குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- நெற்றியின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் வரை இழுக்கனும். ( சிறிது நேரம் கழித்து பசுஞ்சாணத்தின் மூலம் பெறப்படும் திருநீற்றின் மகிமையை எடுத்து உரைத்தார்)
பசு மாட்டுக்கு வந்து பாத்திங்கன்னா அம்மா, ஏன் குருநாதர் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கி குடுக்கச் சொல்கின்றார் என்றால், நமக்கெல்லாம் சிரசில் ஒரு சுரப்பி இருக்கு. பசு மாட்டுக்கு 18 சுரப்பி இருக்கின்றது. அதனாலதான் ரத்தத்தை பால் ஆக மாற்றுகின்றது. அதுனால தான் சகல தெய்வங்களும் பசு மாட்டில் குடியிருக்கு என்று சொல்வது எதனால் என்றால் இறை அருள் முழுவதும் நிரம்பின ஒரே உயிரினம் பசு மாடு. அப்போ அந்த பசு மாட்டின் சாணத்தை நாம பூசும்போது அதில் காந்த சக்தி இருக்கு. நம் உள்ளுக்குள் இருக்கக் கூடிய கழிவுகள், சிரசில் நம்மிடம் உள்ள மாயைகள், மாயை என்பது என்ன? கழிவுகள். நம்ம தினசரி நம்ம மூளை இயங்கினால் , இயக்கம் என்று ஒன்று இருந்தால் எரிபொருள் என்ற ஒன்று தேவைப்படும். எரிபொருள் என்று ஒன்று இருந்தால் கழிவு என்று ஒன்று உண்டு. சூரிய ஒளிதான் எரிபொருள். அப்போ இந்த உடல் கழிவானது எல்லாம் மூளையை சுற்றி படிகின்றது. விபூதியை பூசும் பொழுது திருநீற்றில் உள்ள இந்த காந்த சக்தி அந்த கழிவை ஈர்த்து அழிச்சு வியர்வையாக வெளிய தள்ளிவிடுகின்றது. அதுக்குதான் வந்து பெரியவங்க திருநீறு பூசனும் என்று சொல்கின்றார்கள்.
அடியவர்:- பசுமாட்டில் நாட்டு பசு் மற்ற பசு இருக்குல்ல, எல்லா பசுவும் ஒரே மாதிரியா , இல்ல எப்படிங்கய்யா?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- பசு என்றால் பசுதான். அதுல வேறுபாடு இல்ல.
அடியவர்:- அகத்திக்கீரை கோயில் மாடு, எந்த மாட்டுக்கும் கொடுக்கலாமா?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- எந்த மாட்டுக்கும் கொடுக்கலாம். மாடுகளில் பேதம் கிடையாது. பசு மாட்டுக்கு கொடுக்குறது சிறப்பு. அதுவும் அகத்திக்கீரை கொடுப்பது சிறப்பு. இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றுதான். படைப்பில் பேதம் கிடையாது.
அடியவர்:- ( இதனிடையில் விபூதி அனைவருக்கும் கொடுக்கப்பட்ட தகவலை நாடி அருளாளரிடம் கூறினார்கள் அடியவர்கள்) கொடுத்துட்டாங்க ஐயா.
குருநாதர்: அப்பனே இப்பொழுது நிறுத்தினானே அப்பனே பின் அதாவது அகத்திக்கீரை எங்கு கொடுக்கலாம் என்று அப்பனே யான் தெரியாமலேயே கேட்கிறேன். உணவை இருப்பவருக்கு கொடுப்பதா? இல்லாதவனுக்கு கொடுப்பதா?
அடியவர்கள்:- இல்லாதவனுக்கு கொடுக்கனும் ஐயா.
குருநாதர்:- அப்பனே அனைவருமே இல்லாதவர்கள்தான் அப்பனே. வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அப்பனே நீ எப்படி தீர்மானிக்கலாம் அப்பனே.?
அடியவர்:- தீர்மானிக்க முடியாது.
குருநாதர்:- அப்பனே இவன் எப்படி தீர்மானித்தான் என்று இவனையே கேள் அப்பனே பார்த்துக் கொள்வோம்.
அடியவர்:- எனக்கு தெரியாது ஐயா
அடியவர்:- அதுதான் ( உங்களை ) கேள்வி கேட்கின்றார் ஐயா.
குருநாதர்:- அப்பனே இதுபோலத்தான் இவன் தனக்கு ஒன்றும் தெரியாமலே இவன் வாயாலேயே கெட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே. அதனால் வாயை பூட்டி வைக்க சொல் இவன்தனை. போதுமானது தானாகவே அனைத்தும் நடக்கும் என்பேன் அப்பனே. அதனால் இவன் மௌனத்தை காத்தாலே போதுமானது அப்பா இவன். சொல்லச்சொல் அப்பனே.
அடியவர்கள்:- (அந்த அடியவரை அவர் வாழ்க்கையில் இனிமேல் மௌனம் காக்க சொன்னார்கள்.)
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ( அந்த அடியவரை பார்த்து உரைக்க ஆரம்பித்தார்) ஐயா மௌனம் என்பது பெரிய விசயம் ஐயா. நிறைய பேர் மௌனசித்தர் என்று சொல்கின்றார்கள் அல்லவா. பேசுறதுனால நம்ம வந்து நிறைய வந்து காந்தசக்தி விரையம் செய்கின்றோம். நமக்குள் இருக்கும் இறை சக்தியை நிறைய விரையம் பண்றோம்.
அப்ப பேச்சு இல்லாமல் இருக்கும்போது நமக்குள்ள நிறைய சக்தி கூடும். அதனாலதான் மௌனம் என்பது சாதாரன விசயம் கிடையாது. அது பெரிய விஷயம். இன்னும் வந்து நிறைய பேருக்கு வந்து எப்படி பேச்சு நமக்குள் எப்படி உருவாகுதுனு அப்டீன்னு தெரியாது. எப்படி பேசுறாங்க சொல்லுங்க.?
அடியவர்:- சப்தம் ஐயா
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- சப்தம் எப்படி உருவாகுது?
அடியவர்:- நாபியில் உருவாகுது
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- நாபியில் உருவாகுது சரி. பேச்சாக எப்படி convert ஆகுது?
அடியவர்:- காத்து மூலமாக
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- காற்று என்று சொல்லுகின்றீர்கள் இல்லையா. அந்த காலத்துல இங்கள் எண்ணங்கள மூச்சு வழியா வருது. மூச்சுதான் வார்த்தையை தயாரிக்கிறது. அந்த மூச்சு வார்த்தையை தயாரித்த பின்பு அது இந்த மூச்சுக்குழலில் பட்டு அது வார்த்தையாக convert ஆகுது. சரி இப்போ அதுக்கு தேவையான ஆற்றல் இறை ஆற்றல். இப்போ நாம அந்த மூச்சு என்று சொல்கின்றோம் அல்லவா, அதில்தான் இறை ஆற்றல் காந்த சக்தி கலந்து இருக்கு. நாம் அந்த காந்த சக்தியை , இறை ஆற்றலை , அதை அனாவசியமான விஷயங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில் வெளியில் பேசும் பொழுது நம்ம (இறை) சக்தியானது விரையம் ஆகின்றது. அப்போ நாம அமைதியா இருக்குறப்போ அந்த (இறை) சக்தி நமக்குள்ள வைத்து இருக்கும்போது ( தேக்கி சேமித்து வைக்கும் போது ) நம்ம உள் இருக்கிற கழிவுகள் நீங்கி இறை அருள் பெறுவோம். அதைத்தான் ஐயா நம்மை மௌனம் ஆக முடிந்தவரை இருக்க சொல்கின்றார்.
குருநாதர்:- அப்பனே அனைவருமே பின் சொன்னவர்கள் இவன் சொன்னதை கேட்டீர்களா அப்பனே. மீண்டும் அப்படியே நீங்கள் ( அவன் சொன்னதை) சொல்ல வேண்டும் அப்பனே.யாராவது ஒருவன் சொல்லலாம்.
அடியவர்:- இறைசக்தி வந்து மூச்சு காத்து கூட கலந்து இருக்கு. அது சப்தமாக வெளிப்படுது. அதை எந்த அளவுக்கு சப்தத்தை அமைதியாக ( மௌனமாக பேசாமல் நாம் ) காத்துக் கொள்கின்றோமோ அந்த அளவுக்கு இறை சக்தி நமக்கு நன்மை நமக்குள் இருந்து அளிக்கும்.
குருநாதர்:- அப்பனே சிறிதளவே சொன்னாய் அப்பனே. ஆனால் அனைவரும் ஏதோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தன் சுயநலத்திற்காகவே அப்பனே. இதுபோலத்தான் அப்பனே இறைவன் அப்பனே அனைவருக்குமே கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன். ஆனாலும் அப்பனே மனிதனின் மனது என்னென்னவோ நினைக்கிறது. அதனால்தான் அப்பா இறைவன் கொடுப்பதில்லை. ஒருவன் சொன்னால் சரியான வழியை சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பனே. ஏற்றுக் கொள்ளாதனால் தான் பிரச்சனையே அப்பனை. மாடு போல் கத்திக்கொண்டே இருக்கிறான் அவன். ஆனால் மீண்டும் சொல் அனைவருக்கும்.
(அங்கு உள்ள அனைவரும் இந்த முக்கிய செய்தியை உள் வாங்கவில்லை என்று கருணைக்கடல் மீண்டும் அனைவருக்கும் எடுத்துச்சொல்ல அமிர்த வாய்ப்பு அளித்தார்கள் முன்பு குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவருக்கு )
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- நம்ம எப்படி பேசுறோம்? நம்ம நிறைய வந்து பாத்திங்கன்னா பேசிட்டு இருக்கிறோம். யாருமே நாம என்ன செய்றோம்னு யோசிக்கிறது இல்ல. எப்படி நமக்கு பேச்சு வருது? என்றைக்காவது யோசிச்சிருக்கோமா ( நமக்கு ) உள்ள?
யாருமே யோசிச்சது கிடையாது. என்ன என்வோ பேசுறோம். தேவை இல்லாத விசயங்களை கூட. நம் எண்ண அலைகள் பிரபஞ்சம் முழுவதும் நமது பேச்சு முழுவதும் நிரந்தரமாக பதியப்படுகின்றது. அதை யாருமே உணர்வது இல்லை. நாம் நல்லது நினைத்து நல்லதை பேசுனோம் என்றால் அந்த நல்லது பேச்சு/எண்ண அதிரவு அலைகள் நம்மை சுற்றி பரவி இருக்கும். அத்துடன் பிரபஞ்சத்தில் முழுவதும் நிறைந்து , பரவி இருக்கும். தீயது பேசும்போது தீயது ( பிரபஞ்சம் முழுவதும்) பரவி இருக்கும். கலியுகம் என்பதை என்ன சொல்கின்றோம்? கிட்டத்தட்ட நூற்றுக்கு 90 சதவிகிதம் பேர் எண்ணங்கள் தீயவையா இருக்கின்றதனால்தான், தீய அலைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவிகிடப்பதால் எல்லாருமே தீயவராக மாறிக்கொண்டு வருகின்றார்கள்.
எப்போ நாம எல்லாரும் பிறருக்காக குருநாதர் ஐயா சொன்ன மாதிரி தான் (நாம் என்ற எண்ணம்) இல்லாம பிறருக்காக அந்த எண்ணங்களை பரப்பும் போது இந்த பிரபஞ்சமே நல்ல எண்ண அலைகளாக மாறி, (அதன் மூலம்) எல்லாரும் நல்லவங்களா மாறுவாங்க. So அப்டின்றப்போ அந்த எண்ண அலைகள் எதுல பரவி கிடக்கு? காத்துல பரவி கிடக்கு. பிரபஞ்சத்துல பரவி கிடக்கு. எங்கும் இருப்பவன் இறைவன். இறைவன் எதன் மூலம் பரவுகின்றான்? பஞ்ச பூதங்கள் மூலமாக பரவுகின்றான். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம். சரிங்களா? ஆகாயம், வெப்பம்(நெறுப்பு) இவை இரண்டும் மேலே இருந்து வருது. நீர் நிலம் பூமியில இருக்குது. இது ரெண்டையும் கலக்கக்கூடிய ஒரு சக்திதான் காற்று. So இது எல்லாம் கலந்த , ஒரு ஈர்ப்பு சக்தி என்று சொல்லக்கூடிய நிலம் நீர் சக்தி மற்றும் நெறுப்பு ஆகாயம் என்ற சக்திகள் ( ஆகாயம் வெப்பம் அதனை நீர் நிலத்துடன் இணைக்கும் ஈர்ப்பு சக்தி) இவை அனைத்தும் காற்று மூலமாக பரவுது. So அப்படி என்றால் இறை ஆற்றல் என்று சொல்லப்படக்கூடிய பஞ்ச பூதங்கள் பரவுவது ஒரே மீடியா மூலம் அது காற்றுதான். So அப்போ எவன் ஒருத்தன் இந்த மூச்சு காற்றை அடக்க கற்றுக் கொள்கின்றானோ அவன்தான் பெரிய ஞானி. So அப்டின்றப்போ இந்த மூச்சு காற்றை வைச்சுதான் நாம பேசுறோம். இப்போ மூளைக்குள்ள ஒரு எண்ணம் உதிக்குது. மனம் என்பது என்ன?. எண்ணங்களின் தொகுப்பு. சரிங்களா. அப்போ ஒரு எண்ணமானது உள்ள பதியப்பட்ட விஷயத்த நம்ம பேசறப்போ அது எப்படி வெளில வருதுன்னா, அது சுவாசத்தின் வழியாக அது பேச்சா மாறுது. மாறி குரல்வளையில் பட்டு தடைபட்டு அது வந்து நமக்கு வந்து அங்க ஒரு நரம்பு ஒன்று இருக்கு. அந்த நரம்புல பட்டு பேச்சா convert ஆகுது.
அப்போ அந்த எண்ணங்கள் அது நமது பேச்சா மாறுவது காத்துனாலதான். அப்போ எவன் ஒருத்தன் அந்த மூச்சு காத்து கண்ட்ரோல் பண்ணுகின்றானோ, அதாவது மூச்சை தனக்குள் அடக்குகின்றானோ அதாவது குருநாதர் ஐயா சொல்லுவார் பூரகம், ரேசகம் , கும்பகம் சொல்ராங்க இல்ல. எவன் ஒருவன் அதிக நேரம் தனக்கு உள்ளே மூச்சை பிடித்து தனக்குள் வைக்கின்றானோ தியானம் பயிற்சி, மூச்சு பயிற்சி , பிராணாயமம் மூலம் புடிச்சு வைத்துக்கொள்கின்றானோ அவன் ஞானியாக மாறலாம். மனசு அமைதி அடையும். செல்களோட இயக்கத்தை control பண்ணலாம்.
மற்றொரு அடியவர்:- அது மட்டும் இல்ல. அந்த மூச்சு காத்து நீங்க உள்முகமாகத் திருப்பி மௌனம் காக்கும்பொது உங்களுக்குள்ள பல அற்புதங்கள் நடக்குது.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- Easyஆக. நிச்சயம்.
மற்றொரு அடியவர்:- நான் உணர்ந்த உண்மை.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ( வழி மொழிந்தார் இந்த அம்மை கூற்றை ) எல்லாரும் உணர முடியும்.
மற்றொரு அடியவர்:- ஐயா வோட அறிவுரை ( எனக்கு வாய் ) பேசாத அப்டினு அதுக்கு அப்புறமே எனக்குள்ள ஏற்படுற மாற்றங்கள் எனக்கு புரியுது.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ( இந்த அடியவர் இங்கு எதையும் பிறரிடம் எதிர்பார்க்காமல் ஓர் இறை ரகசியத்தை எடுத்து இந்த மதுரை வாக்கில் பல இடங்களில் உரைக்க ஆரம்பித்தார். அவர் அறியாமல் பிறர் நன்கு வாழ வேண்டும் என்ற நல் எண்ணத்துடன். அது முதல் வகை புண்ணியம் என்பதே தெரியாமல்…இறைவன் அங்கு இந்த அடியவரை ( மதுரை வாக்கு முழுவதும் ) முதல் வகை புண்ணியம் செய்ய இயக்க ஆரம்பித்தார். அந்த உரை கீழே…)
அது செய்றத இருந்த காலம் பிரம்ம முகூர்த்தம் அம்மா. அதி காலை 3 to 4:30. பிரம்ம முகூரத்தம் என்பது அதுதான். அதுவும் அதிகாலை 3 to 3:30 பாருங்க. அந்த நேரத்துல வந்து பாத்தீங்கன்னா நம்மளுடைய ஆன்மா வந்து பாத்திங்கன்னா அப்பதான் அதிகப்படியான எரிபொருளை உள் வாங்கும். உள் இருக்கக்கூடிய ஒற்றை அணுவான உயிர் அணுவும் ஆன்ம அணுவும்
ஒன்று சேர்ந்து அந்த நேரத்துல முழுக்க தீவிரமாக இயங்க ஆரம்பிக்கும். அப்ப இயங்க ஆரம்பிக்கிறப்போ நாம அந்த நேரத்துல அதிகப்படியான இறைச்சக்தியை வாங்கி கொடுத்தோம் என்றால், அன்றைய தினம் முழுவதும் பரிசுத்தமாக இயங்க முடியும். அந்த பிரம்ம முகூர்த்தத்தில அந்த 3 to 3:30 நம்ம முழிச்சு அந்த தியானம் பண்ணி, மூச்சு பயிற்சி பண்ணி இதெல்லாம் வாங்கினோம் என்றால் definite ஆக இறை ஆற்றல் நமக்குள்ள பெருகும்.
குருநாதர்:- அப்பனே பக்கத்தில் வா.
( கருணைக்கடல் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி இந்த அடியவரின் விளக்கத்தை கேட்டு மகிழந்தார்கள். உயர் புண்ணியம் உணர்க. அதாவது நல்லதை அடுத்தவர்கள் நன்கு வாழ எடுத்து உரைத்தால் அதுவே உயர் தர முதல் வகை புண்ணியம் ஆகும். புண்ணிய பலம் அதிகரித்தால் இறை தானாகவே நம் அருகில் வரும். அதனால் ஆதி ஈசன் உள் இருக்கும் இறைவன் அகத்தீசன் தனது ஜீவ நாடியின் அருகே வரும்படி அழைத்தார்கள். இதனை உதாரணமாக அடியவர்கள் எடுத்துக்கொண்டு அனைவருக்கும் எளிய முறையில் பிறர், ஏழை எளியோர் நன்கு வாழ எதையும் எதிர்பார்க்காமல் அடுத்தவர்களுக்கு எடுத்து உரைத்தால் அதுவே முதல் வகை புண்ணியம் ஆகும். அடியவர்கள் இந்த மதுரை முழு வாக்கினை எடுத்து இதனை zoom, google meet , Microsoft teams, live strom, soho meeting, Vowel, Go ToMeeting, Skype, Eyeson, Jetsi meet, webex போன்ற இலவச இணைய கருவிகள் மூலம் எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் ( குறிப்பாக ஏழை எளியோரைக்கும் ) எடுத்து உரைத்து முதல் வகை புண்ணியம் பெறுங்கள்.)
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-
குருநாதா!!!!!! ( ஜீவ நாடியின் பக்கத்தில் வந்து பணிந்தார் )
குருநாதர்:-அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொன்றாக கேள். உந்தனுக்கு என்ன வேண்டும் என்று. அப்பனே தெரிவி.
(அடியவர்கள் இங்கு ஒன்றை நன்கு ஆழந்து கவனிக்க வேண்டும். முதல் வகை புண்ணியம் என்னவெல்லாம் செய்யும் என்று. இந்த நேரத்தில் இந்த அடியவர் எதை சொன்னாலும் அது நல் வாக்காக மலரும். அது இங்கு அவர் தன்னை அறியாமல் எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு எடுத்து சொல்லி செய்த முதல் வகை புண்ணியத்தால்…)
நாடி அருளாளர்:- இப்ப கேளுங்கள் ஐயா. இவர்கிட்ட சொல்லுங்கய்யா.அதுக்கு பதில் வரும்.ஐயா கேளுங்கய்யா.அகத்தியரை கேட்க வந்தீங்க இல்ல. Questions.
அடியவர்:- ஐயா எனக்கு சமாதி நிலை வேண்டும். அந்த நிலைக்கு நான் எந்த மாதிரி பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும்.
குருநாதர்:- அப்பனே இவை எல்லா ம் ஒரு விடயமே ( விசயமே) இல்லை. நீயே கூறிவிடலாம் அவனுக்கு.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- சமாதி நிலை ரொம்ப ஈஸி அய்யா. அட்டாங்க யோக பயிற்சி பன்னவேண்டும் ஐயா.
( இங்கு ஒரு சிறு விளக்கம் அட்டாங்க யோகத்தை பற்றி பார்ப்போம்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
(திருமூலர் சித்தர் அருளிய திருமந்திரம் 3:1:4)
அட்டம் என்பது எட்டு என்ற எண்ணைக் குறிக்கும். அங்கம் என்பதற்கு உறுப்பு எனப் பொருள். யோகம் என்பது கூடுகை, பொருந்துகை என்று பொருள்படும்; அதன்பொருளை வளர்த்து இறைவனுடன் அருளால் ஒன்றுதலைக் குறிக்கும் என்று கூறுவர். உயிர்கள் இறைவனுடன் ஒன்றுபடக் கடைப்பிடிக்க வேண்டிய எட்டுப் படிநிலைகளை எடுத்துரைப்பதே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.
எட்டு உறுப்புகள் முத்தி பெறுவதற்குரிய வழிகள் நான்கு என்பது சைவநெறி. அவற்றுள் யோகம் என்பது ஒன்று. யாகம் என்பது தவம்.
திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது.
1. இயமம்: பதஞ்சலி யோகசூத்திரம் ஐந்து இயமங்களை நவில்கின்றது: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை புலன் அடக்கம் என்பனவாம். ஆனால் திருமந்திரமோ பத்தினை நவில்கின்றது: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, நல்ல குணங்கள், புலன் அடக்கம், நடுநிலைமை (விருப்பு வெறுப்புக்கள் இன்மை), பகுத்துண்டல், மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் ஆகும். கொல்லான்,பொய் கூறான், களவிலான், எள்குணன், நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய வல்லான், பகுத்துண்பான், மாசிலான், கட்காமம் இல்லான் இயமத் திடையில் நின்றானே [எள்குணன் = எள்கு உணன்; எள்கு = இகழ், புறக்கணி; எள்கும், அதாவது, தான் பெரிதும் ஆவல் கொள்ளாது எள்ளும் அல்லது இகழும் உணவினை உடையோன், எளிய உணவினன்]
2. நியமம் - தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.
3. ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
4. பிராணாயாமம் - உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல்.
5. பிராத்தியாகாரம் - மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.
6. தாரணை - உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்;
7. தியானம் - கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல்
8. சமாதி - விந்துநாதம் காணல்
இந்த அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.
இந்ந விளக்கத்துடன மீண்டும் நாடி வாக்கின் உள் சொல்வோம் )
( இந்த 8 நிலைகள்) இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. சமாதி நிலை என்பது இறுதி.
1.இயமம் என்பது என்ன? செய்யக்கூடாததை செய்யாமல் இருப்பது
2.நியமம் என்பது என்ன? செய்யக் கூடியவை மற்றும் செய்வது. சரிங்களா.
3.அதுக்கப்புறம் வந்து ஆசனங்கள் யோகாசனங்களை பயிற்சி செய்யணும்.
4.அதுக்கப்புறம் பிராணாயாமம் முச்சை control பன்னனும்.
5.அதுக்கு அப்பறம் பிராத்தியாகாரம் மனசை ஒரு நிலை படுத்தனும்(அடக்குதல்).
6.அப்பறம் தாரனை அதை செயல்படுத்தி மனசை ஒரு நிலை நோக்கி செயல்படுத்தனும்.
7.அதுக்கப்புறம் தியானம். தியானத்தில் உக்காந்து ( இறைவனை நினைத்தல்)
8.அதுக்கு அப்புறம் சமாதி நிலைக்கு வர்ரோம். சரிங்களா.
குருநாதர் ஐயா சொன்ன மாதிரி முதல் படியிலயே இல்ல நாம். செய்யக்கூடாத செய்யாமலிருப்பது. ஐயா என்ன சொல்றாங்க ? பிற உயிர்களை கொல்லக்கூடாது. எல்லாம் அதுதான் செஞ்சுகிட்டு இருக்கின்றோம். ( அதாவது அசைவ உணவு ). முதல் படியிலயே out ( நாம தேர்சி பெறவில்லை). அப்புறம் எப்படி சமாதி நிலைக்கு நாம போக முடியும்? சரி நீங்க முதல் படி தாண்டிவிட்டீங்களா? இரண்டாவது படி.
அடியவர்:- நான் வந்து முதல் படிக்கே நான் வர்ரதுக்கு தகுதியா இருக்கேன். சரிங்களா. அடுத்த படிக்கு அடுத்த படிக்கு…
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- அப்போ அடுத்து நியமம். என்ன சொல்கின்றார் ( குருநாதர்) ஐயா. 6 விசயங்களை சொல்றார்.
1.அதிகாலையில் பிரம்ம முகூரத்தத்தில் எந்திரியுங்க.
2.தினமும் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுங்க.
3.வாரம் ஒரு முறை உங்க கையால அன்னதானம் செய்ங்க.
4. தினசரி இரவு படுக்கும் போது இறைவனை பத்தி நினைச்சு, பாடிட்டு படிச்சிட்டு அதுக்கப்புறம் வந்து படுங்க. ஏன்னா நம்ம இப்ப நிறைய டிவி பாக்குறோம். மொபைல் பாக்குறோம். அப்படியே படுக்குறோம். படுத்தவுடன் பாத்தீங்க நம்ம தூக்கத்துல அந்த ( தீய ) எண்ண அலைகள் படிஞ்சு நமக்கு சரியா தூக்கம் வரமாடேங்குது. இறை சக்தி வீண்டிக்கப்படுது. (இந்த அடியவர் மற்ற இரண்டு விசயங்கள் சொல்லும் முன் உரையாடல் வேறு திசைக்கு திரும்பியது)
அடியவர்:- இப்ப ஜப்பான்ல ஒரு அறிஞர் இப்போ கண்டுபுடிச்சு இருக்கார். பேசும் சக்தியை உன்னால் வரவில்லை. அதை ஏதோ ஒரு சக்தி உந்துகின்றது என்று சொல்லி இருக்கிறார். அது நிரூபணம் பண்ணி இருக்கிறார். YouTubeலோயும் இருக்கு. அப்ப அந்த (பேசும்) சக்தியே இறைவனால் தான் வருது. இப்ப நான் உங்கிட்ட பேசுறேன்னா, நான் பேசல. எனக்கு எல்லாம் எனக்கு முன்னாடியே அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பு தான் என்னன்னு கேக்குறேன்?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- அதுதாங்கய்யா உள்ள அணுக்கள்.
அடியவர்:- அய்யா எல்லா அணுக்களும் இங்க ( மூளையில ) storage ஆகி இருக்கு.
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- குருநாதர் ஐயா சொல்வது போல எல்லாம் ( மூளையில் ) பதியப்பட்டு இருக்கின்றது.
அடியவர்:- எத்தனையோ பிரபஞ்சத்தில் இருக்குற எத்தனையோ வார்த்தைகளும், எத்தனையோ எண்ணங்களும், எத்தனையோ இதுக்குள்ள போகுது. எல்லாமே நிலை நிறுத்தி இருக்கப்படவில்லை…
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- (அந்த அடியவரை பாரத்து) முதல்ல நம்ம topicஐ divert பண்ண வேண்டாம். உங்க கேள்வி வந்து சமாதி நிலைக்கு எப்படி போவது என்று சொன்னீங்க (கேட்டீங்க) …..
குருநாதர்:- அப்பனே ஒரே அடியில் அடித்திருந்தால் அவன் அமைதியாகி இருப்பான் அப்பனே. சுடுகாட்டில் சென்று உறங்கி விட்டால் போதுமானது என்று சொல்லி விட்டால் போதுமானது. நீ தான் அப்பனே அவனை வளர்த்து விட்டாய்.
அடியவர்கள்:- (பலத்த சிரிப்புக்கள்)
அடியவர்:- சாமி நான் அதுக்குதான் கேட்டேன்.
அடியவர்கள்:- (பலத்த சிரிப்புக்கள்)
அடியவர்:- ( தனது வாழ்க்கையின் சோதனைகளில், ஏமாற்றத்தில், பல தோல்விகள் அதன் விரக்தியின் உச்சத்தில் சிரிப்புடன் ) சுடுகாட்டுக்கு சென்றால் முடிந்து விட்டது. அங்குதான் இறைவன்
நாடி அருளாளர்:- அதுக்குதான் குருநாதர் ஐயா சொன்னார் இவர் மாடு போல உங்களுக்கு கத்தி சொல்ரார் ( நீங்க அதை கேட்கவில்லை என்று)
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- (மாடுபோல் என்று ) அதை அவர் ( குருநாதர் ) சொல்லலாம். நான் சொல்ல முடியுமா? குருநாதா…
அடியவர்கள்:- (பலத்த சிரிப்புக்கள்)
குருநாதர்:- அப்பனே அவன் மனம் நொந்து விட்டான் அப்பன. ஏன் என்றால் பிரச்சனைகள் இல்லத்தில் அப்பனே. ஆனாலும் அதையும் பொறுத்து இருந்தால் நன்மை ஆக்குவேன். அவை எவை என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அப்பனே அவன் மனமே நொந்து விட்டான். யான் பக்குவப்படுத்துகின்றேன் அவன்தனை விட்டு விடு.
நாடி அருளாளர்:- ( அருமையாக இந்த அடியவருக்கு விளக்கம் அளித்தார்கள் )
குருநாதர்:- அப்பனே கேள். மற்றும் ஒருவனை.
அடியவர் 1 :- இந்த பிறவி கடை பிறவி அப்படினு எப்படி கண்டு கொள்ளலாம் ? அதற்கான அடையாளம் என்ன?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- ஐயா அதாவது நீங்க பிற உயிருக்கு தீங்கு செய்யாம உங்க வாழ்க்கை ஒழுக்கமுடன் வாழ்ந்து வந்தீங்கன்னாலே, நீங்க எந்த கடவுளையும் தேடி போக தேவை இல்லை. அவங்களே உங்கள தேடி வருவாங்க. உங்க கர்மாவை எல்லாம் நீக்கி, (மற்றொரு) பிறவி இருந்தாலும் அவங்க கடைசி பிறவி ஆக்கிருவாங்க. எல்லா தெய்வங்களும் நம்மை தேடி வரும். ஐயா திரும்பத் திரும்ப சொல்ரது அதுதான். எங்கயும் இறைவனை தேடி அலையாத. நான் உனக்குள்ளே இருக்கேன். நீ வந்து அந்த இறைவனே வந்து உள்ளுக்குள்ள உணரந்து, பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாம , எல்லா உயிருக்கும் நன்மை செஞ்சு, நம்ம ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலே எல்லா தெய்வமும் நமக்குள்ளே குடி புகும். எல்லாரும் நம்மை வழி நடத்துவாங்க.
குருநாதர்:- அப்பனே யான் சொல்லியதைதான் (கர்மாவினை) அனைத்தும் கேட்கப் போகிறார்கள். அதனால் அப்பனே மீண்டும் மற்றவரை எடுத்துக்கூறு? ( கருணைக்கடல்்மற்ற அடியவர்களுக்கு கேள்வி கேட்க ஒரு நல் வாய்ப்பளித்தார்கள்)
அடியவர் 2:- சின்ன சின்ன தவறுகள் நடக்குது. நாம நடக்கும் போது எறும்புகள் அடிபடுது. Cycleல போறோம், வண்டியில போறோம். ஏதோ ஒரு பிரச்சினை வருது. இத எப்படி தவிர்கிறது, தடுக்கிறது?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :-அய்யா அதுக்கு தான் ஐயா சொல்றாரு. நம்ம நம்மள அறியாமலேயே நிறைய பாவ காரியம் நாம செஞ்சட்டு இருக்கோம். அது தான அய்யா சொல்றாரு. தியானம் செய்ய சொல்றாரு. பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்கச்சொல்ராரு. அன்னதானம் பண்ண சொல்ராரு. அந்த மாதிரி நெறைய நம்ம புண்ணியங்கள் செய்யச் செய்ய சிறு சிறு பாவங்கள்….
குருநாதர்:- அப்பனே. நில். அப்பனே இங்கு மனிதன் பிறப்பே கேடுகெட்ட பிறப்பு அப்பா. அப்பனே அனைத்து ஜீவராசிகளும் இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு வருகின்றது. எந்தனுக்கு சிறிதளவே உயிர் கொடு. அதாவது வேண்டாம். நீண்ட காலம் வேண்டாமென்று. இதனால் இவையெல்லாம் தானாகவே அடிபட்டு உயிர் இறைவன் இடத்தில் சேர்ந்து விடும். அவ்வளவுதான் அப்பனே. ஆனால் மனிதன் நிலையை பாருங்கள் அப்பனே. ( பிறவிகள் வளர்ந்து) நீண்டு எவ்வளவு எவ்வளவு கஷ்டங்கள் அப்பா. அதனால்தான் திருத்த வழி இல்லை. அதனால் தான் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து திருத்திக் கொண்டே வருகின்றோம். அதனால் அப்பனே இப்பொழுது தான் தான் விதிப்படியே முடிந்து விட்டால் அனைவரும் சென்றாக வேண்டும் சொல்லி விட்டேன் அப்பனே. அதனால் அப்பனே இவை எல்லாம் இறைவனிடம் கேட்டு வந்தவைதான். சிறு எறும்பாகினும் சரி. எவ்வுயிர்கள் ஆயினும் சரி. எந்தனுக்கு பின் வேண்டாம் மனிதப்பிறவி. போதும் ஒரு நொடி போதும். இல்லையென்றால் 1 மணி நேரம் போதும் என்றெல்லாம் கேட்டு வந்து யார் எப்போது, யார் யார் மூலம் எது என்று சரியாகவே (இறந்து) சென்று கொண்டேதான் இருக்கின்றது. (பிறந்து) வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே. இதை யாராலும் தடுக்க முடியாது அப்பா. முடியாது. அப்பனே என்று அறிய இயற்கை சீற்றங்களால் அப்படியே ஒருகோடி இன்னும் ஒரு லட்சம் மடிந்து விடுகின்றார்கள் அப்பனே. அது யாருடைய பொறுப்பு என்று கேள் மகனே அவனை.?
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- இயற்கை சீற்றம் இப்ப recentஆ சுனாமி வந்துச்சு. நிறைய பேர் இறந்து விட்டார்கள். இன்னும் நடந்துகிட்டு இருக்கு Japanல பூகம்பம் வந்துச்சு. இதெல்லாம் யாருடைய?…
அடியவர் 2:- இறைவனுடைய தண்டனை.
குருநாதர்:- அப்பனே புரிகின்றதா அப்பனே. தெரிந்து கொண்டே இவ்வளவு நேரம் பேசி இருக்கிறான் அப்பனே. அப்பனே இன்னும் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே. சீற்றங்கள் வந்து அப்பனே இன்னும் பல பேர் மடிவார்கள் அப்பா. இன்னும் மழை காலம் அப்பனே பல பேர்கள் மடிவார்கள் அப்பா. நோய்களும் பல பேர்கள் என்றும் அரிய பெரிய நோய்களும் வந்து தாக்கிக்கொள்ள, சரியாக பின்பற்றி கொண்டான் அப்பனே. கிரக வாசிகள் என்று இருக்கிறார்கள் அப்பனே. இங்க இருந்து ( rocket to other planets ) அனுப்பினான் அல்லவா? அங்கு இருந்து அனுப்ப போகிறான். அப்போது தெரியும் அப்பனே. இதை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.
அடியவர்கள் :- ( மௌனம் )
குருநாதர் அகத்தியர் புகழினை அழகாக உரைத்த அடியவர் :- குருநாதர்தான் காப்பாத்தணும்.
குருநாதர்:- அப்பனே தெரிகின்றதா? அப்பனே கடைசியில் யான்தான் பொறுப்பு. ஆனால் என்னை நம்பியவர்களை அப்பனே நிச்சயம் நான் கைவிடமாட்டேன் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனாலும் நீங்கள் பக்குவங்கள் படவே சில கஷ்டங்கள் சொல்லி விட்டேன் அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete