​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 13 October 2023

சித்தன் அருள் - 1465 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு - மதுரை!

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!

அனைவருக்குமே என்னுடைய ஆசிகள்! ஆனாலும் அனைவருக்குமே பக்குவங்கள் பல அப்பா! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கர்ம நிலைகள். ஆனாலும், ஓடி ஓடி எப்பரிகாரங்கள் செய்தாலும் கஷ்டங்கள் போகவில்லையே என்று. கர்மா (சேருவது) எவ்வழிகளில் என்று திரியாமல், நீங்களே ஏற்றுக் கொண்டீர்கள். அவை எல்லாம் வரும் காலங்களில் போக்கி, குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்குவேன். தர்மங்கள் பல வழிகளில் செய்கிறீர்கள், தர்மம் தேவதையின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு பல கோடிகளப்பா! நீங்கள் அனைவருமே தர்மம் செய்வதற்க்கென்று பிறந்தவர்கள். அதை விட்டுவிட்டு, மற்றவர்கள் வழியில் சென்றால், கஷ்டங்கள் தானப்பா! சொல்லிவிட்டேன்! இது அனைவருக்குமே பொருந்தும். இத்தகை சரியான வழியில் ஏற்றுக்கொண்டால் நன்று அப்பனே!

வீதியில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாதப்பா! ஆனாலும், அப்பனே, அதன்படிதான் நடக்குமப்பா! தர்மம் செய்து கொண்டே இருந்தால்,ம் இத்தர்மத்தை பற்றி பிரம்மாவிடம் எடுத்துரைத்து யங்களே மாற்றுவோம், அப்பனே! இதுதான் உண்மை. மற்றவர்களெல்லாம் பொய்களப்பா! விதியாய் கூட மதியினால் வெல்லலாம் என்பதை நீங்கள் எல்லோரும் அறிந்ததே. மதி என்பது இறைவன். தர்மத்தை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும், விதி கூட மாறிவிடுமப்பா! அதற்கு யாங்கள் உதவிகரமாக இருப்போம், அப்பனே! நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால், எங்களாலும் மாற்ற முடியாதப்பா. நீங்கள் ஏதாவது செய்தால்தான் (தர்மம்) அதை பிரம்மாவிடம் கூறி விதியை மாற்ற முடியும்.

எங்களால், அனைத்தையும் செய்ய முடியும், கர்மத்தை கொடுக்கவும் முடியும், எடுக்கவும் முடியும். உலகத்தை இயக்கவும், நிறுத்தவும் முடியும். ஆனாலும், யார் இடத்துக்கு மதிப்பு உள்ளதோ, அவ்விடத்திற்கு சென்றால்தான் உத்தமம். இறைவன் எதை எதிர்பார்க்கிறான் என்று அறிந்துவிட்டால், கஷ்டங்கள் வராதப்பா! நீ யார், எதற்காக வந்தாய் என்பதை தெரிந்து கொண்டால், கஷ்டங்களே வராதப்பா. அதை விட்டுவிட்டு அலைந்து, திரிந்து வருவதினால்தான் அனைத்து பிரச்சினைகள் அப்பா! இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிறைய தர்மங்கள் செய்ய வேண்டும். அப்படி தர்மங்கள் செய்ய செய்ய, நிறைய கஷ்டங்கள் வருமப்பா! ஆனாலும், அதை மீறியும் தர்மங்கள் செய்தால், யானே வந்து உங்களுக்கு உதவி செய்வேன். சில மாற்றங்களை கூட எளிதில் நிகழ்த்தி வைப்பேன். பலப்பல பக்தர்களுக்கும், இதை செய்திருக்கின்றேன்! உணர்க! உணர்க! இதனால்தான் அப்பனே! தர்மம் செய்! தர்மம் செய்! என்று.

தர்மங்கள் செய்யச் செய்ய புண்ணியங்கள் சேரும், கஷ்டங்களும் வரும், என்பதை உணர்க. பின்னர் வரும் காலங்களில், கஷ்டங்கள் குறைந்து விடுமப்பா. ஒவ்வொருவர் முதுகிலும் கூட கர்மா மூட்டை நிறைய இருக்கின்றதப்பா. அதை தர்மங்கள் செய்து இறக்கி விடவேண்டும் என்பேன் அப்பனே! அவற்றை இறக்கி வைப்பதற்கு, புண்ணியம் தேவைப்படுகின்றது. இதை செய்யாமல், கர்மா மூட்டையை யாரும் இறக்கி வைக்க மாட்டார்கள் அப்பா! இறக்கி வைக்கின்றேன், இறக்கி வைக்கின்றேன் என்று மனிதர்கள் கூறுகிறார்களே தவிர, அது மேலும் மேலும் கூடிக்கொண்டேதான் போகின்றது.

என் வழியில் வந்துவிட்டால், சில சோதனைகள்தான். சோதனைகள் செய்தால்தான் சில பக்குவங்கள் அமையும். சோதனைகள் இல்லை என்றால், நீங்கள் அனைவரும் இன்பப்பாதைகளுக்கு, ஓடி விடுவீர்கள். ஆனாலும், அவ் இன்பப்பாதைகளே கடைசியில் துன்பத்துக்கு வழிவகுக்கும் என்று மனிதர்களுக்கு புரிவதில்லை. இதனால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். ஏன் சில சோதனைகளை யான் வைக்கிறேன் என்றால், சில கர்மாக்களை கழித்து, இன்பம் அடைவதற்கு. அகத்தியனை நம்பினேன், காசு கொடுக்கவில்லையே, திருமணம் நடக்கவில்லையே, இன்னும் ஏதேதோ நினைத்தால், இச்சமயம் எதை கொடுத்தால் உங்களுக்கு நல்லது என்று சித்தனுக்கு தெரியும் என்பேன். அப்படி கொடுத்தால் தான் நன்று. இல்லையென்றால், அதனாலும் தீங்கு அப்பா!

சோதனைகள் கொடுப்பதே இறைவன் தானப்பா! சோதனைகள் கொடுப்பது உங்களின் நல்லவைகளுக்காகத்தான். புறிந்து கொள்ளுங்கள் அப்பனே! சோதனை என்று ஒன்று இருந்தால், அங்கு இன்பமும் தங்கியிருக்கும், அப்பனே!

வாழ்க்கை இன்பமாக இருந்துவிட்டால், அப்பனே, நீங்கள் இறைவனை வணங்க மாட்டீர்கள் அப்பனே. அனைவரையுமே இறைவன்தான் படைக்கின்றான். ஆயினும், இறைவன் விரும்பியது போல் நீங்கள் யாரும் இல்லை. ஆதலால், சோதனைகளை வைக்கின்றான். இது தவறா? அப்பனே!

இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே! என்னை நம்பியவர்களை கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு உட்படுத்துவேன். யார் ஒருவன் தன்னை அகத்தியரிடம் தன்னை ஒப்படைத்து வருகிறானோ, அவனுக்கு அனைத்தையும் கொடுத்து, உயர்த்தி வைப்பேன்.

இவ்வுலகம், கர்மத்தால் சூழ்ந்துள்ளது. ஆகவே, அவ் கர்மத்தை நீக்கித்தான் அனைவரும் நல்முறைகளாக வாழ முடியும் அப்பனே! புண்ணியங்களை விட கர்மா அதிகமாக உள்ளதப்பா! இதை தெரியாமல் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மனிதன் வாழ்வோம், வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பொது, இறைவன் சிரித்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. அதனால்தான், சில கட்டங்களை கொடுத்து, மனிதனை திருத்தி, இறைவன் பாதைக்கு திருப்பி விடுகின்றான் அப்பனே. இதனால் பாதகமில்லை.

உங்கள் அனைவரையும், பல முறை யானும் லோபாமுத்திரையோடு பார்த்துட்டேன் அப்பனே! அங்கெல்லாம், ஆசீர்வாதங்கள் கொடுத்து இருக்கின்றேன் அப்பனே! இதனால் நலன்கள் ஆகும் அப்பனே. குறைகள் இல்லை அப்பனே. அதனால் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே! தர்மத்தை பற்றி பேசுங்கள் அப்பனே. தர்மத்தை பற்றி, எப்பொழுதும் சிந்தனையாக இருங்கள் அப்பனே. அப்பொழுதுதான் கர்மா ஒழியுமே தவிர, விலகாதப்பா. இறைவன் மிகப்பெரியவன். ஒவ்வொருவருக்கும் வேலை கொடுத்து, அதை செய்துவிட்டு வா என்று இங்கு அனுப்புகின்றான். ஒருவரும் ஒழுங்காக செய்வதில்லை. அதனால் தான் கஷ்டங்கள். அப்பனே! இதை தெரிந்து கொள்ளுங்கள்.

இறைவன் உங்களை எதற்காக படைத்தான் என்று தெரிந்து கொள்வதற்கு, சில புண்ணியங்கள் தேவைப்படுகிறது. அப்புண்ணியங்களை நீங்கள் செய்து கொண்டே வந்தால், நீங்கள் எங்களை நோக்கி வரத் தேவையே இல்லை. யாங்களே, உங்களை நோக்கி வருவோம் அப்பனே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அப்பா அருமையான ஆறுதல் வார்த்தை கூறினீர் நன்றி அப்பா நன்றி🙏💕

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete