​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 21 November 2023

சித்தன் அருள் - 1511 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 23!


 குருநாதர்:- அப்பனே மன்னிப்பு எதற்கு கேட்கின்றாய் அப்பனே.

அடியவர்:- தவறு செய்து…

அடியவர் 2:- நிறைய விசயம் பூஜை பண்ணுவது குறைஞ்சுருச்சு. தியானம் பண்றது எல்லாமே குறைந்து விட்டது.

குருநாதர்:- அப்பனே அத்தனையும் யான் செய்யச் சொன்னேனா என்ன அப்பனே? தியானத்தால் அப்பனே ஒரு உயிரை பிழைக்க வைக்க முடியுமா? மந்திரத்தால் அப்பனே இறந்தவனை நடக்க வைக்க முடியுமா? அப்பனே அதனால் எதுவுமே நடக்காது அப்பா. அனைத்தும் என் அருளால் தான் நடக்கின்றது என்பதை கூட நீ உணர வேண்டும். அகத்தியன் இல்லை என்றால் நீயே இல்லப்பா.

அடியவர் :- எல்லாரும் நினைக்கின்றார்களா?

குருநாதர்:- அப்பனே இப்படி இருக்க தாய் தந்தை இறந்து விட்டால் என்ன செய்வீர்கள் அப்பனே?

தாய் தந்தை இறந்து விட்டால் அவங்கள வழிபடனும். நல்வழியில் வழிபடனும்.

குருநாதர்:- அப்பனே அப்படி வழிபட்டுவதே இல்லை என்பேன். சில நேரங்களில் அவர்கள் ஞாபகம் வந்துவிடும். என் தந்தை இப்படி வளர்த்தான். பின் என் தாய் இப்படி இருந்தாளே  என்று அழுகை வரும் அப்பா. இது தான் அப்பா நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அன்போடு அப்பனே இருங்கள் போதுமானது.  யாங்கள் உங்களை காப்போம். வேற எதுவுமே தேவை இல்லை அப்பா எங்களுக்கு. அப்பனே யானே கஷ்டங்களை உந்தனுக்கு கொடுத்திட்டேன்.

அடியவர்:- அதனால் பரவாயில்லை ஐயா. ஏற்றுக்கொள்கிறேன். சந்தோசமாக.

குருநாதர்:- அப்பனே  உலகம் ஆயிரம் கூறலாம் என்பேன் அப்பனே.  மனிதன் சொல்லுவான் அப்பனே ஏதாவது அதாவது உலகம் நாளை அழிந்து போகும் என்பான். அப்பனே நான் சொல்லுவது நடப்பது (நடக்கும்) என்பான். அப்பனே யான்தான் சித்தன் என்பான். அதாவது என்னை மீறி சக்தி இவ்உலகத்தில் இல்லை என்பான்.

யான் ஈசனிடம் பேசிக் கொண்டே இருக்கின்றேன் என்பான். அப்பனே சித்தர்களிடம் பேசிக் கொண்டே இருக்கின்றேன் என்பான். அப்பனே இந்த இவ்பரிகாரம் செய் என்பான். அப்பனே இந்தா இதை வைத்துக் கொண்டால் அனைத்தும் நடக்கும் என்பான். ஆனால் கடைசியில் போக போவது சுடுகாடு என்று தெரியவில்லையே அப்பனே அவனுக்கு. அப்போது அனைத்தும் பொய்கள் அப்பா. யாங்கள் ஏதை தீர்மானிக்கின்றமோ அதுதான் நடக்கும் அப்பனே. அவை மனிதனால் சொல்ல இயலாதப்பா. இயலாதப்பா. பொய்கள் அப்பா.

அப்படி இருக்க என்னதான் கேள்விகள் கேட்கப் போகின்றாய் அப்பனே?  அப்பனே யான் சொல்லி விட்டேன் எதுவும் வேண்டாம் அப்பா என்று. அன்புதான் வேண்டும் அப்பா என்று கூட. அதனால் நீ எதைச் செய்தாலும் அப்பனே யான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை அப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் உன்  உன் மன சந்தோஷத்துக்காக வைத்துக்கொள் அப்பனே. யான் இருக்கிறேன்.

அப்பனே இதனால் அப்பனே எத்தனை பொய்கள் அப்பா!!!! விதவிதமான பொய்கள் அப்பா மனிதனிடத்தில் அப்பனே!!!!! அப்பனே அவர்கள் பொய் சொல்லவில்லை, பிறரை ஏமாற்றவில்லை ஆனால் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு அப்பனே  அதனால் ( நீங்கள் ) ஏமாறாதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.

அதாவது உனக்கும் அறிவுகள் அதாவது அப்பனே இறைவன் வைத்திருக்கிறான் அப்பனே. அதை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ அப்பனே அவன் இடத்தில் யான் வருவேன் அப்பனே. அது யாராக இருந்தாலும் சரி. அப்பனே சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே சில கஷ்டங்களை கொடுத்து யான் உண்மை என்று நிரூபிப்பேன் அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனே அதனால் அகத்தியனை நம்பினால் அப்பனே நம்பி நிச்சயம் கொடுப்பான் என்று அப்பனே நீ செய்தாயே அப்பனே அதை உன்னிடத்திலே ஏதோ ஒரு ரூபத்தின் மூலமாக யானே கொடுத்து விடுவேன் அப்பனே. மனித ரூபத்தில் வந்து. இதை என்னால் செய்ய முடியாதா என்ன அப்பனே? அப்போது அங்கேயே நம்பிக்கை போய்விட்டது அப்பனே எப்படி அப்பா யான் வருவேன்?

அடியவர்:- நம்பிக்கை உண்டு. பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக….

குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே அப்பனே பலமுறை அப்பனே எந்தனுக்கு காசுகள் அவசியமில்லை என்று அப்பனே மனம் போதும் அப்பா. அகத்தியன் என்று சொன்னாலே போதும் அப்பா அன்போடு அப்பனே பின் மகனோ, மகளோ தன் தாய், தந்தையரை அப்பா அம்மா என்று அழைத்தால் எவ்வளவு சந்தோஷங்கள் அப்பனே. அப்படி செய்யாமல் அப்பனே பின் அதாவது சிலை வடிவை எடுத்து இதுதான் என்று பின் தந்தையே நீ என்று, தாயே நீ என்று அப்படி சொன்னால்தான் புரியுமா அப்பனே தாய் தந்தையருக்கு?.  ( அகத்தியனை சிலை வடிவமாக ) இதை செய்ததில் இருந்தே உந்தனுக்கு சில சோதனைகளை கொடுக்க ஆரம்பித்து விட்டேன் அப்பனே யான்.  அப்படித்தான் நீ திருந்து வாய் என்பேன் அப்பனே. இல்லை என்றால் திருந்தி விடமாட்டாய் என்பேன் அப்பனே.  பல விஷயங்கள் உந்தனுக்கு சொல்லித்தருகின்றேன் அப்பனே. கவலையை விடு.

அடியவர்:- பொருளாதாரம் ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு.

குருநாதர்:- அப்பனே பொருளாதாரத்தை கொடுத்தேன் அப்பனே. அப்பனே நீ தான் செலவு செய்தாய் அப்பனே. கொடுக்கின்றேன் இருப்பினும் அப்பனே.

அடியவர்:- அறக்கட்டளை வாழ்க்கை சொல்லிருக்காங்க.

குருநாதர்:- அப்பனே பொறுத்திருக. அப்பனே சொல்கின்றேன் அப்பனே. அதாவது (அறக்கட்டளை என்று) கூறினாயே இப்பொழுது இவ்வாறு தான் அப்பனே அனைவருமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே பணம் அதில் வருவது அப்பனே செலவழிப்பது. அப்பனே பல கார்மங்களை ஏற்படுத்திக் கொள்வது. அப்பனே ( மனிதன் கர்மங்கள் ) எதை எதையோ செய்து ( ஈட்டிய பணத்தை உனது அறக்கட்டளையில்) அதில் இடுவான் அப்பனே. ஆனால் அது உனக்கு தெரியாது அப்பா. அது உன்னிடத்தில் சேர்ந்து கொண்டால் அப்பனே கடைசியில் அப்பனே ( உந்தனுக்கு கர்மம் சேர்ந்து விடும்), இதுபோல் பல கோடி மக்களையும் யான் பார்த்திட்டேன் அப்பனே. ஆனால் ஜாக்கிரதையாக இருந்துகொள் அப்பனே. யோசித்து செய் அப்பனே. யான் சொல்லி விட்டேன் அப்பனே. எதை செய்தாலும் அப்பனே யோசித்திருக்க வேண்டும் அப்பனே. அப்பனே உசுப்பேத்துவான் மனிதன் அப்பனே.  கர்மா அதனில் உன்னை நுழைய ( வைக்க ) இப்படிச்செய், அப்படிச்செய் என்று (உசுப்பேத்தி கூறுவான்). அப்பனே உந்தனுக்கும் அறிவு இருக்கிறதல்லவா? மூளைகள் இருக்கிறதல்லவா? அப்பனே அதை பயன்படுத்திக்கொள் அப்பனே.  யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளன்.  மனிதன் அப்பனே அப்படி பயன்படுத்தாதவன் மற்றவர் சொல்லி கேட்கின்றவன் அப்பனே அவன் மனிதனே இல்லை என்பேன் அப்பனே. அவனால் ஒரு பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே. அப்பனே (அங்கு உள்ள ஓர் அடியவரை அழைத்து ) கூறு?

அடியவர்:- ( அழைத்த இந்த அடியவர் அழகாக குருநாதரின் மகிமை புகழை எடுத்து உரைக்க ஆரம்பித்தார். என்னே ஒரு முதல் வகை புண்ணியம்/பாக்கியம். கருணைக்கடல் முன் அவர்தனின் புகழை அவர்கள் முன்னே எடுத்து உரைக்க.)
 
ஐயா நமக்குள்ள இருக்கின்றார். அதனால சிலை தேவை இல்லை. நமக்கு ஒரு பிராரத்தனை நிறைவேறனும் என்றால் ஒரு தெய்வத்திடம் வேண்டிக்கொள்கின்றோம். பாத யாத்திரை போகின்றோம். எதுக்காக பாத யாத்திரை போகின்றோம்?  குழந்தைக்கு கல்யாணம் ஆகணும். இல்லை என்றால் சந்தோசம், மகிழ்சியான சம்பவம் வீட்டில் நடக்க வேண்டும் என்று ஒரு வேண்டுதல் வைத்து நம்ம கோவிலுக்கு போகின்றோம்.அப்போ அந்த தெய்வமானது வேண்டுதல் நிறைவேறும். அது யாரு நிறைவேத்துறது என்றால் எல்லா தெய்வத்தை, எந்த தெய்வத்தை வேண்டுனாலும் அகத்தியர் தான் வந்து ( நமது வேண்டுதல்களை ) நிறை வேற்றுகின்றார். அகத்தியர் கிட்டதான் வந்து விண்ணப்பம் வைப்பாங்க. எல்லா தெய்வமும் வந்து அகத்தியர் கிட்ட விண்ணப்பம் வைத்து அகத்தியர் தான் அணுக்களை, நமது சிரசில் அணுக்களை ஆள்வது அகத்தியர்தான். அவர்தான்  (மூளையில்) அணுக்களை பிரித்து நமது வேண்டுதலை நிறைவேற்றுகின்றார். அறிவியல் பூர்வமாக சொன்னால் அகத்தியர் நிறைவேற்றுகின்றார். அப்படி இருக்கும் பொழுது நமக்கு உள்ள அகத்தியர் இருக்கின்றார். (அகத்தியரை) உள்ளுக்குள்ள தேடுங்க. வெளியில தேட வேண்டாம். உள்ளுக்குள்ள தேடுங்க. சரியா அகத்தியர் வெளியில் வருவார்.

குருநாதர்:- அப்பனே நீ கேளு அவனைப் பார்த்து? (கருணைக்கடல், மேலே அகத்தியரின் புகழ் உரைத்த இந்த அடியவரை மேலும் உயர்த்த எண்ணி,  மற்றொரு அடயவரை நாடியிடம் கேள்வி கேட்ப்பதைப்போல இந்த அடியவரிடம் கேட்ட உத்தரவு இட்டார்)

அடியவர்:- ஐயாகிட்ட உத்தரவு வாங்கித்தான் (சிலை) செஞ்சேன். அதுக்கப்புறம் நிறைய கஷ்டங்கள் எல்லாம் வந்துச்சு. எல்லாம் நிவர்தியாகணும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்யனும்.

குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர்:- ஐயா கிட்ட (நாடி) உத்தரவு  கேட்டு (சிலை) செய்ததாக சொன்னீர்கள். அதில் (ஜீவ நாடிகளில்) நிறைய போலி இருக்குது.  நீங்க எங்க கேட்டீங்க என்று தெரியவில்லை. சரிங்களா. (அகத்தியர்) அவரு சிலை வைக்க சொல்ல மாட்டார். அவர் சொல்றது முதலில் தாய் தந்தையரை மதித்து நடங்க. அதுக்கப்புறம் வந்து அவரே (மனதில்) உள்ளுக்குள்ள வந்து (என்ன செய்ய வேண்டும் என்று) சொல்லுவார்.

குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே.  அப்பனே பின் தாய் தந்தையர் இருக்கின்றார்கள் அப்பனே. ஆனால் உங்களை பார்த்து நீங்கள் தான் பிள்ளைகள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். எந்தனுக்கு சிலையை செய்யுங்கள் என்று யாராவது அப்பனே சொல்லுவா்களா. அப்பனே நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.

நாடி அருளாளர்:- ஐயா இதன் அர்த்தம் புரியுதா?.  ஒரு அப்பா அம்மா இருக்காங்க. ஒரு பிள்ளை பார்த்து எங்களுக்கு வந்து சிலை செய்து கொடுங்கனனு சொல்லு வாங்களான்னு கேக்கின்றார்?

அடியவர்கள்:- சொல்லமாட்டாங்க

குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே மனிதனின் பித்தலாட்டங்கள் புரிகின்றதா அப்பனே?. 

( அடியவர்களின் அமைதி )

அப்பனே தந்தையாக என்னை பின் நினைத்துக்கொண்டீர்கள் அப்பனே. யான் செய்யப் போகிறேன் அப்பனே. அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அப்பனே இவன் இப்பொழுது என்ன சொன்னான் என்று கூற. பின் சிலையை ( வைத்து வழிபாடுகள்) செய்து கொண்டே இருந்தேன். ஆனால் கஷ்டங்கள் வந்து விட்டது என்றான் அப்பனே. என்னப்பா நீ நல்லதுதானே செய்தாய் அப்பனே?  என்னப்பா உந்தனுக்கு கஷ்டங்கள் கூறு?. அப்பனே (அகத்தியர் புகழ் உரைத்த அடியவரை ஓர் பெயர் சொல்லி அழைத்து) கூறு?

முன்பு குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர்:-  அது அவருடைய கர்மா.

அடியவர்:- நீங்க அகத்தியர் சிலைய செஞ்சுட்டீங்கன்னு சொல்லிட்டீங்க? ஏன் கஷ்டம் வருது?

முன்பு குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர்:- சிலைய அகத்தியர் செய்ய சொல்லவில்லே!!! எதை கவனிக்கனுமோ அதை விட்டுட்டு கவனிக்க கூடிய விஷயத்தை விட்டு கவனிக்க தேவையில்லாத  விஷயத்தை கவனித்ததனால் கஷ்டம் வருகின்றது.

குருநாதர்:- அப்பனே  மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்பனே மனிதன் எப்பொழுதும் கர்மத்தில் நுழையவே அப்பனே காத்துக் கொண்டிருக்கிறான். கர்மத்தில் நுழைக்கவே . அதனால் அப்பனே (இறைவன்) அனைவருக்குமே அப்பனே அறிவுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே. இப்படிச்செய் அப்படிச்செய் என்று கூற அப்பனே. அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே. உங்கள் இடத்தில் சக்திகள் இருக்கின்றது அப்பா. சொல்லி விட்டேன். அதை முதலில் எழுப்ப கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே.  அதை எழுப்பத்தான் அப்பனே அனைத்தும் மாறும் என்பேன் அப்பனே.

அதிகாலையில் எழுந்து தியானங்கள் சில செய்யச் சொன்னேன் அப்பனே. அனைத்து செல்களும் அதாவது நேற்றே சொன்னேன் அப்பனே.  பட்டைகளாக அப்பனே வரிசையாக அச்செல்கள் அப்பனே பின் வலது புருவத்தில் இருந்து இடது புருவமாகும்.  இடது புருவத்தின் வழியாக , ( பின் மீண்டும் )  வலது புருவத்தின் வழியாக அப்பனே வரிசையாக அமைந்து உள்ளது என்பேன். அது சிறு வயதில் இருந்தே சரியாகவே அப்பனே நல்வழிகளாக பின்பற்றி கொண்டு வந்தால் அப்பனே அது (அழகாக) வரிசையாக இருக்கும் எனபேன் அப்பனே.  அப்படி காலம் மாறி நாம் சென்று விட்டால் அப்பனே உடலில் ( அவ்சைல்கள் ) சிதறும் அப்பா. அவ் சிதறிய ( செல்கள் ) அப்பனே பின் அவ் சிதறும் போது அப்பனே நம் தனக்கு புத்திகள்  செயல்படாது அப்பனை.

அப்பனே மீண்டும் அதனை அப்பனே எழுப்ப வேண்டும் என்பேன் அப்பனே. புருவ மத்தியில் அமர்த்திட வேண்டும் என்பேன் அப்பனே. இதனால் அங்கு அமர்த்தினால் தான் அப்பனே உண்மை நிலை புரியும். நோய்கள் வராது, கஷ்டங்கள் வராது அப்பா. அதனால் (உலகத்தில்) அனைவருக்குமே அது சிதைந்து கிடக்கின்றது என்பேன் அப்பனே. இனிமேலும் அதை யான்தான் அப்பனை சீர்படுத்த வேண்டும் என்பேன். அதனால்தான் அப்பனே நேற்றைய பொழுது சொல்லிவிட்டேன். (திருநீற்று) பட்டை என்று அதை சரியான வழியில் அப்படியே தங்க வேண்டும் என்று , பசுமாட்டின் அப்பனே சில கழிவுகளால் ( பசுங்சாணம் ) (அவ் செல்கள் சிதராமல் நெற்றியில் ) அப்படியே இருக்கத்தான் (திரு)நீறை பூசுகின்றார்கள்.  திருநீற்றை. அதனால் திருநீற்றுப்பதிகத்தை பாடு அன்பு மகனே.

( அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பாட ஆரம்பித்தனர். அந்த இடமே பக்தி பரவசமான ஒரு தருணம் இது என்று அடியவர்கள் உணர்க.

இந்த மகிமை புகழ் மகத்தான பாடல் அதன் விளக்கத்தை அடியவர்கள் இல்லத்தில் இந்த விஞ்ஞான் வாக்கினை பல அடியவர்களை அழைத்து அவர்களுக்கும் இந்த விஞ்ஞான வாக்கினை எடுத்து சொல்லி சுத்த பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீற்றை அவர்களுக்கு அளித்து இந்த பாடலை பாட பல மாறுதல்கள் உங்கள் உடலில் குருநாதர் அருளால் உண்டாகும்.

அந்த மகத்தான் பாடல் உங்கள் பார்வைக்கு மற்றும் அருள் பயன்பாட்டிறக்கு

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த இரண்டாம் திருமுறை திருநீற்றுப் பதிகம்.

திருநீற்றுப் பதிகம் 7ஆம் நூற்றாண்டில் மதுரையை கூன் பாண்டியன் என்ற மன்னன் ஆண்டான். அந்தக் காலத்தில் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத நோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். சம்பந்தர் "மந்திரம் ஆகும் நீறு" பாடலைப் பாடி, புனித பசும் சாண சாம்பல் அல்லது திருநீரைப் பயன்படுத்தியதன் மூலம், அவரையும், அவரது கூன் முதுகையும் குணப்படுத்தினார்.

மந்திரமாவது நீறு பாடல்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே (1)

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. (2)

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே. (3)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. (4)

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே. (5)

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே. (6)

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே. (7)

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே. (8)

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே. (9)

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே. (10)

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (11)

திருச்சிற்றம்பலம்!!!
ஆதி ஈசன் திருவடிகள் போற்றி!!!!!
தென்னாடுடைய சிவனே போற்றி… 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!)

குருநாதர்:- அப்பனே  அவ்செல்கள் வரிசையாக இருக்கின்ற பொழுது யாருக்கும் ஒரு தொந்தரவும் இல்லை அப்பா. அது சிதலமடைந்து ( சேதம் அடைந்து )  அப்பனே உடம்பில் ( பல்இடங்களில் ) பாய்வதால்தான் அப்பனே கஷ்டங்கள் ஒன்றே ஏற்படுகின்றது. அதனால்தான் அப்பனே அதை ஈர்க்கும் சக்தி அப்பனே இப்பொழுது சொன்னேன் பசும்சாணி. அதனால் தான் அப்பனே சரியான வழியில் ( திருநீற்றை நெற்றியில்) இட்டுக்கொண்டே , இதை ஞானிகள் உணவார்கள் அப்பா. அதனால்தான்  (நெற்றியில் திரு) நீறை இடுங்கள், இடுங்கள் என்று கூற அப்பனே ஆனால் அனைத்தும் உதிர்ந்து விட்ட பிறகு தான் அப்பனே நீங்கள் திருநீறே பூசுகின்றீர்கள்  என்ன லாபம் அப்பனே? அப்பனே வந்து கொண்டு விட்டாய் அப்பனே. அனைவரிடத்திலும் அப்பனே இதோ ( நீ கொண்டு வந்த திரு ) நீறை எடுத்து கொடு.

( அங்கு வந்திருந்த ஒர் அடியவர் நிறைய திருநீற்றை எடுத்து வந்திருந்தார். அங்கு உள்ள அனைவரிடத்திலும் அளிக்க. கருணைக்கடல் குருநாதர் இதனை உலகோர் பயன்பெற அழகாக எடுத்து உரைத்தார்கள் விஞ்ஞான பூர்வமாக.)

( பல ஆச்சரிய்உரையாடல்கள். அந்த அடியவர் பசும்சாண திருநீற்றை அங்கு உள்ளவர்களுக்கு அளித்து “சைவத்தை கடை பிடியுங்கள்” என்று அனைவருக்கும் எடுத்து உரைத்து உயர் முதல் நிலை புண்ணியத்தை பெற்றுக்கொண்டார்கள் என்பதில் ஐயமற விளங்கியது அந்நிகழ்வு. இது போல பகத்தர்கள் ஆலயத்தில் / பொது இடங்களில் இந்த விஞ்ஞான வாக்கினை எடுத்து உரைத்து, திருநீற்றை அளித்து அவர்களை நன்கு வாழ வைத்து உயர் நிலை முதல் வகை புண்ணியங்களை தேடிக்கொள்ளுங்கள். இந்த வாக்கினை்படிக்கும் அடியவர்கள் இந்த விஞ்சானம் அதன் ரகசியம் தெரியாத பலருக்கும் அவசியம் எடுத்து உரைக்க வேண்டும்.)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete