​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 22 May 2024

சித்தன் அருள் - 1610 - திருவிளையாடல்கள்!













வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம்மை வாழ வைக்கும் தெய்வம் அகத்திய பெருமான் நம் குருநாதருடைய வாக்குகள் எப்படியெல்லாம் உண்மை பொருள்களை விளக்கி!!!

பக்தி என்பது என்ன?? எப்படி பக்தி காட்ட வேண்டும் !!! 

புண்ணியம் என்பது என்ன?? புண்ணியம் எப்படி செய்ய வேண்டும்?? என்பதையும்

உண்மையான பக்தியும் புண்ணியமும் இருந்தால் எப்படி எல்லாம் கர்மாக்களை அகற்றி விதியை மாற்றி வழிநடத்தி செல்லும் என்பதற்கு சில நேரடியான உதாரண சம்பவங்கள் நடத்திக் காட்டினார்... அத் திருவிளையாடல்களை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

திருவிளையாடல் 1 .

குருநாதர் பால திரிபுரசுந்தரி வாக்கில் சித்தன் அருள் - 1599 - அன்புடன் அகத்தியர் - திரிபுரசுந்தரி ஆலயம்!

எதை என்றும் புரிய புரிய இதனால்தான் அப்பனே எவை என்றும் புரியாமல் கூட எவை என்றும் அறியாமல் கூட அப்பனே பின் யாங்கள் நிச்சயம் திட்டித் தீர்த்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய 

அதிலும் அப்பனே அர்த்தம் உண்டு என்பேன் அப்பனே. அடித்தாலும் அதிலும் அர்த்தம் உண்டு அப்பனே.

எவை என்றும் புரிந்தும் கூட !!! 

இதனால் பல கர்மங்கள் அப்பனே போகுமப்பா.

என்று சித்தர்கள் திட்டுவதில் கூட கர்ம வினை விலகும்..... என்று வாக்குகள் தந்திருந்தார் 

இந்த குருநாதருடைய வாக்குகள் எந்த அளவிற்கு நம்மை வழி நடத்துகின்றது என்பதற்கு உதாரண சம்பவமாக இவை நடந்தது.

இப்படி கர்ம வினை தீருவதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உரசி செல்வதன் மூலம் நம்மிடம் இருந்து யாசகம் பெற்றுச் செல்வதன் மூலம் தொடுவதன் மூலம் சித்தர்கள் பல முறை பல அடியவர்களுக்கு கர்மவினை அகற்றுவதற்கு திருவிளையாடல்கள் செய்துள்ளனர்.

ஆனால் இதற்கும் புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த சம்பவம் எல்லாம் நடக்கும். 

அப்படி தொடுவதன் மூலம் அடிப்பதன் மூலம் உரசுவதன் மூலம் கர்ம வினைகளை அகற்றிய சம்பவங்கள் தனிநபர் வாக்கில் பல நபர்களுக்கு குருநாதர் வாக்குகளாக கூறியுள்ளார். அப்பனே திருவண்ணாமலை செல் உந்தனுக்கே தெரியாமல் ஒரு சித்தன் உன்னை வந்து உரசி செல்வான் அதனால் பல கர்மவினைகள் தீரும் என்று பலமுறை பல அடியவர்களுக்கும் கூறியிருக்கின்றார் சில அடியவர்களுக்கு அந்த ஆலயத்திற்கு செல் ஒரு ஞானி ஒருவன் உன்னை வந்து சந்திப்பான் என்று கூறி பல கர்மாக்களை இப்படி நமக்கே தெரியாமல் எடுத்துச் செல்வதற்கு வழி வகுத்து நம்மை காப்பாற்றிக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றார் நம் குருநாதர். 

இதேபோன்று காசியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.

அகத்தியர் மைந்தன் சுவடி ஓதும் திரு.ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு குருநாதர் சில ஆலயங்களுக்கு செல்ல உத்தரவு கொடுத்தார் அதன்படி அந்த ஆலயங்களுக்கெல்லாம் சென்ற பிறகு காசிக்கும் சென்றார். 

வட இந்தியாவில் சில அகத்திய பக்தர்கள் இருக்கின்றனர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு நேரடியாக திரு ஜானகிராமன் ஐயாவை வந்து சந்திக்க முடியவில்லை என்றால் அவர்கள் வட இந்தியாவில் அய்யா செல்லும் ஆலயத்தில் நேரடியாக வந்து கண்டு குருநாதரிடம் நாடி உபதேசம் பெற்று செல்வார்கள். 

அதன்படியே பஞ்சாப் மற்றும் குஜராத் மகாராஷ்டிராவில் இருந்து அடியவர்கள் காசிக்கு வைகாசியில் காகபுஜண்டர் மகரிஷி உரைத்தபடி வாக்கினை பின்பற்றி வந்திருந்தார்கள்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களும் அங்கு சென்ற பொழுது அங்கு சந்தித்துக் கொண்டார்கள். 

காசியில் கங்கை கரையில் மீர் காட் படித்துறையில் சாதுக்களுக்கு அன்னதானம் நடக்கும். அதில் அகத்திய பக்தர்கள் அனைவரும் அந்த அன்னதான சேவையில் பங்கு கொள்வார்கள் அதன்படியே திரு ஜானகிராமன் ஐயாவும் அங்கு நடக்கும் அன்னதானங்களில் பங்கெடுத்து முடிந்தவரை பௌர்ணமி அமாவாசை தினங்களில் அன்னதானத்தை குருநாதர் உத்தரவுப்படி மேற்கொள்வார். 

18/5/2024 அன்றும் மீர் காட் படித்துறையில் சாதுக்களுக்கு அன்னதான சேவை செய்யும் பொழுது கிட்டதட்ட நிறைய சாதுக்கள் வந்து அமர்ந்திருந்தனர். 

அதில் அன்னதான சேவையை தொடங்குவதற்கு முன்பு அடியவர்களால் திருவாசகம் ஓதி அனைவருக்கும் உணவு உண்பதற்கான இலை தட்டுக்கள் நீர் மற்றும் வரிசையாக அமர வைத்து வழங்கி விட்டு... அன்னத்தை பரிமாறிய பொழுது மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு அடியவரின் கால் ஒரு சாது அமர்ந்து உண்ணும் தட்டில் பட்டுவிட்டது. 

உடனடியாக அந்த சாது கோபமுற்று!!!!!.... இனி நான் உணவை உண்ண மாட்டேன் எனக்கு உணவு தேவையில்லை!!!

நீ வேறு உணவைக் கொண்டு வந்தாலும் நான் உண்ண மாட்டேன் என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு.... அங்கேயே அமர்ந்து விட்டார் அதாவது அனைத்து சாதுகளும் உணவு உண்ண தொடங்கிவிட்டனர். ஆனால் இவர் சபரிமலை ஐயப்பன் போல கால்களை மடக்கி வைத்து அதில் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அப்படியே எதுவும் பேசாமல் """ உர்!!! என அமர்ந்து அப்படியே இருந்தார். 

எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சி செய்தும் அவர் சமாதானம் அடையவில்லை ... இதனால் வருத்தமுற்ற அந்த மகாராஷ்டிராவை சேர்ந்த அடியவர் மிகவும் சோர்வடைந்து கவலை பட்டார். 

ஏனென்றால் இந்த பக்தர் குருநாதருடைய ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே பின்பற்றி பல தான தர்மங்கள் வழிபாடுகள் செய்து வருபவர் இவருக்கு சித்ரா பௌர்ணமி போது கூட 108 பெண்களுக்கு வஸ்திரங்கள் உதவிகள் செய்யச் சொல்லி அதையும் சரிவர செய்து அதன் பிறகு குருநாதருடைய ஆசி பெற வேண்டும் என்பதற்காகவே காசி வந்தார் ஆனால் வந்த இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டு மிகவும் கவலை அடைந்து விட்டார். 

இதற்கிடையே பரிமாறிக் கொண்டிருந்த ஒரு அடியவர் அவரிடம் நீங்கள் ஏன் உணவை உண்ணவில்லை என்று சாதாரணமாக கேட்க ஏனென்றால் இவருக்கு நடந்த சம்பவம் தெரியாது. 

அதற்கு அந்த சாதுவும் இல்லை நான் இப்பொழுது உணவை உண்ண மாட்டேன் சந்தியா காலம் வந்த பிறகு தான் உண்ணுவேன் என்று சிரித்துக் கொண்டே கூறி அவரை அனுப்பி விட்டார். 

பரிமாறிய அடியவரும் சரி அவருடைய விருப்பம்  என்று நினைத்துக் கொண்டு மற்ற அடியவர்களுக்கு பரிமாறத் தொடங்கிவிட்டார்.

சாது திட்டியதால் பரிமாறுவதை நிறுத்திய அந்த மகாராஷ்டிரா அடியவர் மிகவும் வருத்தப்பட்டு  உடன் வந்த அடியவரிடம் கூற அவரும் பரிமாறிக் கொண்டிருந்த அடியவருக்கு தெரியப்படுத்தி அவர் உடனடியாக ஒரு தட்டில் சாதம் பருப்பு தயிர் பழங்கள் வைத்து எடுத்து சென்று கவலை அடைந்த அடிய வரையும் அழைத்துச் சென்று அவரையும் சாது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வைத்து

அவர் முன்பே வைத்து அவர் காலில் விழுந்து அவர் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டு !!!!

ஐயா நாங்கள் அனைவரும் அகத்திருடைய பக்தர்கள் நாங்கள் எந்த தவறு செய்திருந்தாலும் எங்களை மன்னித்து விடுங்கள்... தெரியாமல் கால் பட்டு விட்டது மன்னித்து விடுங்கள் எங்களை மன்னித்து தயவு செய்து உணவை உண்ணுங்கள் என்று காலை கட்டியாக பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு விட்டார். 

அதைக் கண்ட சாதுவிற்கும் மனம் இளகிவிட்டது!!!! வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தவர் காலில் விழுந்து கதறியவுடன் அவர் கண்களிலும் கண்ணீர் கசிந்தது. 

அந்த அடியவரும் நீங்கள் ஒரு வாய் சோறு உண்ணும் வரை இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன் என்று அவருக்கு எதிரே அமர்ந்து விட்டார். கால் பட்ட தட்டையும் உணவையும் மாற்றி வைத்துவிட்டு புதிய உணவை கையில் கொடுத்து விட்டு எதிரே அமர்ந்து கொண்டார். 

அந்த சாதுவும் சிரித்துக் கொண்டு!!!!

இன்று என்னுடைய விதிமுறையை உடைத்து விட்டு உண்கின்றேன்... என்று வடமொழியில் பேசிவிட்டு  சோறு பிசைந்து வாயில் போட்டு உண்ணத் தொடங்கினார். 

இதைக் கண்ட அடியவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

இப்படியே அந்த அன்னதானமும் வந்திருந்த அனைத்து சாதுக்களுக்கும் உணவு வழங்கி சிறப்பாக முடிந்தது.

மாலை ஆனதும் காசி விஸ்வநாதர் தரிசனம் விசாலாட்சி தேவி அன்னபூரணி அம்மா தரிசனம் எல்லாம் செய்து விட்டு குருநாதருடைய ஜீவனாடி வாக்குகளை கேட்பதற்கு ஜானகிராமன் ஐயாவிடம் சொல்லி ஐயாவும் குருநாதரை வணங்கி சுவடியை பிரித்து வாக்குகள் நல்கினார். 

முதலில் காகபுஜண்டர் மகரிஷி பொதுவாக்கு கூறி முடித்தவுடன் நம்மை வாழவைக்கும் தெய்வம் அகத்திய பெருமான் அடியவர்கள் கேட்டதற்கு நல் உபதேசம் செய்தார்.

அப்பொழுது மதியம் அன்ன சேவையில் நடந்த இந்த சம்பவத்தை குருநாதர் இடம் கேட்ட பொழுது

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே அறிந்தும் கூட ஒரு சித்தனே அவன்.. என்பேன் அப்பனே 

இதனால் கர்மாத்தை எடுத்து சென்று விட்டான் அப்பனே.... திட்டி தீர்த்தான் அப்பனே...

கவலைகள் இல்லை என்பேன் அப்பனே!!!!!

அப்பனே அறிந்தும் கூட அப்படி திட்டவில்லை என்றால் அப்பனே ஓர் உயர்ந்த மனிதன் அப்பனே அறிந்தும் கூட அரசாங்கத்தில் இருந்து உன்னை அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே சரியாகவே பயன்படுத்தி அப்பனே உன்னை எங்கேயோ அழைத்து சென்று இருப்பான்....உள்ளே!!!! அதனால் அது எவை என்று அறிய அறிய இங்கு தீர்ந்துவிட்டதப்பா....

(அந்த அடியவருக்கு ஒருவர் மேல் இடத்திலிருந்து பழக்கம் ஆகி சில விஷயங்களை செய்ய சொல்லி அந்த விஷயங்கள் மூலம் பல பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் கேஸ் கோர்ட் வழக்கு ஆகி அவர் மீது தீர்ப்பாகி ஜெயிலுக்கு சென்று இருக்க வேண்டிய கர்மாவை இவர் செய்த பக்தியும்  செய்த புண்ணியம்  காரணத்தால் குருநாதர் அகத்திய பெருமான் ஒரு சித்தனை அனுப்பி அவரை திட்டி தீர்த்ததன் மூலம் அந்த கர்மாவை எடுத்துச் சென்று விட்டார்)

பின் அவந்தன் ஆசிர்வாதங்கள்!!!! அப்பனே கவலையை விடுங்கள்!!!!!

அப்பனே இது போலத்தான் சில கர்மாக்களை யான் அகற்றுவேன் அப்பனே மறைமுகமாக வந்து!!!!!

அப்பனே இப்பொழுது சொல்கின்றானே இவந்தனுக்கும் (காலில் விழுந்து வணங்கிய மற்றொரு அடியவர்)

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இவந்தனுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்பந்தம் என்று கூட தவறான அப்பனே எதை என்று அறிய அறிய எண்ணத்தை ஏற்படுத்தி இவன் பெயரையும் கெடுத்து இருக்கும் என்பேன் அப்பனே.

ஆனால் அவ் சித்தன் அக் கர்மாவையும் எடுத்து சென்று விட்டான்!!!!

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய... அனைத்தும் நீங்கள் அதாவது யான் அதாவது என் பேச்சை சொல் பேச்சை கேட்டாலே அப்பனே அனைத்து  சித்தர்களின் ஆசிகளையும் வாங்கித் தருவேன் அப்பனே.. ஆசிகள் அப்பனே கவலையை விடுங்கள் அப்பனே!!!

என்று குருநாதர் வாக்குகள் தந்தார் !!!

ஒரு சிறிய சம்பவத்தின் பின்னே எப்படி எல்லாம் நம்மை மறைமுகமாக வந்து காப்பாற்றி திருவிளையாடல் புரிந்து வழி நடத்துகின்றார் என்பதை நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது!!!

குருநாதர் சொல் பேச்சை கேட்டு அப்படியே பின்பற்றுவது பக்தியும் புண்ணியமும் சரியான முறையில் கடைப்பிடித்து வந்தாலே இதுபோன்ற சம்பவங்கள் அனைவருக்கும் நடக்கும். 

குருநாதர் விதியையும் மாற்றுவார் பல கர்ம நிலைகளில் இருந்து நம்மை காப்பாற்றவும் செய்வார். 

நாம் செய்ய வேண்டியது எல்லாம் குருநாதர் சொன்னதை அப்படியே பின்பற்றி வந்தாலே போதுமானது.

திருவிளையாடல் 2

அடியவர்களே இந்த உலகம் வெப்பமான காலகட்டத்தில் அனைவருக்கும் குருநாதர் உத்தரவுப்படி சகல ஜீவராசிகளுக்கும் உணவு நீர் மோர் இவற்றையெல்லாம் குருநாதர் செய்யச் சொல்லி உத்தரவு தந்து அதன்படி அடியவர்கள் செய்து வருவதை நாம் அறிவோம். 

இந்த கோடை காலத்திற்கு முன்பே திரு ஜானகிராமன் ஐயாவிற்கு ஒரு உத்தரவினை தந்தார் குருநாதர். 

அப்பனே ஒரு வாகனத்தை ஏற்படுத்தி காடுகள் எங்கும் வனங்கள் எங்கும் வறட்சியின் காரணமாக அங்கு வசிக்கும் விலங்கினங்களுக்கு நீரையும் பழங்களையும் வழங்கி வர வேண்டும் அவற்றின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று குருநாதர் உத்தரவு தந்திருந்தார். 

அதன்படி திரு ஜானகிராமன் ஐயா செயல்பட  தொடங்கினார் !!!!

திரு ஜானகிராமன் ஐயா ஊரில் இருக்கும் இளைஞர் குழுவிடம் பேசி அவர்களிடம் இந்த பணியை ஒப்படைத்து அனுதினமும் வேலூரை சுற்றியுள்ள ஜவ்வாது மலை தொடர் அடிவாரங்களில் மற்றும் மலைப்பகுதிகளில் நீர் தொட்டிகள் அமைத்து அனுதினமும் சென்று நீர் நிரப்பி வருவது மற்றும் வாழைப்பழங்கள் தர்பூசணி பழங்கள் கொய்யாப்பழங்கள் என அதிக அளவில் வாங்கி வனங்களில் இருக்கும் வனப் பிராணிகளுக்கு குறிப்பாக அனுமன் ரூபங்கள் வானரங்களுக்கு தினமும் வழங்கிக் கொண்டே வரச்செய்தார்.

அதன்படி ஜானகிராமன் ஐயா ஒப்படைத்த பணியை இளைஞர்கள் குழு இப்பொழுதும் அதை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். 

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் அனுதினமும் வனவிலங்குகளுக்கு நீர் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குங்கள் என்று  கூறுயதை அப்படியே கடைபிடித்து அந்த விலங்குகள் உணவு தேவையை முழுவதும் தினமும் பூர்த்தி செய்து கொண்டே வந்தனர்.

இடையிடையே திருவண்ணாமலைக்கும் சென்று சாதுக்களுக்கும் சூட்டை தணிப்பதற்காக தர்பூசணி பழங்களை வழங்கி வந்தார்கள்.

வாழைப்பழங்கள் தர்பூசணி பழங்கள் என மொத்தமாக வாங்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வன பகுதிகளில் சென்று பழங்களை சிறிது சிறிதாக வெட்டி அவர்கள் வசிக்கும் இடங்களில் இட்டுக் கொடுத்தும்!!!!! பங்குனி சித்திரை மாதங்களில் வேலூரை சுற்றியுள்ள பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள் சந்தை வளாகங்கள் ... கோயில்கள் ஜீவசமாதிகள் குறிப்பாக பங்குனி சித்திரை மாதத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் சீதா அம்மாவிற்கும் திருக்கல்யாண உற்சவங்கள் இந்த சமயத்தில் நடக்கும் அப்பொழுது அங்கு அகத்தியர் வாகனம் சென்று வரும் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் நீர்மோர் வழங்குதல் இனிப்பை வழங்குதல்... என சேவைகளை சிறப்பாக செய்து கொண்டே வந்தனர் இப்பொழுதும் செய்து கொண்டு வருகின்றனர்!!!

நம் குருநாதர் கூறியபடி புண்ணிய செயல்கள் அதிகரித்தால் ஈசனே சூரியனை சற்று விலகி இருக்க சொல்லி குளிர வைப்பான் என்று கூறியபடி கடந்த 10 நாட்களாக சூரிய வெப்பம் அதிகம் தாக்காமல் புண்ணிய செயல்கள் எங்கெல்லாம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் மழை பெய்து பூமி குளிர்ந்து வருகின்றது.

இதில் பெரும் முத்தாய்ப்பாக

திடீரென இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு திரு ஜானகிராமன் ஐயா வீட்டு வளாகத்திற்கு முன்பு அதிகாலையில் ஒரு 30க்கும் மேற்பட்ட வானரங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டது வீட்டுக்குள் வந்த பூஜை அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ளே நுழைந்து அமைதியாக இருந்து அங்கும் இங்கும் தாவி மகிழ்ந்து சிறிது நேரம் இருந்துவிட்டு திரு ஜானகிராமன் ஐயா அவர்களின் குடும்பத்தினர் கைகளால் பழங்கள் மற்றும் பொரி இவற்றையெல்லாம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்து விளையாடிவிட்டு சென்றன.

இப்படி அந்த ஊரில் யாருடைய வீட்டிற்கும் இதுபோன்று வந்ததில்லை அந்த ஊரில் சொல்லப்போனால் வானரங்கள் இல்லை. 

ஜவ்வாது மலை பகுதிகளில் தான் வானரங்கள் அதிகம். 

திரு ஜானகிராமன் ஐயா யாத்திரைகள் இருக்கும் பொழுது வீட்டில் இருந்து இதை அழைத்து சொன்னார்கள்!!! ஐயாவும் அப்படியா மிகவும் நல்லது இனிமேல் வீட்டிலும் பழங்கள் எப்பொழுதும் வைத்துக் கொள்ளுங்கள் அவர்கள் வரும்பொழுது வழங்க வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார். 

இதற்கிடையில் ஓரிடத்தில் குருநாதரிடம் ஜீவநாடி உபதேசம் பெறும் பொழுது 

அப்பனே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய வந்தது அனுமான்!!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தனுடைய பரிவாரங்கள்!!!! இவ் ரகசியத்தை இன்னும் விளக்குகின்றேன் அப்பனே நல்லாசிகள்..

என்று வாக்குகள் தந்திருந்தார். 

திருவண்ணாமலையில் சென்று சாதுக்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கிய பொழுதும் திடீரென நான்கைந்து சாதுக்கள் சூழ்ந்து கொண்டு அந்த இடத்தில் ஒரு பரவச நிலை போல வேறு ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டது. அவை அந்த இளைஞர்கள் ஏதோ ஒரு வித்தியாசமாக இருக்கின்றதே என்று அவர்களால் உணர முடிந்தது. 

திருவண்ணாமலை சம்பவத்தையும் திரு ஜானகிராமன் ஐயாவிடம் கூறிய பொழுது இதுவும் சித்தர்களுடைய விளையாட்டே என்று பதில் கிடைத்தது!!!!!

எல்லாம் இறைவனின் கருணை !!!!!!

நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறுகின்ற ஒரு வார்த்தை அப்பனே தான தர்மங்கள் புண்ணியங்கள் நீங்கள் செய்யும் பொழுது நீங்கள் எங்களை தேடி வரத் தேவையில்லை!!!

யாங்களே உங்களை தேடி வருவோம்!!!! அந்த இறைவனை அழைத்து வருவோம் என்று ஒவ்வொரு வாக்களும் குருநாதர் குறிப்பிடுவதை இந்த இடத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்கின்றோம். 

புண்ணியங்கள் இருந்தாலே புண்ணிய செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலே இறைவன் நேரடியாக வருவான் வருவதற்கு ஒரு முத்தாய்ப்பு அத்தாட்சியாக இந்த சம்பவம் இந்த வாரத்தில் நடந்தது.... புண்ணிய செயல்கள் செய்யும் ஒவ்வொருவருக்கும் இறைவனுடைய வருகை சித்தர்களுடைய வருகை மறைமுகமாக நடந்து கொண்டே இருக்கும்.

திருவிளையாடல் 3

மதுரையை சேர்ந்த அகத்தியர் அடியவர்... ஈசனின் மறுபெயர் கொண்டவர்... நம்மை வாழ வைக்கும் தெய்வம் அகத்தியர் பெருமானால் பரமா!!! என்று அன்போடு அழைக்கப்படும் திரு பரமசிவம் ஐயா அவர்கள் குருநாதர் சொன்ன உத்தரவுப்படி மதுரையை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தினமும் அகத்தியர் இறையருள் மன்றத்தின் நண்பர்கள் குழு உடன் சேர்ந்து பல சேவைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள்...

இதற்கிடையே திரு பரமசிவம் ஐயா அகத்தியர் இறையருள் மன்ற நண்பர்கள் செல்வம் மற்றும் ஜெகநாதன் இவர்களுடன் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து கோமதி அம்மன் தரிசனமும் செய்து நவகிரகம் அருகே குருநாதரை நினைத்து வணங்கி ஈசனையும் நினைத்து வணங்கி திருவாசகம் சிவபுராணம் ஓதத் தொடங்கினர். 

திருவாசகம் ஓதி முடித்தவுடன்.... அந்த இடத்திற்கு ஒரு 18  வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வந்தார் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு போன்று அவர் இருந்தார்....

வந்தவர் செய்த செய்கைகள் அனைத்தும் திகைப்பையும் பயத்தையும் ஊட்டுவதாகவே இருந்தது. 

வந்தவர் ஏதேதோ பேசிக்கொண்டு திடீரென பாக்கெட்டில் கையை விட்டு  திருவாசகம் ஓதிய அடியவர்களுக்கு சாக்லேட் இனிப்பை வழங்கினார். 

என்னப்பா இன்று உங்களுடைய பிறந்தநாளா என்று கேட்டதற்கு இல்லை சும்மா தருகின்றேன்!!! இப்படி அனைவருக்கும் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு அருகில் அமர்ந்து கொண்டார். 

அவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் வித்தியாசமாகவும் பயமுறுத்தும் வகையில் இருந்ததால் அடியவர்களும் சற்று  அவரை தள்ளி நின்றே கண்காணித்தனர். 

திடீரென்று உடனடியாக நான் இமயமலை செல்ல வேண்டும் என்று அந்த சிறுவன் கூறினார். 

அடியவர்களும் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்டதற்கு ஆம் நான் சாப்பிட வேண்டும் ஏதாவது தாருங்கள் என்று கேட்க கோயிலுக்குள்ளே இந்த சம்பவம் நடந்ததால் வெளியே அழைத்துச் சென்று உணவு வாங்கித் தர நினைத்த அடியவர்கள் அவரிடம் சமாதானமாக பேசி அழைத்து போக தொடங்க அவர் அதை ஏற்கவில்லை 

உங்கள் கையில் உள்ளதை கொடுங்கள் என்று கேட்டவுடன் அடியவர்களும் தங்களிடம் இருந்த சிறு தொகையை அந்த சிறுவனிடம் கொடுத்தார்கள். 

இவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு அந்த சிறுவன் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று சென்று விட்டார்!!!!

அந்தச் சிறுவன் வேறு யாருக்கும் இனிப்பை பகிர வில்லை திருவாசகம் ஓதிய இந்த அடியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். 

இதனைப் பற்றியும் குருநாதர் தன் வாக்குகளில் பரமசிவம் ஐயா அவர்களுக்கு இரவில் காசியில் இருந்து 

அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய...

அப்பனே அனைத்தும் அப்பனே எதை என்று அறிய அறிய ஈசனின் லீலைகள் தான் என்பேன் அப்பனே. 

நலன்கள் ஆகவே எம்முடைய ஆசிகளும் பரிசுத்தமாக இருக்கும் பொழுது அப்பனே யான் உன்னை ஆட்கொண்டு விட்டேன் அப்பனே 

இதனால் என்னுடைய பாதையில் அழைத்துச் சென்று அப்பனே நல்முறையாகவே உந்தனுக்கு கொடுத்து அப்பனே இன்னும் புண்ணியத்தை அறிந்தும் அறிந்தும் சேர்க்கச் சொல்லி அப்பனே உந்தன் குழந்தைகளையும் நான் பார்த்துக் கொள்வேன் அப்பனே நலங்களாக 

கவலையை விடு அப்பனே 

அப்பனே இன்னும் இருந்தும் இருந்தும் திருத்தலங்களாக அப்பனே சென்று சென்று அப்பனே எதை என்று அறிய அறிய சுவடியின் மூலம் அப்பனே இன்னும் நல்முறையாக வாக்குகள் செப்பி செப்பி அப்பனே இன்னும் நல்முறையாக உந்தனுக்கு ஆசிகள் உண்டப்பா....

எம்முடைய ஆசிகளும் ஈசனுடைய கருணைகள் கூட இங்கிருந்தே (காசியிலிருந்து) உந்தனுக்கு உண்டு உண்டு ஆசிகள் ஆசிகள் அப்பனே 

என்று வாக்குகள் நல்கி இருந்தார்!!!

அடியவர்கள் அனைவருக்கும் இதனைப் பற்றி இன்னும் விளக்கிக் கூற அவசியம் இல்லை ஏனென்றால் என்னென்ன செய்தால் எப்படி எல்லாம் நடக்கும் என்பதை நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் தெளிவாக உரைத்துக்கொண்டே வருகின்றார். 

அதன்படியே நல் பக்தியும் நல் புண்ணியமும் செய்து சென்று கொண்டு இருந்தால் நம் வாழ்க்கையும் வளம் பெறும் கர்மாக்களும் ஒழியும்!!! சித்தர்களின் வாக்குகளும் கிடைக்கும் ஆசிகளும் கிடைக்கும் நம்மை ஆட்கொள்ளவும் செய்வார்கள். இறைவனுடைய நேரடி தரிசனமும் கிடைக்கும்.

இதனால் நம் பாவங்கள் கர்ம வினைகள் அகன்று முக்திக்கான வழியும் மோட்சமும் கிடைத்து இந்த பிறவி பெருங்கடலை நீந்தி இறைவன் காலடியில் இறைவன் என்னும் காந்தகத்தில் ஒட்டிக்கொண்டு சுபிட்சமாக வாழ முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமோ நம🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  3. மிகவும் அற்புதமான பதிவு...மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

    ReplyDelete
  4. அற்புதம் ஐயா, அகத்தியர் ஐயா கருணை இருந்தால் நம் வாழ்க்கையும் வளம் பெறும் ! ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே! ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமோ நம🙏🙏

    ReplyDelete
  5. அகத்தியன் இருக்க இனி எல்லாம் நலமே! இறைவா நன்றி!

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete