​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 16 May 2024

சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!







சூரத் சத்சங்கம் பாகம் 2

ஐயனே...... மாறிவரும் இக் கால சூழ்நிலையில் உடலில் சரியான வலிமை பெறுவதற்கு நாங்கள் என்ன செய்வது????

அப்பனே யான் முன்பே பலமுறை உரைத்து விட்டேன் அப்பனே!!!!! எதை என்று அறிய அறிய சொல்லிய மூலிகைகளை அப்பனே சரியாக எடுத்துக் கொண்டு அப்பனே பல வகையான கீரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பனே போதுமானது அப்பனே அதிலே சக்திகள் உள்ளதப்பா. அதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஆனால் நீங்கள் தான் கீரைகளை உண்ணுவதே இல்லை அப்பனே

அப்பனே எவை என்று அறிய அறிய வெள்ளை கரிசலாங்கண்ணி அப்பனே மஞ்சள் கரிசலாங்கண்ணி அப்பனே பொன்னாங்கண்ணி எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே முருங்கை இலைகளை கூட அப்பனே இன்னும் மணத்தக்காளி அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய முடக்கத்தான்  எனும் மூலிகையை கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பச்சையாகவே நெல்லிக்கனியை எதை என்றும் அறிய அறிய அப்பொழுது எவை என்றும் புரிகின்ற பொழுதும் கூட இதனால் அப்பனே பல வகையிலும் கூட பச்சைக் காய்கறிகளை உண்டு வர நன்று என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதை நிச்சயம் நீங்கள் செய்து வர நன்று என்பேன் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் அனுதினமும் அப்பனே ஓரிதழ் தாமரை இலைகளைக் கூட உண்டு வர பின் உடல் இரும்பு போல பல ம் பெருகும் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லிவிட்டேன் அப்பனே.

அதிகாலையிலும் மாலை வேலைகளிலும் நல்விதமாகவே அப்பனே சூரிய ஒளியில் உடம்பை நல்விதமாகவே வைத்திருக்க வேண்டும் அப்பனே நிமிர்ந்து நிற்க வேண்டும் சில சில வழிகளில் கூட உடல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் அப்பனே!!!!

ஐயனே இந்த சூரத் மாநகரில் நீங்கள் கூறும் மூலிகைகள் பச்சையாக கிடைப்பதில்லை உலர வைத்த பொடிகளாக உண்டு வரலாமா???

அப்பனே எதை என்றும் அறிய அறிய முழு பலன் பச்சை இலைகளுக்கே அப்பனே..... இருப்பினும் உண்டு கொள்க

அவை மட்டும் இல்லாமல் அப்பனே அனுதினமும் பூமி சக்கரை எதை என்று அறிய அறிய கிழங்கை கூட  கொண்டு உண்டு வருதல் அப்பனே இன்னும் பலமப்பா!!!!

அப்பனே அதாவது பூமியில் ஒளிந்துள்ள பொருட்களை... அதாவது மண்ணிற்கு உள்ளே விளையும் கிழங்கு வகைகளை உட்கொள்ள இன்னும் சக்திகளப்பா!!!!!!

ஐயனே இந்த மூலிகைகளின் விதைகளை கொண்டு விளைவித்து எடுத்துக் கொள்ளலாமா??? குறிப்பாக ஓரிதழ் தாமரை மூலிகை அரிதாகி வருகின்றது அதையும் விளைவித்துக் கொள்ளலாமா???

அப்படியே செய்யுங்கள் அப்பனே நலமாகவே... முதலில் அதைச் செய்யுங்கள் அப்பனே!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் இப்பொழுது தம் வாக்கில் மூலிகைச் செடிகளை பயிரிட்டு வளர்க்கச் சொல்லி இருக்கின்றார்!!!! அதனால் அடியவர்கள் அனைவரும் முடிந்தவரை தம் தன் நிலத்தில் அல்லது வீட்டு மாடி தோட்டத்தில் மூலிகைகளை வளர்க்கலாம்!!! அந்த மூலிகைகளை அன்றாடம் பயன் படுத்தி வரலாம்!!!

தேவைப்படும் அன்பர்களுக்கு வியாபார நோக்கம் இல்லாமல்  மூலிகைகள் கிடைக்காத அடியவர்களுக்கு  சேவை நோக்கத்தோடு அனைவருக்கும் அனுப்பித் தரலாம்!!! 

ஏனென்றால் சித்த மூலிகைகள் அனைத்தும் சித்தர்களுக்கு சொந்தமானவை!!!!!!

அதை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தினால் அது முழு பயன் தயாராது!!! நமக்கு கர்மாவும் ஏற்படும் அதனால் மூலிகைகளை பயிரிட்டு வளர்ப்பவர்கள் அதை அடுத்தவருக்கு சேவை நோக்கத்தோடு செயல்பட்டு கொடுக்க வேண்டும் !!! நியாயமான முறையில் செயல்பட வேண்டும்!!!

மூலிகை என்றாலே சித்தர்களுக்கு சொந்தமானது மனிதர்களுக்கு சொந்தமானது அல்ல!!!!

சித்தர்கள் கருணை கொண்டு நமக்கு அருளிய வரம் தான் மூலிகைகள்.

அனைத்து நோய்களுக்கும் மூலிகைகள் மூலம் நிவாரணம் பெற முடியும்!!!!

அதை அவர்கள் அனுமதி பெற்று தான் அவர்கள் ஆசீர்வாதத்தோடு முறையாக நாம் வளர்த்துவதோ பறித்து பயன் படுத்தவோ செய்ய வேண்டும்!!!!! எந்த ஒரு மூலிகைகளையும் பறிக்கும் பொழுது குருநாதர் அகத்திய பெருமானையும் போகர் பெருமானையும் சித்தர்களையும் நினைத்து வணங்கி பறித்து பயன் படுத்த வேண்டும்!!!

இப்படி செய்தால் தான் சித்தர்களுடைய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும்!!! சித்த மூலிகைகளின் பலனும் நமக்கு முழுமையாக கிடைக்கும் !!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

10 comments:

  1. அய்யா, ஒரு சிறிய விண்ணப்பம். நான் கார்த்திகேயன் மூன்றாண்டுக்கு முன் அகத்தியரிடம் திரு ஜானகி ராமன் அய்யா மூலம் அருள்வாக்கு பெற்றுள்ளேன். ஆனால் இப்பொழுது ஒரு பெரும் தொகையை ஒரு மோசடி கும்பலிடம் ஏமாந்துவிட்டேன். எனக்காக தாங்கள் மனமிறங்கி அகத்தியரிடம் பிரார்த்திக்க வேண்டுகிறேன். நான் இதிலிருந்து மீள அவரிடம் எனக்காக என் கதறலை சமர்ப்பிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொள்ள வழி காட்டுங்கள்

      Delete
    2. வணக்கம்!

      மதுரை, கோவை, இன்னும் பல இடங்களில் உள்ள அகத்தியர் அடியவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு, அவர் அங்கு வரும்போது சென்று குருநாதரிடம், நாடியில் வாக்கு கேட்கவும். தற்போது அவர் அலைகிற அலைச்சலுக்கு எங்கு, எப்போது இருப்பார் என தெரிவிப்பது கடினம்!

      Delete
  2. அகத்திய மாமுனிக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. அப்பப்பா சரணம் சரணம் உம் பாதங்கள் அப்பா

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  6. கோயம்புத்தூர், பெங்களூர் அகத்தியர் அய்யன் ஜீவநாடி வந்தால் தெரிவிக்கவும் நன்றி

    ReplyDelete
  7. அடியவர்களுக்கு வணக்கம்

    பூமிசக்கரைக்கிழங்கு குறித்து ஒரு புரிதல்


    அனைவரும் மரவள்ளி கிழங்கா சக்கரை வள்ளி கிழங்கா என்று சந்தேகம் எழுப்புகின்றார்கள்


    இவை இரண்டும் இல்லை


    பூமி சக்கரைக்கிழங்கு என்று ஒன்று உள்ளது காடுகளில் விளையும் பெரிய மிருதங்கம் அளவிற்கு இருக்கும்

    இதை வெட்டி எடுத்த சர்க்கரை கலந்த நீரில் முக்கி தருவார்கள் அல்லது உப்பு மிளகு தூள் தூவித் தருவார்கள்


    தமிழ்நாட்டில் சதுரகிரி கொல்லிமலை சேலம் போன்ற மலைப்பகுதிகளில் விளைகின்றது ரோட்டோரங்களில் தள்ளுவண்டிகளில் சில நேரம் வைத்துக் கொண்டிருப்பார்கள்


    வட இந்தியாவில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் சீதா அம்மாவும் வனவாசம் சென்ற பொழுது வனத்தில் இந்த கிழங்கைதான் உண்டு வாழ்ந்தார்கள் என்று வட இந்தியாவில் ஒரு ஐதீகம் உள்ளது இது ராமர் சீதா அம்மா பிரிய உணவு என்று இங்கு எல்லா தெருக்களிலும் விற்று கொண்டு இருப்பார்கள் இனிப்பு சர்க்கரை கலந்த நீரில் முக்கி கொடுப்பார்கள்

    மேலும் புகைப்படங்களையும் இதைக் குறித்த வீடியோக்களையும் தெரிவிப்போம் பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete