குருநாதர்:- அம்மையே எது என்று அறிய அம்மையே பற்று எதுனுடைய அறிய அறிய அம்மையே பின் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் முதலில் அம்மையே?
அடியவர்:- பற்றற்றவன் திருவடியை
குருநாதர்:- அம்மையே யார் பற்றற்றவன்?
அடியவர்:- இறைவன்
குருநாதர்:- தெரிகின்றதா? ஆனாலும் இதில் அர்த்தமும் உள்ளது. இறைவன் எவை என்றும் அறிய திருவாசகம் இன்னும் எதை எதையோ இன்னும் இதிகாசங்கள் அதில் இருக்கும் சரியான வழியெல்லாம் எடுத்துக் கொண்டு பின் (இதன் வழியில் நீங்கள் ) நடந்தால் அது தான் பற்று. இல்லை என்றால் அம்மையே வெற்று.
அடியவர்:- சித்தன் அருள் வலைதளத்தில் இருக்கக்கூடிய எல்லா விசயங்களையும் மக்களுக்கு எடுத்து உரைக்கலாமா?
குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் அதனால்தான் மனிதனை அறிவு கெட்டவன் என்று கூற அப்பனேஅதை மக்களுக்காகவே அதாவது சேவை செய்வதற்காகவே அப்பனே யான்
தீர்மானித்தது அப்பா. இவ்வளவு முட்டாள் இருப்பதை எங்கப்பா? அதனால் அவ் அம்மையும் கூட எப்படி இருக்கிறான் முட்டாள் என்று கூட அப்பனே திட்டுவாள்.
( சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள செய்திகளை அனைவருக்கும் வகுப்பு போல அனைவருக்கும் எடுத்து உரைக்கலாம். அது சேவைக்காகவே குருநாதரால் உண்டாக்கப்பட்ட வலை தளம் )
அடியவர்:- கோவிலில் கொங்கணர் வைக்கலாமா?
குருநாதர்:- அப்பனே இதையும் நேற்றைய பொழுது சொல்லி விட்டேன். அதாவது சித்தர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கிறார்கள் அப்பனே. அதனால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஆத்மார்த்தமாக அப்பனே. அதனால் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. எங்களுக்கு கூட ஆசைகள் இல்லை அப்பனே. மனதில் ( இறைவனை/சித்தர்களை ) வையுங்கள் என்று கூட நேற்றைய பொழுதுலே சொல்லி விட்டேன். ஆனாலும் அப்பனே தாராளமாக வைக்கலாம்.
ஆனால் அப்படி எது என்று அறிய அங்கு கொங்கணனே இருக்கின்றான் என்பேன் அப்பனே, எவை என்று தெரியாமல் தான் கேட்கிறேன் அப்பனே.
அடியவர்கள்:- ( சில உரையாடல்கள் )
அடியவர்:- ( அம்மை ஒருவர்) ஆனா இப்ப உருவ வழிபாடுக்கும் உத்தரவு வந்திருக்கு.
குருநாதர்:- அம்மையே சிலவற்றுக்கு மட்டுமே உண்டு. அம்மையே சிலவற்றுக்கு இல்லை.அம்மையே சிலைகளுக்கும் உயிர் உள்ளது. ஆனாலும் எப்படி உயிர் இருக்கும் கூடு விட்டு கூடு பாயும் வித்தை இதனால் சில தளங்களில் கூட இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றது தாயே சிலைகள் மூலமே. அதை தொட்டால் பாவம் கரைந்து விடும். ஆனாலும் நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால் நானே சொல்வேன் வருங்காலத்தில். அம்மையே அப்பொழுதெல்லாம் மக்களுக்கு நல்லது செய்ய சித்தர்கள் அப்படியே கல் ரூபமாகவே இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடுவார்கள் அம்மையே. இதனை பற்றியும் விவரமாக குறிப்பிடுகின்றேன். எங்கெங்கெல்லாம் அப்படியே நிற்கின்றது அருவமாக என்று அம்மையே ஆனால் அங்கு தொட்டால் வினைகளும் நீங்கும்.
மோட்சம் கிட்டும் தாயே. இதனால் சாதாரணமில்லை திருத்தலங்களை. தன்னிடம் உள்ள ஆசையை அறுத்து அறுத்து அம்மையே எவையென்று பின்பற்றி பின்பற்றி அம்மையே (இது எல்லாம்) தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலே அம்மையே ஒன்றும் லாபம் இல்லை. அதனால்தான் நாங்களே சில கஷ்டங்களை மனிதனுக்கு வைத்து வைத்து எதை என்றும் புரியும் அளவிற்கு கூட அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம். அம்மையே கவலையை விடு.
அடியவர்:- பாலாலயம் செய்கிறோம் சொல்லி என்னமோ பண்றாங்கயா. அப்ப அந்த சிலைக்கு வந்து ஒன்னும் இல்ல மகிமை அந்த இதெல்லாம் இல்ல அப்டின்றாங்க. ஆனா நம்மள தொட்டு போய் கும்பிட சொல்றாங்க. ஆனா அப்படித் தொடுரப்போ ஒரு ஈர்ப்பு இருக்கேன்னு அந்த சிலையில…
குருநாதர்:- அம்மையே இதை இப்பொழுது தான் சொன்னேன்.
அடியவர்:- இல்ல அவங்க சொல்றாங்க. பாலாலயம் பண்ணினாங்க. அதை ( சிலைக்கு உயிர் கொடுத்ததை) எடுத்துட்டோம் அப்டின்னு சொல்றாங்க?
குருநாதர்:- அம்மையே எப்படியம்மா எடுக்க முடியும். இவையெல்லாம் அம்மையே ஒரு மனிதனின் உயிரை எடுக்கச் சொல்லு பார்ப்போம்.
அடியவர்:- அம்மா, பாலாலயம் பண்ணலாம். அத எடுக்க முடியாதம்மா.
கேள்வி கேட்ட அடியவர்:- அத அவங்க அப்படி சொல்ராங்க வழக்கம் எடுகின்றேன்னு…
அடியவர் 2:- (சிலைக்கு கொடுத்த உயிரை ) எடுக்க முடியாதம்மா
அடியவர் 3:- எடுக்க முடியாது
அடியவர்:- பாலாலயம் அப்டின்றது, அதுக்கு அபிஷேகம் பன்றாங்க இல்ல …அது கிடையாது
( பல அடியவர் உரையடல்கள்…)
அடியவர்:- ( ஒரு ஆலயத்தில் கட்டுமான பணி குறித்து அங்கு ) அகஸ்தியர் வந்தாச்சா?
குருநாதர்:- அப்பனே யான் அங்கே சொன்னேனே அகத்தியன் வாக்கு வாக்குத்தான் அப்பனே.
அடியவர்:- பணி வேகமாக நடக்குது…
குருநாதர்:- அப்பனே இனிமேல் அதாவது அப்பனே வேகமாக உனக்கு வயது ஏற்றலாமா என்ன அப்பனே?
அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )
அடியவர்:- ஏத்திடுங்க …
குருநாதர்:- அப்பனே ஆனால் உன்னை நம்பி இதை குடும்பத்தோடு வந்து கேட்டால் அப்பனே யான் சொல்லுவேன் அப்பனே. தனியாக வந்து கேட்டு இருக்கின்றாயே?.
அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )
அடியவர்:- அது கரக்ட்தான் (சரிதான்)
குருநாதர்:- அப்பனே அப்படி நீ சொல்லலாம் அப்பனே. உங்கள் இல்லத்திலிருந்து கேட்டால் அப்பனே சொல்லுவார்கள் அப்பனே.
அடியவர்:- சாமி நான் யார் என கேட்டால் அது அதுவாக இருக்கின்றது…
குருநாதர்:- அப்பனே நிறைய நீ தனி என்று அப்பனே ஒரு 20 வருடத்திற்கு முன்பு ( திருமணத்திற்கு முன்பு ) சொல்லியிருந்தால் அப்பனே யான் ஏற்றுக்கொள்வேன்.
அடியவர்:- 20 வருசத்துக்கு முன் இல்ல, இதுக்கு பிறகும்..
குருநாதர்:- அப்பனே உன்னை நம்பிக் கொண்டிருப்பவர்களை நீ காப்பாற்றமாட்டாயா என்ன, நீ தனியாள் என்று சொல்லிவிட்டாய் அப்பனே. அப்பனே, தனியாக பிரித்து விடட்டுமா உன்னை?
அடியவர்:- ரொம்ப நல்லது. ( சில விரக்தி பதில்கள்)
குருநாதர்:- அப்பனே வாய் ஏதாவது பேசலாம் அப்பனே.ஆனால் இருக்க முடியாது அப்பா.
அடியவர்:- இல்ல ஜீவாத்மாகிட்ட ( கடவுள்/அகத்தியர் இடம்) நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ( சில தனிப்பட்ட வருத்தங்கள்/விரக்திகள் உரையாடல்கள் …)
குருநாதர்:- அப்பனே நம்பாமல் ஊர் சுற்றுவாயா? பார்ப்போம். அப்பனே இல்லத்துக்கு செல்லாமல் இரு அப்பொழுது புரியும் உன் நாட்டம் என்னவென்று அப்பனே எதை என்றும் அறிய அறிய.
அடியவர்:- ( இந்த பிறவி ) கர்மாவ தொட்டு தொட்டு , ஒருத்தன் நான் இல்லற யோகி என்று சொல்கின்றான். ஒருத்தன் நான் கர்ம யோகி என்று சொல்கின்றான்.,,
குருநாதர்:- அப்பனே (அடியவர் குறிப்பிட்ட) அவன் பொய்கள் அப்பா. நீ கூட சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. மற்றவர் நம்ப போவதில்லை. இதனால்தான் அறிவு கெட்டவனாக இருக்கின்றான் மனிதன். அதனால்தான் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து உண்மை நிலையை உணருங்கள் என்று கூற அப்பனே எப்படி அப்பா ஒரு மனிதன் கர்ம ஞானியாக ஆகலாம் என்று , சித்தனாக ஆகலாம் என்று அப்பனே. சிந்தன் என்றால் அப்பனே பறக்கச்சொல் பார்ப்போம்.
கர்மா என்றால் கர்மா வீரன் என்கின்றானே அப்பனே எதையும் அவனால் அதாவது கருமா எது என்று கூற அப்பனே வென்றவன் தான் என்பேன் அப்பனே. முதலில் நீ சொன்னாய் அல்லவா அவனிடத்தில் எடுத்து சென்று என் கர்மாவை நீக்கு என்று சொல் பார்ப்போம்.
அடியவர்:- அவருக்கு தெரியலையே… ( கர்மாவை நீக்க )
குருநாதர்:- அப்பனே அப்போது கேட்க கூடாது என்பேன்.
அடியவர்:- சாமி நாங்க யார்கிட்டயும் கேட்க முடியாது. ஏன் என்றால் நாங்கள் மனிதர்கள் ..எல்லாம் ஆசை….
குருநாதர்:- அப்பனே அதனால் இப்பொழுது புரிகின்றதா? மனிதன் அப்பனே தெய்வமும் ஆக முடியாது.
அப்பனே வித்வான் ஆகவும் ஆக முடியாது. அப்படி ஒன்றும் ஆக முடியாது அப்பா. அப்பனே பின் ( ஏதாவது இருந்தால் ) ஒரு மாதம் கழித்து உருப்படி இல்லாமல் சென்றவனுக்கு அப்பனே இன்னும் கர்ம வீரனாம் இன்னும் எதை எதையோ வித்வானாம் இன்னும் அப்பனே எவை எவை பட்டம் அப்பா. அப்பனே கீழே விழுந்தால் தூக்கக்கூட ஆள் இல்லையப்பா.
அடியவர்:- ……….
குருநாதர்:- அப்பனே அதனால் இறைவன் கஷ்டங்கள் கொடுப்பது சரியா தவறா?
அடியவர்:- சரி
குருநாதர்:- அப்பனே புரிந்து கொண்டாய் அல்லவா? நிச்சயம் அனைவருக்குமே கஷ்டங்கள் கொடுத்துத்தான் வரும் காலங்களில் அழிப்பான் இறைவன்.
அடியவர்:- ( ஒரு பாழடைந்த சிவன் ஆலயம் அதனை புதுப்பிப்பது குறித்த கேள்வி)
குருநாதர்:- அப்பனே நீங்கள் விரும்பினாலும் அப்பனே இதை க்கூட சொல்லிவிட்டேன் அப்பனே. சிறிது காலத்தில் இறைவனே விரும்புவான் அப்பனே. ஈசனை தன்னை யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்று அமைத்துக் கொள்வான் அப்பனே. அதி விரைவிலேயே யானும் வருகின்றேன் அங்கு.
அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி )
குருநாதர்:- அப்பனே _____________
அடியவர்:- நான் கேட்ட குடும்பத்துக்கு ஐயா வோட ஆசிர்வாதம்
குருநாதர்:- அம்மையே ஆனாலும் அனைவருமே அங்கு சென்று இங்கு சென்று பொய்கள் கூடும் இடத்தில் தான் அம்மையே காசுகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மை சொன்னால் பொய் என்று சொல்வார்கள் நம்ப மாட்டார்கள். அதனால் தாயே சொல்லவில்லை தாயே ஆசிகள்.
அடியவர்:- நான் அந்த பையனுக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க போகுது
குருநாதர்:- எது என்பதை அறிய அம்மையே என்னுடைய ஆசிகள் என்று சொல்லிவிட்டேன்.
அடியவர்:- Rheumatoid arthritis ( முடக்கு வாதம்) அதுக்கு மருந்து சொல்லுங்க.
குருநாதர்:- அப்பனே எவன் என்று அறிய இவை எல்லாம் சில காலங்கள் பொறுத்தே யான் சொல்லுவேன்.
அடியவர்:- ஐயா எனக்கு வாக்கு வேண்டும்.
குருநாதர்:- அப்பனே இவன் வாழ்க்கை பற்றி எது என்றும் அறிய அறிய ஆனால் பிரம்மா இவன் வாழ்க்கையே ஏதும் இவன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கர்மா என்று எழுதி வைத்து விட்டான். ஆனால் அதை மீறி என்ன என்ன செய்தான் என்பதை க்கூட. ஆனால் அப்பனே புரிகின்றதா? அப்பனே.
நாடி அருளாளர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் இந்த பதில் குறித்து விவாதித்தனர் )
அடியவர்:- அதையும் மீறி அவர் செஞ்சாருன்னா அது விதி தானே. விதியில எழுதி இருக்கு ஆனால் விதிய தாண்டி செய்ராரு?
குருநாதர்:- அப்பனே இல்லை அப்பா. இது தான் சூட்சுமம். இவன் விதியில் அப்பனே ஒன்றைச் சொல்கிறேன். ஆனால் அப்பனே இவன் விதியில் என்ன உள்ளது என்பதைக்கூட. ஆனாலும் அப்பனே ஏசுநாதன் இருக்கிறானே அவனுடைய சீடன்தானப்பா அப்பா இவன். ஆனாலும் ஏசு நாதனே இவனுக்கு பல கஷ்டத்தை கொடுத்தான். அப்பனே ஆனாலும் கஷ்டத்தைப் பொறுக்க கொள்ளாமல் அப்பனே வந்து விட்டான் அங்கிருந்து. ஆனால் அப்பனே பிடுங்கிக் கொண்டது அனைத்தும் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே இறைவனும் சோதனை செய்வான் அப்பனே பின். அப்பனே எது என்று அறிய இதிலிருந்து புரிகிறதா? அப்பனே விதி கூட அவை தன் இருந்தாலும் அப்பனே இவன் எதற்கு சரியானவன் என்று இறைவன் தேர்ந்தெடுத்து அப்பனே மாற்றும் தகுதி கூட இறைவனுடத்தில் இருக்கின்றது.அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. தேர்வை அப்பனே நிச்சயம் ஒரு மாணவன் எழுதுகின்றான். ஆனாலும் அப்பனே ஒரு ஆசிரியன் விருப்பப்பட்டால் இவனுக்கு நன்றாக அதாவது தோராயமாக இன்னும் அதிகளவு கொடுத்து விடுவோம். இன்னும் குறைத்து விடுவோம் என்று அப்பனே ( மாணவனின் மதிப்பெண் ) யார் கையில் இருக்கின்றது அப்பனே? ஆசிரியர் நினைத்தால் அப்பனே எதை வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே. அதே போலத்தான் விதியை எழுதியவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே.அப்பனே புரிகின்றதா? அப்பனே அதனால் உன் விதியில் அப்பனே எது என்று மாறிய பின் அதாவது ஏதும் புரிகின்றதா யான் சொன்னேன். ஆனால் இதை ஏசுநாதன் சரியாக உன்னை கெட்டியாக அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே சில சோதனை செய்தான் அப்பனே. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை அப்பா நீ.
நாடி அருளாளர்:- அப்போ ஒரு காலத்துல ஏசுநாதனுடனேயே இருந்து இருக்கீங்க நீங்க. ஐயா இது சத்தியம்.
அடியவர்:- சரிங்கய்யா.
குருநாதர்:- அப்பனே இதனால் அங்கும் இங்கும் எதை என்று அறியாமலேயே பணம் சேர்ப்பதற்கு அப்பனே ஆனாலும் ஏசு நாதனுக்கே கோபம் வந்துவிட்டது அப்பா.
அடியவர்:- விதிக்கு மாற்று ஒன்று இருந்தால் அது இறைவன் தான்.
அடியவர்:- அதனால் எழுதியவருக்கு எதை வேண்டுமானாலும் செய்ய தெரியும்.
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பா வந்தது வினை அப்பனே. அதனால் சில காரியங்கள் கூட செய்தாய் என்பேன் அப்பனே விதியில் இல்லாத்தைக் கூட அப்பனே எவை என்று புரியாமல் கூட பிற ___________( சில தனிப்பட்ட கர்மாக்கள் எடுத்து உரைத்தார்கள் ) என்ன லாபம் அப்பனே.
அப்பனே அதை வைத்துக்கொண்டு எதை எதையோ ஆனாலும் அப்பனே பொறுத்து இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே விதியைக் கூட அப்பனே பின் உன்னை ஆட்கொண்டானே ( ஏசுநாதன் ) அவனே அப்படியே விட்டுவிடுவான் பொறுத்தாக வேண்டும் நீ. ஆனாலும் எதற்கும் பயப்பட தேவையில்லை. நன்முறைகளாகவே பயம் என்பது உன் உள்ளத்தில் அப்பனே பயம், தவறு செய்துவிட்டோமே என்று அனைவருக்குமே அப்படித்தான் பயம் அதனால் அப்பனே அழகாகவே அப்பனே உந்தனை பின் பக்குவப்படுத்தும் திறன் ஏசுநாதன் அவன் கைகளிலே இருக்கின்றது.
அடியவர்:- நான் அகத்தியர்….
குருநாதர்:- அப்பனே இது நாள் வரை அதாவது இதுவரை அப்பனே என்ன நீ எதைப் பிடித்தாலும் அப்பனே சரியாக புடி. அப்பனே பின் அதாவது உண்மையாக வாழ். அப்பனே அனைத்து தெய்வங்களும் ஒன்றி வரும். ஆனாலும் தெய்வங்களும் கூட ஏற்கனவே அப்பனை ஒன்றே குலம் ஒருவனே தேவன் இவையெல்லாம் யான் எடுத்துரைக்கின்றன். அதனால் அப்பனே பின் கருணை உள்ளவனாக , எதற்கும் ( யாருக்கும், எந்த ஒரு ஜீவராசிகளுக்கும் ) தீங்கு செய்யாதவனாக , நன்மை ( மட்டுமே ) மற்றவர்களுக்கு ( செய்பவனாக ) அப்பனே இவ்வாறாக இருந்தாலே அப்பனே நீ எதனை ( எந்த தெய்வத்தை ) வணங்கினாலும் அப்பனே குற்றங்கள் இல்லை.
( இந்த வாக்கு மதங்களை கடந்த சித்த வாக்கு என்பதை உள் வாங்கவும் )
அடியவர்:- அந்த வேலை செய்ய பிடிக்கவில்லை…
குருநாதர்- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே பின் ( ஏசுநாதன் உன்னை ) ஆட்கொண்டு, அப்பனே உன் பாதையில் நீ செல் பார்த்துக்கொள்வோம்.
அடியவர்:- சரிங்க ஐயா. இப்ப சும்மா தியானத்தில் உட்கார்ந்தோம்னா ஏதோ சம்திங்…
குருநாதர்:- அப்பனே தியானத்தில் எப்படி உட்கார வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லாம் தெரியாமல் செய்தாலும் கூட அது தியானமே இல்லையப்பா. இது நாள் வரை நீ செய்தது தியானமே இல்லையப்பா.
அடியவர்:- ( தியானத்தில்) சில எண்ணங்கள் மாறி வருது….
குருநாதர்:- அப்பனே எண்ணங்கள் எதனால் வருகிறது?. இதனால் நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் உன்னுடைய விதி கூட இறைவன் சோதித்தது. ஆனாலும் எவை பின் எவை பின் வருவதாக இருந்தாலும் ஆனாலும் அளவுக்கு தகுந்தாற்போல் சில வழிகள் நீ பொறுத்தே ஆக வேண்டும் அப்பனே மாற்றம் அடையும்.
நாடி அருளாளர்:- கொஞ்சம் பொறுத்து இருங்க ஐயா. தானாகவே மாற்றம் வரும்.
அடியவர்:- இல்ல என்ன சொல்ரது, (இங்கு) guidance பன்றேன்னு சொன்னாங்க வர்ரேனாங்க..
குருநாதர்:- அப்பனே இவனை ( இந்ந நாடி கேட்க இங்கு ) அழைத்தவன் யார்? இவன் தனக்கு சொன்னவன் யார்? வரச்சொல்.
நாடி அருளாளர்:- ( இந்த அடியவரை அழைத்த அடியவரை அகத்தியப்பெருமான் பாதத்தின் ( நாடியின் ) முன்வர அழைத்து அமரச்சொன்னார்கள். அதன்பின்….)
குருநாதர்:- அப்பனே இது நாள் வரை யான் பல கருத்துக்களை இவன்தனக்கு அதாவது அனைவருக்குமே சொல்லி இருக்கின்றேன். அதை இவன் இடத்தில் சொன்னாயா இல்லையா? நீ.
அடியவர் :- சொன்னோம் ஐயா.
குருநாதர்:- அப்பனே நீயே கேளு அவன் இடத்தில் அதை எல்லாம் ஏன் பின்பற்ற வில்லை என்று?
அழைத்து வந்த அடியவர்:- ( கேள்வி கேட்டார் )
குருநாதர்:- அதனால் அப்பனே சில மனிதர்கள் தன் மீது குறைகள் வைத்துக் கொண்டு பின் இறைவனை நிந்தித்தால் என்ன லாபம்? அப்பனே பின் எழுந்து நில்.
அடியவரை அழைத்து வந்த அடியவர்:- ( எழுந்து நின்றார்கள்)
குருநாதர்:- அப்பனே சில சில வழிகளை கூட அப்பனே அவனதனக்கு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடு முதலில்.
(குருநாதர் கேள்வி கேட்ட அடியவரை அழைத்து வந்த அடியவரை சில அறிவுரைகள் சொல்ல சொன்னார்கள். அனைவரும் கவனிக்கவும் - ஒருவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று ஏதாவதை நல்லது சொல்லி கற்றுக்கொடுத்தால் அதுவே முதல் உயர் நிலை புண்ணியம். இங்கு முதன் முதலில் நமது காலத்தில் இந்த அற்புத நிகழ்வு அகத்திய பிரம்ம ரிஷி முன் ( நாடியின் முன்னே நேரடிப்பார்வையில் ) நடந்து உள்ளது என்பதை அடியவர்கள் உணர்க. முதல் வகையான புண்ணியம் அதன் அரங்கேற்றம் அழைத்து வந்த அடியவர் உரைக்க அங்கு ஆரம்பமானது….)
அழைத்து வந்த அடியவர்:- ஐயா இறைவனே கதி என்று சரணாகதியாக இருக்கனும். எதையும் ( இறைவனிடம் / வாழ்க்கையில் ) எதிர்ப்பார்க்க கூடாது. குருவே நமக்கு திருவருளை கூட்டி ( பெற்று ) கொடுப்பார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவன் பார்த்துக்கொள்வார் என்ற சரணாகதியில சிவார்பணம் என்ற தத்துவத்திலேயே எல்லாம் இறைவன் நம்மை வழி நடத்துகின்றார் என்று நமக்குள் இருந்து எண்ணமாகவும், சொல்லாகவும் செயலாகவும், 22,000 நாடி நரம்புகளில் இருந்து ரத்தங்களிலும், சதைகளிலும் எல்லாமே அந்த இறைவனே , குருவே நின்று (நம்மை) வழிநடத்துகின்றார்கள் என்ற பாதையில் நம்ம பயணிக்கனும்.
( இப்போது அங்கு உள்ள அடியவர்கள் அனைவருக்கும் இந்த உரை சென்று அடைந்ததால், உரைத்த இந்த அடியவருக்கு உண்டானது - மிக உயர் வகை முதல் நிலை புண்ணியம் என்பதை உணருங்கள் அடியவர்களே. ஏழை எளியோருக்கு இந்த உலகில் நல்லது சொல்லி அவர்கள் நன்கு தர்ம வாழ்க்கை வாழ கற்றுக்கொடுங்கள். முதல் தர உயர் நிலை புண்ணியங்கள் பெறுங்கள். இது குறித்து குருநாதர் முன்பு உரைத்த வாக்கு:- ஏழை எளியோர்கள் அப்பனே அவர்களுக்கு சேவை செய்வது பெரும் புண்ணியமப்பா. )
குருநாதர்:- அப்பறம் எது என்று அறிய என்னைக் கேட்பதை போல் அவனிடத்தில் நீ கேள்.
( இங்கு குருநாதர் - கேள்வி கேட்ட அடியவர் , இவரை அழைத்து வந்த அடியவரிடம் கேள்வி கேட்க உத்தரவு இட்டார். இதனிடையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று மற்றவரு புதிய அடியவர் எடுத்து உரைக்க, உடனே குருநாதர் இந்த புதிய அடியவரை நோக்கி பின்வருமாறு உரைத்தார்கள் )
குருநாதர்:- அப்பனே பின்னே திரும்பு. பின் அவன் கேட்கவில்லை அவன்.அவனையே ( புதிய அடியவரை கேள்வி கேட்ட ) இவன் தனக்கு எடுத்துரைக்க சொல்.
( இந்த புதிய அடியவரை முன்னர் கேள்வி கேட்ட ஏசுநாதரின் முன்நாள் சீடருக்கு எடுத்து உரைக்க ஆணை இட்டார்கள்)
புதிய அடியவர்:- ( ஏசுநாதரின் பூர்வ ஜென்ம சீடருக்கு உரைக்க ஆரம்பித்தார் ) குருநாதர் சொன்னதுதான். முன்னொரு வாக்கில் சொல்லி இருக்காங்க. குருநாதர் ஒரு ஆறு ஏழு செய்லகளை செய்ய சொல்லி இருக்கின்றார். அவை…
1. அதிகாலை 3 மணிக்கு எழுந்து தியானம் செய்ய வேண்டும். சரிங்களா. அமைதியாக உட்காருங்க. தியானம் தானாக வந்து விடும். நம்மளுடைய ஆன்மா நமக்குள்ள அமைதிய கொண்டு வந்துடும். தினமும் 3 மணிக்கு. குருநாதர் சொன்னதுதான். அதுக்கு அப்புறம்
2. காலையில பசு மாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கி கொடுத்திடுங்கள். வாரத்துக்கு ஒரு முறை உங்க கையால கொடுங்க
3. இரவு படுக்கும்போது இறைவனுடைய நாமத்தை உச்சரிச்சிகிட்டு, பாட்டு படிச்சுகிட்டு உறங்குங்க.
4. உங்களால இயன்ற அளவுக்கு பிற உயிர்களுக்கு நன்மை செய்யுங்க. நன்மை செய்யாவிடிலும் தீமை செய்யாதீங்க.
இதை எல்லாம் நீங்க செஞ்சுகிட்டு வந்தாலே தானாகவே எல்லாம் சரி ஆகிவிடும். இது எல்லாம் குருநாதர் சொன்னது.
முன்பு கேள்வி கேட்ட அடியவர்:- பணி மாற்றம் வருமா?
குருநாதர்:- அப்பனே இதையும் அவனிடத்தில் ( புதிய அடியவரிடம் ) கேள்.
புதிய அடியவர்:- இதெல்லாம் நீங்க செய்ய செய்ய தானாகவே ( பணி மாற்றம் ) நடக்கும். நீங்க எதுவுமே கேட்க தேவை இல்லை.
கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல இது எல்லாம் வந்து ….( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம்ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )
புதிய அடியவர்:- அப்டின்னா இன்னும் ( புண்ணியம் ) பத்தவில்லை. என்ன சொல்கின்றேன் என்றால் நாம செய்கின்ற தான தர்மங்கள் ( அதன் மூலம் நினைத்த காரியம் ) நடக்கவில்லை என்றால் இன்னும் கர்மா வலிமையாக உள்ளது. இன்னும் தான தர்மங்களை அதிகப்படுத்தனும். அப்படி என்றால்தான். அப்படி என்றால்தான் புண்ணியம் சேரும். நீங்க நினைப்பது நடக்கும்.
கேள்வி கேட்ட அடியவர்:- கர்ம காரியங்களில் அதிக ஈடுபடும்போது புண்ணியங்ஙள் அதிகமாகும், எல்லாமே நடக்க ஆரம்பிக்கும். .( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம் ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )
குருநாதர்:- அப்பனே இவன் தனக்கும் ஒரு மந்திரத்தை கொடுத்தேன். அதை அப்பனே சொல்லி கொடு.
( சில உரையாடல்கள்)
கேள்வி கேட்ட அடியவர்:- இப்ப சொல்லாம்னு எடுத்தேங்க ஐயா ( ஆனால் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க வில்லை)
குருநாதர்:- அப்பனே இதுபோலத்தான் அப்பனே உண்மையை சொன்னால் யாரும் ஒத்துக் கொள்வதே இல்லை அப்பனே ஆனால் பொய் சொன்னால் ஓடி ஓடி ஏமாந்து விடுவார்கள். அங்க ஏமாந்துட்டு அப்பனே ஏமாந்து விட்டோமே அனைத்தும் பொய்யே என்று அதனால் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
சித்தன் பேச்சை பின் யாருமே கேட்பதில்லை. அப்படி கேட்காவிடில் யான் எப்படி ( நாடி வாக்கு உரைக்க ) வருவேன் அப்பா?
(சில அடியவர் உரையாடல்கள். இந்த அடியவர் மந்திரம் சொல்கின்றேன் என்று சொன்ன உடன்)
குருநாதர்:- அப்பனே கூறு. எத்தனை முறை என்று?
அடியவர்கள்:- ஒரு நாளைக்கு எத்தனை முறை ஜெபிக்கின்றீர்கள்?
கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு பதில் )
குருநாதர்:-அப்பறம் எதை என்று அறிய அப்பனே போய் பார் அப்பனே உடனடியாக நாளையில் இருந்து. பார்ப்போம்.
கேள்வி கேட்ட அடியவர்:- (……)
குருநாதர்:- அப்பனே எது என்று அறிய இல்லையப்பா.
நாடி அருளாளர்:- தினமும்…
கேள்வி கேட்ட அடியவர்:- சொல்கின்றேன்…
குருநாதர்:- அப்பனே நிச்சயம் இல்லையப்பா.அப்பனே சொல் அனைவரிடத்திலும்.
கேள்வி கேட்ட அடியவர்:- ( குருநாதர் உரைத்த மந்திரத்தை அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)
குருநாதர்:- அப்பனே இது சரியா?
கேள்வி கேட்ட அடியவர்:- ( குருநாதர் உரைத்த மந்திரத்தை இரண்டாம் முறையாக அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)
குருநாதர்:- அப்பனே சரியாகவே சொல்லிக்கொண்டு வா அப்பனே. நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் என்பேன் அப்பனே.
கேள்வி கேட்ட அடியவர்:- உயர்வுகள் ஏற்படுமா?
நாடி அருளாளர்:- ஏற்படும் ஐயா
குருநாதர்:- அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன மந்திரங்கள் அப்பனே. எதையுமே பின்பற்றவில்லை. முதலிலேயே இவன் தனக்கு யான் சொன்னேன். இதை கூட பின்பற்றவில்லை.
கேள்வி கேட்ட அடியவர்:- வாய்ப்பு கிடைக்கலைங்க.
குருநாதர்:- அப்பனே அதனால் யான் சொல்லியதை சரியாக கடைப்பிடிக்காவிடில் அப்பனே எப்படி அப்பா மீண்டும் வந்து (வாக்கு) சொல்லுவது? அப்பனே உன் விதியை கூட மாற்ற வேண்டும். எங்களால் மாற்ற இயலும் ஆனால் யாங்கள் சொல்வதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் தான் மாற்ற முடியுமே தவிர பின் யாங்கள் எத்தனையோ வகை வேலைகள் அப்பா எங்களுக்கு. மனிதர்களை பல மனிதர்களை பக்குவப்படுத்த. அது தெரியாமலே அது சிலருக்கே கிடைத்துள்ளது என்றால் அப்பனே புண்ணியம் தான் அதைக் கூட சரியாக பயன்படுத்தவில்லை என்றால் என்ன என்றால் அப்படியே இன்றைய சூழலில் அப்பனே காசுக்காக மனிதன் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான், அதை செய்கிறேன் இதை சரி படுத்துகிறது. இவ் மந்திரத்தைச் சொன்னால் அவை நடக்கும் என்றெல்லாம். அப்பனே எங்கள் அருள் இருந்தால் தான் அனைத்தும் நடக்கும் அப்பா இல்லை என்றால் ஒன்றும் நடக்காது அப்பா. கருமம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் கடைசியில் அப்பனே விதியில் இல்லாத்தை கூட. அவன் விதியில் என்ன உள்ளதே என்று கூற கஷ்டங்கள். அதைக்கூட உன்னிடத்தில் பாதி அளவு கொடுத்து விடுவான் அப்பனே. சேர்ந்து அனுபவிக்க வேண்டியதுதான் கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.
கேள்வி கேட்ட அடியவர்:- _______
குருநாதர்:- அப்பனே அதனால் நல்வாழ்க்கை உண்டு. நீயேதான் கெடுத்துக் கொண்டாய் உந்தனை. அப்பனே இங்கு விதியா? மதியா? அப்பனே விதி கூட நிச்சயம் மதியால் ஜெயிக்க முடியும் அப்பனே. மதியினால் ஜெயிக்க உனக்கு நிச்சயம் வாய்ப்புகள் கொடுத்தால், அது சரியாகவே பயன்படுத்திக் கொள்ளவில்லை நீ.
புதிய அடியவர்:- நீங்கதானே கேட்டீங்க..
கேள்வி கேட்ட அடியவர்:- இப்போ எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா.
குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாயே எந்தனுக்கு பணி வேண்டும் என்று (கேள்வி கேட்ட) அப்பனே. ( புதிய) அப்பனே பளார் என்று ( கேள்வி கேட்ட அவனை) அறை.
கேள்வி கேட்ட அடியவர்:- இப்ப எனக்கு பணிகள் ஒரு விசயம் கிடையாதுங்கயா
குருநாதர்:- அப்பனே எதுவுமே வேண்டும் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி இருந்தால் இத்துன்பத்திற்கு அப்பனே ஆளாக முடியாது அப்பா. அதனால் அப்பனே எது என்று புரியாமல் கூட அப்பனே திருமணம் வேண்டும் வேண்டும் என்று எல்லாம் பின் சித்தனாக கூட அதனால் அப்பனே முதலில் அமைதியாக பொறுத்து இரு. தியானங்கள் செய் போதுமானது அப்பனே. யாங்கள் உனக்கு எப்படி வாழ்க்கை தரமுடியும் என்பதைக்கூட யாங்கள் தருகிறோம். அப்பனே மனம் அப்படியே அலைபாயுது அப்பா. அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்போதே பிரம்மன் எழுதி வைத்து விட்டான் அப்பனே இளவரசனாக இருந்து அப்பனே ( பூர்வ ஜென்ம கர்மா அதன் விளக்கம் ____________________ _______ ______ ) அப்படி இருப்பினும் ஏசுநாதன் கருணை கொண்டு உன்னை மாற்ற எண்ணினான். ஆனாலும் அப்பனே. அவ் ஆன்மா ( பழைய அதே கர்மத்தை ) நோக்கித்தான் சென்று அடைந்தது. யான் மாற்றுகின்றேன் பொறுத்திருக்க.
( சில கடுமையான பூர்ம ஜென்ம கர்மங்கள் இந்த அடியவரை பின் தொடர்கின்றது. மனித ரூபத்தில் பழி தீர்க்க பிறந்து உள்ளது என்று விரிவாக எடுத்து உரைத்தார்கள். ) அதில் இருந்து முதலில் காத்துக்கொள். யாங்கள் காப்போம்.
அடியவர்கள்:- ( நீன்ட அமைதி இந்த பூர்வ ஜென்ம கர்ம சூட்சுமங்களை கேட்டு )
ஒரு அம்மை அடியவர்:- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
குருநாதர்:- அப்பனே ஒன்றும் செய்ய தேவையில்லை. இதற்கு காரணம் எந்த மாதிரி அப்பனே இப்போது தான் சொன்னேன். ( சில பரிகார விளக்கங்கள்) யானே முடிவெடுத்து அப்பனே தெரிந்து கொள், யாங்கள் தான் மாற்ற முடியும் சொல்லிவிட்டேன் பொறுத்திருக்க.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா மாந்தீரீகம்…? ( அதன் பாதிப்பா)
குருநாதர்:- அப்பனே அவை எல்லாம் ( சித்தர்கள் ) எங்கள் இடத்தில் வேலை செய்யாத அப்பா. சித்தர்களை நம்பு.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயாவேட திருவடிகள் கிடைக்குமா?
குருநாதர்:- அப்பறம் இதுவும் முட்டாள்தனமாகவே அப்பனே கேள்வி இருக்கின்றது. என்னோட ஆசிகள் இல்லாமலா ( நீ இங்கு வந்தாய்) நேற்றைய தெரிவித்து விட்டேன். ( மதுரை அடியவர் பரமசிவம் ) பரமனே சொல்?
மதுரை அடியவர் பரமசிவம்:- ( இந்த மதுரை அடியவர் இல்லத்தில் குருநாதர் ஆட்கொண்டு வந்து இந்த நீண்ட பலமான நாடி வாக்குகள் பலவற்றை உலகோர் அறிய உரைத்தார்கள் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்)
அகத்திய பிரம்ம ரிஷி அருள் இல்லாமல் யாரும் ( நாடி வாக்கு கேட்க) இங்க வர முடியாது. அதனால் குருநாதர யாருக்கு ஆசீர்வாதம் கொடுத்தாரோ அவர்கள் மட்டும் இங்கு வரமுடியும். அடுத்த நாடி ஆசிர்வாதம் ( நாடி வாக்குகள் ) வேண்டும் என்றால் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் பஞ்ச பூத ஸ்தலத்திற்கு போய்விட்டு வரச்சொன்னாங்க.
கேள்வி கேட்ட அடியவர்:- அந்த அந்த அந்த பிரச்சனை கேளுங்க.
குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.
கேள்வி கேட்ட அடியவர்:- ( எழுந்து ஒரு காலில் நின்றார்)
குருநாதர்:- அப்பனே அப்படியே நில்.
( ஏறக்கனவே நின்று கொண்டு இருக்கும் அடியவர் ஒருவரை ) அப்பனே நீ நிற்கின்றாயே இவனை ஏன் நிற்க வைத்தேன் என்று கூற வேண்டும்.?
அடியவர்:- சரியான பாடம் புகட்ட
குருநாதர்:- அப்பனே அவன் தனக்கு என்னென்ன தவறுகள் செய்தோம் என்பது அவனுக்கே தெரியும். அப்பனை மீண்டும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறானே , இது நியாயமா என்று அவனிடத்தில் கேள்?
கேள்வி கேட்ட அடியவர்:- ( பல கேள்விகள் கேட்டது) தப்பு தாங்கய்யா. அதுக்கு தாங்கய்யா நிக்கிறேன்.
குருநாதர்:- அப்பனே இரு கைகள் மேலே கூப்பி ( தூக்கி குவித்து ) வணங்கு.
கேள்வி கேட்ட அடியவர்:- சரிங்க ஐயா ( ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- அப்பனே அப்படியே நில்.
அடியவர்கள் :- ( சிரிப்பு )
கேள்வி கேட்ட அடியவர்:- இருங்கயா பேலன்ஸ் பண்ணி நிக்கிறேன். கஷ்டம் தாங்க ஐயா. நான் பாத்துக்கிறேன்.
குருநாதர்:- அப்பனே அனுதினமும் இப்படியே நின்று மந்திரத்தை சொல்லிக் கொண்டே இரு அப்பனே அனைத்தும் மாறும் அப்பா சொல்லி விட்டேன் அப்பனே. பின் என்னால் முடியவில்லை என்று கூறிவிட்டால் அப்பனே சொல்லி விட்டேன் யான்.
கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கின்றேன் ஐயா. சுதர்ஷன மந்திரமா ஐயா?
குருநாதர்:- அப்பனே முதலில் நின்று எவ் மந்திரத்தையும் ஜெபி.
( அடியவர்கள் இந்த வாக்கை நன்கு உள் வாங்கவும் மந்திர ஜெபங்களுக்கு குருநாதர் காட்டிய சூட்சும வழி )
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நான் பல குழப்பத்தில் உள்ளேன். எனக்கு தெளிவாக..
குருநாதர்:- அப்பனே இதை செய். குழப்பமும் நீங்கும் என்பேன் அப்பனே. இதில் கூட அர்த்தம் உள்ளதப்பா.
அடியவர்:- மனதை ஒருமுகப்படுத்தல்…
குருநாதர்:- அப்பனே மனிதன் ( அவனுக்கு) அனைத்தும் கொடுத்தாலும் அப்பனே மற்றவர் தயவால் தான் வாழ்கிறான். நீயும் அதுபோலத்தான் அப்பனே. (மனிதர்களை) புடித்து விட்டாய் அங்கு அப்பனே உன் நிலைமை இப்பொழுதே புரிகின்றதா? அப்பனே நீயாக சரியாக ( எங்களையே நம்பி ) ஒரே காலில் நின்றிருந்தால் யாங்கள் வந்து காத்து இருப்போம் அப்பனே. ஆனால் மனிதர்களை நம்பி விட்டாய் நீ.
கேள்வி கேட்ட அடியவர்:- அப்டீங்களா ஐயா ( குருநாதர் கருணையால் அடியவர் மனம் மாற்றம் அடைய ஆரம்பித்த தருணம் இது )
அடியவர்:- மனிதனை பிடிச்சுட்டார்
கேள்வி கேட்ட அடியவர்:- தப்புங்க ( தவறுதான் ) ஐயா
குருநாதர்:- அப்பனே அதனால்தான் தன்னோடு இருக்கும் குறைகளை அப்பனே நீக்கவே இறைவன் சில கஷ்டங்களை தருகின்றான். இப்பொழுது கூட என் பேச்சை கேட்க மாட்டாய் வரும் காலங்களில் என்று யான் சொல்வேன். யான் காலை கீழே விடு என்று சொல்ல வில்லை. நீ விட்டு விட்டாய் அப்பனே. (அடியவர்கள் சிரிப்பு அலை) இப்பொழுதே புரிகின்றது இதில் இருந்து.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா இந்த…
குருநாதர்:- அப்பனே எங்கிருந்து வந்தாய் நீ?
கேள்வி கேட்ட அடியவர்:- ( தன் ஊர் பெயரை செப்பினார் )
குருநாதர்:- அப்பனே என்று கூற. அதிகாலையில் இருந்து யாரு கூட பேசினாய்?
கேள்வி கேட்ட அடியவர்:- ( இரு அடியவர்கள் பெயர்கள் கூறினார் )
குருநாதர்:- அப்பனே அவர்கள் இருவரையும் எழச்சொல்.
( அந்த இரு அடியவர்களும் எழுந்து நின்றனர் அங்கு. குருநாதர் அந்த இரு அடியவர்களிடம் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்… )
குருநாதர்:- அப்பனே பின் நீங்கள் சொல்வதை இவன் வாழ்க்கையில் மறக்கக்கூடாது. அப்படி சொல்ல வேண்டும் இப்பொழுது அப்பனே. அப்பொழுதுதான் உங்களுக்கும் என்னுடைய ஆசிகள்.
கேள்வி கேட்ட அடியவர்:- (என்னை) திட்டுங்கய்யா.
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நம்பிக்கை வர வேண்டும். குருநாதர் சொன்னார் ஒரு வார்த்தை சொன்னார். ஒற்றைக்காலை தூக்கி கையை கூப்பி நிக்கச்சொன்னார்கள். நீங்க நின்று இருந்தீர்கள் என்றால் கர்மம் நீக்கி இருப்பார் அகத்தியர்.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நிக்க முடியல
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நிக்கல நீங்க. முயற்சி செய்யுங்க தப்பு இல்லை. நீங்க முயற்சி செய்யலையே.
கேள்வி கேட்ட அடியவர்:- நிக்குறேன் ஐயா.
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க.
கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு கால் அடுத்த காலில் வைக்கும்போது ) பேன்ட் வழுக்குது…
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நீங்க எல்லாம் வேற விளையாட்டா நினைச்சுகிறீங்க. உண்மையில சொல்ரேன் . ஐயா சொன்னார்னா விளையாட்டு கிடையாது. சிரிப்பு கிடையாது. அது நிச்சயம் தயவு செஞ்சு நில்லுங்க.
கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கிறேன்…
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க. விளையாட்டுக்கு சொல்லல..நீங்க திருப்பி திருப்பி உங்க குறைகளை கேக்குறீங்களே ஒழிய. அவர் ( குருநாதர் ) சொல்றத கேக்க மாட்டேங்குறீங்க.
கேள்வி கேட்ட அடியவர்:- ________
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- அது சரி. அதுவும் சொல்லுவார் ஐயா. முயற்சி செய்யுங்க. தப்பு இல்ல. இது ஒரு யோகா. அவ்ளோதான். இதுனால ரத்தம் மேல போகும்ங்க. மூளைக்கு அதிகப்படியா ரத்தம் போச்சுன்னா மனசு தானாக அமைதி ஆகும். மூளைக்கு ரத்தமே போக மாட்டேங்குது. அதை கொண்டு போங்க. மனசு தானாக அமைதி அடையும்.
குருநாதர்:- அப்பனே ( இருவரில்) ஒருவன் மட்டும் சொன்னான் அப்பனே. மற்றவன வாயை மூடிக் கொண்டிருக்கின்றனே பேசச்சொல்.
அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )
கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர் 2:- ஐயா அவர் கருணைக்கடல். அவர் நம்ம எல்லாரையும் இந்த இடத்தில கூட்டி ( அழைத்து வாக்கு உரைக்கின்றார்கள் ). அந்த கருணைக்கடல் நம்ம
பிரச்சனைகளுக்கு எதிராக ( நம்மை ) ஒரு ஆட்கொண்டு சொல்ரார். அவர் தெய்வம். தெய்வம் வந்து அவ்ளோ கருணையோட சொல்லும் போது அதை மீறி எதுவுமே இல்லங்க ஐயா. அப்படியே கெட்டியாக பிடிச்சுக்கனும்.
குருநாதர்:- அப்பனே மூன்று நாட்கள் நான்கு நாள்களுக்கு முன்பே இப்பொழுது சொன்னானே ( அடியவர்# 2) அவனுக்கு ஒரு பெரிய மரண கண்டம் அப்பா. ஆனாலும் அப்பனே அதை மாற்றி எழுதி வைத்து விட்டேன் அப்பனே. இப்பொழுது பார்த்தீர்களா விதியை கூட என்னால் மாற்ற இயலும் அப்பனே. (ஆனால்) உன் விதியை என்னால் மாற்ற இயலாது அப்பனே. எவை என்று புரிய புரிய அப்பனே, மூடனே, முட்டாளே.
( இந்த அடியவருக்கு ரயிலில் ஒரு பெருய மரண கண்டம் இருந்ததாக அங்கு அடியவர்கள் பேச்சு)
குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல் அப்பனே. விதியைக் கூட எப்படி என்னால் எப்படி மாற்ற இயலும் என்று நீ (அடியவர்# 2) கூற வேண்டும் அப்பனே. முதலில் நீ கூறு?
( இந்த அடியவரின் மரண கண்டம் இதனை எப்படி விதி மூலம் மாற்றினார்கள் என்று எடுத்துஉரைக்க ஆரம்பித்தார் இரண்டாம் அடியவர். இந்த அடியவருக்கு காலே துண்டாகி போய் இருக்க வேண்டிய கொடுமையான கண்டம். ஆனால் கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி இந்த அடியவருக்கு ஆச்சரிய மூட்டும் வகையில் காப்பாற்றி உயிர் பிச்சை இட்டு உள்ளார்கள். அந்த அடியவர் சொன்னவற்றை அப்படியே வாய் மொழி வழக்கி்ல் இங்கு கீழே…..)
அடியவர்# 2:- கோயம்புத்தூருக்கு ஐயா ஜீவ நாடி ஐயா வந்து இருக்கின்றார்ங்க என்று தெரிந்து போனோம். போயிட்டு வரும்போது நான் அடியவர்#1 காரில் இரண்டரை மணிக்கு பெரியார்ல இறக்கி விட்டாங்க. அங்க இருந்து எனக்கு 4 மணி இருந்ததனால ஐயாவுடைய youtube கேட்டுக்கிட்டே இருந்து அப்பறம் (train) unreserved என்பதால் கூட்டம் அதிகமா இருந்துச்சு. நான் ஏறின வாசலுக்கு opposite வாசல்ல உட்காந்து இருக்காங்க. ( மதுரை to தென்காசி trainல ) . உட்கார்ந்துகிட்டு இவருக்கு மெசேஐ் எல்லாம் அனுப்பிவிட்டு பாக்கெட்ல போட்டுகிட்டு ஐயாவோட அன்னைக்கு ஜீவ நாடியதான் மனசுல ( அகத்தியர் ) ஐயா பேரதான் உச்சரிச்சு கிட்டே இருந்தேன். ஒரு 5 நிமிஷம் கூட ட்ரயின் கிளம்பிடுச்சு. ஒரு 20 நிமிசத்துக்கு அப்புறம் வந்து பாத்தீங்கன்னா மதுரை to கள்ளிக்கொடி இந்த ஸ்டேசன்ல பிளாட்பாம்ல என் காலு உள்ள இருக்கு. Platform ல ( என் கால் ) விரு விருன்னு கால்ல அடிக்கிரது மட்டும் sound கேட்டுச்சு. நான் எப்படி மேல வந்தேன்? ( எனக்கு ) காலே இல்ல அப்டிங்குற ஒரு feel வந்துச்சு வெளிய எடுக்கும் போது ஆனா பாத்தீங்கன்னா வலி அவ்வளவு உயிருபோச்சு. உடனே இவருக்கு ( அடியவர்# 1) phone அடிச்சேன். என்னமோ நடந்துச்சு. ஆனா ஐயாதான் fullஆ தூக்கி உட்ட மாதிரி காப்பாத்தீட்டாரு. இது உடனே ஐயாவே phone அடிச்சு அன்னைக்கே சொல்லிட்டேன். என்னால முடிநல. என்னால முடியல சுத்தமா 100% இல்ல 1000% ஐயா( அகத்தியர்) இல்லாம என்னால மேல வந்து இருக்க முடியாது. எல்லாருக்கும் சொன்னோம். பௌர்ணமி அன்னைக்கு அன்னதானமும் வெச்சு இருந்தோம். அப்படி அங்க போவது அப்டினு எனக்கே தெரியாம அந்த யோசனை வந்தது. ஆனால் ஒரு சிறு சொட்டு ரத்தம் மட்டும்தான் வந்துச்சு. அவ்வளவு பெரிய accident. ஒன்னுமே ( எந்த சேதமும் ) இல்லாம போச்சு. இன்னைக்கு ( எந்த இழப்பும் ) ஒன்னுமே இல்லை என் கால்ல.
எல்லாமே குருநாதர். உடனே நான் சொல்லிட்டேன். ஐயாதான் ( எனக்கு உயிர் பிச்சை கொடுத்தார்).
மற்றொரு அடியவர்:- அங்க கோயம்புத்தூர்ல இதே மாதிரி ( ஜீவ நாடி ) சத்சங்கம் நடக்கும்போது இவ்விடத்தில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு மரண கண்டம் அப்டின்னு ஐயா சொல்லி இருந்தார்கள். அப்பா ஐயாகிட்ட பேசும்போது ஐயா அந்த ( நாடி வாக்கு ) வார்த்தையோ அப்டின்னு யோசன பண்ணி சொன்னேன்.
குருநாதர்:- அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்படியும் கூட. அதனால் அப்பனே விதியில் கூட என்ன இருந்தாலும் அதை சிறியதாக என்னால் குறைக்க முடியும். ஆனால் நம்பிக்கை வேண்டும். உயிரை அப்பனே இறந்திருக்கக் கூடியவனைக்கூட யான் உயிர்ப்பித்து இருக்கின்றேன் இன்னும் நலன்கள் செய்ய. நின்று கொண்டு இருக்குன்றானே இவன் தனக்கு உயிர் பிச்சை கொடுத்து விட்டேன் அப்பனே.
அடியவர்:- ஈஸ்வரா…
குருநாதர்:- அப்பனே இதனால் யார் யாருக்கு தெரியும்? என்னை நம்பியவர்களை அப்பனே கைவிட்டதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. சோதனைகள் வைப்பேன் அப்பனே. ஏன் என்றால் அப்பனே உங்கள் நன்மைக்காகத்தான் அப்பனே. கடைசியில் அனைத்தும் சீராக்குவேன் அப்பனே. அகத்தியனால் முடியாதது இவ்வுலகத்தில் எவராலும் முடியாதப்பா. ஈசனாயினும் சரி. விஷ்ணுவாயினும் சரி.பிரம்மனாயினும் சரி.
அடியவர்# 1:- எல்லாமே அவர்தான்.
குருநாதர்:- அப்பனே இப்பொழுது புரிந்து கொள்ள மாட்டார்கள் அப்பனே. அப்பனே பின்பு விவரிக்கின்றேன். அதாவது அனைத்து சொல்லிவிட்டு பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி மனிதனுக்கு அப்பனே பக்குவங்களே இல்லையப்பா நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன். பக்தி என்பது உண்மை என்பது கூட அப்பனே இன்னும் அப்பனே பூஜியத்திலேயே இருக்கின்றான் மனிதன் அப்பனே. அப்படி இருந்தால் எப்படியப்பா புரியும் இன்றைய மனிதர்களுக்கு? புரியாதப்பா.
அப்பனே அதனால் முதல் வகுப்புக்கு அழைத்து வர வேண்டும். அப்பனே இரண்டாம் வகுப்புக்கு இன்னும் மூன்றாம் வகுப்புக்கு அப்பனே இப்படி அழைத்து வந்து சொன்னால்தான் புரியும் அப்பா. அப்படி இல்லை என்றால் புரியாதப்பா புரியாமலே இறந்து விடுகின்றான் அப்பனே. மீண்டும் பிறவிகள் எடுத்து அப்பொழுதுகூட புரிவதில்லை என்பேன் அப்பனே. இவ்வாறு பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை பட்டு பட்டு அப்பனே ஆதனால்தான் என்னிடத்தில் வருபவர்கள் கூட சில சோதனைகளை கொடுத்து கொடுத்து , அப்பனே திருத்தி திருத்தி முதலில் அப்பனே முதலில் பிறவிக் கடனை முடிப்பேன் அப்பனே. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. அதற்காக யான் பாடுபடுவேன் நீங்கள் அமைதியாக இருந்தாலும்.
அடியவர்கள்:- ( அமைதி )
குருநாதர்:- அப்பனே என்னை பற்றி எடுத்துரை.
அடியவர் :- ஆதியும் அவரே. அந்தமும் அவரே. ஈசனும் அவரே. பிரம்மாவும் அவரே. விஷ்ணுவும் அவரே. முருகனும் அவரே.
அதாவது அகஸ்தியர் ஒரு பாடல் இருக்கு. பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் கால பைரவர் ஆகவும் , தட்சணாமூர்த்தியாகவும் சக்தியாகவும், எல்லாமாகவும்்இருப்பது யாமே. அதாவது ஈசனுக்கு மேல அகத்தியர் வாக்கு சொல்லி இருக்கிறார் குருநாதர். ஈசனுக்கு மேல் மித மிஞ்சிய சக்திகள் எனக்கு உண்டுன்னு சொல்லி இருக்கிறார். அப்போ அந்த வார்த்தை படிக்கும்போது ஈசன்தான் பிரதான தெய்வம் அப்டின்னு நாம நினைக்கிறோம். அதையும் மீறி மிஞ்சிய சக்தின்னா இவருதான் ஆதி. அதுக்கப்புறம் தான் அதாவது தன்னை சுருக்கிக் கொண்டு குறுக்கிக் கொண்டு மற்ற தெய்வங்கள் வெளிப்படுத்துறார். ஆனா இவர்தான் ஆதி. ஆதியும் அந்தமும் சர்வ சொரூபியும் இவர்தான். ஆனா மற்ற தெய்வங்களை முன்னிலைப்படுத்தி எல்லாரையும் முன்னிலைப்படுத்தி சொல்றாரே தவிர, இதுக்கு முன்னாடி ஆதியே இவர்தான். ஆகி பகவானை வணங்கலாம் என்று சொல்ராங்க இல்ல. அது இவர்தான். சர்வமும் அகத்தியர்.
குருநாதர்:- அப்பனே எது என்று அறிய போதவில்லை என்பேன்.
அடியவர்:- உண்மைதாங்க ஐயா. ஏன்னா அது வந்து புலஸ்தியர் வந்து பொதிகையில் வந்து ஒரு புகழ் மாலை பாடினார். அதாவது நான் சொன்னது மனிதனல்ல உங்கள பத்தி ஒரு துளி கூட யாருக்குமே தெரியாது அகத்தியனை பத்தி சொல்லுவார் ( புலஸ்திய மஹரிஷி). (அடியேன் சொன்னது) அதுல ஒரு துளி கூட கிடையாதுதான். உண்மைதான்.
குருநாதர்:- அப்பனே அப்படி தெரியாமல் என்னிடத்தில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூட மனிதனுக்கு தெரியவில்லையே அப்பனே. அப்பொழுது கூட யான் உரைத்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே. இதனை கூட அதாவது புண்ணியம் இருந்தால் தான் அப்பனே என்னுடைய வாக்குகளும் கேட்க முடியும் சொல்லி விட்டேன் அப்பனே.
அப்போது உண்மைகள் அனைவருக்குமே யானே குவித்து ( ஊட்டி ) விடுகின்றேன் அப்பனே. அதனால் எக்குறையும் கொள்ள தேவையில்லை. இன்னும் இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே கர்மா கடலில் நீந்தி கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அவ்வாறு கடலில் நீந்தினால் அப்பனே யாருமே உதவி செய்ய மாட்டார்கள் அப்பா. ஆனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நீந்தாதே என்று கையை பிடித்து இழுத்து வருகின்றோம். அதுபோலத்தான் உங்களை அனைவருமே நீங்கள் கஷ்டத்தில் நுழைந்து நுழைந்து அப்பனே சென்று கொண்டிருக்கிறீர்கள். அவ்கஷ்டத்தை யாராலும் தடுக்கவும் முடியாது. அதனால் யாங்களே இவ்வாறு இருக்கின்றானே என்று சில வழிகளில் கூட இழுத்து, அப்பனே அரவணைத்து நல்லது செய்து கொண்டிருக்கிறோம் அப்பனே.
அதனால் எங்களால் மட்டுமே முடியும் நல்லது செய்ய. மற்றவரால் முடியாதப்பா. நீ என்ன பரிகாரம் செய்தாலும் அப்பறம் எப்படி பின்பற்றினாலும் அப்பனே ஊர்ந்து சென்றாலும் அப்பனே தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பா ஒன்றும் நடக்கப் போவதில்லை. அப்பனே. யாங்கள் மனதை வைத்தால்தான் அப்பனே அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்காதீர்கள். நீதி, நேர்மை தர்மத்தை கடைப்பிடியுங்கள் போதுமானது யாங்களே வருவோம்.
அடியவர்:- அந்த ஒரு ஊரில் ஒரு நபர்…
குருநாதர்:- அப்பனே உன்னை பற்றி பேசு. அதனால் உன் நிலைமையே இப்படி இருக்கிறது மற்றவர்களை பற்றி பேசுகிறாயே அப்பனே. வேண்டாம் அப்பனே. அப்படி பேசினால் அவன் கர்மா உன்னை வந்தடையும். அப்படித்தான் சம்பாதித்துக் கொண்டாய். அதனால் என் நிலமை பின் சீர் செய் என்று பின் புத்திகள் வரவில்லை அப்பனே இப்போது கூட கேட்கவில்லையே அப்பனே. அப்பனே வாய் அகலமானவனே கூறு.
அடியவர்கள் :- ( சிரிப்பு )
அடியவர்:- என்னை ஏன் குருநாதர் அப்படி அழைக்கின்றார்…
( சில உரையாடல்கள் )
குருநாதர்:- அப்பனே அகல வாய் என்று சொன்னேனே எதற்காக சொன்னேன் என்று கூறுகின்றேன் அப்பனே. உன்னிடத்தில் அப்பனே வாய் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாதப்பா. அதானால் தான் சொன்னேன். யாராவது ஜெயிக்க முடிந்தால் அவனிடத்தில் பேசுங்கள் அப்பனே. ஜெயித்து காட்டுங்கள் அனைத்தும் தருகின்றேன்.
கேள்வி கேட்ட அடியவர்:- ( இவ்வளவு விளக்கத்திற்கு பின்னும் ஒரு கேள்வியை கேட்க ஆரம்பித்தார்)
குருநாதர்:- அப்பனே எத்தனை உரைகள் அப்பனே சொல்லி இருக்கிறேன். அதனால் இப்பொழுது சொன்னேனே உன் விளக்கத்தை பற்றி அப்பனே நீயே கூறு அப்பனே எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று.
குருநாதர் எடுத்து உரைக்க சொன்ன அடியவர்:- ஏமாத்துறது வந்து பாத்திங்கன்னா நிறைய வழிகள் ஏமாத்துறாங்க. சரிங்களா. நான் அகத்தியர் சிஷ்யன். நான்தான் அகத்தியன். அகத்தியர் என்னை வழி நடத்துகின்றார். அப்டின்னு சொல்லிகிட்டு அவர் பெயரை சொல்லிவிட்டு நிறைய பேர் வந்து நம்மள ஏமாத்திகிட்டு இருக்காங்க. நம்ம அவங்க வழியில ( ஏமாந்து ) செல்கின்றோம். அது மட்டும் கிடையாது. நாடிகளையும் வந்து பாத்திங்கன்னா ஜீவ நாடிகளில் நிறைய வந்து பொய் நாடிகள் இருக்கு. இறைவாக்கு சொல்லி மக்கள் வந்து தவறான மக்கள வந்து தவறான வழியில செலுத்திகிட்டு இருக்காங்க. இது மாதிரி ஏமாத்துரத்துக்கு நிறைய வழி இருக்கு.
குருநாதர்:- அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவனுக்குத்தான் அதிக தண்டனை என்பேன் அப்பனே. ( ஏமாற்றும் ) அவனுக்கு தண்டனை இல்லை. ( ஏமாறும் ) இவனுக்குதான் தண்டனை அப்பனே இப்பொழுது அப்பனே.
அப்பனே அனைத்தும் தெரிந்தும் கூட அப்பனே உன்னை ஏமாற்றுபவன் அதனால் நீயே ஒரு ஏமாற்றுக்காரன் அப்பனே. உன்னை ஏமாற்றி இருந்தால் அப்பனே அவளோ அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் என்று நீயே புரிந்து கொள்.
அடியவர்:- ( சில உரையாடல்கள் ) ஏமாறாமல் இருக்க ஏதாவது solution இருக்கா?
குருநாதர்:- அப்பனே மீண்டும் இதைத்தான் இவ்வளவு நேரம் அப்பனே நீயே கூறு.?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இந்த மதுரை பொது வாக்கினில் பல விடைகள் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பொறுமையாக வாக்குரைத்த அகத்திய பெருமானுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். ஓம் லோபாமுத்ரா சமேத அகத்திசாய நமோ நம🙏🙏🙏
ReplyDeleteமிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete