​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 8 November 2023

சித்தன் அருள் - 1493 - அன்புடன் அகத்தியர் - காளி மட் சக்தி பீடம். ருத்ரபிரயாக் உத்தர்கண்ட்!







17/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் காளி மட் சக்தி பீடம். ருத்ரபிரயாக் உத்தர்கண்ட். 

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அப்பனே எம்முடைய ஆசிகள் அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் மாற்றங்கள் உலகத்தில் அப்பனே. 

நிச்சயம் யாங்களே அப்பனே மாற்றிக்கொண்டே  வருவோம் .... அவை மட்டுமில்லாமல் அப்பனே தரித்திர மனிதனால் அப்பனே சில நல்லோர்களுக்கும் கூட அதாவது எதை என்று தெரியாமலே அப்பனே எவை என்று அறியாமலே கூட வருத்தங்களும் கூட ஆனாலும் அப்பனே யாங்கள் மாற்றுவோம் அப்பனே!!! 

உலகம் அப்பனே அழிவை நோக்கி நோக்கி ஆனாலும் ஈசனிடத்திலிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய யானும் கூட எதை என்று பூலோகத்திலே இருந்து அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே மாற்றுகின்றேன்.

ஆனாலும் ஈசன் திடீர் திடீரென்று கோபங்கள் மனிதனிடத்தில்!!!!!

இதனால் யானும் பின் எவை என்றும் அறிந்தும் கூட அப்பனே சில சில வார்த்தைகளை கூறி பின் ஈசனிடம் மௌனத்தை எதை என்று அறிய அறிய வரவழைக்கின்றேன்!!!

இதனால் அப்பனே ஈசனுக்கு திடீரென்று கோபங்கள் வந்து விட்டால் அழிவுகள் திடீரென்று!!!

ஆனாலும் அப்பனே ஈசனிடம் உடனடியாக சென்று அப்பனே நலமாக யான் பார்த்துக் கொள்கின்றேன்!!!!!!! எதை என்று அறிய அறிய மனிதனை நிச்சயம் திருத்துவேன் என்றெல்லாம் அப்பனே நல் முறைகளாக ஈசனிடத்தில் அப்பனே

இதனால் சில சில மாற்றங்களை அதனால் அப்பனே பல வழிகளிலும் கூட எதை என்றும் அறியாமலும் எவை என்றும் புரியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எங்கள் வாக்குகளும் கிட்டும்!!! வாக்குகளும் கிட்டி நிச்சயம் பின் அழிவை கூட நாங்கள் தடுத்து நிறுத்துகின்றோம் அப்பனே!!! 

அதனால் மனிதன் என்னென்னவோ சொல்வான் என்பேன் அப்பனே அவை இவை என்றெல்லாம்!!!!!!

ஆனால் சித்தன் இருப்பதை இறைவன் இருப்பதை மறந்து விடுகின்றான் அப்பனே........... இதுதான் துன்பத்திற்கே காரணம்!!!

எவை என்றும் அறிந்து அறிந்து அதனால் அப்பனே தாம் தான் பெரியவன் தாம் தான் பெரியவன் என்று கூட!!!....... 

இதனால் அப்பனே அவையெல்லாம் ஆகாது என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் எங்களுடைய அருள்கள் பலம்!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் இத் தேவியின் ரகசியத்தில் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

நல்விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் நல் விதமாகவே இங்கு அமர்ந்துவிட்டாள்!!!!
 
அருமையாகவே!!

இதனால் பல வழிகளிலும் கூட எத்தனை எத்தனை அவதாரங்கள்!!!!!

எவை என்றும் அறியாமலும் கூட இதனால் எத்தனை எத்தனை அவதாரங்கள் எடுத்து எடுத்து மனித குலத்தை காத்து வருகின்ற இவள்தனக்கு நிச்சயம் இவ்வூரில் எதை என்று அறிய அறிய ஓர் முறை அழிவு வந்துவிட்டது!!! இதனால் அனைவருமே அழிந்து விட்டனர்.

ஆனாலும் இத் தேவியே அமைதியாக!!!!...........

அதாவது ஈசன் தான் ( அழிவிற்கு காரணம் ) என்று அறிந்து அறிந்து பின் அமைதியாக அதாவது மௌனம் காத்தாள்!!! 

ஏன் இப்படி எல்லாம் ஈசன் எதை என்று அறிய அறிய!!! 

தேவாதி தேவன் இப்படி எல்லாம் செய்கின்றான் என்று!!!!

ஆனாலும் சரி மனிதனின் எப்பொழுது எதை என்று அறிய அறிய பின் எப்பொழுது பாவங்கள் அதிகமாகின்றதோ அப்பொழுதெல்லாம் நிச்சயம் அழிந்துவிடும்!!!

இதையும் கூட அறிவியல் வழியாகவும் யான் விளக்குவேன் வரும் காலங்களில் !!!!! அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் இத் தேவி நன்குணர்ந்து !!!! ஆனால் அனைத்தும் அழிந்துவிட்டது!!!

ஆனாலும் ஒரு பிள்ளை ஒரு பெண் குழந்தை மட்டும் நிச்சயம் தவழ்ந்து தவழ்ந்து நின்றது!!!

ஆனால் இத் தேவி பார்த்திட்டு நிச்சயம் இங்கே அறிந்தும் அறிந்தும் கூட பின் எடுத்து வந்து அதனால் நிச்சயம் ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் எப்படி எப்படியோ அப்பெண் வளர்ந்து விட்டாள்.

அதாவது சிறு பெண் எதை என்று அறிய அறிய ஆனாலும் ஒரு யுகத்தில் இப்பெண் யார் என்று கூட நிச்சயம் எதனை என்றும் அறிய அறிய பின் அறிந்தும் கூட நிச்சயம் பின் பல வழிகளிலும் கூட பஞ்சபாண்டவர்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் தாயாகவே இருந்திருந்து ஆனாலும் பின் அக்குழந்தை நிச்சயமாக வாழ்வோரும் வீழ்வோரும் அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் மெல்ல மெல்ல வளர்ந்தது!!!!

வளர்ந்து வளர்ந்து இதனால் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் என்னென்ன எவை என்று உணர்ந்தும் உணர்ந்தும் கூட பின் ஆனாலும் அனைத்தும் பின் யாரும் இல்லையே எந்தனுக்கு என்று!!!

ஆனாலும் சரி செல்வோம் என்று!!!!! ஆனாலும் இங்கிருந்து சில தொலைவுகள் ஆனாலும் சென்று விட்டது ஆனாலும் பல கிராமங்கள் இருந்தது ஆனாலும் அங்கு பார்த்தால் இவள் தனக்கு ஒன்றுமே புரியவில்லை இக்குழந்தைக்கு... எதனால் என்பவை எல்லாம் இப்படி எல்லாம் வாழ்கின்றார்களா என்று!!!!

ஆனாலும் நிச்சயம் அக்குழந்தை அதாவது எதை என்று அறிய அறிய வயது ஆனாலும் அறியும் வயது!!! அறிவுகளும் பலம். 

ஆனாலும் (தேவியிடம்) சில கேள்விகளை கேட்டது !!!!!!!!

யார் இவர்கள் ????

(மனிதர்கள் எல்லோரையும் பார்த்து)

இவர்கள் எதை என்று அறிய அறிய இங்கெல்லாம் இப்படி அமைத்திருக்கின்றார்களே எவை என்று அறிய அறிய!!!!

தேவி : இவைகளெல்லாம் வீடுகள் அம்மா!!!!! 

எதை என்று அறிய அறிய உந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லையா???????
இவர்களெல்லாம் மனிதர்கள் தான் ஆனாலும் நீயும் கூட எதை என்று அறிய அறிய எங்கிருந்து வந்தாய்??... ஆனாலும் அறிந்தும் கூட இவை என்றும் அறிய அறிய இவர்களுக்கு எல்லாம் பின் சொந்தம் பந்தங்கள் பின் தந்தை தாய் உற்றார் உறவினர் இன்னும் இன்னும் எதை என்று கூட சகோதர சகோதரிகள் என்றெல்லாம் இவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர் அதுதான் இது என்று கூற!!!

ஆனாலும் இக்குழந்தைக்கும் அறியாமலும் கூட எப்படி எதை என்றும் புரிய  புரிய இப்படி ஆயிற்றே எதை என்று அறிய அறிய மீண்டும் (ஆலயத்திற்கு )இங்கு வந்து பின் யோசித்தாள்!!!!! 

அனைத்தும் அங்கு !!! எவை என்றும் அறிய அறிய !!!

(அங்கு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு சமுதாயமாக குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள்) 

(அனைத்தும் அழிந்து ஒரு குழந்தை மட்டும் தேவியின் அருளால் பிழைத்து தேவியின் கண்காணிப்பிலேயே கோயிலில் வளர்ந்து வந்ததால் வெளி உலகம் அந்த குழந்தைக்கு தெரியவில்லை ஒருநாள் தேவியுடன் வெளியே சென்று பார்த்த பொழுது தான் இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் இப்படி எல்லாம் உலகம் இருக்கின்றது என்பதை அந்த குழந்தை அறிந்து கொண்டது பின்பு யோசிக்க தொடங்கியது)

ஆனாலும் நாம் தன் இப்படி இருக்கின்றோம்!!!! எங்கே தாய் ??? எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் எங்கே தந்தை????? பின் அறிந்தும் சகோதரன் சகோதரி இல்லை எதை என்றும் புரிய புரிய என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட அறிந்தும் எவை என்றும்  வழி விடாமல் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அப்படியே ஆனாலும் பின் அனு தினமும் இவள்தனுக்கு வேலை!!!! 

அதாவது பூஜைகள் செய்வது எதை என்று அறிய அறிய இத் தேவிக்கு!!

ஆனாலும் பின் நிறுத்திவிட்டாள்!!!!! 

இப்படி நம் தன் மட்டும் தனியாக இருக்கின்றோமே யாரும் துணை இல்லையே!!!!ஏன்??? எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் ஏதோ எவை என்று அறிய அறிய பழங்களை உண்டு கழித்து வந்தாள் வாழ்க்கையை கூட

இதனால் எதை என்றும் அறிய அறிய இப்படியே கவலைகள் கவலைகள்!!!

ஆனாலும் இத் தேவிக்கு தெரிந்து விட்டது!!!!

இப்படியே விட்டு விட்டால் என்ன என்று அறிந்தறிந்து!!!

 ஒரு நாள் நிச்சயம் பின் அதாவது நீரினை பார்த்து அக் குழந்தை கேட்டது !!!

( ஆலயத்தை சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நதியை பார்த்து)

என் சொந்த பந்தங்கள் எங்கே????

என் தாய் தந்தையர் எங்கே???

ஏன்?????  எதனால்????..... என்னை மட்டும் தனியாக எவை என்று புரியப் புரிய என்றெல்லாம்!!!!!

நிச்சயம் அருள்புரிந்து எவை என்று அறிய அறிய தேவி நேரில் பின் நின்று நிச்சயம் உந்தனுக்கு அனைத்துமே யான் தான் என்று!!!! 

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் நீ தான் எதை என்று புரிய புரிய இதனால் அனைத்தும் எவை என்று கூட சிறந்த வகையில் எதை என்றும் அறிய அறிய உந்தனக்கு என்ன தேவை ??? என்று கூற !!!

நிச்சயம் அறிந்தும் கூட இப்பிறப்பிலே எதை என்றும் அறிய அறிய அனைத்தும் எவை என்று அறிய அறிய உந்தனுக்கே சேவைகள் செய்ய வேண்டும் எதை என்று அறிய அறிய தாய் தந்தை எதை என்று அறிய அறிய அதாவது பக்கத்து ஊரில் சென்று பார்த்த பொழுது நிச்சயம் பின் அக்குழந்தைகள் எல்லாம் தாய் தந்தையருக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் அதனால் உந்தனுக்கே யான் சேவைகள் செய்து கொண்டிருக்க வேண்டும் இப் பிறப்பில் அதைக் கொடு என்று கூற!!!!

தேவி இதனால் நிச்சயம் கொடுக்கின்றேன் பின் அனைத்தும் அதாவது இங்குள்ள எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்துவிட்டு வா என்று கூற

இதனால் நிச்சயம் பின் அதாவது பின் எங்கெல்லாம் உந்தனுக்கு தெரிகின்றதோ அங்கெல்லாம் சேவைகள் செய்து மீண்டும் வா என்று!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இப்படி அக்குழந்தையிடம் கூறிவிட்டு தேவியும் மறைந்து விட்டாள்!!!! 

இதனால் நிச்சயம் என் தாய் தந்தையராக தேவி இருக்கின்றாள் இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட உந்தனுக்கு எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்கின்றேன் என்று அனைத்து திருத்தலங்களுக்கும் ஏறி இறங்கினாள் எவை என்றும் அறிய அறிய....

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பல திருத்தலங்களுக்கும் கூட சென்று சென்று அங்குள்ள எவை என்று அறிய அறிய கேட்டு விசாரித்து அனைத்து நலன்களையும் சேவைகளையும் அப் பெண்மணி  செய்தாள்!!!! 
சிறந்த பெண்மணியாக!!!!!

இதனால் நிச்சயம்  எதை என்று அறிய அறிய இப் பிறப்பிலும் அப்பெண்மணி பிறந்துள்ளது!!!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் உலகம் முழுவதும் பேசப்படுகின்றது அப் பெண்மணியை பற்றி!!!!

ஆனாலும் யான் !!!!!

(அப்பெண்மணி யார் என்று)

இப்பொழுது கூறவில்லை !!!!

பின் அதை கூறினாலும் நிச்சயம் எதை என்று கூட சந்தேகங்கள் இன்னும் எது எதுவோ எதையெதையோ என்று வந்துவிடும்!!!

இதனால் இப்பிறப்பில் கூட எதை என்றும் அறிய அறிய பின் ஒரு பெண்ணாக பிறந்து அனைத்தும் எவை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் தாங்கி கொண்டிருக்கின்றாள்!!! 

(அனைத்தையும் தாங்கி கொண்டு இருக்கும் அளவில் உயர் இடத்தில் இருக்கின்றார்)

இதனால் அவள்தனை யாரும் ஒன்றும் செய்ய இயலாது!!!!

இதனால் தான் எதை என்று அறிய அறிய தெய்வம் தெய்வத்தின் அருளை பெற்றவர்கள் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் பிறந்து பிறந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

அதனால்தான் மனிதனை யான் எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் தேடி தேடி அலையுங்கள் என்றெல்லாம்...பின் உரைத்து கொண்டே இருக்கின்றோம்... 

நிச்சயமாய் இவைதன் நிச்சயமாய் தேடி தேடி அலைந்தால் நிச்சயம் வெற்றி ஒரு நாள் கிடைக்கும்.

ஆனாலும் பல வழிகளிலும் கூட துன்பங்கள் பட வேண்டும்!!!!!

இறைவன் பலத்தை பெறுவது பின் சாதாரணமில்லை!!!

சொல்லிவிட்டேன் அறிந்தும் அறிந்தும் கூட!!!

அப் பலத்தை பெற்றுவிட்டால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட நீ என்ன நினைக்கின்றாயோ எவை என்று கூட அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் எதை என்று அறிய அறிய தொந்தரவுகளே வராதப்பா!!!! 

இக்கலி யுகத்தில் ஆனாலும் போலியான எவை என்று கூட பக்திகளை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் அதனால் தான் வருகுதப்பா துன்பம்!!!

அப்பனே ஏனென்றால் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் சொல்வான் மனிதன்!!!!

யான் உண்மையான பக்தன் தானே ஈசனை நினைத்துக் கொண்டிருக்கின்றானே ஆனாலும் அவன் தனை மாய வலையில் அதாவது உள் சென்று நுழைந்து பார்த்தால் அப்பனே....அவன் லீலைகள் அனைத்தும் எந்தனுக்கு தெரியுமப்பா!!!!!

அதனால் நிச்சயம் எதை என்று அறிய யாராவது ஒருவன் என்னை கேட்கின்றானா ??????? என்று பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

யாரும் கேட்கவில்லை!!!!

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நிச்சயம் வரும் ஆனால் எதை என்று ஒருவன்(ஒரு நபர்) மட்டும் கேட்டு விட்டான் எதை என்று அறிய அறிய!!!

யான் பக்தன்!!! எந்தனுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது???? என்று!!!!!

ஆனால் அவன் திருடனப்பா!!!! எதை என்று அறிய அறிய எந்தனுக்கே புரியும் என்பேன்.

ஆனாலும் எதை என்று அறிய அறிய இன்னும் சில பேர் எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு கூட எதை என்று அறிய அறிய பின் மனிதனுக்கு வாக்குகள் செப்ப தகுதியில்லை என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே நீ தகுதி உள்ளவனாக முதலில் இருந்தால் தான் யாங்கள் வருவோம் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் நீ திருடன் அப்பா எதை என்று அறிய அறிய நீ எத்தனை பேர்களுக்கு என்னென்ன செய்தாய் ????? என்னென்ன கோபங்கள் பட்டாய் ???? அப்பனே என்னென்ன ஏமாற்றினாய் ????? அப்பனே புரிகின்றதா ??!!!!! அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

மற்றவரை குற்றம் சொல்வதில் அப்பனே எதை என்று அறிய அறிய முதலில் நம் தன் பின் நன்றாக இருக்கின்றோமா?????? என்று சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே அப்பொழுதுதான் நீ குற்றம் கூற வேண்டும் அப்பனே!!!

நீயே ஒழுங்காக இல்லை அப்பனே மற்றவர்களை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கின்றாய் அப்பனே

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் குற்றம் எதை என்று அறிய அறிய கூறுவது அப்பனே எதை என்று அறிய அறிய நல்லோனாக இருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் உந்தனுக்கு துன்பம் தானாகவே வந்துவிடும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

(நல்ல அடியார்களை குறித்து குறை கூறிக்கொண்டு இருந்தால் துன்பங்கள் வந்து விடும் ! அதனால் யாரையும் குறை சொல்ல கூடாது)

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!!

குற்றம் கூறாதீர்கள் அப்பனே பொய்கள் கூறாதீர்கள் அப்பனே பின் பிற உயிர்களை கொல்லாதீர்கள் அப்பனே மவுனத்தை கடைபிடியுங்கள் கோபம் கொள்ளாதீர்கள் அப்பனே காமத்தை விட்டோழியுங்கள் என்பதை எல்லாம் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய ஞானிகள் உரைத்து விட்டனர்.

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதன் திருந்திய பாடே இல்லை எதை என்று உணர்ந்து உணர்ந்து.

இதனால் அப்பனே எப்படியப்பா எதை என்று அறிய அறிய சித்தர்கள் யாங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எங்கள் கண்ணோக்கி அதாவது உலகத்தில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம் அப்பனே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம் அப்பனே!!

இன்னும் என்னென்னவோ கூட. 

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே மனிதன் எதை என்று அறிய மனிதன் சொல்லை கேட்டால் அப்பனே நிச்சயம் பாவத்தில் சேர்த்து விட்டு அப்பனே அனைத்து தரித்தரத்தையும் கூட சம்பாதித்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

இறைவன் பேச்சை கேட்டால் அதாவது சித்தர்கள் பேச்சை கேட்டால் அப்பனே மீண்டு விடுவான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே மனிதன் பேச்சை தான் கேட்டுக் கொண்டிருக்கின்றான் மனிதன் எதை என்று அறிய அறிய மனிதன் மனிதனை நம்பினால் அப்பனே கடைசியில் எதை என்று அறிய அறிய அப்பனே நரகத்திற்கு தான் செல்ல வேண்டும் அப்பனே.

அனைத்து துன்பங்களையும் கூட அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பேன் அப்பனே!!!

இன்னும் இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே!!!!

இவ்வுலகத்திற்கு புரிய வைக்க போகின்றோம் யாங்கள் சித்தர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

எவை என்று அறிய அறிய  எவ்சக்தியாலும் எதை என்று அறிய அறிய எங்களை தடுக்கவும் முடியாது அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே... சக்தி பீடங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உண்டு அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

எவை என்று புரிய புரிய தேவியை சாதாரணமாக !!!!!!!......அல்ல!!!!..(தேவியை பற்றி தேவியின் சக்தி பீடங்களை பற்றியும் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது)

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் மனிதன் பொய் கூறி திரிந்து கொண்டிருக்கின்றான்...அவை இவை என்றெல்லாம்

எதையென்றறிய ஆனாலும் அப்பனே சக்தி பீடங்களுக்கு வாருங்கள்... எதை என்று அறிய அறிய அப்பனே!!!! 

நீ பக்தன் என்று சொல்கின்றாய் அல்லவா??????? 

திரி. !!!!!  

(ஆலயங்களுக்கு சக்தி பீடங்களுக்கு அலைந்து திரிய வேண்டும்)

போதுமானது!!!!!

எதை என்று அறிய அறிய பணத்தை அதாவது இதைத்தான் சொல்வேன் மறுபடியும் அப்பனே பணத்தை சம்பாதிப்பதற்கு திரிந்து கொண்டிருக்கின்றாய் அப்பனே... திருமணம்  அதாவது பெண்ணை தேடி அலைகின்றாய் அப்பனே!!!!

இறை பலத்தை தேடுங்கள் தேடுங்கள் என்று பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே ஆனால் தேடுவதே இல்லை அப்பனே !!!!

ஆனால் எப்படி கஷ்டங்கள் வராமல் போய்விடும்?????

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் உலகம் பொய் அப்பனே மனிதன் பொய் அப்பனே சாகும் எதை என்று அறிய அறிய சாகுவதே மெய்யப்பா!!!

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே சாகின்ற மனிதா எதையென்று புரிய புரிய அப்பனே புரிந்து வைத்துக்கொண்டு அப்பனே புரிந்து புரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே

புரியாமல் வாழ்ந்தால் அப்பனே இன்னும் இன்னும் கஷ்டப்படுவாய்!!!

பெண்ணை தேடி பின் திருமணம் செய்து கொண்டாயே அவள் தனையும் கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அதாவது பின் எதை என்று அறிய அறிய குழந்தைகளுக்கும் கஷ்டங்களை உண்டாக்கி அப்பனே கடைசியில் பாதாளத்தில் சென்று விட்டு அப்பனே உன் சந்ததியே கஷ்டத்தில் ஆகிவிடும் அப்பனே.

அதனால் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே இல்லை என்றால் எதை என்று அறிய அறிய அப்பனே அமைதியாக இருந்து கொள்ளுங்கள் அப்பனே

இதனால் பொய் கூறுதல் பொறாமை கொள்ளுதல் அப்பனே எவை என்று அறிய இப்படித்தான் என் பக்தர்களும் கூறிக்கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சொல்கின்றேன்.... அகத்தியன் பிள்ளை என்று சொல்லி பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!

இவர்களுக்கெல்லாம் தண்டனைகள் உண்டு அப்பனே செப்பி விட்டேன் அப்பனே.... எதை என்று அறிய அறிய மீண்டும் அகத்தியன் பிள்ளை என்று பின் சொல்லிவிட்டால் வாயாலே எதை என்று கூட """"""வாயிலே அடிப்பேன் !!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே. 

என்னென்ன சொல்லிக்கொண்டு எதை எதை என்று அறிய அறிய என்னென்ன அப்பனே பொய்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் கோபம் காமம் எதை என்றும் அறிய அறிய யான் தான் பெரியவன் அப்பனே எதை என்று கூட உண்மையான பக்தர்களை எல்லாம் !!!!.........

 அப்பனே எவை என்று புரியாமலும் கூட...

அதாவது இவ் சக்தி பீடத்திலிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே கஷ்டங்களை கொடுத்து விடுவேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே.... பிழைத்துக் கொள்ளுங்கள்!!!

பின் லோபா முத்திரையும் கூட பிழைக்கட்டும் !!! உன் பெயரைக் கூட சொல்லித்தானே பிழைக்கின்றார்கள் என்றெல்லாம்!!!

(அன்னை லோபா முத்ரா தேவியார் குருநாதர் அகத்திய பெருமானிடம் உன் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துகின்றார்கள் பரவாயில்லை பிழைத்து போகட்டும் என்று நம் குருநாதரை சமாதானம் செய்து வருகின்றார்கள்)

பின் விட்டுவிட்டேன் ஆனாலும் அப்பனே இப்படிச் செய்யக் கூடாது !!!!

அகத்தியனை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் உண்மையான பக்தர்களை எல்லாம் தாழ்வு படுத்தி அப்பனே பேசுகின்றார்கள் என் பக்தர்களே அப்பனே

இதனால் யான் தண்டிக்கா விடிலும் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே .... எவை என்று கூற அரக்கர்களே அப்பனே உங்களை தண்டித்து விட்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் உன் தாயும் கூட உன்னை பெற்றாள் அப்பனே.... அதேபோலத்தான் அப்பனே மற்ற பிள்ளைகளையும் பெற்று அப்பனே அவள்தனுக்கும் ஆசைகள் இருக்காதா ??? அப்பனே ஏனப்பா இப்படி எல்லாம் ???? பொய் கூறி அப்பனே எதை என்று அறிய அறிய தரித்திரத்தை சம்பாதித்துக் கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே அதாவது தாயின் பிள்ளைகள் ஒரு தாயின் பிள்ளைகள் அப்பனே அனைவருமே

அதாவது என் பெயரைச் சொன்னாலே ஒரே தாயின் பிள்ளைகள் என்று கூற வேண்டுமே தவிர!!!..... அப்பனே 

யான்  பெரியவன் அங்கு அகத்தியன் இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது!!! சொல்லிவிட்டேன் அப்பனே

(அகத்தியர் பக்தர்கள் ஆங்காங்கே அகத்தியர் பேரில் அன்பு கொண்டு சிறு ஆலயம் குடில் ஆசிரமம் போன்று அமைத்து வணங்கி வழிபட்டு கொண்டு வருகின்றார்கள் இவர்களுக்கு இடையே யான்தான் பெரியவன் எங்களுடைய குடிலில் மட்டும்தான் அகத்தியர் இருக்கின்றார் மற்ற இடங்களில் இல்லை

நான் அகத்தியன் பிள்ளை முழுமையாக கற்றவன் என்று தலைக்கனத்தோடு மற்றவர்களை மதிக்காமல் புறம் கூறி!!.....

நாம் அனைவரும் அகத்தியன் பிள்ளைகள் என்பதை உணராமல் நடந்து கொண்டு இருப்பதற்கு இந்த இடத்தில் குருநாதர் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றார்)

எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே உண்மையில்லை பொய்களாப்பா அனைத்தும்!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே!!!

என் பெயரை சொல்லி அதையும் இதையும் சொன்னாலும் ஒன்றுமே நடக்கப் போவதில்லை அப்பனே

எதை என்று புரியப் புரிய அப்பனே பின் எங்கு கோபம் தாபம் காமம் எதை என்று அறிய அறிய இருக்கின்றதோ அங்கே பொய்கள் வந்துவிடும் சந்தேகங்கள் வந்துவிடும் அப்பனே திருடர்களப்பா திருடர்கள் !!

அப்பனே இன்னும் இன்னும் என் பெயரைச் சொல்லி அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே இது போலத்தான் அப்பனே ஆகிவிட்டது.

யான் அகத்தியன் !!! அகத்தியன் !!! என்று சொல்லி அப்பனே இப்பொழுது கூட அகத்தியன் பல பேர் என்று பொய் சொல்லி விட்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய.

(அகத்திய மகரிஷி ஒருவரல்ல அகத்தியர் என்பவர் பலர் என்று பொய்கள்) 

சூரியன் ஒருவனே!!

எதை என்று கூட 

சந்திரன் ஒருவனே!!!

 எதை என்று கூட

 இறைவன் ஒருவனே !!!

 அகத்தியனும் ஒருவனே !!!

 சொல்லிவிட்டேன் !!!

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய  புரிய அப்பனே அதனால் எவை என்று புரிய புரிய அகத்தியனை எதை என்று கூற சாதாரணமாக நினைத்துள்ளீர்கள் அப்பனே!!!! எவை என்று அறிய அறிய அப்பனே 

""""""அடித்தால்!!!!! எதை என்று கூட. தாங்கவும் மாட்டீர்கள் அப்பனே..

சித்தர் வழியிலே வருவது சுலபமில்லை !!!!! அப்பனே

புண்ணியங்கள் இருந்தால் தான் வரவும் முடியும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் இல்லாமல் அப்பனே யான் சித்தன் பிள்ளை யான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன்... அப்பனே எதை என்று கூட இன்னும் (ஸ்ரீமண்)  நாமத்தை இட்டுக் கொள்வது  !!    (திருநீறு) பட்டையை தீட்டிக் கொள்வது !! கொள்வது பின் அப்பனே ருத்திராட்சை அணிவது பின் பொய் சொல்லி அதை இதை என்றெல்லாம் அப்பனே கர்மத்தில் சேர்த்து சேர்த்து விடுகின்றான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே 

அதனால் நிச்சயம் அப்பனே முதலில் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே 

உலகம் பேரழிவை நோக்கி செல்கின்றது எதை என்று அறிய அறிய

அப்பனே அதனால்...... எங்களால் செய்ய முடியாததை யாராலும் செய்ய முடியாதப்பா !!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எத்தனை ??  எத்தனை ?? அவதாரங்கள் !!!!!!

அப்பனே எவை எவை என்று புரிய புரிய இன்னும் இன்னும் அப்பனே இத் தேவியின் ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே

நலம் ஆசிகள் !!!! ஆசிகளப்பா!!!!!

காளிமத் என்பது ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள புனித தலமாகும் . 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காளிமத், இந்தியாவில் உள்ள 108 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.  

காளிமத்தில் காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது.  காளி தேவி சிலை ரூபத்தில் இங்கு வணங்கப்படுவது இல்லை.

காளி தேவி  கருவறையில் குறிப்பிட்ட இடத்தில், ஸ்ரீ யந்திரம்  ஒரு வெள்ளி தகடு நிறுவப்பட்டுள்ளது. அதன் மேலே ஒரு கும்பம்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த புனிதமான ஸ்ரீ யந்திரத்தில் தரிசனம் செய்கின்றனர். இந்த வெள்ளித் தகடு ஹோமத்திற்காக ஒருபோதும் திறக்கப்படுவதில்லை . நவராத்திரியின் எட்டாவது நாளில் மட்டுமே திறக்கப்படும்  மேலும் நள்ளிரவில் பூஜை செய்பவர் தலைமை அர்ச்சகர் மட்டுமே செய்வார்

 காளிமத் கோயிலை எப்படி அடைவது?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மற்ற முக்கிய நகரங்களிலிருந்து காளிமத் கோயிலுக்குச் செல்ல ஏராளமான சாலைப் போக்குவரத்துகள் உள்ளன. இருப்பினும், ஒருவர் பாதி தூரத்தை கடக்க விமானம் மற்றும் இரயில் பாதைகளை தேர்வு செய்வதன் மூலம் யாத்திரையை அடைய முடியும் மற்றும் இறுதி தூரத்தை சாலை போக்குவரத்து மூலம் மட்டுமே கடக்க வேண்டும்.

விமானம் மூலம்- ஜாலி கிராண்ட் விமான நிலையம் காளிமத் கோயிலில் இருந்து 183 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ருத்ரபிரயாக் மற்றும் டேராடூன் இடையே அடிக்கடி பேருந்துகள் மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன.

ரயில் மூலம்- ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் ரயில் நிலையங்கள் புனித கோவிலுக்கு வருகை தருவதற்கு அருகிலுள்ள இரண்டு ரயில் நிலையங்கள் ஆகும். இருப்பினும், ஹரித்வார் மிக அருகில் உள்ளது மற்றும் ரிஷிகேஷ் ரயில் நிலையத்தை விட எளிதில் அணுகக்கூடியது. ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து காளிமத்திற்கு செல்ல வாடகை வண்டிகள் கிடைக்கும் .

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete