கந்தவடிவேலன், முருகப்பெருமான் 9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு:-
இறைவா!!!!! நீயே அனைத்தும்.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே, அகத்திய பக்தர் அடியவர் ஒருவருக்கு குருநாதர் உத்தரவின் பெயரில் வாக்குகள் தருவதற்கு உத்தரவு கிடைத்து. அந்த அடியவருக்கு ஜீவநாடி வாக்குகள் தரும் பொழுது முருகப்பெருமான் வந்து 9/7/2024 அன்று வாக்குகள் நல்கினார். அப்பொழுது பொதுவான வாக்குகளையும் வழங்கினார். அதன் தொகுப்பு :-
பிரபஞ்சத்தை அழகாகக் காத்து அருளக்கூடிய தாயையும் , தந்தையும் பணிந்து ஈகின்றேன் மகனுக்கு குமரனவனே.
அப்பப்பா !!!! அகத்தியன் அன்பு மிகப் பெரியது. அன்பின் உருவமாகவே இயங்கி, இயங்கி அறிந்தும் கூட.
இதனால் அப்பனே , அப்பனையும் ( ஆதி ஈசனாரையும் ) கூட மிஞ்சிய அறிந்தும் உண்டோ இவ்வுலகத்தில்?
இதை அறியாத பலர் இன்னும் மூடர்களாகவே திரிந்து திரிந்து என்னவென்று கூற?
பின் அறியும் நிலைக்குச் செல்லும் இவ் நிலை இன்னும் மாயத்தைப் போக்கிப் போக்கி , வருகின்ற காலம் தன்னில் கூட மனிதனுக்குத் தெரியாது.
தெரியாது என்னவென்று எப்படி வாழ்வது என்று கூற. இதனால் தான் தான் பின் பக்தர்கள் என்பதை எல்லாம் பின் அறிந்தும் கூட யான் அவை செய்கின்றேன். இவைச் செய்தால் இப்படி என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் செப்புவார்கள். ஆனாலும் அது கூட பொய்யாகப் போகும் இவ்வுலகத்தில்.
( அகத்திய மாமுனிவர் வாக்கு:- சித்தன் அருள் - 1489 - அந்தநாள்>>இந்த வருடம் 2023 >> கோடகநல்லூர் பூஜை அகத்தியர் வாக்கு!
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, இவ்வுலகம் அறிந்தும் கூட பொய்யை, உண்மையாக்கும். எவை என்று புரிய புரிய, இவ்வுலகம், உண்மையை பொய்யாக்கும்! இதுதான் உலகமப்பா! )
மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. அப்படி வாழாமல் பின் அவை, இவை நிச்சயம் செய்து கொண்டிருந்தாலே ஏது இவ்வுலகத்தில் நிம்மதி?
இதனால்தான் அவனவன் பின் மாற்றத்தை அவனவன் அறிந்தும் அறிந்தும் கூட , தந்தையும் தாயும் ( ஆதி ஈசனாரும், அன்னை பார்வதி அம்பாளும் பல வாக்குகள் உரைத்துள்ளனர் ) நிச்சயம் அறிந்தும் உண்மைதனைக்கூட பல விளக்கங்கள் இன்னும் பின் விளக்கி உரைத்தாலும் அதன் பின்னும் கூட ஏன் மனிதன் திருந்திய பாடு இல்லையே?
திரிந்து பின் அறிந்து பின் என்னவென்று கூறுவது ஞானி?
( ஞானி என்பவர் எப்படி இருக்க வேண்டும்?)
ஞானி என்பது அதாவது ஒழுங்கான பக்தன் தன்னைத்தான் வெளிக்காட்டியே, வெளிக்காட்டியே ஆனால் ( ஞானியோ ) நிச்சயம் வெளிக் காட்டுவதும் இல்லை. அறிந்தும் அதாவது தன்னை அறிந்தே தன்னை பக்திக்குள் நுழையும் வண்ணம், தன்னை அறிவதாலே நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும்.
( பல அடியவர்களை காத்து அருளும் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் , பிரம்ம தேவரிடம் நடந்த உரையாடலில் )
( அகத்திய மாமுனிவர் தன் பக்தர்களுக்குக் காட்டும் அன்பினால் ) பிரம்மாவும் தலை குனிந்து அகத்தியனே ஏன் இப்படி? கலியுகத்தில் அநியாயங்களும், அக்கிரமங்களும்தான் நடக்க வேண்டும். இப்படித்தானே அனைவருமே பேசிக்கொண்டது. ஏன் அறிந்தும் கூட இப்படி எல்லாம் பக்தர்களைக் காப்பாற்றுகின்றாய் என்று.
அறிந்தும் இவை என்றும் புரியப்புரிய ஆனாலும் பின் அகத்தியனும் கூட அறிந்தும் பிரம்மாவே!!!!! நிச்சயம் நல்லோர்கள் இருக்க வேண்டும். நிச்சயம் சரிதான். இவ்கலியிகத்தில் பல தொந்தரவுகள் பல பிரச்சனைகள் நடக்க வேண்டியது பின் உண்மைதான். இவை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான்.
ஆனாலும் எனை நம்பினோர் நிச்சயம் அறிந்தும் கூட யானே சில அளவு நிச்சயம் அதாவது பின் செய்திட்டாலும் , சில தடைகள் வந்திட்டாலும், சில கண்டங்கள் ஏற்படுத்தினாலும் ஆனாலும் பின் அகத்தியன் பொய் என்று சொல்லிவிட மாட்டார்களா என்ன? என்றெல்லாம்.
அதனால்தான் இதனால் சில நன்மைகள் ஏற்படவேண்டும் மக்களுக்கு. அதனால்தான் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் சிறிதளவே (தண்டனை) கொடு என்று. ஆனாலும் பின் அறிந்தும் அறிந்தும் எவை என்றும் புரியப் புரிய பின் ( பிரம்ம தேவரும் ) “மாமுனிவரே!!!!!!!!! உன் கருணைக்கு எங்கு, ஏது என்று அறிய அறிய…”
இவ்வுலகத்தில் மக்கள் அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் , பின்னடா அறிந்தும் கூட ஏன் எதற்கு மனிதன் உண்மைதனை இக்கலியுகத்தில் ஏற்கமாட்டான் என்பதைக்கூட. இதனால்தான் பின் நிச்சயம் பின் அகத்தியனும் கூட பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தண்டனைகள் வருங்காலங்களில் அதிகப்படுத்துவான். அவ்வளவுதான் நிச்சயம்.
இதிலும் பின் பல மாற்றங்கள் உண்டு இவ்வுலகத்தில். இதைத்தன் எடுத்துரைக்க எடுத்துரைக்க இப்பொழுதில்லை. ஆனால் மனிதன் அழிவு நிலைக்குச் செல்லும் பொழுது ஏதாவது உண்மை கிடைக்குமா என்று. ஆனாலும் பக்தி இப்பொழுதெல்லாம் சிறிது சிறிதாகப் பொய்யாகி பொய்யாகி கடைசியில் ஒன்றும் நடக்காமல் எங்கு உண்மை? எங்கு உண்மை ? என்று தேடுவது நிச்சயம் உண்டு.
( ஏன் சித்தர்கள் பல வாக்குகள் இப்போது செப்பிக்கொண்டுள்ளார்கள்?)
இதனால்தான் சித்தர்கள் முன்கூட்டியே அறிந்து எவை எல்லாம் மனிதனுக்குப் பயன்படும் என்றென்று அறிந்தும் கூட இதனால் அவை எவை என்று அறிய சித்தனுக்கு மிஞ்சிய இங்கு பின் ஔசதமும் இல்லை. சித்தனுக்கு மிஞ்சிய இங்கு ஏதும் இல்லை. அறிந்தும் எதை என்று அறிய என் தந்தையும் ஓர் சித்தன். அறிந்தும் இவைதன் புரியாமல் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். வருங்காலம் அறிந்தும் என்ன ஏது? எதை? என்று புரியாமலும் கூட.
இதனால்தான் சித்தர்கள் பின் அலைந்து, திரிந்து இப்படி வாழக் கற்றுக்கொள். வாழந்துவிட்டால் பின் நன்று என்றெல்லாம் தெரிவித்து..
ஆனால் ( இவ் வாக்குகளை ) இதை படிப்பதற்கும் அதாவது காதால் கேட்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும். அப்புண்ணியங்கள் முதலில் வளர்த்துக்கொண்டால்தானே? ஆனால் மனிதனோ வளர்த்துக் கொள்வதில்லை. ஆம் எண்ணப்படி ( புண்ணியங்கள் செய்யாமல் பணத்தின் ) பின் போயிற்று மீண்டும் தோல்வியுற்று ( கர்மாவை சேரத்துக் கொண்டு ) மீண்டும் ( இறைவனிடத்தில் ) வருகின்றான். என்ன பயன்?.
நிச்சயம் பின் தந்தையும் கூட அண்ணாமலைக்குப் பின் நிச்சயம் உண்ணாமலை தாய் தந்தையே அறிந்தும் அறிந்தும் அவ் இருப்பிடம் ( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் முன்பு உரைத்த வாக்கில் பூலோக சொர்க்கம் - திருவண்ணாமலை என்று அருளியுள்ளதை மீண்டும் நினைவு படுத்துகின்றோம் ) பின் கர்மாக்களைப் போக்கும். போக்கும் என்பது ஏன் எதற்கு என்றெல்லாம் பின் வரும் காலங்களில் அகத்தியன் தெரிவிப்பான்.
அப்பப்பா!!!!! நிச்சயம் எங்கள் கருத்துக்களைக் கேட்பதற்கும் நிச்சயம் புண்ணியங்கள் செய்திடல் வேண்டும்.
ஆனால் ( புண்ணியங்கள் செய்துவிட்டு ) உடனடியாக ( பலன் ) கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் , அறிந்தும் எதிர் பார்த்து பின் எதையும் செய்யக் கூடாது. எதையும் செய்யக் கூடாது.
எதிர் பார்த்துச் செய்தால் நிச்சயம் அறிந்தும் பின் சித்தர்கள் எவை என்று அறிய அறிய பின் ஒதுங்கி ஓடு அறிந்தும் இதை என்றும் புரிய இதனால் பின் அதாவது இவ் நரகத்தில் ( பூமியில் ) பிறந்துவிட்டாலே பின் நரகத்துக்கான கட்டுப்பாடுகள் இதை, அடி அறிந்து எவை என்று புரிந்தும் கஷ்டங்கள் பட்டுப் பட்டு எழவேண்டும் என்பது விதி.
இவைதன் வகுக்கப்பட்டது ஏற்கனவே. அவ்வாறு நடந்திடும் நிச்சயம் ஆனாலும் இன்றளவோ நிச்சயம் இன்னும் கூட உருவாக்குவான் புதுப் புது தலத்தை ( ஆலயங்களை ) எல்லாம். ஆனால் உண்மையானவை ( இறைவன் ) அங்கிருக்கின்றதா என்பதால் நிச்சயம் இல்லை.
( காசி ரகசியம் - அகத்திய மாமுனிவர் ஆராய்ச்சிக் கூடம்)
அறிந்தும் இதனால் நிச்சயம் பல பல கிரகங்கள் பற்றியும் கூட ஆராய்ச்சிக்கள். பல நட்சத்திரங்களைப் பற்றியும் கூட ஆராய்ச்சிகள். அகத்தியன் செய்தான் காசி தன்னிலே. ஈசன் நிச்சயம் அனைவருக்குமே தெரிவிப்பான். இதைத் தன் நிச்சயம் வியந்து பார்க்கும் நிச்சயம் இன்னும் காலங்கள் போகப் போக.
( திருச்செந்தூர் ரகசியங்கள் )
அப்பப்பா!!!! அறிந்தும் இதைத் தன் இப்பொழுது செந்தூர் ( திருச்செந்தூர் ) அறிந்தும் கூட ஏன் அங்கு பின் யான் அங்கு போய் நின்றேன் என்றெல்லாம் நிச்சயம் தெரியாது மக்களுக்கு. இதை அகத்தியன் எடுத்துரைத்தால்தான் புரியும். யானே என்னைப் பற்றி சொல்வது ஏன் எவை அறிந்தும் கூட. இதனால் எதற்கு அங்கு சென்றேன் ? என்பவை எல்லாம் நிச்சயம் அகத்தியன் தெரிவிக்கும் பொழுது நீயும் அறிவாய்.
( பழனி ரகசியங்கள் )
அதாவது அறிந்தும் பின் எனைதனைக்கூட எப்படி பின் பழனி தன்னில் பின் போகனுமே ( போகர் சித்தர் ) அமைத்தான் என்று. அதாவது எனைப் பார்த்துத்தான் அவன் அப்படியே அமைத்தான்.
முருகா!!!!!! அறிந்தும் இதைத்தன் உணர்ந்தும் கூட உன் தாயின் அருளோ அருள். தாய்தான் நிச்சயம். அதாவது உன்னைப் போன்றே யான் வடிவமைக்க வேண்டும். நீ எந்தக் கோலத்தில் நிற்கின்றாயோ இங்கு யான் பின் அறிந்தும் கூட செய்கின்றேன் என்று. அதாவது யான் நின்றேன். நிச்சயம் அப்படியே வடிவமைத்தான். இதை என்று பொருட்படுத்தாமல்.
ஆனாலும் இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஏன் அங்கு ( பழனி ) அமைக்க வேண்டும் என்பது யாராவது யோசித்தீர்களா? என்று அறிந்தும் கூட யோசிப்பதில்லை. ஆனால் ஓடோடி வருவான் மனிதன். அதனால்தான் சித்தர்கள் தெரிந்து கொண்டு வாழுங்கள். தெரிந்து கொண்டு வாழுங்கள் என்பவை எல்லாம் அறிந்தும் கூட.
ஆனாலும் இப்பொழுதும் அதே உருவத்தில் ஓர் நாளில் யான் நிச்சயம் அதாவது ஓர் மாதத்தில் நிச்சயம் ஓர் நாள் கீழே இறங்கி வருவேன் அங்கு. ஏன்? எதற்கு? நிச்சயம் என் அன்பானவன் அறிந்தும் கூட என் மீது பாசத்தைப் பொழிந்தவன் ( சித்தர் போகர் ) பின் கீழே இருக்கின்றான் அங்கு வருவேன்.
அனைத்தும் யான் சொல்லிவிட்டால் ஏது எதை என்றும் புரியப்புரிய இதனால் ஏன் எதற்கு அகத்தியன் பின் வாக்குகள் ஏன் செப்பிக்கொண்டு வந்து வந்து?
முதலில் தெளிவைப் பெற்றால் அனைவரையும் நேரில் தரிசிக்கலாம். அவ்வளவுதான். தெளிவு பெறாவிடில் நிச்சயம் எவரையும் தரிசிக்க முடியாது. பின் செப்பினேன் இங்கு.
அறிந்தும் இதனால்தான் பின் ஓடோடி வருகின்றான் இறைவனைக் காணக் காண. ஆனால் உண்மை தெரியவில்லையே. அதனால்தான் உண்மை தெரிவித்து பின் அகத்தியன் நிச்சயம் காட்டுவான் அறிந்தும் அறிந்தும். இன்னும் காலங்கள் சரியில்லாத எதை எதையோ இன்னும் தலை கீழாகும் இவ்வுலகம் அறிந்தும் கூட.
( திருச்செந்தூர் ரகசியங்கள் )
எதை என்றும் புரிந்தும் கூட இன்னும் அலைகள் பின் வந்து கொண்டே. ஆனாலும் யானும் தடுத்து நிறுத்துகின்றேன். நில்லுங்கள்!!!!!! அவ்வளவு கோவமா என்று மனிதன் மீது. பின் அறிந்தும் அறிந்தும் இதனால் சுற்றிச் சுற்றி ஏன் எதற்கு என்று ஒன்று மனிதன் திருந்துவானா இல்லை இயற்கை திருந்துமா? அறிந்தும் கூட நிச்சயம் மனிதன் திருந்த மாட்டான். நிச்சயம் இயற்கையும் திருந்தப்போவதில்லை. இதிலிருந்து புரிகின்றதா? பின் சொல்லடா
பின் மகனே. ஏன் இன்னும் இன்னும் வாக்கு வருகின்றபோது புரியும். புரியும் பொழுது பின் தெரியும்.
(2004ம் வருடம் டிசம்பர் மாதம் சுனாமி தமிழ் நாட்டைத் தாக்கியபோது, கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கோயிலில் கடல் நீர் புகவில்லை என்ற தகவல் அடியவர்கள் அனைவரும் அறிந்ததே.)
ஆனால் மனிதன் இப்படித்தான். இங்கு பிறந்தோம். அங்கு வளர்ந்தோம் மீண்டும் எங்கும் பின் சாகுகின்றோம் என்பவை எல்லாம் அறியாமல் பின் திரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றும் நடக்காது. பிரச்சனைகள்தான் அதிகமாகும். அதிகமாகும் வரும் காலத்தில் பின் அகத்தியனைப் பின் வணங்கினாலும், அகத்தியனே என்று அழைத்தாலும் ஏன் எதற்கு என்றெல்லாம் அகத்தியன் போலத் திரிந்து வாழ்ந்தால் ( பல ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று ) நிச்சயம் அவ் கஷ்டங்கள் வராது என்றுதான் அகத்தியன் கூறுகின்றான்.
ஆனால் அறிந்தும் கூட மனித மூடர்களோ பின் நம்பிக்கை வைத்துள்ளான் வாழ்வோம், வாழ்வோம் என்று. ஆனாலும் பின் யாங்களோ அறிந்தும் கூட அதாவது சித்தர்களோ பாவம் பாவம் என்று. அதிலும் கூட அகத்தியனோ பாவமடா மனிதன். அறிந்தும் கூட ( தன் உயர் சித்த நிலையில் இருந்து மனிதர்களுக்காக ) இன்னும் கீழிறங்கிக் கீழிறங்கி பின் என் தந்தையும் “ அகத்தியனே, உன்னால் மனிதனைத் திருத்த முடியாது “ என்றெல்லாம்.
ஆனாலும் ( அகத்திய மாமுனிவரோ ) சபதம் ஏற்று அறிந்தும் கூட நிச்சயம் , பின் “ஈசனே!!!!! ஒரு வாய்ப்பு தாரும். அறிந்தும் கூட யான் திருத்துகின்றேன்.”
(ஈசனார்:-) “பின் அப்படியும் திருந்தவில்லை என்றால்?”
(அகத்திய மாமுனிவர்:-) “நிச்சயம் திருந்துவான். பின் மனிதன் என்றெல்லாம்”
(கந்த வடிவேலன் :-) இன்னும் நிச்சயம் அகத்தியன் தன் பெயரை எங்கெங்கு அழைத்துச் செல்ல எப்படி எங்கெல்லாம் பின் எங்கெல்லாம் அகத்தியன் அதாவது
“”””””””வருங்காலத்தில் அகத்தியன் என்ற பின் சொன்னாலே பாவம் போகும் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அதனையும் ஏற்படுத்துவான் அகத்தியன்.””””””
நிச்சயம் பின் அன்பு , கருணை இவ்வுலகத்தில் நிச்சயம் தடுமாறும் பொழுது நிச்சயம்
“”””””அகத்தியனுக்குப் பெயர் பின் கருணை வடிவானவனே.””””””
( நம் பூமி சுற்றல் வேகம் குறைந்துள்ளது - அதன் விஞ்ஞான ரகசியங்கள், விளைவுகள் )
அறிந்தும் உண்மைதனைக்கூட ஏன் எதற்கு இவ்வுலகம் நிச்சயம் அழிவு நிலை. அறிந்தும் அறிந்தும் இன்னும் சுற்றுகின்றது. யானும் சிறிதளவு இங்கு அகத்தியன் சொல்கின்றான் என்று யானும் சொல்கின்றேன்.
ஆனாலும் பின் அது நிச்சயம் அறிந்தும் இவ்வளவு வேகத்தில்தான் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் நலமாக இருக்கும். ஆனால் வர வர நிச்சயம் அறிந்தும் கூட பின் சுலபமாகவே அதாவது நிச்சயம் அதிவேகமாகச் சுற்றும் போது மனிதனுக்கு எவ் தொந்தரவுகளும் வராது. அவனவன் பின் நிச்சயம் உயர்ந்துகொண்டே இருப்பான். நிச்சயம் சிறிது சிறிதாக வேகம் குறையும் பொழுதுதான் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று புரிய மனக்குழப்பங்கள், இன்னும் மாற்றங்கள், அறிந்தும் கூட இன்னும் சண்டைகள், சச்சரவுகள் அதனால் இதை , நிச்சயம் அதாவது இப்புவி் தன்னை நிச்சயம் வேகமாக இயக்க வேண்டும்.
“””” அது அகத்தியனால் தான் முடியும். சொல்லிவிட்டேன்.””””
( மேல் உள்ள சுவடி வரியை ஓதும் போது , இங்கு சுவடி ஓதும் மைந்தனின் வாக்கு ஓங்கி ஒலித்தது )
அப்பப்பா!!!!!! அறிந்தும் இதனைக்கூட இன்னும் தத்துவங்கள் விளக்குகின்றேன்.
யாரும் கண்டு பிடிக்காததையும் கூட இனி நிச்சயம் பின் செப்புவான் மக்களுக்கு. அப்பொழுது புரியும். தேடி வருவான்.
அவ் ஆன்மா. ஆன்மா எதை எதை நோக்கிச் செல்கின்றதோ நிச்சயம் அது மனிதப்பிறப்பு அதாவது உடம்பெடுத்து அவ்வாறெல்லாம் செல்லும்.
அதாவது பரப்புவான். வித விதங்களாகப் பொய் சொல்லுவான் மனிதன். பின் எவ்வாறெல்லாம் பொய் சொல்ல வேண்டுமோ அவ்வாறெல்லாம் மனிதனை மயக்குவான். ஆனால் ஒன்றுமே பிரயோஷனம் இல்லை.
சித்தன் பேசுவான் என்பான். நிச்சயம் பேச மாட்டான். அறிந்தும் கூட இன்னும் கந்தன் பேசுவான் என்று. ஏனடா அறிந்தும் கூட மகனே பின் வேலைக்காரர்கள் என்று நினைத்து விட்டார்கள் சித்தர்களை????.
அறிந்தும் இதனால்தான் சுலபமாகச் சித்தர்களைக் கூட பயன்படுத்திக் கொண்டார்கள். இன்னும் அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட ( சித்தர்கள் ) வருவார்கள், அடிப்பார்கள்.
இன்னும் தெளிவு பெறுவான் ( மனிதன் ). அறிந்தும் கூட தெளிவு பெறாமல் அவை இவை என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் வீணடா. பின் வாய் அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட. ஆனால் அனைத்தும் பின் தன் சுய நலத்திற்கே. சம்பாதித்து பின் பொருட்களை வைத்துக்கொண்டு பின் கடைசியில் பார்த்தால் பொருள்கள் இல்லை அது.
“கர்மம்”
இதனால் தன் குடும்பத்தையும் அவனே அழிப்பான். பின்பு யான் அதை கற்பித்தேனே. இன்னும் ஓடுவான். அவை சொன்னானே. பின் சித்தன் பேசுவான் என்று என்று எப்படி என்று தெரியாமல் முழிப்பான். அறிந்து கூட இது நடக்கத்தான் போகின்றது இவ்வுலகத்தில்.
இன்னும் கற்றுணர்ந்து இதைச் செய்தால் பின் அவை நடக்கும் என்பதெல்லாம் பொய். எப்படி எல்லாம் பின் மனித உடம்பு நிச்சயம் அறிந்தும் பின் நடக்கின்றது, பேசுகின்றது. என்பதை எல்லாம் அகத்தியன் செயல்படுத்தும் பொழுது எங்கு எதை என்று கூற ஒரு துகள் பின் இருக்கின்றது.
அறிந்தும் கூட அங்குதான் கர்மா சேர்கின்றது. பின் அதை நீக்கிவிட்டால் பின் அறிந்தும் கூட நிச்சயம் நீடூழி வாழலாம் என்பதைக்கூட அப்பப்பா!!!!!! இதனையும் கூட அறிஞன் அறிந்து பின் அகத்தியன் சொல்வானப்பா.
“””””” எந்தனுக்கு விஞ்ஞானம் அகத்தியன்தான் தான் கற்றுக் கொடுத்தானப்பா. பல விசயங்கள் அறிந்தும் கூட”””””””
அறிந்தும் பின் ஒருவன் பக்குவங்கள் பட்டுவிட்டால் யார் சொல்வதையும் கேட்க மாட்டான் அறிந்தும் கூட. தான் எடுப்பதே இறுதி முடிவு என்று ( சென்றுவிடுவான்).
(மனிதன்) இன்னும் இன்னும் பொய்கள் எப்படி எப்படிப் பேச வேண்டுமோ அதாவது தெய்வங்கள் பற்றி நிச்சயம் பேசுவானப்பா.
அவை எல்லாம் செல்லாது. அழிவுதான் நிச்சயம். அதாவது அழிவு உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன் மகனே. பின் அதி வேகமாக புவி சுற்றுகின்றதே, ஆனால் ( அதன் வேகம் ) அது குறைந்து போகின்றதே. ஏன் என்ன காரணம் என்று நீ கேட்டாயா என்ன?
இதை நிச்சயம் அறிந்தும் கூட அதே வேகத்தில் இன்னும் வேகமாகச் சுற்றினால்தான் நிச்சயம் மனிதனுக்கு கஷ்டங்கள் வராது. ஆனால் குறைவு அதாவது நிச்சயம் பின் வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. இதை எப்படிப் பின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று பின் யாராவது சொல்கின்றானா மகனே? நிச்சயம் இல்லை. இதுதான் மனிதன் அதாவது பின் மனிதன் என்பது அதாவது சித்தர்கள் பின் மனிதனைச் சாடுகின்றார்கள்.
( சித்தர்கள் மனிதர்களைத் திட்டுவதன் ரகசியம் )
அப்பப்பா!!!!! நிச்சயம் சித்தர்கள் மனிதனை நிச்சயம் அதாவது திட்டித் தீர்த்தால் நிச்சயம் கர்மா ஒழியும் என்பது தெரிவதே இல்லை.
அதனால்தான் புசண்டன் ( பல பிரம்மாக்களைக் கண்ட காகபுசண்ட மாமுனிவர்) நன்மைக்காக வந்து வந்து, மக்கள் அதாவது அவனும் கருணை மிகுந்தவன்தான். அதனால் நிச்சயம் திட்டித் தீர்க்கின்றான். அதனால் கர்மா ஒழிகின்றது என்பதைக்கூட. அதைக்கூட பின் தெரியவில்லையே மனிதனுக்கு. இது உண்மைதனை கூட.
இதனால் மகனே கேள். அறிந்தும் கூட சித்தர்களைப் பற்றி நிச்சயம் இவ்வுலகத்தில் யாருக்குமே தெரியாதப்பா. ஆனால் இல்லை என்று பின் அறிந்தும் கூட இவர்களை எப்படியோ பயன்படுதிவிடலாம் என்று பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வளவுதான்.
ஆனால் இதன் விளைவு நிச்சயம் கடைசியில் தெரியும். பின் தெரியும் பொழுது அப்பொழுது தெரியும் சித்தன் யார் என்பதைக்கூட. விளையாடுவது சித்தனிடத்தில்.
***எங்கு விளையாடினாலும் சித்தனிடத்தில் விளையாடக் கூடாது.***
அதாவது முகத்தில் பின் அறிந்தும் கூட அதாவது முடிகளை வளர்த்துக்கொண்டு, இன்னும் அறிந்தும் பின் நாமத்தை இட்டுக் கொண்டு , இன்னும் மீசையை முருக்கிக்கொண்டு இன்னும் இப்படிச் செய்தால் பின் அதாவது கண்களில் சித்தன் இறங்குவான், பின் உடம்பில் சித்தன் இறங்குவான் என்று ஆனால் சித்தன் என்ன வேலைக்காரனா என்ன?
அறிந்தும் கூட அதாவது உன் கடமையைச் செய்தாலே சித்தன் உன்னிடத்திற்கு வந்து உதவிகள் செய்வான் அவ்வளவுதான். சித்தன் அறிந்தும் கூட பின் எவை என்று அறிந்தும் கூட எவர்க்கும் அடிமை இல்லை. அவ்வளவுதான். சித்தனை வரவழைப்பானாம். இறைவனை வரவழைப்பானாம். என்னை வரவழைப்பானாம்.
அப்பா, அறிந்தும் கூட மகனே கேள் இங்கு. இப்பொழுது நீ என்னை வரவழைத்தாயா என்ன? நீ வரவழைத்துத்தான் பின் உனக்கு வாக்குகள் வாக்குகள் இங்கு பரப்புகின்றேனா என்ன? அறிந்தும் கூட அப்படி இல்லை. அதாவது அவ் அன்பிற்காக இப்பொழுது வந்து இவ் குமரனவன் பேசுகின்றேன்.
( சிக்கல் திருத்தலம் ) அறிந்தும் பல நிச்சயம் அறிவியல் மூலமாகவே அங்கு உணர்ந்திட வேண்டும்.
ஏன் ( சிக்கல் திருத்தலம் ) அங்கு இருக்கின்றேன்? என்று. ஏன் பின் நிச்சயம் இதை அறியும் வண்ணம், பின் சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை, (திருப்பரங்) குன்றம் இங்கெல்லாம் ஏன் யான் இருக்க வேண்டும்? அறிந்துங் கூட இதனால் யோசிக்க வேண்டும்.
நிச்சயம் அறியும் வண்ணம் அகத்தியனும் இதற்குத் தீர்வு. தீர்வு உண்டு நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் என்னென்ன பின் பல வழிகளிலும் கூட அறிந்தும் மனிதன் வாழ வேண்டும் அவ்வளவுதான். ஆனால் இதற்காக எங்கெங்கோ பின் பணம் பின் கொட்டி பின் நன்மை அடையுமா என்று.
ஆனாலும் அப்பப்பா!!!!!! உண்மை தெரிந்து கொள். பின் உலகம் அதாவது அறிந்தும் இதை என்று அறிய அறிய அதாவது இப்புவியானது சற்று சற்று வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. அழிவு. இதனை நிச்சயம் இன்னும் வேகமாகக் கூட்ட வேண்டும். இது சித்தர்களால் அதாவது அகத்தியனால் மட்டுமே முடியும். இதனால்தான் அகத்தியன் அலைந்து , திரிந்து அலைந்து கொண்டிருக்கின்றான்.
இவ்வாறு இருக்கும் பொழுது அதாவது பின் வேகம் குறைகின்ற பொழுது எப்படியப்பா மனிதன் சிறப்பாக வாழ முடியும் சொல். இதைத் தெரியாமல் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான்.
வரும் பின் பிறப்பில் அதாவது பின் மனித பிறப்பு எடுத்துவிட்டாலே நிச்சயம் அனைவருக்குமே வரும் கோபம் எவை என்றும் அறிந்தும் கூட அதாவது மனக்குழப்பங்கள், இன்னும் இன்னும் எதை எதையோ நோய்கள், இவையன்று அறிய அறிய புதும் புதுமையான இன்னும் இன்னும் பின் பரவிக்கொண்டே வருகின்றது. அதாவது இப் புவியானது வேகம் குறையக் குறைய நிச்சயம் (வானில்) அங்கிருந்தே நிச்சயம் சில சில நுண்ணுயிர்களும் இருக்கின்றது.
அவை தன் விழுகின்ற பொழுது, அது மனிதனைத் தாக்குகின்ற பொழுது நோய்கள் புதுமையாக. அப்பப்பா அகத்தியன் வழியிலேயே யான் வந்துவிட்டேன் இங்கு. அறிந்தும் உண்மைதனைக்கூட நிச்சயம் செப்புவேன். ஏனென்றால் ஒழுங்காகவே அறிந்தும் எதை என்று அறிய அறிய இன்னும் கூட ஆராய்ச்சிகள் அகத்தியன் கூட. எப்படி எல்லாம் பின் இவ் நுண்ணுயிர்களை அழிப்பது என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும் இதனால்..
“”””””” அகத்தியனுக்கு மிஞ்சிய இங்கு பின் விஞ்ஞானமும் இல்லை.””””””
“”””””நிச்சயம் அகத்தியனுக்கு மிஞ்சிய பின் அறிவாளியும் இங்கு இல்லை.””””””
“””””” அறிந்தும் கூட ( அகத்தியனுக்கு மிஞ்சிய பின் ) காப்பவனும் பின் இல்லை.””””””
தெரிவித்துவிட்டேன் இங்கு.
இதனால்தான் அகத்தியன் அறிந்தும் அறிந்தும், இன்னும் பார்த்தால் அகத்தியன் பின் கிழக்கில் இருந்து மேற்கு ஓடினால் அது வேகமாக பின் சுற்றும். அதற்குத் தகுந்தாற்போல் பின் மனிதர்களை மாற்ற வேண்டும் என்று எண்ணமப்பா அகத்தியனுக்கு.
இப்பொழுது பார், அகத்தியன் என்ன அனைவருக்குமே நல்லது செய்யப் பார்க்கின்றானப்பா. ஒருவனை விட்டு ஒருவன் எப்படியப்பா இறைவன். அதாவது இரு குழந்தைகள் என்றால் ஒருவனை மட்டும் அன்பாகப் பழகி மற்றொருவனை விட்டுவிட்டால் பின் எண்ணம்.
பின் இவ்வாறு (பிறவி நோக்கத்தை) தெரிந்து கொண்டால்தான் நிச்சயம் பிறவியின் பலனை அனுபவித்து பின் மோட்சத்திற்குப் போக முடியுமே. ஆனால் மனிதன் தெரிந்து கொள்ள முடியவில்லையே. மனிதனின் பாடு பெரும்பாடப்பா. அப்பப்பா ஆசிகள்.
பின் இன்னும் அகத்தியன் வாக்குகள் செப்பும் பொழுது ப பல உண்மைகள் புரிவாய்.
ஆசிகள் ஆசிகள் மகனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இறைவா!!!!! அனைத்தும் நீயே
ReplyDeleteசித்தன் அருள் - 1646 - அன்புடன் அகத்திய மாமுனிவர்- முருகப்பெருமான் வாக்கு!
முருகப்பெருமான் 9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு
https://youtu.be/mSMPQrE4NII
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
om namashivaya
ReplyDeleteom namashivaya
om namashivaya
anaithum nee , andamum nee, ariya thrupanum nee
ellorum ariya thaangal arul purivendum
GURUVADI SARANAM
THIRUVADI SARANAM
NANRI AAYANE
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ
முருகா அகத்தியா சித்தர்களே துணை.
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோப முத்திரை தாயே துணை 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇறைவா நீயே அனைத்தும்
ReplyDeleteஅன்புடன் முருகப்பெருமான் ,
அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1646 , 1654
பூமியின் வேகம் குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு உண்டாகும் துன்பங்கள், பேராபத்துகள்...
https://youtu.be/tw3qkJEclGY?si=g8iyeE29ZfhYDpUD
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!