வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!
இது 24/7/2024 அன்று திருவண்ணாமலையில் வைத்து குருநாதர் கூறிய உத்தரவு.
"என் பக்தர்கள் அனைவரும் இவ் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் ஏதேனும் அம்பாள் ஆலயத்திற்கு சென்று தேவிக்கு வஸ்திரங்களை வழங்கி அன்னதானம் செய்யச் சொல் அப்பனே " என்றார்!
தேவியின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்து மாற்றங்கள் ஏற்படும் அப்பனே! என்று வாக்குகளில் குறிப்பிட்டுள்ளார்
நிறைய அடியவர்கள் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு வாக்குகள் கேட்பதற்கு முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் சேர்த்து இதை அனைவருக்கும் தெரிவித்து விடு அப்பனே என்று குருநாதர் வாக்குகள் தந்துள்ளார்
அதாவது வாக்குகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் குருநாதருடைய பக்தர்கள் குருநாதருடைய வாக்குகளை வாங்கி அதன் தொடர்ச்சியாக குருநாதர் கூறியவற்றை செய்து வருபவர்களும் அனைவரும் இதை செய்ய வேண்டும். முதலில் இதை செய்து வரச்சொல் அதன் பின் எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என குருநாதர் வாக்குகளில் கூறி இருக்கின்றார். எனவே அனைவரும் இதை செய்து வர வேண்டும் ஓம் அகத்தீசாய நமக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அகத்தீசாய நம! நன்றி அய்யா 🙇♂️🙏
ReplyDeleteதேவியானவள் மும்மூரித்திகளால் போற்றபடுகிறாள் என்பது அறிந்ததே
ReplyDeleteஅம்மன் உடனுறை சுவாமி என்றும் அனைத்து சிவ அம்மன் கோவில்களிலும் உள்ளது
தேவி கருமாரி அம்மன் தனிக் கோவில்களும் என்றும் உள்ளது
அம்பாள் என்று குரு நாதர் குறிப்பிடுவது எந்த கோவில் என்று அறிய ஆவல்
Thank You.
ReplyDeleteIs it a must to do only in Amman temple or Amman in any temple, Siva Vishnu, and annadhanam in the same temple or anywhere else. Because in some temples, no such is adapted.
Kindly clarify. Thank You once again.
நன்றி இறைவா, ஒரு சிறு சந்தேகம்.. அம்பாள் ஆலயம் என்றால் காளியம்மன், மாரியம்மன் ஆலயங்களா?
ReplyDeleteமானிட ஜென்மங்கள் திருந்தி வாழ வைக்க வந்த அருள் பெரும் ஜோதியை போற்றி உலகை செயல்பட வைக்கும் விஞ்ஞானியே போற்றி மஹா கஞ்சர்களையும் தர்மம் செய்ய வைப்போமே போற்றி பொதிகை மலை பொக்கிஷம் போற்றி
ReplyDeleteஉத்தரவு ஐயனே... நிறைவேற்று ஓம்... நன்றி
ReplyDeleteOm Sri lopamudra Samantha Agasthiar padamasaranam
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteவணக்கம் அகத்தியர் அடியவர்களே
ReplyDeleteகுருநாதருடைய வாக்குகளை தொடர்ந்து படித்துக் கொண்டும் வந்தும் உங்களுக்கு சந்தேகம் வருகின்றதா???
இறைவன் ஒன்றுதான் என்ற தத்துவத்தை எத்தனை வாக்குகளில் கூறினார்கள் நம் குருநாதர்
காமாட்சி மீனாட்சி காசி விசாலாட்சி என தேவியின் ரூபங்கள் ஒன்று என்று எத்தனை வாக்குகளில் சொல்லியிருக்கின்றார்
அம்பாள் ஆலயத்திற்கு சென்று வஸ்திரம் சாந்தி வழிபாடு செய்து விட்டு இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள் வெள்ளிக்கிழமைகளில் என்று சொன்னால் அனைத்து அம்பாள் ஆலயத்திற்கும் சென்று இது மாதிரி வழிபட வேண்டும் என்று தான் அர்த்தம்
பிரத்யோகமாக அந்த ஆலயத்திற்கு செல் இந்த ஆலயத்திற்கு செல் இந்த அம்பாளை போய் தரிசித்து வா என்று குருநாதர் சொல்லவில்லை வாக்குகளை முழுவதும் உணர்ந்து படிக்க வேண்டும்
ஆடி மாதம் என்றாலே அன்னை தேவி பரமேஸ்வரி அம்பிகையின் திருவிழா கால மாதம் இதை யாராலும் உங்களால் உணர முடியவில்லை யா???
மாரியம்மன் காளியம்மன் அம்பிகை பரமேஸ்வரி என பெண் தெய்வங்கள் குடியிருக்கும் அனைத்து ஆலயமும் அம்பாள் ஆலயம் தான் புரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
மிக்க நன்றி ஐயா...
ReplyDelete