​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 24 May 2024

சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!







சூரத் சத்சங்கம் பாகம் 5

ஐயனே!!!!!! நாங்கள் இன்றைய காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று குடித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அந்த நீரில் சத்துக்கள் என்று எதுவும் இல்லை !!!! உடலுக்கு தேவையான சக்திகளை குடிநீரில் இருந்து நாங்கள் எப்படி பெற வேண்டும் வழிகாட்டுங்கள்!!!

எப்பொழுதும் அப்பனே நீரில் எதை என்றும் அறிய அறிய சில மூலிகைகள் இருக்கின்றது என்பேன்

(வில்வ இலை துளசி இலை அருகம்புல்) குருநாதர் ஏற்கனவே இவ் மூலிகைகளை நீரில் இட்டு பயன்படுத்தி வர கூறியிருந்தார்.

அப்பனே அதை பயன்படுத்திக் கொண்டு தான் வருகின்றார்கள் என்பேன் அப்பனே அதை பற்றி யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!


(காசியில் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1155 பதிவில் நீரில் மூலிகைகள் பற்றி குருநாதர் கூறியிருக்கின்றார்)

இதனால் அப்பனே பின் அதாவது எதை என்றும் அறிய அறிய சில சில மூலிகைகள் அப்பனே எவை என்று அறிய அறிய நீரில் இட்டு வை எப்பொழுதும் கூட !!!

அப்பனே நன்னாரி வேர் நெல்லிக்கனி அப்பனே பின் எலுமிச்சை எதை என்றும் அறிய அறிய இதை எப்பொழுதும் நீரில் இட்டு வர நன்று என்பேன் அப்பனே அதனால் அப்பனே சில நன் முறைகளாகவே இன்னும் இன்னும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே அதை உணவிலே அனுதினமும் சேர்த்துக் கொண்டுதான் வருகின்றார்கள் அப்பனே

(மிளகு சீரகம் சுக்கு அதிமதுரம் கொத்தமல்லி புதினா)

அவையெல்லாம் கூட அப்பனே இட்டு இட்டு அப்பனே எதை என்று அறிய அறிய அருந்தி வந்தாலே போதுமானது அப்பா நிச்சயம் மாற்றம் அடைந்து விடும் அப்பனே பின் உடம்பில் ஒரு குறையும் வராதப்பா சொல்லிவிட்டேன்!!!

ஐயனே எலுமிச்சை நெல்லிக்காய் துண்டாக அரிந்து நீரில் விடலாமா???

அப்பனே எதை என்று அறிய அறிய நீரில் அப்படியே விட்டுவிடுங்கள் ஊறட்டும்!!! எலுமிச்சையையும் நெல்லிக்கனியையும் முழுமையாக இட்டு நீரில் அப்படியே ஊறட்டும் அப்பனே

நீரில் நல்முறையாக அப்படியே ஊறிக் கொண்டே இருக்கட்டும் நீரை மட்டும் நீங்கள் அருந்தி வாருங்கள் அப்பனே!!! உடலுக்கு சக்தியைக் கூட்டும் அப்பனே!! நன் முறைகளாகவே அப்பனே!!!!!

(நாம் அனுதினமும் குடிக்கும் நேரில் எலுமிச்சை நெல்லிக்காய் நன்னாரி வேர் இவற்றை ஊற வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நெல்லிக்காயையும் எலுமிச்சம் பழத்தையும் நன்னாரி வேரையும் மாற்றி விட்டு புதிதாக இட்டு மீண்டும் ஊறவைத்து பருகி வரலாம்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நன்றி இறைவா 🙏
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
    Replies
    1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

      Delete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. அருமை நன்றி ஐயா

    ReplyDelete