வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!
இறைவனுடைய படைப்பில் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனே !! தந்தை!!! இறைவியே !! தாய்!!!
இறைவன் ஒருவனே!!!
ஏகன் !! அனேகனாக மாறி இந்த பிரபஞ்சத்தில் படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய முக்குணங்களோடு இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்!!
இரவு பகல்!! இன்பம் துன்பம்!! வெப்பம் குளிர்!! சந்திரன் சூரியன்!! நீர் நெருப்பு!! திடம் திரவம்!! என இருமுக தன்மைபடியே ஆண் பெண் என அனைத்து உயிர்களிலும் இந்த இருபால் படைப்பின் இயக்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
இவை இரண்டும் தனித்தனி அல்ல!! ஒன்றை கவனித்தால் நன்றாக புரியும்!!! இரண்டும் ஓரிடத்தில் இருந்து தோன்றியவை தான்!!!!
அப்படி இறைவனுடைய படைப்பில் ஆணும் பெண்ணாக அர்த்தநாரீஸ்வரமாக சிவமும் சக்தியுமாக ஒரே சரீரத்தில் சிருஷ்டிக்கப்பட்ட இனம் தான் அதாவது மனித குலத்தில் திருநங்கைகள் குலம். இந்த அர்த்தநாரீஸ்வரம் தன்மை அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மரம் செடி கொடி, வகைகளுக்குள்ளும் விலங்குகளுக்குள்ளும் உள்ளது.
ஆனால் மனித குலத்தில் திருநங்கைகளை தீண்டத்தகாதவர்கள் போல் எண்ணி ஒதுக்கி சமுதாயத்தில் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு மக்களிடையே உள்ளது.
மக்கள் அனைவரும் ஒன்றை முழுமையாக புரிந்து கொண்டிருந்தால் இதுபோன்ற ஒதுக்கி வைக்கும் தன்மை அவர்கள் மனதில் தோன்றாது.
நாம் நம் கடவுள்களின் அவதாரங்களை பற்றி நாம் அறிவோம் விநாயகர் உடல் அமைப்பு நரசிம்மர் உடல் அமைப்பு வராகி தேவி ஹயக்ரீவர் சரபேஸ்வரர் என இறைவன் எடுத்த அவதாரங்கள் அதீத பலத்தோடு!!! யாராலும் அடக்க முடியாத!!! அழிக்க முடியாத !!! செய்ய முடியாத உக்கிர செயல்களை செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்ற இறை இது போன்று உடல் அமைப்போடு அவதாரம் எடுத்து வந்ததை நாம் அனைவரும் அறிந்ததே!!!
இதே போன்று தான் திருநங்கைகளும் அவர்களுடைய பிறப்பும் மிகுந்த சக்தி வாய்ந்ததாக சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் இறைவனின் அம்சத்தை பார்க்க முடியும். மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலய வளாகத்தில் தேவியின் அம்சமென. ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கு வாக்குபதேசங்களும் செய்து வழிநடத்தி உதவி செய்து வருவதை காணலாம்!!!
பண்டைய ஜோதிட நூல்களில் உள்ள ஆராய்ச்சி குறிப்பிலும் கிரகங்களின்படி சனி புதன் ,புதன் கேது, கேது சனி , இந்த இரு கிரகங்கள் சேர்க்கை அமைப்பு மிகவும் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் திருநங்கைகள்.
சாதகத்தில் இவ்வாறு இரண்டு ராசிகள் சேர்ந்த அமைந்து இருந்தால் அவர்கள் யோகக்காரர்கள் என்பது ஜோதிடத்தில் ஞானியர்கள் எழுதி வைத்திருப்பது!!
இப்படி ஒரு யோகம் சாதாரணமாக ஒருவருக்கு அமையாது திருநங்கைகளுக்கு இது போன்ற யோகங்கள் இறைவனே அளித்து பிறப்பெடுக்க வைக்கின்றார்!!!
அத்தகைய சக்தி படைத்த திருநங்கைகள் நாகரீகம் இவ்வளவு தூரம் முன்னேறி இருந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மரியாதையோடு நடத்துவது என்பது இல்லை. கல்வி வேலைவாய்ப்பு சமுதாயத்தில் பொது வெளியில் என எந்த ஒரு விஷயத்திலும் போராட்டம் தான்!!!!
திருநங்கைகளை கடவுளின் அம்சமாக கருதி வட இந்தியாவில் அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வேண்டியதை உபசரித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்வது திருமணம் சுப காரியங்கள் போன்ற நிகழ்வுகளில் அவர்களை வரவழைத்து கலந்து கொள்ள செய்வது என வட இந்தியாவில் அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட மக்கள் இதுபோன்று நல்ல காரியங்களாக செய்கின்றார்கள் !!
ஆனால் உலகத்திலேயே அர்த்தநாரீஸ்வரனாக ஈசனும் பார்வதி தேவியும் ஓருடல் ஈருயிராக வீற்றிருக்கும் கொடி மாடச் செங்குன்றூர்... என அழைக்கப்படும் திருச்செங்கோடு திருத்தலத்தை வைத்திருக்கும் தென்னாடு அவர்களுக்கான மரியாதையை தருவதே இல்லை.
அப்படிப்பட்ட இறைவனின் அம்சமாக இருக்கும் திருநங்கை குலத்தில். இருக்கும் ஒருவருக்கு நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தந்த வாக்கினை தற்போது சித்தன் அருள் வலைத்தளத்தில் தருகின்றோம்.
இந்த வாக்கினை குருநாதரின் அனுகிரகத்தால் அவரவர் புண்ணியத்தால் இந்த வாக்குகள் கிடைக்கப்பெற்று படிப்பவர்கள் திருநங்கைகளை காணும் பொழுது இறைவனின் அம்சமாக காணும் ஒரு மாறுதல் நிச்சயம் ஏற்படும்.
ஒரு நாள் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அடியவர்களுக்கு குருநாதர் உடைய உத்தரவின் பேரில் சுவடியை திறந்து வாக்குகள் படித்துக் கொண்டிருந்தார்!!
அப்பொழுது அவருடைய தொலைபேசி எண்ணிற்கு ஒரு எண்ணில் இருந்து அடிக்கடி இணைப்பு வந்து கொண்டே இருந்தது.
திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் அடியவர்களுக்கு வாக்குகள் படிப்பதற்கு குருநாதர் அகத்தியர் பெருமான் அனுமதி அளித்துள்ளார் . சிலரை குருநாதரை அகத்தியர் மைந்தன் மனதில் தோன்றச் செய்து ஜானகிராமன் ஐயாவே அவர்களை தொடர்பு கொள்ள செய்து வாக்குகள் தந்து நல்லாசியும் தந்திருக்கின்றார் அதேபோன்றுதான் இந்த திருநங்கை மங்கை தொலைபேசி தொடர்பு எண்ணை குருநாதர் திரு ஜானகிராமன் ஐயா மனதில் தோன்றச் செய்து இணைப்பை ஏற்படுத்தி வாக்குகள் படிக்கத் தொடங்கினார்.
அந்த முனையில் இருப்பவர் யார் என்று அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு தெரியாது!!!! சாதாரணமாக குருநாதரை வணங்கி விட்டு அம்மா தங்களுக்கான வாக்குகளை குருநாதர் உரைக்கின்றார் நீங்கள் போனில் ரெக்கார்டு செய்து கொள்ளுங்கள் ஜீவநாடி என்பது என்ன குருநாதர் எப்படி வாக்குகள் தருவார் என்பதையும் அவருக்கு முன்னோட்டமாக சில விஷயங்களை எடுத்து கூறிவிட்டு கவனமாக கேளுங்கள் என்று படிக்கத் தொடங்கினார்.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!
அம்மையே!!!!!! அப்பனே!!!! உன்னை எதுவென்று யான் கூற!!!!
ஆனாலும் சக்தி முக்தி அனைத்தும் உந்தனுக்கு கிட்டிற்று!!!!
கிட்டிற்று!!! நிச்சயம் ஈசனும் பார்வதியும் சேர்ந்து ஆசிர்வதித்து விட்டனர்!
அதனால் எதை என்று உணராத அளவிற்கு கூட இன்னும் உந்தனுக்கு பல சக்திகள் வரும்!!!!! இதை நல்லதற்காகவே நீ பயன்படுத்த வேண்டும் சொல்லிவிட்டேன்!!!!
எதை என்று ஆனாலும் மக்கள் சேவைக்காகவே நீ பிறந்துள்ளாய்!!! இனிமேலும் சில விஷயங்களை யான் கற்றுக் கொடுப்பேன் உந்தனுக்கு!!!!
பல விஷயங்களை மனிதர்களுக்கு நீ செய்து கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டேன்!!!
நலமாகவே இப்பிறப்பு உந்தனக்கு எதை கொடுக்கப்பட்டது என்பதை கூட யான் ஆராய்ந்து விட்டேன்!!!!
இதையன்றி கூற உன்னை எவ்வாறு.... தாயே !!!என்று குறிப்பிடுபவதா ?? தகப்பனே!!! என்று குறிப்பிடுவதா???
ஆனாலும் இரண்டும் கலந்து தந்தையே தாயே என்று யானே உன்னை அழைக்கின்றேன்!!!!
எதை என்று அறியாத அளவிற்கு கூட நிச்சயம் சில சில எதை என்றும் சில கஷ்டங்கள் மனிதர்களுக்கு!!!
அவையெல்லாம் நிச்சயம் உன்னால் எவை என்று தீர்மானித்து உன்னுள்ளே சக்திகளை நிச்சயம் கொடுத்து க்கொண்டே வந்து கொண்டிருப்பார்கள் சித்தர்கள் !!!
அதனால் நிச்சயம் சில விஷயங்களை நீ மனிதர்களுக்கு செய்ய வேண்டும் தாயே!!!!!!
நலமாகவே சில மந்திரங்களையும் எதை என்று உணராமலே சில தகட்டில் நிச்சயமாய் எதை என்று உன் விதியில் கூட இருக்கின்றது இதை நீ மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று!!!!!
ஆனாலும் நீ விட்டு விட்டாலும் நிச்சயம் எதை என்று உன் தாயவள் உன் அருகிலேயே இருக்கின்றாள் இப்பொழுதும் கூட அதை நீ உணர்வாயா??
யார் என்பதைக் கூட பின் எதை என்று குறிப்பிடுவதற்கு போல் வராஹி தேவியின் அருள் பரிபூரணம்!!!
அவள் தான் உன் தாய்!!!
அவளை பிடித்துக் கொள்!!!
இன்னும் ஏராளமான வித்தைகள் சித்தர்கள் அருளாசிகளும் பல மூலிகைகளும் உந்தனுக்கு கிடைக்கும்!!!! மூலிகைகளாலான தாயத்துக்களையும் நீ மற்றவர்களுக்கு கொடு தாயே!!!!
நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள்!!!
அதனால் இப்பிறப்பு பிறருக்கு எடுத்துக் கூறுவதே எவ்வாறு எதனை பின்பற்றுவது என்பதை எல்லாம் எழுதி விட்டான் தாயே பிரம்மன்.
என்னதான் செய்வாய் நீ??
இதை என்று அறியாத அளவிற்கும் ஆனால் எங்கள் துணை உந்தனக்கு கடைநாள் வரையிலும் உண்டு!!!!
ஈசனின் பார்வதி தேவியின் அம்சமே!!!!!
எதை என்று ஆனாலும் குறிப்பிடும் தகுதிகள் உன்னிடத்தில் இருந்தாலும்
ஆனாலும் சில கஷ்டங்கள் மனவேதனைகள்!!!வரும்!! வந்து மோதும்!!!
ஆனாலும் இதனை அறிவதற்கு நிச்சயம் இதை யாங்கள் அகற்றுவோம்!!!
ஏனென்றால் எதை என்றும் தெரியாத அளவிற்கும் இவ் உலகத்தில் மனிதப் பிறப்பு எடுத்தாலே ஒரு தரித்தரம்!!!
அதையும் மிஞ்சி எதை என்று கூற நீ சாதித்து வந்து கொண்டிருக்கின்றாய்!!!
இதனால் எங்கள் துணை உந்தனுக்கு உங்களுக்கு எதை எதை என்று அறியாத அளவிற்கும் கடை நாளும் உண்டு.
உண்டே!!!!! நிச்சயம் எதை என்று கூற ஈசனின் குழந்தை முருகன் அழகாகவே உந்தனுக்கு காட்சியளித்து உன்னை ஏற்றுக்கொண்டு அனைத்தும் செய்ய வைக்க தூண்டுவான் வரும் காலங்களில்!!!!
தாயே !! தந்தையே!!! ஒன்றை நீ கேட்க வேண்டும் உலகத்தில் நிச்சயம் மானிடர்கள் எதை என்று உணராத அளவிற்கும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் மிஞ்சியவள் நீ!!!
இதனால் உன்னிடத்தில் ஈசனே வந்து பேசுவான்.
சொல்லிவிட்டேன்.
நலமாக அதனால் எத்துன்பமும் படவேண்டாம் ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகத்தில் பிறந்துவிட்டு துன்பம் தான் படுகின்றனர்.
ஆனால் எங்கள் வழியே வந்தவள் வந்தவள் நீயே !! இதனை மறுப்பதற்கு ஒன்றுமில்லை இதனால் யாங்கள் செய்கின்றோம்.
மனிதர்கள் உந்தனுக்கு சொந்தமில்லை!!! தாயே!! தாயே சொல்லிவிட்டேன்!!
யாங்கள் தான் உந்தனுக்கு சொந்தம்!!!!
நலமாக அதனால் நீ மனிதனை ஒருபோதும் பின் சேர்க்கக்கூடாது உன் அருகிலே!!!!
நலமாகவே நலமாகவே இதனை உணர்ந்து விட்டால் இது ஒரு தெய்வப்பிறவி உந்தனக்கு!!!!
இதனால் தெய்வ காரிய சம்பந்தமான காரியங்களை நிச்சயம் செய்யத் தூண்டுவான் இறைவன் யானும் உந்தனக்கு பல விஷயங்கள் நிச்சயம் மனதளவிலே சொல்லிக் கொடுப்பேன் கவலைகள் விடு!!!!நலமாகவே!!!
அதனால் எவரையும் கண்டு அஞ்சிடாதே!!!!
எதனை என்றும் எங்கள் குடும்பத்தில் நீ ஒருவளாக எப்பொழுதே!!!!! சேர்த்துக்கொண்டோம் யாங்கள்!!!
நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஆனாலும் உன் பிறவியை எதை எவற்றின் என்பதைக் கூட நிச்சயம் எதை என்று வெறுப்பதற்கு இல்லை இங்கு!!!
நிச்சயம் அனைத்து தெய்வங்களின் அருளாசியும் இருக்க உன் இஷ்டம் போல சிறிது காலம் சோதித்தாலும் ஈசன் பார்வதி தேவி நிச்சயம் உந்தனுக்கு அனைத்தும் கொடுப்பார்கள் தாயே!!!
கவலைகள் இல்லை!!!
பிரம்மாவும் எழுதி வைத்து விட்டான் இவள் தன் பூலோகத்திற்கு செல்ல வேண்டும் சில மனிதர்களுக்கு பின் குறை இருந்தால் அவை நீக்க வேண்டும் என்பதை கூட!!!
அதனால் நிச்சயம் வரும் காலங்களில் நீ அதை தான் செய்யப் போகின்றாய் சொல்லிவிட்டேன்!!!
நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு உண்டு
இதனால் நிச்சயம் உன்னிடத்தில் வருபவர்களுக்கு சில சில விதிகளை கடைபிடிக்க சொல் தாயே!!!!
எதையன்றி கூற ஆனாலும் சிதம்பர சக்கரத்தை நீ எழுதிட்டு நிச்சயம் பின் வரும் காலங்களில் சில மனிதர்களுக்கு கொடுத்து விடுவாய் அது சரியாகவே அனைத்தும் நடக்கும் தாயே!!!
இதனால் சக்திகள் பல பல உண்டு இதனால் சொல்லிவிட்டேன் எதற்காக வந்துவிட்டாய் என்பதை சொல்லிவிட்டேன்!!!
அதனால் நிச்சயம் கடைசியில் ஈசனும் பார்வதி தேவியும் உன்னிடத்தில் வந்து மறுபிறப்பு வேண்டுமா?? வேண்டாமா?? என்று கேட்பார்கள்!!!
நீதான் பதில் சொல்ல வேண்டும்!!!!
இதையென்றும் சமாளிப்பதற்கு ஒன்றுமில்லை அதனால் நிச்சயம் மனிதர்களுக்கு பிள்ளையாக பின் இருப்பதை விட எதை என்று கூற ஆனாலும் மனிதன் சொல்லிக் கொண்டே திரிந்து கொண்டே இருக்கின்றான்!!!! யான் ஈசன் பார்வதி தேவிக்கு பிள்ளை!!! யான் சித்தர்களின் பிள்ளை என்று கூட!!!
ஆனால் நிச்சயமான பிள்ளை நீதானம்மா!!!!!
பின் ஈசன் பார்வதி தேவியே உன்னை ஏற்றுக் கொண்டார்கள்!!!!!
அதனால் கவலைகள் இல்லை நிச்சயமாய் ஒன்றை சொல்கின்றேன் தேவியே!!!!! கேள்!!!
நிச்சயம் எதை என்று மனித ரூபத்தில் இறைவன் வந்தாலும் இவ்வுலகத்தில் நிச்சயம் கஷ்டம் தான் பட வேண்டும் சொல்லிவிட்டேன்!!!
ஆனால் நிச்சயம் எதை எவற்றினின்று கூட ராமனை எடுத்துக்கொள் ஈசனையே எடுத்துக்கொள் பார்வதி தேவியையே எடுத்துக்கொள் முருகனையே எடுத்துக்கொள்!!!! எவ்வாறு கஷ்டங்கள் என்று!!!!
ஆனாலும் கவலைகள் இல்லை!!!!
முருகன் உந்தனை கடைநாள் வரையிலும் கூட நிச்சயம் எதை என்று கூட ஒரு தாயவளாகவே பார்ப்பான்!!!
எதை என்று அவனிடத்தில் அடிக்கடி ஓடோடி சென்று வா!!!!
தேவியே சொல்கின்றேன் நிச்சயம் எதை என்றும் நீ செல்லாவிடிலும் அவந்தன்
ஸ்தலத்திற்கு அழைப்பான் சொல்லிவிட்டேன்!!!!
நலமாகவே நலமாகவே உன் தாய் மீனாட்சி அழகாகவே இருக்கின்றாள் கவலைகள் இல்லை!!!!!
அண்ணாமலை தான் உந்தனுக்கு சொந்தம்!!!
நலமாகவே கவலைகள் இல்லை கவலைகள் இல்லை சித்தர்கள், யாங்கள் உந்தனுக்கு சரியாகவே பின் கொடுப்போம் கவலைகள் இல்லை!!!!
தாயே உன் நிலைமைகள் எந்தனுக்கு சரியாகவே புரிகின்றது!!!
ஆனாலும் நிச்சயம் மனிதர்களை இனி மேலும் நீ நம்புதல் கூடாது சொல்லிவிட்டேன்!!!!
யாங்கள் சித்தர்கள் இருக்கின்றோம் ஏதாவது ஒன்று உந்தனுக்கு தேவை என்றால் யாங்களே வந்து கொடுப்போம்!!! கர்மம் சேராத வகையில்!!!!
சொல்லிவிட்டேன்!!!!
இதையென்று கூற வராஹி தேவியும் அடிக்கடி பின் அவள் தன் மடியில் உன்னை படுக்க வைத்து படுக்க வைத்து நல்விதமாக பாடிட்டு தாலாட்டையும் பாடிட்டு சென்று கொண்டு தான் இருக்கின்றாள்!!!
இதைவிட உந்தனுக்கு என்ன தேவை????? கூறு!!!
நலமாகவே நலமாகவே அம்மையப்பனே!!!!!!!!! உன்னை ஓர்முறை யான் அழைத்துக் கொள்ளலாமா????? தாயே!!!! தந்தையே!!!! என்று!!!!!!
(நம் குருநாதர் அகத்திய பெருமான் அந்த திருநங்கை தேவியை பார்த்து அம்மையப்பனே நான் உன்னை தாயே தந்தையே என்று ஒருமுறை அழைத்துக் கொள்ளலாமா என்று கேட்கின்றார்)
தாயே!!!! எதையென்று ஆனாலும் உன் நிலைமை சரியாகவே புரிகின்றது!!!!
அப்பனே !!! என்று யான் உரிமையோடு அழைக்கின்றேன் தாயவளே !!! என்று உரிமையோடு யான் அழைக்கின்றேன்!!!!
இதைவிட உந்தனுக்கு என்ன தேவை???
என் தாய்!!! என் தந்தையாகவே இருந்திட்டுச்செல்!!!!
நலமாகவே நலமாகவே உண்டு உண்டு!!!
தாயே இவ்வுலகம் பின் விசித்திரமானது நல்லோர்களை ஏளனம் செய்யும் !!!
பின் தீயோர்களை மட்டும் எங்கெங்கோ அழைத்துச் செல்லும்!!!
ஆனால் கவலைகள் இல்லை மாறப் போகின்றது அனைத்தும் கூட!!!!
யாங்கள் துணை இருப்போம்!!! உன் கண்களுக்கு அடிக்கடி காட்சியும் அளிப்போம் கவலைகள் இல்லை!!!
உன் போன்ற நல் உள்ளங்கள் எங்களுக்கு தேவை!!!!
எதையென்று அதனால் நிச்சயம் யாங்கள் மாற்றுவோம்!!!!
உன் விதியில் எவ்வாறாக இருந்தாலும் நிச்சயம் யான் போராடி எதை என்று உணராத அளவிற்கு கூட போகனும் ( போகர் சித்தர்) துணை இருப்பான் கடைநாள் வரையிலும்!!! பின் வள்ளல் பெருமானும் துணை இருப்பான்!!! பின் திருமூலனும் துணை இருப்பான்!!! எதை எதை என்று கூட!!! அழுகணி சித்தனும் துணை இருப்பான் !!! வசிஷ்டனும் துணை இருப்பான்!!!!!
இன்னும் ஏனைய சித்தர்களும் துணை இருப்பார்கள்!!! உந்தனுக்கு!!!
இவர்களை விட இவ்வுலகத்தில் மனிதர்கள் யார் ??பெரியவர்கள் ?? சொல்!!!
யான் எதை என்று என்னை விட யான் எதை என்று கூட பெருமையாக சொல்வேன் தாயே!!!
யாரிடமும் எதை என்று கூட யான் எப்பொழுதும் மனிதரிடத்தில் பெரிதாக காட்டிக் கொள்வதில்லை இப்பொழுது உந்தனுக்கு சொல்கின்றேன்!!!! இங்கிருந்து!!!!!
என்னை விட இவ் பூலோகத்தில் சித்தன் யார்?? கூறு!!!!
இதையன்றி கூற அதனால் யானே இருக்கின்றேன் எதை என்று கூட அதனால் கவலைகள் இல்லை!!!
இவ் பூலோகத்தில் பிறந்தவர் நிச்சயம் கஷ்டங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்து தான் செல்ல வேண்டும்!!!! அது தான் விதி!!!!
ஆனாலும் கவலைகள் இல்லை!!!
யான் அருகிலே இருக்கின்றேன்!!! எதையென்று கூட நீ தாராளமாக சொல்லலாம்!!! யான் அகத்தியன் பிள்ளை என்று கூட!!!!
இப்பொழுது உந்தனுக்கு கூறி விட்டேன்!!!!!
நலமாகவே நலமாகவே எதை என்று கூட உன் தாயவள் லோபாமுத்திரையும் இருக்க கவலைகள் விடு!!!
சித்தர்களின் அன்பும் அரவணைப்பும் இருப்பதால் நிச்சயம் யாங்கள் எதை ஏற்பாடு செய்து தர வேண்டுமோ? அவையெல்லாம் ஏற்பாடு செய்து தருவோம் கவலைகள் இல்லை!!!!
கவலைகள் இல்லை குழந்தாய்!!!!!
குழந்தாய் !! கவலைகள் வேண்டாம் யான் இருக்கின்றேன்!!!! யான் இருக்கின்றேன்!!! கவலைகள் இல்லை!!!!
மீண்டும் மூன்று மாதம் கழித்து நிச்சயம் ஒரு வாக்கை சொல்வேன் ஏனைய சித்தர்களின் வாக்குகளும் காத்துக் கொண்டிருக்கின்றது!!!உந்தனுக்கு செப்ப!!!!!
கவலைகள் இல்லை முருகனும் வந்து வாக்குகள் செப்புவான் ஈசனும் வந்து வாக்குகள் செப்புவான் பார்வதி தேவியும் வந்து வாக்குகள் எதை என்று கூறாமலே உரைப்பார்கள்!!!!
இவ்வளவு அருள்கள் உந்தனுக்கு உண்டு!!
அதனால் நீ எதை என்றும் கவலைகள் இல்லை உன்னை பற்றி நீ சிந்திக்க தேவையில்லை!!!!
சக்தியவளே!!!!! கவலைகள் விடு!!!!
அனைத்து சக்திகளும் நிச்சயம் உந்தனுக்கு நிச்சயம் யானே கொடுத்து விட்டேன்!!!!!
இனிமேலும் கவலைகள் இல்லை!!!!
ஆனால் சக்திகள் இருந்தும் கவலைகள் பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று நீ எண்ணக்கூடாது!!! வரும் காலங்களில் இதற்கு நிச்சயம் மாற்றங்கள் உண்டு தேவியே!!!!
இன்னும் சிறப்பான வாக்குகளும் காத்துக் கொண்டிருக்கின்றது இன்னும் மூன்று மாதம் கழித்து கேள்!!!! இன்னும் விவரமாக விவரிக்கின்றேன்!!!!!!
ஆசிகள்!!!! ஆசிகள்!!!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இந்த வாக்கினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.என் மனதில் இருந்த சில கேள்விகளுக்கான விடை கிடைத்தது. ஓம் அகத்திசாய நமோ நமஹ🙏
ReplyDeleteசகல ஜீவ ராசிகளின் நாயகனே,
ReplyDeleteஈசனே அகத்தின் ஈசனே அகத்தீசனே திருவடிகள் போற்றி.
ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருவடிகள் போற்றி
Hari Ohm
ReplyDeleteஅன்புடன் அகத்தியர் மிகப் பொருத்தம்.குருவே சரணம்..
ReplyDeleteகுருவடி சரணம், திருவடிசரணம்
ReplyDeleteஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteyar indha Iraiselvam "amma" Enge irukirargal endru therivikka iyaluma. Therindal avargalidam sendru asigal peralam. Mikka nandrigal.
ReplyDelete