​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 17 November 2023

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17!


குருநாதர்:- அதனால் நீங்கள் அவன் செய்தான், இவன் செய்தான், எப்படி என்பதையெல்லாம் பொய் (சொல்லி) திரிந்து கொண்டிருந்தால் கர்மா மீண்டும் உங்களுக்குத்தான் அப்பா. நீங்கள் நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே.  அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் தண்டனைகள் எது என்று கூட இறைவன் ஏற்கனவே கொடுத்து அனுப்புகிறான் அப்பனே! அதிலிருந்து தப்பிக்க வேண்டுமா அப்பனே முடியாது அப்பா. எங்களை போன்ற சித்தர்கள் பேச்சை கேட்டால் தான் அப்பனே முடியும்.

அப்பனே எவை என்று தெரியாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே அதனால் பத்தியை கடைபிடியுங்கள். அப்பனே  நம்பிக்கை வையுங்கள் இறைவன்பால். இவ்நம்பிக்கைத்தான் உன்னை மேல் நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே. நம்பிக்கையாக இருந்தால் அப்பனே  ஒவ்வொரு கையாக மேல் நோக்கி செல்லும். அவநம்பிக்கை  இல்லை என்றால் அப்படி ஒரு கையாக கீழ் நோக்கி செல்லும். அவ்ளோதான் வித்தியாசங்கள் அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.  இறைவன் இருக்கின்றான். இறைவன் நன்மை செய்வான். நம் தனக்கு செய்யாமல் வேறு யாருக்காவது பின் செய்வானா? என்று எல்லாம் நினையுங்கள்.  அப்பனே ஏதோ ஒரு காரணத்தால் தான் இறைவன் தடுத்துக் கொண்டிருக்கின்றான் என்று எல்லாம் நீங்கள் நினையுங்கள்,  சிந்தியுங்கள் அப்பனே. அப்பொழுதுதான் நீங்கள் அறிவாளிகள். இல்லை என்றால் நீங்கள் முட்டாள்கள்.  அடுத்தவர்கள் உன்னை இலவசமாகவே அதாவது சுலபமாக ஏமாற்றி விடுவார்கள் என்பேன் அப்பனே.அப்போது ஏமாற்றியவனை விட ஏமாறுபவர்களைக்குத்தான் தண்டனை அதிகம். நீங்கள் அனைவருமே ஒரு இடத்தில் சென்று ஏமாந்து தான் வந்து இங்கு நிற்கின்றீர்கள்.  சொல்லி விட்டேன் அப்பனே. அதனால்தான் கர்மா.

அடியவர்:- எங்களுக்கு சொந்தமான உள்ள கோயில் அதை எடுத்து எங்களால செய்யவே முடியல….

குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லி இருந்தேன் அம்மையே ? உந்தனக்கு உயிரே சொந்தமில்லை அம்மையே. ஆனால் சொந்தமென்று சொல்கிறாய்  இதுதான் உன் பத்தியா.?

அடியவர்:- ……..

குருநாதர்:- அம்மையே நிச்சயம் செய்ய முடியும். இன்னும் நான்கு மாதங்கள் செல்லட்டும். இதற்கும் தீர்வை சொல்கிறேன்.

அடியவர்:- சரிங்க ஐயா

குருநாதர்:- அம்மையே சக்திகள் இருக்கிறது ஆனால் புரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாய் நீயே அம்மையே. அதாவது கையில் என்ன வைத்திருக்கிறாய் தெரியுமா?  வெண்ணெய் வைத்திருக்கிறாய். நெய்க்காக அலைந்து கொண்டிருக்கிறாய். இதுதான் அம்மையே பின் கர்மா!

நாடி அருளாளர்:- கைல இருக்குது. ஆனா உங்களுக்கு தெரியல.உங்களுக்கு தெரியாம இருக்கீங்க.

குருநாதர்:- அம்மையே அவை தெரியாமல் இன்னும் தெரியாமல் இங்கு வந்து. அம்மையே அதனால் ரகசியத்தை யெல்லாம் சொல்கிறேன்.

நாடி அருளாளர்:- (அடுத்து நான்கு மாசம் கழித்து. )

குருநாதர்:- அம்மையே ருத்ராட்சம் எதற்காக?

அடியவர்:- சிவனின் சொருபம். நம்மை நல்வழிபடுத்த…

குருநாதர்:- அம்மையே அப்போது பின் மனிதனை நோக்கி சென்றால் அம்மையே அதாவது ஈசனையே தன்னிடம் இருக்கும் பொழுது மனிதனை நம்பி சென்றால் அம்மையே என்னதான் நடக்கும் அம்மையே?

நாடி அருளாளர்:- புரியுதுங்களா அம்மா.

அடியவர்:- ம்ம்ம்…

(அடியவர்களே ருத்ராட்சம் உங்கள் கழுத்தில் இருந்தால் அந்த ஈசனே உங்களிடம் இருப்பது போல். பரிகாரம் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் மற்றும் கர்ம வினை உண்டாகும் )

குருநாதர்:- அதனால் அம்மையே சொல்லி விட்டேன். எப்பரிகாரமும் செய்யக்கூடாது சொல்லிட்டேன் அம்மையே செய்தால் உன்னை அடிப்பேன்.

(நாடி அருளாளர் விளக்கம், உரையாடல்கள்)

குருநாதர்:- அம்மையே இதனால் (பரிகாரங்கள்) செய்து செய்தே ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அம்மையே. இதனால் கடைசியில் இறைவன் இல்லை என்றுதான் சொல்ல போகின்றார்கள் மனிதர்கள் அம்மையே. அனைத்தும் பொய் அம்மா. உண்மை நிலையை உணர் அம்மையே.

( இந்த அடியவருக்கு உரைத்த இந்த வாக்கை பொது வாக்காக , உங்களுக்கு உரைத்த வாக்காக ஏற்று அதாவது பரிகாரங்கள் ஏதும் வாழ்க்கையில் செய்ய வேண்டாம் என உணருங்கள்)

குருநாதர்:- அப்பனே முதலில் உண்மை நிலையை உணருங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய உங்களுக்கு தொழில் வேண்டுமா யானே கொடுக்கின்றேன். பின் திருமணம் வேண்டுமா யானே செய்து தருகிறேன். அனைத்தும் யானே செய்கிறேன். ஆனால் உண்மை நிலை தெரியாமல் அவை இவை தா என்று சொன்னால் அப்பனே பளார் என்று அடித்து விட்டு சென்று விடுவேன்.

அடியவர்கள்:- ( அமைதி )

குருநாதர்:- ( அங்கு வந்திருந்த இரண்டு அடியவர்களை ஒன்றாக நிறக்கச் சொன்னார்கள்)

இவர்கள் இருவருமே ஒன்றுதான். ஆனால் பாருங்கள் நன்றாக.

அடியவர்கள்:- ( ஒன்றாக நின்ற அந்த இரண்டு அடியவர்களை உற்று நோக்கினர். அடுத்து குருநாதர் ஒர் அதிசயத்தை கூறினார்கள்)

குருநாதர்:-  வித்தியாசம் ஒன்றுமில்லை அப்பா. அப்பனே ( அடியவர்1)  அனைத்தும் உணர்ந்து நீ இப்படி ஆகி விட்டாய். (அடியவர் 2) இவன் அனைத்தும் உணர்ந்து இப்படி இருக்கிறான். அதனால் உங்கள் வாழ்க்கை ஒரு போதும் அப்பனே ஒரே மாதிரியாகவே செல்கின்றது எனபேன் அப்பனே. இதை கோடியில் ஒருத்தருக்குத்தான் இவை கிடைக்கும்.

நாடி அருளாளர்:- உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் போயிருக்கிறது. இவர் வாழ்க்கையும் அப்படித்தான் போயிருக்கிறது. இது கோடியில ஒருத்தருக்குதான் கிடைக்குமாம்.

குருநாதர்:- ( இப்படிப்பட்ட அதிசய ஒற்றுமை உள்ள அடியவர்களை அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை வாக்குகளை எடுத்து உரைத்தார்கள். அதில் உள்ள பொது வாக்கு மட்டும் கீழே உங்கள் நன்மைக்காக. ) அப்பனே ஒருவன் சொன்னான் பரிகாரங்களை.  அனைத்தும் செய்தான் அப்பனே இவன். ஆனால் அவன் கர்மமா இவன் மேலயே விட்டுவிட்டான் அப்பனே அவ்ளவுதான் அப்பனே.

( இந்த வாக்கு பொது. நம் அனைவருக்கும். அடியவர்கள் இந்த வாக்கை மூன்று முறை படித்து தெளிவு அடையவும். )

அப்பனே எப்படி போக்குவது என்பது கூட எப்படி போக்க கூடியது என்பதையெல்லாம் அப்படியே யானே போக்கி அப்பனே இனிமேலும் பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்படியே வீணப்பா.  அதனால் அப்பனே பரிகாரங்கள் என்பது கூட உனக்கு இல்லை அப்பா. அப்படி நீ செய்தால் அப்பனே மற்ற எப்பொழுது நீ நம்புகின்றாயோ அப்பனே சில வினைகள் எதை என்று யான் சொன்னேனே செல்லில் சேகரித்து அவை சிறிதாக இப்போதுதான் நீக்கிக்கொண்டிருக்கின்றன் அப்பனே.

அப்பனே அனைவரும் முன்னே (அனைவரிடமும் - பரிகாரம் செய்து ஏமாந்ததை - இதை சொன்னால்) தவறில்லை என்று அறியப்படும் இதுவும் ஒரு கர்மா போக்குவதற்கான பரிகாரம்.

(எல்லாருக்கும்  இதை சொன்னால் இதுவும் கர்மத்தை போக்கும் ஒரு பரிகாரமே)

அப்பனே நல்லது செய்கிறேன் என்று அனைவரும் சொல்கிறார்கள் அப்பனே. ஆனாலும் அப்பனே பாவத்தை செய்தவன் யாராவது பாவம் செய்தேன் யான் என்று சொல்லுகின்றானா என்ன அப்பனே.?

அடியவர்:- இல்லை

குருநாதர்:- அப்பனே அவ்நல்லதை செய்கிறான் என்று சொன்னானே அப்போதே நல்லது  சென்றுவிடும் என்பேன் அப்பனே. அதேபோல் தன் பாவத்தை எவன் ஒருவன் தைரியமாக சொல்கின்றானோ அவ்பாவம் அப்படியே சென்றுவிடும் என்பேன் அப்பனே. அவ்பாவத்தை எங்கு மறைத்து இருக்கிறான் என்று பாருங்கள் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே ஒவ்வொருவரும்  கூட இப்படித்தான் குற்றம் செய்து கொண்டு மறைத்து வைக்கின்றார்கள் என்பேன் அப்பனே. அதனால் பின் பாவம் ஏற்பட்டு அவர்களுக்கே அது அப்பனே கஷ்டமாக போய்விடுகின்றது என்பேன் அப்பனே. இது தான் வாழ்க்கை.

அடியவர்கள்:- ( புரிதல் உரையாடல் சில )

குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்குகள் - இந்த இருவருக்கும் - அதாவது ஒரே கர்மப்பாதையில் பயணம் செய்யும் இரண்டு அடியவர்கள்)  அதனால் உன்னை பார்த்து அதாவது அவனைப் பார்த்து நீ ஒரு கேள்வி கேள். உன்னைப் பார்த்து அவன் ஒரு கேள்வி கேட்கட்டும்.

இரு அடியவர்கள் :- ( ஒருவரை ஒருவர் மாறி கேள்வி கேட்டனர் குருநாதர் முன்னிலையில். அப்போது மாமிசம் உண்டு வந்த ஒருவரை தள்ளி பின்னே நிற்கச்சொன்னார் குருநாதர்.)

குருநாதர்:- அப்பனே புரிகின்றதா? அப்போது உண்மையான உணவு எது? அப்பனே.

அடியவர் 1:- உண்மையான உணவு சாப்பிடுபவர்கள் மரணமில்லை/அழிவதில்லை. அப்பொழுது உண்மையான உணவு எது?

அடியவர் 2:- உடம்பு அழியக்கூடியதே.

குருநாதர்:- அப்பனே அழியக்கூடியது  நீ கூறிக் கொண்டிருக்கின்றாய் என்பேன் அப்பனே.அப்பனே யானே கூட கூறுவேன் ஆனால் இதற்கு பதில் சொல்ல வேண்டும் இங்கு நீ?

நாடி அருளாளர்:- நானும் உடல் அழியக்கூடியது என்று கூறுவேன். ஆனால் அது எப்படி அழியக்கூடாதுன்னு கேக்குறார்?

குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் அப்பனே யான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவருக்குமே எங்கேயோ ஞாபகம் என்பேன்.  அப்பனே கூறு அவன் தலையில் ஒரு அறை.

(அடியவர் ஒருவரை மற்றொருவர் தலையில் குட்ட உத்தரவிட்டார் குருநாதர்)

நாடி அருளாளர்:- எனக்கு தெரிஞ்சு  நிறைய பேருக்கு தெரியாது. ஜீவ நாடி நேரடியாக அவர் உரைப்பது.

குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் பின் வாசியோகம் பற்றி ( வலது சுவாசம் மட்டும் ) . ஆனாலும் அப்பனே நம்தன் ( நாமே சுய) முயற்சி செய்ய கூடாது சொல்லிவிட்டேன்.அப்பனே தானாக எப்படி தானாக வருவது என்பது எல்லாம் அப்பனே ஆனால் ஆசைகள் அறுத்துக்கொள்ள வேண்டும் என்பேன். அப்படி ஆசை வைத்துக் கொண்டு இதை செய்தால் அப்பனே பெரிய இழப்பாக போய்விடும் எனபேன் அப்பனே. இதுபோலத்தான் அதாவது வாசி யோகத்தை கற்றுக்கொண்டவர்கள் அனைத்தும் இழந்து நடுத்தெருவில் நின்று இருப்பதைக்கூட நான் காண்கிறேன் இப்புவிதன்னிலே.

அதனால் அப்பனே இறைவனை அப்பனே நோக்கிச் சென்றடைய வேண்டும் என்றால் அப்பனே நம்தன் முதல் ஒழுக்கமாக இருக்கின்றோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும் அப்பனே முதலில். ஆனால் அவை எல்லாம் சிறிது தவறாக இருந்தாலும் நீக்கிவிட்டு இறைவன் பாதையில் செல்ல வேண்டும் என்பேன் அப்பனே. நேரடியாக இறைவனை  பிடித்தாலும், இறைவன் அடி பின் அதாவது பலமாக ஒரு அடி கொடுத்துத்தான் அப்பனே உங்களை தன் கையில் பின் எவை என்றும் புரிய புரிய அம்மையே கேட்டாயே இத்தனை சொந்தங்கள் (இங்கு உனக்கு) இருக்கின்றதே இவருக்கெல்லாம் ஏதாவது நன்றாக செய்ய வேண்டும் என்று கூறி கூறியிருந்தால் அம்மையே நீ அனைத்தும் கூறியிருப்பதை அனைத்தும் இறைவன் தந்து இருப்பான். ஆனால் தன் சுயநலத்திற்காக கேட்கிறாய் அம்மையே, இது தவறு எனபேன் அம்மையே.

நாடி அருளாளர்:- ( ஜீவ நாடியின் மகத்துவத்தை இந்த அம்மைக்கு எடுத்து உரைத்தார்கள்) இப்ப அப்படியே எடுத்து பாருங்க. அப்ப இத்தன பேரு இருக்காங்க அப்பா இவங்க ஏதாவது நல்லது செய்வாரு சொல்லிட்டு நீங்க கேட்டிருக்க…

குருநாதர்:- எது என்று அறிய இதனால் தான் அம்மையே தன்னை பற்றி நினைப்பவனுக்கு இறைவன் நிச்சயம் கொடுக்க மாட்டான் சொல்லிவிட்டேன்  அம்மையே.

நாடி அருளாளர்:- தன்னை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ , நம் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்பதை நினைப்பவர்களுக்கு இறைவன்…. (ஏதும் கொடுக்க மாட்டார்.)

அடியவர்:- நாங்க ரெகுலரா ஒரு சிவன் கோயில்ல உழவார பணி செஞ்சுகிட்டு இருந்தோம். ஒரு குழுவாக. இப்ப அங்க கொஞ்சம் ( எங்களை) ஒதுக்கி வைக்கிற  மாறியிருக்கிறது…..

குருநாதர்:- அம்மையே மனிதர் ஒதுக்கி வைத்தால் என்ன? ஈசன் ஒதுக்கி வைக்க மாட்டான் அம்மையே. சொல்லிவிட்டேன்.

அடியவர்:- ஐயா தீபக்குழு சரியா பயன் ( செயல் ) பட சொல்லுங்க?

குருநாதர்:- அப்பனே அப்பொழுதே சொல்லிவிட்டேன்.

நாடி அருளாளர்:- ( இதறக்கு முந்தைய வாக்கில் குருநாதர் அறவுரை சொல்லி உள்ளார்கள்)

குருநாதர்:- அப்பனே சில கருமங்கள் கூட எப்படி சேரவிடாமல் யான் பார்த்துக் கொள்கிறேன் அப்பனே.

(பின் வரும் மகத்தான வாக்கு மிக முக்கிய வாக்கு. மூன்று முறை உள்வாங்கி படித்து இது போல் செயல்படுத்தவும்)

எப்படி செய்ய வேண்டும் என்று கூற சரியான முறையில் செய்தால் அப்பனே கர்மம் நெருங்காதப்பா. அப்பனே ஒருவன் ஓருவன் கர்மம் சம்பாதித்துக்கொண்டே , இதனால் அனைவரையும் அழைத்து அப்பனே ஒன்று கூடி எதை என்று புரியாமல் அப்பனே பல பல வழிகளில் கூட இயலாதவருக்கு கொடுத்து அப்பனே சிவபுராணத்தை அப்பனே பின் ஓதி நல்ல விதமாகவே அப்பனே செய்து வந்தாலே போதுமானது அப்பா. ஆனாலும் இதை முடித்த பிறகு அப்ப எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அப்பனே. ஆனால் அப்பனே சொல்லி விடுகின்றேன், அதை சொல்வதே இல்லை. அதனால்தான் கஷ்டங்கள் அப்பா.கர்மா சேருகின்றது என்பேன். ஆனாலும் சிறுவயதில் தன் பிள்ளைக்கு தாய், தந்தையர் இப்படி இருந்தால்தான் நல்லது. இப்படி இருந்தால் கெட்டது. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படித்தான் பயன்படுத்த வேண்டும். இறைவன் இருக்கின்றான் என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள் சிலர் மட்டுமே. அது போலத்தான் நீங்களும். அப்பனே (மக்களிடம் எடுத்து நேரில்) சொல்லி சொல்லி மாற்றம் அடைய (செய்ய) வேண்டும் என்பேன் அப்பனே. பின் அப்படியே செய்தாலும் கூட அவர்களுடைய கர்மா அடைந்து விடும் உங்களை. அதனால்தான் அப்பனே சொல்லி இருக்கின்றேன் அப்பனே. இதை கெட்டியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. வணக்கம்.மேலே படத்தில் இருக்கக் கூடிய அகத்திய பெருமான் சன்னதி எங்கே இருக்கிறது அய்யா. நன்றி.

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete