​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 8 April 2024

சித்தன் அருள் - 1583 - கேள்வி-பதில் - 1 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குருநாதர் அகத்தியப்பெருமானிடம் அடியேன் கேட்ட தனிப்பட்ட/பொதுவான கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலையும், நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சமர்ப்பிக்கிறேன். இங்கு குருநாதர் அளிக்கும் பதில்கள் உங்கள் எண்ணத்தை தூண்டுபவையாக இருக்கலாம்.

ஏகாதசி அன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய இன்னும் சிறப்புகள் அப்பா. இதை ஏன் சூக்க்ஷுமமாக உரைத்தேன் என்பது போகப்போக புரியும் அப்பா!

கேள்வி:- எத்தனை தூரம் நேர்மையாக இருந்தாலும், ஒரு மனிதன் தன் வாழ்வில், நரகத்தை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது. இதற்கு உங்கள் பதில்?

குருநாதர் பதில்:- அப்பனே! அறிந்தும் கூட, உண்மைதான் அப்பனே! அதனால் தான் மனிதன் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்கிறேன் அப்பனே. ஏன் என்றால், இவ் ஆன்மா பல பல பிறவிகளை கடந்து தான் வந்துள்ளது. ஆனால், ஒரு பிறவியில் மட்டும் நேர்மையானவனாக  இருந்தால் போதுமானதா? அப்பா?

கேள்வி:- இதற்கு முன்னாடி வாழ்ந்த ஜென்மங்களில், ஒரு ஆத்மா நடந்து கொண்ட விதத்தை, இப்பொழுது மாற்ற முடியாது. (அப்படி வாழ்ந்தது, வாழ்ந்தது தான்). இப்பொழுது இருக்கிற ஜென்மத்தில் நேர்மையாக அந்த ஆத்மா வாழ்கிறதா இல்லையா, என்று பார்த்தால் போதுமே?

குருநாதர் பதில்:- அப்பனே! அதனால்தான் அப்பனே, யான் வந்து வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றேன்!

கேள்வி:- அப்படிப்பட்ட சூழ்நிலையில் (குருநாதர் இருக்கும் பொழுதே) நரகம் போன்ற சூழ்நிலை எதற்கு?

குருநாதர் பதில்:- அப்பனே! பல பிறவியில் செய்த கர்மாக்கள், கடை பிறவியில் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என்பது. இவ்வாறு செய்யவில்லை என்றால், (உந்தனுக்கு) இன்னும் இரு பிறவிகள் இருக்கின்றது. அதனால் தான் அப்பனே, இப்பிறவியில் அனைத்தையும் முடித்துவிட்டேன் அப்பனே! மீண்டும் கேட்பேன் அப்பனே! கடைசியில், பிறவி வேண்டுமா, மகனே என்று?

கேள்வி:- அடியேன் கேட்க வருவது என்னவென்றால், மருத்துவமனைக்கு ஒருவன் செய்கிற செலவை, மடை மாற்றி, வேறு நல்ல காரியங்களுக்கு உபயோகப்படும்படி நீங்கள் செய்யலாமே?

குருநாதர் பதில்:- அப்பனே! எதை என்று அறிய! அறிய! இதை நான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே! அதாவது, இறைவன் கொடுத்ததை, இறைவனே, எதோ ஒரு ரூபத்தில் பிடுங்கிக் கொள்வான் அப்பனே! இதற்கென்ன பதிலளிக்கின்றாய் மகனே!

கேள்வி:- மனிதனாக இருக்கிற எங்களுக்கு கிடைக்கின்ற ஒரு வாய்ப்பு, அவர் (குருநாதர்) கூறியபடி நல்ல விஷயங்களை பண்ணுவது.

குருநாதர் பதில்:- அப்பனே பணம் கோடிக்கணக்கில் செலவாகும். இருந்தாலும் அவனால் ஒரு உயிரை காப்பாற்ற முடியுமா? என்ன?  இதனால் தான் அப்பனே, விளையாட்டப்பா, இறைவனின் விளையாட்டப்பா. முதலில் ஒன்றும் இல்லாமல், கடைசியில் ஒன்றுமில்லாமல், உன்னிடத்தில் புண்ணியங்கள் இருக்க வேண்டும் என்பது என் அவா!

உன் பக்கத்தில் அமர்ந்துள்ளானே, அவந்தனுக்கு, கால்களே போயிருக்க வேண்டும்! ஆனாலும் அப்பனே, காப்பாற்றிவிட்டேன் அப்பனே! ஆனால், (அவன்) இரு குழந்தைகளை பார்த்தேன் அப்பனே! இதுதான் அப்பனே! நம்பி வந்துவிட்டான், மோசம் செய்யவில்லை.  அப்பனே! ஆனாலும், அறிந்தும் கூட பின் உடைந்திருந்தால், அப்பனே, அவன் என்ன சொல்லியிருப்பான் தெரியுமா? அகத்தியனை வணங்கினேனே, ஒரு பிரயோசனம் இல்லை என்று. ஆனால், காப்பாற்றிவிட்டேன்!

இதனால் தான் அப்பனே, யான் மறைமுகமாக இருந்து அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே! இனிமேலும் காப்பேன் அப்பனே!

ராகு, கேதுக்களின் துகள்கள், அதிகமாக ஒருவரின் உடலில், ரத்தத்தில் இருந்து செயல்படும் அப்பா! அவைகள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாதப்பா. இந்நிலையில் யார் திருமணம் செய்தாலும், தோல்வியில் போய் முடிந்துவிடுகிறது அப்பா! குறிப்பிட்ட வயத்துக்குப் பின் அவ்வேகங்கள் குறைகிற பொழுது, திருமணம் செய்தால் நல்லதப்பா. இதை புரிந்து கொண்டு என்னிடம் விட்டுவிடுங்கள் அப்பா! யான் பார்த்துக் கொள்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...பல விசியங்கள் அறிந்து கொண்டேன் ...பல விடயங்கள் கிடைத்துவிட்டது.திரு ஜானகிராமன் அவர்களிடம் தங்களின் வலைதளம் முன்பே கோவையில் 2020-இல் ஜீவநாடி பார்த்தோம் இருமுறை ...அப்பொழுது குருநாதர் கூறிய வாக்குகளுக்கு சில சூட்சுமம் இன்று உனர்ந்தேன்.தங்களின் குருவின் சேவையால் படிப்பதன் மூலமாக எங்களுக்கு பல வழி கிடைக்கின்றது.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha! Thanks ayya, these were the questions in our mind and got answers now.

    ReplyDelete
  4. Om Agatheesaaya Namah!

    Hope everyone is doing well! Here's the translation for the above post!

    Greetings to the devotees of Agathiyar!

    I submit here, to you all, a few general/personal questions that I had asked Sage Agathiyar and his answers for the same, for it may be thought provoking to all!

    "It's significant to perform Abhishekam for Lord Perumal on Ekadashi Tithi! It will soon be understood why I have told this subtly".

    Question: No matter how honest/righteous a person is, he/she somehow is pushed to experience hell (alike situations) in their lives. Would like to know your answer to this.

    Agathiyar's Answer: "It's true! That is why I say that people must understand and live. This is because a soul has been born after crossing so many births. However, is it enough to be righteous in only one birth?"

    Question: One cannot change how a soul lived (behaviour-wise) in the previous births. (Since it is the past life of a soul, it is impossible to change. it was how it was). Isn't it enough if we only consider whether that particular soul is living righteously or not in the present life (instead of considering the soul's past lives)?

    Agathiyar's Answer: "That's the reason I have been delivering my oracles!"

    Question: Then why does one have to endure a hell like situation in their respective lives?

    Agathiyar's Answer: "A soul has to experience hardships in its final birth as a result of Karma done in every previous births it had taken. If this doesn't happen, you would've had two other births to be taken. That's the reason I winded up everything for you in this birth itself. Again, I'd ask you, "Do you need any further births, my son?:.

    Question: What I'm asking is, can you substitute the money someone spends on hospital bills and use it for other good deeds?

    Agathiyar's Answer: I've been saying this often - What God has given, the God himself will take it away in some form. What is your answer for this, my son?

    Question: One opportunity we get as humans is to do good deeds as told by him (Sage Agathiyar).

    Agathiyar's Answer: Money can be spent in crores by a human. But will he//she be able to save a life? Therefore, all these are the divine play of God. In the beginning (when coming to this world) you came without anything. In the end (while leaving this world) you will have nothing. Thus, my only wish is that you must have Punyam with you (Punyam is permanent)!

    The person sitting beside you would've lost his legs! Yet, I saved him! I saw two of his children! He came to me with utmost faith and thereby, I didn't let him down. However, in case if he had lost his legs, you know what he would've said? He would've said, 'Oh! I prayed to Agathiyar but there was no use!'. Yet, I saved him!

    I've been watching everyone subtly! I shall save everyone further too!

    The particles of Rahu & Ketu are more active in a human's body from the blood! It's not possible to control their speed. In this case, whoever gets married, it will end up in failure! It is good to get married once the energies of Rahu & Ketu decreases after a certain age. Understand this and leave it to me. I shall take care of everything!

    Surrendering at the feet of Om Shri Lobamudra Sametha Agathiyar!

    Siddha Speaks......To be continued!

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete