குருநாதர்:- அப்பனே எங்கள் நாமத்தைக் கொண்டு இங்கு ஒருவன் வந்திருக்கின்றானே அவனை எழுந்திருக்கச்சொல்.
அடியவர் :- ( சித்தர்கள் நாமம் கொண்ட அடியவர் எழுந்து நின்றார்)
குருநாதர்:- அப்பனே உன்னை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறேன். அலைந்தாய் திரிந்தாய் என்ன லாபம் அனைவருக்கும் கூறு.?
அடியவர்:- அலைந்தாய், திரிந்தாய், உயிரோடு சுவாசம் உண்டு, உன் நாமம் செப்பி உயிர் வாழ்ந்து, கேட்டதெல்லாம் பெற்றுக்கொண்டு, நன்முறையாக வாழ்ந்துகொண்டு, ஞானத்தின் அடிப்படையில் படிப்படியாக இருந்து விட்டு, சபரிமலை தன்னில் இருந்து தவழ்ந்து வந்து இங்கு நிற்கின்றேன். தாயை ( அகத்திய பிரம்ம ரிஷி ) பார்ப்பதற்கு.
குருநாதர்:- அப்பனே எது உண்மை எது?
அடியவர்:- உண்மை இறை வாழ்வு, மெய் வாழ்வு. மெய்ப்பொருள் இல்லாத வாழ்வு வீணே.
குருநாதர்:- அப்பனே கோடி கோடிகள் அப்படியே பிறந்துள்ளது என்ன?
அடியவர்:- கோடி கோடி பிறந்துள்ளது ஓம்.
குருநாதர்:- அப்பனே எப்படி ஓம் என்று நீ சொல்லலாம்?
அடியவர்:- ஊம் என்று சொன்னால் ஓம் என்ற சுவாச ஒலி அழைக்குமே ஓம் அப்பா.
குருநாதர்:- அப்பனே சுவாசிக்கும் திறன் எங்கு உள்ளது?
அடியவர்:- பூமியில் உள்ளது. வானத்தில் உள்ளது.
குருநாதர்:- அப்பனே எடுத்துரை சுவாசத்தைப் பற்றி.?
அடியவர்:- கடவுளே.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-
ஐயா சுவாசம் எங்கே உருவாகின்றது என்று குருநாதர் ஐயா கேட்டார்கள். நமது சுவாசமானது அதாவது இந்த மூச்சுக் காற்று பிரபஞ்சம் முழுவதும் இறையாக இருக்கக் கூடிய இந்த சுவாசத்தில் பதிந்து இருக்கின்றது. நாம் சுவாசக்காற்றை நமது நாசியின் வழியாக உள்ளே இழுத்து அதுக்கப்புறம் இருதயத்திற்கு செலுத்தி, அங்க வந்து அழுத்த உற்பத்தி செஞ்சு மூளைக்கு அனுப்பனும். இருதயத்தின் வேலை என்னவென்றால் உடம்பில் இருக்கக்கூடிய சகல பாகங்களுக்கும் அந்த ரத்தத்தின் வழியாக சத்துக்களை எடுத்துச் செல்லனும். அந்த ரத்தத்தின்வழியாக உள்ள சத்துக்கள் எடுத்துச் செல்வதற்கு காற்று மிகவும் முக்கியம். அந்த காற்று இருந்தாலும் அந்த அழுத்தமானது ரத்தத்தில் உருவாகி அந்த அழுத்தக்கூடிய ரத்தம் கீழேயும் பாயும். மேலேயும் பாயும்.
அப்போது ஈர்ப்பு விசையை எதிர்த்து ரத்தமானது செயல்படவேண்டும் என்றால் அதற்கு காற்று தேவை. அதனால் அந்த ஈர்ப்பு விசையை எதிர்த்து ரத்தம் செயல்படுவதற்கு நாம அதிகப்படியான
மூச்சுக் காற்றை உள்ளிழுத்து இருதயத்தின் மூலமாக அதிகப்படியாக மூளையில் அதாவது மேலேயும் கீழேயும் போகுது. எனவே ரத்தம் மேலே ஏறும்போதுதான் மூச்சுக் காற்று நம்ம மூளையில் உள்ள செல்களுக்குச் சென்று நாம் அதன் மூலமாக செயல்படுகின்றோம். மூச்சுக் காற்று நமது உடம்பு முழுவதும் பரவி இருக்கு. அதுதான் சித்தர்கள் தசவித வாயுக்கள் அப்டின்னு சொல்றாங்க. அந்த தசவித வாயுக்கள் மூலமாகத்தான் நாம் இயங்குகின்றோம்.
( இந்த அடியவர் உரைத்த தச வாயுக்கள் குறித்து ஒரு விளக்கம் அடியவர்கள் அறிய இங்கு கீழே தருகின்றோம்.
தச வாயுக்கள் - 10 வாயுக்கள்
பஞ்சபிராணன்கள் என்று சொல்லப்படும் பிராணன் அபானன் , உதானன், சமானன், வியானன். ஐந்து வாயுக்களும் மிக முக்கியமானவைகளாகும். அவற்றை தற்போது புரிதலுக்காக ஒவ்வென்றாக பார்ப்போம்.
1.பிராணவாயு : -
இதன் இருப்பிடம் இருதயம் . இருதயத்தின் இயக்கக் கட்டுப்பாடு இரத்தத்தை அடித்து வெளித்தள்ளி உடலின் ஒவ்வொரு செல்களுக்குள்ளும், செலுத்துதல் .பசி, தாகங்களை உண்டாக்கி சாப்பிட்ட ஆகாரத்தை செரிக்கச் செய்தல் இவ்வாயுவின் பணி.
2.அபான வாயு: -
மூலாதாரமாகிய குதத்துக்கும், குய்யத்துக்கும். இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து மலத்தையும், சிறுநீரையும் வெளியேற்றுதல் மற்றும் சுக்ல சுரோணிதமாகிய விந்து நாதத்தை வெளியேற்றுதல் இதன் பணி.
3.உதான வாயு:-
இது தொண்டைப் பகுதியில் இருந்து சாப்பிடும் பதார்த்தங்களை விழுங்கி ரசம், ரத்தம், தசை, எழும்பு, மஜ்ஜை, கொழுப்பு, விந்து நாதமாகவும், பிரித்த பிறகு, மலக்கழிவை மலப்பையில் தள்ளும்.
4.சமான வாயு:-
இந்த வாயு நாபிக் சக்கரம் எனும் பசி, தாகம், செரிமானம், உடலின் சூடாகிய 98.4' F ஆகியவற்றைச் சரிசெய்யும்.
5.வியான வாயு :-
இவ்வாய்வு உடலெங்கும் நிறைந்து இருந்து உடலின் மேல் விழும் தோல்உணர்சிகளாகிய ஸ்பரிசம் உணர்வை உணர்வதற்கு உதவி செய்கிறது.
6.நாகன் வாயு:-
இவ்வாயு: தொண்டைப்பகுதியில் இருந்து வாந்தி உணர்ச்சி, வாந்தியை உண்டு பண்ணும்.
7.கூர்மன் வாயு:-
இது கண்களிலிருந்து கண்களைத் திறந்து மூடவும், கண்ணீர் போன்றவற்றிக்கும் காரணமாக இருக்கிறது.
8.கிருகரன் வாயு:-
இவ்வாயு மூக்கிலிருந்து வாசனை நுகர்வதற்கும், தும்மலை உண்டாக்கவும்
9.தேவதத்தன் வாயு:-
இவ்வாயு மார்பில் இருந்து கொண்டு கொட்டாவியையும், விக்கலையும். உண்டாக்கும்.
10.தனஞ்ஜயன் வாயு:-
இது தாயின் கர்ப்பத்தின் இருக்கும் சிசுவை வெளித்தள்ளும். மேலும் தசவித வாயுக்களில் தனஞ்சய வாயுவைத் தவிர மற்ற வாயுக்கள் எல்லாம் மரணத்தின் போது பிராணனுடன்
சேர்ந்து உடனே வெளியேறிவிடும். இந்த தனஞ்சய வாயு உடனே வெளியேறாமல் அப்போது உடம்பை வீங்கச் செய்தல். நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் போன்றவற்றைச் செய்து கொண்டே இருக்கும். உடம்பை இடுகாட்டிற்குக் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்த பிறகு 'டப்' என்ற சப்தத்துடன் வெடித்துத்தான் போகும்.
---> உடம்பை எரியூட்டாமல் புதைத்தால் உடம்பை மண்ணோடு மண்ணாகச் செய்து பிறகுதான் தனஜய வாயு வெளியேறும்.
---> இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.
---> ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித
வாயுக்களுமே வெளிவருவது இல்லை.
( வாருங்கள் மீண்டும் கருணைக்கடல் வாக்கின் உள் நுழைவோம்)
குருநாதர்: உந்தனுக்கு , அனைவருக்குமே அவன் வாக்கியன் (சித்தர் சிவவாக்கியர்) வாக்குகள் கூறுவான்.
( இப்போது கருணைக்கடல் அருள் உத்தரவினால் சித்தர் சிவவாக்கியர் வாக்குகள் செப்ப ஆரம்பித்தார்கள்)
சிவவாக்கியர் சித்தர்:-
அன்றி ஒன்றி நிற்பது ஏதடா?
ஏது நின்று பார்ப்பது உண்ட பின் உண்டு களிப்பது ஏதடா?
நின்று நின்று வந்த பின் வந்த பின் பூவது ஏதடா?
ஏறிய பின் நின்ற பின் அன்று இல் அன்று உண்டு அன்று இல்லாததது இல்லாத ஒன்று ஒன்று , ஒன்று ஒன்று கூடி கூடி பல கோடி.
பல கோடி என்பது பொய்யாக ஆகிவிட்டால் அன்னது அன்று அது என்றது நின்றுவிடுமே. நின்றென்று போவது போவது என்பது இல்லையே இல்லையடி தாயே பின் மரணம், மரணம், மரணம்.
அன்பு அன்பு நிக்கும் நிற்கும் என்பது தோல்வி என்பது தோல்வி வந்த பின் வெற்றி என்பதா? வெற்றி என்ற பின் அவமானம். அவமானத்தின் பின்னும் நடப்பது. நடப்பது பின் உடம்பின் பின் உடம்பின் பின் உயிர் வருகின்றதா? உயிர் வந்த பின் ஏது?
எது எது மனிதனுக்கு தெரிவதில்லையே. தெரிந்த பின் வாழ்வதில்லையே!!!
வாழ்வது பின்பு பின் இறந்து எதையும் எதை என்றும் குறிப்பிட்ட குறிப்பிட்ட குறி குறி என்று எதை என்று நோக்கி நோக்கி மனிதனை நோக்கி நோக்கி மனிதனைப் பின்பற்றுகின்றனா?
மனிதனை பின்பற்றிய பிறகு ஏங்குகின்றனா? ஆனா ஏங்கிய பின் வருகின்றனா?
வந்த பின் பிரயோஜனம். பிரயோஜனம் என்று வந்து எவை அறிந்து இறைவன் ஒன்று நிற்கின்றானா?.
இறைவன் எங்கு இருக்கின்றான்? ( என்று ) தேடி தேடி அலைந்த பிறகு அலைந்து அலைந்து (இறந்து) போய் விடுகிறான். போய் போய், (பிறந்து) வந்து வந்து மீண்டும் மீண்டும் இறைவனை காண்கின்றான் எங்கு? எங்கு எங்கு தரிசித்து இறைவனை காணவில்லையே. கண்டு கண்டு உணர்ந்து உணர்ந்து இல்லையே புத்திகள் இல்லையே.
புத்தி புத்தி புத்தி வந்து வந்து போனதடி. போன பின்பு வந்ததடி.
என்ன எதை அறிந்து, அறிவும் அறிவும் அறவும் கெட்டதடி அனைத்தும் கெட்டது.
( சிவவாக்கியர் வாக்கு முற்றே )
( இப்போது கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி மீண்டும் வாக்குகள் செப்ப ஆரம்பித்தார்கள் )
குருநாதர்:- இதற்கு அப்பனே வாக்கியனின் பாடல் இதற்கு அர்த்தம் நிச்சயம் இதனைக் கேள். போதுமானது. உன் வாழ்க்கையின் தத்துவம் இதிலே அடங்கிற்று.
( கருணைக்கடல் இந்த அடியவருக்கு அவர் வாழ்க்கையின் தத்துவத்தை சிவ வாக்கியர் மூலம் செப்பி அருளினார்கள். இதன் அர்தத்தை புரிந்து கொண்டால் அந்த சித்தர் நாமம் கொண்ட அடியவருக்கு அனைத்தும் புரியும் என்று நாடி அருளாளர் உரைத்தார்)
குருநாதர்:- அப்பனே கேள் இன்னும்.
அடியவர் 1 :- (ஒருவருக்கு வாக்கு கேட்ட போது)
குருநாதர்:- ( சூட்சும வாக்கு. இந்த அடியவர் விதியை ஈசனே அழித்து எழுதுவதாக வாக்கு உரைத்தார்கள். இறந்துவிட்ட இந்த அடியவர் ஆதி ஈசன் அருளால் வாழும் அதிசயத்தை அங்கு எடுத்து உரைத்தார்கள். அதனால் இந்த அடியவருக்கு ஈசனே அனைத்தும் கதி.)
அனைத்தும் ஈசன் தான். அப்பனே உனக்கு கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டேன்.
அப்பனே நிச்சயம் கொடுப்பான். அப்பனே நல்ல விதமாக அனைத்தும் மாற்றி வைப்பான். உனக்கு என்ன தேவையோ ஈசன் கொடுப்பான். ஈசன் உன்னை அழைப்பான் சேர்ந்து கொண்டே இருப்பான்.
குருநாதர்:- அப்பனே எப்படி அழைப்பான்?
அடியவர்:- (அமைதி)
குருநாதர்:- அப்பனே ( சிவாலயம் ) போகவில்லை என்றால் கஷ்டத்தை கொடுத்து அப்பனே போக வைப்பான்.அவ்வளவுதான்.
குருநாதர்:- அப்பனே ஒருவன் சொன்னான். வணங்குவதற்கு சக்திகள் இருக்க வேண்டுமா? அனைவருக்குமே சக்திகள் இருக்கிறதே. ஏன் அப்பா இறைவனை வணங்க முடியவில்லை.?
அடியவர் 2 :- அவன் அருளால் அவன் தாள் வணங்கி. (திருவாசகம் - சிவபுராணம் நூலில் மாணிக்கவாசகப்பெருமான் உரைத்ததை ஆதி ஈசனே நேரடியாக வந்து எழுதிய அற்புதம் இந்த வரிகள். இதன் பொருள் - இறைவன் அருளால் இறைவன் பாதம் நாம் வணங்குகின்றோம்.)
குருநாதர்:- இதை அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் நால்வரில் ஒருவர். அப்போது அவன் முட்டாளா அப்பனே?
அப்பனே இதற்காகத்தான் வாழ்ந்தவர்கள் ஞானிகள் அப்பனே. ஒவ்வொன்றும் எது என்று அறிய அறிய யோசித்து யோசித்து எழுதி வைத்தார்கள்.
(அடியவர்கள் கவனத்திற்கு:- இங்கு கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி சித்தர் திருமூலரை பற்றி உலகம் அறியாத செய்தி ஒன்றை உரைக்க ஆரம்பித்தார்கள். இந்த வாக்குகளை நீங்கள் உள்வாங்கி படிக்கும்போது , மடை திறந்த வெள்ளம் போல், உங்கள் விழி வழியும். ஏனென்றால் அவர் பட்ட துயரங்கள் …இறைவா!!! )
குருநாதர்:- அப்பனே (திரு) மூலன் ஒரு வருடத்திற்கு ஒரு பாடலை பாடினான். ஆனாலும் அப்பனே , யோசித்து யோசித்து அதாவது கூடு விட்டு கூடு பாய்ந்து அப்பனே பின் அனைத்தும் ( வலி, வேதனை, துக்கங்கள் போன்ற மனித வாழ்வின் உணர்வுகளை) அனுபவித்து அனுபவித்தே பாடினான் என்பேன் அப்பனே. அப்படிப்பட்ட நூல்களை படிக்காது இங்கு வந்து பின் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்களே, உங்களை விட முட்டாள்கள் யாரும் இல்லையப்பா. ( இந்த வாக்கு உலகோருக்கு , அனைவருக்கும் என்று பொருள் கொள்க.)
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-
திருமூலர் உடைய திருமந்திரத்தை மொத்தம் மூவாயிரம் வருஷங்கள் பாடி உள்ளார்கள். ஒரு பாடலுக்கு ஒரு வருஷம். பாடல் எழுதி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவாராம். அடுத்த பாடலை தியானத்தில் யோசித்துக்கொண்டே இருப்பார். மொத்தம் ஒரு பாடல் நான்கு வரிகள். அந்த நான்கு வரிகளுக்கு ஒரு வருடம் தியானம் செய்து யோசித்து …..
குருநாதர்:- அப்பனே ஒரு பாடலை எத்தனை வருடங்கள்?
அடியவர்:- ஒரு வருடம் ஒரு பாடல்.
( அடியவர்களே, 3000 பாடல் , 3000 வருடங்கள் மனிதர்களுக்காக மனித உடம்பில் வாழ்ந்து பல இன்னல்கள் பட்டு மனித குலத்திற்காக எழுதிய நூல் திருமந்திரம்)
குருநாதர்:- அப்பனே ஒரு வருடம் ஆனாலும் அப்பனே நீங்கள் எத்தனை வருடங்கள் அப்பனே 50 வருடங்கள் 60 வருடங்கள் , அப்பனே போதுமடா சாமி என்று சொல்லி விடுவீர்கள். ஆனால் (திருமூலன்) எப்படி வாழ்ந்திருப்பான்? அப்பனே ஓர் ஓர் வருடம் கடக்கவே. அப்பனே கூறு?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- அதாவது நமது இந்த 50 வருட , 60 வருட வாழ்க்கையை கழிக்கிறதுக்குள்ளேயே மூச்சு தள்ளிவிடும். எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு சோதனைகள், அப்போது ஒரு இறை சக்தி மானிட உருவில் திருமூலனா , அதாவது அவர் யார் என்றால் அவர் ஒரு இறை சக்தி. அவர் மூலன் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்டு இடையன் (ஆடு மேய்ப்பவர்) உடைய உடம்புக்குள்ள புகுந்து மானிடர்கள் நலனுக்காக, தன்னுடைய தெய்வம் தன்னை சுருக்கிக்கிட்டு ஒரு மானிட உடம்புக்குள்ள புகுந்து ( கூடு விட்டு கூடு பாய்ந்து ) மானிடராக கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்கள் அவர்கள் மானிட உடம்பில் வசித்து ( உயிர் வாழ்ந்து ) இந்த பாடல்களை எல்லாம் எழுதி இருக்காங்க என்றால் எவ்வளவு சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.. அதுவும் நமக்காக!!!!!!!!!!!!
குருநாதர்:- அப்பனே நாலாயிரம் வருடங்கள் பிறவி எடுத்து எடுத்து பிறவியை உணர்ந்து உணர்ந்து எழுதியவன் அப்பா அவன் ( திருமூலர் ). அப்பொழுது என்ன எத்தனை பிறவிகள் கடந்திருப்பான் அவன்?
( அடியவர்கள் கவனத்திற்கு - பல உடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து பல பிறவிகள் எடுத்து எடுத்து 4000 வருடங்கள் கடுமையான வலி, வேதனைகளை சுமந்து, கடும் தவத்தில் ஆழ்ந்து மனித குலத்திற்காக வருடத்திற்கு ஒரு பாடல் (அதுவும் 4 வரிகள்) எழுதிய பாடல்களே திருமந்திரம் என்ற மகத்தான நூல் என்று உணர்க. அடியவர்கள் இதனை உணர்ந்து அந்த மகத்தான திருமந்திரம் நூலை , திருமூலர் பாதம் பணிந்து படித்து , உள் வாங்கி, இறை ஞானம் பெற்று உய்யவும். )
குருநாதர்:- அப்பனே யாருக்குமே சித்தர்கள் வாழ்க்கை புரியவில்லை அப்பனே. அதனால்தான் சித்தன்
யார் என்று கூட இனி வரும் காலங்களில் கூட தெரிவதில்லை. அப்பனே மனிதனுக்கு தெரியாத அப்பா எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அப்பனே.
யான் சொல்லிவிட்டேன் ஒரு சிறிய அப்பனே உண்மையை ( 4000 வருடமாக பல பிறவிகள் எடுத்த ) மூலனை பற்றி. (வருங்காலங்களில்) இன்னும் தெரிவிக்கின்றேன் அவனைப்பற்றி. அப்பனே சித்தர்களைப்பற்றி யாருக்குமே தெரியாது அப்பா உண்மை நிலையில். ஆனால் சித்தர்களை வைத்து ஏமாற்றி விட்டார்கள் அப்பனே. அதனால் தான் யாங்கள் வந்து தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் அப்பனே. இனிமேலும் தண்டனை கொடுப்போம்.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- 4000 வருடங்கள் வாழ்ந்து உள்ளார். அதில் 3000 வருடங்கள் பாட்டு எழுத மட்டும்.
நாடி அருளாளர்:- பல பிறவிகள் (இந்த 4000 வருடங்கள்) எடுத்து எடுத்து வாழ்ந்து பாடல் எழுதி உள்ளார்.
குருநாதர்:- அப்பனே சித்தர்கள் எப்படி எல்லாம் அப்பனே அனைத்தும் சொல்ல எவை என்று அறிய அறிய அப்பனே மக்களை காக்கவே யாங்கள் சொல்லி விட்டோம் அப்பனே. இறைவனை காணவே பல யுகங்கள் ( யாங்கள் கடந்தோம்) அப்பனே எங்கிருக்கின்றான் என்பதை எல்லாம் அப்பனே ஆராய்ச்சிகள் அப்பனே எப்படி எல்லாம் உலகத்தில் மனிதனால் எவை என்று அறிய அறிய மனிதனுக்கு துன்பங்கள் வரும் எவை என்று அறிய அறிய அதற்கு மீறிய சக்திகள் துன்பம் எங்கிருந்து வருகிறது? அவை எல்லாம் போக்க முடியாது என்பதை எல்லாம் யாங்கள் கண்டு கண்டு தெளிந்ததுதான் அப்பனே சித்தர்கள். எங்களால் தான் பிரச்சனைகள் நீக்க முடியுமே தவிர மனிதனால் முடியாதப்பா. நார வாயை வைத்துக் கொண்டு முடியாதப்பா.
அதனால் தான் சித்தர்கள் மனிதனை காரி துப்பி விடுவோம். அவை இவை சொன்னால் அப்பனே சொல்லி விட்டேன்.
அப்பனே மனிதன் நார வாயை வைத்துக்கொண்டு எது சொன்னாலும் பலிக்காதப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.
( அடியவர்கள் பின் வரும் வாக்கினை 3 முறை நன்கு உள் வாங்கி படிக்கவும். உடன் பலன் உறுதி ஆகும். உங்கள் கர்ம நிலைகளின் சூட்சும ரகசியம் அடங்கிய மகத்தான கலியுக பொது வாக்கு)
“அப்பனே பலிக்கும் அப்பனே அவன் சொல்லியதை எது என்று கூற அவ்வாயால் சொல்லியதை , பொய் சொல்லியதை அதை நீங்கள் ( கேட்டு அதை ) ஏற்றால் அவ்அலைகள் மூலமே கர்மா உனக்கு வந்தடையும் அப்பனே. அனுபவிக்க வேண்டியதுதான் அவ்வளவுதான் அப்பனே.”
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- நல்லது நடக்காது. ஆனால் கெட்டது நடக்கும்.
நாடி அருளாளர்:- நடக்கும். கண்டிப்பா நடக்கும். கெட்டது நடக்கும்.
குருநாதர்:- அப்பனே உணருங்கள் அப்பனே. உன்னால் முடியாது, அடுத்தவனால் முடியுமா அப்பனே? யோசியுங்கள் அப்பனே. அப்போது நீங்கள் அப்பனே மூளை இல்லையா உங்களுக்கு?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- இறைவன் நமக்கு அறிவை கொடுத்துத்தான் அனுப்பி இருக்கின்றார். அறிவை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதுதான் ஐயா சொல்கின்றார்.
குருநாதர்:- அம்மையே கேளுங்கள்.
அடியவர் 3:- ( அம்மை ஒருவர் ஆசி கேட்டார் )
குருநாதர்:- ( பூர்வ ஜென்ம வாசனை, அம்மையில் விதிகள் மற்றும் புண்ணியப்பாதையை அழகாக எடுத்து உரைத்தார்கள். ஜீவ நாடி அவர்கள் இல்லம் வரும் என்ற அமிர்த வாக்கும் உரைத்தார்கள்.)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete