​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 19 May 2024

சித்தன் அருள் - 1608 - கிரியாடினின் Vs பார்லி !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தற்கால மனிதனின் அவசரம், நேரமின்மை என்ற எண்ணம், உண்ணும் உணவில் கவனமின்மை, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற உணவு தயாரிப்பாளரின் பேராசை போன்றவை, மனிதனுக்குள் பலவித நோய்களை வளர்க்கிறது.

பெரியவர்கள், முன்னோர்கள், சித்தர்கள் சொன்ன வாழ்க்கை முறையை உதறி தள்ளிவிட்டு, சற்றும் நன்னடத்தை இல்லா வாழ்க்கை வாழும்போது உடல் உள்உறுப்புகள் செயல்படுவது பாதிக்கப்பட்டு பலவித நோய்களை உருவாக்குகிறது. ரத்தத்தில் "கிரியாடினின்" என்கிற ஒரு பொருள் அதிகமாக இருந்தால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

"கிரியாடினின்" என்பது குடல் அழற்சியினால் உற்பத்தி செய்யப்படுகிற ஒரு வகை திரவம். இதன் அளவு ஒருவரின் ரத்தத்தில் 0.5 - 1.20 mg அளவு இருந்தால் சிறுநீரகம் சரியாக செயல் படுகிறது என்று அர்த்தம். 1.20 க்கு மேல் கிரியாடினின் ரத்தத்தில் இருந்தால், சிறுநீரகம் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள். இதன் அளவு 3 அல்லது 4 என்கிற அளவை தாண்டும் பொழுது "டயாலிசிஸ்" (ரத்த சுத்தி) செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 

அதிக ப்ரோடீன், செயற்கை எண்ணெய்கள், உணவில் சேர்க்க கூடாத ரசாயனங்கள், கண்டதை எல்லாம், கண்டவனிடம் வாங்கி உண்கிற பழக்கம் போன்றவை, இக்காலத்தில் 20 வயது வந்தவர்களுக்கே சிறுநீரகம் செயலிழக்க காரணமாகிறது. உணவில் கட்டுப்பாடு இருந்தால், இதன் அளவை ஓரளவுக்கு குறைத்து விடலாம்.

இயற்கை மருத்துவத்தில்  (சித்த மருத்துவம்) இந்த குறையை நிவர்த்தி செய்ய என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடிய பொழுது, நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் "பார்லி" விதைகள் "கிரியாடினின்" அளவை குறைக்க உதவும் என்று தெரிந்தது.

மூன்று ஸ்பூன் பார்லியை, ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்க போகும்போது எடுத்து வைத்து, அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் அதை வடிகட்டி, நீரை மட்டும் பருகிவர, ஒரு வாரத்தில் "கிரியாடினின்" அளவு நன்றாக குறையும். ஒரு மாதத்தில் "கிரியாடினின்" கட்டுப்பாட்டுக்குள் வந்து உடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். நன்றாக ஊறிய பார்லியை சாதம் வடிக்கும் பொழுது அதனுடன் கலந்து உண்ணலாம்.

"கிரியாடினின்" அளவு 1.70 இருந்த ஒருவருக்கு இதை கொடுக்க, மூன்று வாரங்களில் "கிரியாடினின்" அளவு 1.28 ஆக குறைந்தது. இந்த முறையை தொடரும் பொழுது உணவில் "காரம்" நிறைய அளவுக்கு குறைத்துக் கொள்ளவும்.

பின்விளைவு:- இதை எடுத்துக் கொள்ள தொடங்கினால், மிகுந்த பசி வரும். ரத்தத்தில் "கிரியாடினின்" அளவை சுத்தம் பண்ணி, குடலை அழற்சியில் நின்று காப்பாற்றி, சிறுநீரகத்தை இயல்பாக செயல்பட வைக்கும்.

இயற்கையாக நலம் பெறுக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா.. நன்றி

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  3. Useful Health Information. Thanks

    ReplyDelete
  4. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    ReplyDelete
  6. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete