​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 12 November 2023

சித்தன் அருள் - 1498 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 12!

 

குருநாதர்:- அப்பனே குன்றத்தில் இருப்பவன் யார்? அப்பனே ஏன் நிற்கின்றான் என்று யாராவது சிந்தித்தீர்களா என்ன?

அடியவர்:- உயர் நிலை ஞானம்

குருநாதர்:- குன்றத்தில் ஏறி நிறக்கின்றேன் என்றால் அப்பனே ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பட்ட கஷ்டங்கள் கால்களில் பின் ஊர்ந்து, நடந்து, எழுந்து சென்றால்தான் அப்பனே கடைசியில் இறைவனை காண முடியும் என்பதற்கே இவன்தன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் அப்பனே. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் அப்பனே கஷ்டமே வரக்கூடாது என்றால் நீங்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான். உங்கள் வாழக்கை தின்போம் , பின் தின்று நோய்கள் சம்பாதித்துக் கொண்டு, பிள்ளைகள் பெற்றுக்கொண்டு,  மீண்டும் கர்மாவை சேர்த்துக் கொண்டு, மீண்டும் ( சேரத்த கர்மாவை கழிக்க) பிறவி எடுத்துக் கொண்டு இப்படியே வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல என்பேன் அப்பனே. அதனால் துன்பங்கள்ள பட்டுப்பட்டு சென்றால்தான் அப்பனே உயர் நிலையை அடைய முடியும் என்பேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் யான் கொடுப்பது  சரியா? தவறா? 

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே இதனால் இவ் பக்குவங்கள் உங்களை ஏன் சில பேர் மட்டும் யான் இங்கு (மதுரை அடியவர் இல்லத்தில்) அழைத்து உள்ளேன் என்றால், அப்பனே முதலில் நீங்கள் நன்மை செய்தாலும் அப்பனே சில தானங்கள் செய்தாலும் இவை எல்லாம் இப்படித்தான் என்று கூறி அவர்களுக்கு (மக்களை ) திருத்தி வழி நடத்த வேண்டும் என்பேன் அப்பனே  தெரியாதவர்களுக்கு அப்பொழுதுதான் ( உங்களுக்கு முதல் வகை ) புண்ணியம். அதை விட்டு விட்டு ஏதோ பின் அன்னத்தை கொடுத்து விட்டு அப்பனே இந்தா தின்னு என்று சொன்னால் அப்பனே ஒன்றும் பிரயோஜனமில்லை அப்பா. இதனால் கர்மாதான் அப்பனே. மீண்டும் கடைசியில் வந்து யான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே என்ன (பலன்)? அப்பனே. அதனால் தெரியாமல் எதையும் செய்யக்கூடாதப்பா.

(ஈரேழு பதினான்கு உலகங்களை ஆளும் நமச்சிவாயன் அகத்தில் வாழும் ஈசன், பொதிகை வேந்தன் , அகத்திய பிரம்ம ரிஷி அருளால் மதுரை அடியவர் இல்லத்திற்கு 4.9.2023 அன்று பல அகத்தியர் அடியவர்கள் அழைக்கப்பட்டு உலகிலேயே கலிகாலத்தில் முதன் முறையாக அன்னதானம் வழியில் முதல் வகை உயர் புண்ணியம் பெறும் உண்மையை விளக்கும் வாக்கு அடியவர்களுக்கு உரைக்கப்பட்டு அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து அடியவர்களுக்கும் அவர்கள் எப்படி உயர் புண்ணியம் எப்படி பெற வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் மிக மிக அதி முக்கிய மகத்தான மகிமை புகழ் வாக்கு என்பதை உணர்க.

அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை:-

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-  “அனைவரும் அன்னத்தையும் மற்றவர்களுக்கு (இட்டு) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது பின் மற்றவர்களுக்கு (பொதுமக்களுக்கு) பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று (வழி/செயல் முறைகளை எடுத்து நேரில் சொல்லி) காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.”

உதாரணமாக அன்னதானம் செய்யும்போது ஒவ்வொரு நபர்களிடம் கூற வேண்டிய சில வாழ்க்கை நெறிகள்:-

1) எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை வணங்குங்கள்.

2) உங்களால் இயன்ற அன்னத்தை எறும்பு, பறவை முதலிய ஜீவராசிகளுக்கு தினமும் அளித்து சேவை செய்யுங்கள்.

3) மனிதன் உயிர் , ஆரோக்கியம், நல்வாழ்வு அனைத்தும் புண்ணியத்தில்தான் உள்ளது.  புண்ணியம் செய்யும்போது எதையும் எதிர் பாரக்காமல் மழை நீரைப்போல், சூரிய ஒளி போல் தர்மத்தை செய்து கொண்டே செல்லுங்கள்.

4)அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும்.

5)அனுதினமும் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

6) இந்த தகவல்களை அனைத்துடன் குறைந்தது 108 பேருக்காவது தயவு செய்து எடுத்து நேரில் சொல்லுங்கள்.அடுத்தவர்கள் நன்கு வாழட்டும். அடுத்தவர்களை உயர்த்துங்கள்.

———-> இப்படி சில நல்ல வழிகளை ஏதும் அறியாத ஏழை/எளியோரிடம் அன்னதானம் செய்யும் போது கண்டிப்பாக சொல்ல அது உயர் நிலை முதல் வகை புண்ணியமாக மாற இறை அருளும்.

“பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை (நீங்கள் சொல்லியவர்கள்) பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு (வாழ்க்கை) நிலமைகள் மாறும். மாறும் என்பேன்.“ - அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

எனவே அடியவர்கள் அனைவருக்கும் இது போல எடுத்து சொல்லி உயர் புண்ணிய பலம் பெற்று நல்வாழ்வு வாழ்க வளமுடன்.

இந்த வாக்கை படித்த அனைத்து அடியவர்களும் இதை முதலில் அனைவருக்கும் எடுத்து சொல்லி அவர்களை உயர் புண்ணியம் பெற்று நல்வாழ்வு வாழ வழி செய்யுங்கள் என சிரம் தாழ்த்தி உங்கள் அனைவரையும் வேண்டுகின்றோம். )

யான் சொல்கின்றேன் அப்பனே மின்சாரக்கம்பியை பிடி என்று, (நீ) பிடித்து விடுவாயா என்ன?

அடியவர்:- இல்லை ( பிடிக்க மாட்டேன் )

குருநாதர்:- அப்பனே இங்கு பக்தி பொய் ஆகிவிட்டதப்பா. என் அகத்தியன் சொன்னால் யான் (மின்சாரக்கம்பியை) பிடிப்பேன் என்று எங்கப்பா நீ சொன்னாய்.

அடியவர்:- அமைதி

குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் யான் காப்பாற்றி விடுவேன். பயந்து நின்றால் எப்படியப்பா யான் காப்பாற்றுவது? இப்படித்தானப்பா மனிதர்கள் ஏதோ ஒரு சுயநலத்திற்காகவே வருகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள். எப்படியப்பா முடியும். அப்பனே இப்பொழுது புரிகின்றதா உன்னுடைய பக்தி என்னவென்று?.

அப்பனே அதனால் நம்பு. உன்னை நம்பு. நிச்சயம் என் அகத்தியன் கொடுப்பான் என்று. அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே.

அடியவர்:- சரிங்கய்யா.

குருநாதர்:- அப்பனே இப்பொழுது கூறு, மின்சாரத்தை தொடுவாயா என்ன?

அடியவர்:- தொடுவேன் ஐயா.

குருநாதர்:- அப்பனே இப்படித்தான் அப்பா பின் தெரியாமல் வாழ்ந்திட்டு அவ்கர்மத்தை சொன்னால்தான் அப்பனே  “ஓ!! இப்படியா”

என்று சொல்லிவிடுகின்றார்கள் மனிதர்கள். எப்படியப்பா இது? ஏன் தொடுகின்றாய் அப்பனே? கூறு.

அடியவர்:- அகத்தியர் காப்பாத்துவார்.

குருநாதர்:- அப்பனே முதலில் ஏன் இதை புரியப் படுத்தவில்லை. கூறு?

அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே, அவ் அறிவின்மையைதான் கொண்டு வருவதற்கே சில கஷ்டங்கள். இது நல்லவையா? தீயவையா? அப்பொழுது உந்தனுக்கு கஷ்டங்கள் வருவது நன்மையா? தீமையா? இதுநாள் வரை கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றதே பின் நன்மையா? தீமையா? கூறு அப்பனே.

குருநாதர்:- நன்மைதான் அய்யா.

அடியவர்:- அப்பனே பின் நன்மையாக செய்து விட்டேன் அல்லவா இப்பொழுது சந்தோசமா உந்தனுக்கு அப்பனே.

குருநாதர்:- ரொம்ப சந்தோசம் அய்யா.

அடியவர்:- அப்பனே அனைத்தும் கொடுத்து விட்டேன் அப்பனே போதுமா?

குருநாதர்:- போதும் அய்யா.

அடியவர்:- அப்பனே இதுநாள் வரையில் உந்தனுக்கு என்ன செய்து கொண்டிருந்தேன் அப்பனே கூறு?

குருநாதர்:- நன்மையே செய்து கொண்டு இருந்தீர்கள்.

அடியவர்:- அப்பனே, புரிகின்றதா? அமர். ( குருநாதர் அந்த அடியவரை இதுவரை நின்றதால் அமர உத்தரவு இட்டார்கள் )


குருநாதர்:- சரிங்க அய்யா. ( அடியவர் அமர்ந்தார்)

அடியவர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் )

குருநாதர்:- ( அடியவருக்கு அவர் விதி மாற்றம், கடுமையான கர்ம நிலை நீக்கம் குறித்த தனிப்பட்ட வாக்கு)

அடியவர்:- புரிந்தது ஐயா

குருநாதர்:- அப்பனே இதை எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள் அப்பா. பரிகாரங்கள் செய். பரிகாரங்கள் செய். தெரியாமலே செய்து கொண்டு இருப்பான் அப்பனே. அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதை கூட யாரும் தெரிவிக்க மாட்டார்கள் அப்பா. சித்தர்களால் மட்டுமே முடியும் என்பேன். அவை எல்லாம் உங்களுக்கு அனைத்தும் கற்பிக்கின்றேன் வரும் காலங்களில். அதனால் இப்பொழுது என்ன வகுப்பில் நீங்கள் (அனைவரும்) இருக்கின்றீர்கள் அப்பனே கூறுங்கள்?

அடியவர்:- முதல் வகுப்பு

குருநாதர்:- அப்பனே முதல் வகுப்புக்கே இன்னும் வரவில்லையப்பா நீங்கள்.

அடியவர்:- ( அமைதி )

குருநாதர்:-  அதனால் முதல் வகுப்பே பின் தேர்ச்சி பெற்றால் தான் இரண்டாவது வகுப்பு அப்பனே. அதனால் பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் அப்பனே.

அடியவர்:- அமைதி

குருநாதர்:- அப்பனே பூஜியத்தில் இருப்பவன் என்ன கேள்வி கேட்பான் தெரியுமா? எந்தனுக்கு அதைச்செய், இதைச்செய், எந்தனுக்கு கடன், எந்தனுக்கு துன்பங்கள், எந்தனுக்கு கஷ்டங்கள் என்று கேட்டுக் கொண்டு இருப்பான் அப்பனே. அவன் பூஜியத்திலேயே இருக்கின்றான் என்பேன் அப்பனே. இப்படி இருப்பவன் அப்பனே எப்படியப்பா யான் ஒன்று, இரண்டு என்றெல்லாம் (அடுத்த வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது?) அதனால் அப்பனே சில பக்குவங்கள் (துன்பங்கள்) பட்டு பட்டுத்தான் எழுப்பி நடந்திட வேண்டும் என்பேன் அப்பனே. குழந்தையும் கூட தானாகவே தானாகவே கஷ்டங்கள் பட்டு பட்டு எழும் அப்பா. ஆனால் உங்களுக்கு அறிவுகள் வந்துவிட்டது. நீங்கள் அப்பனே தானாகவே எழுந்திருக்க முடியவில்லையே. தன்னைத்தானே உணரவில்லையே. குழந்தைகூட தன்னைத்தானே உணர்ந்து பின் அடிபணிந்து (தவழ்ந்து எழுந்து) கீழே விழுந்து விழுந்து எழுந்து நிற்கின்றதப்பா. அதனால் நீங்களும் அடிபட்டு சிறிது எழுந்து நில்லுங்களப்பா. யான் வழி காட்டுகின்றேன். அமர்ந்து கொண்டே எந்தனுக்கு அதைத்தா இதைத்தா என்றால் யான் சொல்வேன் நீங்கள் அப்படியே அமர்ந்து கொள்ளுங்கள் என்று. புரிகின்றதா?

அடியவர்:-  அமைதி

குருநாதர்:-  அப்பனே உங்களை படைத்தது இறைவன் அப்பனே. அதை பின் எப்பொழுது தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா என்ன? நீங்கள் கேட்டுத்தான் பெற வேண்டுமா என்ன? ஆனாலும் குழந்தைக்கும் தன் தாய் பின் என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியும் அப்பனே. இல்லை என்றால் குழந்தை அழும். அது போலத்தான் அப்பனே இறைவனை குழந்தை அழுவதுபோல் இறைவா என்று அழையுங்கள் போதுமானது. இறைவன் உந்தனுக்கு என்ன தேவை என்பதை கொடுத்து விடுவான். அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே.  அதனால் புரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே தரித்திர மனிதர்கள் என்று எண்ணி அப்பனே யான் தலை குனிகின்றேன் அப்பனே. அதனால் தான் முதலில் தெரிய வைக்கின்றேன் அப்பனே. இப்படி வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று. பின்பு உரைக்கின்றேன் எப்படி என்று கூட. ( முதுகில் உள்ள கர்ம மூட்டை என்ற சுமை ) அதை உணர விடாமல் எப்படியும் வாழ முடியாதப்பா மனிதன். இப்படிப்போனாலும் துன்பம், அப்படி சென்றாலும் துன்பம், உட்காரந்தாலும் துன்பம், எழுந்தாலும் துன்பம் அப்பனே. இவை எல்லாம் ( உங்கள் முதுகில் உள்ள கர்ம மூட்டை ) எங்கு உன்னை விட்டு போகும் அப்பா? அதனால் சொல்லி விட்டேன் அப்பனே கர்மா எங்கு உள்ளது என்றால் உன் முதுகிலே இருக்கின்றதப்பா. அதை முதலில் இறக்கிவிட்டு செல் அப்பனே. அனைத்தும் நடக்கும். அதை வரும் காலங்களில் எப்படி இறக்கி வைப்பது எல்லாம் தெரியப்படுத்துகின்றேன் அப்பனே. அதை இறக்கி வைத்தால்தான் அப்பனே இன்பம்.  அதை இறக்காவிடில் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா. நிச்சயம் அப்பனே.

அடியவர்:- ( அமைதி )

குருநாதர்:- அதனால் அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே அப்பனே மனிதர்கள். அதனால்தான் இறைவன் கூட படைத்து விட்டோமே மனிதனை. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்று (வருத்தப்படும் அளவில் மனிதர்கள் நாம்….)

ஓர் நாள் அப்பனே மரணம். எப்பொழுது என்பதைக் கூட உங்களுக்கு தெரியாதப்பா. ஆனால் எங்களுக்கு தெரியும் அப்பா. சரியான இப்பொழுதெல்லாம் அனைவருக்குமே சொல்வேன் இந்நேரம் எவ்கிழமை எத்துணை இன்னும் வருடங்கள் இருக்கின்றது என்றெல்லாம் யான் சொல்லி விடுவேன் அப்பனே. நிச்சயம் என் பக்தர்களுக்கும் அதை ( சிவபதவி அடையும் நேரத்தை) யான் வரும் காலங்களில் ஞானத்தை பெற்றவனுக்கே யான் சொல்வேன் அப்பனே. சொல்லிவிட்டேன். இதனால் சித்தர்களை மிஞ்சியவர்கள் எவரும் இல்லையப்பா. ஆனால் சித்தர்களை வைத்து ஏமாற்றிவிட்டார்கள் அப்பனே அவ்வளவுதான் அப்பனே. இப்படியே ஏமாற்றிக் கொண்டிருந்தால் சித்தர்களே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் என்பேன் அப்பனே அதனால்தான் யாங்களே எங்களை பக்குவப்படுத்தி பின் யாங்களே வந்து பின் அனைவரையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கின்றோம் கஷ்டங்களை வைத்து இது தவறா?

அடியவர்:-  சரிதான் அய்யா

குருநாதர்:-  அப்பனே அனைத்தும் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. அப்பனே மனிதன்தான் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கின்றான். அதனால் ஒரு அடி கொடுத்து சரியான வழியில் செல் என்று யான் … இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே. இன்னும் வாக்குகள் பலமாகும் என்பேன் அப்பனே. சொல்லி எவை என்று அறிய அறிய பாவம் அப்பா மனிதன் தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே. அதனால் இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே அங்கு அங்கு வந்து எப்படி வாழவேண்டும் என்று எல்லாம் அப்பனே. அப்படி வாழந்திட்டாலே அப்பனே போதுமானதப்பா. மாற்றங்கள் எளிதில் நிகழும். ஆசிகள். ஆசிகள் அப்பா.

அடியவர்:- என் மகள் திருமணம்…

குருநாதர்:- ( பிரம்ம ரிஷி தனிப்பட்ட வாக்கு உரைத்தார்கள். அந்த வாக்குகள் நீக்கப்பட்டது)

அடியவர்:- அடியவர் மகள்

குருநாதர்:- அம்மையே ராகு கேதுக்கள் புரிகின்றதா?

அடியவர்:- புரியுது ஐயா

குருநாதர்:- அம்மையே ராகுவானவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் கடைசியில் அனைத்தும் எடுத்து விடுவான். நிச்சயம் மெதுவாக நடக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஐயா அப்பா எப்போது தங்களின் அடியார்களுக்கு சாப விமோசனம் பாப விமோசனம் கிடைக்கும் அப்பா தயவுசெய்து அருள் வாக்கு தாரும் இறைவா

    ReplyDelete
  2. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    படிக்கும் அனைவரும் தவறாது கடைபிடித்து உய்ய அய்யன் அருளவேண்டும்.மிக மிக நன்றி அய்யனே.

    ReplyDelete
  3. பணிவான வணக்கம் 🙏 குருநாதர் அகத்திய பெருமான் பெரும்பாலும் அருள்வாக்கில் வருங்காலங்களில் இரகசியத்தை எடுத்துரைக்கிறேன் என்று பலமுறை கூறிவுள்ளார் ஆனால் இன்று வரை ஒரு முறை கூட அவர் வெளிப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது ஏனெனில் மனிதனின் ஆயுள் காலம் மிகக்குறைவு காலம் கடந்து கொண்டே செல்லும் மேலும் நல்ல விசயங்களை உடனே வெளிப்படுத்த வேண்டும் அதுவே அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete
  4. @மணி: வணக்கம் அன்பரே இதே கேளிவயை மறைந்த அனுமன்
    தாசன் ஐயா அகத்தியர் அப்பாவிடம் கேட்ட பொழுது, "யாம் பின்பு உரைக்கிரோம் என்று கூற காரணமே, மனிதனால் புரிஞ்சு கொள்ள முடியாது என்பதால் தான்" என்று கூறினார்.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete