​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 22 July 2024

சித்தன் அருள் - 1650 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!







24/3/2024 அன்று பங்குனி உத்திர நட்சத்திரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பழனியில் குருநாதர் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள்!!!

அப்பப்பா!! நலன்களாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே என்ன எதை என்றும் புரியாமல் கூட அப்பனே இருந்தாலும் நிச்சயம் அப்பனே என்னுடைய ஆசிகள் அனைவருக்குமே கிட்டி கிட்டி வாழ்க்கையில் மாற்றங்கள்.


ஆனாலும் அவ் மாற்றங்கள் அப்பனே அறிந்தும் கூட நிச்சயம் கொடுத்துக்கொண்டு அப்பனே அதையும் கூட சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் அப்பனே பின் வந்து கொண்டு இருக்கின்றது

இதனையும் கூட பின் பல வழிகளிலும் கூட யான் உரைத்து விட்டேன் அப்பனே... எதை என்றும் உண்மை நிலையை கூட அறியாமல் இப்படி இருந்தாலும் எதை என்றும் கூட உண்மைதனை உணர்ந்து உணர்ந்து நிச்சயம் இறைவனை வணங்கினாலே இக்கலியுகத்தில் நிச்சயம் அனைத்தும் கிட்டும்!!!


அப்படி இல்லை என்றால் நிச்சயம் அப்பனே தரித்திரம் தான் மிஞ்சும் அறிந்தும் அறிந்தும் கூட


தரித்திரத்தை அப்பனே பின் அதாவது மனதிலே வைத்துக்கொண்டு... அப்பனே இறைவனை வணங்கினாலும் என்ன பயன் ??? அப்பனே!!!!

இக்கலியுகத்தில் இது போலத்தான் இறைவனை பின் நிச்சயம் வணங்குவான். அப்பனே மனதில் பல அழுக்குகளை வைத்துக்கொண்டு அப்பனே இறைவனை வணங்குவான் அப்பா

இதனால் இறைவனும் மௌனத்தை சாதிப்பான் அப்பனே பரிசுத்தமான அப்பனே பின் இறைவன் நிச்சயம் அதாவது இறைவன் எந்தனுக்கு தருவான் என்று நம்பிக்கையோடு வணங்கினால் அப்பனே அனைத்தும் கிட்டுமப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இக்கலி யுகத்தில் உண்மையான பக்திக்கு இடமில்லையப்பா

அப்பனே நிச்சயம் தன் சுயநலத்திற்காகவே அப்பனே இறைவனை போற்றி துதித்து பாடுவார்களப்பா!!!!

அதற்கு என்ன பயன்?? என்பதை எல்லாம் அப்புறம் நிச்சயம் ஏனைய வாக்குகளில் கூட யான் நிச்சயம் குறிப்பிடுகின்றேன் அப்பனே நலன்களாகவே!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் ஒரு பக்தன் அப்பனே அதாவது அப்பனே முதல் படியிலே ஏறும் பொழுது அப்பனே அறிகின்ற பொழுது பின் பார்ப்போம் !!...

அதாவது முருகா!!! என்றெல்லாம் அப்பனே அவனை தான் எப்பொழுதும் அப்பனே முருகா!!!வடிவேலா!! குமரா!!!  சுப்பிரமணியா!!! பின் அழகனே!!!! என்றெல்லாம் அப்பனே கூறிக் கொண்டு இருப்பான்...


ஆனாலும் அப்பனே பல பல வழிகளிலும் கூட ஆனாலும் சரி என்று அவந்தனுக்கு அதாவது பின் ஓடி வந்து விட்டான் இங்கு (பழனிக்கு)பல ஆலயங்களுக்கு சென்று!!!


ஆனாலும் முதல் படியிலே அப்பனே கால்  வைக்கின்ற பொழுது... அப்பனே ஒரு யோசனை தோன்றிற்று!!!!

நிச்சயம் நாம் தன் என்ன தவறு செய்தோம்???? அறிந்தும் கூட அதாவது முருகனையே தான் பிடித்துக் கொண்டு இருந்தோமே..... பின்பு ஏன் மேல் சென்று அவந்தனை காண வேண்டும்???????

அதனால் இங்கேயே இருந்து முருகனை அழைப்போம் என்றெல்லாம்!!!!!

பின் அமர்ந்தான்!!!


ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட முருகா நிச்சயம் உன்னை அறிந்தும் அறிந்தும் உன்னையே அன்பால் தொழுது கொண்டு இருக்கின்றேன் அதாவது எவ் ஆசைகளும் என் மனதில் இல்லை.... அறிந்தும் கூட...

நீதான் தாய் தந்தையாகவே அறிந்தும் உன்னை நான் ஏற்றுக் கொண்டேன்!!!

அனைவருமே ஓடி ஓடி செல்கின்றார்கள் அதாவது உன்னை பார்க்க!! பார்க்க!! அனைவருமே ஓடி ஓடி வந்து கொண்டே இருக்கின்றார்கள்

 ஆனாலும் பார்ப்போம் என்றெல்லாம் அமைதியாக அறிந்தும் கூட அங்கேயே அமர்ந்து கொண்டான்!


ஆனாலும் அதாவது (மலை)மேல் நிற்கும் முருகன் நிச்சயம் இப்படியும் அறிந்தும் கூட பின் அறிந்தும் உண்மை நிலை என்னவென்று பின் முருகனுக்கு தெரிந்து விட்டது..... ஆனாலும் பார்ப்போம் என்று சில சோதனைகளை தந்தான்

ஏன் எதற்கு என்றெல்லாம் இதனால் அங்கே அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்க!!!..... அதாவது முருகா முருகா என்று பின் சொல்லிக் கொண்டிருக்க.....


 காவலர்கள் வந்து நிச்சயம் இங்கெல்லாம் இப்படி சொல்லக்கூடாது நிச்சயம் இங்கிருந்து வெளியேறு!!!!

பின் அனைவரும் அதாவது அறிந்தும் கூட முருகா சொல்கின்றாயா மேல் சென்று அதாவது பின் மேல் மலையின் மேல் ஏறிச் சென்றே நிச்சயம் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டிரு!!!!

அப்படி இல்லை என்றால் நிச்சயம் அறிந்தும் கூட இங்கிருந்து ஓடிவிடு என்று!!!


ஆனாலும் ஓடவில்லை அறிந்தும் உண்மைதனை கூட அறிந்தும் அறிந்தும் கூட இதனை தன் உணர்த்த உணர்த்த மீண்டும் முருகா முருகா என்று

ஆனாலும் காவலாளிகளோ நிச்சயம் இவந்தன் பைத்தியக்காரன் தான் என்ன சொன்னாலும் இவன் கேட்கவில்லை... இதனால் அறிந்தும் கூட பின் முதுகில் அதாவது காவலாளி தடி கொண்டு  பலமாக அடித்தான்....


ஆனால் அதை முருகன் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய இங்கே அடித்ததை அங்கு மேலே முருகன் வாங்கிக் கொண்டான்


ஆனாலும் பின் காவலாளியோ அறிந்தும் கூட இவன் அசையவில்லையே என்று இன்னும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய இன்னும் உயர்த்தி தடியினால் அடித்தான்!!!.... ஆனாலும் அவந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை

முருகன் அறிந்தும் கூட முதுகில் அறிந்தவாறே இவை என்று போக போக மீண்டும் மீண்டும் முருகா!! முருகா!! என்றெல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் பின் அவ் காவலாளி அனைத்து காவலர்களையும் கூட நிச்சயம் சப்தமிட்டு வரச் சொல்லி... இவன் பைத்தியக்காரன் இவந்தன் பின் என்ன சொன்னாலும் இங்கிருந்து கிளம்ப!!!!!!...(மறுக்கின்றான்)

 அதாவது இவன் திருடன் தான் என்று யான் நினைக்கின்றேன் என்று மற்றொரு காவலாளியும் இதனால் அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் நிச்சயம் அவந்தனை அதாவது பின் எட்டியும் உதைத்து அறிந்தும் இவைதன் உணர உணர நிச்சயம் அதாவது திருஆவினன்குடி பின் இங்கு இவனை தள்ளி விடலாம் என்று அனைவரும் சேர்ந்து அங்கே (திரு ஆவினன்குடியில்) அவனை விட்டு விட்டனர் அறிந்தும் அறிந்தும்!!!


அதனால் அவந்தன் அழுது கொண்டே!!... முருகா!!!! யான் என்ன தவறு செய்தேன்?????.... உந்தனைதான் அழைத்தேன் உந்தன் நாமத்தையே செப்பிக் கொண்டு  இருந்தேன்... எத்தனையோ பேர்கள் எதையெதையோ சொல்லி மனது அழுக்காகவே வருகின்றார்கள்.

ஆனாலும் என்னை நீ இப்படி சோதனைக்கு ஆட்கொண்டு விட்டாயே... பின் அதாவது அறிந்தும் கூட உண்மைதனை எடுத்துரைக்காமல் எவை என்றும் புரிய புரிய

ஆனாலும் அறிந்தும் கூட அழகாகவே முருகன் வந்தான்!!!!

அறிந்தும் அறிந்தும் எதை என்றும் கூட ஆனாலும் எதை என்றும் வீணடித்து வீணடித்து உண்மைதனை உணர!!!!...

ஆனாலும் பின் முருகன் வந்துவிட்டான் ஒரு இளைஞன் வடிவிலே!!!

அறிந்தும் கூட அப்பப்பா!!!!
வா!!!!!! ..... செல்வோம் என்று அவந்தனை அழைக்க!!!!

 ஆனாலும் அவனோ!? அறிந்தும் கூட இங்கே காவலாளிகள் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பூட்டை போட்டு அறிந்தும் கூட என்னை எட்டியும் உதைத்து அறிந்து அறிந்து  இங்கே பின் உட்கார வைத்து விட்டனர்!!!... அவர்கள் என்னை அடித்ததால் என் கால்களும் வரவில்லை என் கைகளும் வரவில்லை ஏன் எதை என்று அறிய அறிய என்னை பார்த்து நீயும் பைத்தியக்காரனா என்றெல்லாம் பின் நினைக்கின்றாயே என்றெல்லாம்!!!!


(இளைஞர் வடிவத்தில் உள்ள முருகன்)
இல்லை உன்னை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அறிந்தும் கூட!!!!


ஆனாலும் அப்படியா பின் பார்த்தால் உந்தனுக்கும் முருகன் லீலைகள் தெரியும் அல்லவா!!!! என்னை காப்பாற்றலாமே என்றெல்லாம் முருகனே அதாவது முருகனையே பார்த்து அறிந்தும் கூட இவ்பக்தன்!!!


ஆனாலும் சரி பார்ப்போம் என்றெல்லாம் ஆனாலும் இழுத்து அறிந்தும் கூட அதாவது எதை என்றும் புரிய  புரிய அதாவது கதவை தள்ளி பின் அதாவது அப்பொழுதெல்லாம் எதை என்று அறிய அறிய கம்பிகளால் ஆன கதவே..... இதனால் அதனை தள்ளி கையைப் பிடித்தான் முருகன்!!!!

பின் எழுந்து நின்றான் அறிந்தும் கூட அவந்தனுக்கு எழுந்திருக்க முடியாமல் கால்களும் ஓய்ந்தது கைகளும் ஓய்ந்தது.....

ஆனாலும் முருகன் கையைப் பிடித்ததால் பின் அவந்தனுக்கும் ஒரு ஆச்சரியம் !!!!!!!!!

பின் அவ் எவ்வாறு?????

கைகளையும் கால்களையும் அடித்து நொறுக்கினார்களே அனைத்தும் சரி ஆகிவிட்டது எதை என்று அறிய அறிய நினைத்தான்


ஆனாலும் முருகா என்று பின் கூப்பிட்டான்.... ஆனாலும் பின் வந்தது முருகன் என்று தெரியவில்லை...பல வழிகளிலும் கூட இப்படித்தான் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அறிந்தும் உண்மைதனை கூட....

ஆனாலும் இதுதான் மாயை அறிந்தும் அறிந்தும்.

ஆனாலும் உண்மைதனை எதை என்றும் புரியாத அளவிற்கு கூட அவந்தனுக்கும் தெரியாமல் ஆனாலும்.... நீ யார்?? என்று அதாவது அனைத்தும் சரியாகி அதாவது கையை பிடித்தாயே நீ அனைத்தும் சரியாகி விட்டது என்று

ஆனாலும் அறிந்தும் கூட எவை என்று புரிய  புரிய ஆனாலும் உண்மைதனை கூட நிச்சயம் பின் அதாவது கையை அதாவது நம் மலை மேலே செல்லலாம் என்று!!

ஆனால் அவந்தன் மேலே செல்ல மாட்டேன்... என்று பிடிவாதம் பிடித்தான்..

யான் நிச்சயம் முருகனை காட்டுகின்றேன் என்று முருகனே!!!! நடத்திய லீலையப்பா!!!!

அறிந்தும் அறிந்தும் இது கூட எதை என்று அறிய அறிய அப்பனே சில வருடங்களுக்கு முன்பே தான் நடந்தது அதாவது அப்பனே அறிந்து அறிந்து எவை என்று கூட

இதனை உணர்த்தியும் கூட உண்மை நிலை புரியாமலும் கூட இதனால் பின் அதாவது முன்னே சென்றான் முருகன்... கையை இழுத்தான்.... அப்பொழுது இரண்டு அடிகள் முதுகில் பலமாக படிந்தது!!!!

அறிந்தும் உண்மைதனை கூட அறிந்தும் இவன் சிந்தித்தான்....

அப்பொழுதுதான் இவந்தனுக்கு எவை என்றும் உணர்ந்தது...


ஆனாலும் முதுகில் பட்ட எவை என்றும் கூட புண்!!! ஆனாலும் உணர்ந்து விட்டான்.... முருகா!!!! என் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் இவன் முருகன் என்றே!!!! அறிந்தும் கூட...

ஆனாலும் இவன் சொல்லவில்லை அறிந்தும் கூட


ஆனாலும் முருகன் எவ்வளவு பெரிய மனிதன் அறிந்தும் மனிதன் வடிவில் எதை என்று புரிய  புரிய நினைத்துக் கொண்டான்!!

யான் முருகன் என்று தெரிந்து கொண்டான் இவன்!!! ஆனாலும் தெரிந்து கொண்டே என் பின்னே!!... வருகின்றானே என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் கூட

சரி என்று!!!!

முருகனுக்கும் தெரியும் இவந்தனுக்கு தெரியும் என்று!!!!

அவந்தனுக்கும் இவன் தான் முருகன் என்று தெரிந்து விட்டது...

ஆனால் அமைதி பொறுத்தருளினான்!!!!

ஆனாலும் அதிக அளவில் அறிந்தும் உண்மை நிலைகளை கூட இன்றளவும் கூட தெரியாமலும் கூட பின் அறியாமலும் கூட மனிதர்கள்
இதனால் கண்டிட்டாலே அய்யோ என்றெல்லாம் முருகனை என்றெல்லாம் இவ்வாறு தரிசித்து அவ்வாறு தரிசித்து என்றெல்லாம்!!!....


ஆனாலும் இவன் மௌனம் காத்து!!! ஆனாலும் அவந்தனை கையைப் பிடித்து மலை மீது ஏற !!!!

அப்பொழுது காவலாளிகள் நிச்சயம் அறிந்தும் உண்மை நிலைகளை கூட இவன் திருடன்... இவனை அங்கே அடைத்து வைத்தோமே ஆனாலும் அறிந்தும் உண்மைநிலை தெரியாமல் இவந்தன் பின் அதாவது எதை என்று அறிய அறிய.... இவந்தனும் (இளைஞனாக வந்த முருகனையும்) திருடன் தான்!!!!! இவர்கள் இருவருமே கூட்டாளிகள் தான் என்று அறிந்து பல வகையிலும் கூட ஒன்று சேர்ந்து பின் நெருங்கி விடக்கூடாது என்று கூட!!!!


இதனால் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட அனைவரும் வந்து விட்டனர்!!!! இவர்கள் இருவரும் இவர்கள்தான் திருடர்கள் எதை என்றும் புரிய  புரிய என்றெல்லாம்

ஆனாலும் பின் வீணானதை வீணானதவற்றை சொல்லிச் சொல்லி இதனை அறிந்தும் கூட

 ஆனாலும்........ தன் ரூபத்தை காட்டினான் முருகனே!!!

அறிந்தும் உண்மைதனை கூட

அப்பொழுதுதான் அனைவருக்குமே புரிந்தது எதை என்றும் அறிய அறிய சாதாரண மனிதனுக்கும் கூட முருகன் இரங்குவான் அறிந்தும் கூட!!! கலியுகத்தில் நிச்சயம் எதை என்று புரிய  புரிய நீங்கள் எங்கிருந்தாலும் பின் முருகா என்று அன்பாக அறிந்தும் கூட  பின் எதை என்று கூட பக்தியை பின் செலுத்த செலுத்த முருகன் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய

இதனால் அவனை அழைத்துக் கொண்டு அறிந்தும் கூட அறிந்தும் மேலே சென்று அறிந்தும் கூட பல வழிகளில் கூட அறிந்தும் உண்மைதனை அங்கேயே பின் இளைஞன் வடிவில் ஏதாவது அதாவது அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அவ் பக்தனும் முருகா இது போதும் என்று அங்கேயே தன் உயிரை மாய்த்தான்.. அறிந்தும் கூட


இப்பொழுது கூட அவ் ஆன்மா அங்கே தான் இருக்கின்றது உண்மையான பக்தி உள்ளவனை கூட அமைதியாக தியானம் செய்பவனை கூட நிச்சயம் இவர்களுக்கு எல்லாம் பல உதவிகள் கூட புரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அறிந்தும் அறிந்தும் கூட


இன்னும் இன்னும் பல ஞானியர்கள் இப்படித்தான் பின் வாழ்ந்து வருகின்றார்கள்

இதனால் உண்மையான பக்தியும் பின் நிச்சயம் அன்பையும் காட்டினால் அவ் ஞானியர்களே வந்து நிச்சயம் உயர்த்தி விடுவார்கள்...இவை தன் நிச்சயம் கலியுகத்தில் நடக்குமப்பா...


அப்பனே அதிகாலையிலே அறிந்தும் அறிந்தும் கூட குழந்தை அதாவது அறிந்தும் கூட நான்கு மணி அளவில் அப்பனே கீழிருந்து மேலே.... ஓடோடி அப்பனே அறிந்தும் அறிந்தும் குழந்தை ரூபத்தில் அப்பனே அறிந்தும் கூட ஓடோடி வருவானப்பா!!!

அதன் பின்னே அவை என்று கூற சில சிறுவர்களும் கூட இவனிடத்தில் ஓடோடி வருவார்களப்பா... இணைந்து விளையாடுவார்கள் அப்பா நான்கு மணி அளவிற்கே..

அப்பனே அப்பொழுது நிச்சயம் சென்று பின் வந்து கொண்டே இருந்தால் அப்பனே பின் நிச்சயம் முருகன் யாராவது கண்களில் அறிந்தும் அறிந்தும் கூட படுவான் அப்பா (முருகன் தரிசனம்)
இது நடந்த வண்ணமே இருக்கின்றது அப்பனே

முருகனும் பார்ப்பானப்பா!!!


ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் இடும்பன் இங்கு தான் அறிந்தும் கூட ஓய்வு எடுப்பானப்பா!!!!

அறிந்தும் எதை என்று கூட அரை இரு நொடிகள் அப்பனே அதாவது அப்பனே ஒரு நொடி என்கின்றார்களே எதை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது முருகன் அங்கும் இங்கும் பார்ப்பானப்பா!!!!!!

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஒரு தகவல் இங்கு முருகன் அரை வினாடி ஒரு வினாடி பார்ப்பார் என்று குருநாதர் குறிப்பிடுகின்றார் மனிதர்களை இறைவன் பார்ப்பது இந்த வினாடிகளில் நமக்கு புண்ணியம் இருந்தால் உண்மையான பக்தி இருந்தால் இறைவனுடைய அருட் பார்வை நம் மீது விழும். 


இந்த அரைநொடி ஒரு நொடி அருட்பார்வை குறித்து ஒரு ஆலயத்தில் பூஜை செய்து வரும் பூஜாரிக்கு செய்த உபதேசத்தில் குருநாதர் கூறியது 


அந்த சிவன் ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷ கால வேளையிலும் ஈசனுக்கு மற்றும் நந்தி பெருமானுக்கு பிரதோஷ பூஜைகள் நடைபெறும் இதில் ஊரில் உள்ள சில மனிதர்கள் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அப்படி பக்தர்களும் மனிதர்களும் கலந்து கொள்ளும் வரை சிறிது காத்திருந்து காலதாமதமாக பிரதோஷ பூஜை செய்து கொண்டிருந்தார் அவர். 


நாம் செய்யும் அனைத்தையும் சித்தர்கள் கவனத்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாகவே இந்த சம்பவமும் அமைந்தது.

ஒருமுறை அந்த பூசாரிக்கு ஆலயத்தில் வைத்து குருநாதர் வாக்குகள் நல்கும்பொழுது அப்பனே 

 பிறருடைய தோஷத்தை போக்குவது தான் பிரதோஷம். 

அப்படி பிரதோஷ கால வேளையில் ஈசன் அனைத்து இடங்களுக்கும் அரை வினாடி பொழுது வந்து செல்வான் அப்பா அப்பொழுது அனைவரையும் பார்ப்பான் அப்பா. ஈசனுக்கு பல வேலைகள் இருக்கின்றது அப்பா. 

அப்படி பிரதோஷ கால வேளையின் போது இங்கு வந்த பொழுது  ஈசன் முகம் சுளித்தானப்பா.... மனிதர்களுக்காக காத்திருக்க வேண்டுமா??? என்று இதனை காகபுஜண்டனும் அறிந்து கோபப்பட்டான் அப்பா!!! சிறுவனாக அறியாமல் இருப்பதால் மன்னித்து விட்டான் அப்பா!!!


இறைவன் வந்து செல்வது அரை வினாடிப்பொழுது தான் அந்த நேரத்தில் உண்மையாக இருக்க வேண்டும் அப்பனே உண்மையான பக்தியும் புண்ணியம் இருக்க வேண்டும் அப்பனே என்று உபதேசங்கள் செய்தார் செய்தார்!!!

இது நம் அனைவருக்கும் பொருந்தும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறையும் கூட 


இறைவன் நம்மை பார்க்கும் அரை வினாடி ஒரு வினாடி பொழுதை நாம் பாக்கியம் என கருதி உண்மையான பக்தியும் புண்ணியமும் செய்து கொண்டே வந்தால் குருநாதர் காட்டும் வழிமுறைகளை பின்பற்றி வந்தாலே அந்த இறைவனின் அரை வினாடி ஒரு வினாடி பார்வை நம் மீது கண்டிப்பாக விடும் இதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வோம்)










புண்ணியம் எதை என்று கூட யாருக்கு மிகுதியாக இருக்கின்றதோ அவர்கள் கண்களுக்கு எதை என்று கூட முருகன் பார்த்து விடுவானப்பா பின் அனைத்தும் கொடுத்து விடுவான் அப்பா... எதை என்றும் அறிய அறிய

இப்பொழுதும் கூட அப்பனே நன்மைகளாக தான் முடியும் அப்பா அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே இறைவன்  எங்கிருக்கின்றான் என்று அப்பனே யாங்கள் சொல்ல தயாராக இருக்கின்றோம் அப்பனே

ஆனால் மனிதன் ஏற்றுக் கொள்ள எவை என்று புரிய புரிய அதனால்தான் அப்பனே நிச்சயம் துன்பம் கொடுத்து அப்பனே எதை என்று அறிய அறிய பிறகு இன்பத்தை கொடுத்தால்தான் அப்பனே நிச்சயம் நீடூழி நிற்கும் அப்பா பக்திகள் அப்பனே

இவ்வாறு இன்னும் இன்னும் ஞானிகள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே..அவ் ஞானியும் அப்பனே அனுதினமும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இரவினில் அதாவது சரியாக 9:00 மணிக்கே அப்பனே எவை என்றும் அறிய அறிய மலை மீது ஏறுவானப்பா.... முருகன் மடியில் படுத்து இருப்பான் அப்பா மீண்டும் கீழே இறங்குவான் அப்பா

அப்பனே பிள்ளையான்(கணபதி சன்னதி) இருக்கின்றானே அங்கு தவங்கள் செய்வானப்பா!!! அறிந்தும் கூட இவந்தனுக்கு இதுதான் வேலையப்பா!!!

அப்பொழுது செல்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய செல்வோமானால் அப்பனே நிச்சயம் சில நிலைகள் அவன் ஏற்றுக் கொள்வானப்பா!!! இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!

இன்னும் ஞானிகள் பற்றி எடுத்துரைக்கின்றேன். அப்பனே இதனால் இவந்தனை எதை என்று அறிய அறிய அப்பனே சரியான முறையில் பக்திகள் செலுத்தி அப்பனே அவந்தன் அப்பனே உங்களைப் பார்த்தாலே எதை என்று அறிய அறிய போதுமப்பா

அப்பனே பல வினைகள் அதாவது அறிந்தும் அறிந்தும் கூட முதலில் அறிவு ஏற்படும் அப்பா சில நிலைகள் தீரும் அப்பா அறிந்தும் உண்மை நிலை கூட அப்பனே சில பழி சொற்களுக்கு ஆனவர்கள் கூட எதை என்று அறிய அறிய அப்பனே.... விலகி நல் எவை என்று புரிய  புரிய இதனால் இறைவனே அப்பனே எதை என்று அறிய அறிய பல ஆலயங்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே அழைத்துச் செல்ல அவனும் உதவிடுவானப்பா... இதை என்று அறிய அறிய


சிவஞானி திருநாமம்


அவனும் பின் சிவஞானியே என்று அறிந்தும் கூட இவன் நாமத்தைக் கூட அப்பனே கடைசியில் இப்பொழுது கூட வலம் வந்து கொண்டே இருக்கின்றானப்பா அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் ஆசிகள் அப்பனே இதனால் பல ஆன்மாக்கள் அப்பனே இன்னும் எதை என்று கூட வெற்றி எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் எதை என்று கூட செல்வங்கள் கூட!!!!


 அப்பனே ஒவ்வொரு ஞானியும் கூட அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்களப்பா... அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் அப்பனே எவை என்று கூட எப்பொழுது எங்கு அமைவார்கள் என்பதை எல்லாம் யான் அறிவேன் அப்பனே நிச்சயம்... பார்த்தால் அப்பனே வினை தீருமப்பா... வெற்றி உண்டாகும் அப்பா  அப்பனே இன்னும் இன்னும் ஞானங்கள் அப்பனே மனிதன் பெறுவதற்கு யாங்கள் வழியும் வகுப்போம் அப்பனே நன்முறைகளாக

ஆசிகள் எம்முடைய ஆசிகள் அப்பனே யானும் அப்பனே பின் உங்களைப் பார்த்தேன் அப்பனே நல்விதமாக இன்றளவிலும் கூட ஆசிகள் கந்தனுடைய ஆசிகள் அப்பனே பரிபூரணம் பரிபூரணம் அப்பனே ஆசிகள் ஆசிகளப்பா இன்னும் வாக்குகள் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. 🙏 சிவ சிவ 🙏 அண்ணாமலையார் சன்னதியில் இந்த வாக்கை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. எல்லாம் சிவன் அருள்... அகத்தியா நன்றி 🙏

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    NANRI AYYANE

    ReplyDelete
  3. மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete