(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485 பதிவுகளில் பார்க்கவும்)
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
குருநாதர்:- அப்பனே அதாவது கடனுக்காக என்று (அகத்தியனிடம் கேட்கின்றீர்கள்) அனைவருமே. கடனை அடைப்பதற்காகத்தான் பிறவியே எடுத்து வந்திருக்கின்றீர்கள். அவ்கடன் (பிறவிக்கடன்) எப்படியப்பா அடைபடும். நீ (பணமாக) கடன் வாங்கியது அடைந்துவிடும். ஆனாலும் அப்பனே, அனைவருமே ஒரு கடனை பின் அடைக்க உலகத்திற்கு வந்திருக்கின்றார்கள் அப்பனே. அவ்கடன் எப்போதுதான் அடைக்கப் போகின்றீர்கள்? அவ்கடனை அடைத்தால்தான் மோட்சம். இல்லை என்றால் இல்லையப்பா.
அடியவர்:- சரிங்கய்யா
குருநாதர்:- ஆனால் அவ்கடன் மிகப் பெரியதப்பா. வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் எப்படி அடைக்க வேண்டும் என்பதைக்கூட. அதை விட்டு விட்டு பணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. முட்டாள் மனிதர்களே.
அடியவர்:- (மௌனம்)
குருநாதர்:- அப்பனே, அவ்கர்மா கடனை அடைத்து விட்டால் துன்பங்கள் என்பதே நெருங்காதப்பா. ஆனாலும் அதற்கு பக்குவங்கள் பட வேண்டும். பல பல வழிகளிலும் கூட துன்பங்கள் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே கடன்கள் அடைக்க வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் இவ்வுலகத்திற்கு நீங்கள் கடனுடனே வந்திருக்கின்றீர்கள் அனைவருமே. அவ்கடனை அடைக்க வேண்டும் என்றால் அதறக்கு சரியான தீர்வு துன்பம்தானப்பா. அப்பொழுது நீங்கள், இதிலிருந்து என்ன உந்தனுக்கு பின் தெளிந்தது கூறு?
அடியவர்:- துன்பத்தை அனுபவித்து கடைனை தீர்க்கணும்.
குருநாதர்:- அப்பனே இதனால் தீபங்கள் அப்பனே ஏற்றுகின்றாயே, அப்பனே ஆனாலும் ஏற்றிவிட்டால் மட்டும் அப்பனே நண்மைகள் ஆகிவிடுமா என்ன? அப்பனே. இவை எல்லாம் (மதுரையில் உரைத்த வாக்குகள் அனைத்தும்) நீ சொல்ல வேண்டும். அப்பனே புண்ணியங்களும் செய்ய வேண்டும். இவை எல்லாம் அங்கு அங்கு செப்ப வேண்டும் மனிதர்களுக்கு அப்பொழுதுதான் புண்ணியம் மிகுந்து காணப்படும் அப்பா. இல்லை என்றால் அப்படியேதான் அப்பனே. மண்ணை கையில் எடுத்துக் கொண்டேதான் (பிரயோஜனம் ஏதும் இல்லாமல்) செல்ல வேண்டும் சொல்லிவிட்டேன்.
————————————————
(அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு
https://siththanarul.blogspot.com/2022/03/1097.html?m=1
இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:-
அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.
அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச் சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச் செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.
அனைவரும் அன்னத்தையும் இவையன்றி கூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற (அன்னதானம் முதலிய) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.
அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன்
எனவே அடியவர்கள் அன்னதானம், தீபங்கள் ஏற்றும்போது அவர்களுக்கு நல் வழி சொல்லி அவர்களை கடைபிடிக்கச் செய்யுங்கள். ஏதும் தெரியாத மனிதர்களுக்கு குருநாதர் காட்டிய நல் வழிகளை எடுத்து கூறுங்கள். அவர்கள் அதை பின்பற்றினால் அதுவே உங்களுக்கு முதல் மிக உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும்.)
———————————————
அடியவர்:- ( அடியவருக்கு நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் எடுத்து உரைத்தார் பின் வருமாறு:- ஐயா தீபம் எத்தும்போது எப்படி வாழனும், எப்படி செய்யனும் அப்படீன்னு சொல்லுங்க. அப்பதான் கஷ்டம் நீங்கும்)
குருநாதர்:- அப்பனே, இதை தொடங்கி வைத்தானே ,
(அகத்திய பிரம்ம ரிஷி தனது நாடி வாக்கில் பல முறை தனது மைந்தன் என்று அழைக்கப்பட்ட அகத்தியர் திருவடி சேர்ந்த உயர்திரு. அகத்தியர் திருமகன், அகத்தியர் அதிஷ்ட தீபக்குழு நிறுவனர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் சிவபெருமான் , முருக பெருமான் , அகத்தியர் பெருமான் இவர்களின் ஆசி பெற்ற உயர் ஆன்மா ஆவார். ஐயா அவர்கள் அகத்திய பிரம்ம ரிஷி நாடி அருளாளர் திரு. ஹனுமன் தாசன் அய்யா அவர்கள் மூலமாகவும், அகத்தியர் ஜீவநாடி தஞ்சாவூர் கணேசன் ஐயா அவர்களின் ஜீவநாடி மூலமாகவும் ஆசி பெற்று அதன் மூலமாக உள்ளுணர்வு தூண்டப் பெற்று அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழுவை அமைத்தார்கள். தஞ்சை அகத்தியர் நாடியில் திரிசூலம் மாமுனிவர்களாகிய அருள்மிகு அகத்தியர் மஹரிஷி, வசிஷ்ட மகரிஷி மற்றும் விஷ்வாமித்திர மகரிஷி ஆகியோர் ஆசி கொடுத்து மனித பிறவியை உருவாக்கி , அவர் மூலம் இந்த பூலோகத்தில் தீபங்கள் மூலம் அருள் வளம் பெற வாழ்ந்த ஒரு மாமனிதர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் பிருங்கி மகரிஷி மற்றும் பிருகு மகரிஷி ஆன்மா தொடர்பு உடையவர் என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். நாடி வாக்கு தொடர்கின்றது.….. )
பல பேருக்கும் நன்மை செய்தான் ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான். ஏன் வந்தது? ஆனாலும் வாழத்தெரியவில்லையப்பா. இவன்தனும் கற்றுக்கொள்ள அதாவது பின் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா. அதனால்தான் துன்பங்களாக போய்விட்டது அனைவருக்குமே. அதை நீ செய்து விடாதே வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே.
அடியவர்:- ஐயா வழி நடத்துங்க ஐயா. என்ன செய்யனும்னு. ( மற்ற அடியவர்கள் :- சொல்லனும் எப்டி வாழனும்னு. துன்பத்தை அடைஞ்சு அடைஞ்சுதான் கர்மா போகும். அப்படீன்னு தீபம் ஏற்றும் பொழுது சொல்லணும்)
குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள்.
அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்க்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய.
குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழக்கையும் எரிய வேண்டும் என்பதற்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அணைந்துவிடும். நீங்களும் அணைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே.
அடியவர்:- (அமைதி)
குருநாதர்:- அப்பனே பின் நீ சேவைக்காகவே வந்தவன் அப்பனே. ஒவ்வொன்றாக எடுத்து கூற வேண்டும். சொல்லிவிட்டேன். அப்படி எடுத்துக் கூறவில்லை என்றால் பல பல சுவடிகள் ஓதிக்கொண்டு இருப்பவர்கள் கூட எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள அதாவது சொல்லித் தரவில்லை அப்பா மனிதர்களுக்கு. இதனால்தான் சுவடிகளை படிப்பவர்களுக்கு எல்லாம் கஷ்டங்கள் வந்து கடைசியில் அப்பனே பாதாள லோகத்திற்கு சென்று விடுகின்றார்கள் அப்பனே. ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா. தன்னைத்தானே அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் உண்மை நிலை அப்பனே யாங்களே மனிதனை திட்டித் தீர்க்கவில்லை என்றால் அப்பனே வரும் காலங்களில் பின் சித்தர்களே பொய். சித்தர்களே இல்லை என்று ஒரு வாரத்தையில் சொல்லிவிட்டு போயிருப்பான் அப்பா. அதனால்தான் மனிதர்களுக்கு முதலில் பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி பின் வாக்குகள் ஒவ்வொரு சித்தனாக உரைப்பான் அப்பனே. (சித்தர் பெருமான்) போகன் அறியாததா நீங்கள் அறிந்திருக்கப் போகின்றீர்கள்? அப்பனே. அப்பனே உப்பை சிறிது நீரில் இட்டு அருந்தினாலே அப்பனே போகனை நினைத்து போகனே வந்து சில நோயை குணப் படுத்துவானப்பா. அப்பனே தெள்ளத் தெளிவாக இருங்கள். தெளிவாக இல்லை என்றால் மற்றவர்கள் உன்னை சுலபமாக ஏமாற்றிவிட்டு சென்றிருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன். இறைவன் ஒருபோதும் உன்னை ஏமாற்ற மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே. துன்பங்கள் கொடுப்பானே தவிர அப்பனே ஏமாற்றமாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன். அப்பனே ஏன் பழத்தை இறைவனுக்கு வைக்கின்றார்கள்?
அடியவர்:- நிவேத்தியம்
குருநாதர்:- அப்பனே துன்பங்கள் பட்டு பட்டு பல வகைகளிலும்கூட இன்னல்கள் பட்டு பட்டு அப்பனே கடைசியில் அப்படி பட்டால்த்தான் கடைசியில் அதுவே இறைவனிடத்தில் வருகின்றது. அதனால்
நீங்கள் சுலபமாக இறைவனிடத்தில் வந்து விடுவீர்களா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பன்மடங்கு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு வாக்கிலும் சொல்லுகின்றேன்.
அடியவர்:- புரியுதிங்கய்யா
குருநாதர்:- அப்பனே, கற்பூரம் கற்பூரம் என்று கூறுகின்றார்களே, எதற்காக அதை ஏற்றுகின்றார்கள் இறைவனுக்கு?
அடியவர்:- கற்பூரம் ஒளிவிட்டு தன்னைத்தானே எரிச்சிக்குது.
குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே புரியவில்லையா? அதாவது எப்படி உருகி உருகி நிற்கின்றதோ அதுபோலத்தான் பிறர்நலன் நீங்கள் காணவேண்டும் அப்பனே. அப்படி இருந்தால்தான் இறைவனுக்கு அப்பனே இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் என்பேன் அப்பனே. தான் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ அவன்தன் பக்கத்தில் இறைவன் இருப்பான் அப்பனே. அது புறத்திலே உள்ளதப்பா. ஏன் பின் இறைவனுக்கு புஷ்பத்தை வைத்துக் கொண்டு வணங்குகின்றீர்கள்?
அடியவர்:- மலர் தனக்குன்னு ஏதும் வச்சுக்கிரது இல்ல. வாசத்த கூட பிறருக்குத்தான் கொடுக்குது.
குருநாதர்:- அப்பனே இன்று பூ. நாளை அது உதவாதப்பா. இவ்வளவுதான் வாழ்க்கையப்பா. இதுதான் மனிதனப்பா. அதாவது உதவாத உடம்பை வைத்துக்கொண்டு பின் ஏதாவது செய்யுங்கள் என்பதே இதனுடைய அர்த்தம் சொல்லிவிட்டேன். இதன் பின் அர்த்தத்தையும் இன்னும் இன்னும் சொல்கின்றேன். புரிகின்றதா அப்பனே? இன்று மனிதன் நாளை எங்கேயோ அப்பனே.
அடியவர்:- புரியுது.
குருநாதர்:- அப்பனே இறைவனுக்கு தெரிந்துதான் அனைவருமே செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்குத்தான் தெரியவில்லை என்பேன் அப்பனே. அதை எல்லாம் கேட்காதீர்கள் அப்பனே. துன்பம் வந்துவிட்டது , எதற்காக இவ்வாறு சண்டைகள்? கடன் தொல்லைகள் என்றெல்லாம் தெரிந்து வாழுங்கள் அப்பனே. என்னை நம்பி பின் (ஏதும் வாழ்க்கையை பற்றி) தெரியாமலே வாழ்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா அகத்தியனை வணங்கிக்கூட.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
பணிவான வணக்கம் 🙏 தேவதாரு மூலிகை எங்கே கிடைக்கும் என்று கூறவில்லை மேலும் தெய்வீக மூலிகை தினசரி எவ்வாறு கிடைக்கும் என்பதையும் யோசிக்காமல் குருநாதர் மனிதனை முட்டாள் என்கிறார் இதை எங்கே போய் சொல்ல.......
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete