​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 16 November 2023

சித்தன் அருள் - 1504 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 16!


நாடி அருளாளர்:-  இப்ப நீங்க சொன்னிங்க இல்லையா, ஆசைகள் ஆசைகள் போக போக இந்த மெமரி கார்டுல இருக்குறது ஃபுல் ஆகிவிடும்.

குருநாதர்:- அப்பனே அனைத்தும் ஒரு அடியில் அப்பனே சிக்கிக் கொள்ளும் என்பேன். அதனால்தான் அப்பனே அனைத்தும் அப்பனே வந்து விடும். ஆனால் ஒரு அளவுக்குத்தான் சேகரிக்கும்.  அளவுக்கு மிஞ்சினால் அப்பனே எது என்று கூற அனைத்தும் அழிந்து விடும். மீண்டும் எழுந்திருக்க முடியாது. அப்பனே சொல்லி விட்டேன் அதனால் ஆசையை குறையுங்கள். குறையுங்கள் அப்பனே. எதனையும் மனதில் நினைக்க வேண்டாம். அப்படியே இறைவா என்று நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே. மனதை சாந்தி அடையுங்கள் அதாவது சாந்திபடுத்துங்கள் அப்பனே. தியானம் செய்யுங்கள் அப்பனே மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் அப்பனே. தானாகவே குறைந்துவிடும். அப்பனே அவ் பதிவுகள் குறைய குறைய நீ வெற்றி ஆகலாம் என்பேன். ஆனால் அவ் பதிவு அதிகரிக்க அதிகரிக்க கடைசியில் பார்த்தால் எங்கோ போய்விடுவாய். ஆளே தெரியாமல் போய்விடுவாய்.

அடியவர்:- ( உரையாடல்கள்) அப்ப ஒரு அளவுக்குதான் ஸ்டோரேஜ். புல்லா ஆயிட்டா முடிஞ்சு போச்சு. யாராலும் காப்பாத்த முடியாது அப்ப புரியுதுங்களா.

குருநாதர்:- அப்பனே வாசி ( யோகம் ) ஒரே வார்த்தையில்  சொல்கின்றேன் அப்பனே. இதை நிச்சயம் கூற வேண்டும்?

அடியவர் 1:- வாசியோகத்தை யாராவது கூறுங்கள். 

அடியவர் 2:-  சிவம் தான் வாசி

குருநாதர்:- அப்பனே உண்மையே. அப்பனை இடது நாசியை மூடு. முன்னே இருப்பவனை சொல்கின்றேன். 

அடியவர்:- ( இடது நாசியை மூடினார்)

குருநாதர்:- அப்பனே இதனால் வாசி யோகம் பயிற்சியே அப்பனே இப்பொழுது எதில் இருந்து மூச்சு வருகின்றது.?

அடியவர் 1:- வலதில் இருந்து. ( வலது நாசி)

அடியவர 2:- சூரிய நாடியில் இருந்து

குருநாதர்:-  அப்பனே இதில் மூச்சு பின்  இப்படியே அப்படியே ஒரே வழியில் ( வலது நாசியில் மட்டும்) மூச்சை விட்டு ஒருவன் ( எப்போதும் சுவாசிக்கின்றானோ) அவன்தான் ஞானியாவான் என்பேன் அப்பனே. மற்றவர்கள் ஆகவே முடியாது என்பேன் அப்பனே. கர்மம் கூட இப்படித்தான் அப்பனே வலது நாசியில் வந்து விட்டாலே போதுமானது அப்பா அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய முடியாது அப்பா. இதை உங்களால் பண்புடனே செய்ய முடியுமா என்ன? அப்பறம் நிச்சயம் முடியாது அப்பா. இது தான் அப்பனே யோகம் வசியோகம்.  இதனால் பல நபருக்கு இது தெரிவதே இல்லை அப்பனே.

அடியவர்:- ஏழு எட்டு வருசமா (எனக்கு) இயற்கையாக அப்படி (வலது நாசியில் மட்டும் சுவாசம் எப்போதும் ) போற மாதிரி தோணுது.

குருநாதர்:- அப்பனே நம்பப்போவதில்லை யான் அப்பனே.

அடியவர்:- சரி….

குருநாதர்:-  அப்பனே அப்படிபோய் விட்டால் உனக்கு அனைத்துமே கிடைத்திருக்குமே? ஏன் கிடைக்கவில்லை அப்பனே? கிடைக்காததால் இங்கு வந்து கொண்டிருக்கின்றாய்  அப்பனே. பின் அப்படி வந்து விட்டால் நீ அங்கேயே இருந்திருப்பாய் என்பேன் அப்பனே.  எதுவுமே தேவை இல்லை என்று சொல்லியிருப்பாய் அப்பனே. ஆசைகள் கூட அப்பனே வேண்டாம் என்று சொல்லி விட்டு இருப்பாய் அப்பனே. புரிகின்றதா அப்பனே. அவ் நாசியில் (வலது நாசியில் மட்டும் ) பின் வந்து கொண்டே இருந்தால் அப்பனே ஆசைகள் போய்விடும் அப்பா. எவையும் வேண்டாம் என்று அப்பனே அமைதியான இடத்தைத் தேடி அப்பனே கண்ணுக்கு தெரியாமல் அப்பனே பின் சென்று விடுவான் அப்பனே. ஆனால் யாராவது உண்டா என்றால் சத்தியமாக இல்லை.

அடியவர் 1:- வலது சுவாசம் மட்டும் ஓடிட்கிட்டே இருக்கும்.

அடியவர் 2:- எதாவது செஞ்சுட போறீங்க. அவர் சொல்ரார். அதுவா வரனும். அது அதை (இடது சுவாசம்) நிறுத்துறதுக்காகதான்.

அடியவர் 3:- எனக்கு வலது சுவாசம் ஓடிஇருக்கு சில நேரங்களில்.

குருநாதர்:- அப்பனே ஆனாலும் அப்பனே பின் உன்னை நால்வர் வைத்து அப்பனே பார்க்க வேண்டியதான் அப்பனே. அவ்ளோதான் அப்பனே.

நாடி அருளாளர்:- ( வலது நாசியில் மட்டும் சுவாசம் வருகின்றது என்று சொன்ன அடியவரை) அப்ப உனனை நாலு பேரை வைச்சு செக்தான் பண்ணனும் அப்டின்னு சொல்கின்றார் குருநாதர். யாராவது நாலு பேரை வைத்து….

அடியவர்கள்:- ( சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே வசிதன்னில்( வாசி யோகம்) இதுவே கடைசியாகும் என்பேன் அப்பனே. ஆனால் எதை எதையோ கற்றுக் கொடுக்கின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அப்பா! ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால் இதுவும் இறை அருள் இருந்தால் இருந்தால் தான் வரும் அப்பா சொல்லி விட்டேன். அப்பனே ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுது பார் அப்பனே. ( மூச்சு ) இடது வலது அப்பனே மாறி மாறி வரும் என்பேன் அப்பனே. அதுபோலத்தான் வாழ்க்கை என்பேன் அப்பனே. வருத்தங்களும் எவை என்று கூற மாறி மாறித்தான் வரும் அப்பனே.சிறிது நேரம் தொழில். சில நேரம் தொழில் இல்லை. அப்பனே திருமணம் செய்தாலும் சில தரித்திரங்கள். அனைத்தும் அப்பனே சமநிலை படுத்தவேண்டும் என்றால் அப்பனே இதை யாங்கள் தான் கொடுக்க வேண்டும் எனபேன் அப்பனே. (சித்தர்கள் யாங்கள் அப்படி அருள் கொடுக்கும் போது)  யான் சொன்னேனே ( மூளையில் உள்ள ) அச்செல்லானது அப்பனே பின் (உடலை விட்டு ) பறந்துவிடும் என்பேன் அவ்வளவுதான். அப்பனே புதுமையான விசயத்தை சொல்லிவிட்டேன்.

அடியவர்:- காகபுஜண்டர் முறையில சில தீட்சைகள் கொடுக்கிறேன். அதை கொடுக்கலாமா? நிறுத்திக்கலாமா?

குருநாதர்:- அப்பனே என்ன தீட்சைகள் கொடுக்கின்றாய் அப்பனே. உன்னால் எதை என்றும் அறிய இங்கு ஒருவனுக்கு மரணகண்டம் இருக்கிறது அப்பனே. ஆனால் உன்னால் அவ் தீட்சை கொடுத்து அவனை காப்பாற்ற முடியுமா என்ன சொல்?

அடியவர்:- முடியாது அப்பா.

குருநாதர்:-  அப்பனே அதற்கு எதுக்கு அப்பா தீட்சைகள்.  அப்பனே வேண்டுமென்றால் வாயில் பொய் கூறலாமே தவிர தீட்சையினால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. அதனால் அப்பனே மற்றவர்களுக்காக வாழ வேண்டும். இதுவே  முதல் தீட்சையப்பா.  இதை எத்தனை பேருக்கு நீ சொல்லி இருக்கிறாய் அப்பனே கூறு?

நாடி அருளாளர்:-  முதல் தீட்சை என்ன தெரியுங்களா? 

அடியவர்:- மற்றவர்களுக்காக வாழவேண்டும்.

நாடி அருளாளர்:- இதுதான் முதல் தீட்சை. எத்னை பேருக்கு இதை சொல்லி இருக்கின்றீர்கள் என்று கேட்கின்றார்

அடியவர்:-  அப்பதான் இறையே வேலை செய்யும்.

நாடி அருளாளர்:- ஆம்.

குருநாதர்:- அப்பனே அனைத்தும் பொய்கள் அப்பா. எந்தனுக்கு தெரியும் எந்தனக்கு தெரியும். என்ன தெரியும் அப்பனே? பொய் கூறத்தான் தெரியும் அப்பனே. இப்படிதான் கூறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே.  எந்தனக்கு தெரியும் யான் செய்கின்றேன் என்று. ஆனாலும் அப்பனே இது தான் பொய் அப்பா.

அடியவர்:- ( உரையாடல்கள் )

குருநாதர்:- அதனை நம்பி போனால் அப்பனே முதல் தீட்சை என்ன கூறு.

அடியவர்:- அது காகபுஜண்டர் முறையில நீங்க சொன்ன மாதிரியே வலது சுவாசத்த ஒடவிடுவது.

குருநாதர்:- அப்பனே கர்மா இருந்து அப்பனே என்று கூற நிச்சயம் ஒட்ட முடியாது. இவை என்ன ஓட்டுவதற்கு வண்டியா அப்பனே?

அடியவர்கள்:- ( சிரிப்பு )

அடியவர்:- ஒரு இருபத்து நாலு நிமிசம் ஒரு மண்டலத்துக்கு வந்து சூரிய கதி.  நீங்க சொன்ன மாதிரி வலது சுவாசத்தை ஓட்டுறது. அது வந்து குயில் குத்துன்னு சொல்றாங்க புஜண்டர் முறையில அத கதியில எழுதுரது….

குருநாதர்:- அப்பனே ஏற்கனவே புசண்டனுக்கு ( மாமுனிவர் காகபுசண்டர் ) மனிதன் மீது கோபம் அப்பனே. ஆனால் அதை கற்றுக் கொண்டாலும் அப்பனே அவனுடைய வாழ்க்கை என்ன வென்று நீ விளக்க வேண்டும் அப்பனே. ஆனாலும் பின் கற்றுக் கொடுப்பது  சரியான வழியில் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பனே! அப்படி இல்லையென்றால் அப்படியே அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே. ஆனால் சரியான வழியில் கற்றுக் கொள்வதில்லை அப்பா.  கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதப்பா. அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய வண்டி ஓட்டு அப்பனே பொய்கள் ஆக ஓட்டிக் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்  இவ்வளவு  நேரம் அவ்ளோதான் அப்பனே.

அடியவர்:- இல்ல இல்ல தெரிஞ்சு கேக்குறேன் (அகத்தியர்) அப்பாகிட்ட.

குருநாதர்:- அப்பனே என்னென்னவோ சொன்னார்கள் எதை என்று கூற ஒன்றாவது நடந்ததா உனக்கு? இல்லை அப்பா. அப்பொழுதாவது தெரியக்கூடாதா அப்பனே என்று எல்லாமே பொய் என்று எல்லாமே? அப்பனே உன் உள் இருக்கும் சக்தியை முதலில் எழுப்பு அப்பனே.மற்றவர் பேச்சை கேட்டு விடாதே.

அடியவர்:- வடக்க போலாமா? அது ஞானம்.. என்ன மாதிரி என்ன பண்ணனும்.

குருநாதர்:- அப்பனே அமைதியாக இரு அப்பனே தருகின்றேன் அப்பனே.  என்றால் அப்பனே அனைத்தும் அவை செய்கின்றார்கள். இவை செய்கின்றார்கள் எல்லாம் சொல்லிச் சொல்லி அதை செய்து இதை செய்து கர்மா உன்னிடத்தில் ஏற்றி வைத்து விட்டார்கள் அப்பா. அவ்வளவுதான் அப்பனே.  சித்தர்கள் ஆசியோடு நிச்சயம் கொடுக்கப்படும் அப்பனே பொருத்திருக்க  வேண்டும்.

(இந்த வாக்கு பலருக்கும் அவர்கள் கர்ம நிலையை உணர்த்தும் வாக்கு. பலர் இது போல பயிற்சியை - வாசி யோகம், மந்திர தீட்சை, சிவ தீட்சை - என எடுத்து பிறர் கர்மாவை வாங்கும் நிலையே உள்ளது என்பதை உணர்க.)

அடியவர்:- ஜோதிடம் எதும் பார்ப்பேனா?

குருநாதர்:- அப்பனே ஜோதிட ம் என்றால் என்ன கூறு?.

அடியவர்:- தன்னுடைய ஜோதியை உணர்ந்தவனே ஜோதிடன்.

குருநாதர்:- அப்படி அப்படி உணர்ந்தவன் யாராவது இருக்கின்றானா என்ன?

அடியவர்:- இல்ல

குருநாதர்:- அப்பனே அப்பொழுது ஜோதிடம் என்பது என்ன?

அடியவர்:- அமைதி

குருநாதர்:- அப்பனே தன்னை அறிந்தவன் அப்பனே ஜோதிடத்தில் இப்பொழுதெல்லாம் கற்றுக் கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு பணத்திற்காகவே  அப்பனே செய்கின்றார்கள் அப்பனே. அப்படி செய்தால் அப்பனே கர்மாதான் அப்பா. கிரகங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாதப்பா அப்படியே ஒரு கிரகத்தை பற்றி கேள். சொல்கின்றேன்.

அடியவர்:- ராகு கேது

குருநாதர்:- அப்பனே இதை அதிகாலை உணர்வாயாக. அனைவருக்குமே தெரிவிக்கின்றேன் அப்பனே. இவ் கிரகங்கள் மிக பெரிய கிரகங்கள் அப்பனே. ஆனால் கண்ணுக்கு தெரியாது. ஏன் தெரியாது என்பது கூட வருங்காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.

அடியவர்:- ஐயா உன் உள் இறை தரிசனம் காண்பாயாக என்று உத்தரவு குடுத்து இருக்காங்க (அகத்தியர்) அப்பா. எனக்கு என்ன எப்டின்னு தெரியல.

குருநாதர்:- அப்பனே குழந்தையாகப் பிறந்து வளர்ந்து  இப்படி ஆளாகி இருக்கின்றாய் அப்பனே. ஆனால் உடனடியாக கிடைத்து விடும் என்றால் எப்படி அப்பா கிடைக்கும் என்பேன் அப்பனே.

அடியவர்:- இல்ல அது எனக்கு தெரியாது அய்யா உத்தரவு. அதனால..

குருநாதர்:- அப்பனே இதை யான் செப்பிக் கொண்டிருக்கிறேன் அப்பனே எப்போது எதை கொடுக்க வேண்டுமோ அதை தானாகவே வரும் இந்த அப்பனே உன் கடமை செய்து வா. நான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். அப்பனே புரிந்து கொண்டு , இதனால் அப்பனே ஒரு மனிதனுக்கு எப்போது கஷ்டங்கள் வருகின்றது என்பதை நீ கூற வேண்டும்.?

அடியவர்:- அவருடைய தீய கர்ம வினை அதற்கான தண்டனையாதான் கஷ்டங்கள் வருது.

குருநாதர்:- அப்படி இப்படி வரும்பொழுது பரிகாரங்களால் அப்பனே செய்ய முடியுமா? விளக்க முடியுமா என்ன?

அடியவர்:- பரிகாரங்கள் அதனால நல்ல தீர்வு கிடைக்கிறது ரொம்ப (கஷ்டம்தான்)

குருநாதர்:- அப்பனே எதற்கு பரிகாரங்கள் அப்பா?

அடியவர்:- நான் செஞ்ச தப்புக்கு…  அதுக்கு எப்டி சொல்றதுங்க….

குருநாதர்:- அப்பனே பின் செய்த தவறுக்குத்தான் பரிகாரங்கள் என்பேன் அப்பனே. ஆனால் அப்பொழுது கூட தண்டனைகள் உண்டு என்பேன். சொல்லி விட்டேன். ஏன் எதற்காக ஒருவன் பரிகாரம் பின் செய்கிறான் என்றால் அப்பனே அவன் தவறுகள் செய்திருக்கின்றான் அப்பனே. ஆனால் பின் செய்த தவறுக்கு பரிகாரங்களால் போக்க முடியுமா? தண்டனை கொடுத்து பின் போக்க முடியுமா கூறு அப்பனே?

அடியவர்:- தண்டனை கொடுத்து போக்கிக்கிறது நல்லது.

குருநாதர்:- அப்பனே அதுபோலத்தான் சித்தர்கள் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் அப்பனே போதுமா?

குருநாதர்:- அதனால் இயக்குபவனும் அவனே அனைத்தும் நீ ஆட்டி , படைப்பதும் அதனால் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். ஆனால் புரிந்து கொண்டால் இவைதான் என்று கூற எவை என்று கூற. அம்மையே ஈசனை நோக்கி பாடலை பாடி நின்று கொண்டிருப்பவளே.

அடியவர்:- ( அம்மை பாட ஆரம்பித்தார்)

ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

நம ஓம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

வில்வத்தால் அர்ச்சித்தேன் விஷ்வேஷா காத்திடுவாய்.

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அகத் தீசாய நமஹ

ஓம் அகத்தீசாய நமஹ

குருநாதர்:- அம்மையே உன்னை தெரியாமலேயே யான் ஒரு கேள்வி கேட்பேன். கஷ்டங்கள் வராமல் என்னை கூப்பிட்டு இருப்பாயா என நீ கூற வேண்டும்.?

அடியவர்:- கஷ்டம் வந்ததினாலதான் அவரை நினைக்கிறேன். அப்போ அவரு என்னை நெருங்கிட்டாருன்னுதான் நினைக்கிறேன்.

குருநாதர்:- அதனால்தான் அம்மையே இதனை மீண்டும் மீண்டும் சொல்வேன். அம்மையே கஷ்டம் ஒன்று கொடுத்தால் தான் இறைவனே பின் தேடி தேடி வந்தடைகிறான். கஷ்டங்களே இல்லை என்றால் மனிதன் பின் அனைத்தும் செய்து விட்டு யான் தான் இறைவன் என்று சொல்லி விடுவான் தாயே அப்பொழுது கஷ்டங்கள் கொடுப்பது நல்லதா ? தீயவையா? 

அடியவர்:- கஷ்டங்கள் குடுக்குறது நன்மைதான். அப்ப இறைவன் என் கூட இருக்கிறார். அகத்தியப்பெருமான் என் கூடயே இருந்து கஷ்டங்கள் கொடுக்குறது அவரை நினைக்க வைக்கிறதுக்காகத்தான். இறைவன் ஏன் கஷ்டங்கள் கொடுக்கின்றான்? அவர நினைக்கிறதுக்காகத்தான்  கஷ்டங்கள் கொடுக்கிறான்.  அவர் தான் நடத்திகிட்டு…

குருநாதர்:- அம்மையே , அப்பனே உன் பிள்ளை உன் பேச்சை கேட்காவிடில் என்ன செய்வாய்? அம்மையே நீங்கள் என்ன செய்வீர்கள்?

அடியவர்:- அடிச்சு திருத்துவேன்

குருநாதர்:- அதேபோலத்தான் இறைவனின் பின் அனைத்தும் அதாவது இவ்உயிர்கள் இறைவனுக்கு சொந்தம். அதனால் பின் இறைவனை படைத்தாற்போல் நீங்கள் இல்லை. அதனால் அவ்வேலியை தாண்டும் போதுதான் இறைவன் கஷ்டம் என்ற நிலைக்கு வந்து சில ஆட்டங்கள் எதனால், ஏன், எதற்காக எவை என்று  அறிய அறிய திருமணங்கள் நடைபெறவில்லையே , இன்னும் வேலைகள் கிடைக்கவில்லையே இன்னும் எதற்காக என்றால் அனைத்தும் நீங்க செய்த தவறினால்தான் வந்தது என்பேன். இவையெல்லாம் எப்படி போக்க வேண்டும் இவ்தவறுக்கு இப்படியே தண்டனைகள். சில சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்கள் தெரிய வைக்க ஆனாலும் நிச்சயம் அதாவது ஆறாவது அறிவுக்கு வாருங்கள். நிச்சயம் கருமங்கள் இல்லாமல் வாழலாம்.

அடியவர்கள்:- ( நாம் ஆறாவது அறிவிற்கு வர வில்லை இன்னும் என்று உரையாடல் சில)

குருநாதர்:- அப்பனே ஆறாவது அறிவுக்கு எப்படி வர வேண்டும்? முதலில் அப்பனே நீங்கள் எதுக்கு இவ்ளவு நேரம் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அல்லவா? மூளைக்கு வேலை கொடுங்கள் அப்பனே.

அடியவர்:- (முருகப்பெருமானின்) அறுபடை வீடுகளுக்கு போகனும்.

( அவ் அறுபடை வீடுகள்:

1.திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்)
2.திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்)
3.திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்)
4.திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)
5.திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)
6.பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)
———————————. )

குருநாதர்:- அப்பனே அங்கு சென்றால் மட்டும் வந்துவிடுமா என்ன? அப்பனே. அப்பனே யான் சொல்லியதை மீண்டும் எனக்கே திருப்பி சொல்லுகின்றாய் அப்பனே. நீ வில்லனப்பா.

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை …)

அடியவர் 1:- ஆசை அறுக்க வேண்டும்.

அடியவர் 2:- ஆசைகளை தொலைக்க..

அடியவர் 3:- பிற உயிர்களின் துன்பத்தை போக்க நினைக்கின்ற போது ஆறாவது அறிவு செயல்படும்.

குருநாதர்:- அப்பனே இதுவும் ஒரு நன்மை தான் அப்பா. அப்பனே இறைவன் அனைத்தும் அதாவது அனைத்து உயிர்களும் கூட இறைவனுக்கு சொந்தம் அப்பனே அதனால் தன் குடும்பம்போல் என்று எண்ணி அனைவருக்கும் பின் அதாவது அனைவரும் ஒன்றே என்று பிற உயிர்களை கூட அதாவது கொல்லாமல் தன்னை போன்று யார் ஒருவன்  நினைக்கிறானோ அவன் தான் முதலில் ஆறாவது அறிவுக்கு வந்து விட்டான் என்று அர்த்தம் என்பேன் அப்பனே. ஆனால் யாருமே வந்ததில்லை. அப்பனே கஷ்டங்கள் கொடுத்துத்தான் வரவழைக்க வேண்டும் என்பேன் அப்பனே. இன்றைய அளவில் இப்படியே சென்று கொண்டிருந்தால் அப்பனே உலகம் அழிந்துவிடும் அப்பனே. அதனால்தான் கஷ்டங்கள் பின் அதிக அளவு கொடுத்து மாற்றி வைத்துக் கொண்டிருக்கின்றோம் சித்தர்கள். அதனால் வரும் காலங்களில் கஷ்டத்தையே கொடுப்போம் அப்பனே. உங்களை மாற்றத்தான் என்பேன் அப்பனே.  உங்களை மட்டுமல்ல அனைவரையும் மாற்ற.

அடியவர்கள்:- ( அமைதி )

குருநாதர்:- அம்மையே உன்னை பார்த்தே கேள்விகள் கேட்கின்றேன் அம்மையே.  ஆசிரியராக இருக்கின்றாய். அம்மையே இப்பொழுது உன்னையே எதிர்த்து பேசிவிடுவார்கள்.  ஏன் எதனால் என்பது கூட இதனால்தான் கலியுகத்தில் இறைவனையே இல்லை என்று சொல்லுவார்கள் என்பேன் அம்மையே. அதனால் இறைவன் தண்டிப்பது குற்றமா? (குற்றம்) இல்லையா?

அடியவர்:- குற்றம்..( உடனே) குற்றம் இல்லை ஐயா

குருநாதர்:- அம்மையே வாய் வந்து விட்டது. ஆன்மா சொல்லிவிட்டது. ஆனால் இப்பொழுது பொய் சொல்லிவிட்டாய் அமையே.

நாடி அருளாளர்:- ஆன்மா சொல்லிவிட்டது குற்றம் என்று. ( அடியவர் சிரிப்பு) இப்ப வந்து வாய்விட்டீங்க.

அடியவர்:- ஐயா  நினைச்சு சொல்லல. ஆனா மனசுல வந்து தண்டனை அப்படிங்கறது வந்து நமக்கு வந்து குடுத்தா தான் வந்து நம்ம சரிவர நம்பளால வந்து எது சரி எது தப்பு ன்னு நம்ம அறிவுக்கு எட்டும்.

குருநாதர்:- எது என்றும் அறிய இன்னும் கேளுங்கள். யானே சொல்லிக் கொண்டிருந்தால் பின் மீண்டும் அதையே கேட்பீர்கள், கேட்பீர்கள். கேளுங்கள்.

அடியவர்:- உயிர் இரக்கம் என்று அப்பா சொல்றாங்க. மானூர் சுவாமிகள் (பழனியில் எந்த ஒரு படாடோபம் இல்லாமல் வாழ்ந்த மகான்களுள் ஒருவர் மானூர் சுவாமிகள்...இந்த மாகான் குறித்த தகவல்கள் அனைத்தும் ஆச்சரியமூட்டும். இணையத்தில் படித்து ஞான ரசம் அருந்துங்கள்) எல்லாம் அப்பாவே சொல்லிருக்காங்க. ஆனா அந்த மானூர்சாமிகள் எல்லாம் அசைவம் சாப்பிட்டதாக சொல்றாங்க. அது எனக்கு (விளக்கம் வேண்டும்)

குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா அப்பனே? அப்பனே பார்பதைப்போல் சொல்கின்றாயே. அப்படி (நீ அசைவம்) உண்டு விட்டால் அப்பனே் அங்கு சென்றால் ஒன்றுமே நடக்காதப்பா. அப்பனே உணர்ந்து செய்ய வேண்டும். இதனை பெரியோர்கள் சொல்லி விட்டார்கள் அப்பனே. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள். அப்படி ஒன்றை எடுத்து விடுகின்றேன். அப்பனே கண்ணால் காண்பதும் பொய்.தெரிகின்றதா?  அப்பனே காதால்… சொல்ல அப்பனே?

அடியவர்:- கேட்பதும் பொய்

குருநாதர்:- கடைசியில் என்னதான் செய்ய வேண்டும்?

அடியவர்:- தீர விசாரிக்க வேண்டும்.

குருநாதர்:- அதனால் அப்பனே தீர விசாரிக்காமல் அப்பனே எது செய்தாலும் குற்றம் குற்றம்தான் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete