குருநாதர்:- அவை மட்டும் இல்லாமல் ஒருவனுக்கு வேலை வேலை என்கிறார்கள். அப்படியே அவனுக்கு வேலை நன்றாக கொடுத்து விட்டால் அவனுடைய பிள்ளை வாழ்க்கை கெட்டுவிடும். அதனால் இறைவன் பக்குவமாக செயல்படுத்தி கொண்டிருக்கிறான். இது சரியா தவறா?
அடியவர்:- சரிங்க
குருநாதர்:- அதனால் அப்பனே இறைவன் செய்வது சரியானதே. புரிந்துகொள்ளுங்கள். புரியாமல் வாழ்ந்து வந்தால்தான் கஷ்டங்கள். புரிந்து வாழ்ந்து வந்தால் இன்பங்கள் அப்பா. ஆனால் கொடுத்த அறிவை சரியாக பயன்படுத்துவதே இல்லை. அதனால் நீங்கள் ஐந்து அறிவுதான் பயன்படுத்துகின்றனர் அதனால் கஷ்டங்கள் வந்து தீரும் அப்பா. ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள்.சிந்திக்க வேண்டும் ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்பது கூட சிந்திக்க வேண்டும். பசித்தால் ஒடி ஓடி சென்று உணவு அருந்தி விடுகின்றீர்கள். ஆனாலும் கஷ்டங்கள் வந்தால் மட்டும் அப்பனே தேடி அலைவது ஏன் மற்றவர்களை ? இதை நிச்சயம் கூற வேண்டும் அனைவரும்.
அடியவர்:- ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்று நாங்க உதவிக்கு போகின்றோம். உதவி செய்கிறோம். அவங்களாலே எங்களுக்கு கஷ்டம் வருது ஒருத்தருக்கு பணம்….
குருநாதர்:- சாதாரணம் இல்லையப்பா நீ செய்தவினைதான் அப்பா. நீ ஏன்உதவி செய்கின்றாய் அப்பனே. முற் காலத்தில் நீ அவனை ஏமாற்றி இருக்கிறாய். இப்பொழுது அவனுக்கு நீ உதவி செய்கின்றாய். அவ்வளவுதான் அப்பனே. கர்மா தீருகின்றது போதுமா?
அடியவர்:- சரிங்க
குருநாதர்:- என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள் பணத்தை அவனுக்கு கொடுத்தேன் என்று ஆனால் முன் ஜன்மத்தில் உன்னிடம் அவன் ஏமாற்றப்பட்டிருப்பான். இவ் ஜென்மத்தில் அவனிடம் ஏமாறுகின்றாய். அவ்வளவுதான் அப்பனே. தீரந்தது வினை அப்பனே.வினை தீராமல் அப்பனே இறைவனை காண முடியாது. இதனால் முதலில் இறைவனை நெருங்க நெருங்க, நீ நல்லது செய்ய செய்ய அப்பனே உன்னிடம் முன் ஜென்மத்தில் பிறந்த ஆன்மாக்கள் உன்னை வந்தடையும் என்பேன் அப்பனே, அவ் பழியை தீர்த்துக் கொள்ள போதுமா அப்பனே? அதனால்தான் நன்மைகள் செய்ய செய்ய கஷ்டங்களும் வருகிறது. ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். பிறவி பலம் ( கர்மா ) தீருகின்றது. அவ்வளவுதான் அப்பனே.
அடியவர்:- புரியுதுங்க
குருநாதர்:- (தனிப்பட்ட வாக்குகள்) அம்மையே ஏதாவது வார்த்தையை அனைவருக்கும் எடுத்துரை.
அடியவர்:- திரும்பத் திரும்ப என்ன சொல்றதுன்னு தெரியல. இந்த மனுச பிறவி எடுத்ததே கர்ம வினைகள அனுபவிக்கிறதுக்குத்தான். அப்போ அந்த கர்ம வினைப்படிதான் எல்லாமே நடக்குது. அதுனால என்ன செய்யணும்.
திருப்பி திருப்பி அதுதான் அகஸ்திய பெருமான் பாதத்தை பிடிச்சுகிட்டு எதை வருமோ அப்படியே ஏத்துக்கலாம். நீங்க சொன்ன மாதிரி கர்மா படிதான் பணம் கொடுத்தாங்கன்னா, நம்ம முன் ஜெனமத்தில நம்ம அவங்க கிட்ட வாங்கிட்டு மாயமாகி நம்ம ஏமாத்தி இருப்போம். அவங்க வர்ரது பழி தீக்குறதுக்குத்தான். அதுக்கு முன்னாடி அவங்களுக்கு என்ன குடுத்தோமோ அதான் திரும்ப வருது ஆனா. மன வேதனபட்டுதான் இருக்கோம், இருந்தாலும் நம்ம பண்ணது அவங்க குடுக்குறாங்க. அத நம்மால் ஏத்துக்க முடியல. அப்போ ஏத்துக்கிட்டுதான் ஆகனும் வேற வழியே இல்ல. இறைவன் பாதத்த பிடிச்சு பிடிச்சு நான் சொன்ன நல்லதை நாடி போகும்போது அதுக்கு தகுந்த மாதிரி கஷ்டங்கள் வருதுன்னா இறைவன் நம்மை நெருங்குகின்றார் என்று அர்த்தம். அப்ப நம்ம அப்படியே போயிகிட்டே இருக்க வேண்டுயதுதான். இறை வழியில்.
சேவை பாதையில. நல்லவங்க வழியில இதுக்குள்ள வர்ரது (நாடி வழி) பெரிய விசயம். சாதாரண விஷயம் கிடையாது. இந்த மாதிரி அகஸ்தியர் வாக்கு கேட்பது பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் கிடைக்கும்.
நமக்கு அந்த மாதிரி கிடைச்சிருக்கு. அப்ப இதையும் நெருங்கிவிட்டோம். அந்த கஷ்டம் வந்தாலும் இந்த ஜென்மத்துல நம்மள கரை சேக்கிறதுக்கு இறைவன் வழி விடுகின்றார். அத நம்ம கொஞ்சம் இருக்கமா பாதத்த பிடிச்சுகிட்டோம்னா வேற வழியே இல்லை.
குருநாதர்:- அப்பனே புரிகின்றதா? அப்பனே அனைத்திற்கும் யான் என்று கூற அமைதியாகத்தான் இருக்கின்றேன். அதனால் நீங்கள் கேளுங்கள் அப்பனே. ஆனாலும் ஒவ்வொரு மனிதன் கூட என்ன உள்ளது என்பதை யான் அறிந்து சொல்லி விடுவேன். மீண்டும் இவ்வம்மை சொன்னாளே மீண்டும் மீண்டும் என்று அறிய இதைத்தான் கேட்க கேட்க போகிறீர்கள் என்று அதனால் யான் சொல்லிய பிறகும் அதைத்தான் (கர்மத்தை) நீங்கள் கேட்பீர்கள் என்பதை நான் அறிவேன் அப்பனே. அதனால் நீங்களே கேளுங்கள்.
அடியவர்:- ஐயாவோட பரிபூரண ஆசிர்வாதத்தால நான் அடுத்த படி ஆன்மிகத்தில் எடுத்து வைப்பதறக்கு….
குருநாதர்:- அம்மையே உன் கடமையைச் செய்து கொண்டே வா யாங்களே வருவோம் அம்மையே அவ்வளவுதான்.
குருநாதர்:- (தனிப்பட்ட கர்ம வாக்கு) நல்லது செய்தாலும் அவ்கர்மா விடாதப்பா சொல்லிவிட்டேனே புரிந்துகொள்.நன்மையாகவே யான் காத்துக் கொள்கின்றேன் உன்னை.
அடியவர் கேள்வி:- …………
குருநாதர்:- விதியில் இல்லாத எல்லாம் கேட்கிறாய். ஏதாவது ரூபத்தில் ஏற்பாடு செய்கிறேன். பொறுத்திருக்க வேண்டும்.
குருநாதர்:- (இங்கு உள்ள அனைவரும்) முதலில் ஞானத்தை பற்றி பேசி இருக்க வேண்டும். இறைவன் பலம், இறைவன் பலத்தை எப்படி பெற்றிருக்க வேண்டும் என்பது யாராவது ஒருவர் கூறியிருந்தால் அவ் இறைவன் அருள் மூலம் அப்பனே இன்னும் ஏற்றங்கள் ஆனால் எது என்று புரியாமல் கூட வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறான் என்று ஒருவன்.
தொழில் இருந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியுமா? இவை எல்லாம் தவறப்பா. படைத்த அவனுக்கு தெரியும். படைததவனுக்கு தெரியும் என்றெல்லாம் அப்பொழுதில் இருந்தே யான் சொல்லியிருக்கேன் அப்பனே. தொழில் இருந்தால் மட்டுமே எந்த ஊரு பணம் சம்பாதிக்கலாம். சில நாட்கள் வாழலாம் அவ்வளவுதான் அப்பனே காசுகள் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.பின் கடைசியில் கர்ம அடித்த அவ்காசுகள் எல்லாம் போய்விடும அப்பனே. மீண்டும் முதலில் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே. இறை பலத்தைத்தா. இறை பலத்தை எப்படி பெற்றிருக்க வேண்டும் என்பது அதை கேட்டால் அப்பனே நீ மனிதன். பின் அதை கேட்காவிடில் அப்பனே ஒன்றுமில்லை அப்பா. வேலையும் வரும் ஆனால் போய்விடும். என்ன செய்வாய்? அப்பனே. எதுவுமே நிரந்தரமில்லை என்பேன் அப்பனே. ஏன் உன் உயிரே உனக்குச் சொந்தமில்லாத போது இவை எல்லாம் சொந்தமென்று எண்ணி கொண்டிருக்கிறானே இதைவிட பைத்தியக்காரன் இங்கு உண்டா?
அடியவர்:- ( அமைதி )
குருநாதர்:- உடம்பும் உன்னிடத்தில் இடத்தில் இருக்கின்றது. அப்பனே உயிரும் உன்னிட த்தில் இருக்கின்றது. இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது அப்பா. யார் ஒருவன் மற்றவருக்கு பிரயோஜனமாக இருக்கின்றானோ அவன்தனக்குத்தான் இறைவன் அனைத்தும் கொடுப்பான் அப்பனே தெரிந்துகொள். உந்தனுக்கு வேலை கொடுத்தாலும் அப்பனே மற்றவருக்கு பிரயோஜனமாக இருக்க மாட்டாய் சொல்லிவிட்டேன். அதனால் முதலில் நன்மை செய்து கொள்ள கற்றுக்கொள். இப்படி கற்றுக்கொண்டே வந்தால் உயர்வு பெறுவாய் என்பேன் அப்பனே. கர்மமும் நீங்கிவிடும் அழகாக. இறைவனுக்கு தெரியும் அப்பனே. யாருக்கு என்ன தர வேண்டும் என்று கூட. அனைவருக்குமே கொடுக்கின்றாரகள் என்று நீ எண்ணி விடலாம். ஆனாலும் அப்பனே கொடுத்து இறைவன் கெடுப்பான் அப்பா சமயத்தில் சொல்லிவிட்டேன் அப்பனே. முதலில் அப்பனே இறை பலத்தை அப்பனே இன்றளவில் அனைவருமே வேலைக்குத்தான் செல்கின்றார்கள். ஆனாலும் சந்தோஷம் உண்டா என்றால் இல்லையப்பா. அங்கு சென்று பல தவறுகள் ஆனால் வயது ஆக ஆகத்தான் அப்பனே அதன் அருமை பெருமைகள் தெரியும் அப்பனே. கஷ்டங்கள் வரும் என்பேன். அப்பொழுதுதான் இறைவனை தேடி தேடி அலைகிறார்கள். ஆனால் கஷ்டங்கள் போகுமா? அப்பனே போகாது என்பேன் அப்பனே.
அதனால் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். என்னென்ன தவறுகள் செய்திருக்கிறேன் என்று அதற்காகத்தான் தண்டனை. மனிதன் மனிதனிடம் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் இறைவனிடம் இருந்து தப்பிக்க முடியாதப்பா யாராலும் சொல்லி விட்டேன் அப்பனே. (மனிதன்) மூளையில் ஒரு செல் இருக்கிறது அப்பா. அவை எல்லாமே பதிவுகள் செய்து கொண்டே இருக்கின்றது . அப்பனே சாதாரணமானவன் இறைவன் இல்லை என்பேன் அப்பனே.
அதனால் செய்த தண்டனைகள் அப்படித்தான் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே. பிறக்கும் பொழுதே அச்செல்லை அப்படியே புகுத்தி விடுகின்றான் அப்பனே அதுதான் கர்மா அப்பா முன் செய்த ஜென்மங்களில். அதற்கு தகுந்தார் போல் உன்னை அழைத்துச் செல்லும் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. இன்னும் விளக்குகின்றேன் அப்பனே. அதனால் தவறுகள் செய்யாதீர்கள் என்பேன் அப்பனே. நல்லது செய்யுங்கள் அப்பனே மற்றவர்களுக்கு.நல்லது செய்தாலும் நிச்சயம் கெடுதல் நடக்கும் அப்பா. ஏன் என்றால் பதிவு அதுபோல அப்பனே. அதனால் அப்பனே உன்னை இயக்குவது யார்?
அடியவர்கள்:- இறைவன்
குருநாதர்:- அப்பனே அதனால் உன்னால் என்ன செய்ய முடியும்? கூறு.
அடியவர்:- (எங்களால்) ஒன்றும் செய்ய முடியாது
குருநாதர:- அப்பனே அப்போது நீங்கள் சாதாரண பொம்மைகள்தான் என்பேன் அப்பனே. அப்பொழுது என் வினை தீர வேண்டும் இன்னும் என்ன என்ன தேவை என்று கூற ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் உள்ளது அப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.
கஷ்டங்கள் இல்லாமல் இப்புவிதன்னில் அப்பனே அதாவது புவிதன்னிற்கு இறைவன் (எந்த உயிரையும்) அனுப்ப மாட்டான் சொல்லிவிட்டேன். அப்போது உங்களுக்கு மட்டும் தான் கஷ்டங்களா என்ன அப்பனே? நீங்கள் ஒரு துளியாவது புண்ணியங்கள் செய்திருக்கின்றீர்கள். அதற்காகத்தான் என்னிடத்தில் இருந்து உங்களுக்கு வாக்குகள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் புண்ணியம் செய்யாதவர்கள் அப்பனே எவ்வளவு பாடுபடுவார்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே.
அடியவர்:- அமைதி
குருநாதர்:- அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மனிதப்பிறவி எதற்காக? அப்பனே ஒவ்வொருவரின் கூட அப்பனே கடமை இருக்கிறது அப்பனே. நீ என்ன செய்தாயோ அதற்கு தண்டனைக்காகத்தான் இப்புவிதன்னில் வந்துருக்கின்றாய். அவ்தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் அப்பனே. இதற்கு பரிகாரங்கள் தேவையில்லை. அப்பனே பரிகாரம் செய்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. அப்படியே ஆகிவிட்டாலும் அப்பனே மீண்டும் அடித்தால் நீங்கள் தாங்கப் போவதும் இல்லை என்பேன்.
அடியவர்:- (அமைதி)
குருநாதர்:- அதனால் நல்லதையே செய்து கொண்டிருந்தாலும் ஏன் கெடுதல் வருகின்றது? என்று யான் சொல்லி விட்டேன். மீண்டும் கேட்கலாம்.
அடியவர்:- நானும் என் வீட்டுக்காரும் வந்து கொண்டிருந்தோம் பஸ் ஸ்டானட் பாலத்தில். அப்போ ஆட்டோல போன ஒருத்தர் வந்து ஆட்டோ போயிட்டு இருக்கு ரொம்ப பிசி ஆன இடத்தில எங்க கைய காட்டி நிறுத்தி என் கைல விபூதி கொடுத்ததாரு. குங்குமம் குடுத்தாங்க. வேற யாருமே ஆட்டோல இல்ல. குடுத்து நாங்க இறங்கி போய் வாங்கினேன். (நான்) இன்னொரு வீடு வாங்குவேன் அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் நாங்க வெளிய வந்து நின்னோம். தட்சணை கேட்டாரு ₹10 ரூவா கொடுத்தேன். நான் பிச்சக்காரன் இல்ல. ஹோமம் பண்ணனும். நெய் வாங்க காசு கொடு அப்டீன்னு சொன்னாரு. 50 ரூவா கொடுத்தேன். (அவர் கொடுத்த) அந்த விபூதியை நான் வைச்சிருக்கேன். இது யாரு என்னன்னு தெரியல.
குருநாதர்:- அம்மையே புரிந்து கொள்வாய் என்பேன். புரியாவிடில் யான் எடுத்துரைக்கின்றன் அம்மையே. அம்மையே இதனை பற்றி அனைவருக்கும் அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே இறைவன் எவ்ரூபத்திலும் வரலாம். நீங்கள் அதற்கு சரியாகவே வழி நடந்து சென்றாலே இறைவன் உன்னை நோக்கி வருவானப்பா. உன் கருமத்தை அப்படியே எடுத்துச் செல்வான் அப்பா. அதனால் தகுதி உடையவராக இருங்கள் அப்பனே யாருமே தகுதி இல்லை அப்பா. எப்படி தகுதியாக இருக்க வேண்டும் அப்பனே எதையும் எண்ணாமல் அப்பனே நடப்பது நடக்கட்டும் என்று இருங்கள் அப்பனே போதுமானது. அப்பனே என்ன சொல்லவேண்டும் கூறுங்கள்?
அடியவர்:- எதையும் நினைக்காம இருந்தா இறைவனே தேடி வந்து…
குருநாதர்:- எது நடக்குமோ அது சிறப்பாக நடக்கும் அப்பனே. சொல்லி விட்டேன். இதை ஏற்கனவே முன் உரைத்தவை தான் அப்பனே. உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது அப்பா. இயக்கும் சக்தி அதாவது அப்படியே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே. உயிரே சொந்தமில்லாதபோது பின் அனைத்தும் சொந்தம் என்று மனிதன் இயங்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. உயிரை எப்போது எடுப்பான் என்பதைக்கூட.இறைவன் மட்டுமே சித்தர்கள் மட்டுமே அறிவார்கள் என்பேன் அப்பனே. நீங்கள் வாழ யாங்கள் வாழ வேண்டும். தொழில் வேண்டும், திருமணங்கள் வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள் ஆனால் என்ன கஷ்டம் வரும் என்று உங்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் இறைவனுக்கு தெரியும். ஆதனால்தான் அப்படியே சில வினைகள் அனுபவிக்கட்டும் என்று தள்ளி தள்ளி சென்று கொண்டே அதனால அப்பனே செய்வது சரியா தவறா.?
அடியவர்:- சரி
குருநாதர்:- அதனால் தள்ளிக்கொண்டே செல்கின்றதே இதற்கு பரிகாரங்களா? அப்பனே. இறைவன் கோபப்பட்டு விட்டால் மீண்டும் நடக்கப் போவதில்லை. இதனால் பல பேர் இப்படித்தான் அப்பனே பரிகாரங்கள் செய்து செய்து இறைவனுக்கே கோபம்.
இவன் இன்னும் திருந்தவில்லை. இதனால் எதையும் இவன்தனக்கு கொடுத்தாலும் ஒழுங்காக வாழ போவதில்லை. அதனால் ஒதுக்கியே விட்டான் அப்பனே என்ன செய்வது என்று தெரியாது ஆனால் யான் இறைவனை பிடித்தேனே பரிகாரம் பண்புடன் பின் செய்திட்டேனே என்றெல்லாம் ஏக்கங்கள் அப்பனே எதனால் என்பதை கூட. அதனால் அப்பனே நீ செய்த வினை உந்தனுக்கே ஒரு நாள் எமன் ஆகும் அப்பனே.
இதை அனைவருமே சொல்வார்கள். அதனால அப்பனே பின் ஏன் அறிவு கொடுத்திருக்கின்றான் என்று யாருக்காவது தெரியுமா? அப்பனே. இல்லை அவ் அறிவை இன்பத்திற்காகவே பயன்படுத்துகின்றான் மனிதன். அப்படி பயன்படுத்தினால் அப்பனே துன்பம்தான் அப்பா. அப்பனே யோசிக்க வேண்டும். ஏன்? ஏதற்கு கஷ்டங்கள் வருகின்றன? கூட அதை சரியாக யோசித்து விட்டால் வெற்றி இல்லை என்றால் தோல்வி அப்பா. இதனை பல முறையும் யான் சொல்லி விட்டேன். அதனால் உங்கள் வாழ்க்கை இறைவனிடத்தில் இருக்கும் பொழுது அப்பனே என்று அறிய நீங்கள் விரும்பியது கிட்டிவிடுமா என்ன?
சிறு வயதில் என்னென்ன தவறுகள் ஆனாலும் அப்பனே ஏவை என்றும் புரியாமல் கூட எதை என்றும் தெரியாமல கூட ஆனாலும் அனைத்தும் ஒரு செல் ( மூளையில்) இருக்கின்றது என்று சொல்லிவிட்டேன். பதிவுகள் அங்கே அமைந்திருக்கின்றது அதற்கு தகுந்தவாறே அப்பனே இதனால் இறைவனை குறை கூறுவதா?
அடியவர் :- ( விளக்க புரிதல் பேச்சுக்கள். எல்லாமே மூளையில் பதிவு ஆகிக்கொண்டே இருக்குது)
குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் அப்பனே முன்பே இறைவன் ஆனால் இப்பொழுதோ அதை புதுமையாக அப்பனே புதுமை என்று சொல்லிவிட்டார்கள்.
அடியவர்:- ( நாம் என்ன என்ன தவறுகளை செய்தோமோ அது பதிவு ( recording) ஆகிவிட்டது. அப்போ அதுக்கு தகுந்த மாதிரி தண்டனை அனுபவித்து தான் தீரனும்.)
குருநாதர்:- ஆனாலும் அதை எடுக்க வேண்டும். எப்படி எடுக்க வேண்டும் என்று தான் உங்களை இப்பொழுது யானே பின் கேட்டுக் கொள்கின்றேன்?
அடியவர்கள:- ( சில உரையாடல்கள்) அத வெளிய தூக்கி போடனுமா? அது எப்படி தூக்கி போடணும்னு கேக்குறாங்க. அந்த போன்ல மெமரி கார்டு இல்ல. ஆமா இந்த செல்ல இப்போ வந்து எல்லாமே நமக்கு அதுல வந்து ஸ்டோர் ஆயிடுச்சு. அது வெளியேறனும். அதான் அய்யா கேட்கின்றார். எல்லா பிறப்பும் மெமரி காடில் ஸ்டோர் ஆகி இருக்கு. எப்டி அத நீக்கனும்னு கேக்குரார்
அடியவர் 2:- அதையும் அவர்தான் சொல்லனும். அவரைத்தவிர யாருக்கு தெரியும்
குருநாதர்:- அப்பனே சிறிதாவது மூளைக்கு வேலை கொடுங்கள் என்பேன். அப்போதுதான் அறிவு வளரும். அதனால்தான் சொன்னேன் அப்பனே ஆள்தான் வளர்ந்து விட்டாய் அறிவே இல்லை அப்பா என்று மீண்டும் அதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறாய் அப்பனே.
அடியவர் 1: - இறைவனால தான் முடியும்.
அடியவர் 2:- தர்மம் செஞ்சால்…
அடியவர் 3:- (அம்மை ஓருவர் உரைத்தது) ஒரு உப்பு தண்ணி இருக்குதுனா அது நல்ல தண்ணி ஊத்தி ஊத்தி நம்ம காலி பண்ணனும். அப்போ நிறைய நல்லது பண்ண பண்ண பண்ண அந்த கர்ம வினைகள பத்தி அந்த செல்களை பற்றி நம்ம கவலைப்பட வேண்டியதில்லை
குருநாதர்:- அப்பனே , அம்மையே அனைவருக்குமே இதன் பதில் தெரியாதுதான். ( ஒரு அடியவரை ஒரு புனைப்பெயர் சொல்லி குறிப்பிட்டு) சொல்கின்றேன் உந்தனுக்காக தெரியும் எதை என்றும் அறிய தெரியாது. அப்பனே இதற்கு பதில் கூறு.?
அடியவர் 1:- தெரியும். ஆனா தெரியாது.
அடியவர் 2:- எனக்கும் தெரியலையே.
நாடி அருளாளர்:- சொல்லுங்க யாராவது தெரியும் ஆனா தெரியாது.
அடியவர் 3:- கர்மமா இருக்கு ( என்று எங்களுக்கு தெரியும் ஆனால்) அது எவ்ளோ இருக்குன்னு எங்களுக்கு தெரியாது.
குருநாதர்:- அப்பனே இதனையும் எடுத்துக்கொண்டால் அப்பனே சரி வகையானது. இதனால் அப்பனே ஆசைகளை அப்பனே என்று கூற பெருக்கிக்கொண்டே சென்றால் அப்பனை அவ் செல்லில் எதை என்று கூற பதிவுகள் அதிகமாகிவிடும் என்பேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete