​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 22 May 2024

சித்தன் அருள் - 1611 - பாரத நதிகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அடியேனுடைய நண்பர் ஒருவர் பாரதத்தில் இருந்த/இருக்கும் நதிகளின் பெயர்களை தொகுத்து அனுப்பியிருந்தார்.  நீங்களும் அதை தெரிந்து கொள்ள, இங்கு சமர்ப்பிக்கிறேன்.

பாரத வர்ஷ நதிகளின் பெயர்கள்...

கங்கை, ஸிந்து, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதை, யமுனை, திருஷத்வதி, பருத்த மணலுள்ள விபாசை, ஆழமுள்ள வேத்திரவதி, கிருஷ்ண வேணி, இராவதி, விதஸ்தை, பயோஷ்ணி, தேவிகை, வேதவதி, த்ரிதிவை, இச்க்‌ஷலை, க்ருமி, கரீஷிணி, சித்திரவாகை, ஆழமான சித்திரசேனை.

பாபம் போக்கும் கோமதி, மஹானதியான வந்தனை, கவுசகி,க்ருத்யை, நிசிதை, லோஹிதாரணி, ரகஸ்யை, சதகும்பை, ஸரயு, சர்மண்வதி, வேத்ரவதி, ஹஸ்திஸோமை, திக், சாரவதி, பயோஷ்ணி, வேணை, பீமரதி, காவேரி, சுலுகை, வாணி, சதபலை, நீவாரை, அஹிதை, ஸுப்ரயோகை, பவித்ரை, குண்டலி, ஸிந்து, ராஜனி, புரமாலினி, பூர்வா பிரமை, வீரை, பீமை, ஓகவதி, பாசாசினி, பாபஹரை, மஹேந்திரை, பாடாலாவதி, கரீஷிணி, அஸிக்னி, மஹானதியான குசசீரை, மகரி, மேனை, ஹேமை, க்ருதவதி, புராவதி, அனுஷ்ணை, சைப்யை, காபி.

கலக்க முடியாத ஸதா நீரை, மஹா நதியான குசதாரை, ஸதாகாந்தை, சிவை, வீரவதி, வஸ்தரை, ஸுவஸ்தரை, கவுரி, கம்பனை, ஹிரண்யவதி, வரை, வீரகரை, மஹா நதியான பஞ்சமி, ரத சித்திரை, ஜோதிரதை, விஸ்வாமித்ரை, கபிஞ்சலை, உபேந்தரை, பஹுலை, குவீரை, அம்பு வாஹினி, வினதி, பிஞ்சலை, வேணை, துங்கவேணை, விதிசை, கிருஷ்ணவேணை, தாம்ரை, கபிலை, கலு, ஸுவாமை, வேதாஸ்வை, ஹரிஸ்ராவை, சீக்ரை, பிச்சலை, ஆழமுள்ள பரத்வாஜி, கவுசகி சோணை, பாஹுத்யை, சந்திரமை, துர்கை, சித்திரசிலை, பிரம்மவேத்யை, ப்ருஹத்வதி, யவ்க்‌ஷை, ரோஹி, ஜாம்பூ நதி, ஸுநஸை, தமஸை, தாஸி, வஸாமன்யை, வரணாசி, நிலை, த்ருதவதி, மஹா நதியான பர்ணாசை, மானவை, விருஷபை, பிரம்ம மேத்யை, பிருஹத்வனி.

எப்போதும் ரோகமற்றதான கிருஷ்ணை, மெதுவாக செல்லும் மந்த வாஹினி, பிராம்மணி, மஹாகவுரி, துர்கை, சித்திரோபலை, சித்ராதை, மஞ்சளை, மந்தாகினி, வைதரணி, மஹா நதியான கோஷை, சுக்திமதி, அனங்கை, வ்ருஷஸை, லோஹித்யை, கரதோயை, விருஷகை, குமாரி, ரிஷி, குல்யை, மாரிஷை, ஸரஸ்வதி, மந்தாகினி, ஸுபுண்யை, ஸர்வை, கங்கை இப்படியாக பல நதிகளும் இதற்கு மேலும் பாரத வர்ஷத்தை அலங்கரித்தன.

எவர் ஒருவர் தாய் போன்ற நதியை பழித்து, அசுத்தப்படுத்துகிறாரோ அவருக்கு தோல்வியாதி வந்து அவர்களின் குலமும் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடையும் என்பது பிரமாணம்.

இன்று இத்தனை நதிகளை தேடுவது மிகவும் சிரமம்... அது உங்கள் ஏரியாவில் [2 BHK, 3 BHK flat] யாக மாறி கூட இருக்கலம். யார் கண்டார்?

இத்தனை நதிகளை கண்டிப்பாக பார்க்க முடியாது... குறைந்த பட்க்ஷம் வாய் விட்டு படியுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

ராம்! ராம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. நீர் இன்றி அமையாது உலகு....நன்றி 👌

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete