​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 May 2024

சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!!

சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் குஜராத்தில் சூரிய நகரமான சூரத் கர்ணன் வாழ்ந்த இடத்தில் தற்பொழுது அங்கு ஒரு சிவாலயம் உள்ளது!!!!

அங்கு பொது மக்களுக்கு ஒரு சத்சங்கம் போல உபதேசங்களையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

ஒவ்வொரு பக்தர்களும் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இனி எப்படி வாழ வேண்டும் எந்தெந்த பிரச்சனைகளுக்கு எந்த மாதிரியான புண்ணியத்தையும் பக்தியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குருநாதர் ஜீவநாடி வாக்கில் உபதேசம் செய்தார்!!!!

அதன் தொகுப்புகளை இனி வரும் வாக்குகளில் பார்க்கலாம்!!!!!!

முதலில் மூச்சுப் பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் இறைவனை காண முடியும்!!!!! இன்று மிகப்பெரிய ரகசியத்தை ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கில் நம் குருநாதர் தெரிவித்திருந்தார் இதை நல் முறையாக மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கட்டளை இட்டார்!!!!

அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!

அகத்தியர் மீது பேரன்பு வைத்திருக்கும் ஒரு அகத்தியர் அடியவர் குருவே நமஸ்காரம் நான் அனுதினமும் எத்தனை முறை மூச்சை சுவாசிக்கின்றேனோ!!!! அத்தனை முறை உங்கள் பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் வேறு எண்ணங்கள் எதுவும் வரக்கூடாது அதற்கு நீங்கள் நல் ஆசிகள் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்!!!!

அதாவது அவருடைய எண்ணத்தின் கேள்வியின் உள் அர்த்த சாராம்சத்தை வைத்துக் கொண்டே......இப்படியே மந்திரங்களை ஓதி மூச்சு பயிற்சி செய்து கொண்டு இருந்தால் இறைவன் வசப்படுவான் என்பதை தெளிவாக வாக்குகளில் உபதேசித்தார்!!!!

(பிராணாயாமம்)

அப்பனே கவலையை விடு நான் பார்த்துக் கொள்கின்றேன் நீ மூச்சுப் பயிற்சி மட்டும் யான் கூறியவாறு அனுதினமும் செய்து கொண்டே வா!!!!

அப்பனே வலது நாசி இடது நாசி அப்பனே காற்றினை மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது இவையன்றி கூற அப்பனே கடைசியில் பலமாக அப்படியே உள் இழுத்து அடி வயிறு வரை அப்பனே மீண்டும் அப்பனே மெதுமெதுவாகவே ஞாபகத்தில் வைத்துக் கொள் அப்பனே உள் இழுக்கும் பொழுது பலமாக இழுக்க வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் பின் வயிற்றின் அடியில் பின் எதை என்று அறிய அறிய போகும் அப்பா (காற்று) 

( அதாவது மூச்சுப் பயிற்சியின் போது வலது நாசியில் இடது நாசியில் காற்றை உள்ள இழுத்து வெளியேறும் பொழுது காற்றை உள்ளே இழுக்கும் பொழுது அந்தக் காற்று வயிறு வரை செல்ல வேண்டும் பின்பு காற்றினை மெது மெதுவாக வெளியே விட வேண்டும்!!! இப்படி செய்வதால் பல வியாதிகள் நீங்கும்

இதனால் பல வியாதிகள் நீங்கும் அப்பா ஆனால் இவையெல்லாம் யாருக்குமே தெரியாதப்பா எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே!!!

அதிகாலையிலே அப்பனே எவை என்றும் அறிய அறிய எழுந்தவுடனே அப்பனே நமசிவாயா!!!!!!! என்று சொல்லிட்டு அப்படியே பின் எதை என்று அறிய அறிய

அவ் மந்திரத்தை உள்ளிழுத்து அப்பனே வயிற்றுக்குள் இருந்து அப்பனே எதை என்று கூட சிறிது நேரம் அப்படியே வைத்து கொண்டு மீண்டும் அப்பனே வெளியிட வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட!!!

இதே போலத்தான் அப்பனே அனைத்து மந்திரங்களையும் கூட அப்பனே அப்படியே உள்ளிழுக்க வேண்டும் என்பேன் அப்பனே...

அவை அப்படியே எதை என்றும் அறிய அறிய ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் பலமாகும் பொழுது சில நோய்கள் அப்பனே தீரும் அப்பா

இதை நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே தெரிவித்தல் நன்று!!!!

குருவே இப்படி வலது நாசியிலும் இடது நாசியிலும் எத்தனை முறை இதுபோன்று செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு

அப்பனே ஒரு 35 முறை செய்தால் போதுமானது என்று குருநாதர் பதில் உரைத்தார்!!!!

ஆனாலும் அப்பனே ஒவ்வொரு மந்திரத்தையும் கூட செப்பி செப்பி இவ்வாறு உள் இழுத்தல் வெளியிடுதல் அப்பனே நன்று என்பேன் அப்பனே

இவை உங்களுக்கு எத்தனை மந்திரங்கள் தெரிந்திருக்கின்றதோ அத்தனை தடவையும் சொல்லி சொல்லி உள்ளிழுத்து அத்தனை தடவையும் வெளியிடலாம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அவை மட்டும் இல்லாமல் வலது நாசியில் அப்பனே காற்றினை உள் இழுக்கும் பொழுது எதை என்றும் அறிய அறிய """" ஓம் !!! என்று எதை என்று அறிய அறிய உன்னால் எத்தனை முறை மனதில் சொல்ல முடியுமோ எதை என்று அறிய அறிய பின் நல்விதமாகவே எதை என்று அறிய அறிய அதேபோல் வெளியிடும் பொழுது கூட """ ஓம்  !!! என்றே வெளியிட வேண்டும் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இதே போல தான் நமச்சிவாயா!!!! நமச்சிவாயா!!!! என்றெல்லாம் அப்பனே பின் அதாவது விசுவாமித்திரன் உள் இழுத்து உள்ளிழுத்து அப்பனே அதாவது """"""காற்றில் ஈசன் """""""" ஒளிந்துள்ளான்!! என்பதைக் கூட அவந்தனுக்கு தெரியும் அதேபோலத்தான் அப்பனே

ஆனால் காற்றை வெளியே விடவே இல்லையப்பா!!!! 

இதனால்தான் அப்பனே பின் அதாவது  எங்கு இருக்கின்றான்??? இறைவன் என்பதை உணர்ந்து எதை என்று கூட தெரியாமல் கூட அப்பனே இவ்வாறு உள்ளிழுத்து உள்ளிழுத்து நமச்சிவாயா !!! நமச்சிவாயா!! என்று காற்றை  அனைத்தும் தன்னிடத்தில் எதை என்று அறிய அறிய !!!

அப்பொழுது தான் ஈசன் கூட வந்தானப்பா !!!

காட்சிகள்(தரிசனம்) தந்து விட்டான் அப்பா!!!

ஆனால் இன்றைய நிலையில் அவை போல் யாருமே இல்லையப்பா!!!!!!

குருவே சரணம் நான் அனுதினமும் தியானமும் செய்து வருகின்றேன் ஆனால் வயதான காரணத்தினால் அதிக நேரம் அமர்ந்திருக்கும் பொழுது இடுப்பில் முதுகில் வலி வருகின்றது அதனால் தியானத்தை தொடர முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது இதற்கு மாற்று யான் என்ன செய்ய வேண்டும்???

அப்பனே எவை என்று அறிய அறிய படுத்துக்கொண்டு செய்!!!!

அதாவது சவாசனம் போலவே உடலை வைத்துக் கொண்டு தியானத்தைச் செய்!!! அப்பனே கவலைகள் இல்லை அப்பனே!!!!

குருவே நமஸ்காரம்!!!! விசுவாமித்திரர் ரிஷிமுனியை பற்றி கூறியிருந்தீர்கள்!!!! அவருடைய பரிபூரண ஆசீர்வாதம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் எந்த ஆலயத்திற்கு செல்வது????

அப்பனே எதையென்றும்  அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் அங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே ஓரிடத்தில் இப்பொழுதும் கூட தவங்கள் செய்து கொண்டே இருக்கின்றான் அப்பனே அப் பகுதி இப்பொழுது கூட அயோத்தி என்று அப்பனே கூறப்படுகின்றது அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய அங்கே நிச்சயம் எதை என்று அறிய ராமனுக்காக எப்பொழுதும் தவங்கள் செய்து கொண்டிருப்பான் அப்பனே!!!!

அப்பனே பின் ரிஷிகளும் கூட எதை என்றும் அறிய அறிய அப்படியே அங்கு தான் உள்ளார்களப்பா இப்போது நிலைமைக்கு அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய விசுவாமித்திரன் மனித ரூபத்தில் அலைந்து திரிவான் எங்கு எப்பொழுது என்பதை எல்லாம் அப்பனே வருங்காலத்தில் எடுத்துரைக்க போகின்றேன் அப்பனே பொறுத்திருக அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

14 comments:

  1. Dear Sir,

    I read many times the above procedure,but still I can't understand in depth one point.
    Can you please help me by clarifying.We should inhale by right nostril and exhale by left nostril or use both nostrils together for inhaling and both while exhaling.

    ReplyDelete
    Replies
    1. முதலில், வலது மூக்கு வழி சுவாசத்தை உள்ளிழுத்து இடது மூக்கு வழி வெளியே விடவேண்டும். பின்னர் இடது மூக்கு வழி உள்ளெடுத்து வலது மூக்கு வழி வெளியே விட வேண்டும்.

      இரண்டு மூக்கு வழியும் ஒரே நேரத்தில் காற்றை உள்ளெடுப்பது, இதில் கிடையாது.

      வலது மூக்கு வழி எடுப்பது - சூரிய கலை.
      இடது மூக்கு வழி எடுப்பது - சந்திரக் கலை.

      இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக எடுப்பதால், உடல் பதப்படுத்தப் படுகிறது.

      Delete
    2. Dear Sir,
      Thank you so much for the explanation and this has become clear now.

      Delete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  3. ஐயா தயவு செய்து விளக்கவும். தனி தனியே வலது நாசி , இடது நாசி என்று இழுக்க வேண்டுமா? அல்லது ஒரே தடவையில் மூச்சை இழுக்க வேண்டுமா??

    ReplyDelete
    Replies
    1. முதலில், வலது மூக்கு வழி சுவாசத்தை உள்ளிழுத்து இடது மூக்கு வழி வெளியே விடவேண்டும். பின்னர் இடது மூக்கு வழி உள்ளெடுத்து வலது மூக்கு வழி வெளியே விட வேண்டும்.

      இரண்டு மூக்கு வழியும் ஒரே நேரத்தில் காற்றை உள்ளெடுப்பது, இதில் கிடையாது.

      வலது மூக்கு வழி எடுப்பது - சூரிய கலை.
      இடது மூக்கு வழி எடுப்பது - சந்திரக் கலை.

      இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக எடுப்பதால், உடல் பதப்படுத்தப் படுகிறது.

      Delete
    2. மிக்க மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. நன்றி! சித்தன் அருள் - 1603 ஐ 1604 என்று மாற்றவும்.

    ReplyDelete
  5. அருமை அப்பாஅருமை

    ReplyDelete
  6. நன்றி அப்பா நன்றி

    ReplyDelete
  7. மிகவும் சிறப்பு...மூச்சு பயிற்சியை சில வருடங்களாக செய்து வருகின்றேன் ஐயா...குருநாதரின் வாக்கின் மூலம் மேலும் தெளிவுபெற்றேன் மிக்க நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  8. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  9. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete