சமீபத்தில் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் காளிகாஜி மந்திர். தெற்கு டெல்லி.
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே பெருகிக்கொண்டே போகும் என்பேன் அப்பனே நலன்களாகவே உண்டு உண்டு அப்பனே எதை என்றும் கூட எதிர்பார்க்காத அளவிற்கு கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே தொந்தரவுகள் தானப்பா!!
அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வாக்குகளாக எதை என்று கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலங்களாக!!!
காளிகா. எவை என்றும் அறிய அறிய தேவி எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே சக்திகள் அப்பனே பல பல!!!!
ஏனென்றால் அப்பனே பின்
முன் யுகத்தில் எதை என்றும் அறியாமலே ஆனாலும் மக்கள் பிறந்து பிறந்து இறைவனை நாடி நாடி அப்பனே பய பக்தியோடே தொழுதனர்.
இதனால் இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே !!!!
ஆனாலும் கலியுகத்தில் அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே மனிதனுக்கு பக்திகள் காட்ட தெரியவில்லையப்பா!!!!
அதனால்தான் தோல்விகளில் போய் முடிந்து விடுகின்றது என்பேன் அப்பனே!!!!
பக்திகள் எவ்வாறு ??காட்டுவது என்பதை கூடஅப்பனே சரியான முறையில் அப்பனே நிச்சயம் காட்டினாலே போதுமானதப்பா!!!!!
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அப்பனே அனுதினமும் இறைவனை பிரார்த்தனை அதாவது அனைவரும் கூட கூட்டுப் பிரார்த்தனை செய்தாலே அப்பனே நிச்சயம் அனைத்தும் வெற்றி ஆகுமப்பா!!!!!
ஆனால் தற்போது நிலைமையில் அது இல்லையப்பா!!!
இல்லத்தில் கூட அப்பனே பல பல சண்டைகள் அப்பனே எதை என்று அறிய அறிய யான் பெரியவன் நீ பெரியவன் என்றெல்லாம் அப்பனே!!! எந்தனுக்கு பின் அனைத்தும் தெரியும் உந்தனுக்கு என்ன தெரியும்??????????
ஒருவன் பின் பக்தி இன்னொருவன் பக்தி இல்லை பின் பக்தியாக உள்ளவனை கூட பின் எதை என்றும் அறிந்து பின் பக்தி இல்லாதவன் இவையெல்லாம் வீண் என்றெல்லாம் அப்பனே இல்லத்திலே சண்டைகளப்பா!!! குழப்பங்களப்பா!!!
இவ்வாறு இருக்க இல்லத்திலே குழப்பங்கள் ஆயின் அப்பனே வெளியில் வந்தால் எவ்வாறு நல்லது நடக்கும்!!??? என்பதை கூட நீங்கள் அறிந்து கொண்டீர்களா அப்பனே
நிச்சயம் நடக்காது அப்பனே
யான் ஒவ்வொருவர் இல்லத்திலும் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!
சண்டைகள் அப்பனே!!! ஒருவன்!!!!...... இல்லை அதாவது இறைவன் இல்லை என்று சொல்லி விடுவது. மற்றொருவன் இறைபக்தி தான் ஜெயிக்கும் என்று.
ஆனாலும் அப்பனே இதை கேட்டுக்கொண்டே இருக்கும் இறைவன் அப்பனே நிச்சயம் எப்படித்தான் நன்மை செய்வான்???????என்பதை கூட அப்பனே!!!!
அதனால் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் அப்பனே திருடர்கள் தான் மிச்சம் அப்பா!!!!
இதனால் எதை என்றும் அறிய ஆனாலும் அப்பனே உண்மையாக இருங்கள் நிச்சயம் எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே தெய்வமே தேடி வரும் அப்பா இதுதான் உண்மை
ஆனாலும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இங்கு பல அநியாயங்கள் அக்கிரமங்கள் அப்பனே நடந்து கொண்டே இருந்தது அப்பனே!!!!!..... பல வருடங்களுக்கு முன்பே!!!
அப்பனே பல அக்கிரமங்கள் அநியாயங்கள் கற்பழிப்புக்கள் அப்பனே பின் பெண்களை இழிவாக பேசுவது இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கையில் அப்பனே இவை என்றும் அறிய அறிய அப்பனே பின் யார் துணை????? என்பதை எல்லாம்!!!!!
ஆனாலும் அரசும் கூட மக்களுக்கு மிகுந்த துன்பங்கள் கொடுத்ததப்பா இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதை என்றும் அறிய அறிய பின் பெண் தெய்வத்தை அழைத்தார்கள் எதை என்றும் அறிய அறிய!!!
பின் உங்களைத்தான் நம்பிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு விடிவெள்ளியே இல்லையா?????????????
எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதனால் உண்ணாமலும் உறங்காமலும் பின் தேவியை எதை என்றும் அறிய அறிய பல பாடல்களை காளிகா தேவியே என்பதை எல்லாம் காளிகா தேவியே என்பதை எல்லாம் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய பின் நீங்கள் தான் துணை!!!
இவ் அரசாங்கம் எங்களுக்கு ஏதும் செய்யவில்லை!!! பட்டினியாகக் கிடந்து எங்கள் பிள்ளைகளையும் கூட பட்டினியாகவே எதை என்றும் அறிந்து அறிந்து???
ஏன்????? இவ்வாறு தான் நடக்க வேண்டுமா???? என்று அனைவரும் கூட ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் எதை என்றும் அறிய அறிய!!!!
இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இவ் தேவி இங்கு தோன்றினாள்!!!!
தோன்றிட்டு எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட
"""யான் உங்களைக் காப்பாற்றுகின்றேன்!!!!!! என்றெல்லாம்!!!!!!
எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அனைவரும் எதை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் (மக்கள் மனம்) மனங்கள் ஒத்துக்கொள்ளவில்லை!!!!
ஒரு பெண்ணா !!!!!! காப்பாற்றுவாள்??????????
யார் இந்தப் பெண்??? என்றெல்லாம் சந்தேகங்கள்!!!!
ஆனாலும் தேவி மனித ரூபத்தில் வந்து விட்டாள்!!!!
நிச்சயம் வந்திட்டு!!!!!! வாருங்கள் (மக்களை பார்த்து) செல்வோம்.... தேவையென்று அறிய அறிய என்றெல்லாம் கூட்டிட்டு!!!!
ஆனாலும் பின்னே எவை என்றும் கூற ஒருவரும் கூட வரவில்லை!!!!
ஆனாலும் பின் வந்தது இத் தேவி தான் என்று பின் யாருக்குமே பின் தெரியப்படுத்த பின் எவை என்றும் அறிய அறிய மனிதனாக வந்து விட்டாலே எதை என்றும் அறிய அறிய இப்படித்தானப்பா!!!
இக்கலியுகத்திலும் கூட இப்படி தான் நடக்குமப்பா!!!
இறைவன் அப்பனே மனித ரூபத்தில் வந்தாலும் கேலி தான் செய்வார்களப்பா!!!
அதனால்தான் இறைவன் மறைமுக பொருளாகவே இருக்கின்றான்!!!
மறைமுக பொருளை யார் ஒருவன் தேடுகின்றானோ???
அவன் உயர்ந்த ஞானி எதை என்றும் அறிய!!! உயர்ந்த இடத்தில் வகிப்பான் அப்பனே!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் மனிதனை நம்புவது அவ்வளவு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று மனிதன் வேண்டுமென்றால் அப்பனே பொய் வேடங்கள் போட்டுக்கொண்டு யான் ஞானி யான் மகா குரு யான் சித்தன் எவை என்று கூற யான் ரிஷி எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!! உந்தனக்கு என்னென்ன ??? தேவைகள் என்று செய்து தருகின்றேன் என்றெல்லாம் பொய் கூறி அப்பனே பின் மனிதனை பின் வசியப்படுத்த முடியும்!!!
ஆனால் நிச்சயம் இறைவன் அப்படி இல்லை அப்பனே!!!!
பின் இறைவி வந்துவிட்டாள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அக்கிரமங்கள் அநியாயங்கள் என்பதை எல்லாம் பார்த்துட்டு எதை என்று அறிய அறிய அப்பனே அடித்து நொறுக்கினாள் அப்பனே!!!
எதை என்று அறிய அறிய யார் யார் என்னென்ன தவறுகள் செய்தார்களோ அவர்களை எல்லாம் தன் கால்களாலே மிதித்து மிதித்து உதைத்து உதைத்து அப்பனே எதை என்றும் அறியாமல்!!!....
ஆனால் பின் எதை என்றும் அறிய அறிய இச்செய்தி அரசனுக்கும் எட்டியது!!!
ஒரு பெண்ணா !!!!!! இவ்வாறெல்லாம் செய்கின்றாள்??????? என்பதையெல்லாம்!!....
நிச்சயம் அவளை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்று ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மீண்டும் பின் அரச சபைக்கு பின் சென்றாள் இவ் தேவி!!!!
எதை என்றும் அறிய அறிய பின் அரசனின் எவை என்று கூட.......
இவள்தனுக்கு இப்பொழுதே அடிகள் யாரெல்லாம் எவை என்று அறிய அறிய இங்கு இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் கூடி இவளை பின் உதையுங்கள் எவை என்றும் அறிய அறிய.. என்று கூறி பின் எவை என்று கூட வாள்கள் பின் கற்கள் எவை என்று அறிய அறிய.....
ஆனால் வந்தவர்கள் அனைவரையுமே நொறுக்கி தள்ளினாள்!!! தன் கைகளாலும் பின் எதையென்றும் அறிய அறிய சில சில வகைகளிலும் கூட பின் பக்தன் யான் ஈசன் பக்தன் என்றெல்லாம் பொய் சொல்லி கொண்டிருப்பவனையும் கூட அழித்தாள் இவள்!!!
எதை என்றும் அறிய அறிய அழித்து அழித்து பல புதுமையான மனிதர்களை உருவாக்கினாள்!!!!
ஆனாலும் மீண்டும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட மனிதர்கள் ஆனாலும் எவை என்றும் அறிய அறிய பின் அங்கே ஒரு பெண் நிச்சயம் ஜெயித்துக் கொண்டிருக்கின்றாள் என்று கேட்க நிச்சயம் பின் அப்பொழுதுதான் உணர்ந்தார்கள்!!! இறைவி என்பதை கூட!!!
அனைவரும் ஓடோடி வந்தார்கள்!!!! ஓடி வந்து தாயே!!!!! எதை என்றும் அறிய அறிய என்பதை எல்லாம் பின் நிரூபித்து நிரூபித்து எவை என்றும் அறிய அறிய பின் நல் மக்களை காப்பாற்றினாள்!!
எதை என்றும் அறிய அறிய ஏழை எளியோர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கூட தன் சக்தியினால் அனைத்தும் கொடுத்தாள் நல்விதமாக!!!
இங்கு அமர்ந்திட்டு மீண்டும் இங்கு அமர்ந்திட்டு எதை என்றும் அறிய அறிய உங்களுக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் யான் செய்திட்டேன் அனைத்தும் அழித்தும் விட்டேன் உங்களுக்கு எதை என்றும் அறிய அறிய உங்களுக்கு என்ன தேவை என்று கேட்க!!!
நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து நீங்கள்தான் தேவை நீங்கள்தான் தேவை என்று உணர்ந்து!!!!
நிச்சயம் யான் இங்கேயே தங்கி விடுகின்றேன் என்று இங்கே தங்கிவிட்டாள் அப்பனே!!!
அதனால் அப்பனே பொய் கூறுபவர்கள் எதையெதையோ தீய சக்திகளை விடுபவர்கள் (ஏவல்) எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல வகைகளில் கூட எதை என்றும் அறிய அறிய மக்களை வசப்படுத்தி எதை என்று கூட பொய் புறம் கூறுபவர்களையும் கூட அப்பனே இங்கு வந்து அப்பனே நலமாகவே தியானங்கள் செய்து கொண்டு இவளை தரிசித்தாலே போதுமப்பா!!!
வினைகள் நீங்குமப்பா!!! நிச்சயம் வெற்றிகள் உண்டப்பா!!!!
அப்பனே அதனால் நிச்சயம் அதனால்தான் சித்தர்கள் எங்கெல்லாம் திருத்தலங்களை அமைத்தார்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட இறைவனே எதை என்று கூட எங்கெல்லாம் அமர்ந்து கொண்டான் என்பதற்கிணங்க அப்பனே அங்கெல்லாம் சென்றால்தான் வெற்றியாகும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே ஈசா!!! ஈசா!!! என்று எதை என்று கூட கத்தினாலும் வராதப்பா எதை என்று அறிய அறிய எவ்வளவு பக்திகள்!!!
ஆனாலும் அப்பனே பின் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!
ஏற்கனவே பல சித்தர்களும் இதை செப்பி விட்டார்கள் அப்பனே !!!!
பணம் என்றால் ஓடி ஓடி உழைக்கின்றீர்கள் அப்பனே பல பல தேசங்களுக்கு சென்றும் அப்பனே பணத்தை ஈட்டுகின்றீர்கள் அப்பனே!!!
திருமணத்திற்காகவும் அப்பனே ஓடி ஓடி பல செலவுகள் செய்கின்றீர்கள் அப்பனே!!!
அதாவது எதை என்றும் அறிய அறிய பல வழிகளிலும் கூட காத்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் அப்பனே
பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே !!!
ஆனால் இறைவனுக்காக ஓடோடி உழைக்கத் தெரியவில்லையே!!!
இறைவனுக்காக காத்துக் கொள்ள முடியவில்லையே
அப்பனே இறைவன் உடனடியாக செய்து விட வேண்டும் என்பதையெல்லாம் மனிதனின் நினைப்பு!!!!
மெது மெதுவாகத்தான் செய்வான் அப்பனே இறைவன் ஆராய்ந்து ஆராய்ந்து அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே உணவு கூடத்திற்கு சென்றாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீ வரிசையில் நின்றாலும் அப்பனே ஆனால் எதன் எதற்கோ !!!??? வரிசையில் நிற்கின்றாய் அப்பனே!!!
இறைவனை பார்க்க உன்னால் முடியவில்லையா????? அப்பனே?!!!!!
அப்பொழுது பார் உன் பக்தி எங்கு உள்ளது என்பதை கூட அப்பனே!!!!
அதனால் நிச்சயம் பக்திகள் பெருக வேண்டும் அப்பனே கலியுகத்தில் அப்பனே!!!
பெருகினால் தான் அப்பனே நன்மைகள் ஏற்படுமே தவிர நிச்சயம் பெருகாவிடில் அப்பனே தீயவைகள் தான் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!
இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே சில சில விசேஷ ஸ்தலங்களும் உள்ளது என்பேன் அப்பனே!!!
இறைவனே தன் திருத்தலத்தைக் கூட அமைத்துக் கொண்டான் அப்பனே அங்கேயே தங்கிவிட்டான் என்பேன்!!!அப்பனே!!!
இப்பொழுதும் கூட அவ் சக்திகள் ஏராளம் ஏராளம் என்பேன் அப்பனே!!!
அதனால் சக்தி உள்ள திருத்தலங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே... முன்பெல்லாம் அப்பனே தானாகவே உருவெடுத்தது என்பேன் அப்பனே.
அதனால் அங்கெல்லாம் சென்று அப்பனே உயர்வுகள் பெறலாம் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.
அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே!!!
இவையெல்லாம் சொல்லிவிட்டார்கள் அப்பனே....
யார் ஒருவன் மற்றவர்களுக்காக உதவுகின்றானோ அப்பனே யார் மூலம் மற்றவர்களுக்குப் பின் உயர்வுகள் எதை என்றும் அறிய கிட்டுகின்றதோ!!.... அவனைத்தான் தேர்ந்தெடுத்து அப்பனே இறைவன் வழியையும் நடத்துவான் அப்பனே அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!
பின் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்றால் அப்பனே அவனை விட்டுவிட்டு சென்று கொண்டே இருப்பான் அப்பனே!!! பக்திகள் காண்பித்தாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!
இவன் ஒரு பிரயோஜனம் இல்லாமல் இவந்தனுக்கு கொடுத்தாலும் இவந்தன் சுகங்களுக்காக தான் பயன்படுத்துவான் என்று!!!
அதனால் அப்பனே மற்றவர்களுக்காக சேவை செய்யுங்கள் அப்பனே!!!
மற்றவர்களுக்காக எப்பொழுது சேவை செய்கின்றீர்களோ அப்பொழுது இறைவன் கொடுப்பான் கொடுப்பான் அப்பனே!!!
அதையும் எதை என்று அறிய அறிய கொடுப்பான் அப்பனே அதை சரியாக பயன்படுத்தாவிடில் அப்பனே மீண்டும் பிடுங்கிக் கொள்வான் அப்பனே!!!!
இறைவனின் வேலை அப்பனே மிகப்பெரியதப்பா!!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே நேற்றைய பொழுதிலும் கூட சொன்னேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சந்திரனும் சூரியனும் கூட பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவன் ?? எவன்?? என்னென்ன தவறுகள் செய்கின்றான் என்பதை கூட உணர்ந்து உணர்ந்து அப்பனே ஈர்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே வெளிச்சத்தில் அப்பனே சூரியன் அப்பனே!!! அதனால்தான் தண்டனைகள் உண்டு அப்பனே!!!
எவை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்து விஷயங்களையும் கூட சேகரித்துக் கொண்டே தான் இருக்கின்றான் சூரியன் அப்பனே!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
யார் எதை என்றும் அறிய அறிய தவறுகள் செய்தாலும் நிச்சயம் தண்டனைகள் உண்டு அப்பனே!!!!
ஆனால் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்களும் கேட்கலாம் தவறுகள் செய்பவர்கள் பின் நன்றாகத்தானே இருக்கின்றார்கள் என்றும் கூறலாம் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பழமொழிகள் உண்டு அப்பனே பின் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! எவை எவை என்று அறிய அறிய அதை பயன்படுத்த தெரியவில்லையே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே இறைவன் உங்கள் அருகிலே இருப்பான் என்பேன் அப்பனே.
எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் உண்மைகள் என்னென்ன எதை என்று அறிய அறிய தெரிந்து தெரிந்து உலகத்திற்கு அப்பனே உங்களால் இயன்ற அளவு உதவிகள் செய்யுங்கள் அப்பனே
யாங்கள் உதவுகின்றோம் அப்பனே நல்முறையாகவே!!
அப்படி செய்யாவிடில் அப்பனே தன் குடும்பம் எதை என்று அறிய அறிய தன் சொந்தம் பந்தங்கள் என்று இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!!
அதனால்தான் அப்பனே இதைச் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய தீங்குகள் செய்பவர்களும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்று மனிதன் நினைக்கலாம்!!!
ஆனால் அப்பனே ஒரு பழமொழியும் உண்டு அப்பனே அது அனைவருக்கும் தெரிந்தே!!! மீண்டும் ஞாபகத்தில் படுத்துகின்றேன் அப்பனே
பின் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதையெல்லாம் அப்பனே..... எதற்காக என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே
ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் பல பல பழமொழிகளும் உண்டு பழமொழிகளும் உண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய
அதனால் அப்பனே தெய்வம் அப்பனே பார்த்து பார்த்து தான் ஈயும் என்பேன் அப்பனே புண்ணியமானாலும் சரி பாவமானாலும் சரி அப்பனே பார்த்து பார்த்து தான் ஈயும் என்பேன் அப்பனே.
ஆனால் எதை என்றும் அறிய அறிய தண்டனைகள்!!!!
மனிதன் ஆனால் அப்படி இல்லை என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய யோசிக்காமலே தண்டனை கொடுத்து விடுவான் அப்பனே இதுதான் மனிதனுக்கும் இறைவனுக்கும் எவை என்றும் அறிய அறிய அப்பனே
இறைவனை மனதில் எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைத்தாலே போதுமானது என்பேன் அப்பனே
இவ் தேவியின் சக்திகள் மிக மிக அதிகம் அப்பா அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே வரும் காலங்களில் அதாவது கலியுகத்தில் துன்பங்கள் நிறைந்துள்ளதாகவே இருக்கும் என்பேன் அப்பனே நோய் நொடிகள் அதிகமாகவே இருக்கும் என்பேன் அப்பனே!!!
இன்னும் இன்னும் என்னென்ன தான் நடக்கப் போகின்றது இன்னும் புதுமையாகத்தான் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வான் என்பேன் மனிதன் அப்பனே!!
மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்றான் அப்பனே அதனால்தான் சித்தர்கள் யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் வேண்டாமப்பா!!!
உண்மையைப் பேசுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய தெள்ளத் தெளிவாகவே அப்பனே இன்னும் இன்னும் இன்னும் இத்தேவியின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அப்பனே!!!
எதையென்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே இதனால். தன் குடும்பத்தை பார்க்கின்றீர்கள் அப்பனே சுகத்திற்காகவும் ஓடுகின்றீர்கள் அப்பனே இன்னும் எதையெதையோ தேடுகின்றீர்கள் அப்பனே!!!
இறைவனை தேடுங்கள் அப்பனே இறைவனை தேடிட்டு தேடிட்டு அப்பனே இறைவனை தேடி சென்றால் கடைசியில் உன் மனதிலே பின் உட்கார்ந்து விடுவான் அப்பனே
பின்பு யோசிப்பார் இறைவனை அப்பனே எங்கும் தேடினேன் கிடைக்கவில்லையே பின்பு இறைவன் மனதிலே இருக்கின்றான் என்று.
இதுதான் அப்பனே உண்மை அப்பா!!!!
மற்றவை எல்லாம் வீணப்பா வீண்!!!!!
எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே தேடினாலும் எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மை நிலைகளை தெரிந்து கொள்வதற்காக பல ஆலயங்களுக்குச் செல்லுங்கள் அப்பனே!!
நல்விதமாக தேடி தேடி அலையுங்கள் அப்பனே
அலைந்தால்தான் கர்மமும் நீங்குமே தவிர அப்பனே பின் எவை என்று கூட அப்பனே அப்படி தேடி அலையவில்லை என்றால் அப்பனே.... அப்படியே தேங்கி நிற்கும் என்பேன் அப்பனே!!!
பின்பு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டியது தான்!!!......... சொல்லிவிட்டேன் அப்பனே!!!
அதனால் எதை என்றும் அறிய அறிய எங்கும் மனிதர்கள் எதை என்று அறிய அறிய எதை எதையோ தேடி தேடி செல்கின்றார்கள் அப்பனே!!
ஆனாலும் உள்ளத்தில் அமர்வது இறைவன் அப்பனே அப்படி உட்கார வையுங்கள் அப்பனே!!!
மனதை சுத்தப்படுத்துங்கள் முதலில் அப்பனே!!!
மனதே!! சுத்தமில்லையப்பா!!!!
அப்பனே கோபங்கள் தாபங்கள் இவையெல்லாம் இருந்தால் அப்பனே இல்லத்தில் இறைவன் எப்படியப்பா ???? வருவானப்பா ????????
நீங்களே சொல்லுங்கள் அப்பனே!!!!!
யான் பக்தர்களை பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! ஒவ்வொரு விஷயத்திலும் கூட அப்பனே!!!
எதை என்று அறிய அறிய அதாவது எதை என்று அறிய அறிய இல்லத்திற்கு செல்லும்பொழுது இறைவனே இல்லை என்று ஒருவன்!! இறைவனை வணங்கினால் என்ன தான் நடக்கும் என்று மற்றொருவன்!!!! அவை மட்டுமில்லாமல் பின் எதை என்று கூற மாமிசத்தை உட்கொள்ளுங்கள் என்று!!!
மாமிசத்தை உட்கொண்டால் தான் உடல் வலிமை பெறும் என்று இன்னொருவன்!!...
இதனால் இல்லத்தில் எதை என்று அறிய அறிய ஒருவருக்கொருவர் அப்பனே சண்டைகளப்பா!!! சண்டைகள்!!!
அப்பொழுது பணம் வேண்டும் என்கின்றானே இதற்கு லட்சுமியே மூலாதாரம்!!!!!
ஆனால் எப்படியப்பா ?????? லட்சுமிதேவி இல்லத்தில் தங்குவாள் ???? அப்பனே
கோபங்கள் பொறாமைகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய சுத்தமின்மை இவையெல்லாம் ஒரு இல்லத்தில் இருந்தால் லக்ஷ்மி தேவி நிச்சயம் தங்க மாட்டாள் அப்பனே!!!
சொல்லிவிட்டேன் அப்பனே
வேலை வேலை எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் நிச்சயம் அப்பனே இல்லத்தை சுத்தமாகவும் எதை என்று அறிய அறிய அப்பனே
இல்லம் என்பது உன் மனம் அது நிச்சயம் சுத்தமாகி விட்டால் அப்பனே இல்லத்தில் உள்ள அனைவரும் சுத்தமாகி விடுவீர்கள் அப்பனே!!!
பின்பு யோசிக்கலாம் மற்றவர்களைப் பற்றி அப்பனே
நீயே சரியில்லை உன் இல்லத்தில் இருப்பவர்களே சரியில்லை அப்பனே!!!... பின்பு மற்றவர்களைப் பற்றி யோசிக்கின்றாயே!!!...... அப்பனே அதுதான் கர்மா அப்பா
முதலில் உன்னை நீ யோசி!!!
எதை என்றும் அறிய அறிய நீ எப்படி இருக்கின்றாய் என்பதை கூட அப்பனே அப்படி யோசித்து தான் மற்றவர்களைப் பற்றி நீ பேச வேண்டும் என்பேன் அப்பனே!!!
அப்பொழுது தான் வெற்றியும் பெறும் அப்பனே பின் அனைத்தும் நன்றாக நடக்கும் அப்பனே!!
அப்படி இல்லையென்றால் அப்பனே உன்னையே தாழ்த்திக் கொள்வாய் அப்பனே இதுதான் உண்மை அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே!!!
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் இத் தேவியின் அருளாசிகள் இன்னும் பெருகட்டும் அப்பனே சில கர்மங்கள் நீங்கி சில தரித்திரங்களும் நீங்கட்டும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!
சில சில தீய சக்திகளும் கூட இவ் அம்மையிடம் எதை என்று அறிய அறிய ஒன்றும் நெருங்க முடியாது என்பேன் அப்பனே!!!
எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே சில தீய சக்திகள் இருந்தாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு வந்து நல்விதமாகவே தியானங்கள் செய்திட்டு செய்திட்டு சென்று கொண்டு இருந்தாலே நிச்சயம் கடை நாள் வரையிலும் ஒன்றும் அணுகாதப்பா!!!!
அப்படி இத் தேவி பல மனிதர்களைக் கூட அப்பனே இன்றும் கூட உயர்த்தி கொண்டே தான் இருக்கின்றாள் அப்பனே
நலன்கள் !!! ஆசிகள்!!! ஆசிகள்!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே இங்கு அகத்தூய்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே வருகின்றார் கோபம் காமம் பொறாமை போட்டிகள் இவற்றையெல்லாம் விலக்கி விட வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் மற்றவர்களை நம்மை போல எண்ண வேண்டும் தான தர்மங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்ய வேண்டும் என்றும் புறத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கூறி இருக்கின்றார்.
இல்லத் தூய்மை இதனைப் பற்றி குருநாதர் பொதிகை மலையிலும் இன்னும் சில வாக்குகளிலும் தெரிவித்து இருக்கின்றார் அதை அடியவர்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.
காலை மாலை என இருவேளையும் வீட்டை சுத்தம் செய்து இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் இலுப்பை எண்ணைக்கு சக்திகள் அதிகம் என்று கூறியிருக்கின்றார் நம் குருநாதர்.
பச்சைக் கற்பூரம் மஞ்சள் தூள் பசு கோமியம் புண்ணிய நதிகளின் நீர் இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து வீடு பூஜையை அறையை தெளித்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
எந்த ஒரு அசைவ உணவு பதார்த்தமும் வீட்டில் யாரும் உண்ணவும் கூடாது வீட்டில் உபயோகப்படுத்தவும் கூடாது.
பூஜையில் விளக்கில் ஏலக்காய் கிராம்பு பச்சைக் கற்பூரம் மஞ்சள் தூள், நெல்லிக்காய் பொடி வில்வ பொடி ஜாதிக்காய் பொடி அல்லது ஏதாவது ஒரு மூலிகை பொடி போன்ற ஒரு துளி எலுமிச்சை சாறு சர்க்கரை இவற்றை சேர்க்க வேண்டும்.
கருங்காலிக் கட்டையை வீட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில் வீட்டில் வைக்கலாம்.
என வீட்டில் செய்யும் பொழுது எதிர்மறை சக்திகள் விலகிச் செல்லும் இறை ஆற்றல் பெருகும் அப்பா என்று கூறி இருக்கின்றார் இதனை அடியவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கலாம்.
ஆலயம் பற்றிய தகவல்கள்.
ஸ்ரீ கல்காஜி மந்திர், கல்காஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, தேவி காளி கோவில் கோயில் (மந்திர்) இந்தியாவின் டெல்லியின் தெற்குப் பகுதியில் கல்காஜியில் அமைந்துள்ளது
நேரு பிளேஸ் வணிகத்திற்கு எதிரே அமைந்துள்ளதுமையம்.
கல்காஜி மந்திரில் (டெல்லி மெட்ரோ) பொதுப் போக்குவரத்து மூலம் இந்த கோயிலை அணுகலாம் மற்றும் நேரு பிளேஸ் பேருந்து நிலையம் மற்றும் ஓக்லா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
ஸ்ரீ கல்காஜி மந்திர் பிரபந்தக் சுதர் கமிட்டி (ரெஜி.)
ஸ்ரீ கல்காஜி மந்திர், கல்காஜி, புது தில்லி
SKMPSC - ஹெல்ப்லைன் : +91 9205084060
கல்கா ஜி கோயில் தினசரி அட்டவணை
ஸ்ரீ கல்கா ஜி கோவில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
காலை அட்டவணை - (முகூர்த்தம் படி நேரத்தை சிறிது மாற்றலாம்)
கணேஷ் வந்தனா காலை 5 மணிக்கு தொடங்குகிறது. சிருங்கார் நேரம் காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை. (கோயில் மூடப்படும்.)
காலை ஆரத்தி 6:30 முதல் 7:00 வரை.
மதியம் 12 மணிக்கு போக். (கோயில் காலை 11:45 முதல் மதியம் 12:15 வரை மூடப்பட்டிருக்கும்.)
மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை கோவில் சுத்தம் செய்வதற்காக மூடப்பட்டிருக்கும்.
மாலை நேர அட்டவணை - (முகூர்த்தத்தின் படி நேரத்தை சிறிது மாற்றலாம்)
இரவு 7:00 மணிக்கு கணேஷ் வந்தனா நிகழ்ச்சி.
சிருங்கார் நேரம் 7:30 PM முதல் 8:30 PM வரை. (கோயில் மூடப்பட்டும்.)
மாலை ஆரத்தி இரவு 8:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை செய்யப்படுகிறது.
சஜ்ஜா இரவு 11:30 மணிக்கு வழங்கப்படுகிறது> கோவில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete