​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 26 June 2024

சித்தன் அருள் - 1638 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


சூரத் சத்சங்கம் பாகம் 13 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

சூரத் சத்சங்கத்தில் காலபைரவர் சன்னதியில் வைத்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கும் பொழுது 

புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆசிர்வாதம் வேண்டும் என்று ஒரு அடியவர் குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது குருநாதர் தனிப்பட்ட முறையில் அவருடைய புண்ணியத்தின் பலனுக்கு ஏற்ப எப்படி வழிபாடு செய்ய வேண்டும் எப்படி எல்லாம் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனிநபர் வாக்குகளாக அவருக்கு கூறிவிட்டு பின்பு

குருநாதர் இதை அனைவருக்கும் தெரிவித்து விடு அப்பனே !!!!  என்று குருநாதர் உத்தரவு இட்டார்!!!!

புதிதாக யார் தொழில் தொடங்கினாலும் வேலைக்கான முயற்சிகள் இருந்தாலும் இதனை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் என வாக்குகள் தந்திருக்கின்றார் !!!

என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம் !!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அறிந்தும் கூட அனைவருக்குமே தெரிவித்துக் கொள்!!!

எதை என்று கூட வேலை வேண்டுமானால் தொழில் செய்ய வேண்டும் என்றால்!!!!

முதலில் யான் நிச்சயம் இயலாதவர்களுக்கு யான் செய்கின்றேன் நிச்சயம் இறைவா!!!! எந்தனுக்கு கொடு என்று இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் அப்பனே!!!!

இதே போலத்தான் தொழில் வேண்டுமென்றாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இறைவா நீ படைத்தாய். 

எந்தனுக்கு பின் நிச்சயம் தொழில்!!!! பின் நிச்சயம் தந்தால் அதில் பாதி இயலாதவர்களுக்கு என்று இறைவனிடத்தில் சொன்னால் தான் இறைவன் அனைத்தும் கொடுப்பான். 

இல்லையென்றால் பின் கிடைத்தாலும் பின் அவை நிச்சயம் பின் அனைத்தும் பின் பணத்தை அதில் முதலீடு செய்வித்து இறைவனே திரும்பவும் வாங்கிக் கொள்வான். 

இதை அனைவருக்கும் தெரிவித்து விடு என்று வாக்குகள் கூறினார். 

(அதாவது புதிதாக யார் வேலைக்காக முயற்சிகள் செய்தாலும் தொழில் செய்தாலும் அதில் வரும் லாபத்தில் இயலாதவர்களுக்கு கொடுப்பேன் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு தொழிலை செய்தால் இறைவனும் கொடுப்பான்!!!! தொழிலும் வளர்ச்சி பெறும்!!!  தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும் !!!!

கிடைக்கும் லாபத்தில் தான தர்மங்கள் செய்யவில்லையென்றால் திரும்பவும் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய வைத்து இறைவனே மீண்டும் பிடுங்கிக் கொள்வான்!!!! என்று வாக்குகள் கூறினார். 

இந்த வாக்கு எல்லோருக்கும் பொதுவான வாக்கு வேலை தேடுபவர்களும் சரி புதிதாக தொழில் செய்பவர்களும் சரி செய்து கொண்டிருப்பவர்களும் சரி குருநாதர் வாக்குகளை கடைப்பிடித்து கிடைக்கும் லாபத்தில் இயலாதவர்களுக்கு தான தர்மம் செய்வோம் என்று இறைவனிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செய்தால் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்)

மற்றொரு அடியவரும் இது போன்று சொந்த பணிகள் செய்து கொண்டு சேவைகளும் செய்து வருகின்றார் அவர் பழைய செய்தித்தாள்கள் நூல்கள் இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக திரட்டி அவரது கிராமத்தில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் ஏற்பாடு செய்து தர விரும்பி குருநாதரிடம் இதற்கு அவர்களும் உதவ வேண்டும் இந்த புண்ணிய சேவை நல்லபடியாக செய்வதற்கு ஊராரின் ஒத்துழைப்பும் வேண்டும் அவர்களுடைய உதவிகளும் வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் தாருங்கள் என்று கேட்டதற்கு 

இதனால் நிச்சயம் பின் தொடர்ந்து சேவையை செய்து கொண்டு வந்தால் அப்பனே உங்கள் விதியில் ஏற்படும் பெரிய பெரிய கண்டங்கள் கூட அப்பனே மாறிவிடுமப்பா!!!

எம்முடைய ஆசிகள் இருக்கும் பொழுது கவலைகளை விடு அப்பனே!!! எதை என்று அறிய அறிய இன்னும் கொடுக்கின்றேன் அப்பனே நலன்களாக ஆசிகள் அப்பனே !!!

பின் நீ சேவைகளை செய்து வா தொடர்ந்து!!!!

எதை என்று அறிய அறிய """"""புண்ணியம் இருக்கின்றவன்!!!! செய்வான் !!!!

புண்ணியம் இல்லாதவன் பின் எவை என்று அறிய அறிய!!!!.......

அதனால் நிச்சயம் அதற்கும் புண்ணியம் வேண்டும்!!!

(அதாவது புண்ணியங்கள் செய்வதற்கே புண்ணியம் வேண்டும் !! புண்ணியம் இருந்தால் தான் புண்ணிய செயல்கள் தான தர்மங்கள் உதவிகள் செய்ய முடியும். 

அப்படி புண்ணியம் இல்லாவிட்டால் எந்த ஒரு தான தர்மம் செயலையும் செய்ய சேவைகளையும் செய்ய முடியாது)

அடுத்து ஒரு அடியவர் தனது அலுவலகத்தில் நிறைய மனிதர்கள் வருகின்றார்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள் தீய மனப்பான்மை கொண்டவர்கள் என வருகின்றார்கள் அவர்களுடைய எதிர்மறை தாக்குதல் எதுவும் அலுவலகத்தில் பாதிக்க கூடாது!!

நேர்மறையான எண்ணங்கள் தெய்வ சக்திகள் சுபிட்சம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு குருநாதர்

அப்பனே கருங்காலி கட்டையை வை போதுமானது!!!

(அடியவர்கள் கவனிக்கவும் குருநாதர் கருங்காலி கட்டையை வீட்டில் அலுவலகத்தில் வைக்கலாம்.

ஆண்கள் பெண்கள் என அனைவரும் அணிந்து கொள்ளலாம்!!! வீடுகளில் அலுவலகங்களில் அப்படியே வைத்துக் கொள்ளலாம்!!!

அல்லது தாமரை !! வேல்!!! இறை மூர்த்தங்கள்!!! என ஏதேனும் ஒரு வடிவத்தில் கருங்காலி மரகட்டையில் செய்து எப்படி வேண்டுமானாலும் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் தனிநபர் வாக்குகளிலும் கூறியிருக்கின்றார்) 

இன்னும் கூட சொல்லப்போனால் அப்பனே ஒரு கண்ணாடி குவளையில் நீரை நிரப்பி எலுமிச்சை இட்டு பச்சை கற்பூரம் அதனுடன் அப்பனே  உப்பும் இட்டு  வைத்து வாருங்கள் அப்பனே இதை செய்து கொண்டே வாருங்கள் உங்களுக்கே புரியும்!!!

குருவே இப்படி வீட்டிலும் செய்யலாமா???

அப்பனே பின் செய் என்று சொல்லிவிட்டால் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இதை தொடர்ந்து செய் உந்தனுக்கே புரியும் அப்பனே!!!

(ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம்  உப்பு கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் மிதக்க வைத்து விட வேண்டும் இதை தம் தன் அலுவலகத்தில் மேஜையில் வீட்டு வரவேற்பு அறையில் பூஜை அறையில் வைத்து விட்டால் எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது நேர்மறை தெய்வ சக்திகள் அதிகரிக்கும்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. இறைவா நன்றி!

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்
    ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்
    ஓம் அகத்திய மாமுனிவர் திருவடி சரணம்

    ReplyDelete