​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 29 November 2023

சித்தன் அருள் - 1521 - அன்புடன் அகத்தியர் - மதுரை மீனாட்சி!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம் அனைவருக்கும் அன்னை மீனாட்சி யின் வரலாறு தெரிந்திருக்கும்!!!!

பாண்டிய மன்னன் மலையத்துவஜன் காஞ்சனா மாலை இருவரும் புத்திர பாக்கியம் இல்லாததனால் வேள்வி செய்து இறைவனை வழிபட்டு யாக வேள்வியில் சிறுமியாக வந்துதித்து... தடாதகை பிராட்டியார் எனும் நாமம் கொண்டு பாண்டிய நாட்டில் வளர்ந்து உலகமெங்கும் திக் விஜயம் செய்து கைலாயத்தில் எம்பெருமான் ஈசனை எதிர்கொண்டு ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு திருமணத்தில் இணைந்து மதுரை மா பேரரசியாக ஆட்சி புரிந்து வரும் வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்!!!!

தடாதகை பிராட்டியார்  எனும் திருநாமம் உள்ள அம்மனுக்கு மரகதவல்லி !! 
அங்கையர் கண்ணி!! 
ராஜ மாதங்கி!! 
சியாமளா!! 
கோமளவல்லி!! 
பாண்டிய ராஜகுமாரி!! மாணிக்கவல்லி!! மரகதவல்லி!!
 சுந்தரவல்லி!! கஸ்தூரி திலகாயை!!
 நாத பிரியாயை!! 
ரதி பிரியாயை!! 
காமகலாயை!! சாம்பவ்யை !! 
நித்திய கல்யாண்யை !!
நித்திய புஷ்பாயை புவனேஸ்வரியை!! ஸ்யாமளாம்பிகையை!!!
மீனலோசனி!!! 
மங்கையர்க்கரசி!!
கடம்பவன ராணி!!
கூடல் மாநகர் நாச்சியார்!!
குமரித்துறைவி!!!
மரகதமேனியாள்!!

ஆலவாய் அரசி........ 

என பல பெயர்கள் இருந்தாலும் மீனாக்ஷி எனும் பெயரில் தான் அன்னை அறியப்படுகின்றாள்!!!!

இத்தனை பெயர்கள் இருந்தாலும் மீனாட்சி என பெயர் நிலைத்து நிற்பதற்கு காரணம் இந்த பெயரை அன்னைக்கு சூட்டியது வேறு யாரும் அல்ல!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தான் அன்னைக்கு இந்த மீனாட்சி எனும் பெயரை சூட்டியவர்.

தடாதகை பிராட்டியார் பட்டாபிஷேகத்தின் போது !!!

மீன் எப்படி உறங்காமல் கண்களை திறந்து கொண்டே தன் குஞ்சுகளை காப்பாற்றுகின்றதோ அதேபோல இமைப்பொழுதும் அறம் வழுவாது தம் குடிகளை தம் மக்களை தம் குழந்தைகளை அன்னை காப்பாற்றி ஆட்சி புரிவதால் மீனாட்சி எனும் பெயரை நம் குருநாதர் அகத்தியர் பெருமான் சூட்டினார்.

இந்த மீனாட்சி அம்மன் பெயர் சூட்டும் நிகழ்வினை குறித்து குருநாதரிடம் கேட்பதற்கு முன் இதனைக் குறித்து நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

குருநாதரின் பால் பேரன்பு கொண்ட ஒரு அகத்தியர் அடியவர்!!!!! குருநாதருடைய திருவருளால் அவருடைய வீட்டிலும் வாழ்க்கையிலும் மீனாட்சி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

இதை சுவடி மூலமாக பல முறை அந்த அடியவருக்கு குருநாதர் எடுத்து கூறி இருக்கின்றார் குருநாதர் உரைத்தபடி மீனாட்சி அம்மனின் சில சூட்சுமங்கள் அடியவருக்கு மேலும் மேலும் உணர்த்தி வைக்கப்பட மீனாட்சி அம்மனை மனதார அந்த அடியவர் வணங்கிக் கொண்டு வந்தார். குருநாதருடைய திருவருளால் அன்னையின் கோயில்களுக்கும் சென்று வழிபடும் பாக்கியமும் கிடைத்தது.

இப்படி இருக்க மீனாட்சி அம்மனை குறித்து மேலும் மேலும் அறிந்து கொள்வதற்காக அவர் அறிய முற்பட்டபோது மீனாட்சி அம்மனுக்கு மீனாட்சி என பெயர் சூட்டியது அகத்திய பெருமான். என அறிந்தார். 

உடனடியாக இந்த நிகழ்வினை குறித்து குருநாதரிடம் கேட்பதற்கு மிகுந்த ஆவலோடு இருந்தார் ஆனால் ஒரு சிறிய தயக்கம்!!!

ஏனென்றால் நம் குருநாதர் எந்த ? எந்த ? வாக்கினை எந்தெந்த ? இடத்தில் வைத்து சொன்னால் அதற்கு பலன் மற்றும் மதிப்பு என்பதை குருநாதரே கூறியிருக்கின்றார். அதனால் இந்தக் கேள்வியை சரியான இடத்தில் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க!!!

அந்த சமயத்தில் அகத்தியர் மைந்தன் நம் குருநாதர் அகத்தியரின் ஜீவ நாடியை ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா திருச்செந்தூர் ஸ்தலயாத்திரையை குருநாதர் உத்தரவின்படி முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே திரு பரமசிவம் ஐயா அவர்கள் திருச்செந்தூர் முருகன் தரிசனத்திற்காக சென்றிருந்த போது அங்கு குருநாதர் உத்தரவின் பேரில் அங்கு வந்திருந்த திரு ஜானகிராமன் ஐயா அவர்களை சந்தித்து குருநாதரின்  வாக்குகளையும் பெற்று...குருநாதர் இல்லத்திற்கு வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார்!!!!

ஒரு வாரம் கழித்து.... அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு குருநாதர் அகத்திய பெருமான். அன்பு மகனே ராமா!!!!!!                            

நீ மதுரை செல்க!!!!! மைந்தன் பரமன் வீட்டிற்கு சுவடியை கொண்டு செல்க!!! எனும் உத்தரவு கொடுத்தார்!!!

அதன்படியே திரு ஜானகிராமன் ஐயாவும் மதுரை கிளம்பினார்!!!

மதுரை சென்று அன்னையை தரிசனம் செய்துவிட்டு திரு பரமசிவம் ஐயா வீட்டில் சுவடி பூஜையில் வைக்கப்பட!!!!

அந்த சமயத்தில் இந்த அடியவரும் திரு பரமசிவம் ஐயாவை தொடர்பு கொண்டு ஐயா இது போன்று ஒரு தெய்வீக சம்பவம் உள்ளது!!!

இதனைக் குறித்து கேட்பதற்கு சரியான இடம் மதுரை தான்!!!! அன்னை ஆட்சி புரியும் அந்த மண்ணில் இந்த கேள்வியை குருநாதரிடம் கேட்கும் பொழுது அதற்கு சரியான பதில் கூறுவார் என்று இருவரும் கலந்து பேசி குருநாதர் இடம் கேட்பதற்கு முடிவானது!!!

பரமனே !!!!  மைந்தனே!!!! என குருநாதரால் அன்போடு அழைக்கப்படும் திரு பரமசிவம் ஐயா அவர்கள் வீட்டில் வைத்து அவரும் அவருடைய துணைவியார் திருமதி மீனாட்சி பரமசிவம் மற்றும் அடியவர்கள் முன்னிலையில் குருநாதரிடம் இந்த சம்பவத்தினை குறித்து கேட்க!!!!!

அப்பொழுது குருநாதர் தன் திருவாய் மலர்ந்து  கணீர் !!!!! என அந்த சம்பவத்தை பற்றி கூறினார்!!!!

குருவே சரணம்!!!! 

தடாதகை பிராட்டியாக  இருந்த  அன்னை மதுரை அரசியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்ட போது

நீங்கள் தான் அகத்தியப்பெருமான் தான் மீனாட்சி அம்மன் என்று பெயர் சூட்டினார்.என்று நாங்கள் அறிந்தோம்!!! அந்த விழாவை பற்றிய சம்பவங்களை பற்றி அறிய வேண்டுகின்றோம். 

குருநாதர் அகத்திய பெருமான் : அம்மையே !!! விழா எப்பொழுது தெரியுமா?

பெண் அடியவர்: தெரியாதுங்க ஐயா.

குருநாதர் அகத்திய பெருமான் -

எதை என்றும் அறிய அறிய அம்மையே எவை என்று புரிய புரிய பின் எவை என்று கூட.......... 

எதை என்று அறிய அறிய 

அம்மையே வரும்பொழுது எதை என்று புரியாமலும் கூட  உன் அதாவது கணவனை காப்பாற்றி!!! எதை என்று அறிய அறிய கரை சேர்த்தாளே மீனாட்சி!!!!

எதை என்று அறிய அறிய  அதற்கும்!!!   எதை என்று கூட , காமாட்சி எதை என்று கூட, விசாலாட்சி என்றெல்லாம் யான் தான் பெயரே வைத்தவன்.!!!

ஆனால் நிச்சயம் பின் இவந்தனை காப்பாற்றி இப்பிறவியில் பின் வந்து இப்படி எதை என்று அறிய அறிய பின் நிச்சயம் அந்நாள் வரும். இங்கே வருவாள்.!!! (அன்னை மீனாட்சி) 

அப்பொழுது சொல்கிறேன்.அம்மையே!! அந்நாளை பற்றி பொறுத்திரு.!!!!

மீனாட்சி அம்மனுக்கு  மட்டுமல்ல காமாட்சி அம்மனுக்கும் விசாலாட்சி அம்மனுக்கும் .... பெயர் சூட்டியது யானே என்று குருநாதர் கூறியதும்

கூடியிருந்த அடியவர்கள் அனைவருக்கும் பரவசம்!!! அன்னை மீனாட்சி தாய் திருவடிகளே போற்றி!! அகத்தியப்பன் திருவடிகளே போற்றி !! என மனதிற்குள்ளே வணங்கிக் கொண்டனர்.

அன்னை மதுரை மீனாட்சிக்கு மட்டுமல்ல அன்னை காஞ்சி காமாட்சி அன்னை காசி விசாலாட்சிக்கும் பெயரை சூட்டியவர் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் என்பதை அவரே தன் வாயிலாக கூறும் பொழுது எப்படிப்பட்ட பரவசம் தோன்றுகின்றது.

இதில் அடியவர்களுக்கு சில சந்தேகம் எழலாம்!!!!

அதாவது உன் கணவனை காப்பாற்றி கரை சேர்த்தாளே.... மீனாட்சி என்று குருநாதர் குறிப்பிட்டார் அல்லவா!!!

மீனாட்சி அம்மனால் ஒரு பிறவியில் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட்ட அடியவர் தான் மதுரை திரு பரமசிவம் ஐயா அவர்கள்.

இவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் மதுரையில் அகத்தியர் இறையருள் மன்றத்தின் மூலமாக பல அன்ன சேவைகளை தொழு நோயாளிகள் பார்வையற்றோர் காப்பகங்கள் பல முதியோர் இல்லங்களுக்கு ஒரு குழுவாக இருந்து இணைத்துக் கொண்டு சேவைகளை செய்து வருபவர். மதுரை இடவ மலை எனப்படும் பசுமலையில் ஸ்ரீ அகஸ்தியர் லோப முத்ரா ஆலயத்திலும் அன்ன சேவையை முன் நின்று நடத்திக் கொண்டு வருபவர்.

இவருடன் குருநாதர் பேருந்தில் பயணம் செய்ததும் பெருமாள் ஏழுமலையான் வந்து இவர் கையால் உணவை வாங்கி கொண்டு சென்றதும் இன்னும் பல சித்தர்கள் ஆசிகள் கிடைத்ததையும் நமது சித்தன் அருள் வலைத்தளத்தில்

அன்புடன் அகத்தியர் 1032
அன்புடன்  அகத்தியர் 1078
அன்புடன்  அகத்தியர் 1080
அன்புடன்  அகத்தியர் 1081
அன்புடன்  அகத்தியர் 1447 

பதிவுகளில் வெளிவந்துள்ளது!!!!! 

குருநாதரிடம் கேள்வியை கேட்ட பெண் பக்தை மகனே பரமா!!!! என்று குருநாதர் அகத்திய பெருமானால் அன்போடு அழைக்கப்படும் பரமசிவம் ஐயா அவர்களின் மனைவி ஆவார்!!!! இவரின் பெயரும் மீனாட்சி.

ஒரு பிறவியில் மீனாட்சி தாயால் காப்பாற்றப்பட்ட நிகழ்வினை திருச்செந்தூர் செந்தில் கோட்டத்தில் வைத்து திரு பரமசிவம் ஐயாவிற்கு நாடி வாசித்த பொழுது ஒரு முன்னுரையாக கூறியிருந்தார் அந்த ஜீவநாடி குருநாதர் வாக்கு

அப்பனே ஒவ்வொரு இடத்திலும் கூட சித்தர்கள் உன்னை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே !!

எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே

அண்ணாமலையிலும் கூட ஒரு சித்தன் அழகாக உன்னிடத்தில் பேசிவிட்டு சென்று விட்டான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏராளம் அப்பனே !!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அப்பனே உன் ரகசியங்கள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே!!! 

வரக்கூடிய காலங்களில் கூட யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை என்பேன் அப்பனே!!! 

எதற்காக பிறந்தாய் ?? அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒரு ரகசியத்தை மட்டும் இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே

மதுரை தன்னில் அப்பனே எவை என்று கூட.... அப்பனே பல பிறவிகள்  எடுத்தாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!! 

ஆனாலும் அப்பனே பின் மாற்று வழியாக வந்து அதாவது அப்பனே உன் தாய் தந்தையர் மீனாட்சி தேவியின் அருளைப் பெற்றவர்கள்!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் அவர்களுக்கும் கூட குழந்தை பாக்கியங்களே இல்லை!!! குழந்தை வரமே இல்லை!!! வரங்கள் இல்லையப்பா!!!

ஆனாலும் மீனாட்சி எவை என்றும் அறிந்தும் கூட நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி நிச்சயம் உந்தனை கொடுக்க!!!!

(மீனாட்சி அம்மன் திருவருளால் புத்திர பாக்கியம்)

ஆனாலும் அவர்கள் எதை என்றும் அறிய அறிய இதனால் பெற்றெடுத்த தாய் உடனடியாக மாண்டு விட !!!!! அவ் அதிர்ச்சியில் பின்.... உன் தந்தையும் மாண்டு விட்டான்!!!!

அதாவது தாய் தந்தையர் மாண்டு போய்விட்டனர்!!!

ஆனாலும் கடைசியில் நீ ஆனாலும் இப்படி இருக்க எதை என்றும் அறிய அறிய உந்தனுக்கும் கூட அப்பனே

( இந்த பிறவியில் பரமசிவம் ஐயா தொழு நோயாளிகளுக்கு உணவு உடை என சேவை செய்து வருவதை....... குருநாதர் குறிப்பிடுகின்றார்....... முற்பிறவியில் ஒரு தொழு நோயாளியாக இருந்து அதன் வலியை உணர்ந்ததால் தான் அன்னை மீனாட்சி அருளால் அப்பன் அகத்தியரின் திருவருளால் இப்பிறவியிலும் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்யும் பாக்கியம் இவருக்கு கிடைத்துள்ளது)

இப்பொழுது கூட நீ உதவிகள் செய்து கொண்டிருக்கின்றாயே தொழு நோயும் அப்பனே!!!

( அந்தப் பிறவியில் குழந்தையாக இருந்த இவருக்கு தொழுநோய்)

ஆனால் உன்னை யாருமே தொட வரவில்லையப்பா!!! 

ஆனாலும் அப்பனே சிறிது சிறிதாக அப்பனே தாழ்ந்து தரையோடு தரையாக உரசி தவழ்ந்து சென்று சென்று அப்பனே உட்கொண்டு உட்கொண்டு உணவு கூட!!!

(தொழு நோயின் கடுமையினால் நடக்க முடியாமல் படுத்துக்கொண்டே தவழ்ந்து தவழ்ந்து சென்று உணவினை கையேந்தி வாங்கி உட்கொண்டு)

இதனால் அப்பனே பின் யாருமே உன்னை சீண்டவில்லை!!!!

( யாராலும் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு)

ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூட மீனாட்சி தேவியை பார்ப்பதற்கு உள்ளே செல்வார்கள்!!!

ஆனாலும் பின் எதை என்று கூட இப்படி ஒருவன் அதாவது கஷ்டப்பட்டு சிறு குழந்தை இவ்வாறு தவழ்ந்து கொண்டிருக்கின்றதே!!!!!!!!!.......... என்று எண்ணாமலும்!!!! மனிதர்கள்!!!!

பின் இப்படி எல்லாம் இறைவனை வணங்குவது பொய்களப்பா!!!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் மனம் கருகினாள்!!! அதாவது மீனாட்சி தேவியே!!!!

இப்படி எல்லாம் இவ்வுலகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களே!!!!! சிறு குழந்தையிடம் கூட இரக்கம் இல்லாமல் இருக்கின்றார்களே!!!!

ஏதோ அவனவன் அவனவனுக்காகத்தான் சுயநலமாக வணங்கிக் கொண்டிருக்கின்றார்களே!!!  என்று பின் யோசித்து எவை என்றும் அறிந்தும் கூட உன்னை!!! எடுத்து அழுதிட்டு..இருந்த உன்னை அழுக்கில் இருந்து தூக்கி விட்டு........

நிச்சயம் இப்பொழுது எவை என்று கூட அவ் தண்ணீரில் தூக்கி எறிந்தாள்!!!! 

(தேவேந்திரனின் சாபத்தை நீக்கிய!!! நெற்றிக்கண் திறப்பினின் குற்றம் குற்றமே !!!! என்று ஈசனோடு வாதம் புரிந்த நக்கீரர் தனது வெப்பு நோய் தீர்க்க நீராடிய.... பொற்றாமரை குளத்தில் நீராடச்செய்து....‌ நோயை குணப்படுத்தினாள் தாய் மீனாட்சி) 

மீண்டும் அறிந்தும் கூட நீ நன்றாக ஆகிவிட்டாய்.

(தொழுநோய் எல்லாம் காணாமல் போய் மறைந்து விட்டது !!! சராசரி ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் மீண்டு வந்தார் அன்னையின் கருணையால்)

அதன் பின்

இதனால் மீனாட்சி தேவிக்கே சேவைகள் செய்து கொண்டிருந்தாய் அப்பனே!!!!

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதன் ரகசியத்தை கூட யான் தொடர்கின்றேன் அப்பனே...மறு வாக்கில்!!! 

அப்பனே யான் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நிச்சயம் அப்பனே வாக்குகள் உண்டு என்று அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே என் அன்பிற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே.... அதனால் அன்போடு அப்பனே வலம் வந்து கொண்டிருக்கின்றாய்...... அகத்தியா அகத்தியா என்று அப்பனே !!!!!

அப்பனே நலன்கள் கந்தனுடைய அனுகிரகங்கள் அப்பனே இன்றைக்கு பல கோடியப்பா!!!!!!

நலன்களாகவே அப்பனே உன் இல்லத்திற்கும் வந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!!

உந்தனை பற்றியும் உன் மனைவியை பற்றியும்  நலமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

அதற்கு முன்பாக..... மீனாட்சி தேவியை உன் இல்லத்தாளை ஒரு முறை சென்று காணச் சொல்!!

(ஜீவநாடி சுவடி வீட்டிற்கு வருவதற்கு முன் மீனாட்சி அம்மன் தரிசனம் செய்ய சொல்லி குருநாதர் உத்தரவு கொடுத்தார்.

என்ன ஒரு குருநாதரின் சூட்சுமம்!!!!!!!!!

மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய சொன்னதற்கும்!!!

இந்த கேள்வி அடியவர் மனதில் உதயமாகும் அதற்கு பதில் அங்கே உரைக்கப்படும்....... என்பதை முன்கூட்டியே சூசகமாக கூறியிருப்பதை கவனியுங்கள்...)

அப்பனே நலன்கள் நலன்கள் ஆசிகள்!!!!

இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே!!!

என மதுரை வருவதற்கு முன்பே திருச்செந்தூரில் வாக்குகள் நல்கியிருந்தார் நம் குருநாதர் அகத்திய பெருமான்.

இதனை குருநாதர் மீண்டும் மீனாட்சி அம்மன் பெயர் சூட்டும் நிகழ்வினை பற்றி கேட்ட பொழுது காப்பாற்றி கரை சேர்த்தவள் மீனாட்சி என்று குருநாதர் தன் வாக்குகளில் கூறினார்...

குருநாதருடைய ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ரகசியம் எவ்வளவு மதிப்பு எவ்வளவு பொக்கிஷம் எவ்வளவு கருணை எவ்வளவு அன்பு என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது!!!!

இவ்வுலகில் நாம் அறியாத பல தேவ ரகசியங்கள் இருக்கின்றன!!!!! சொல்லப்போனால் இதுவரை நாம் பழனி முருகன் நவபாஷாண மூர்த்தி என அறிந்த நிலையில் அது தச பாஷாணம் என சித்தர்கள் மூலம் தான் நமக்கு தெரிய வந்தது!!!!

ஆன்மாக்களை பற்றியும் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் என்னென்ன ரகசியம் இருக்கின்றது என்பதனைப் பற்றியும் சித்தர்களும் குருநாதரும் எடுத்துச் சொல்ல எடுத்துச் சொல்லத்தான் நமக்கு ஒவ்வொன்றாக புரிய வருகின்றது!!!!!

இதெல்லாம் நம்மை பிறவி கடலிலிருந்து மீட்டெடுக்க சித்தர்கள் செய்யும் நற்கருணை முயற்சிகள். இதை மனதில் நிறுத்தி நம் குருநாதர் அகத்திய பெருமானும் சித்தர்களும் உரைக்கும் ஒவ்வொரு வாக்கினையும் கேட்டு தெளிந்து தெளிவு பெற்று அதன்படி நடந்து கொண்டால் நமது வாழ்க்கையும் மேன்மை பெற செய்வார்கள் இறைவன் தரிசனமும் சித்தர்கள் பெற்று தருவார்கள் மோட்ச கதியையும் அடையச் செய்வார்கள்!!!!

குருவருள் இல்லாமல் திருவருள் ஏது?????

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. வெகு நாட்களாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். மதுரையில் தொழுநோயாளர் களை பராமரித்து வரும் அடி யாரைப் பற்றி...... பகிர்வுக்கு மிக்க நன்றி 🙏

    ReplyDelete
  3. அந்த அடியவரின் பணியில் நாங்களும் பங்கு கொள்ள விரும்புகிறோம். அவருடைய தொடர்பு எண் இருந்தால் பகிர்ந்து உதவி செய்யுங்கள். ஓம் அகத்தீஸ்வராய நமஹ.

    ReplyDelete
    Replies
    1. அந்த அடியவரின் தொடர்பு எண் 9842170513. குருநாதர் அன்புடன் பரமனே என்று அழைக்கும் நாமத்தை உடைய திரு.பரமசிவம் அவர்கள். மதுரை.

      Delete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete