வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சமீபத்தில், மதுரை சென்ற பொழுது, ஒரு அகத்தியர் அடியவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு காகபுசுண்டர் சித்தர், அகத்தியப்பெருமானின் நாடியில் வந்து, "இங்கே உன் ஊருக்கு அருகிலேயே போகர் சித்தர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண பைரவர் கோவில் ஒன்று உள்ளது. அதை கண்டுபிடித்து, சென்று தொழுது வா!" என உரைத்தார். பல ஊர்களையும் சுற்றி வந்து, பல நண்பர்களையும் தொடர்பு கொண்டு, கடைசியாக சிவகங்கை மாவட்டத்தில், கண்டிராமாணிக்கம் என்ற கிராமத்தில், அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் கோவில்தான் என்பதை அறிந்து, மறுபடியும் நாடியில் சித்தரிடம் கேட்க அவரும் ஆமோதித்தார்.
அவருடன் மறுநாளே அந்த கோவிலில் தரிசனத்துக்கு சென்றேன். மிக மிக அமைதியான சோலைகள் நிறைந்த இடத்தில் கோவில் அமைந்துள்ளது. சிவகங்கை சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. புனருத்தாரண வேலைகள் நடக்கிறது. ஏதோ ஒரு அமைதி, அதிசயம், இறைவன் சாந்நித்யம் போன்றவை, நம்மை வசீகரிக்கும். உள் தேடல்கள் உள்ளவர்கள் சென்றடைய வேண்டிய இடம். சிவபெருமான், பைரவர் சன்னதிகளில் அமர்ந்து தியானம் செய்ய, நிமிடத்தில் மனம் அவரை சரணடைகிறது, அமைதியாகிறது.
கண்டிர மாணிக்கம் (சிவகங்கை மாவட்டம்) நவபாஷாண பைரவர்! இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர். இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை. அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இவருக்கு தீபாராதனை காட்டும் பொழுது, அர்ச்சகர் உள்ளே எரியும் மின்சார விளக்கை அணைத்துவிட்டு, சூடத்தட்டை விக்கிரகத்தின் பின்னால் கொண்டு காட்ட, அப்படியே பழனி தண்டாயுதபாணியைப் போல் காட்சியளிப்பார் பைரவர். போகர் சித்தர் பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு. இவருக்கு, வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இவர் சன்னதியில் விபூதி மட்டும்தான் பிரசாதம்.
பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால், அவருக்கு பின்னே வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். சனீஸ்வரர் வன்னிமரத்தடியில் அமர்ந்திருக்கும் கோவில், இது ஒன்றுதான், என்கிறார்கள். சனீஸ்வரருக்கு, வன்னி இலைகளால் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு.
மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் மிகவும் அவசியம், என்கிறார்கள். எல்லா தேய்பிறை அஷ்டமிக்கும் பைரவருக்கு அபிஷேக பூஜை சிறப்பாக நடக்கிறது. சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாப நிவர்த்தி, ஸ்திரி தோஷ நிவர்த்தி, சகல பாப நிவர்த்தி, நீண்டகால நோய்கள் நிவர்த்தி, அஷ்டமா சித்தி அளிக்க கூடியவர். அதற்கு சாட்சியாக அருகில் பட்டமங்கலம் என்ற கிராமத்தில் அஷ்டமா சித்தி பொய்கை உள்ளது.
திரு.ரெங்கராஜன் என்பவர் இங்கு அர்ச்சகராக பணிபுரிகிறார். அவரை தொடர்பு கொண்டு, விரும்புகிறவர்கள், தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொள்ளலாம். அவரின் தொடர்பு எண்:9487163643. இதுவே வாட்சப் எண் என கூறினார்.
சிவபெருமானின் திருவிளையாடலில் ஒன்றான, கிணறும், வன்னிமரமும் ஒரு பெண்ணின் திருமணம் நடந்ததற்கு சாட்சி சொல்லி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதிக்கு எதிரே அமர்ந்துள்ளது. அந்த திருமணம் நடந்தது இந்த கோவிலில். சாட்சி சொன்ன வன்னிமரமும், கிணறும் இன்றும் இங்கு உள்ளது.
விநாயகப்பெருமான் வன்னிமரத்தின் கீழ் அமர்ந்துள்ளார். இவரை வழிபட்டு சகல பாப விமோசனம் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும்.
அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில்,
பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி,
சிவகங்கை மாவட்டம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
அரிய தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏. ஓம் அகத்திசாய நமஹ
ReplyDeleteவணக்கம் ஐயா.எனக்கு நீண்ட நாட்களாக பல பிரச்சினைகள் உள்ளது.அகத்திய பெருமானின் உதவியை பெற என் தகுதிக்கு மீறி முயற்சி செய்து விட்டேன்.ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.இனி என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அகத்திய பெருமான் தக்க தருணத்தில் உதவவில்லையே என மிகவும் வருந்துகிறேன். பூஜை,கோவில் வழிபாடு அலுத்து போய்விட்டது.ஏதாவது சுவாரஸ்யமான ஜீவ நாடி கதை இருந்தா பதிவிடுங்கள்( ஹனுமத்தாசன் கதை)
ReplyDeleteவணக்கம் அய்யா!
Deleteஇது அகத்தியப்பெருமானின் "சித்தன் அருள்". என்றும் அவருக்கு மட்டும் சொந்தமானது. அகத்தியப்பெருமானும், சித்தர்களும் இறைவன் அருளால் உரைக்கும் வாக்குகளும், அவரின் சேய்களை சென்றடைய நிர்வகிக்கப்படுகிறது.
உங்கள் வசதிக்கு மீறி நீங்கள் செய்த விஷயங்கள் எதற்க்காக என்று தெரியவில்லை. அத்தனை செய்தும் பலன் இல்லை என்று நீங்கள் கூறுவது ஏன் என்று நீங்களே உணருங்கள். "GM" என்ற சுருக்கெழுத்துடன் உண்மை பெயரை கூட இன்றுவரை சித்தன் அருள் வலைப்பூவில் அல்லது மெயிலில் தெரிவிக்க விருப்பம் இன்மை எதை காட்டுகிறது என்று சற்று யோசிக்கவும்.
மர்ம கதைகள் எழுதுகிற எத்தனையோ வலைப்பூக்கள் இருக்கிறது. அங்கு நிம்மதியை தேடலாம். இங்கு எல்லாம் அகத்தியர் சொல்படித்தான்.
அக்னிலிங்கம்!
நன்றி ஐயா 🙏 இது போல் இனி கருத்து தெரிவிக்க மாட்டேன்.மன்னிக்கவும்.
DeleteGuru Muni யை சுருக்கி GM என வைத்தேன்.
Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=qvnDVC8QqXA
ReplyDelete