​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 14 November 2023

சித்தன் அருள் - 1500 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 14!


குருநாதர்:- ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

பின் அனைவரும் அறிந்ததே. அனைத்தும் சொல்லிவிட்டேன். ஆனாலும் நீங்களும் தேடி வந்தீர்கள் இதனால் சந்தர்பத்தை உங்களுக்கு யானே அளிக்கின்றேன். பின் கூறுங்கள்? (அடியவர்கள் கேள்வி கேட்கலாம்)

அடியவர்:- அகஸ்தியர் தீபக்குழு மூலமாக நாங்க இன்னும் பிரபலம் அடைஞ்சி நிறைய பேருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணுகின்றோம். ஒருத்தர் கர்மா….

குருநாதர்:- அப்பனே அதை யான் நிச்சயம் பிரபலம் அடைய தேவை இல்லை. என்னிடத்தில் விட்டு வையுங்கள். நிச்சயம் பல நபர்களுக்கு யாங்கள் உதவி செய்ய வேண்டும் என்று இதனால் யானே முன் வந்து செய்து தருகின்றேன் உங்களுக்கு.

அடியவர்:- ( ஒரு தனிப்பட்ட கர்மா) இதை நீக்குவதற்கு என்னங்கய்யா வழி?

குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொன்னாயே பின் நல் மனிதர்களுக்காவது உதவி செய்து கொண்டே வா.

அடியவர்:- தீபக்குழுவுக்கு வாகனம் வாங்கி விளக்கு எல்லாம் எடுத்துட்டு போவதற்கு …

குருநாதர்:- அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டுத்தான் முன்னே இதனால் கஷ்டங்கள் சிறிது படுங்கள் அப்பனே. அனைத்தும் நடந்துவிடும் என்பேன். ஆனால் இவை எல்லாம் வெறும் யான் சந்தர்பத்தை கொடுத்தேன். ஆனால் அப்பனே ஒருவர்கூட சரியாக பயன்படுத்த வில்லையே அப்பனே.

அடியவர்:- இந்த ஜென்மாவில் கடைத்தேறி முக்தி அடைவது.

குருநாதர்:- அம்மையே எதற்காக இவை நீ கேட்டாய்?

அடியவர்:- பிறவி போதும்

குருநாதர்:- அம்மையே எழுந்து நில்

அடியவர்:- (எழுந்து நின்றார்)

குருநாதர்:- அம்மையே அனைவருக்கும் இவ்வாழ்க்கை பற்றி எடுத்து உரை.

அடியவர்:- வாழ்க்கையில் அமைதிதான் வேணும். இந்த காலத்தில் மகான்கள் வந்து இருக்கின்றார்கள். மகான்களை பிடித்துக்கொண்டு நமச்சிவாயா மந்திரத்தை சொல்லுங்கள். நமச்சிவாயம். ஒம் நமச்சிவாய

( அடியவர் பின்வரும் பாடலை பாட , இதர அடியவர்களும் உடன் பாடினர்)

ஒம் நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம்

(அதன் பின் அடியவர் உரைத்தது)

நமசிவாய மந்திரத்தை விடாம பிடித்துக்கொள்ளுங்கள். நமசிவாய மந்திரம்தான் நமக்கு இறுதி. முதலும் அதுதான் முடிவும் அதுதான். அகஸ்தியப்பெருமான் பாதத்தை பிடித்துக்கொள்ளுங்கள். அவர விட்டா (நம் அனைவருக்கும் வேற)

கதியே கிடையாது.
கதியே கிடையாது.
கதியே கிடையாது
நமசிவாயம்.

குருநாதர்:- அப்பனே ஏன் எதற்காக இவ்வளவு ஆனால் எதையுமே கேட்கவில்லை இவள். ஏன் எதற்காக? பல கஷ்டங்கள் கடந்துதான் வந்துள்ளாள். அப்பொழுதுதான் பக்குவங்கள். அப்பொழுதுதான் மோட்சம். ஒருவன் கேட்டானே கஷ்டங்கள் இல்லாமல் அவை வேண்டும், இவை வேண்டும் என்று. நிச்சயம் முடியாதப்பா. கஷ்டங்கள் பட்டால்தான் வாழ்க்கை என்பதே தெரியவரும். அம்மையே பின் கஷ்டங்கள் என்ன என்ன பட்டாய் என்பதை நீ நிச்சயம் ( அனைவருக்குமே ) கூற வேண்டும் என் அருகில்.

அடியவர்:- வாழ்க்கையே கஷ்டமாகத்தான் இருக்கு. அதாவது உலகத்தில் மக்கள் அப்படித்தான் இருக்காங்க. நாம்தான் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். எதையும் சரி சரி என்று நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். மகான்கள் சொல்வதை ஏற்று, எல்லாமே இறைவனாக பார்க்க வேண்டும். நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். அடுத்தவங்களை சரி செய்வது என் (நமது) வேலை கிடையாது. மகான் அவர் ( அகத்தியப்பெருமான்) பாதத்தை பிடித்துக்கொண்டு, அவர் வழி நடத்துகின்றார். நான் ஒன்றுமே இல்லை. அவர் வழி நடத்தும் போது நான் என்ன என்று என்னை பக்குவப் படுத்தவே கஷ்டங்கள் வருகின்றது என்று நினைத்து அவர் பாதத்தை பிடித்து அவரே என்னை வழி நடத்துகின்றார். அகஸ்தியப்பெருமான் வழி நடத்துகின்றார். மகான்கள் வழி நடத்துகின்றார்கள்.

குருநாதர்:- அப்பனே கடைசியில் சொன்னாயே எப்பொழுதும் இதைத்தான் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அப்பனே நீங்கள் எதுவுமே கேட்கத் தேவை இல்லை. இறைவனுக்கு தெரியும். எந்நேரத்தில் எதை செய்ய வேண்டும். சரியான வழியில் கடத்திச் செல்ல இறைவனுக்கு தெரியும் என்பேன். அப்பொழுது நீங்கள் கேட்டாலும் நடந்து விடுமா என்ன? அம்மையே கூறு.

அடியவர்:- நான் கேட்டாலும் நடக்காது. அவர் என்ன, அந்த அந்த விதிப்படித்தான் நடக்கும். நம்ம விதிப்படி, நம்ம கர்மாப்படிதான் நடக்கும். மகான்கள் (நம்மை வழி) நடந்திகின்றார்கள். ஒரு சிலை இருக்குன்னா, அந்த சிலையை வந்து செதுக்கி செதுக்குனாத்தான் வரும். ஆனா நமக்கு எல்லாமே தெரியுது. இருந்தாலும் கஷ்டங்கள் வழி தெரியல. இருந்தாலும் அந்த (கஷ்ட) நேரத்துல அவர் பாதத்தை பிடிச்சுகிட்டு நாம போய்கொண்டே இருக்க வேண்டியதுதான். நம்மை செதுக்குவதற்காக வந்திருக்கார். கஷ்டங்கள் வருவது அவரை இருக்கமாக புடிச்சிக்கிறதுக்காகத்தான். கஷ்டங்கள் வந்து ஒரு ஸ்வீட் மாதிரி நம்ம கொண்டு போறாரு. அவரு பாதத்தில் (வைத்து) நம்ம கொண்டு போறார். அதுதான். இந்த ஜென்மத்துல கரை சேர்பதற்கு அவர் வழி சொல்றது அவ்வளவுதான். வேற ஒன்றுமே கிடையாது. மனுசங்கள் வந்து கஷ்டம் வருவது, துன்பம் வருவது வேற எதுவுமே கிடையாது. கஷ்டங்கள் வந்தாலும் நன்மைக்காகத்தான் நம்மளோட நன்மைக்காகத்தான். அப்டின்னு நினைச்சுட்டு போயிட்டா நம்பள நம்ம திருத்திக்கனும், நம்பள நம்ம பக்குவப் படுத்திக்கனும் என்பதற்காகத்தான் எல்லாமே குடுத்துருக்காரு.அவரை இருக்கமாக பிடிச்சுகிட்டா எந்த கஷ்டமுமே கஷ்டம் கிடையாது. அவர பிடிக்கறதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டம் குடுக்குறாரு.

குருநாதர்:- அம்மையே பின் (ஓரு அடியவர் அடையாளம் சொல்லி) அழை.

அடியவர்:- இருவர் எழுந்தனர்

குருநாதர்:- அப்பனே முந்திக் கொண்டாய் அப்பனே. அப்பனே வாழ்க்கையின் ரகசியத்தை அனைவருக்கும் எடுத்துக்கூற வேண்டும். திரும்பிச்சொல்.

அடியவர்:- வாழ்க்கைய பத்தி சொல்றது என்னனு தெரில. அப்பாவே (அகத்தியப்பெருமான்) சொல்றாங்க.

இந்த உலகத்துல பிறந்த நோக்கமே இறையை அடையறதுதான். நம்ம பிறப்பு எடுத்ததுக்கான நோக்கத்தையே யாரும் தெரிஞ்சுக்கல. இறையை அடைவது என்றால் என்ன என்று யாருக்கும் தெரியல. எதோ இந்த வாழ்க்கைல வந்துருக்கோம் பணம் சம்பாதிக்கணும் சாப்பிடணும் தூங்கணும் இப்படி வாழ்க்கை போகும் அப்டின்னு நினைக்கிறாங்க. நம்ம இந்த உலகத்தில் இந்த உடம்பு வாழ்வதறக்கே சாப்பாடு. ஆனா உலகத்துல சம்பாதிக்கிறதே உலகமா வாழ்ந்துடறாங்க. எதுக்கு வாழ்றாங்கனு யாருக்குமே தெரியல. ஒரு அகங்காரம், கோபம் என்ன என்னமோ பிடிச்சு தொங்கிட்டு இருக்காங்க. இந்த உலகத்துல வந்து நம்ம ஒரு அறியாமை என்னால கீழ விழுந்துட்டோம் (பிறந்துவிட்டோம்). எந்திரிச்சி நிக்கறதுக்கு பேர்தான் இறை. அந்த எந்திருச்சு நீன்று விட்டால் இறையை அடைஞ்சுறுவீங்க. இறையோட கலந்தவங்களுக்கு மாயப்பிறப்பே கிடையாது. நம்ம இந்த உலகத்துக்கு வந்தது அதற்கான நோக்கமே நம்ம அவங்களோட கலக்கிறதுக்குதான். அப்ப அந்த கலக்கிறதுக்கு இந்த உடம்பு வந்து கண்டிப்பா தேவை இந்த உடம்புக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த உடம்பு வந்து தக்க வைக்கிறது தற்காலிகமாக ஒரு ஆகாரம் ஒன்னு சாப்பிடனும்.அந்த ஆதாரத்துக்காக நம்ம உழைக்கணும். ஆனா நம்ம உழைக்கிறது எதுக்கு சாப்டறதுக்கு. இந்த உடம்பு எதுக்கு? இறை அடைவதற்கு. அப்ப இறை அடைவதற்காக இந்த உடம்பு கொடுக்கப்பட்டு இருக்குன்னு யாருமே யோசிக்கிறது இல்ல. நம்ம அப்பா சொன்னதுனால சொல்றேன். ( இந்த அடியவர் தனது இறை ஞானத்தின் ஒளியை அருமையாக எடுத்து அனைவருக்கும் உரைத்தார்கள்)

குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. முதலில் கர்மா. பின் அதாவது தாயை மதிக்காதது. பின் தந்தையை மதிக்காதது. நீங்கள் அனைவருமே ( இந்த வாக்கு அனைவருக்கும்) ஒருமுறை இதை செய்திருக்கின்றீர்கள் அப்பனே. இதற்காக சில தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் கருமங்கள் ஆக அது தொடரும் என்பேன் அப்பனே.

அதற்காகத்தான் அப்பனே சில சில தண்டனைகளும் அப்பனே இறைவனால். ஆனால் அதைக்கூட நீக்க வேண்டும் என்றால் எப்படி அப்பா நீக்க முடியும்? ஆனால் பொய்கள் சொல்லி அதற்கும் பரிகாரங்கள் கூறுகிறார்கள். அதையும் கூட அப்படியே (ஏதும் அறியாத மக்கள்) ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அதனால தான் அறிவுள்ளவன் அப்பனே எது என்று புரியாமல் கூட மனிதன் திரிந்து கொண்டிருக்கும் பொழுது எப்படி அப்பா நல்லது நடக்கும். நிச்சயம் நல்லதே நடக்காது அப்பா ஏன்?

எதற்காக அப்பனே? நீ செய்த கர்மங்கள் தான் அப்பனே. ஆனால் அவ் கருமங்கள் நீக்கப்பட வேண்டும். அம்மையே சிறு விளக்கங்களை கூறு?

அடியவர்:- மகான்கள் வர்ராங்க என்றால் அவங்களை பிடித்துக்கொண்டு பக்குவப்படுத்தி நம்மள கொண்டு வரணும். அதுல நல்ல ஆழ்ந்து நம்ம பயிற்சி செய்து தியானம் பண்ணி, நம்ம நல்லது செஞ்சு நாலு பேரு வராங்கன்ன நல்லது. இறைவனே வரார்னு நினைக்க வேண்டியதுதான். அவங்க வரல. மனுஷங்கள மனுஷங்களா பார்க்காம இறைவனாதான் பாக்கணும். இறைவன் பாத்து அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள இறைவனா பாத்து அவங்க நம்மை வழி நடத்தி போய்கிட்டே இருக்கனும். நம்ம வழியில ( கையில் ) எதுமே கெடையாது. எல்லாத்தையும் இறைவனா பாத்துட்டா பிரச்சனையே கிடையாது. இந்த ஜென்மத்திலேயே முக்திதான் நமக்கு. ஜென்மத்துலே முக்தி. இறை வழியிலேயே நடக்கும் போது இறைவனுடன் இறைவனா ஐக்கியமானபோது நம்ம… அவன் வேறு நான் வேறு இல்ல. அவனும் நம்மளோட ஒன்றி கலந்து இருக்கான் அவன். அதனாலதான் பிரிச்சு பாக்குறதுக்கு எதுவுமே கிடையாது. அந்த அளவுக்கு நம்மை பக்குவப்படுத்தி விட்டோம் என்றால் நமக்கு இந்த ஜென்மத்திலேயே முக்திதான்.

குருநாதர்:- அப்பனே அனைத்தையும் சொல்லிவிட்டேன். அதனால் அப்பனே இறைவன் அனைத்தையும் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் அப்பனே நீங்கள் அப்பனே தகுதி இல்லைகளப்பா. உங்களிடத்தில் தகுதிகள் இருந்தால்தான் அப்பனே இறைவன் கூட கொடுப்பான் என்பேன் அப்பனே. அத்தகுதிகள் இல்லை என்றால் நிச்சயம் இறைவன் கூட கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே.

அப்பனே திருமணம் ஆகவில்லை என்று ஏன் எதற்காக அத்தகுதி உன்னிடத்தில் இல்லையப்பா.

நீ திருமணம் ஆகினாலும் சரியாக வாழ முடியாதப்பா இதனால்தான் திருமணத்தை இறைவனே தடுத்து தடுத்து அப்பனே புரிய வைத்து பின்பு வாழ்க்கையின் பாதையை கூட மாற்றி அமைக்கின்றான்.

அதை மட்டும் இல்லாமல் அப்படியே பின் தொழில் தொழில் என்று அப்பனே எதற்காக அப்பா உங்களுக்கு தொழிலை தர வேண்டும் அப்பனே?. தொழில் வேண்டும் என்பவர்கள் எழுந்து நில்லுங்கள்.

அடியவர்:- சில அடியவர்கள் எழுந்து நின்றனர்.

குருநாதர்:- அப்பனே உட்கார் அப்பனே. இதுதான் உன் வேலை அப்பனே. எழுந்து நில். இதுதான் அப்பனே உன்னோட வேலை அப்பனே சொல்லிவிட்டேன். உட்கார்.

அடியவர்:- ( குருநாதர் வாக்கின்படி உட்கார்ந்தார்)

குருநாதர்:- (ஒரு அம்மைக்கு விதியில் உள்ளதை எடுத்து உரைத்து தனிப்பட்ட வாக்கு இதில் உள்ள பின் வரும் வாக்குகள் அனைவருக்கும் பொது என்பதால் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது) விதியில் உள்ளது சரியாக பின் செய்தால்தான் கஷ்டங்கள் என்பதே வராது. ஆனால் எவரும் சொல்வதில்லை எனவே நன்மை ஆனால் உனக்காக ஏன் சொல்கிறேன் என்றால் புரிந்து கொள். (தனிப்பட்ட வாக்குகள்)

அனைவருக்குமே தெரிவிக்கின்றேன். யார் ஒருவன் மற்றர்களை நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றான், மற்ற குழந்தைகளைப் பற்றி எண்ணுகின்றானோ அப்பொழுது அவன்தன் குழந்தைகளைக் கூட இறைவனே பார்த்துக்கொள்வேன் என்பேன் அப்பனே.
இதுதான் (தன்னை, தன் குடும்பம், தன் குழந்தை பற்றி மட்டும் யோசிப்பது) மனிதனின் அறிவுகெட்ட தாழ்வான புத்தி என்பேன். அதனால் எதையும் பற்றி சிந்திக்காதே. இறைவன் கொடுத்தது இறைவனுக்கு தெரியும் எப்படி எப்படி வழி நடத்த வேண்டுமென்று. (அதனால் தன்னை ஆராய்ந்தால் சுயநலமான இது தவறு என்று தெரியவரும்) இப்படி ( சுயநலமான ) தவறுகள் தன்னிடத்தில் இருந்து கொண்டு புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இதற்காகத்தான் கஷ்டம் என்று ஒரு சொல் வருகின்றது. இது தவறா?

அடியவர்:- தவறுதான்

குருநாதர்:- பக்குவங்கள் பட்டால் தான் அனைத்தும் கொடுக்க முடியும் அப்பனே. ஒருவன் திருமணமே எனக்கு வேண்டும் வேண்டும் என்று ஆனால் அப்படியே அவனிடத்தில் உடம்பில் ஒன்றுமே இல்லை அப்பா. பின் திருமணம் ஆகியும் பிரயோஜனம் இல்லை அப்பா. பின் அப்பெண்ணும் வந்து கஷ்டங்கள் பட வேண்டுமா? அப்பன்னே கூறு? செய்து தவறா, சரியா அனைவரும் கூற வேண்டும்?

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. திருமணம் வேண்டாம் என்றால் ஆசையை ஏன் தரவேண்டும் மேலும் அதனால் வரும் விபரீதத்திற்கும் இறைவன் ஏன் வழி வகுக்க வேண்டும் இதில் ஏதாவது தர்மம் உள்ளதா மாறாக சிறு வயதிலேயே ஆன்மீகத்தை மனதில் தோன்ற செய்திருக்கலாமே ஏன் இந்த வேதனை தர வேண்டும் நடப்பது அனைத்தும் கர்மா எனில் அதை கண்களால் காணாது ஏற்பது எங்கனம் சாத்தியம் மேலும் தாய் தந்தையரை வணங்கு கவனியுங்கள் என்கிறார் அவர்கள் நல்லவர்களாக இல்லாது நமது வேதனைக்கு காரணமாகி நம்பிக்கை துரோகம் செய்பவரை எப்படி வணங்க இயலும்

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete