பெங்களூர் வாக்குகள் குரு நாதரின் நல் உபதேசங்கள். தொகுப்பு பாகம் 4
ஒரு அடியவர் தனது வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சில பல காரணங்களால் தடைகள் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி வைக்கும்படி ஆகிவிட்டது. மணமகன் பெயரையும் மணமகள் பெயரையும் குருநாதரிடம் சொல்லி
அவர் குருநாதரிடம் இப்படியாகிவிட்டதே என்று கேட்ட பொழுது
அறிந்தும் கூட அப்பனே நியாயமா? அப்பனே அறிந்தும் கூட!!!
இவர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் (திரு)மணங்கள் செய்து எவை என்றும் புரிய புரிய எதை என்று அறிய அறிய அப்பனே செய்திட்டாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய வாழ முடியாதப்பா..
அதனால்தான் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே.
இறைவன் செய்து வைப்பான் அப்பனே.
அப்பனே பின் வாழ்வதற்கு என்ன மூலாதாரம்??? சொல்!!!
(அடியவர் மௌனம்)
அப்பனே அறிந்தும் கூட மூலாதாரமே இல்லையப்பா இதனால் திருமணம் செய்து விட்டாலும் எப்படியப்பா வாழ்வார்கள் அப்பனே.
ஆனாலும் அப்பனே ஒருவர் மீது ஒருவர் சண்டைகள் போட்டு அப்பனே காசு இல்லை பின் எவை என்று அறிய அறிய அப்படி இல்லை இப்படி இல்லை பின் வேலை இல்லை என்றெல்லாம் அப்பனே அடித்து எவை என்று அறிய அறிய இருவருக்கும் சண்டைகள் வந்து அப்பனே பிரிந்து விடுவார்கள்.
அதனால் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே.
பின் இறைவனே நிச்சயம் முடிப்பான்!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் குறைகள் இல்லை.
அப்பனே அறிந்தும் கூட இறைவன் நல்லதிற்கே செய்வான் அப்பனே ஆனால் மனிதன் தான் முட்டாள்தனமாக இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணுவான்!!!!
அப்படி அறிந்தும் கூட பின் எதை என்று கூட தாலி பாக்கியம் அப்பனே எதை என்று அறிய அறிய அவந்தனுக்கும் ஒரு பெரிய கண்டம் அப்பா... ஒரு வருடத்தில் அப்பனே... அதாவது இன்னும் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட இவ்வாறு பிரியும் நிலையும் ஏற்படுகின்றது அப்பனே அவந்தனுக்கு பின் கை கால்களும் கூட அதாவது வாகனத்தில் செல்லும் பொழுது இழந்து விடுவான் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது எதை என்றும் அறிய அறிய திருமணம் ஆகி இருந்தால்.
அதனால் தான் இழுத்து விட்டான் இறைவன்.
(திருமணத்தடையை இறைவனே ஏற்படுத்தியுள்ளார்.)
பின் வந்தவளை (மருமகள்) பின் நோக்கி!!! சொல்வார்கள்... இவள் வந்தாளே!!! இவளால் தான் தரித்திரம்... இப்படி ஆகிவிட்டதே என்று ..
அப்பனே இது நியாயமா???
அப்பனே அப்பொழுது ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகப் போய்விடுமப்பா!!!
இறைவன் யோசிப்பவன் அப்பனே!!!!
இறைவன் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Thank you for all the blogs.
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete