​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 7 October 2023

சித்தன் அருள் - 1456 - ஒரு அடியவருக்கு அகத்தியப்பெருமான் அருளிய அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒருநாள், சித்தன் அருளை வாசிக்கும், அகத்தியர் அடியவரிடமிருந்து அவசர செய்தியுடன் ஈமெயில் வந்தது. அவரின் தந்தையார் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், நாடி வாசிக்கும் திரு.ஜானகிராமனை தொடர்பு கொள்ள முடியவில்லை, அகத்தியப்பெருமானிடம் தந்தைக்கு வாக்கு வாங்கி தரமுடியுமா என்று கேட்டிருந்தார். அந்த நேரத்தில் திரு.ஜானகி ராமன் வடமாநில ஆலய யாத்திரையில் இருந்ததால் அவரை தொடர்பு கொள்வது சற்று சிரமம், இருந்தாலும், முயற்சி செய்கிறேன், உங்கள் செல் எண்ணை தருக, அவர் உங்களை தொடர்பு கொண்டு நாடி வாசிக்க, செய்தி அனுப்புகிறேன், என்று பதிலளித்தேன்.

அவர் எண் தந்ததும், விஷயத்தை கூறி, திரு.ஜானகிராமனுக்கு செய்தி அனுப்பி, "நேரடியாக அவர்களுக்கு அகத்தியரின் அருள் செய்தியை கூறிவிடுங்கள்" என்றேன்.

இருநாளில் நாடி வாசிக்க அடியவரை தொடர்பு கொள்ள முடியாததால், அகத்தியப்பெருமானின் ஆசியை, அருள்வாக்கை ஒலிநாடாவாக்கி அடியேனுக்கு அனுப்பித்தந்தார். நல்ல வாக்கை அகத்தியப்பெருமான் அருளியிருந்தார். பொதுவாக திரு.ஜானகிராமன் அனுப்பி தருகிற ஒலிநாடாவை தவிர பிறருக்கான வாக்குகளை அடியேன் கேட்பதில்லை. இது என் வழி வந்து சென்ற தொடர்பானதால், அதை கேட்க வேண்டி வந்தது. அதில் வந்த வாக்கு,

"இவன் செய்த புண்ணியங்கள் அப்படியே தேங்கி நிற்கின்றது. அதன் பலன் இவனை போய் சேரவில்லை. இவனை பல இடங்களில் யானே பார்த்திருக்கிறேன். பல நேரங்களில் ஆசீர்வதித்து உதவியும் இருக்கிறேன். மனித ரூபத்தில் வந்து உதவியும் இருக்கிறேன். அதை இவன்/இவர்கள் இன்று வரை உணர்ந்தாரில்லை. இப்பொழுது கர்மவினையினால் வந்த உடல் நோவு. இதிலும் யான் தான் வந்து காப்பாற்ற வேண்டும். நிச்சயமாய் யாமே (வந்து) காப்பாற்றுவேன்! ஆசிகள்!" என அகத்தியப்பெருமான் நாடியில் வந்து உரைத்தார்.

ஒலிநாடாவை அடியவருக்கு அனுப்பி வைத்து, என் வேலை நிறைவு பெற்றது என்ற மனநிறைவுடன் இருந்த பொழுது, அவரிடம் இருந்து ஈமெயில் வந்தது. எப்போதும் போல் "மிக்க நன்றியுடன்" என தொடங்கி, கடைசியில்

"அய்யா! நாடியில் அகத்தியப்பெருமான் கூறியதுபோல், மிக ஆபத்தான ஒரு சூழ்நிலையில் என் தந்தை இருந்த பொழுது, ஒரு நிகழ்ச்சி நிடந்தது. அந்த நேரத்தில் அகத்தியப்பெருமான்தான் வந்து காப்பாற்றியிருக்கிறார். ஆனால் நாங்கள் அன்று வந்தது இவர்தான் என்று உணரவில்லை. ஆனால் இன்று அவர் வாக்கு தந்தபொழுது அதை தான் குறிப்பிடுகிறார் என்று உணர்கிறோம். பிறகு நேரம் கிடைக்கும் பொழுது அதை ஒலிநாடாவாக்கி உங்களுக்கு அனுப்புகிறேன்" என்று கூறியிருந்தார்.

அடியவரின் தந்தை மிக சிறந்த சிவபக்தர். வெள்ளியங்கிரி வாழ் மஹாதேவர் மீது கொண்ட பக்தியால், இளவயதில் நினைக்கும் போதெல்லாம் மலையேறிச் சென்று அவரை தரிசித்து அருள் பெற்று வருபவர். வயதான பின் மலை என்ற முடியாததால் அடிவாரத்தில் இருக்கும் கோவிலில் தரிசனத்துக்கு செல்வார், அப்பொழுது செல்லும் பொழுது தன் குடும்பத்தையும் அழைத்து செல்வார்.

ஒரு நாள், வீட்டை விட்டு வெளியே செல்ல படியை விட்டு இறங்கி செடிகளுக்கு இடையே நடக்கையில் கால் விரலில் ஏதோ சிறு வேதனை தோன்ற, குனிந்து பார்த்தால், அங்கே, ஒரு பாம்பு, தன் பற்களால் அவர் கால் பெருவிரலை கடித்து, தன் இரை போல் பிடித்துக் கொண்டிருந்தது. குனிந்து பார்த்தவர், அது கட்டுவிரியன் வகையை சார்ந்தது என உணர்ந்தார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  3. அகத்தியர் திருவடிகள் சரணம்.

    நீதியும் நீயே நிமலன் நீயே
    புண்ணியம் நீயே புனிதன் நீயே
    பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
    ஊழியும் நீயே உலகமும் நீயே
    வாழியும் நீயே வரதனும் நீயே

    தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
    மூவரும் நீயே முன்னெறி நீயே
    மால்வரை நீயே மறிகடல் நீயே
    இன்பமும் நீயே துன்பமும் நீயே
    தாயும் நீயே தந்தையும் நீயே
    விண்முதற்பூதம் ஐந்தவை நீயே
    புத்தியும் நீயே முத்தியும் நீயே
    சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே.

    அகத்தியர் தேவாரத் திரட்டு-28.
    நக்கீரர் சுவாமிகள் அருளியது.

    ReplyDelete
  4. நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete