​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 3 May 2024

சித்தன் அருள் - 1597 - வேனல் காலத்துக்கான (சித்தர்களின்) யோசனைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வெயில் காலம் தொடங்கிவிட்டது. யாராலும் 100க்கு மேல் செல்கிற சூட்டை தாங்க முடியவில்லை. வீட்டிலும் அமர்ந்திருப்பது, வெளியே செல்வது எல்லாமே பலமுறை யோசித்து செய்ய வேண்டி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் வாழ்க்கை முறையை சற்று மாற்றி அமைத்துக் கொண்டால் சூட்டை தாங்கும் சக்தி கிடைத்து, இந்த காலத்தை கடந்து விட, சித்தர்கள் காட்டிய வழி ஏதேனும் உள்ளதா என தேடிய பொழுது, அடியேனுக்கு கிடைத்த எளிய விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

  • எந்த காரணம் கொண்டும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவைகளை அருந்தாதீர்கள். முதலில் அது ஒருவித சுகத்தை குளிர்ச்சி வழி கொடுத்தாலும், பின்னர் உடலுக்குள் உஷ்ணத்தை கூட்டி வேறு பிரச்சினைகளை வரவழைக்கும்.
  • நிறைய நீர் அருந்த வேண்டும். உடலில் நீர் சத்து குறைந்து விடாமல் கவனிக்கவும்.
  • ஒருநாளைக்கு இரண்டுமுறை குளிக்க வேண்டும். குளிக்கின்ற நீர் குளிர்ச்சியுடன் இருக்க ஒரு வழி உள்ளது. நிழலில் இருக்கும், சிமெண்ட் தொட்டி அல்லது ஒரு வாளியில் நீர் நிறைத்து நிழலில் ஓரமாக காலையில்/இரவில் மூடி வைத்தால், மாலை/காலை அந்த நீர் நன்றாக குளிர்ந்து இருக்கும்.
  • இரவு உறங்கும் போதும், வெளியே செல்லும் போதும் சிறிது பஞ்சை உருட்டி, வலது காதை மூடிவிட்டால், 15 நிமிடத்தில் சந்திரக் கலை நம் உடலில் வேலை பார்க்கத் தொடங்கும். இது உடலை குளிரவைக்கும். சூடு அதிகம் தெரியாது.
  • ஆமணக்கு எண்ணையை தலை உச்சியில், இரு கண்களில், தொப்பிளில், ஆசன வாயில், இரு கால்களுக்கும் கீழே நன்றாக தேய்த்துவிட்டு உறங்கினால், மறுநாள் உற்சாகமாக எழுந்திருக்கலாம்.
  • உறங்கும் ஒரு மணிநேரத்திற்கு முன் இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை நீரிலோ, மோரிலோ சேர்த்து அருந்த குடல் சூடு குறையும், வயிறும் சுத்தமாகும்.
  • மண்கலத்தில் நீர் வைத்து குடிப்பது சால சிறந்தது. அதனுள் சிறிது வெட்டிவேர் போட்டால், அதன் எண்ணெய் நீரில் இறங்கி, நாம் குடிக்க உடல் சூட்டை குறைக்கும்.
  • சிறிது கறிவேப்பிலையும், கொத்தமல்லியும், உப்பும் சேர்த்து மோர் நீராகாராமாக அருந்துவது நல்லது. குறிப்பாக; இதில் மிளகாய் தவிர்க்கவும்.
  • இந்த காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெளியே செல்லும் பொழுது குடை, தொப்பி போன்றவை உபயோகிக்கலாம்.
  • காரமான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
  • மதியம் 1 மணி முதல் 5 மணி வரை வெயிலில்/வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
  • உடலில் உப்பு சத்து குறைந்து விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதன் அளவை கவனித்துக் கொள்ளுங்கள். ORS நீரில் கலக்கி கைவசம் வைத்துக் கொள்ளவும்.
  • சிலருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடும். இவர்கள், இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கு வழி 16 முறை சுவாசத்தை உள்ளே எடுத்து, விட 15 நிமிடத்தில் குறைந்த ரத்த அழுத்தம் சம நிலைக்கு வரும். இதை நிதானமாக செய்யவும்.
  • ஏதேனும் காரணத்தால், தொண்டை வலி வந்தால் விட்டு விடாதீர்கள். அது ஆளை அடித்து கீழே போட்டுவிடும். ஆன்டி-பையோடிக் மருந்துகளை தவிர்த்து, வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பை (நீற்றிய சுண்ணாம்பு) தொண்டை வெளியே நன்றாக பூசிட, 1 அல்லது 2 மணி நேரம் உறங்கி எழுந்தால், தொண்டை வலி போய் இயல்பாய் இருக்கும். சுண்ணாம்பு தொண்டையை வெந்து விடுமோ என்ற பயம் வேண்டாம், அது ஏற்கனவே, நீற்றப்பட்டது. ஒன்றும் செய்யாது.
தற்போதைக்கு தேடியதில் கிடைத்ததை இங்கே சமர்ப்பித்துள்ளேன். இன்னும் தகவல் கிடைத்தால் இங்கு சேர்த்து விடுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Advice on handling the heatwave and maintain health & balance in the siddha way 

An intensive heatwave is sweeping over many parts of the continent. Temperature has gone beyond 100 deg. F. in many places. This unbearable hot weather condition causes a lot of suffering to many people.

In what way to modify our lifestyle so that our bodies can handle this intense heatwave condition , and maintain health and balance ?   Advice based siddha medicinal system is given below.
  • Do not consume cold drinks / Ice creams in this season. They produce a pleasant cold sensation on the surface. But they actually trigger heat imbalance  inside the body, leading to other health issues.
  • Drink enough amount of water. It is very important to maintain water balance in the body.
  • Take cold water bath twice a day.  If you fill a bucket with water in previous morning/night and keep it under shade, then you get a bucketful of cool water for bath in the coming evening/morning.
  • At the time of going to bed or whenever you have to go outside in the hot sun, close the right ear with cotton. When the right ear is closed, chandra nadi will get activated in the body within the next 15 minutes. Whenever chandra nadi gets activated in the body, it will produce coolness in the body and thus one gets the capacity to bear the heat more.
  • Before going to bed, apply pure castor oil (Erand Oil) on the crown of the head, on top of the eyelids, on the belly button, on the anal region (muladhara) and on the soles of the feet. By doing so,  you will get a good sleep and wake up very fresh  will in the next morning.
  • One hour before going to bed, take 1 spoon of fenugreek(Methi) either in  a  glass of cold water / butter milk. Doing so will reduce the heat in the body and,  also, the digestion will be improved.
  • Drink water stored in mud pot (earthen pot ) . Along with it, soak a piece of vetiver (khus)  in the pot of water. This herbal water great helps in reducing the heat in the body.
  • Add a few curry leaves, coriander leaves and salt to Buttermilk. This  buttermilk mixture    is a good health drink for this hot summer. Important thing, do not add any green chillies with this drink.
  • Always wear clothes made of cotton (cotton-wear) in this season. When going out in the hot sun, remember to protect your head with a hat or an umbrella.
  • Avoid hot and spicy food in this season
  • Do not go out in the sun during the afternoon hours, especially 1 p.m. to 5 p.m.
  • Maintain mineral balance in the body by taking adequate salt to the food.
  • Diabetic patients are specifically required to be careful about their blood sugar levels. Keep ORS solution handy with you.
  • BP patients could experience low B.P. conditions these times. On occurrence of such low B.P. episodes, close the left nostril and breathe through your right nostril 16 times. This might roughly take 15 minutes if you breathe in a smooth and non-forceful manner. At the end of 15 minutes, you would see your B.P. has restored to normal levels.
  • Throat infection / Throat Pain : In this season, if you experience throat pain / throat infection. Do not ignore it. If you ignore it, it can be become very critically detrimental to the body. If you face any such problem, coat the region with white chunnam paste. It is the white chunnam paste that is taken with betel leaf ( aka Paan). (As the chunnam paste used in such purposes is quite diluted, it would not hurt the skin, so no need to fear). If you coat the chunnam paste in the throat region and rest, you will see that you are getting relief in 1 to 2 hours time. 

9 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத ஶ்ரீ அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙇‍♂️🙏

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா ...
    ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத ஶ்ரீ அகத்தியர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  4. மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏

    ReplyDelete
  5. ஐயா எனக்கு ஜீவ நாடி பார்க்க முடியுமா? அகத்திய பெருமான் என் துன்பத்தை தீர்ப்பார் என அவர் உதவியை எதிர்பார்த்து நீண்ட நாள் காத்துக் கிடக்கின்றேன்.வாழ்க்கை முடங்கி போய்விட்டது.பல வித சிக்கல்களால் செயலற்று வீணாக ஆயுளை கிழித்துக் கொண்டிருக்கிறேன்.அகத்திய பெருமான் பல அடியவர்களுடன் எளிதில் உரையாடும் போது நாங்கள் துன்பத்தில் மூழ்கும் போது இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறாரே என வேதனையாக இருக்கிறது.ஜானகி ராமன் ஐயா வுக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பினேன்.பதில் வரவில்லை.மருத்துவம் சார்ந்த வழிகாட்டும் ஜீவ நாடி யாரிடமாவது இருந்தால் தெரிவிக்குமாறு தங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.கண்டறியாத உடல் பிரச்சினைகளால் எட்டு ஆண்டுகளாக அவதிப்படுகிறேன்.மீள முடியவில்லை.குருநாதர் உதவியை பெற வழி காட்டுங்கள்.நன்றி.குருவடி சரணம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      திரு.ஜானகிராமன் இப்போது அகத்தியப்பெருமான் உத்தரவின் பேரில், வடஇந்திய புண்ணிய தல யாத்திரையில் உள்ளார்.

      கோவை, மதுரை போன்ற இடங்களில் உள்ள அகத்தியர் அடியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தால், அவர் இங்கெல்லாம் வரும் பொழுது சென்று பொது நாடி வாசிப்பில் கலந்து கொண்டு, உங்கள் பிரச்சினைகளை கேட்கலாம்.

      மருத்துவ நாடி வாசிக்கும் யாரை பற்றியும் அடியேனுக்கு தெரியாது.

      அக்னிலிங்கம்!

      Delete
    2. நன்றி ஐயா

      Delete
  6. வணக்கம் ஐயா வேலூரில் விஜய் குமார் என்பவரிடம் ஆதிசக்தி அன்னை ஜீவ நாடி உள்ளது.அந்த சுவடியில் மகான் அகத்தியர் ,சாய்பாபா நாம் வணங்கும் சித்தர் அந்த நாடியில் பேசுவார்கள்.அவரது தொலைபேசி எண்+91 82206 27413.அவருடைய youtube channel GNANA SAKTHI TV..நிச்சியமாக ஆதிசக்தி அருள்அன்னையும் அகத்தியரும் நல்வழி காட்டுவார்கள்.

    ஓம் அகத்தீசாய நம.

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete