​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 27 November 2023

சித்தன் அருள் - 1518 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 29!


அடியவர் :- ( குருநாதர் என்ன வேண்டும் என்று இந்த சிறுவன் அடியவர் அதற்கு வீடு வேண்டும் என்று கேட்க , அதற்குப் பின் வருமாறு உரைத்த வாக்கு - பொது வாக்காக அடியவர்கள் ஏற்றுக் கொண்டு குழந்தைகளை வளர்க்க நலம் உண்டாகும்)

குருநாதர்:-  அப்பனே இவன் இப்படி எல்லாம் கேட்கிறானே, இதிலிருந்தே தெரிகிறது அப்பனே இவன் லட்சணத்தை அப்பனே. இவன் சரியாக அப்படியே முதலில் நன்றாக ஓத வேண்டும், இன்னும் மேற் கல்விகள் கற்க வேண்டும்,  பின் அதன் பின்பே அனைத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கேட்க வில்லையே அப்பனே. எப்படி வளர்த்துள்ளார்கள் பார் என்பேன் அப்பனே. இப்படியெல்லாம் வளர்த்தார்கள் தான் அப்பனே பின் துன்பப்படுகின்றார்கள் பெற்றோர்கள் கூட.

அதனால் அப்பனே என்ன வேண்டும் என்று நீ கேட்க வேண்டும். யான் அப்பனே நீ இறைவனை நினைத்து , அனுதினமும் தீபம் ஏற்றி , அவன் அதாவது கந்த சஷ்டி பாடலை பாடிக்கொண்டே வா அப்பனே. நீ என்ன கேட்டிருந்தால் அப்பனே யான் இன்னும் நன்றாக ஓதுதல் வேண்டும் , இன்னும் மேற்கல்வி அறிய நல்ல அறிவு பின் இறைவா தர வேண்டும்,  அதனை பயன்படுத்து பின் தாய் தந்தையருக்கு அனைத்தும் நன்றாகச் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்களுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று தான் அப்பனே  இறைவன் இடத்தில் அப்பனே வேண்ட வேண்டும் அப்பனே. இப்படி வேண்டினால் தானாகவே உன் பெற்றோர்களுக்கு அனைத்தும் கொடுத்து விடுவார்கள் அப்பனே. தெரிந்துகொள் அப்பனே.

தெரியாது அப்பனே உன் அம்மையும் இப்படித்தான் வாழ வேண்டும், இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்று எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த வாக்கில் கூறுகின்றேன் அப்பனே. தெரியாமல் பின் அப்பனே அதாவது சில சில வழிகளில் கூட பிள்ளைகள்  எப்படி வளர வேண்டும் என்பதைக் கூட அப்பனே தாய் தந்தையருக்குத் தெரியாமல் வளர்த்து விடுகின்றார்கள். இதனால் தான் குறைகள் அப்பா. அதனால் அப்பனே சொல் அவள் அதாவது ( உன் ) பெற்றவள் தனக்கு இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று அப்பனே சொல்லிக்கொடு.

அடியவர் 1: அடுத்த பிறவி எடுக்ககூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்.

குருநாதர்:- அம்மையே இறைவனையே நினைத்துக் கொள். எதையும் மனதில் நினைக்க கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனையும் அம்மையும் மனதில் நினைத்துக்கொள். கவலைகள் இல்லை.

அடியவர் 2:- செய்வினை கோளாறுகள் நிறைய உள்ளது ஐயா.

குருநாதர்:- அப்பனே வாராகி தேவியின் தலத்திற்கு சென்று கொண்டே வா அப்பனே.

அடியவர் 3: ( இந்த அடியவர் தனது வாழக்கை நிலை குறித்து கேட்ட கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அனைவருக்கும்)

குருநாதர்:- அப்பனே நேற்றைய பொழுதிலே சொல்லிவிட்டேன். இறைவன் அதாவது விதியில் எப்போது இருக்கின்றதோ அப்பொழுதுதான் நடக்கும் என்பேன் அப்பனே.  அதன் முன்பே போராடினாலும் அப்பனே சண்டைகள் போட்டாலும் அப்பனே நடக்காது அப்பா. சொல்லி விட்டேன். அதற்கு அதாவது விதியில் எப்பொழுது பின் எவ்வயதில் ,  அப்பனே பின் என் நேரத்தில் நடக்கும் என்பதை கூட ( அறிந்து கொள்வதற்கு ) சில புண்ணியங்களாவது  தேவைப்படுகிறது அப்பனே. புண்ணியங்களை செய்யச்சொல் அடுத்த வருடம் யான் சொல்லுகின்றேன். வரச்சொல்.

அடியவர் 4:- ( இதனிடையில் அங்கு ஓர் இளமங்கைக்கு அனைவர் இருக்கும் இடத்தில் வரும் பொழுது எப்படி பாரம்பரிய உடை உடுத்தவேண்டும் என்று அறிவுரை அளித்தார்கள்.)

குருநாதர்:- அம்மையே பக்குவம் இல்லாமல் எதை செய்தாலும் தோல்வியில் முடிந்து விடும். அம்மையே தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திரிக்கச் சொல்.

அடியவர் 5:- ( சில தனிப்பட்ட கேள்வி. அதன் பதிலில் மலைக்க வைக்கும் பொது ரகசியம்.)

குருநாதர்:- ( இந்த அடியவரின் பிரச்சினைகளை எடுத்து உரைத்தார். அதில் உலகம் அறியாத அக்தீசனின் இறை வல்லமை செயல் ஒன்றை எடுத்து உரைத்தார்கள். )

ஒரு செல்லானது அம்மையே கண்களில் இருக்க வேண்டும். அது மூளையில் வந்து அமர்ந்து விட்டதம்மா. யான் மீண்டும் அமர்த்துகின்றேன். அப்பொழுதுதான் உந்தனுக்கு மனக்குழப்பங்கள் என்பதே வராது. அதை முதலில் யான் சீர்படுத்தி அனைத்தும் தருகின்றேன். ஆனால் நீ பேசக்கூடாது. வாய் திறக்கக்கூடாது. சொல்லிவிட்டேன் அம்மையே. ( அவர்கள் பெற்றோரை பாரத்து பேசாமல் இருக்க கடும் உத்தரவு ஒன்று வழங்கினார்கள் ).

( அடியவர்கள் கவனிக்கவும்:- தமது உடம்பில் பல தொல்லைகள் நமது கர்மாவினால், அணுக்களின் நகர்வுகளால் நடக்கின்றது. இதனை சரி செய்யும் இறை வல்லமை அகத்திய பிரம்ம ரிஷிக்கே உண்டு என்பதை உணர்க. இது போன்ற பல இறை வல்லமைகள் உள்ள ஆதி குருவின் வழி நடக்க, அவர் நாடி வாக்கினை படிக்கும்  நீங்கள்  புண்ணியவான்களே. இது போல குருநாதர் பலருக்கும் , பல கோடானு கோடி உயிர்களுக்கும் அருளுகின்றார் என்பதை உணர்ந்து அவர் பாதம் நன்றியுடன் பணிந்து அவர் கூறிய தர்ம வழியில் நடந்து முக்தி பெறுங்கள். )

அடியவர் 6:- ( தொழில் ஏற்ற தாழ்வு குறித்த கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அருளினார்கள்.)

குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் வரும் போகும் என்பேன் அப்பனே. இறைவன் கொடுப்பதை அவனே எடுத்துக் கொள்வான் என்பேன் அப்பனே. அனைவருக்குமே இது உண்டு அப்பனே. கல்வி கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். தொழில் கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். இறைவன்  எதை கொடுத்தாலும்  அது இறைவனுக்கு சொந்தம் அப்பா. இவை எல்லாம் ஏற்ற தாழ்வுகள் வரும். இவை எல்லாம் யார் ஒருவன் சரியாக சுமந்து செல்கின்றானோ அவன்தான் வெற்றியாளன் என்பேன் அப்பனே.

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று யார் இருந்துவிடுகின்றானோ அவன்தான் மனிதன் அப்பனே. இதை அனைவரும் உணர்க அப்பனே.

நிச்சயம் தொழில் என்றால் பிரச்சினை வரும் என்பேன் அப்பனே. அதே போல் திருமணம் அதாவது கணவன் மனைவிமார்களுக்கும் பிரச்சினை வரும் அப்பா. பிரச்சினை இல்லாமல் யாரும் இல்லையப்பா. இவை எல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே.

ஞானத்தை பற்றி கேட்கச் சொல், விதியினை சொல்லி விடுகின்றேன் அப்பனே. 3 மாதங்கள் ஈசன் தலத்திற்கு சென்று வரச்சொல் அப்பனே அனைத்தும் சொல்லி விடுகின்றேன்.

(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு நிறைவு பெற்றது. இந்த தொகுப்பை தமிழில் தட்டச்சு செய்து வெளியிட உதவி புரிந்த அகத்தியர் அடியவருக்கு அகத்தியப் பெருமானின் ஆசீர்வாதங்களையும், அடியேனுடைய நன்றியையும், வாசகர்களின் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கின்றேன். வாழ்க வளமுடன்! ஓம் அம் அகத்தீசாய நமஹ!)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. மதுரை பொதுவாக்கு மகத்தான பல அரிய தகவல்களை கற்பித்தது.அனைவரும் எளிதாக படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் சிறு சிறு பகுதிகளாக பிரித்து பொறுமையாக தட்டச்சு செய்து வெளியிட்ட அடியார்க்கு நன்றிகள். ஒவ்வொரு பகுதியை படிக்கும் போதும் உண்மையில் நாமும் அந்த பொதுவாக்கு வாசிக்கப்பட்ட அடியவர் இல்லத்தில் அமர்ந்து கேட்ட உணர்வு வந்தது. அடியார்கள் வாழ்க!! அகத்தீசர் வாழ்க!!

    ReplyDelete
  2. எழுதியவருக்கும், தொகுத்தவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

    ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்திய குருவே போற்றி . நன்றிகள்

    ReplyDelete
  4. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  5. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete