பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் பாகம் 10
வணக்கம் அகத்தியர் அடியவர்களே அனைவரையும் மனக்குழப்பம் அடையாமல் இருக்க பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் கூறியிருந்தார் அதற்கு குருநாதர் அறிவியல் வழியாக விளக்கம் தந்தருளினார்!!!
அப்பனே அறிந்தும் கூட ஏன் மனக்குழப்பம் என்பேன் அப்பனே!!!
இதை அறிவியல் வழியாகவே விவரிக்கின்றேன் அப்பனே!!!
ஏனென்றால் அப்பனே இன்னொரு படலம் எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு கதிர்கள் அப்பனே பின் இன்னும் இன்னும் அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட வந்தடையும் பொழுது!!!! மனிதனுக்கு அப்பனே அறிந்தும் கூட குழப்பங்கள் தானாகவே வந்து விடுமப்பா!!!
ஏனென்றால் அப்பனே மனிதனுடைய அணுக்களை கூட அங்கிருந்து வந்து பின் எவை என்று அறிய அறிய தாக்கும் அணுக்கள் கூட அப்பனே பின் வேறு வேறப்பா!!
அவை வந்து தாக்கும் பொழுது மனக்குழப்பங்கள் தானாகவே வந்து விடுமப்பா!!! அவற்றிற்கெல்லாம் யான் எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! நிச்சயம் நலமாகவே.
ஏன் எதற்கு தன் அதாவது இயற்கை வகையான மூலிகைகளை கூட உட்கொண்டால் அப்பனே நிச்சயம் அவை சரியாகிவிடுமப்பா.... அதைக் கூட மனிதன் செய்வதில்லை என்பேன் அப்பனே.
நான் நரகத்தில் தான் இருப்பேன் என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே
அதனால் முதலில் எப்படி திருத்த பார்ப்பது என்று திருத்தி நல்வழியில் எடுத்து வந்து அப்பனே பின் விதியை மாற்றுவோம் யாங்கள் அப்பனே நலன்களாக ஆசிகள்.
அப்பனே ஒரு தந்தை எதை என்று அறிய அறிய மகனுக்கு சொல்லிப் பார்ப்பான் அப்பனே
சொல்லிச் சொல்லி பார்ப்பான் அப்பனே
அப்பொழுது பின் அவை எதை என்று கூட திருந்தா விடில் அப்பனே பின் கை மாறுவான் அப்பனே. பின் அறிந்தும் கூட வேறு அறிந்தும் கூட இதே போல தான் அப்பனே!!!
பின் பார்ப்பேன் அப்பனே அப்படி இல்லை என்றால் எதை என்று அறிய அறிய எங்கு எவை என்று அறிய அறிய அப்பனே பின்பு யான் எடுத்துரைப்பேன்.
அறிந்தும் கூட ஏனென்றால் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் தெரியாத விஷயங்கள் பின் சித்தர்களே அறிவார்கள் இன்னும் விவரிக்கின்றேன்.
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே வர வர அப்பனே ஒரு நோய் தாக்கும் அதாவது புற்று (புற்றுநோய்) என்கின்றார்களே அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனைப் பற்றி யான் விவரித்து விட்டேன் அப்பனே.... இதனால் அப்பனே
அங்கு மேலே அப்பனே
"""" புற !! """"அக !!!! என்றெல்லாம் அப்பனே கதிர்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே.
அவை நேரடியாக மனிதர்களை தாக்குமப்பா வரும் காலத்தில் அப்பனே.
இதனால்தான் அப்பனே மரம் செடி கொடிகளை நடுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே
அதையும் கூட பின் எவை என்று கூட ஏற்று கொள்ளாவிடில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தாக்கும் பொழுது அப்பனே அவையெல்லாம் அப்பனே தீர்ப்பதற்கு வழிகள் இல்லை அப்பா
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே
செல்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது தன்னுடைய அறிந்தும் கூட அப்பனே உண்மையான எவை என்று புரிய புரிய தன் உடம்பில் பல கோடி செல்கள் இருக்கின்றது அப்பனே உயிருடனே எதை என்று கூட அப்பனே... அவை நேரடியாக தாக்கும் பொழுது அவ் செல்கள் அழிந்து கொண்டே வரும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் பிழைக்க முடியாதப்பா.. அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... ஔஷதங்களை (குருநாதர் கூறிய மூலிகை மருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பனே
அவை (உடம்பில் உள்ள செல்கள்) உயிருடன் இருந்தால் எந்நோயும் வராதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே.
அப்பனே இப்பொழுது புரிகின்றதா தன் நிலைமைக்கு தானே காரணம் என்று இதை எப்பொழுதே சொல்லிவிட்டார்கள் அப்பனே!!! முன்னோர்கள்.
எதையும் ஏற்கவில்லை தன் வாழ்க்கை தன்னிடமே என்று சொல்லிவிட்டார்கள் அதையும் ஏற்கவில்லை மனிதன்.
அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே பல விஷயங்கள் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அப்பனே இதுதான் வாழ்க்கை என்று சாதாரணமாக அறிந்தும் கூட சாதாரணமா என்று சொல்லிவிடுவீர்கள்
அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய இவை நிச்சயம் என்னுடைய வாக்குகள் என்னுடைய பக்தர்களுக்கு சென்றாக வேண்டும்.
எதனைப் பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் அப்பனே அகத்தியன் இருக்கின்றான் என்று நேரடியாக செல்லுங்கள்!!!!
வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் அப்பனே முதலிலேயே யான் சொல்லிவிட்டேன் நரகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அப்பனே
நரகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எப்படியப்பா ?போராட்டம் இல்லாமல் இருக்கும்!!!
போராடத்தான் வேண்டும் அப்பனே அறிந்தும் கூட யான் இருக்கின்றேன் அப்பனே!!!
என்னை நம்பி விட்டீர்கள் அல்லவா யான் பார்த்துக் கொள்கிறேன்!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் இந்த வாக்கில்... குறிப்பிடும் புற மற்றும் அக இந்த கதிர்களை பற்றி ஒரு சிறிய விளக்கம்.
புற ஊதா கதிர்கள் (ultra violet radiation rays) UV
அக சிவப்பு கதிர்கள் (infrared rays) IR
இந்த கதிர்களை மனிதர்களால் பார்க்க முடியாது சில விலங்கினங்கள் பறவைகள் இந்த கதிர்வீச்சுகளை பார்த்தறியும் திறன் உள்ளவை.
எளிமையாக சொன்னால் வெல்டிங் செய்யும் பொழுதும் எக்ஸ்ரே எடுக்கும் பொழுதும் வெளிப்படும் ஒளிக்கதிர்வீச்சுக்கள் இந்த (UV IR radiation rays) கதிர்வீச்சுக்களை ஒத்தவை.
மேலிருந்து அதாவது சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த கதிர்வீச்சுக்கள் மேலே உள்ள ஓசோன் படலம் போல மற்றொரு படலத்தின் மூலம் வடிகட்டப்பட்டு பூமியை வந்தடைகின்றது.
இந்த கதிர்வீச்சுகளின் பிரதிபலிப்பை ஏழு நிறங்களில் வானவில்லில் கூட காணலாம்.
இந்த கதிர்வீச்சுக்கள் மனிதனின் தோல் மற்றும் உடலுக்கு கேடு விளைவிப்பவை. நன்மை செய்யும் சூரியக் கதிர்வீச்சுக்கள் விட்டமின் டி பி 12 போன்றவை தருகின்றது.
மனிதர்களுடைய செல்களை அழிக்கும் திறன் வாய்ந்த இந்த கதிர்வீச்சுக்களால் உடலில் உள்ள செல்கள் அதாவது உயிருடன் இருக்கும் செல்கள் அழிந்து விடும் அவை ஒரு முறை அழிந்து விட்டால் போராட வேண்டிய செல்கள் இல்லாததால் புற்றுநோய் ஏற்படும்....
மேலிருந்து வரும் இந்த கதிர்வீச்சுக்களை வடிகட்டுவதற்கு மேலே உள்ள படலம் பாதிப்படைந்து விடக்கூடாது.
ஏற்கனவே ரசாயனங்கள் மரங்களை வெட்டுவதன் மூலம் வாயுமண்டலம் அசுத்தம் அடைந்து இருப்பதால் அந்த படலமும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றது.. ஒரு திரை போல ஒரு குடை போல அந்த படலம் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றது அந்த படலத்தில் மேலும் ஓட்டைகள் ஏற்பட்டால் கதிர்வீச்சுக்கள் நேரடியாக மனிதர்களை வந்து தாக்கும்.
அந்த படலம் பாதிப்பு அடையாமல் இருக்க மரம் செடி கொடிகளை நடுவதன் மூலம் அந்த படலம் பாதுகாக்கப்படும் அதனால் தான் குருநாதர் அனைவரையும் மரம் செடி கொடிகளை நட சொல்லி கொண்டிருக்கின்றார்.
செல்கள் உயிருடன் இருக்க இயற்கை மூலிகைகளையும் குருநாதர் பரிந்துரைத்த 32 வகையான மூலிகை மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
32மூலிகை மருந்துகளை பற்றி ஏற்கனவே பல வாக்கில் தெரிவித்து விட்டோம்!!
இந்த மூலிகை மருந்துகள் திரு தனக்குமார் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் ( அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9566825599)
குருநாதர் நமக்காக வாக்கில் கூறிய வாழ்வியல் முறையை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஇறைவா நன்றி!
ReplyDelete