​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 October 2023

சித்தன் அருள் - 1468 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு, திருப்பதி!




சமீபத்தில் காகபுஜண்டர் முனி திருப்பதியில் உரைத்த பொது வாக்கு -  வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி.

உலகையாளும் ஈஸ்வரனை பணிந்து உரைக்கின்றேன் மேலும், மேலும் !! மேலும்!! பல உண்மைகளை கூட உரைப்பேன் மனிதனுக்கு. 

மனிதன் திருந்துவது இல்லை !!!

புசுண்டனே பேசுகின்றேன்!!!!

இன்னும் ஏராளமான பொய்களையும் சொல்லி சொல்லி நடிப்பான் மனிதன்!!

நடிப்பதில் எதை என்று சிறந்ததாக கருதப்படுவது நிச்சயம் மனிதனே!!!

இதனால் புத்தி கெட்ட மனிதன் தன் பாதையில் சென்று சென்று அழிந்து கொண்டே இருக்கின்றான்!!

இதற்கு காரணம் கேட்டால் பல பல வகையிலும் கூட யான் இறைவனை வணங்கினேனே இறைவனை நேசித்தேனே என்றெல்லாம் பொய்கள் கட்டு கட்டாக இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில் நிச்சயம் எதை என்று உணராமலே அவனே அவந்தனை அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கூட தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது!!!!

அதனால் மனிதன் அழிவிற்கு மனிதனே காரணம் ஆகின்றான்!!!

அதனை விட்டிட்டு இறைவனையும் சித்தர்களையும் குறை கூறிக்கொண்டு தான் இருக்கின்றான்.

ஆனாலும் குறை கூறுவது மட்டுமில்லாமல் சித்தர்களையும் இறைவனையும் கூட ஏமாற்றி ஏமாற்றி பிழைப்பு நடத்தி மீண்டும் கடைசியில் பார்த்தால் பின் கவலைகள் கவலைகள்!!!

ஆனால் இதையும் பின் யோசிப்பதில்லை!!! ஏன்? கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட!!!!

கஷ்டங்கள் எதை மீறி மீறி மனிதா!!!! உன் நிலைமைகளை நீ நினைத்துப் பார்!!!

உன் மனசாட்சிக்கு எதை என்று அறிய அறிய அதனால் தக்க எவை என்று அறிய அறிய பக்தி மான்களும் கூட நிச்சயம் வரும் காலங்களில் கஷ்டங்கள் தான் படுவார்கள்!!!

யான் ஆராய்ந்து ஆராய்ந்து சொல்லிவிட்டேன் கலியுகத்தில்.

ஏனென்றால் உண்மையானவை அல்ல!!!

ஏன்?? எதற்காக என்றால் நீ அனைத்தும் கர்மத்தைத் தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றாய் எதை என்றும் அறிய அறிய

அதை  அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்பதுதான் நிச்சயம் கட்டளை!!!!

பிறவியும் வேண்டாம்!!!

ஆனால் அனைத்தும் வேண்டுமாம் !?!?!?!?!?!?!?!!!!!!

அனைத்தும் கொடு !! கொடு!! என்று!!

இறைவன் கேட்டால் எதை கொடுப்பது? எதை கொடுக்காதது? எதை எடுப்பது ? எதை எடுக்காதது?!!!!

ஆனால் அழிவின் பாதையில் செல்கின்றது என்பதை கூட மனிதன் யோசிக்கவில்லையே!!!

ஆனாலும் இப்படியும் யோசிக்கிறான் அழிவு தான் ஏற்படப் போகின்றதே!!! ஆனால் அனைத்தும் அனுபவித்து போகலாம் என்று!!!

யாங்கள் விட்டுவிடுவோமா?? என்ன ???

இது பொய்!!  பொய் உலகம்! அதனால் தன் கையில் இருப்பதையெல்லாம் நிச்சயம் எதை என்று அறிய அறிய அறிந்தும் பின் கர்மா தான் யான் சொல்வேன்.

ஆனால் மனிதனோ எதை என்று ஆனாலும் ஒரு பழமொழியும் கூட அறிந்தும் அறிந்தும் நினைப்பே அனைத்தும் கெட்டது!!!!! ( நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்) என்று!! 

இதைத்தான் யான் இதை போலத்தான் மனிதன் வாழுகின்றான் நினைப்பு மனிதனுக்கு வாழ வேண்டும் வாழ வேண்டும் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் கஷ்டங்கள் இன்னும் இன்னும் ஏராளமாய் மனிதனை பின் கஷ்டங்களே கொன்று விடும்!!!

ஆனால் அனைத்தும் தன் பிள்ளை தன் மனம் தன் இனம் தன் மக்கள் வாழ வேண்டும் இன்னும் இன்னும் தம் தன் மனைவிகள் இன்னும் இன்னும் ஏராளமானோர் கணவர் இவையெல்லாம் வாழ வேண்டும் என்பதையெல்லாம்!!!!......

நிச்சயம் ஆனாலும் இறைவன் தீர்மானிப்பதே கடைசியில் செல்லும்!!!

இதை யான் நிச்சயமாய் பல பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!

ஆனாலும் மனிதன் திருந்திய பாடில்லை!!!

திருந்திய பாடில்லை அதனால் நிச்சயம் மனிதனுக்கு நிச்சயம் ஈசன் பாடம் கற்பிப்பான்!!!

புரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் இவ் மழையினாலும் அழிவுகள் ஏற்படும் இன்னும் பூகம்பங்களாலும் அழிவுகள் ஏற்படும் இன்னும் கற்களாலும் வீசுவார்கள் மேலிருந்து அனைவரையும் கூட!!!

இதனால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!!!

நன்றாகவே வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!!

பொறாமை இல்லாமல் போட்டி பொய் பேசாமை இறைவன் பக்தி செலுத்துங்கள் அன்பை செலுத்துங்கள் போதுமானது.

அப்படி இல்லையென்றால் எதையெதையோ நிச்சயம் ஈசன் செய்து விடுவான்!!!

பின்பு குறை கூறுவதற்கும் கூட யாரும் வழியில்லை.

உலகத்தை படைத்தவன் இறைவன் இறைவனுக்கு அழிக்கவும் தெரியும் படைத்தது இறைவன் ஆனால் அழிப்பதும் இறைவன்தான்!!!

ஆனால் படைக்கும் பொழுதே அனைவரையும் நல்லவராகத்தான் படைத்தான் இறைவன்

ஆனால் புத்தி கெட்ட மனிதன் கேடுகெட்ட மனிதன் அனைத்தையும் தெரிந்து கொண்டு பாவக்கணக்கில் விழுந்து விட்டானே!!!!! விழுந்து விட்டானே!!!!

இதனால் மனிதர்களை எல்லாம் சித்தர்கள் பாவம் பாவம் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் மனிதா யோசித்துக் கொள்!!!

ஏன் இந்த நிலைமை???? 

ஏன் இந்த கஷ்டங்கள்???

ஏன் உன்னை பார்த்தே யான் சொல்கின்றேன்.

நீ நன்றாகவா???? இருக்கின்றாய்???!!!!!

மனக்குழப்பம் இல்லாமலா!?!?! இருக்கின்றாய்????

கஷ்டமாக தானே இருக்கின்றாய்!!!!! எதை என்றும் இன்னும் இன்னும் ஏராளம் இன்னும் இன்னும் அவை வேண்டும் இவை வேண்டும் அனைத்தும் எங்களிடத்தில்

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் கர்மாவை கேட்டு விடாதீர்கள்!!!!!!

கர்மத்தை நிச்சயம் யாங்கள் நிச்சயம் தரவும் மாட்டோம் ஏன் எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் சேர்வதற்கு ஏன் இவ்வுலகத்தில் உந்தனுக்கு நிச்சயம் சுகங்கள்???

மனிதா திருமணம் இன்னும் இல்லம் இன்னும் தொழில் இவை எல்லாம் இருந்தால் தான் வாழ முடியுமாம்!?!?!?!  மனிதனுக்கு புத்திகெட்ட மனிதனுக்கு!!!

ஆனால் இவை இல்லாமலே வாழ முடியும்!!!

ஏன் எதற்கு இறைவனின் அன்பு இறைவனைப் பிடித்துக் கொண்டால் இறைவன் அப்படியே பின் தூக்கி சென்று விடுவான் எங்கேயோ அமைத்து விடுவான்.

ஆனாலும் இதை அறிந்து அறிந்துசிலர் சொத்துக்கள் வேண்டும் சிலர் இல்லங்கள் வேண்டும் சிலர் கணவன்மார்கள் வேண்டும் சிலர் கஷ்டங்கள் போக வேண்டும் சிலர் இன்னும் எதனை எதனையோ பிள்ளைகள் வேண்டும்!!!!!!............இதற்காகத்தான் இறைவனை வழிபடுகின்றீர்களோ!?!?

யாராவது ?? உண்மையான மனிதன்!!.... 

நீதான் வேண்டும் இறைவா!!!

உன் அன்பே போதுமானது!!

அனைத்தும் நீயே கொடு!! உன் நிலைமைக்கு அதாவது எதை நீ கொடுக்கின்றாயோ அதை சந்தோசமாக ஏற்பேன் என்று....... யாராவது?? ஒருவன் கூறுகிறானா ?? என்றால்....!?!?!?!?

இல்லை!!!  இல்லை!!! 

அதனால்தான் உலகம் அழிந்து கொண்டே இருக்கின்றது!!!

மனிதா !! தெரிந்துகொள்!!

தெரிந்துகொள் புரியாத அளவிற்கும் வாழ்ந்து விடாதே!!!! அனைத்தும் புரிகின்றது ஆனாலும் பின் புரியாமலே இருக்கின்றாய்.

புரியும் போல் வாழ்கின்றாயா!?? புரியாமல் வாழ்கின்றாயா என்று சிந்தித்து சிந்தித்து கொண்டு இருந்தாலே நலன்கள் நலன்கள்.

ஆனாலும் சிந்தித்து செயலாற்று சிந்தித்து செயலாற்று என்பதையெல்லாம் யாங்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பல சித்தர்களும் கூட சொல்வார்கள்.

மூடநம்பிக்கையை முதலில் விட்டு ஒழியுங்கள்!!!

அவ்வாறு விட்டு ஒழித்தால் தான் நல்லது நடக்கும் என்பது!!!...

ஆனாலும் இன்னும் சிலர் கிரகங்கள் கிரகங்களைப் பற்றியே பேசுகின்றார்கள்

ஆனாலும் கிரகங்கள் நல்லதை செய்து விடுமா?? என்ன !?!?!?

நிச்சயம் இன்னும் இடைக்காடனே வந்து சொல்வான் கிரகங்களை பற்றி!!!!

இப்படி இருந்தால் தான் நன்றாக செய்வான் அப்படி இல்லை என்றால் நிச்சயம் நன்றாகவே செய்ய மாட்டான் செய்ய மாட்டான்!!!

ஏன்?  எதற்கு?  எவை? அறிந்து அறிந்து அனைத்தும் கர்மாவிற்கு ஏற்பத்தான் இங்கு நடக்கின்றது!!!

ஆனாலும் எதை எக்கிரகம் கர்மாவை குறிக்கிறது?? அதை எப்படி நீக்க வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் மனிதனுக்கு வரும் காலங்களில் இடைக்காடனே வந்து செப்புவான்!!!!

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் உயரலாம்!!!

மற்றபடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் படுவதல்ல!!! உன்னிடத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து நீ கஷ்டப்படுத்தத்தான் போகின்றாய் என்பவையெல்லாம் வரும் காலங்களில் நிதர்சனமான உண்மை!!!!!

உண்மையை கடைப்பிடியுங்கள்!!! பொய்யை கடைபிடிக்காதீர்கள்!!

பொய் உண்மை என்பவை எல்லாம் ஒரு நாள் தெரியும் பொய் உண்மையாகி விடலாம். உண்மை பொய்யாகி விடலாம் இதை சிந்தித்துக் கொள்ளுங்கள்

யாராவது இதை சிந்தித்துக் கொண்டால் நிச்சயம் இதன் மதிப்பு தரம்!!!!

தரம் இன்னும் குறைந்ததா? இல்லை உயர்வு உண்டா?

உயர்வு உண்டு எதற்கு எதை அஞ்சாதே என்றெல்லாம் என்றெல்லாம் என்று என்று நினைத்து நினைத்து நினைத்து நினைத்து பார்க்கையில் ஆயினும் நிச்சயம் தரித்தரன் மனிதனே!!!!

இதனால் என்ன லாபங்கள்????

வருகின்றான்...... அழிகின்றான்!!! இதுதான் மனிதனுடைய குணம்.

ஆனால் நடுவில் என்னென்ன குணம்?? என்னென்ன ஆட்டம்?? ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து தண்டனைகள் கடைசியில் கொடுக்கின்றானா? இறைவன்!!. இல்லை முதலிலே கொடுக்கின்றானாம் இதன் முற்பகுதியில் அதாவது இதன் முன்னே ஜென்மத்தில் பிறந்ததைக் கூட அதனால் எண்ணி எண்ணி வருந்தும் மனிதா இன்னும் இன்னும் ஒரு உயிரைக் கொன்று கொன்று பின். அறியாத ஜீவராசிகளை கூட கொன்று ஆனாலும் இவற்றையெல்லாம் உண்டு வந்தால் கைகள் முடக்கம் கால்கள் முடக்கம் இன்னும் தலையில் இன்னும் கண்களில் இன்னும் பற்களில் இவைகளில் எல்லாம் வலிகள் ஏற்பட்டு இதனை யாராலும் போக்க முடியாது யாராலும் போக்க முடியாது!!!

இதை சித்தர்கள் இன்னும் இன்னும் தெளிவு படுத்துவார்கள் இதனால் மனிதா அனைத்திற்கும் நீயே தான் காரணம்!!!

நீ என்ன செய்கின்றாயோ அதை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதையெல்லாம் பல வாக்குகளிலும் கூட செப்பி  செப்பி உணர்ந்து உணர்ந்து செப்பினேன்.

ஆனாலும் இவைதனையும் கேட்டாலும் கேட்காவிடிலும் தண்டனைகள் உண்டு தண்டனைகள் இல்லாவிடிலும் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இறைவன் செய்வான்!!!

இதனால் பிற்போக்கு இதனையும் அறிந்து அறிந்தோர்க்கு உண்டா????

உண்டு !! என்பதையும் கூட மறந்து விட்டால்!!!.......

மறந்து என்பதை !!!  ஈயும், ஈயும் விதி ஏதடா????  மதி ஏதடா?? கதி ஏதடா??

கதி உண்டு மனிதா இறைவனிடத்தில்!!!!!

இறைவனுக்கு ஒப்பானவன் யார்!!!???

யார் என்று சமமில்லை """சமமானவனே அகத்தியனே!!!!!!!

அகத்தியனும் காத்துக் கொண்டிருக்கின்றான்!!!

இன்னும் அகத்தியனை வைத்தும் கூட எப்படி எப்படியோ ஏன் எதற்காக என்பவை எல்லாம் நின்றின்று நிற்காதது ஏதடா??

ஏதடா???  கூறு!!! 

கூறென்று கூறுகாயினும் மனிதா புத்தி இல்லை!! புத்தி உண்டு ஆனால் நிதர்சனத்தில் பொய்!!!

பொய்யானது சமமாகவே பாவித்துக்கொண்டாலே உண்மை நிலையை சமமாகவே பாவித்துக்கொண்டாலே பாவிக்கும் தன்மை!!!

பாவியின் பாவி அப்பாவியின் முன் நேர்ந்தால் என்ன கதி???

என்ன கதி??? 

நிற்குமடா உன் இதயத்தில்!!

இதயத்தில் பேசுமடா பேசியது பின்பு பலிக்குமடா பேசியது இறைவன் தானடா!!!!

இதை ஆசைகளை அறுமின்.. னடா!!!! அறுமின்!! அறுமின்!! இன்னும் எதையெதையோ அறுமின்!! 

அவ்வாறு அறுமின் பின் அறுந்து கொண்டே வந்தால் இறைவன் இதயத்தில் பேசுவானாடா!!!

பேசிட்டு நிச்சயம் இறைவன் கண்ணோக்கி கண்ணோக்கி நின்று நின்றாலும் நிற்பான் உன் முன்னே காணலாமடா!!

காணலாம் நிச்சயம் பின் உன்னால் அனைத்தும் உருவாக்க முடியுமடா!!!

முடியுமடா பல பல பிரச்சனைகளை எல்லாம் பின் மனதில் ஆசைகள் பாசங்கள் பொதித்து பொதித்து வைத்தாலும் கூட மாயை எட்டும் பொழுது இறைவனை காண இயலாதடா!!!!

பின் இறைவன் வந்தாலும் ஒன்றும் லாபம் இல்லையடா!!!

ஒன்றும் செய்ய தெரியாதடா உந்தனுக்கு இறைவன் நேரில் வந்தாலும் ஆசைகள் பாசங்கள் இதை மனதில் கொண்டால் நிச்சயம் இறைவன் கண்ணுக்கு தெரிய மாட்டான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய.

மனது சுத்தமாக அதாவது வைத்துக் கொண்டால் தான் இறைவனை காணவும் முடியும் அப்படி இல்லை என்றால் நிச்சயம் காணவும் முடியாது ஆசைகள் இன்னும் சுகங்கள் இன்னும் எதை எதைப் பற்றியோ செயல்பட்டு அதாவது செயல்படுத்திக் கொண்டே இருந்தால் அதுதான் உந்தனுக்கு எவை என்றும் அறிய அறிய கர்மங்கள்.

ஆனாலும் மனிதா திருந்திக்கொள் !!! திருந்திக்கொள்!!!

இறைவனை பார்க்க வேண்டுமா?????

எதற்கும் ஆசைப்படாதே!! எதற்கும் கவலைப்படாதே!!

இறைவனை பார்க்கலாம்!!

ஆனால் இதிலும் சூட்சுமம் பல உண்டு ஒளித்து ஒளித்து உண்டு உண்டு உண்டு இன்னும் எம் புத்தகங்களில் கூட!!!!

ஆனாலும் ஒளித்து வைத்து விட்டேன் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு.

இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பின் மனிதன் இன்னும் யான் இறைவன் என்று சொல்லிவிடுவான் என்பதை கூட கலியுகத்தில் தெரியுமடா!!!

அனைத்தும் தெரியும் என்பது மனிதனுக்கு காட்டிக் கொள்வான் ஆனால் ஒன்றும் தெரியாது!!

கேள் அவனிடத்தில் ஏன் எதற்காக என்றால் அனைத்தும் புகழுக்காகவா பணத்திற்காகவா இல்லை சுகங்களுக்காகவா இதனை நிச்சயம் தெரிந்து கொண்டாலே!!!.....

ஆனாலும் ஒவ்வொரு கட்டளைபடியும் கூட இறைவன் நிமித்தம் காட்டி அங்கங்கு திருத்தலங்கள் இன்னும் சக்தி வாய்ந்தவை இருக்கின்றன. அங்கெல்லாம் சென்று கர்மா கணக்கை முடித்துக் கொள்ளுங்கள்!!!

இறைவனை காணலாம்!!!அவ் கர்மா கணக்குகளை முடிப்பது என்பதை கூட எத்திருத்தலங்கள்?? என்பதை கூட வரும் காலங்களில் சித்தர்கள் சொல்வார்கள் அங்கு சென்றாலே போதுமானது நீங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிச்சயம் இறைவனை காணலாம் இவையெல்லாம் வரும் வரும் வாக்கில் நிச்சயம் அகத்தியனும் இன்னும் ஏனைய சித்தர்களும் சொல்வார்கள்!!!

 மானிடனே திருந்திக் கொள்...!!!

ஆசிகள் !!ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. குருமார்களுக்கு எனது பணிவான வணக்கம்(வேண்டுகோள் )🙏 சித்தர்களுக்கு என்னாச்சு நல்ல மனிதர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு குருவாய் தந்தையாய் இருந்து ஆன்மீக வழிகாட்டியாய் இருக்க வேண்டிய சித்த பெருமக்கள் சமீப காலமாக மக்களை குறை சொல்வதும் திட்டுவதையும் வாடிக்கையாய் செய்வது மனதுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.எவ்வளவோ நன்மக்கள் கட்டத்தில் இருக்கும் போது அவர்களுக்கு வழிகாட்டியாக இல்லாது மாறாக இப்படி மானிடர்களை திட்டிக்கொண்டே காலத்தை கடத்துவது உசிதமான செயலா.சித்த பெருமக்கள் சற்று யோசித்து செயல் பட வேண்டுகிறேன்.நல்லோர்களுக்கு உதவிகள் புரிந்து அவர்களை மேல்நிலைக்கு உயர்த்தி விட்டாலே கெட்டவர்கள் தானாக திருந்துவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete

  2. குருவானவர் (ஆசிரியர்கள்) வாழும் கலையை பற்றிய பாடம் கவனித்த மாணவனை திட்டுவதில்லை.

    பாடம் கவனிக்காதபின் நிலையில் உள்ள மாணவனை திட்டுகிறார்கள்.

    குருவானவர் ஏணியை போன்றவர்.

    குரு போதனையை அறிந்து தெளிதல் வேண்டும்.

    இது என்னுடைய தாழ்மையான கருத்து.

    அனைவருக்கும் இறையாசி கிட்டட்டும். வாழ்க வளமுடன்.
    நற்பவி நற்பவி நற்பவி

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete