பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல்ல உபதேசங்கள் தொகுப்பு பாகம் 11
அறிந்தும் கூட மனிதர்கள் எடுக்கும் முடிவு அனைத்தும் தவறானது அறிந்தும் கூட பின் யாங்கள் எடுக்கும் முடிவே நிச்சயம் பின் அதாவது யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.
இறைவன் எடுக்கும் முடிவு அதாவது பின் சரியான முடிவு.
மனிதன் எடுக்கும் முடிவு தவறானது.
அதனால் இறைவனிடத்தில் விட்டு விடுங்கள்.
என்னிடத்தில் வந்து விட்டால் அதாவது தந்தையிடம் வந்து விட்டால் நிச்சயம் பின் தன் பிள்ளைகளை அழகாக பார்த்துக் கொள்வான் தந்தை.
இவ்வளவுதான் விஷயம்.
தந்தையை வைத்துக்கொண்டு எதை என்று அறிய அறிய தந்தையிடம் அது இது என்று கேட்கலாமா???
தந்தைக்குத் தெரியாதா???
அறிந்தும் எதை என்று அறிய இன்னும் வாக்குகளாக அனைவருக்குமே சொல்கின்றேன் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட நீங்கள் எங்கு பிறந்தீர்கள் எப்படி எல்லாம் என்னை வந்து அடைந்தீர்கள் நீங்கள் எதை என்றும் அறிய அறிய எங்கெல்லாம் மோட்சம் காணப் போகின்றீர்கள் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அனைவருக்குமே ஒவ்வொன்றாக சொல்கின்றேன்
ஏனென்றால் இப்பொழுது பின் அறிந்தும் கூட தன் மக்களுக்கு எப்படியோ தன் குடும்பத்திற்கு எப்படியோ எப்படி வாழ போகின்றோமோ என்றெல்லாம் எண்ணங்கள்.
அவ் எண்ணங்களை போக்கி நிச்சயம் யான் சொல்கின்றேன் மீண்டும் இன்னும் வாக்குகள் பரப்புகின்றேன்.
அறிந்தும் இன்னும் காலங்கள் பின் எவை என்று அறிய அறிய இன்னும் யான் வாக்குகள் தந்து கொண்டே இருப்பேன்!!!
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆசிகள்.
ஒரு பெண் அடியவர் அவர் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியான பிரச்சினைகளுக்கு குருநாதருடைய ஆசீர்வாதம் கேட்ட பொழுது குருநாதர் தந்த வாக்குகள்
தாயே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய அறிய இதிலிருந்தே என்ன கர்மா இருக்கின்றது என்பதெல்லாம் தெரிகின்றது என்பேன் அறியும் வண்ணம் கூட எதை என்றும் புரிய புரிய
ஆனாலும் அறிந்தும் எவை என்று புரிந்தும் நல்விதமாக யான் இருக்கின்றேன் என்று சொல்லிவிடு !!!! அனைவரிடத்திலும் அறிந்தும் கூட!!!
பின் அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரை!!!! எதை என்றும் அறிய அறிய
ஒருமுறை அறிந்தும் கூட பின் நிச்சயம் யார் யாருக்கு கேட்க வேண்டியது என்பதையெல்லாம் அறிந்து நிச்சயம் இவர்களையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்று புரிவதற்கு கூட பின் சூரியனார் எனும் தலத்திற்கு (கும்பகோணம் திருமங்கலக்குடி நவகிரகங்களில் ஒன்றான சூரியனார் கோயில்) சென்று வரச் சொல்.
நிச்சயம் பின் கிரகங்களின் பிடியில் இவர்கள்.
அறிந்தும் கூட மனக்குழப்பங்கள் நீங்கும்!!!
நிச்சயம் அறிந்தும் கூட யான் அறிவியல் வழியாக எடுத்துரைத்தேன் அனைவருக்கும் கூட எதை என்றும் புரிய புரிய
ஆனாலும் அங்கு நிச்சயம் அவ் அணுக்கள் தாக்குவதே இல்லை!!!
அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய அறிய ஏனென்றால் பின் அனைத்து எவ்??? எவ்?? கதிர்கள் எங்கெங்கு விழுகின்றது என்பதை எல்லாம் அறிந்தறிந்து யாங்கள் திருத்தலங்களை அமைத்தோம்!!!!
ஆனால் கர்மா அதாவது பாவம் அங்கு போக கூட தடுத்து ஆனாலும் அறிந்தும் கூட எப்படியாவது முயற்சிகள் செய்து சென்று விட்டால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட தாயே அறிந்தும் கூட யான் இருக்கின்றேன் என்று சொல்!!!!
அறிந்தும் கூட இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்..
பின் வந்தது எதை என்று அறிய அறிய வந்ததும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை... பின் யார் யார் சொந்தங்கள் என்றும் தெரிவதில்லை
அனைத்தும் இவ்வுலகத்தில் ஏற்படுத்தி விட்டது அவ்வளவுதான்.
(ஏன் பிறந்தோம் ஏன் இறக்கின்றோம் என்பதும் தெரிவதில்லை சொந்தம் பந்தம் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்வது இந்த உலகத்தில்.
சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஆத்மா தனி தனி ஆள்)
இங்கு அதாவது தனி ஆள் மனிதன்.
அறிந்தும் கூட சொந்த பந்தங்கள் இங்கே ஏற்படுத்திவிட்டு பின் போகும் பொழுது அழுவதா???
அடடா!!!!! அப்பா!!!! எவ்வளவு பெரிய புத்திசாலி!!! மனிதன்!!!
அறிந்தும் கூட யாராவது பின் வாயில்லா ஜீவராசிகள் இறந்தால் அழுகின்றீர்களா?????
பின் எவை என்று அறிய அறிய மனிதன் மனிதன் அதாவது சாகக்கூடிய மனிதன் எதை என்று அறிய அறிய பின் பின்பு யாமும் சாவோம் இப்படித்தான் என்று அழுது கொண்டிருக்கின்றான்.
எதை என்றும் அறிய அறிய அவ்வளவுதான் வாழ்க்கை.
அறிந்தும் யார் யாருக்கு சொந்தம் என்று எதை என்று அறிய இவ் ஆன்மாக்கு எதை என்று அறிய அறிய சொந்தம் என்பதெல்லாம் அப்பனே யான் அறிவது!!!
அம்மையே இதனால் நிச்சயம் இறைவன் சொந்தக்காரன் அனைவருக்கும்
முதலில் இறைவனை தேடுங்கள் அவ் சொந்தத்தை தேடுங்கள்!!!
அறிந்தும் மற்றவை எல்லாம் வீண் அறிந்தும் கூட.
நிச்சயம் எதை என்று அறிய அறிய இந்த பூலோகத்தில் சொந்தங்களை எல்லாம் ஏற்படுத்துகின்றோம் அவ் சொந்தங்களால் பின்பு கஷ்டங்கள் ஏற்பட்டுவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை.
அப்பனே இதுதான் மாயை.
அறிந்தும் இதனால் தம் தன் சுயநலத்திற்காகவே சொந்தங்கள் பந்தங்கள்.
அதனால் அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் சொல்கின்றேன் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதாவது நிச்சயம் கல்வி என்றாலும் ஒரு நாள் மறைந்து விடும் அறிந்தும் கூட.
அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் மனிதனும் ஒரு நாள் மாண்டு விடுவான். அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பிள்ளைகளை பெற்றாலும் ஒரு நாள் எவை என்றும் அறிய அறிய போய்விடுவார்கள் அறிந்தும் எதை என்றும் அறிய பின் வணங்கியும் அனைத்தும் இப்படித்தான்.
அறிந்தும் கூட அப்பொழுது எவை சொந்தம்??? மனிதர்களுக்கு!!!! என்றால் இறைவனே!!!!
அப்பொழுது பின் அதாவது அறிவாளி மனிதன் யான் ஒத்துக் கொள்கின்றேன். அப்பொழுது அழுவான்.... அவள் போய்விட்டது இவை போய்விட்டது இவ் சொந்தங்கள் அவ் சொந்தங்கள் என்று!!!
ஆனால் பார்த்தால் சொந்தங்களே இல்லை மனிதன் ஒரு அனாதை.
அறிந்தும் கூட இவ் பக்குவத்தை என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!!
பின் இவ்வுலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று!!!
அவ் பக்குவம் வந்துவிட்டால் என்னை காணலாம்!!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் என் பக்தர்கள் நிச்சயம் இவைதன் உடனடியாகவே அறிந்தும் கூட எதை என்று கூட பின் புரிந்து கொள்ள வேண்டும்.
நலன்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே
ஏன் எதற்கு என்றால் நீங்கள் அனைவருமே அறிந்தும் கூட பின் அதாவது பின் பாதி (பிறவி)கடலை தாண்டி விட்டீர்கள்!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நரகத்தில் இருந்தால் அப்பனே கடலில் நீந்துவது போலே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அப்பனே பெரிய பெரிய அப்பனே பின் எதை என்று கூட ஞானிகளும் இதை எடுத்துரைத்திட்டார்கள் அப்பனே.
ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் யான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.
இதற்கு மேல் ஒரு அறிவாளி இருக்கின்றான் என்பதை மறந்து விட்டான் அப்பனே.
ஆனால் அவன் தான் அப்பனே வரும் காலங்களில் அடிக்கப் போகின்றான்.
இதனால் தாயே கவலைப்படாதே என்று யான் தான் சொந்தக்காரன் என்று சொல்லிவிடு!!! பார்த்துக் கொள்வோம்.
அப்பனே எதை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய இதனால் நல்விதமாகவே கவலையை விடுங்கள் எதை என்று அறிய அறிய இவள் தன் இன்னும் புண்ணியங்கள் செய்ய வேண்டும்.
புண்ணியங்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.
அவ்வாறு செய்யச்சொல்!!! பின் எதை என்று அறிய அறிய பின்பு வரும் சந்ததிகள் பின் நீடூழி வாழும்!!! பின் கவலைகள் இல்லாமல் வாழும்!!!
யானே அனைத்தும் பின் முன் நின்று செய்து வைக்கின்றேன்!!!
என்னை நம்பி விட்டு எதை என்று அறிய அறிய ஓடோடி எதை என்று அறிய அறிய அதாவது அகத்தியனை நோக்கி ஓடோடி வந்து விட்டால் நிச்சயம் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.. கர்மத்தை அழித்து!!!!!
ஆனாலும் சில காலம் கஷ்டம் இருக்கும்!!!
ஆனாலும் அவ் கஷ்டம் நல்லதிற்காகத்தான் என்று என்ன வேண்டும்!!!
அப்பனே அதையும் கொடுக்காவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது நீயே விளையாடி விடுவாய் யான்தான் பெரியவன் என்று!!!
அதனால்தான் அப்பனே பொறுத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய உடம்பு மட்டும் இல்லை. ஆனால் அனைத்திலும் யான் நுழைந்து பின் அடித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.
இதனால் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்ன
அன்பு பாசத்தை செலுத்துங்கள் தந்தையிடம் போதுமானது.
அறிந்தும் எவை என்று அறிய அறிய...
எத் தந்தையாவது அறிந்தும் கூட எந்தனுக்கு திருத்தலம் கட்டு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றானா????????
இல்லை!!!!!
அறிந்தும் கூட ஆனாலும் தாய் தந்தையின் மீது பாசம் வைத்தால் நிச்சயம் யார் ஒருவன் தாய் தந்தையிடம் பாசம் வைத்திருக்கின்றானோ... அவன் அகத்தியன் மேல் பாசம் வைத்திருப்பான் அவ்வளவு தான் வாழ்க்கை.
அறிந்தும் எதை என்று அறிய அறிய அதனால் நிச்சயம் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டாலும் அறிந்தும் கூட இப்படி எவை என்றும் அறிய அறிய ஆசைகளை வைத்துக் கொண்டாலும் நிச்சயம் அவ் எதை என்று கூட அன்பிற்கு ஏற்பவே யான் பின் செய்து கொள் என்றே சொல்லிவிடுவேன்!!!
ஆனாலும் ஒன்றை மட்டும் யான் கேட்கின்றேன் மனிதனைப் பார்த்து!!!!
தன் தாய் தந்தையை மறந்து நிச்சயம் இறைவனுக்கு!!!.........??????
அறிந்தும் கூட எப்படியப்பா????????
அப்பனே தாய் தந்தையருக்கு செய்யாமல் ஏன் இறைவனுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றீர்கள்???? அப்பனே!!!
இதை நிச்சயம் கூறுங்கள் அப்பனே!!!
இதற்கு பதில் பின் மேலோட்டமாக இன்னும் அடிபணிந்து வரும்.
ஒரு அடியவர் இதற்கு அளித்த பதில்
இறைவன் நிலையானவர் தாய் தந்தை பூலோகப் பிறப்பு
குருநாதர்
அப்பனே அறிந்தும் கூட எதை என்று கூட யார் சொன்னது???????? அது போல் !!!??????
அப்பனே இறைவன் நிலையானவர் பின் எதை என்று அறிய அறிய பின் தெரிந்து கொண்டு.... அவன் நிலைமையை அவன் (இறைவன் )பார்த்துக் கொள்ள மாட்டானா?????
என்ன???
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அவந்தன் எதை என்று அறிய அறிய உங்களுக்கு வாழ்க்கையை கொடுத்திருக்கின்றான் அப்பனே அதை நல்ல படியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது என்பேன் அப்பனே!!!
இன்னும் அப்பனே எப்படியெல்லாம் கர்மா மனிதனை சேருகின்றது என்பதை எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே
அவை சரியாகவே பின் எதை என்று அறிய அறிய கவனித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் அப்பனே. வயது வரை இருக்கும் வயது வரை அப்பனே.
அப்பனே இதனால் முதலில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது ஒரு தேர்வை எழுதுகின்றோம் அல்லவா அப்பனே அதற்கு முதலில் என்னென்ன தேவை என்று நிச்சயம் தெரிந்து கொண்டு எழுத வேண்டும்
அப்பனே அறிந்து கூட
தெரியாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எங்கு செல்வாய் ? என்பது
பின் நீங்களே அறிவீர்கள்.
அப்பனே இதனால் தெரிந்து கொண்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட கர்மாவை தொலைத்திட்டு அப்பனே உங்களை வாழச் செய்வேன். அனைவரையும் கூட அப்பனே
இன்னும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்கின்றேன் அப்பனே
பின் என்னுடைய பக்தர்கள் முதலில் எவை என்று கூட முதல் பாடத்திலே தேர்ச்சி பெற வேண்டும் அதனால் தான் அதுதான் என்னுடைய விருப்பம் கூட.
அப்பனே அறிந்தும் கூட அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே இவை எல்லாம் அப்பனே.
இன்னும் சொல்வேன் அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே அனைவருக்கும் கொடுத்து விட்டேன் அப்பனே.
யான் வந்துவிட்டேன் நீங்கள் வரும்பொழுதே யானும் வந்துவிட்டேன் அப்பனே அழகாகவே அப்பனே அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து விட்டேன் கவலைகள் இல்லை இன்னும் அப்பனே அனைவருக்கும் வாக்குகள் சொல்கின்றேன் நலம்.
சில சில மனக்குழப்பங்கள் சஞ்சலங்கள் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் அப்பனே அதை போக்குகின்றேன் விதியையும் மாற்றுகின்றேன் அனைவருக்குமே நலன்கள் ஆசிகள் ஆசிகளப்பா!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அப்பா நன்றி! நன்றி!! நன்றி!!!
ReplyDeleteநன்றி அகத்தியர் ஐயா 🙏
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete