​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 17 November 2023

சித்தன் அருள் - 1506 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 18!


அடியவர்:- ( சில கேள்விகள்)

குருநாதர்:- ( சில உயர் ஞான விளக்க பதில்கள். )

( ஓர் அடியவர் விதி முடிந்தும் இறைவன் வாழ வைத்துக்கொண்டு உள்ளார். அது தொடர்பான பொது வாக்குகள . )

யார் உயிரை எப்போது இறைவன் எடுக்கவேண்டும் என்பது எல்லாம் தீர்மானித்துக் கொண்டே இருக்கின்றான். எவை என்று அறிய அறிய சொல்லிவிடுகின்றேன். மற்றவர்களுக்கு உங்களால் ஏதாவது (நல்லவை) நடக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உயிர் எப்படியாவது எப்போதாவது எடுத்து விடுவான் கூறிவிட்டேன் கூறிவிட்டேன். இதை முதலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாக்குகள் பின்பு உரைக்கின்றேன். எது என்றும் அறிய சனிபகவானே இடித்து தள்ளிவிட்டு சென்றுவிடுவான்.அவளவுதான்.

அடியவர்:- மற்றவர்களுக்கு உதவி செய்வதனால் கர்மா சேருமா?

குருநாதர்:- அமையே சேரும் அம்மா. ஆனால் இறைவன் ஒரு நொடியில் அதை நீக்கி விடுவான்.

அடியவர்:- பூமியில வெப்பம் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது. நல்ல மழை பெய்து இந்த ஊர்களை எல்லாம் இறைவன் காப்பாற்றவேண்டும்.

குருநாதர்:- அம்மையே பூமியில் கெட்டவர்கள் அதிகமாகிக்கொண்டே போய் இருக்கிறார்கள் அம்மையே. அப்பொழுது அவர்களால் சில நல்ல மனிதனுக்கு துன்பம் ஏற்படும் பொழுது பின் இங்கு அமர்ந்தானே (அசைவம் உண்டவர், அவரை பின் சென்று அமரச்சென்னார் குருநாதர் முன்பு ) அவன்தனும் மற்ற ஒரு உயிரை கொன்று கொன்று சாப்பிட்டு என்றும் அறியாமலேயே , பின்பு இப்பொழுது வளராது கஷ்டங்கள் ( என நினைத்து அசைவம் உண்டு) பின்பு ( துன்பங்கள் ) வந்தால் ஐயோ யான் எவை என்று கூற இறைவனை நோக்கி படையெடுப்பது பின் அப்பொழுது ( துன்பங்கள் வந்த பின் அசைவம் சாப்பிடுவதை ) விட்டு விடுவது. அதனால் இப்போதே விட்டு விட்டால் அம்மையே இதன் ரகசியத்தை தெரிந்து கொள்.

நாடி அருளாளர் :- ( குருநாதர் வாக்கை, அந்த அடியவரை அசைவம் சாப்பிட வேண்டாம் என உரைத்தார்கள் )

அடியவர்:- சரிங்க ஐயா

குருநாதர்:- அப்பனே விட்டுவிடுகிறேன் என்று சொல்லி விட்டாய் அப்பனே. ஆனால் உன்னால் விட்டு முடியாது அப்பா யான் சொல்கிறேன்.

அடியவர்கள்:- ( சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே ஆசை அறுமின். அப்பனே முதலில் எதன்மீது மற்ற எவை என்று கூற ஜீவராசிகள் மீது அப்பனே தெரிந்துகொள்ளுங்கள்.

( முதலில் மற்ற ஜீவரீசிகளை/அசைவ உணவு உண்ணும் ஆசையை அறுக்க வேண்டும்)

அப்பனே நன்றாக தின்னுவது அப்பனே கடைசியில் பார்த்தால் நோய்கள் சம்பாதித்துக்கொள்வது பின்பு இறைவன் இடத்தில் அய்யய்யோ நோய் வந்து விட்டதே என்று (வேண்டுவது) ,  மருத்துவர் கூட ( சென்று சிகிச்சை ஆனாலும்) அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா.

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். அதனால் அப்பனே தான் தான் செய்த தவறுகள் பின் தன்னையே பின் பாதிக்கும் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ஆனால் அது தெரியாமல் இறைவனிடத்தில் வந்து புலம்புவது வீணே என்பேன் அதனால் தன்னைத் தான் உணர வேண்டும். தன்னை உணர்ந்தால் தானே வெற்றி. அப்படி இல்லையென்றால்,  அப்பனே யாரோ ஒருவன் பிறர் நலனை விரும்பி விரும்பி வருகின்றானோ  ( அவன்தனக்குத்தான் இறைவன் அனைத்தும் செய்வான், அவனே வெற்றியாளன் ) சொல்லி விட்டேன்.

அடியவர்:- வீட்ல வேலை செய்கின்றார்கள். அவர்களுக்கு சம்பளமும் கொடுத்தை உதவியும் செய்கின்றோம். அதனால் கர்மா கழியுமா?

குருநாதர்:- அம்மையே ஒர் பிறவியில் இளவரசி நீ. ( தனிப்பட்ட வாக்கு)  அம்மையே தெரிந்துகொள். அவ்வளவுதான் வாழ்க்கை.

அடியவர்:- நாம் உதவி செய்றது வந்து….

குருநாதர்:-  ஏன் உதவி செய்கின்றாய் மற்றவர்களுக்கு? சாதாரணமா செய்ய வில்லை என்று ஏற்கனவே கூறி விட்டேன் நீ ஏமாற்றி இருப்பாய் முன் ஜென்மத்தில். இப்பொழுது அவள்தனக்கு உதவிகள் செய்கின்றாய் கழிந்துவிட்டது அவளோதான்.

இதனால் இறைவனை நாட நாட நிச்சயம் மற்றவர்களுக்கு சேவை செய்ய பாக்கியம் கிட்டும். ஆனால் அவை தன் உந்தனுக்கே சேவை செய்யும் பாக்கியம் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். ஏன் பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதில் கூட அடங்கியுள்ளது. மற்றவர்களை நீ ஏமாற்றினாய் அல்லவா அப்பிறவியில் (உன்னோடு பயணித்த ) அனைத்து ஆன்மாக்களும் பிறந்திருக்கும். அதனால் ( அவ் முற்பிறவி ஆத்மாக்கள் ) உன்னை தேடி வரும் பொழுது  அப்போது நீ பின் ( முன் ஜென்ம கர்மத்தை ) தீர்த்துக்கொள்வாய். சமநிலை அடைந்து விடும். மோட்சமும் கிட்டும். 

அப்படி இல்லை என்றால் அதனால் தான் மற்றவருக்கு தன்னிடத்தில் இருப்பதை ஏதாவது கொடுங்கள் கொடுங்கள் என்றெல்லாம் சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்பனே பணம் ஏமாற்றிவிட்டார்களே என்று சொல்வது அப்பனே நீ ஏமாற்றி முன் ஜென்மத்தில் அப்பனே. இப்பொழுது உன்னை ஏமாற்றுகின்றார்கள். அவ்வளவுதான். அதனால் இறைவன் கொடுத்தவை இறைவனே பிடுங்கிக்கொள்வான் வாழ்க்கையில். அவ்வளவுதான் அப்பனே. உன்னால் ஒன்றும் முடியாது. ஒன்றும் முடியாதப்பா. வெறும் பொம்மையே என்பேன் அப்பனே. அதை ஆட்டி வைப்பது இறைவன்.

அதனால் சிலருக்கு நல்ல வாழ்க்கை. சிலருக்கு தீய வாழ்க்கை என்றெல்லாம் மனிதர்கள் ( நினைக்கின்றார்கள்). ஆனால் அனைவருக்குமே நல்வாழ்க்கை இறைவன் கொடுக்கிறான். ஆனால் சரியாக உபயோகப்படுத்துவது இல்லை.

அதனால் அறியாமல் பிற உயிர் கொல்லக்கூடாது என்பதற்காக அப்பனே எடுத்துரை ( என்று ஒர் அடியவரை குறிப்பிட்டு ) அடுத்த உயிரை கொல்வது தவறா தவறில்லையா.?

அடியவர்:- மிகப்பெரிய தவறு.

குருநாதர்:- அதற்கான தண்டனை என்ன என்று கூற பின் (இங்கு) யார் யார் (அசைவம்) உண்ணுகின்றார்களோ அவர்களை அழைத்து (அசைவம் சாப்பிடுவது தவறு என்று ) சொல்.

அடியவர்கள்:- (அசைவம் சாப்பிடும் அனைத்து அடியவர்களையும் அழைத்தார்கள். அவர்களை அங்கு முன் வரிசையில் நிற்க வைத்தார்கள்.

அடியவர்:- எல்லா உயிர்களுக்கு இறைவனுடைய அம்சமாக இருக்கின்றது. எந்த உயிர்களுக்குமே ஏற்ற தாழ்வு இறைவனிடம் கிடையாது. மனிதன் உயர்ந்தவன் வேற உயிருக்கு வந்து தாழ்ந்தது அப்படின்னு ஏற்ற தாழ்வு (இறைவனிடம் ) கிடையாது. இருந்தபோதிலும் அது அது செய்த கர்மாவுக்கு ஏற்ற மாதிரி அது வந்து மனித தேகத்தில் வந்து பிறந்து இருக்கு. அப்ப மனிதனால் மட்டுமே இறையோட இருந்தா கலக்க முடியும் என்பது எனது புரிதல்/நம்பிக்கை.  அப்போ மத்த விலங்குகளால் அடைய முடியாதா என்று கேட்டால் மற்ற விலங்குகள் வந்து கர்மவை கழிக்கிறதுக்காக பிறந்திருக்கு. அப்போ அதற்கும் உங்களுக்கு உள்ள எல்லா அவஸ்தை , உங்களுக்கு உள்ள கஷ்டம் எல்லாமே அதுக்கு உண்டு. அப்ப அத நீங்க என்ன செய்றீங்களோ அதற்குள்ள அதுமிச்ச காலம் அதோட கர்மாவை நீங்கள் வாங்கியது போல் ஆகும். இப்போ உங்களை கிள்ளும் போது எவ்வளவு வலி அவஸ்தையா இருக்கும்.  அப்ப அத கழுத்தறுத்து கொல்லும் பொழுது அதுக எவ்வளவு அவஸ்த்தையா இருக்கும்.சில உயிர்களுக்கு ஞானம் பெற்ற உயிர்கள் நீங்க கழுத்தை அறுக்க தன் தலையை கொடுக்குமாம். எதுக்குன்னு கேட்டால் சீக்கிரம் கர்மாவை கழித்து இறைவனை அடைவதற்கு. அது ரொம்ப புரிதலான ஒரு சில ஆன்மாக்கள், உயிர்கள் இருக்கு அப்படி ஒரு ஞானம் இருக்கு என்று நான் கேள்விபட்டு இருக்கின்றேன். அப்ப அது வந்து என்ன செய்யும் என்றால், நீ அசைவம் சாப்பிடுகின்றீர்கள் என்றால் தலைய வெட்டு அப்டின்னு வந்து தலைய குடுக்குமாம்.  அப்போ அதன் கழுத்தை வெட்டும் போது மிச்ச காலம் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியது இருக்கோ அந்த கஷ்டத்த நீங்க அனுபவிச்சே ஆகனும்.

அப்போ அதுக்கு நீங்க விமோசனம் குடுக்குற மாதிரி அதனுடைய கர்மாவை நீங்க சுமக்குறீங்க. அப்ப அதனுடைய கர்மாவை நீங்க சுமக்கும்போது உங்களுக்கு எப்படி இறையருள் கிடைக்கும். இறைய நீங்க அடையவே முடியாது. மறுபடியும் தண்டனை தேகம் ( பிறவி ) பெற்றே ஆக வேண்டும்.

இறைய அடைய வேண்டும் என்றால், அது தண்டனை பெற்ற தேகத்துடன் இந்த உலகத்தில் வந்து அது இயற்கையோட இயற்கையா கழிச்சுட்டு அடுத்த பிறப்புக்கு வந்துட்டு போகுது.  அப்போ உங்களுக்கு லைட்டா ஒரு குண்டுசியால குத்தினால் எவ்வளவு அவஸ்தையா இருக்கு வலிக்குது.  அப்ப அத நீங்க வெட்டும் போது வலிக்குது என்பதை உங்க உள் மனசு சொல்லுவதில்லை.. அப்புறம் என்ன சுயநலம் உங்களுக்கு அந்த ஆசை உங்க நாக்கு ருசிக்காக உணர்ந்துதான் வேண்டும் என்று தெரிஞ்சுதான் தப்பு பண்ணுகின்றீர்கள். அது தப்பு இல்லை என்று உங்களை நீங்களே ஏமாத்திக் கொண்டு இருக்கீங்க அப்டின்னு உங்களுக்கு தெரியும். அது வெட்டும் போது அதற்கும் வலிக்கும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சு ஏன் அதை செய்கின்றீர்கள்?. அது என்ன செய்ய போகுது நம்மள? அத சாப்பிடலாம்னு உங்கள நீங்களே காமெடி சொல்லி ஏமாத்திட்டு இருக்கீங்க. அப்ப அதனால உங்களுக்கு பாதிக்கப்படுவீங்க அப்படின்ற உணர்வு வந்துருச்சுனா நீங்க இத பண்ண மாட்டீங்க.  அப்போ அதை அறுத்து சாப்பிடும் போது அதனுடைய பாதிப்பு உங்களுக்கு வரும் அப்படின்ற உணர்வு உங்களுக்கு இல்ல.  இப்ப வெட்டி சாப்பிடுகின்றோம் அது எல்லாம் ஒன்றும் இல்லை. அதுக்குத்தானே படைக்கப்பட்டு இருக்கு அப்டின்னு உங்கள நீங்க ஏமாத்திக்கிட்டீங்க. உண்மையில் உங்க ஆழ் மனதில் இருந்து அந்த உயிர் பலி பண்ணும் போது அதனுடைய வலியும் அதனுடைய அவஸ்த்தையும்  அதனுடைய கஷ்டங்கள் உங்களுக்கு நல்லா தெரியும். அப்படினு போது அதுக்குள்ள எல்லாமே நீங்க அனுவித்தேதான் தீரனும். இது அடியேன் புரிதல்.

குருநாதர்:- அப்பனே என்ன வேலை செய்கிறான் என்று கேள்?

அடியவர்:- ( தனது வேலையை கூறினார்)

குருநாதர்:- அப்பனே எவ்வளவு சம்பளம் என்று கேள்.?

அடியவர்:- ( தனது சம்பளத்தை உரைத்தார் )

குருநாதர்:- அப்பனே பிற உயிரைக் கொன்று உட்கின்றவனுக்கே இறைவன் நல்லது செய்கிறான் என்றால் அப்பனே உங்களுக்கெல்லாம் எப்படி நன்மை செய்யாமல் இருந்துவிடுவான் இறைவன் கூறுங்கள் நீங்களே அப்பனே?

நாடி அருளாளர்:- ஐயா எல்லாருக்கும் புரியுதுங்களா?

அடியவர் :- எல்லா வசதியும் இருக்கு. XXXXX சம்பளமும் இருக்கு. வேல கூட இல்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அப்ப நம்பளுக்கு சம்பளம் வருது,  நம்ம கஷ்டம் வராது அப்டின்னு நீங்க ஏமாந்துட்டீங்க. நீங்க விழுந்தீங்கன்னா உங்களை தூக்குறதுக்கு ஆளே இல்ல.

குருநாதர்:- அப்பனே ஏன்? எதற்காக அப்பனே பின் அரசு சார்பான அப்பனே தொழில் செய்வது அனைவருக்குமே அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே நோய்கள் வந்துவிடும் அப்பா. ஏன் என்றால் அப்பனே எது என்று கூற எவை என்று அறிய இல்லாதோர் இயலாதோர் அப்பனே எவை என்று அறிய அறிய இதிலும் கூட சம்பந்தமில்லாத இல்லாதோர் இயலாதோர் எல்லாம் சொல்லுகின்றேன் வரும் வாக்கில் அப்பனே. இவர்களிடம் எவை என்று கூற எடுத்து அப்பனே எடுத்து அப்படியே அரசு எந்த மற்றவருக்கு ஈகின்றது என்பேன் அப்பனே. இதன் கர்மா அவர்களை சாரும் பொழுது அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பறம் அரசு பதவி வகிக்கும் பொழுது அப்படியே பின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சொல்லிவிட்டேன். சில சில வழிகள் கூட அப்பனே நல்லதையே செய்ய வேண்டும் என்பேன் பின்பு கடைசியில் பார்த்தால் அப்பனே கீழே விழுந்து விடுவான் அப்பனே. எழுப்பதற்கு ஆள் இல்லையப்பா.

அடியவர்:- சாமி கோயிலில் வெட்டி சாப்பிடுகின்றார்கள்.

குருநாதர்:- அம்மையே அதாவது நீயே உணர்ந்து கொள். அம்மையே இறைவன் கேட்டானா என்ன இறைவனுக்காக ஆடு மாடுகள் இறைவனுக்காகவே எவை என்று கூற பின் வெட்டி நீ தானே உட்கொள்கின்றாய் அம்மையே இறைவனா உட்கொள்கின்றான்?

அடியவர்:- கொசு கடிக்கும்போது அதை அடித்தால் …

குருநாதர்:- இதுவும் அப்பனே பாவத்தில் தான் சேரும் என்பேன். அதனால் தான் புவியில் பிறந்த அனைவருமே அப்பனே பாவத்தை சம்பாதித்து கஷ்டங்கள் தான் பட வேண்டும். எனவே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவ்பாவத்தைப் போக்க அப்பனே இறைவனை நாடுவதாம். அப்பனே எப்படி அப்பா?

அப்பனே ஒவ்வொரு விசைக்கும் எதிர்வினை உண்டு என்பதை நீ படித்தாயா இல்லையா?

அடியவர்:- every action has reaction

நாடி அருளாளர்:- ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு.

குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் நிற்கிறாய் இப்பொழுது?

அடியவர்:- நிம்மதியை தேடி ..

குருநாதர்:- அப்பனே அவ் நிம்மதி யாருக்கு இல்லை அப்பா இங்கு அப்பனே நீ யாரேனும் கேட்டுப்பார் இவ்உலகத்தில் எனக்கு நிம்மதி இல்லை என்று சொல்லுவார்கள். அப்படி எவ்ளோ கொடுத்தாலும் அப்பனே மனிதனுக்கு போதாது அப்பா போதாது.அப்பனே அதனால் முதலிலேயே வந்துவிட்டாய் அப்பனே. ஆசிகள்.

அடியவர்:- நிரந்தர அரசு வேலை…கிடைக்குமா?

குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் எடுத்துரைத்தேன் அதனால் பொறுத்திருந்து.

அடியவர்:- ( உடல் நிலை குறித்த கேள்வி )

குருநாதர்:- அப்பனே ஏன் வயிற்று வலி வந்திருக்கிறது எதை என்று அறிய அப்பனே ( ஒரு அடியவரை அழைத்து ) எடுத்துரை.

அடியவர்:- நம்ம உணவு வந்து இயற்கையாவே சாப்பிடுவது இல்லை. நம்ம சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதில்ல. நம்ம உயிர் வாழ்வது சாப்படுவதில்தான் உள்ளது. . அப்ப நம்ம ஆரோக்கியமாக இருக்கனும் என்று உணர்வதே இல்லை. ஒரு formalityக்காக வேக வேகமாக சாப்பிட்டு ஓடுவது.அப்போ இப்படித்தான் சாப்பிடணும். இப்படித்தான் வாழனும் என்று வாழ்வில் கோட்பாடு மாற்றும் போது அசைவம் சாப்பிடுவதனால, இல்ல சாப்பிடாம ஏற்ற இறக்கமாக சாப்பிடுவது, செயற்கை சாப்பிடுவது. இயற்கையா சாப்பிடுவதுல்லை. அப்ப மாதம் ஒருமுறை பேதி கொடுப்பது. அப்ப எந்ந முறையுமே நம்ம உடம்புக்காக செய்வதே கிடையாது. நல் எண்ணெய் தேய்து குளிக்கனும். பேதி கொடுக்கனும். இவ்வளவும் நமக்கு தெரியும். எல்லாத்துக்கும் அறிவுரை சொல்வோம் ஆனால் பண்ண மாட்டோம். இப்ப வயிற்று வலி வருதுன்னா வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையா இருக்கும். யோசித்தால் உங்களுக்கு கண்டிப்பாக தெரியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete