31/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு:- வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே நலன்கள் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கும் கூட அப்பனே நலன்களாகவே அப்பனே யான் சொல்லியதை அப்பனே நிச்சயம் முறையாக பயன்படுத்தி வந்தாலே போதுமானதப்பா!!!!
கர்ம வினைகள் சேராதப்பா!!!
அப்பனே தெரியாமல் இறைவனை வணங்கினாலும் அப்பனே ஒன்றும் முடியாதப்பா!!!!
அப்பனே கர்மங்கள் அப்படியே இன்னும் இன்னும் அப்பனே சேர்ந்து கொண்டு தான் இருக்குமப்பா!!!!
அதனால் இறைவன் எங்கே ??? சித்தர்கள் எங்கே ??? என்றெல்லாம் சந்தேகங்கள் அப்பனே!!!!!
ஆனால் அப்பனே ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே யான் சொல்லியதை!!!...............
ஆனாலும் அப்பனே அனைத்தும் ஏனோ தானோ என்று கூட அப்பனே பல மனிதர்கள் இருந்து விடுகிறார்கள் என்பேன் அப்பனே !!!!
அதனாலே அப்பனே கடைசியில் பார்த்தால் கர்மாக்களை சேர்த்துக்கொண்டு அப்பனே மீண்டும் எங்களிடத்தில் தான் வர வேண்டும்!!!
அப்பொழுது அப்பனே யாங்கள் என்ன செய்வது ????? அப்பனே !!!
எதை என்றும் அறியாமலும் கூட இதனால் அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!
அதாவது அப்பனே கன்னி திங்கள் (புரட்டாசி மாதம்) எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே முன்னோர்களுக்கு கூட
(மக்கள் அனைவரும் புரட்டாதி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியதை குறித்து குருநாதர் கூறியது)
காக்கும்!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே அனைவருமே துடிப்பார்கள் அப்பனே (முன்னோர்களின் ஆன்மாக்கள் )
விஷ்ணுவை காண காண ஆன்மாக்கள் எல்லாம்!!
அப்பனே இவைதன் துகள்களாக அணுக்களாக அப்பனே அணுவில் உள்ள துகள்கள் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் அப்பனே யான் சொல்லிவிட்டேன்!!! இவ்வாறு பரிபூரணமாகவே அவைதன் ஆன்மாக்கள் அப்பனே நல்முறையாக முன்னோர்களை எதை என்றும் இழுத்து அப்பனே அதாவது பின் நிச்சயமாய் அப்பனே சொல்லிவிட்டேன்.
நவராத்திரி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட.
இதனால் ஆசீர்வாதங்கள் அப்பனே!!!!
இதிலிருந்து அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே சில ஆன்மாக்கள் நம்தனுக்கு அறிந்தும் அறிந்தும் கூட நன்மையே!!!.......... எவை என்று அறிய அறிய சந்தோசப்படும் அப்பனே!!!!
ஆனால் இங்கேயே இருந்து விடலாம் என்று பந்த பாசங்களில் நுழைந்து நுழைந்து....... ஆனாலும் உடம்பில்லை அப்பனே.
ஆனாலும் அப்பனே ஆன்மாக்கள் அறியாமல் கூட இதனால் வலம் வந்து வலம் வந்து இதனால் அப்பனே!!!
இதனால்தான் இப்பொழுது. """ ஐப்பசி !!! எதை என்று அறிய ஐம்புலன்களையும் கூட அடக்கி அப்பனே நிச்சயமாய் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட அப்பனே நிச்சயம் அதாவது ஆன்மாக்கள் அதாவது துகள்களாக இருக்கின்றதே அவையெல்லாம் அப்பனே அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!
அப்பனே இன்னும் மோட்சம் அப்பனே அறிந்தும் கூட அவ் ஆன்மாக்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!
அதனால்தான் என் நதிகளான தாமிரபரணி அப்பனே காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் இன்னும் பல புண்ணிய நதிகள் இருக்கின்றன அப்பனே அதனால் அப்பனே ஆங்காங்கே நிச்சயம் இருப்பவர்கள் அப்பனே பின் நீராட அப்பனே உடம்பில் ஒட்டிக் கொள்ளும் எவை என்று அறிய அறிய துகள்கள் அப்பனே நிச்சயம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே!!!
அதனால்தான் அழகாக """""""காவிரி !!!!! என்ற நதியை கூட அப்பனே எப்படி எல்லாம் மனிதர்கள் பயன்பட வேண்டும் என்றெல்லாம் யான் உருவாக்கினேன் அப்பனே
ஆனால் கலியுகத்தில் அப்பனே அனைத்தும் அப்பனே பொய்யாக்கி கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அனைத்தும் செய்து வந்தால் தான் அப்பனே..... வாக்குகளும் கூட!!!!. இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் தான் வாக்குகளும் கூட செப்பினாலும் அப்பனே பரிபூரணமாக நடக்குமே!!!!
அப்பனே அப்படி இல்லையென்றால் அப்பனே யான் சொன்னாலும் உங்களுக்கு புரியாதப்பா!!!
அப்பனே கலியுகத்தில் தெரியாமலே இறைவனை வணங்குகின்றான் அப்பனே
என்ன பிரயோஜனம் அப்பனே ?????
இதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் (மாதத்தில்) அப்பனே நிச்சயமாய் அப்பனே ஐம்புலன்களையும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே
(ஐம்புலன்கள்
கண் - ஒளி
காது- ஒலி
மூக்கு- சுவாசம்
வாய் - சுவை, மொழிதல்
மெய் - உண்மை, உடல்)
பசியோடு பின் இருத்தல்.
அதாவது அப்பனே பசியோடு இருத்தல் என்றால் அப்பனே நலமாகவே பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே ஏற்கனவே யான் சொல்லிட்டேன் அப்பனே அனைத்து துகள்களும் கூட அப்பனே உடம்பில் ஆனாலும் அப்பனே அவையெல்லாம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே ஒவ்வொருவரும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முன் ஜென்மத்தில் இறந்துள்ளார்களே !!!!! அவர்களெல்லாம் ஒவ்வொரு அருமையான எதை என்றும் தெரியாமல் கூட அப்பனே பின் இறக்கும் பொழுது ஒவ்வொரு நினைப்பும் கூட.... அப்பனே பல ஆசைகளும் கூட நிறைவேறாத ஆசைகள் கூட அப்பனே!!!!
இதனால் அப்பனே அவ் ஆசைகள் எல்லாம் அப்பனே மனிதன் அப்பனே ஐம்புலன்கள் எதை என்று அறிய அறிய பின் எதனால் ஆசைகள் எல்லாம்
நிறைவேறவில்லையோ அங்கெல்லாம் நுழைந்து அப்பனே அதற்கும் கூட அப்பனே வேலை வைத்துவிடும் அப்பனே!!!!!
மீண்டும் மனிதன் கர்மத்தில் அப்பனே நுழைந்து விடுவான் அப்பனே!!!
அப்பனே சாதாரணமில்லை மனிதனின் வாழ்க்கை!!!
அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் தான் அப்பனே பின் அதாவது நல்முறையாகவே அடக்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் பின் புண்ணிய நதிகளில் அப்பனே நீராடினால் அப்பனே நிச்சயம் அவைதன் அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!
அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
அப்பனே மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவை இவை அவை செய்தால் இவை நடக்கும் !!............ என்றெல்லாம் அப்பனே
ஒன்றுமே நடக்காதப்பா!!!
நிச்சயம் உண்மையை தெரிந்து கொள்ளாமல் அப்பனே எதைச் செய்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!
அதனால் தான் இறைவனை நோக்கி அதாவது இறைவன் மீதே சந்தேகங்கள் !!!! சித்தர்கள் மீதே சந்தேகங்கள் !!!!!
அவை செய்ய!!! இவை செய்ய!!!! என்றெல்லாம் அப்பனே!!!!
அப்பனே உலகத்தில் வந்து விட்டீர்கள் அப்பனே தெரிந்து அப்பனே நன் முறையாகவே அப்பனே இறைவனை வணங்கினாலே போதுமானதப்பா !! மாற்றங்கள் நிகழுமப்பா!!
நிச்சயம் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் எதையும் கொடுக்க மாட்டானப்பா!!!!
அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!
அப்பனே இறைவன் அறிவை பலமாக படைத்திருக்கின்றான் அப்பனே!!!
ஆனால் எதற்?? எதற்காகவோ ?? உபயோகப்படுத்துகின்றீர்கள் அப்பனே!!!
ஆனால் அப்பனே சிறிதளவு அப்பனே பக்திக்குள் நுழைந்து!!!!! எதற்காக ?? பக்தி !!! ஏன் சித்தர்கள் ஏன் இறைவன் எப்படி எல்லாம் ஏன் இறைவனை வணங்குகின்றார்கள் என்றெல்லாம் நிச்சயம் அப்பனே நீங்கள் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டுமப்பா!!!
நீங்கள் நினைக்கின்றீர்களே!!!
பின் பணங்கள் வேண்டும் குழந்தைகள் அவசியம் நன்றாக இருக்க வேண்டும் தாய் தந்தையர் நன்றாக இருக்க வேண்டும் நோய்கள் வரக்கூடாது என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே யான் சொல்லியதை கேட்டாலே போதுமானது அப்பா!!!!
மற்றவை எல்லாம் அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே நோய்களும் வருமப்பா அப்பனே இன்னும் இன்னும் சொல்லப்போனால் கர்மா உலகத்தில் அப்பனே அழிவுகள் தானப்பா !!!
ஆனால் சிறிது காலமே வாழ்கின்றாய் அப்பனே
அவ் சிறிது காலமாவது அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!
தெரியாமல் வாழ்ந்து அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா!!!!
கடைசியில் இறைவனே இல்லை என்று!!....... இதனால் அப்பனே நன் முறைகளாகவே இன்னும் இன்னும் அப்பனே ஏன் எதை என்றும் அறியாமல் இருந்தாலும் அறிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
இன்னும் வாக்குகள் பல கோடி காத்துக்கொண்டிருக்கின்றது அப்பனே.
அனைவருக்குமே வாக்குகள் யான் செப்புவேன்!!!!
ஆனால் முதலில் பின் நிச்சயம் தெரிந்து கொள்ள அவசியம் வேண்டுமப்பா!!!
அதனால் நிச்சயம் அப்பனே என்னென்ன செய்தீர்கள் எதற்காக தண்டனைகள் என்றெல்லாம் அப்பனே!!!
ஆனாலும் சித்தர்களை வணங்கியும் கூட அப்பனே இன்னும் ஆசிரமங்கள் இன்னும் அப்பனே எதையெதையோ செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!
ஆனால் கஷ்டங்கள் விலகிய பாடில்லையே ஏன்????????
அப்பனே ஏன்?? எதற்காக?? கஷ்டங்கள் வருகின்றது என்பதை எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை என்பேன். அப்பனே!!!!
இதற்காகத்தான் அப்பனே அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
மீண்டும் மீண்டும் அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தால் அப்பனே பின் நிச்சயம் சந்தோசமாக வாழலாம்.
அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் கஷ்டத்திற்குள் தான் நுழைய வேண்டும் !!!! மீண்டும் என்னிடத்தில் அப்பனே இவை அவை என்று கேட்டால்????? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அவை பயன்படுத்துவதற்கும் எங்கள் ஆசிகள் வேண்டுமப்பா!!!!
அப்பனே நிச்சயம் அப்பனே பல பேர்கள் நன்றாகவே அப்பனே ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனித பிறவி என்பது அப்பனே மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே!!
அவை நிறுத்த வேண்டும் அப்பனே!!!
அவை யார் ஒருவன் அப்பனே சரி முறையாக பயன்படுத்தி கொள்கின்றானோ அவன் அருகிலே இறைவன் இருந்து அனைத்தும் செய்ய வைப்பான் அப்பனே
அனைத்து முயற்சிகளும் அப்பனே எதற்காகவோ ??? எதற்காகவோ????
ஆனால் இறைவனுக்காக அப்பனே ஒரு முயற்சி எடுங்கள் அப்பனே!!!
நிச்சயம் பாதுகாத்துக் கொள்வான் அப்பனே.
இதனால் அப்பனே அனைத்தும் பொய்கள் தான் அப்பா !!!
அப்பனே நிச்சயம் ஈசன் அருகில் இருந்து ஈசனை வணங்கினாலும் அப்பனே கஷ்டம் ஏன் வருகின்றது??? அப்பனே !!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல அன்னதானங்கள் இன்னும் பல புண்ணியங்கள் அப்பனே எதற்காக எவை என்றும் அறிந்தும் அறிந்தும் செய்தாலும் ஏன் கஷ்டங்கள் எவை என்றும் அறியாமலே வருகின்றது???
அப்பனே ஆனால் புண்ணிய காரியங்களுக்கு அப்பனே நிச்சயம் அதிக பலமப்பா!!!!
அதைவிட அப்பனே யான் சொல்லியவற்றையெல்லாம் அப்பனே சரிமுறையாகவே கடைப்பிடித்து வந்தாலே இன்னும் புண்ணியம் அப்பா!!!!
அப்பனே நீடூழி வாழ்ந்து விடலாம் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்!!!!
இல்லையென்றால் அப்பனே ஆனாலும் கடைசியில் யான் இறைவனை துதித்தேன் யான் இறைவனுக்கு அப்படி செய்தேன். இப்படி செய்தேன் என்றெல்லாம் அப்பனே!!!!
ஆனால் இறைவன் கூட சிரிப்பானப்பா !!!!!
ஏன்?? எதற்காக??? பின் தெரியாமலே வந்து வணங்கி விட்டாயே என்றெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய.
அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே ஓர் தொழில் செய்ய வேண்டும் என்றாலும் அப்பனே அதில் அனைத்து விஷயங்களை கூட பின் நிச்சயம் தெரிந்து செய்தால் தான் உயர்வுகளும் உண்டு வெற்றிகளும் உண்டு வெற்றி மேல் வெற்றிகளும் உண்டு அப்பனே!!!!
ஆனால் தெரியாமல் செய்தால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!! மீண்டும் விழ வேண்டியது தான்!!!
அதேபோலத்தான் அப்பனே பக்தி என்பது உலகத்தில் முதன்மையானது என்பேன் அப்பனே!!!!
ஆனால் பக்தி என்பது கடைசியில் அமைத்து விட்டான் மனிதன் அப்பனே.
அதனால் முதலில் எடுத்து வர வேண்டும் என்பேன் அப்பனே பக்தியை!!!
அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே !!
பின் பக்தியை கடைசியில் யார் எடுத்து வந்தது என்றால் அப்பனே மனிதனின் மூடநம்பிக்கையே காரணம் என்பேன் அப்பனே!!
அதனால் பக்தியில் அப்பனே இவ்வுலகத்திற்கு முதலிலே எடுத்து வந்தால் அப்பனே அனைத்தும் காப்பாற்றப்படும் அனைத்து உயிர்களும் காப்பாற்றப்படும் என்பேன் அப்பனே!!!
அதனால் மனிதர்களையே தான் திருடர்கள் என்று யான் சொல்வேன் அப்பனே!! மனிதரிடத்தில் தான் அனைத்து குணங்களும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
இக் குணங்களை வைத்துக்கொண்டு அப்பனே என்னென்ன செய்கின்றான்??? மனிதன்!!!
அவையெல்லாம் அடக்கி ஆளும் திறன் அப்பனே நிச்சயம் எங்களுக்கும் நிச்சயம் உண்டு!!!
அதனால்தான் அப்பனே சில மனசாட்சி இல்லாத பின் மனிதர்கள் கூட எதை எதையோ செய்து அப்பனே இறைவனையே இல்லை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய
ஆனாலும் மறைமுகமாகவும் அப்பனே இறைவனை வணங்கிக் கொண்டு அப்பனே தெரியாத அளவிற்கும் கூட பின் காட்டிக் கொள்ளாத அதாவது அப்பனே யார் என்று அறியாமலே வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் நல் மனிதர்கள் கூட அப்பனே!!!
அவர்கள் மூலம் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது இவ் நாராயணனே செய்வான் அப்பனே!!!!
ஏன்??? எதற்காக??? அப்பனே இவ் மலையில் (திருமலை திருப்பதி) இருந்து சொல்கின்றேன் என்றால் அப்பனே!!!!
சில சில விஷயங்கள் அப்பனே நிச்சயம் எங்கு செப்ப வேண்டுமோ அங்கு செப்பினால் தான் அப்பனே பாவங்கள் எதை என்றும் அறியாமலே ஏற்பாடாதப்பா யாருக்கும் !!!.....
அப்பனே இதனால் நன்றாக இருக்க வேண்டும் அனைவருமே!!!!
ஆனால் அப்பனே இன்றைய நிலையில் அப்பனே எதை என்றும் அறியாமலே அப்பனே!!!
அனைவருமே கேட்கின்றார்கள் !!!! வாக்குகள் வேண்டும் !! வாக்குகள் வேண்டும்!!! என்று அப்பனே!!!
நீ என்ன?? செய்தாய் ???அப்பனே???
என்ன ?? புண்ணியங்கள் செய்தாய் ???? அப்பனே !!!
புண்ணியத்திற்கு தகுந்தார் போல் தான் நிச்சயம் வாக்குகள் கிட்டும் என்பேன் அப்பனே!!!!
புண்ணியங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!
நீங்கள் புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் யானும் வருவேன் !!!! இறைவனை கூட அழைத்து வருவேன் அப்பனே!!!!! அருகிலே!!!
எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பவை எல்லாம் அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!
இறைவனே தவறு செய்தாலும் அப்பனே எங்களிடத்தில் தான் வர வேண்டும் இதை ஏற்கனவே நீங்கள் உணர்ந்ததே அப்பனே !!!!
எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் யாங்கள் தவறுகள் செய்து விட மாட்டோம் அப்பனே!!!!
"""""'அகத்தியனின் வாக்கு !!!!! அப்பனே வாக்கு !!!!! தான் என்பேன் அப்பனே!!!!
வாக்கை கொடுத்தால் அப்பனே நிச்சயம் அது நிச்சயம் நிறைவேற்றியே ஆகும் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!
உண்மை நிலையை தெரிந்து கொண்டால் தான் அப்பனே எதை என்று விளங்கும் என்பேன் அப்பனே!!!!
ஒருவன் சொல்கின்றான் அப்பனே எதை என்று அறியாமலே பின் எதை என்று புரியாமலே அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய!!!..........
ஜீவநாடி என்பது தெரியாமலே அப்பனே புலம்பிக் கொண்டு இருக்கின்றான் அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே
பொய் என்பது!!!......
இன்னொருவன் அவையெல்லாம் இன்னும் காசுகளுக்காக என்பது!!!!
பின் அவையெல்லாம் இல்லை என்று சொல்வது!!!........
அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
ஏனென்றால் பின் இதனைப் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என்பேன் அப்பனே!!!!
ஆனால் தெரிந்தவன் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய லட்சத்தில் ஒருவன் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே
அவ் லட்சத்தில் ஒருவனும் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! அறியும் அனுதினமும் அப்பனே!!!
அதனால் இறைவனை கூட கலியுகத்தில் பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே!!!!
இறைவனே நேரடியாக வந்தாலும் சிரிப்பார்கள் அப்பா!!!!
யான் இறைவன் என்று சொன்னாலும் நீ இறைவனா ???....... என்றெல்லாம் அப்பனே
நிச்சயம் இதுதான் அப்பா.
ஆனால் கலியுகத்தில் மனிதனாக இறைவன் நிச்சயம் வரப்போகின்றான் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!!
ஆனால் நீங்கள் தான் மாயையில் விழுந்து விட்டீர்கள் என்பேன். அப்பனே!!!
அதனால் கண்ணுக்கு தெரிவதே இல்லை இறைவன் அப்பனே!!!!!
அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!
எம்முடைய ஆசிகள் அப்பனே உலகத்தை ஆக்கவும் எதை என்று கூட அழிக்கவும் என்னாலும் முடியுமப்பா !!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
""""பாசத்திற்குரியவன் அகத்தியன்!!!!!!
மீறி சென்றால் அப்பனே நிச்சயம் நிச்சயம் அப்பனே பின் யான் சொன்னாலும் அது சாபமாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!
எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே பொய்களை பரப்பி பரப்பி அப்பனே கடைசியில் அப்பனே அனைத்தும் பொய்யாக்க கூடும்!!!
இன்னும் இன்னும் எதை எதையோ வைத்துக் கொண்டு அப்பனே இன்னும் அப்பனே எதை என்று கூட சுவடிகளை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் மனிதர்கள் இருக்கின்றார்களப்பா!!!
ஆனால் யாங்கள் வரவேண்டுமே !!!!!!! அப்பனே பரிகாரங்கள் கூறினாலும் அவை தன் பலிக்க வேண்டுமே !!!!!!!
அப்பனே ஏன் ?? பலிப்பதில்லை ???? அப்பனே !!!!!
தெரியாமல் எதை என்றும் அறிய அறிய அனைவருமே சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!
மனிதன் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே கஷ்டங்கள் பட்டுத்தான் வாழ வேண்டும் அப்பனே
அப்படித்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனிதனாக வந்துவிட்டு அனைத்தும் தெரிந்து கொள் அப்பனே!!!!
இன்னும் இன்னும் அப்பனே என்னென்ன நோய்கள் வருவதெல்லாம் யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
இன்னும் உலகம் எப்படி எல்லாம் அழியும் என்பதை எல்லாம் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!
எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே நிச்சயமாக நல் மாற்றங்கள் அப்பனே
அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏன் எதற்காக என்றால் அப்பனே நிச்சயம் இறைவன் நினைப்பது நிச்சயம் நடந்தேறும் அப்பனே!!!
மனிதன் நினைப்பது நிச்சயம் நடக்காது என்பேன் அப்பனே!!!!
ஏனென்றால் அப்பனே இதை அனைத்து வாக்குகளிலும் கூட தெரிவித்து விட்டேன் அப்பனே!!!!
மனிதன் போடுவது பின் தவறான கணக்கு அப்பனே இதை தெரிவித்து எதை என்று அறிய அறிய இறைவன் இடுவது அப்பனே இன்னும் சரியான கணக்கு என்பேன் அப்பனே!!!!
நீங்கள் ஒன்று நினைக்க அப்பனே நிச்சயம் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே நீங்கள் நினைப்பதற்கெல்லாம் இறைவன் சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!
கலியுகத்தில் இவந்தனுக்கெல்லாம் இவை கொடுத்தால் என்ன ஆகும் ??? என்று கூட !!!!
அப்பனே இது அழியும் காலமப்பா!!!...... அழிந்து தான் போகுமப்பா !!!!!
அழிந்து கொண்டே தான் வருகின்றதப்பா !!!!!
ஆனாலும் அப்பனே என் பக்தர்களாவது அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் நல்லோர்களும் வாழ வேண்டும் என்பேன் அப்பனே!!!!!
அப்பனே ஒன்றும் தெரியாத உயிர்கள் எல்லாம் மடிந்து கொண்டிருக்கின்றதப்பா !!!
அவையெல்லாம் யாங்கள் காப்பாற்ற வேண்டும்....
இன்னும் அப்பனே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!
அப்பனே எதன் ?? எதன் ?? மூலம் என்று கூட ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே !!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே யான் சொல்லியதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே நன்று!!!!
அப்பனே பின் யான் சொல்லியதையும் நீங்கள் பயன்படுத்த புண்ணியம் வேண்டுமப்பா!!!!!!
அப்பொழுதுதான் உங்களாலும் செய்ய முடியும் என்பேன் அப்பனே!!
ஆனாலும் நிச்சயம் இவ்வாக்குகள் பலமாக இன்னும் இன்னும் இன்னும் கலியுகத்தில் பயன்படும் என்பேன் அப்பனே!!!
இன்னும் நோய்கள் அழிவுகள் வரும் பொழுது மனிதனுக்கு பயம் ஏற்பட்டு விடும் என்பேன் அப்பனே!!!
அப்பொழுது புரட்டுவான் !!!!!( வாக்குகளை தேடி பக்கங்களை புரட்டுவார்கள் புரட்டி புரட்டி தேடி பார்ப்பார்கள்)
அகத்தியன் என்ன சொல்லி இருக்கின்றான் ??? என்று
அப்போது புரிந்து கொள்வான்!!!!!!
ஓடோடி வருவான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!
அதனால் அப்பனே எப்பொழுது எங்கு எதை என்று அறிய அறிய சிறப்பிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்பனே!!!
அதனால்தான் கலியுகத்தில் கூட அப்பனே யாங்கள் வந்து வந்து மனிதனை பின் தெரியாமல் கூட இருந்தாலும் தலையில் தட்டி தட்டி அதாவது துன்பத்திற்கு ஆளாக்கி நிச்சயம் நல்லதை செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!
அப்பனே இன்னும் சொன்னால் அப்பனே யான் நல்லவன் என்று சொல்வான் அப்பனே.....
ஆனால் அப்பனே திருடன் என்று சொல்லவில்லையே அப்பனே!!!!
ஆனால் திருடன் தான் அப்பனே!!!.... ஆனால் யான் திருடன் என்று யாராவது சொல்கின்றானா என்று கூட பார்த்தால் அப்பனே நம்பி விடாதீர்கள் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!
எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பான் அப்பனே அவன் தான் அப்பனே திருடனப்பா!!!
ஒன்றும் தெரியாதப்பா!!!
அப்பனே யான் நல்லவன் எந்தனுக்கு ஏன்???? வாக்குகள் வரவில்லை என்று அப்பனே
ஆனால் அவன் தான் திருடனப்பா!!!!
எங்களுக்கு தெரியுமப்பா !!!!
யாருக்கு வாக்குகள் ??? எப்பொழுது ??? கொடுக்க வேண்டும் என்று !!!!!
அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் திருத்தலத்திற்கு வாருங்கள் அப்பனே அங்கே சொல்கின்றேன்!!! ஒவ்வொருவருடைய விதியையும் கூட கணித்து அப்பனே வைத்திருக்கின்றேன்!!!
யார்?? எப்படி வாழ்வார்கள்?? தன் பிள்ளைகள் எப்படி போவார்கள்?? அப்பனே நிச்சயம் தன் குடும்பங்கள் எல்லாம் எதை என்று உணர்ந்து உணர்ந்து எதை சார்ந்து இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் திருத்தலத்தில் தான் அப்பனே!!!!
இன்னும் இன்னும் அப்பனே நல்லோர்களுக்காக அப்பனே... புண்ணியங்களுக்காக அப்பனே நிச்சயம் இல்லத்திற்கே வந்து உரைப்பேன் என்பேன் அப்பனே!!!
பின் யான் மட்டும் வர மாட்டேன் அப்பனே இறைவனை கூட அழைத்து வருவேன் என்பேன் அப்பனே!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
நலன்களாக அப்பனே சொல்லிவிட்டேன்...... நீங்கள் தேடி எவை என்று அறிய அறிய அதாவது நீங்கள் தேடி அதாவது என்னை தேடி வர அவசியமில்லை என்பேன் அப்பனே.
நீங்கள் சரியாகவே இருந்தால் அப்பனே யான் தேடி வருவேன் என்பேன் அப்பனே...
இதற்குக் கூட அப்பனே ஒரு மனித முட்டாள் அப்பனே யான் சரியாகத்தான் இருக்கின்றேன் என்று சொல்வான்!!!!
அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய திருடன் தான் திருடன் என்று சொல்லிக்கொள்ள மாட்டானப்பா!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
ஒரு நல்லவன் யான் நல்லவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டானப்பா!!!!!
அவை மட்டும் இல்லாமல் யான் அறிவுள்ளவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டான் அப்பா!!!
அப்பனே இறைவனே யாம் இறைவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டான் அப்பனே!!!
இறைவன் வலம் வந்து கொண்டிருக்கின்றான் அண்ணாமலையில் கூட அப்பனே!!!!
எதை என்றும் அறிந்தும் கூட சொல்கின்றேன் ஓர்நாள் அப்பனே.... நிச்சயம் அப்பனே!!!
ஆனால் இறைவன் என்று பின் பீத்திக் கொள்கின்றானா ???? என்ன !!!!!
அப்பனே மனிதன் தான் அப்பா பீத்திக் கொள்கின்றான்!!!!!!
ஏன் எதற்காக என்றால் அப்பனே புகழ் பணம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதையெதையோ செய்தாலும் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வருமப்பா!!!! தீராத பாடில்லை அப்பனே பாடில்லை அப்பனே!!!!!
அப்பனே யானும் உலகத்தில் சுற்றி கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!
என்னையும் வணங்குகின்றார்கள் அப்பனே அவை இவை அதை என்றெல்லாம் அப்பனே
ஆனாலும்!!! ஐயோ!!! பாவம்!!! ஐயோ பாவம்!!!
என்று தலையில் அடித்து கொண்டு செல்கின்றேன் அப்பனே!!!!
ஏனென்றால் தெரியாமல் வணங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!!
தெரிந்து அதனால் தான் அப்பனே ஒரு கஷ்டத்தை வைத்து பின் அவனை இழுத்து வந்து இதுதான் சரி என்று உணர்த்தி வைக்கின்றேன் அப்பனே!!
அதனால் நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
இவ் ஐப்பசி தன்னில் அப்பனே எப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய புரிய அப்பனே பின்பு கார்த்திகைக்கு வருகின்றேன் அப்பனே
ஐப்பசி மாதத்தில் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறிவிட்டார் அடுத்த கார்த்திகை மாதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கார்த்திகை மாதத்தில் வாக்குகளில் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார்)
இன்னும் இன்னும் எதனால் மாதங்கள் அப்பனே உருவாக்கினோம் ??? என்பதையெல்லாம் தெரிவிக்கின்றோம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
தெரியாமல் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே தெரியாமல் பின் இறைவனை வணங்குகின்றார்கள் என்பேன் அப்பனே!!!
இறைவன் அருகிலே இருந்தும் பல அபிஷேகங்கள் !!! ஆராதனைகள் !!! அப்பனே என்ன லாபமப்பா ????
போய் கேட்டால் எந்தனுக்கு கஷ்டம் தான் கொடுத்து இருக்கின்றான் என்று!!!!
அடேய்!!!!!! முட்டாள்!!!!
உந்தனுக்கு நல்லதை தான் செய்து கொண்டிருக்கின்றான் ஆனால் நீ தான் உணரவில்லையே!!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் ஒவ்வொருவரையும் கூட உருவாக்கி நிச்சயம் அப்பனே நன்மைகளாக செய்வோம் அப்பனே!!!!
நிச்சயம் இன்னும் பார்த்தால் அப்பனே பணத்திற்காக அப்பனே!!!...... பணம் வேண்டும் என்று சொல்கின்றான் தொழில் வேண்டும் என்று சொல்கின்றான் இன்னும் எதை எதையோ கேட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!
முதலில் யான் வாழ்வதற்கு என்ன தகுதி என்பதை கூட நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!
அவ் தகுதி நிச்சயம் இருந்தால் தான் அப்பனே வாழ்க்கையும் தித்திக்கும்!!!
மற்றவைகள் எல்லாம் மாயை..... தானாக வந்து விடும் அப்பனே!!!!! ஆனால் வந்துவிடும் மீண்டும் இறைவன் எடுத்துக் கொள்வான் மீண்டும் எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்கக் கூடாது.
பின் அனைத்தும் வந்ததே !!! மீண்டும் போய்விட்டதே !!! என்று !!!!
அப்பனே இறைவன் எப்பொழுது கொடுக்கவும் தெரியும் எடுக்கவும் தெரியும் அப்பனே இறைவனுடைய பொருள் அப்பனே உன்னுடைய உடம்பே இறைவனுக்கு சொந்தமானதப்பா!!!!
அவ் உடம்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்கின்றாய் அப்பனே!!!
ஏன்???? எதற்காகப்பா????
சொல்கின்றேன் அப்பனே நோய்கள் வருமப்பா!!!!
இறைவன் கொடுத்த உடம்பை அப்பனே சரியாக பேணிக் காப்பது!!!...... ஆனால் அவையெல்லாம் எப்படி பேணி காப்பது என்பதை கூட ஆனால் பேணிக் காப்பதில்லையே அப்பனே!!!!
நீயே அழித்துக் கொண்டிருக்கின்றாயே!!!!
இறைவனுக்கு சொந்தமானதை நீயே எதை என்று அறிய அறிய அழித்துக் கொண்டிருக்கின்றாய். அதனால்தான் அப்பனே கடைசியில் பின் உன்னாலே பின் உடம்பும் கெட்டுப் போகின்றது அப்பனே அறிந்தும் கூட ஒன்றும் செய்யாமல் போய்விடுகின்றது அப்பனே!!
அதனால் அப்பனே அதனால்தான் இறைவன் கொடுப்பான் பணமும் கொடுப்பான் அப்பனே தொழிலும் கொடுப்பான் அப்பனே அனைத்தும் கொடுப்பான் அப்பனே
ஆனால் அப்பனே ஓர் நாள் பின் அதனாலே பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுவான் அப்பனே!!
இறைவன் படைத்தவன் அவந்தனக்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
நீ வெறும் அப்பனே கூடு அப்பா!!!!!
அதாவது மண் பானை அப்பா!!!
பின் எதை என்று கூட தூக்கி போட்டால் உடைந்து விடுவாயப்பா!=!
அவ்வளவுதான் பிறவி என்பேன் அப்பனே!!
இவ்வளவு சுலபமான பிறவிக்கு அப்பனே என்னென்ன ஆட்டங்கள்??? என்னென்ன பொய்கள் ??? என்னென்ன நாடகங்கள்??? அப்பனே முடியாதப்பா !!! முடியாது !!!!
அப்பனே இன்னும் இன்னும் பெருமானை பற்றிய லீலைகளை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே !!!
இன்னும் சித்தர்களை பற்றிய ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே நன்முறைகளாகவே!!!!
அப்பனே இறைவன் ஒருவனே !!! நிச்சயம் கடைசியில் காட்டுவோம் அப்பனே!!!
நல் முறைகளாகவே ஆசிகளப்பா !!! ஆசிகள் !!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி நன்றி எத்தனை நன்றி களை சமர்பித்தாலும் உன் கருணை க்கு பத்தாது அப்பனே
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete