவர் 7 :- ( சில புரிதல்கள் )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பத்தைக் கொடுத்துத்தான் உன்னை இப்படி அழைத்து வந்திருக்கின்றேன். அப்பனே இன்னும் சொல் அனைவருக்கும் ஏதாவது?
அடியவர் 7:- நம்ம யார் என்று உணர்ந்தால் சீக்கிரம் முக்தி அடையலாம்..
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே யார் யார் தன்னை உணர்ந்தார்கள் என்று கேள்?
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா எல்லோரையும் இங்கு கேளுங்கள்.
அடியவர் 7 :- அகத்தியரே கேட்டிருக்கின்றார். அவர்களே சொல்லுவார்கள்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே திருடன் , யான் திருடன் என்று சொல்லுவானா?
அடியவர்கள்:- ( பலத்த சிரிப்பு அலை )
பல அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புடன்)
ஐயா நான் ஒத்துக்கொள்கின்றேன்.
நான் ஒத்துக்கிறேன் ஐயா.
( அதாவது யான் திருடன் என்று )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சொல்
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா உங்களை சொல்லுங்கள் என்று கேட்கின்றார்.
அடியவர் 7 :- யாரும் இல்லை அய்யா
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஒத்துக்கொண்டால்?
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- அப்படி தன் தவற்றை ஒத்துக்கொண்டால்?
அடியவர் 7:- அதிலிருந்து அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தண்டனை தீருமப்பா. பாவம் தொலையுமப்பா.
சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா?
அடியவர்:- ( அமைதி )
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( அடியவர் 7 - விதி குறித்த வாக்கு. )
அடியவர் 7:- கோயில், கோயிலா போக வேண்டும் என்றால் கஷ்டம் ஐயா
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பொழுது இல்லங்கள் இல்லங்களாகச் சுற்று.
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள்)
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, இதுவா தன்னை அறிதல் அப்பனே?
அடியவர் 7:- ( அமைதி )
ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சித்தன் அருள்.....தொடரும்!
ReplyDelete“இறைவா!!! அனைத்தும் நீ”
youtube
அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) பகுதி 3
https://www.youtube.com/watch?v=nnAOgyrxfKs
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்.
ReplyDeleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் பாதம் சரணம்.
வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் 22 பகுதிகளாக வெளிவந்து நிறைவு அடைந்தது. அடியவர்கள் இந்த வாக்கினைப் படித்து மகிழ , இந்த 22 வழக்குகளின் பதிவு எண் மற்றும் அதன் 22 இணைப்புகள் ( blog spot links ) இங்கு அளிக்கின்றோம். இந்த மகத்தான வாக்குகளை அடியவர்கள் தொகுத்து, இலவசமாக அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப் புண்ணியங்கள் உண்டாகும். அனைவருக்கும் இதனை ஒரு பாடமாக வகுப்பு எடுத்துச் சொல்ல முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும்.
சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
https://siththanarul.blogspot.com/2024/06/1639-1.html
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
https://siththanarul.blogspot.com/2024/06/1640-2.html
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
https://siththanarul.blogspot.com/2024/07/1644-3.html
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
https://siththanarul.blogspot.com/2024/07/1645-4.html
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
https://siththanarul.blogspot.com/2024/08/1665-march-2024-5.html
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6
https://siththanarul.blogspot.com/2024/08/1666-march-2024-6.html
சித்தன் அருள் - 1667 - மதுரை வாக்கு - 7
https://siththanarul.blogspot.com/2024/08/1667-march-2024-7.html
சித்தன் அருள் - 1672 - மதுரை வாக்கு - 8
https://siththanarul.blogspot.com/2024/09/1672.html
சித்தன் அருள் - 1674 - மதுரை வாக்கு - 9
https://siththanarul.blogspot.com/2024/09/1674-march-2024-9.html
சித்தன் அருள் - 1690 - மதுரை வாக்கு - 10
https://siththanarul.blogspot.com/2024/10/1690-march-2024-10.html
சித்தன் அருள் - 1698 - மதுரை வாக்கு - 11
https://siththanarul.blogspot.com/2024/10/1698-march-2024-11.html
சித்தன் அருள் - 1700 - மதுரை வாக்கு - 12
https://siththanarul.blogspot.com/2024/10/1700-march-2024-12.html
சித்தன் அருள் - 1701 - மதுரை வாக்கு - 13
https://siththanarul.blogspot.com/2024/10/siththan-arul-1707-march-2024-13.html
சித்தன் அருள் - 1704 - மதுரை வாக்கு - 14
https://siththanarul.blogspot.com/2024/10/1704-march-2024-14.html
சித்தன் அருள் - 1709 - மதுரை வாக்கு - 15
https://siththanarul.blogspot.com/2024/10/1709-march-2024-15.html
சித்தன் அருள் - 1725 - மதுரை வாக்கு - 16
https://siththanarul.blogspot.com/2024/11/march-2024-16.html
சித்தன் அருள் - 1755 - மதுரை வாக்கு - 17
https://siththanarul.blogspot.com/2024/12/1755-march-2024-17.html
சித்தன் அருள் - 1756 - மதுரை வாக்கு - 18
https://siththanarul.blogspot.com/2024/12/1756-march-2024-18.html
சித்தன் அருள் - 1757 - மதுரை வாக்கு - 19
https://siththanarul.blogspot.com/2024/12/1757-19.html
சித்தன் அருள் - 1759 - மதுரை வாக்கு - 20
https://siththanarul.blogspot.com/2024/12/1759-20.html
சித்தன் அருள் - 1760 - மதுரை வாக்கு - 21
https://siththanarul.blogspot.com/2024/12/1760-21.html
சித்தன் அருள் - 1761 - மதுரை வாக்கு - 22
https://siththanarul.blogspot.com/2024/12/1761-22.html
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!