குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னைக் காப்பாற்றி விட்டது.
அப்பனே பின் கஷ்டத்திலும் இறைவன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே.
அடியவர் 4:- கஷ்டம் என்பதை நினைப்பவருக்குத்தான் கஷ்டம். இல்லையா? கஷ்டம் என்பது இல்லை என்பது , இறை நம்பிக்கை மட்டும் வைத்துக்கொண்டீர்கள் என்றால் கஷ்டம் என்பது உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடும். எப்படி நல்லது , தெய்வீகம் , சந்தோசம் எப்படி என்றால் கஷ்டம் என்பதை பிரிக்கின்றீர்களோ அதை வைத்துத்தான். இறை நம்பிக்கை ஒன்றை மட்டும் உங்கள் மனதில் என்றும் நிலை நிறுத்துங்கள்.
( அடியவர்கள் நன்கு அடுத்து வரும் வாக்கை 3 முறை உள் வாங்கவும். இறைவன் நம்பிக்கையை அடுத்தவருக்கு ஊட்டினாலே , சந்தோசத்தை இறைவன் உங்களுக்கு ஊட்டுவார் - உங்கள் கஷ்டங்களைப் போக்கி. இறைவன் நம்பிக்கை ஊட்டுவதே மகத்தான மாபெரும் தர்மம். இனி அடியவர்கள் இறை நம்பிக்கையை , இந்த அடியவர் ஊட்டியது போல உங்கள் சுற்றத்தாருக்கு ஊட்டுங்கள். இறை அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி சந்தோசமாக வாழுங்கள்.)
குருநாதர்:- அப்பனே நிச்சயம் அப்பனே உன் கஷ்டம் போய்விடும் அப்பனே. உன் கஷ்டத்தை பற்றி எடுத்துரை.
அடியவர் 4:- ( இவ்வுலகத்திற்கு ) நாம் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போக முடியாது. எல்லாமே மாயை தான். எதுக்காக தேவையில்லாத ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி இருக்கவேண்டும்? தேவை இல்லை. எல்லாமே இறைவன். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். அதனால தான் நீங்கள் இங்கு வந்து உள்ளீர்கள். அதுவும் உங்களுக்கு உணர வைப்பதற்கே இந்த மாதிரி (நாடி வாக்கு வாசிப்பு நிகழ்வு ).
குருநாதர் :- அப்பனே இன்னொரு விடயத்தையும் சொல்கின்றேன் அப்பனே. சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவனின் அப்பனே குற்றங்கள் என்ன? அப்பனே பெருமைகள் என்ன? (என்று) அனைவருக்கும் உணர்(த்துக).
அடியவர் 4:- நமது மனசுக்கு துரோகமாக எதைச் செய்தாலும் அது குற்றம்தான். பெருமை என்பது நீங்கள் நினைப்பது அல்ல. மற்றவர்கள் உங்களைப் பற்றி பெருமைப்படவேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப்படக்கூடாது.
குருநாதர்:- அப்பனே சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவன் உந்தனுக்கு என்ன என்ன தந்தான் என்று அனைவருக்கும் எடுத்துரை.
அடியவர் 4:- எல்லாமே நாம் பிறந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை அவர் கொடுத்ததுதான். நாம எதுவும் சம்பாதிக்கவில்லை. எல்லாம் அவர் கொடுத்த பிச்சைதான். ( அடியவர்கள், இந்த அடியவர் மேல் உரைத்த வாக்கை நன்கு உள் வாங்கவும். பல பொருள் விளங்கும் உங்களுக்கு.)
குருநாதர்:- அப்பனே என்னிடத்தில் கேட்பதை தவிர நீ என்ன கேள்விகள் கேட்கிறாய் என்பதைக் கூட அனைவருக்கும் அப்படியே நின்று கேள்?
அடியவர் 4:- நீ என்ன காரணத்துக்காக வந்து இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் (கருணைக்கடல் குருநாதர்) ஐயாவுக்குத் தெரியும். ஆனால் நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதை உங்களிடம் இருந்து முதலில் ஆரம்பியுங்கள். எது கிடைத்தால் நல்லா இருக்குமோ, எது உங்களுக்கு நல்லா இருக்கும் என்று சந்தோஷப்படுகின்றீர்களோ அதை உங்ககிட்டதான் இருந்து முதலில் ஆரம்பியுங்கள்.
குருநாதர்:- அப்பனே நீ எதைக் கேட்கவந்தாய் அப்பனே? (அதை) அனைவரிடத்திலும் கேள்?
அடியவர் 4:- நான் , இறை நம்பிக்கை மட்டும்தான் வேற எதுவும் இல்ல. அவர் ஏதாவது செய்வார் என்ற ஒரே நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கின்றேன். வந்த கொண்டு இருக்கின்றேன். இந்த ஒரு நம்பிக்கையில்தான் வந்திருக்கின்றேன்.
குருநாதர்:- அப்பனே இதை அனைவருமே உணரவேண்டும். பொருள் வேண்டும், இன்னும் சிலர் திருமணங்கள் வேண்டும். இன்னும் சிலர் எதை எதையோ.. ஆனாலும் இறைவன் எப்பொழுது எதைக் கொடுக்கிறானோ, அதை யார் ஒருவன் சரியாக பெற்றுக் கொள்கிறானோ, அவன்தனக்கு எதை என்று அறியாமல் அதனால் முதலில் இறை அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ் இறை அருளை எப்படிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் சொல்கின்றேன். அப்பனே இறை அருளை பெறுவது எப்படி என்று அனைவருக்கும் உணர்த்தி வை?
அடியவர் 4:- நாம் இந்த பூமியில் வந்து இருக்கின்றோம் என்பதை முதலில் யோசியுங்கள். எப்படி இருந்தார்கள், எப்படி இருந்து இருப்போம், எப்படி இருக்கப் போகின்றோம் என்பதையும் யோசியுங்கள். எது மாதிரி இருக்கக்கூடாது என்றும் யோசியுங்கள். நீங்கள் செய்த அனைத்தையும் திரும்பி பார்த்து யோசியுங்கள். எல்லாமே சரியாக இருக்கும்.
குருநாதர்:- அப்பனே இதனால் இனிமேலும் நிச்சயம் ஈசனை நினைத்து அப்பனே நல்விதமாக ஏதாவது சில செய்திகளை அனைவருக்கும் கூறு?
அடியவர் 4:- முதலில் நம்மை நாம் உணரவேண்டும். நாம் யார்? நம் உயிர் என்ன? இந்த பூமி, பிரபஞ்சம் என்ன? என்பதை உணருங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்துங்கள். எல்லா உயிர்களிடத்தும் தெய்வ நம்பிக்கையுடன் அன்பைச் செலுத்துங்கள்.
அந்த தெய்வமே (ஈசனே) உங்கள் மூலமாக எல்லோரையும் பார்க்கலாம்.
குருநாதர் :- ( ஒரு பொது இறைவன் பெயர் சொல்லி அழைத்தார்கள்) _____ நாமத்தைக் கொண்டவன் எழுந்து நில்.
( அந்த பெயர் கொண்ட அடியவர்களும் எழுந்து நின்றார்கள் )
குருநாதர்:- அப்படியே முதலில் சிறுவனைப் பார்த்துக் கேள். உந்தனுக்கு என்ன தேவை என்று?
அடியவர் 5:- பரிபூரண ( குருநாதர் ) ஐயாவின் அருள்
அடியவர் 4:- (கருணைக்கடல் பதில் உரைக்கும் முன்னே இந்த அடியவர் உரைத்தது ) அது கிடைத்துவிட்டது.
குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டானே!!!
அடியவர் 4:- உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?
அடியவர் 5:- அடுத்தது நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும்
அடியவர் 4:- ஆரம்பித்து விடுங்கள். இப்பவே.
குருநாதர்:- அப்பனே, சொல்லிவிட்டான் அப்பனே.
அடியவர் 5:- எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.
அடியவர் 4:- நல் வாழ்க்கை கிடைத்து உள்ளது. நல் வாழ்க்கை கிடைத்ததனால் இங்கு நாடி கேட்க வந்து உள்ளீர்கள்.
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு பக்குவங்கள் பிறந்தால் தான் அப்பனே ஒருவனால் (அடியவர் 4) இப்பொழுது இப்படி நிச்சயம் பின் செய்திகளைப் பரப்ப முடியும். அதனால் இவன் என்ன கஷ்டங்கள் பட்டு இருந்தால் இப்படிச் சொல்லுவான் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
நாடி அருளாளர் :- ( கருணைக்கடல் ஏன் இந்த அடியவரை #4 தேர்வு செய்து இங்கு பேச வைத்தார்கள் என்று அனைவருக்கும் எடுத்து உரைத்தார்கள். அதாவது கஷ்டங்கள் பட்டு பட்டு பட்டு அடிபட்டு நொந்து போய் வந்ததால், அவர் மாறி பக்குவப்பட்டு இருக்கிறார். அதனால் மட்டுமே இது போல் இங்கு வந்து சொல்ல முடியும் என்று உரைத்தார்கள்)
(ஒரு சிலர் ஒரு தெய்வத்தைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டே வருவார்கள். இறை சில சோதனை வைக்கும். அப்போது அவர்கள் வேறு சில தெய்வ வழிபாட்டிற்கு மாறி விடுவர். அனைத்து தெய்வங்களை வணங்குவது தவறில்லை. ஏனெனில் ஒருவனே தெய்வம். ஆனால் அருள் தரக்கூடிய வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்கு பின்வரும் வாக்கு ஒரு உதாரணம்.)
குருநாதர்:- அப்பனே அதனால் கேள்?
அடியவர் 5:- போன மாதம் பைரவரை சாமி கும்பிட்டு வந்தேன்.
குருநாதர்:- அப்பனே நிச்சயமாய் ஒரு வேலைக்கு செல்கிறாய் அப்பனே. மூன்று மாதங்கள் வேலை செய்கின்றாய் அப்பனே. சம்பளமும் கொடுக்கிறார்கள் அப்பனே. நின்று விடுகின்றாய் அப்பனே. என்ன கிடைக்கும்?
அடியவர் 4:- வேலை செய்யும் முறை தான். நிலையான எண்ணம் உங்களிடம் இல்லை. உழைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. இதற்கு அடுத்து அடுத்து உடனே போகின்றீர்கள். முதலில் எந்த இடத்தில் இருக்கின்றீர்களோ அதில் உறுதியாக இருங்கள்.
அடியவர் 5:- சரி ஐயா.
நாடி அருளாளர்:- இந்த (பைரவர்) தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே வர வேண்டும். குருநாதர் என்ன அறிவுரை கூறினார்கள்?
அடியவர் 5:- மூன்று மாதம் தொடர்ந்து பைரவர் சாமி கும்பிடச் சொன்னார்கள். இரண்டு மாதம் நிறைவு அடைந்தது.இப்போது விட்டு விட்டு இடையில் கொஞ்சம் விட்டு வேற பக்கம் பெருமாள் கோயில் போய்விட்டு வந்திருக்கின்றேன்.
நாடி அருளாளர்:- ஐயா இப்பொழுது உங்களுக்கு புரிந்ததா? அதனால் தான் சொல்கின்றார் குருநாதர்.
( மேலும் தெளிவாக எடுத்து உரைத்து விளக்கினார்கள் )
குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.
அடியவர் 5:- ___________
குருநாதர்:- அப்பனே அனைத்தும் இருக்குதப்பா. நிச்சயம் தொடர்ந்து நிச்சயம் பைரவனை வணங்கிக் கொண்டே வந்தால் அப்பனே வெற்றிகள். அப்பனே அதனால் தான் புரியும்படி யான் சொன்னேன்.
குருநாதர்:- அப்பனே ஆனாலும் மனிதனின் மனது அப்படியே மாறிவிடும். மாறி விடாதே அப்பனே. அவன் நாமத்தை பின் என்னவென்று நிச்சயம் கேள்?
அடியவர் 5:-உங்கள் பெயர்?
அடியவர் 4:- (தனது பெயர் உரைத்தார் - பெருமாள் நாமம் )
குருநாதர் :- அப்பனே யாரென்று தெரிகிறதா ?
அடியவர் 5:- பெருமாள்.
குருநாதர்:- அப்பனே நிச்சயம் வணங்கியதற்கும் , இவன் (பெருமாள்) நாமம் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கூறு?
அடியவர் 4:- நீங்க வணங்கி இருக்கின்றீர்கள் இதுவரைக்கும். நீங்க வணங்கினதற்கும் , என் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றார் குருநாதர்?
அடியவர் 5:- ( மனதில் நல் சிந்தனை ஓட்டம் )
குருநாதர்:- அப்பனே அதுபோலத்தான் அப்பனே உன் வாயால் பெருமாள் என்று சொன்னாய் புரிகின்றதா?
அடியவர் 5:- ஆமாம்
குருநாதர்:- ஆனாலும் அப்படியே இவனுடைய நாமம் என்ன சொன்னான்?
அடியவர் 5:- ( அடியவரின் பெருமாள் பெயர் உரைத்தார் )
குருநாதர்:- அப்பனே வித்தியாசம் என்ன?
அடியவர் 4:- எல்லாம் ஒன்றுதான்.
அடியவர் 6:- நீங்கள் பெருமாள் ( பைரவர் கோவில் போகாமல் பெருமாள் கோவிலுக்குச் சென்று ) வணங்கினீர்கள். இங்கு பெருமாள் ( பெருமாள் நாமம் கொண்ட அடியவர் #4 ) பதில் சொல்கின்றார்.
குருநாதர்:- அப்பனே அதனால்தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லிவிட்டார்கள் அப்பனே. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்று கூட ஏற்கனவே முன்னோர்கள் உரைத்து விட்டார்கள் அப்பனே.
அதனால் தான் அப்பனே ஏதாவது மயக்கத்தில் சென்றால் அது போலவே ஆகிவிடுவாய்.
அப்பனே எதாவது தொழிலுக்குச் சென்றாலும் அதன் மூலமே பல கஷ்டங்கள் பட்டு உயர்ந்து விடலாம்.
அப்பனே ஒருவன் எது ஆக நினைக்கின்றானோ அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன்.
அப்பனே இறைவன் யார் யாருக்கு எதைத் தர வேண்டுமென்று நிச்சயம் யோசித்துக் கொண்டே இருக்கின்றான். அதனால் நீங்கள் மனதில் என்ன எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களோ அதையே கொடுக்கிறான் அப்பனே. இதில் யாருக்காவது சந்தேகம் என்றால் நிச்சயம் எழுந்து நில். கேளுங்கள்.
அடியவர் 4:- மனம் போல் மாங்கல்யம் என்று சொல்கின்றார்கள். உங்கள் எண்ணம்தான் செயலாக வருகின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். உங்கள் எண்ணங்களை நல்லபடியாக வைத்துக்கொண்டு நல்லது மட்டும் நினையுங்கள். உங்களுக்கு எல்லாமே நல்லது நடக்கும். தேவை இல்லாதது உங்கள் தலையில் ( மனதில் ) ஏன் வைத்துக் கொள்கின்றீர்கள் என்று கேட்கின்றார் குருநாதர்.
அடியவர் 7:- நிறைய தர்ம காரியங்கள் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமே நல்லது நடக்கனும்.
குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் எப்படியப்பா திருமணம் நடக்கும்?
அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )
அடியவர் 7:- சாமி, தர்மம் செய்தால் தான் ஒவ்வொன்றாக நல்லது நடக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அதனால்தான் இப்படி நினைத்தேன்.
குருநாதர்:- அப்பனே இதன் முன்னே என்ன செய்தாய்?
அடியவர் 7:- சாமி, இதற்கு முன்னர் தினமும் சாப்பிடும்போது , ஆட்டுக்கு கீரை பின் காக்காய்குச் சாப்பாடு வைப்பேன்.
குருநாதர்:- பின்பு என்ன செய்தாய்?
அடியவர் 7:- நீங்க சொல்வதைச் செய்கின்றேன் சாமி.
குருநாதர்:- அப்பனே அதனால் தான் அப்பனே யான் சொல்லியதைச் செய்து கொண்டே இருக்கின்றாய். அதனால் அப்பனே சொல், தைரியமாக.
அடியவர் 7:- பழனிக்கு போகச்சொன்னீர்கள். போய் வந்தேன்.
குருநாதர்:- அப்பனே உந்தனை பால் அருந்து என்று யான் சொன்னால் நீ அருந்திவிடுகின்றாய். ஆனால் எதற்காக அருந்துகின்றாய் என்று உனக்குத் தெரிகிறதா இல்லையா?
அடியவர் 7:- அந்த சக்தி நீங்கதான் சாமி கொடுக்கவேண்டும்.
குருநாதர்:- அப்பனே இதற்கு நிச்சயம் பதிலளி?
அடியவர் 7:- சாமி, ( பால் குடித்தால் ) உடம்பு நல்லா இருக்கும். பழனி முருகனை வணங்கிவந்ததால் நம்மை தர்மம் செய்ய வைப்பார். ஊக்கமும் இருக்கும்.
( இதனிடையில் மயில் ஒன்று கூவியது )
குருநாதர்:- அப்பனே (முருகன்) ஆசிகள் கொடுத்து விட்டான். அப்படியே நீதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அப்பனே இப்பொழுது என்ன ஏது என்று கூற எதிர்பார்த்தாய்.
நாடி அருளாளர்:- ( மயில் கூவியதை எடுத்துக் கூறினார்கள் இந்த அடியவருக்கு. இதுவே கந்த வடிவேலன் ஆசி )
அடியவர் 7:- அதை நீங்கதான் உணர்த்தவேண்டும் சாமி…
குருநாதர்:- அப்பனே எப்படி எப்படியோ மனது செல்கின்றது அப்பா உனது. அதனால் மனதைக் கட்டுப்படுத்தி அப்பனே தியானங்கள் செய் முதலில். அப்படியே அப்பொழுதுதான் அப்படியே உண்மை நிலை என்ன வென்று தெரியும் அப்பனே. ( சில தனிப்பட்ட அதி சூட்சும வாக்கு ) அப்பனே அதனால் ( அதிகாலையில் ) தியானங்கள் செய். பல உண்மைகள் புரியும் அப்பனே. நிச்சயம் பொருள்கள் சேரும்.
அடியவர் 7:- தியானம் செய்ய நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்.
குருநாதர்:- அப்பனே இப்போது தான் சொன்னேன் அப்பனே. முருகனே உனக்கு ஆசிர்வாதங்கள் கொடுத்து விட்டான். அப்பனே உன்னால் செய்ய முடியவில்லையே அப்பனே.
( இனிமேல் வரும் வாக்குகள் நம் அனைவருக்கும் மகத்தான தான தர்ம பாடங்கள். இதனை வாசிக்கும் அடியவர்கள் மிகவும் கொடுத்து வைத்த புண்ணியவான்கள், பாக்கியசாலிகள். இந்த அண்டங்களின் ஒட்டு மொத்த தர்மமே குருநாதர் அகத்தீசர். அவ் தர்மமே இப்புவியில் இறங்கி தர்மத்தை நமக்காக பாடம் எடுத்து உரைத்த அதிசயம் இந்த வாக்குகள். வாருங்கள் மகத்தான வாக்கின் உள் செல்வோம்.)
குருநாதர்:- அப்பனே தர்மம் என்பது என்ன? தானம் என்பது என்ன?
அடியவர் 7:- கேட்டுக் கொடுத்தால் தர்மம். கேட்பதற்கு முன்னால் கொடுத்தால் தானம்.
( இப்போது குருநாதர் தர்மத்தை குறித்த அனுபவம் உணரும் மிக எளிய பாடத்தை அனைவருக்கும் எடுக்க ஆரம்பித்தார்கள். இங்கு வரும் அடியவர் 7 , நீங்கள் என்று வைத்துக்கொண்டு வாக்கினை நன்கு உள் வாங்குங்கள். மகத்தான புரிதல் உண்டு.)
குருநாதர்:- அப்பனே உன் கையில் என்ன இருக்கிறது?
அடியவர் 7:- ( அடியவர் கையில் cell phone இருந்தது)
குருநாதர்:- அப்பனே அதை மற்றவனிடத்தில் கொடுத்துவிடு அப்பனே.
அடியவர் 7:- ( பக்கத்தில் உள்ளவரிடம் கொடுத்து விட்டார் )
குருநாதர்:- இப்பொழுது அவன் தனக்கே சொந்தமாக்கி விடலாமா என்ன?
அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )
அடியவர் 7:- phone தானே..
குருநாதர்:- அப்பனே ஆனால் மனதில் குறு குறு என்று ( தவிக்கும் ) இருக்கும் என்பேன் அப்பனே.
அடியவர்கள்:- ( பலத்த சிரிப்பு அலை )
குருநாதர்:- இதுதான் அப்பா, பல பேர்கள் கொடுக்கிறார்கள் அப்பனே. ஆனால் மனதில் சரியில்லாமல் ( சந்தோசம் இல்லாமல் ) கொடுக்கிறார்கள் அப்பனே. இதனால் இப்படிச் செய்தால் அப்படியே தர்மம் ஆகாது அப்பா.
நாடி அருளாளர் :- ( அகத்தியர் மைந்தன், அருமையான முழு விளக்கம் அளித்தார்கள் அனைவருக்கும். அதாவது ஒரு பொருளை / உதவியைச் செய்துவிட்டால் மகிழ்ச்சி அடைந்து அதனை நாம் உடனே மறந்துவிடவேண்டும். )
குருநாதர்:- அப்பனே இப்படித்தான் பின் செய்து கொண்டிருக்கின்றார்கள் எண்ணி எண்ணி. அதனால் எப்படியப்பா தர்மக் கணக்கில் சேரும். தரித்திரங்கள் தான் மிச்சம்.
நாடி அருளாளர் :- என்ன உதவி செய்தாலும் , எதையும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும்.
குருநாதர்:- அப்பனே வாங்கிக்கொள் அப்பனே.
அடியவர் 7:- ( cell phone அதனைக் கொடுத்தவரிடம் இருந்து மீண்டும் வாங்கிக்கொண்டார் )
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )
குருநாதர்:- அப்பனே மீண்டும் கர்மா இப்படித்தான் வரும் அப்பா.
அடியவர் 6:- :- cell phone வந்த மாதிரி கர்மா வரும்.
நாடி அருளாளர்:- செய்ததை நினைத்தாலே கர்மா வரும்.
( கருணைக்கடல் அடுத்து தானம் குறித்த பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்)
குருநாதர்:- அப்பனே தானம் என்றால் என்ன?
அடியவர் 7:- எதையும் எதிர் பார்க்காமல் கொடுப்பது தானம்.
குருநாதர்:- இல்லை அப்பா. யாராவது ஒருத்தரை சொல்லச் சொல் அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete