​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 21 October 2023

சித்தன் அருள் - 1481 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 6!


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

இன்பங்களே கொடுத்து கொண்டு இருந்தால்….. சிந்திக்கவே மாட்டான் அப்பா. எப்படியப்பா யான் நல்லது செய்வது?

குருநாதர்:- அப்பனே, வாழ்க்கை என்பது என்ன?

அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது.

குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்?

அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில நொடிகளுக்கு பின்னர் ஒர் அடியவர்) ஐயா ஜெயிக்க முடியாது ஐயா. அகத்தியப்பெருமானிடம் பேசி.

குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே.

(இங்குதான் அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு புலோகத்தில் பல ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. குருநாதர் நேரடியாக சீடர்களுக்கு பாடம் எடுப்பது போல ஆரம்பித்தார் சில நல் ஆத்மாக்களுக்கு. நாடி வாக்கே பலருக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், ஆனால் இந்த அடியவர்கள் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்க்கும் வாய்ப்பு கிட்டியது. எப்பேர்பட்ட பாக்கியம் அந்த அடியவர்களுக்கு)

அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்)

குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.

அடியவர்:- (ஒரு காலில் நிறக்க ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே கைகளை மேலே துக்கி ,

அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)

குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை.

அடியவர்:- (அடியவர் மெதுவாக பேசினார்)

குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய் எனபேன் அப்பனே. அனைவருக்கும் பலமாக எடுத்துரை் என்பேன் அப்பனே.

அடியவர்:- எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான் பார்த்துக்குவார். ( இப்போது ஒற்றைக்காலில் நிற்க்கும் அடியவர் , நிற்க இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். )

குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்க்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத்தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.

அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)

குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?

அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.

குருநாதர்:- (இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர் குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய் என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல்.

அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்)

குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி)

அடியவர்:- (அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்)

குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு.

அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் உள்ள பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்)

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருநாதர்:- அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே ஒர் ஆள் தேவையப்பா. உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில் நிற்க்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத்தானப்பா மனிதனுக்கு சில சில வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பா? உன் நிலமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை என்று அறிய அறிய சம்பாதித்து அப்பனே அனுபவித்துக்கொண்டிருந்தாய். ஆனாலும் அப்பனே சிறுக சிறுக முருகனே அதை நீக்கிவிட்டான். அதனால் நிச்சயம் அப்பனே பாடலை பாடு. அப்பனே காலை கீழே விடாதே.

அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை இதைக்கூட சரியாக செய்யவில்லை என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் என்னென்ன கேட்கின்றீர்கள் அப்பனே. அவை எல்லாம் யான் தரவா முடியும் அப்பனே. எவை என்று அறிய இதை சரியாக எவை என்று கூற யான் சொல்லியதை சரியாக பின்பற்றினால்தான் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும். ஏனென்றால் அப்பனே ஏன் எதற்க்காக சொல்கின்றேன் என்றால் அவ்கர்மாவை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே கர்மாவை பற்றி இப்படியே எடுத்து கூறு நீ.

அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பன்னால் நல்லது வரும். கெட்டது பன்னா கெட்டதை வரும்.

குருநாதர்:- (தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள் நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.) இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்ப்பவே அப்பனே சில சில துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா?

அடியவர்:- சரிதான்.

குருநாதர்:- அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு செய்துவிட்டு தவறு செய்து விட்டு , தவறு செய்து விட்டு என்னிடத்தில் வந்தால் எப்படியப்பா யான் கொடுப்பது? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே.

அடியவர்:- (அனைவரும் அமைதியானார்கள்.)

குருநாதர்:- அதனால் அப்பனே, உன் பக்த்திலேயே இருக்கின்றானே இவன்தன் ( தனி நபர் வாக்கு நீக்கப்பட்டது) தாய்க்கு பல உதவிகள் சேவை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இறைவன் சேவைகள் செய்வான். தாயை பாரத்து ஒரு பாடல் பாடு.

அடியவர்:- (பாடல் ஒன்றை பாடினார்)

குருநாதர்:- அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல் ஏற்பபடுத்துகின்றேன் அப்பனே. முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே, எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே.

அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி)

குருநாதர்:- இதனால் அப்பனே உணருங்கள். அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க்க முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே? ஆனால யான் இருக்கின்றேன் அப்பனே. பாதை காட்டுகின்றேன். வையுங்கள் காலை கீழே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. மிக்க நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete