14/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் :அகத்தியர் ஆசிரமம் கோயில். அகஸ்தியமுனி நகரம். ருத்ரபிரயாக் மாவட்டம் உத்தர்கண்ட்.
மலைமீது வீற்றிருக்கும் குமரா!!!!! குமரா!!!!! உம்மை மனதில் எண்ணி வாக்குரைக்கின்றேன் அகத்தியன்.
அப்பனே நல்விதமாகவே என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!!
இக்கலி யுகத்திலும் மனிதர்களுக்கு எப்படியாவது மனதை மாற்ற மனதை மாற்ற செய்ய வேண்டும்.
ஆனாலும் அப்பனே இல்லையப்பா!!!!
எதையென்று அறிய அறிய அப்பனே இன்னும் அரக்கனாகவே வாழ்ந்து வருகின்றனர் அப்பனே!!!
ஆனாலும் அரக்கனையும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய திருத்தி அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட நல்வழிப்படுத்தினேன்.
ஆனால் அப்பனே என்னை நம்பியே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எப் பொய்கள் எல்லாம் கூறி கூறி அப்பனே விளையாடுகின்றார்கள் அப்பனே
இவ் விளையாட்டு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பழமொழியும் உண்டு!!!
விளையாட்டாக எதை என்றும் அறிந்து அப்பனே உங்களுக்கே புரியும் என்பேன் அப்பனே
விளையாட்டு அப்பனே பின் வினையாக போகும் என்பதைக் கூட அறியவில்லை அப்பனே!!!
இதனால் நீங்கள் செய்வதெல்லாம் அப்பனே உங்கள் மனசாட்சிக்கு புரியும் என்பேன்!!!
இதனால்தான் சொல்கின்றேன்!!!
அப்பனே நிச்சயம் இங்கு அப்பனே வருவோருக்கெல்லாம் அப்பனே நல் முறைகளாக ஆசிகள் கொடுத்து கொடுத்து அப்பனே அனைத்து கர்மாக்களையும் நீக்கி நீக்கி இங்கே அப்பனே யானே அமர்ந்திருந்தேன் அப்பனே!!!
இன்னும் அப்பனே எனை காண வேண்டும் என்றால் அப்பனே பல வகையிலும் கூட பல ஆண்டுகள் பின் தவங்கள் செய்து பின் தவங்கள் செய்து தான் அப்பனே யானே அப்பனே தவத்தின் மூலமாகவே மனதினை பின் கண்டுபிடித்து அப்பனே எதை என்றும் புரிந்தும் கூட உடனடியாக இங்கிருந்தே பின் மனதில் பின் அங்கே இறங்கி நிச்சயமாய் அவனை இங்கே அழைத்து வருவேன்!!!!
( குருநாதர் அகத்திய பெருமானை யார் காண வேண்டும் என்று எங்கிருந்து வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டாலும் குருநாதர் இங்கு இருக்கும் ஆசிரமத்தில் தவங்கள் மூலம் ஞானத்தின் மூலம் கண்டு கொண்டு அவர்களை இந்த ஆசிரமத்திற்கு வரச் செய்து கர்மாக்களை நீக்கி தரிசனம் தந்து மோட்சகதியை அடைய செய்துள்ளார்)
அதுபோல் அப்பனே பல பேர்கள் என்பேன் அப்பனே
அதனால் நிச்சயம் அப்பனே இவை போன்றே செயல்பட்டு செயல்பட்டு அப்பனே எத்தனை பேர்கள் எத்தனை பேர்கள் அப்பனே!!!
இதனால் அப்பனே இங்கு நிச்சயம் எதனை என்பவையெல்லாம் அப்பனே காண்கின்ற பொழுது ஆனாலும் இவ்வாறு மோட்சகதியை அடையச் செய்தேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இவை அறிந்து அரக்கர்கள் பின் ஆனால் இவ் மலையில்......
(ஆசிரமத்தை சுற்றி மிகப் பெரிய மலைத்தொடர்கள் இருக்கின்றது அந்த மலையில் இருந்த அரக்கர்கள்)
பின் என்னை பற்றி தெரியாமல் ஆனாலும் பின் அறிந்தும் இவந்தன் இப்படியே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இப்படியே பின் ஞான மார்க்கத்தை எடுத்து எடுத்துக் கூறி நிச்சயம் நல்லோர் ஆக்கி நல்லோர் ஆக்கி பின் மோட்ச கதியை மோட்ச கதியை எதை என்றும் அறியாமலும் கூட!!.....
ஆனாலும் மோட்சகதியை அளித்து வழி அனுப்புகின்றானே.. இவந்தன். யார் ??? என்று அரக்கர்கள் !!!!!
ஆனாலும் வந்து விட்டனர்!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட ஆனாலும் உன்னை கொல்ல போகின்றோம் என்று சப்தங்கள்!!!!
ஆனாலும் இருப்பினும் தவ வலிமையில் யான் அறிந்தும் நிச்சயம் தவ வலிமையிலே இன்னும் இன்னும் கூட!!!
ஆனாலும் இவை என்றும் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் என்னை என் கைகளை பிடித்தனர் ஒருவன் அரக்கன் கைகள்!!! மற்றொருவன் கால்கள் மற்றொருவன் இன்னும் தலை!!! என என்னை பிடித்துக் கொண்டனர் அரக்கர்கள்!!
வந்தன் இனி எப்படித்தான் பின் தவங்கள் செய்கின்றான் என்று கூட!!!
ஆனாலும் என்னைப் பற்றி சொல்வதே!!!!! ஆனாலும் நிச்சயம். நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்(அடியவர்கள்) சொல்லித்தான் ஆக வேண்டும்.
( குருநாதர் அகத்திய பெருமாள் உத்தரவுப்படி கேதார்நாத் சென்ற அடியவர்கள் கேதார்நாத் செல்லும் வழியில் அகஸ்திய முனி நகரத்தில் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்று குருநாதர் அகத்தியர் பெருமானை வணங்கி அந்த ஆலயத்தில் வைத்து வாக்குகள் குருநாதர் சொல்ல வேண்டும் என்று வணங்கி கேட்டதால் குருநாதர் இந்த வாக்கினை தந்தார். அகத்தியன் என்னைப்பற்றி என் பெருமை பற்றி யானே சொல்வது எனக்கு உசிதம் இல்லை இருந்தாலும் நீங்கள் இங்கு வந்ததனால் சில சம்பவங்களை கூறுகின்றேன் என்று கூறினார் )
ஆனாலும் அப்பொழுது கூட தவ வலிமையிலிருந்தேன் ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!!!
ஆனாலும் எப்படி எப்படி என்று கூட ஆனாலும் நிச்சயம் மீண்டும் ஒருவன் உன்னை கொன்று விடுவோம் என்று கூற
ஆனாலும் யானும் அமைதி காத்திருந்தேன்!!!
ஏதேதோ முயற்சிகள் ஆனாலும் நிச்சயம் ஆனாலும் இன்னொருவன் அதாவது ஒரு அரக்கன் சொன்னான்!!
பின் இவந்தனை மந்திரத்தால் நிச்சயம் இப்படியே சாகடிப்போம் என்று!!!!
ஆனாலும் மந்திரங்களை ஓதினார்கள்!!!! ஓதி ஆனால் எதை எதையோ செய்தார்கள்!!!
ஆனால் ஒன்றுமே முடியவில்லை!!
ஆனால் எப்படித்தான் என்பதையெல்லாம் ஆனாலும் பின் இவர்களுக்கும் அறிந்தும் இன்னும் அறிவுகள் இல்லாமல் இவர்கள் யோசித்துக் கொண்டு இவ்வாறு செய்கின்றார்களே!!!! நிச்சயம் பின் ஒருமுறை நிச்சயம் இவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று!!
ஆனாலும் கண் விழித்து அப்பன்களே! ( அரக்கர்களை பார்த்து) நீங்கள் யார் என்று ?????
ஆனாலும் யான் அறிந்திருந்தேன்!!!
ஆனால் யாங்கள் தான் அரக்கர்கள்!!!! அனைத்தும் செய்வோம் என்று!!!
ஆனாலும் யான் சொன்னேன் பின் இங்கிருந்து சிறிதளவு ஆவது என்னை அசைத்து காட்டுங்கள்!!! வையுங்கள் அங்கே அதாவது தூக்கி வையுங்கள் யான் உங்களை நம்புகின்றேன் என்று!!!!
ஆனாலும் வந்தார்கள் முடியவில்லை இன்னும் அழைத்தார்கள் இன்னும் ஆயிரம் அரக்கர்களை அழைத்தார்கள் ஒன்றும் முடியவில்லை!!!
அப்பனே இதிலிருந்து என்ன புரிகின்றது?????????
அப்பனே ஒருவன் தவ வலிமையில் இருந்தால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!!!!
அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே!!!
முதல் பரிகாரம் அப்பா எதை என்றும் அறிய அறிய இப்பரிகாரத்தை தவிர உலகத்தில் ஏதும் இல்லையப்பா!!!
மற்ற பரிகாரங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து விடும் என்பேன் அப்பனே!!!
ஆனால் தவ வலிமையில் அதாவது அப்பனே பின் அனைத்தும் அதாவது அனைத்து அப்பனே உன் உறுப்புகளை கூட இளம் வயதில் யார் ஒருவன் ?? கட்டுப்படுத்துகின்றானோ!!!!!!!!!!!!!
அவந்தனுக்கு தான் அனைத்தும் தெரியவரும் அனைத்தும் புரியும் அவந்தனை யாரும் வெல்ல முடியாதப்பா!!!!!
அப்பனே இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அப்பனே மாயையில் அப்பனே சிக்கித் தவித்து சிக்கி தவித்து வீணாக போய் அப்பனே மீண்டும் அப்பனே கடைசியில் இறைவனை காண ஓடோடி வருகின்றீர்களே !!!!! அப்பனே !!!!!!
இறைவன் எப்படியப்பா ??? ஆசிகள் தருவான் ??????
அப்பனே இக்கலி யுகத்தில் அதாவது புவிதனிலே ஒருவன் கூறுகின்றான்!!!!
ஏன் சிறு வயதில் இறைவனை வணங்குகின்றாய் ??? என்று !!!!!!
இறைவனை அனைத்தும் அனுபவித்து விட்டு தான் இறைவனை வணங்க வேண்டும் என்று!!!
அப்பனே எப்படிப்பட்ட முட்டாள் அப்பா!!!!!
அப்பொழுதே எந்தனுக்கு அங்கேயே கோபம் வந்தது ஆனாலும் அவன் பக்தனாகவே இருந்து அப்படி கூறிவிட்டான் அப்பனே !!!!!
அடித்தேன் அப்பனே!!!
அவந்தன் ஈசன் அடிமையாக இருந்து!!!!! ஆனால் இன்று எவை என்று அறிய அறிய பின் சென்று கொண்டு யான் ஈசனை வணங்கினேனே இப்படி என்னை ஆக்கிவிட்டானே என்றெல்லாம் புறம் கூறிக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே!!!!
ஆனாலும் அப்பனே விதம் விதமாக பொய்கள் சொல்லி நடிப்பானப்பா!!!!!
ஆனாலும் அப்பனே உன் தவ வலிமையில் அப்பனே
அத் தவ வலிமையில் எதனையும் அதாவது மனதில் எதையுமே வைக்க கூடாது அப்பனே!!!
போட்டி பொறாமை எதை என்று அறிய அறிய குறை கூறுதல் அப்பனே பொய் சொல்லுதல் அப்பனே எதற்கும் ஆசைப்படக்கூடாது அப்பனே!!!!
உன் நிலைமையில் அப்பனே நீயே இருந்தாலே போதுமப்பா !!! இறைவன் உன்னை தேடி வருவானப்பா !!!! அப்பனே நீ போக தேவையில்லையப்பா!!!
ஆனாலும் புண்ணியங்கள் எப்படி அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சங்கரனும் எங்கெங்கோ ?? அலைந்தான்!!!
ஆனாலும் அப்பனே இறைவன் அவந்தன் பின்னாடி தான் சென்றான் அப்பனே!!! ஆனாலும் புரிந்து கொண்டான் கடைசியில் எதை என்றும் அறிய அறிய !!!!
எங்கு இருக்கின்றது ஏது என்று அறிய அறிய எப்பிறப்பின் ரகசியம் இப்பிறப்பின் ரகசியம் இன்னும் இன்னும் பின் வராத அதிசயங்கள் எல்லாம் வாக்குகளாக எடுத்துரைப்பார்கள் சித்தர்கள் !!!
அப்பனே இதனால் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே நல் முறைகளாகவே அப்பனே மனித பிறவி அப்பனே கொடுக்கப்பட்டுள்ளது!!!! எதனால் என்பவையெல்லாம் அப்பனே வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!
இன்னும் இன்னும் அப்பனே மனிதனுக்கு புத்திகள் வரவில்லை என்றால் அப்பனே யானே அடிப்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!
பல பேர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே போட்டிகள் தானப்பா பொறாமைகள் தானப்பா!!!! ஒருவர் மீது ஒருவர் குறைகள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!!
எதை என்று புரிய புரிய அப்பனே யானும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே பின் நல்லதை செய்தால் அப்பனே உசுப்பேற்றுவது அது தவறு என்று!!!!!
அப்பனே ஆனால் தவறு செய்தால் அதுதான் சரி என்று கூறுவது!!!!
அப்பனே எப்படிப்பா ?? உருப்படுவார்கள்??????????? அப்பனே !!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
இதனால் அப்பனே நிச்சயம் எவ் நேரத்திலும் அப்பனே மழையிலும் புயலிலும் கடலிலும் அலையிலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒருவன் நிச்சயம் இறைவன் தான் பெரிது இறைவன் தான் செய்வான் என்று நினைத்து நின்றால் அப்பனே!!!
ஒன்றும் அசைக்க முடியாதப்பா!!!!!
ஆனால் இன்றைய அளவில் அப்பனே சிறிது காலம் இறைவனை வணங்குகின்றான் இறைவன் ஏதும் கொடுக்காவிடில் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே!!!
இவையெல்லாம் பக்திகள் இல்லையப்பா அப்பனே எவை என்று அறிய அறிய!!! எவை என்றும் புரியாமலும் கூட இவைதன் நிச்சயமாய் பக்திகள் இல்லையப்பனே!!!
ஏதோ எதை என்றும் அறிய அறிய அப்பனே உண்மை நிலைகளை ஆராய்ந்து அறிந்து அப்பனே வணங்கினால் மட்டுமே உயர்வுகள் ஏற்படுமே தவிர மற்றவைகள் எல்லாம் இறைவனை நோக்கி நோக்கி நீ வணங்கினாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய
அப்பனே மண் தின்பது போல தான் அப்பனே
எதற்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும் அப்பனே எதை என்று அறிய அறிய
அதனால் தான் அப்பனே புத்திகள் இல்லாமல் அப்பனே சுற்றித்திரிந்து அப்பனே இறைவனை வணங்குவது விட அப்பனே நிச்சயம் அனைத்தும் தெரிந்து கொண்டு அப்பனே வணங்குவது மேல் அப்பா!!!!
அனைத்தும் எதை என்று அறிய அறிய இறைவன் தன்பாலே ( தன்னிடத்திலே) இருக்கின்றான் அப்பனே அதை புரிந்து கொள்வதற்கும் எதை என்று உணர்ந்து கொள்வதற்கும் அப்பனே ஆனாலும் நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் அப்பனே ராமனும் கூட எதை என்றும் அறிய இங்கேயே என் தவ பலத்தினால் அப்பனே உலகம் எதை என்று அறிய அறிய ஈரேழு உலகத்திற்கும் கூட அப்பனே சென்று விடுவேன் அப்பனே ஓரிடத்தில் இருந்தே அப்பனே!!!!
எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே பின் நீ எங்கு நினைக்கின்றாயோ அங்கே யான் வருவேன் அப்பனே !!!
சொல்லிவிட்டேன் அப்பனே உண்மையான பக்தியும் அன்பும் இருந்தால் மட்டுமே!!!
அப்பனே அப்படி இல்லை என்றால் பின் ஆகட்டும் எதை என்று அறிய அறிய விட்டு விடுவேன் அப்பனே
ஆனால் மீண்டும் அகத்தியனை நம்பினேனே!!!!!! அகத்தியன் பெயரை சொன்னேனே என்றெல்லாம் அப்பனே ஏங்கியும் கொள்ளக்கூடாது அப்பனே!!!! (ஏங்க கூடாது)
அதனால் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பக்தியும் செலுத்துகின்றார்கள் அப்பனே அவ்வளவுதான் அப்பனே எதை என்று அறிய அறிய!!
தன் பிழைப்பிற்காகவே பக்திகள் செலுத்துகின்றார்கள்!!!!
அப்படி அப்பனே எதை என்று அறிய அறிய பிழைப்பிற்காக பக்தியை செலுத்தினால் அப்பனே நிச்சயம் இறைவன் அப்பிழைப்பையே தடுத்து விடுவான்.
அப்பனே உன் பிழைப்பை மட்டுமல்ல உன்னை சுற்றியுள்ள பிழைப்பு எதை என்று அறிய அறிய அப்பனே அனைவரையும் கூட எதை என்று அறிய அறிய தடுத்து விடுவான் அப்பொழுது ஒன்றும் பிரயோஜனமில்லை அப்பா!!!
நோய்களை கொடுத்து விடுவான் அப்பனே!!!
அப்பொழுது யோசிப்பீர்கள் நீங்கள் அங்கு இங்கு எதை என்றும் அறிய அறிய அந் நோய்கள் இந் நோய்கள் என்று அப்பனே!!!!
நோய்கள் எதற்காக வருகின்றது ???அப்பனே
தெரிந்து கொண்டீர்களா???? அப்பனே !!!
கர்மா தானப்பா!!!!
அப்பனே அக் கர்மத்தில் நீங்கள் நுழையாதீர்கள் என்று தான் யான் சொல்கின்றேன் அப்பனே!!!
அதைக் கூட சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நீங்கள் மனிதர்களா!!??? எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே
இதனால் அப்பனே இதனை எவை என்றும் அறிய அறிய ஆனால் அரக்கர்களும் கூட அப்பனே என்னை புரிந்து கொண்டார்கள்!!!
அதனால் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய பின் நாங்கள் தான் பெரியவர்கள் என்று நினைத்தோமே அகத்திய மாமுனிவரே!!!!!
ஆனால் நீங்கள் தான் நிச்சயம் பெரியவர் அதனால் உங்களுக்கு அடிமைகளாகவே யாங்கள் இருக்கின்றோம் என்று!!!!
ஆனால் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று அரக்கர்கள் கூட!!!
ஆனாலும் யானும் கூட எந்தனுக்கு எவ் உதவிகளும் தேவைகள் இல்லை!!!
அதனால் நீங்கள் நல்படியாகவே பிழைத்துக் கொண்டாலே போதுமானது அறிந்து அறிந்து நல்லோர்களுக்கு சேவைகள் செய்யுங்கள் என்றெல்லாம்!!!!
ஆனாலும் அரக்கர்களோ நல்லோர்கள் என்று எங்களுக்கு தெரியாது அதனால் நீங்கள் எதை செப்புகின்றீர்களோ அதை யாங்கள் செய்வோம் என்று
ஆனாலும் யான் உங்களுக்கு நிச்சயம் கொடுக்கின்றேன் !!!
அதனால் யார் ஏமாற்றுகின்றார்கள்?? எதை என்று அறிய அறிய யார் பொய்கள் சொல்கின்றார்கள் ??? இன்னும் இன்னும் எதை எதையோ செய்கின்றார்களே??? அவர்களை நீங்கள் தண்டியுங்கள் !!!
உங்களுக்கே யான் வரம் கொடுக்கின்றேன் பின் நீங்களே அறிந்து கொள்வீர்கள்!!!
தெய்வம் அதாவது தெய்வத்தை எதை என்று அறிய அறிய பின். பின் ஏமாற்றினாலும் தண்டியுங்கள் என்று யானே அவர்களுக்கு உத்தரவு இட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
அதனால்தான் அப்பனே என் பக்தராயினும் எதை என்று அறிய அறிய சித்தர்களை வணங்குவது ஆயினும் இறைவனை வணங்குவது ஆயினும் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி கொண்டு இருந்தால் அவ் அரக்கர்களே அப்பனே பின் எதை என்று அறிய அறிய கஷ்டத்தை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.
ஆனாலும் அப்பனே யானும் சொல்கின்றேன் வேண்டாம் !! வேண்டாம்!! என்று !!!
ஆனாலும் நீங்கள் கொடுத்தது கொடுத்தது தான்!!!!!!....... பார்த்தோம் எதை என்று அறிய அறிய எவை என்று புரியப் புரிய அதனால் அப்பனே அரக்கர்களுக்கே அப்பனே இவ்வாறு மனதுள்ளே எதை என்றும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட நன்மை செய்து கொண்டிருக்கின்றார்கள்!!!! தீயோர்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!!
ஆனால் இக் கலியுகத்தில் அப்பனே மனிதன் அனைவருமே அரக்கனாகத்தான் இருக்கின்றான் அப்பனே ஆனால் மனதளவில் சொன்னேன் அப்பனே!!!!
எதை என்று புரிய புரிய அப்பனே
அவ் அரக்கனை அப்பனே எதை என்று அறிய அறிய வெளியே பின் தூக்கி எறியுங்கள்!!!! போதுமானது அப்பனே!!!
அனைத்தும் உள் நுழைந்து விடும் அப்பனே அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் அப்பனே
இன்னும் பொய்களப்பா!!!
யான் உத்தமன்!!!!!..... எதை என்றும் அறிய அறிய யான் எவை என்றும் அறிய அறிய எவ் உயிருக்கும் பின் துன்பம் செய்யாதவன் என்றெல்லாம் பொய் சொல்லி ஆனாலும் இவ்வாறு செய்தேனே இவ்வாறு கஷ்டங்கள் என்று!!!!
அப்பனே எவ்வாறப்பா??????
உன் மனசாட்சியோடு நீ பேசுகின்றாயா ????? அப்பனே ?????
எதை என்றும் அறிந்து அறிந்து இன்னும் சொல்லப்போனால் சித்தனை வணங்கினால் கஷ்டங்கள் வந்து விடுமாம்!!?!?!?!?!?!?!?!?!!!?!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய உங்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கின்றோம்!!!!!!!
மனித முட்டாளே!!!.........
பைத்தியக்காரர்களே!!!!!.......
எவை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் ஒரு படி சென்றால் அப்பனே அதாவது யாங்கள் கண்டுபிடித்ததை எல்லாம் பொய்களாக்கி அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன்!!!. இவ் மூலிகையை பயன்படுத்திக் கொள் என்று அப்பனே
போகனின் சித்தம் அகத்தியனின் சித்தம் புஜண்டனின் சித்தம் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய கொங்கணனின் சித்தம்
( போகர் சித்த வைத்தியம் அகத்தியர் சித்த வைத்தியசாலை புஜண்டர் சித்த மருத்துவம் கொங்கனர் சித்த வைத்திய சாலை என பெயரிட்டுக் கொண்டு போலியாக வைத்துக்கொண்டு ஏமாற்றி திரிவது)
அப்பனே ஏமாற்றுகின்றார்கள் அப்பனே!!!!
ஆனால் அப்பனே பின் எவனுக்கு ஒருவன் அப்பனே எதை என்று புரியப் புரிய அவ் நோய்களுக்கு எல்லாம் மருந்தாக அப்பனே கொடுக்கின்றானே... மீண்டும் இவனிடத்திலே வந்து உட்காருமப்பா அவ் நோய்கள் அப்பனே சொல்லிவிட்டேன்!!!!!!!
நோய்கள் எதற்காக???? அப்பனே !!! எதை என்று அறிய அறிய அப்பனே
நீ செய்யும் கர்மாவிற்காகத்தான் நோய்கள் அப்பனே!!!!
ஆனால் அவ் கர்மாவிற்கே பரிகாரமென்றால் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
நோய்கள் எதற்கு வருகின்றது???? அப்பனே
நீ செய்த கர்மா தானப்பா!!!
எதை என்று அறிய அறிய சிறிதளவு எண்ணிப் பாருங்கள் அப்பனே
ஆனால் மற்றொரு (மறுமுறை) இடத்தில் என்னை வாக்கு கேளுங்கள் அப்பனே..... எந்தனுக்கு இவ் நோய் வந்து விட்டதே என்று!!!!!
ஆனால் மனசாட்சியுடன் கேட்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று அறிய அறிய
ஆனால் யான் உண்மையை சொல்லிவிட்டால் அப்பனே நீங்கள் தலை குனிந்து விடுவீர்கள் அப்பனே!!!
இதனால்தான் என்னென்ன செய்தீர்கள் என்பதை எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் அப்பனே எவை என்றும் ஏற்கனவே சொல்லிவிட்டேன்!!!
சூரியனும் சந்திரனும் அப்பனே சேமிப்பு கிடங்காக அனைத்து கிரகங்களும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே!!!!!!
மோட்சத்திற்கான வழிகள் அப்பனே நீங்கள் உயர்வதற்கான வழிகளைச் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகளாகவே!!!
இதை பயன்படுத்திக் கொண்டால் நன்று!!!!
ஆனால் அப்பனே மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் அப்பனே பொய்கள் சொல்லிச் சொல்லி அப்பனே ஏமாற்றி பிழைப்பு நடத்தி ஒன்றும் ஆகப்போவதில்லை அப்பனே!!!!
அவை நடக்கும் இவை நடக்கும் அப்படி செய்தால் இப்படி செய்தால் என்று அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய ஆனால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை!!!
கடைசியில் கேட்டால் நீ இதை செப்பினாயே !!!!! அதாவது மனிதனிடத்தில் நீ தான் சொன்னாயே அதை செய்தேன் இதைச் செய்தேன் என்று கடைசியில் என்னதான் ஆனது ???? என்று!!!! நீ அவனிடத்தில் கூற!!!
நீ கர்மா செய்து விட்டாய் அவ்வளவுதான் !!! என்று அவன் சுலபமாக ஏமாற்றி விடுவான் அப்பனே!!...
இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே !!!!
எதை என்று அறிய அறிய பல யுகங்களில் பார்த்து விட்டேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய அப்பனே மற்றவர்களுக்கு ஜோதிடம் சொல்வது அவை சொல்வது இவை சொல்வது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அவன் பரம்பரையே எவை என்று அறிய அறிய அழிந்தும் கிடக்கின்றது!!!
இறைவன் கொடுக்க நினைப்பதை அப்பனே எதை என்று அறிய அறிய யாராலும் சொல்ல முடியாதப்பா!!!! சொல்ல முடியாதப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இறைவன் இருக்கின்றான் என்று கண்டு கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் இருக்கின்றான் ஆனால் அப்பனே நீங்கள் சரியாகப் பயன்படுத்துவதே இல்லை என்பேன். அப்பனே!!!
அதனால்தான் இறைவனே தெரிவதில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
ஏங்குகின்றான் அப்பனே சுகத்திற்காக அப்பனே இன்னும் போனால் அப்பனே காசுகளுக்காக இன்னும் சொல்லப் போனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே தன் பிள்ளைகளுக்காக எதை என்று அறிய அறிய இங்கு எதனைப் பற்றி பேசுகின்றேன்??? அப்பனே!!
தன் சக்திகளுக்காக எவை என்று அறிய அறிய மனித முட்டாளே!!!
எதை என்று கூற அறிவு கெட்டவனே !!! புத்தி கெட்டவனே!!!!
எவை என்றும் அறிய அறிய தன் ஆன்மாவிற்காகவே அனைத்தும் ஏங்குகின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய
செத்து எதையென்று அறிய அறிய அப்பனே பிழைத்து எதை என்று அறிய அதனால் என்ன லாபம்?? அப்பனே!!!
எவை என்று புரிய புரிய சுகத்திலே நுழைந்து அப்பனே சுகத்திற்காக அனைத்தும் செய்து கடைசியில் சுகத்திற்காகவே இறந்து விடுகின்றான் அப்பனே!!!
என்னதான் பிரயோஜனம் அப்பனே சொல்லுங்கள் அப்பனே
எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இதையும் கூட பல வாக்குகளிலும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே!!!
நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன்!!!!.... இறைவன் கூட மனித ரூபம் எடுத்து இங்கு பிறந்திட்டால் அப்பனே கஷ்டம் தான் அப்பா!!!!
அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் மீளவும் முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய எங்களுக்கு தெரியும் அப்பனே எதைச் செய்வது?? எப்பொழுது செய்வது???
எப்பொழுது கர்மா நீக்குவது எல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதை கூட யாங்கள் சொல்வோம் அப்பனே!!!
ஆனால் மனிதனால் செப்ப முடியாதப்பா!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே அறிவில்லாதவன் மனிதன் என்பேன் அப்பனே!!!
என்னென்ன செய்து கொண்டிருக்கின்றான் ?? அப்பனே இப்பொழுது என்னை வணங்கியும்!!!!
எதை என்று புரிய புரிய அப்பனே அகத்தியனை வணங்கியும் கூட அப்பனே பொய் சொல்லி கோபப்பட்டு அப்பனே காமத்தை எதை என்றும் அறிய அறிய அப்பனே மற்றவரை தரம் தாழ்த்தி கூறி பிழைப்பது எதை என்று அறிய அறிய பொய் சொல்லி இவையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ????????????????? அப்பனே!!!!!!
நிச்சயம் சொன்னேனே!!!!!!!!!!!!!!!
அரக்கர்களே இன்னும் கஷ்டத்தை கொடுத்து விடுவார்கள் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே
எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய என்னிடத்தில் வாருங்கள் அப்பனே!!!!!
ஒருவனாவது யான் நல்லோன்!!!! என்று கூறட்டும்... அப்பனே பின்பு யான் எடுத்துரைக்கின்றேன் உன்னைப் பற்றி !!!
ஏன் கஷ்டங்கள் வருகின்றது???? என்பதை அப்பனே!!!!
கேட்பதற்கே வக்கில்லை !!! என்பேன் அப்பனே!!!!!
வக்கில்லை !!! எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் தலைகுனிந்து விடுவீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!
ஒருவன் கேட்கின்றான் யான் நல்லவனாம் ?!?!?!?!?!? எதை என்று அறிய அறிய
சித்தருக்கு தான்....????.................... எதை என்று புரிய புரிய....என்றெல்லாம்!!!!!!......
( ஒரு நபர்!!, நான் நல்லவன் தான் ஆனால் சித்தருக்கு தான் நான் நல்லவன் என்று தெரியவில்லை புரியவில்லை என்று )
ஆனால் அவன் என்ன செய்தான் என்பது தெரியுமா ??? அப்பனே !!!
கற்பழித்து எதை என்று அறிய அறிய என்று புரிய புரிய அப்பனே .... இன்னும் இன்னும் அப்பனே கோபப்பட்டு எதை எதையோ செய்தான் என்று கூட......................
தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்!!!!
ஆனால் அப்பனே அவன் எதை என்று அறிய அறிய யான் உத்தமன் என்று பேசிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்துமே தெரியும் என்பேன் அப்பனே அதனால் அப்பனே மனிதனில் யோக்கியம் இல்லையப்பா!!!!! எவை என்று அறியறிய கஷ்டங்கள் கொடுப்போமப்பா!!!!!
எதை என்று அறியறிய மீண்டும் ஒருவன் கேட்பான் எதை என்றும் அறிய அறிய யாங்கள் ஒழுங்காக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று!!!.......
அப்பனே இருக்கட்டும் அழிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது அப்பொழுது தெரியும் நீ ஒழுங்காக வாழ்ந்தாயா???? ஒழுங்காக வாழவில்லையா எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட அதனால் நிச்சயம் சரியாகவே வேண்டாமப்பா!!! பொய்கள் வேண்டாமப்பா !!!
அப்பனே அப் பொய்கள் அனைத்தும் அழிந்துவிட்டு அப்பனே உன்னையும் அழித்து உன் பரம்பரையையும் அழித்துவிடும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
அப்பனே எதை என்று அறிய அறிய இறைபலம் அப்பனே சாதாரணம் இல்லை!!!!!
அப்பனே இறைவனை வணங்கினால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே ஒழுங்காக வணங்க வேண்டும்... அப்படி இல்லையென்றால் நீ.....திரிந்து கூட அப்பனே.... பாவம் என்றால் அப்பனே ஏதாவது கொடுப்பான்....
ஆனால் இறைவனை வைத்து அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி கொண்டு இருந்தால் ஒன்றுமே கொடுக்கமாட்டானப்பா!!!!!!
அழிவு தான் கொடுப்பான் அப்பனே!!!!
இதனால் தான் கலியுகத்தில் அப்பனே அரக்கர்கள் என்று தான் யான் சொல்வேன் அப்பனே எதை எதை அறிய அறிய
யான் நல்லவன் என்று யாராவது சொல்லட்டும் அப்பனே........
அவனுடைய வரலாற்றை யான் சொல்கின்றேன் அப்பனே!!!!
இக்கலி யுகத்தில் அப்பனே என்னென்ன செய்தான்?? என்னென்ன வழி?!!!எதை என்று கூட இதெல்லாம் நியாயமா???? என்று யான் கேட்க்கின்றேன் அப்பனே!!!!
இன்னும் சித்தர்கள் இருக்கின்றார்கள்!!!!!!!!.....(மனிதனை பார்த்து கேள்விகளை) கேட்பார்களப்பா!!!!
அப்பனே மனிதனாகவே வாழவில்லை அப்பனே எதை என்று அறிய அறிய அடிமையாக்கி அடிமையாக்கி தானும் அடிமையாகி எவை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு இருந்தால் அப்பனே எப்படியப்பா??????
அதனால் எதை என்று புரிய புரிய அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே.... ஏதாவது ரூபத்தில் அப்பனே
ஆனால் இன்னொருவன் கேட்பான் ????? எப்படித்தான் புண்ணியங்கள் செய்வது என்று ???
அப்பனே. பின் யாருக்கும் துரோகம் செய்யாமல் கோபம் இல்லாமல் காமம் இல்லாமல் எதை என்று கூற பொய் சொல்லாமல் அப்பனே வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானதப்பா!!!
நீ புண்ணியவான் தான் அப்பனே !!!!
எதற்கும் ஆசைப்படாமல் வாழ்ந்து கொண்டே இரு அப்பனே!!!
யாங்கள் வருவோம் அப்பனே எதை என்று அறிய அறிய அப் புண்ணியத்தை நோக்கி!!!
உன்னை நோக்கி வரவில்லை!!!!
அப் புண்ணியத்தை நோக்கி வந்து எதை என்று அறிய அறிய உன்னை காப்பாற்றுகின்றோம்!!!! அவ்வளவு தான் அப்பனே
எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே பொய்களப்பா!!!
அப்பனே ஒன்றை இங்கிருந்தே என் ஆசிரமத்தில் இருந்தே சொல்கின்றேன் அப்பனே
எதை என்று அறிய அறிய இப்படியே விட்டிருந்தால் அப்பனே எதை என்று கூற பின் அகத்தியனையும் முருகனையும் இன்னும் இன்னும் அப்பனே சித்தர்களையும் ஏமாற்றி கடைசியில் சித்தர்களே இல்லை சித்தர்களை வணங்கினால் கஷ்டம் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள் அப்பனே!!!!
அதனால்தான் எதை என்று அறிய அறிய யாங்களும் வந்து விட்டோம் அப்பனே!!!
நிச்சயம் அடுக்கி அடுக்கி அப்பனே புண்ணியத்தை அடுக்கி அதாவது அப்பனே பாவத்தை அடுக்கி அப்பனே கடைசியில் அப்பனே புண்ணியத்தை அடித்தால் ?? அப்பனே மேல் லோகம்...
( சித்தர்கள் மனிதர்கள் செய்யும் பாவ புண்ணிய கணக்கை ஒரு தராசு போல அடுக்கி அடுக்கி வைத்து பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப முக்தி மோட்சம் மேல் லோகத்திற்கு சொல்வதும் பாவம் கர்மாக்கு ஏற்ப தண்டனைகள்)
அப்பனே பின் கர்மத்தை அடித்தால் ??அதாவது பாவத்தை அப்பனே அடித்தால் கீழானவர்கள் அப்பனே
அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் நல் மனதாகவே மேலானவர்கள் அப்பனே பின் எவை என்று அறிய அறிய தீய மனது உள்ளவர்கள் கீழானவர்கள் அப்பனே!!!!
என்னை வணங்கியும் கீழானவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் தண்டனை கொடுப்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே
பின் சித்தர்கள் என்றால் யார் என்பதை கூட அப்பனே இனிமேல் தெரியும் என்பேன் அப்பனே!!!
எதை என்றும் புரிந்து புரிந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இருப்பதே பல வழிகளிலும் கூட சொந்தங்கள் பந்தங்கள் எதை என்றும் நிரூபித்து நிரூபித்து அப்பனே!!!!
ஒன்றை சொல்கின்றேன் அப்பனே ராமன் எவ்வளவு கஷ்டங்கள் பட்டான் என்பதை கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் தவபலத்தால் அப்பனே அழைத்தேன் யான் இங்கு அப்பனே!!!
எவை என்று அறிய அறிய அப்பனே ஆனால் வந்தான் இங்கே இராமன் அப்பனே எவை என்று கூற பல வழிகளிலும் கூட உண்மை நிலைகளை அப்பனே சொன்னேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே!!!
கர்மத்தை நீக்கி அப்பனே வளமோடு இன்னும் இன்னும் அப்பனேநல் முறைகளாகவே இங்கெல்லாம் அப்பனே வாய் இல்லா எதை என்று அறிய அறிய ஜீவராசிகளுக்கு எல்லாம் அப்பனே தலைவனாக விளங்கி இராமன் அனைத்துமே செய்து கொண்டிருக்கின்றான் நல் விதமாக!!!
இதே போல தான் சீதைக்கும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் வருகின்ற பொழுது யானே சென்று விட்டேன் அப்பனே மனித ரூபத்தில்!!!!
எதை என்று புரிய புரிய அப்பனே என்னென்ன தேவைகள் என்று உதவிகள் செய்தேன் அப்பனே அது போலத்தான் அப்பனே கிருஷ்ணன் எவை என்று அறிய அறிய எத்தனை அவதாரங்கள்!!! அப்பா??!!! அனைத்திற்கும் உதவிகள் செய்தேன் அப்பனே ( அவதாரங்கள் அனைத்திற்கும் உதவிகள்)
"""மனிதன் ஒரு துளி !!!!
"""" ஒரு துரு தான் அப்பனே எந்தனுக்கு!!!!!!!!!
அப்பனே பின் எவை என்று அறிய அறிய """நசுக்கி விடுவேன் !!!!!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!
எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அதனால் அப்பனே எவை என்றும் அறியாமலும் கூட இத்தனை பேர்களுக்கு உதவிகள் செய்த யான் அப்பனே மனிதனுக்கு அப்பனே இறங்கி வந்து கொண்டிருக்கின்றேனே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!!
இதனால் நீங்கள் புண்ணியங்கள் செய்தால் மட்டுமே பிழைத்துக் கொள்ளலாம் இக்கலி யுகத்தில் !!!!!
அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன அழிவுகள் வரப்போகின்றது என்பதை சொல்லி விட்டால் அப்பனே நீங்கள் பயந்து விடுவீர்கள் அப்பனே!!!!
இன்னும் அதை பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றீர்கள் அப்பனே
அதனால் மனிதன் நிச்சயம் அப்பனே அறிவியல் வழியாகவே எதை என்று புரிய புரிய உயர்வதற்கு!!!???????????
அப்பனே ஆனால் அழிவதற்கு அது !!!!!!!!
அதனால் தான் யாங்கள் வெற்றி பெற செய்ய மாட்டோம் அப்பனே சொல்லிவிட்டோம் அப்பனே
எங்கள் அருள் இல்லாமல் இவ்வுலகத்தில் எவையும் ஜெயிக்காதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்றும் புரிய புரிய
இதனால் அப்பனே நல் முறைகளாகவே எதை என்று அறிய அறிய அப்பனே ......
இங்கு வருவதற்கும் பல புண்ணியங்கள் எதை என்று அறிய என்னை நாடி நாடி அப்பனே எதை என்று அறிய அறிய சித்தர்களை அப்பனே வணங்குவதற்கும்
அப்பனே கொடுப்பினை வேண்டுமப்பா!!!!!
ஏதோ ஒரு முன் ஜென்மத்தில் எதை என்று அறிய அறிய சிறிதளவே அப்பனே!!......
ஆனால்
கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நல்லோர்கள் வாழ முடியாமல் போகுமப்பா!!!
அப்பனே தீயோர்கள் தான் வாழ முடியும்!!...
ஆனால் அப்பனே அதனால் தான் யாங்கள் வந்தோம் நல்லோர்களும் வாழ வேண்டும் என்பதற்காகவே ஆனால் எதை என்று அறிய அறிய தீயோர்கள் யார் ?? என்றால் அப்பனே!!
இறைவனைப் பற்றுப்பற்றி அப்பனே கோபங்கள் என்னென்ன இறைவனை வணங்கி கோபங்களாம்!?!?!?!?!?
எதை என்று அறிய அறிய ஒருவன் சொல்கின்றான் இத்தலத்தின் அதிபதியே யான் என்று!!!!!
அட முட்டாளே !!! எதை என்றும் புரிய புரிய பைத்தியக்காரனே!!!!
பின் ஈசன் இருக்கின்ற பொழுது நீயா ??????????
( ஈசனே அனைத்திற்கும் அதிபதி)
யான் தான் இத் தலத்தை அமைத்தேன் என்று!!!!!
அட முட்டாளே எதை என்று அறிய அறிய மனிதன் அதாவது நீயே அமைத்துக் கொண்டாய் அல்லவா பின் கஷ்டங்கள் படு எதை என்று அறிய அறிய!!!!
திருத்தலத்தை அமைக்கின்றான் ஆனால் கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்றான்!!! ஏன் என்று பின் யாராவது ஒருவன் சிந்தித்தது உண்டா ?????????
அதனால்தான் அப்பனே தெரிந்து கொண்டு வாழ்ந்து எதை என்று புரியப் புரிய அப்பனே ஜென்மத்தை கடைத்தேற்றுங்கள் அப்பனே!!!! பின் தெரிந்து கொண்டு வாழ முடியவில்லை என்றால் அப்பனே குடும்பம் ஒன்று எதை என்று அறிய அறிய நீங்கள் தான் ஏங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே குடும்பம் குடும்பம் என்று அப்பனே!!!! இருக்கின்றதல்லவா அங்கே சிக்கிக் கொள்வீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய
புள்ளி சரியாக இறைவன் வைப்பான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே
உண்மை நிலையை தெரிந்து வணங்கி வாருங்கள் இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே !!!!
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் ஆசிகளப்பா!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதருடைய ஆசிரமக் கோயில் அகஸ்திய முனி நகரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்கு சென்று குருநாதருடைய தரிசனம்
குருநாதர் திருமூர்த்தி தென்னக பாணியில் காவி உடை கமண்டலம் தண்டத்தோடு இல்லாமல்!!!
சர்வ அலங்கார ரூபனாக செம்பு கவசம் சாத்தி நவகிரகங்கள் புடை சூழ சங்கு சக்கரம் கொடி வாள் கட்டாரி வஜ்ராயுதம் என சர்வ ஆடை ஆபரண அலங்கார ரூபத்தில் காட்சியளிக்கின்றார்.
குருநாதர் தன் வாக்குகளை ஜீவநாடியில் உபதேசமாக தரும் பொழுது மலை மீது வீற்றிருக்கும் குமரா.. குமரா. என குருநாதர் வாக்குகளை ஆரம்பித்தார்.
இதற்குக் காரணம் இருக்கின்றது குருநாதரின் ஆசிரமக் கோயில் சுற்றிலும் மலை பிரதேசம் அந்த மலையில் முருகன் கார்த்திகேயனுக்கு மிகப் பெரிய கோயில் உள்ளது.
அதாவது திருப்பரங்குன்றம் மலை அருகிலேயே குருநாதர் உடைய ஆசிரமம் அதாவது பசுமலை கோயில் எவ்வாறு அமைந்துள்ளதோ !!!!!
இதனைப் பற்றி தன் ஆசிரமம் அப்பன் முருகனை யான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பசுமலையில் (திருவிளையாடல் புராண பெயர் இடப மலை) யான் உருவாக்கினேன் என்று வாக்குகளிலும் இதனை பற்றி தெரிவித்திருக்கின்றார் அப்பன் முருகன் எங்கு இருக்கின்றானோ அங்கெல்லாம் யான் அருகிலேயே இருப்பேன் என்றும் கூறி இருக்கின்றார் அக் கூற்றின் படி
அதேபோல மலை மீது கார்த்திகேய சுவாமி கோயில் உள்ளது மலை அடிவாரத்தில் நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் ஆசிரமம் கோயில் உள்ளது.
பார்வதி தேவியின் அம்சமான கங்கா நதியின் மறுபெயர் மந்தாகினி நதிக்கரையில் வீற்றிருக்கும் மலை மீது குமரன் வீற்றிருக்கின்றார்.
மந்தாகினி நதியை பற்றி அருணகிரிநாதர் தம் கந்தர் அனுபூதியில் முருகனை
சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா, முருகா, கருணாகரனே.
என மந்தாகினி தந்த வரோதயனே என சிலாகித்து வர்ணித்ததை தெரிவிக்கின்றோம் இந்த மந்தாகினி அதாவது பார்வதி தேவி கங்காதேவியின் அம்சமான இந்த மந்தாகினி நதி உத்தர் கண்டு கார்த்திகேய சுவாமி கோயில் அகஸ்தியர் ஆசிரமத்திற்கு அருகிலே ஓடிக் கொண்டிருக்கின்றது
அகஸ்திய முனி கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியமுனி நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற கோயிலாகும் . அகஸ்திய முனிவர் கோயில் அகஸ்திய முனிவருக்கு இந்த பழமையான கோவில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது, பின்னர் அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதான கோவிலில் அகஸ்திய முனியின் குண்டமும் அவரது சீடரான போகஜித்தின் சிலையும் உள்ளது. அகஸ்திய முனிவர் இந்த இடத்தில் பல ஆண்டுகளாக தியானம் தவம் மேற்கொண்டார். இக்கோயிலில் அகஸ்திய முனிவர் ஆஸ்ரமம். கோவில் வளாகத்தில் அகஸ்திய குண்டம் மற்றும் சிவன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அகஸ்திய முனிவர் தவம் செய்தார். அகஸ்திய முனிவரின் பெயரால் இத்தலம் அகஸ்தியமுனி என்று அழைக்கப்பட்டது. இக்கோயில் மத முக்கியத்துவம் வாய்ந்தது. அகஸ்தியமுனி. கேதார்நாத் பத்ரிநாத் செல்லும் பக்தர்கள் இந்த புனித கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
கோவிலின் கருவறையில் அகஸ்திய முனி, சிருங்கி ரிஷி மற்றும் அனுமன் ஆகியோரின் மூர்த்திகள் உள்ளனர்.கோயில் வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவின் மூர்த்திகளும் உள்ளன. கோவிலின் மண்டபப் பகுதியில் விஷ்ணு மற்றும் விநாயகர் தூண்களின் முன் நிற்கும் சிவலிங்கம் உள்ளது.
பிரதான கோவிலின் வெளிப்புறச் சுவரில் பீமன் மற்றும் அனுமன் சிற்பங்கள் உள்ளன .
இக்கோயிலின் காவல் தெய்வம் சேத்ரபால் பைரவர்.
அகஸ்திய முனி கோயில், அகஸ்திய முனிவரின் முக்கிய ஆஸ்ரமம் மையங்களில் ஒன்றாகும்.
எப்படி அடைவது :-
விமானம் மூலம்
அகஸ்தியமுனிக்கு அருகிலுள்ள விமான நிலையம் ஜாலி கிராண்ட் விமான நிலையம் டெஹ்ராடூன் ஆகும் , இது அகஸ்தியமுனியிலிருந்து 176 கிமீ தொலைவில் உள்ளது.
தொடர்வண்டி மூலம்
அகஸ்த்தியமுனி நகரத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஷ் ஆகும் , இது அகஸ்முனியிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது.
சாலை வழியாக
அகஸ்திய முனி கோயில் அகஸ்தியமுனி நகரில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது .
அகஸ்தியமுனி மந்திர் குப்த்காசியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் , உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தில்வாராவில் இருந்து 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது .
மலைமீது முருகன் கோயில்.
கார்த்திகேயா டெம்பிள் உத்தர்காண்ட்.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ருத்ரபிரயாக் - போகரி வழித்தடத்தில் கனக்சௌரி கிராமத்திற்கு அருகில் கார்த்திக் சுவாமி கோவில் உள்ளது . கனக் சௌரி கிராமத்திலிருந்து லேசான 3கிலோமீட்டர் மலையேற்றம் செல்வதன் மூலம் கார்த்திக் சுவாமி கோயிலுக்கு அடைய முடியும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
பணிவான வணக்கம் 🙏 நேர்மையாக இருந்து கஷ்டப்படுபவர்கள் யார் என்று கூறுங்கள் காரணத்தை நான் கூறுகிறேன் என்று குருநாதர் கூறுகிறார் பிறகு அவரே நல்லோர்களுக்கு கஷ்டம் மட்டுமே உண்டு என்கிறார் ஏன் இந்த வேறுபாடு என்று தெரியவில்லை மேலும் அடியேன் தர்ம சிந்தனையுடன் வாழ்ந்தும் பிறப்பு முதல் இன்னலே அது பற்றி கூற குருநாதருக்கும் மனமில்லை வாசிப்பவருக்கும் மனமில்லை ஏனெனில் தர்மம் என்றோ செத்து விட்டது இனி அதை உயிர்ப்பிக்க இயலாது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் போலும் ✍️
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete